-
குயின் வெப் சீரிஸ். டிசம்பர் 14 ம் தேதி வெளியான இந்த தொடர் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே எதிர்பார்ப்பில் பல லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருக்கிறது இந்த வலைத் தொடர். ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை கிடையாது என இந்த வலைக்குழுவினர் மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். *ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கையைத்தான் சொல்கிறோம் என்பதை படத்தின் புரோமோ காட்சிகளில் தொடங்கி , பாத்திர படைப்புகள் வரை வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
சினிமா, அரசியல் என இரண்டு துறையிலும் உச்சம் தொட்ட* பெண் ஆளுமை ஜெயலலிதா. அவரைப் பற்றி, திரைப்படம் மூலமாகவோ, வலைத் தொடர்* வாயிலாகவோ, அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது படைப்பாளியின் கடமைதான். இது போன்ற* முயற்சிகள் வரலாற்றின் தேவையாகவும் இருக்கிறது.
தற்போது இந்த பதினொரு மணி நேர குயின் வலைத் தொடர்* எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன சொல்ல வருகிறது? எத்தகைய தாக்கத்தை இந்த வலைத் தொடர் ஏற்படுத்தும்? என்பதை பார்ப்போம்.
ஜெயலலிதா சிறுமியாக இருந்ததிலிருந்தே , அவர் ஆசைப்பட்ட எதுவும் அவருக்கு கிட்டியதே இல்லை என்பதாக வலைத் தொடர் தொடங்குகிறது. அவரது தாய் துணை நடிகை என்பதால், வருமானம் இல்லை. வருமானமில்லாத காரணத்தினால், திரைத்துறைக்குள் தள்ளப்படுகிறார் ஜெயலலிதா. இதுதான் வலைத் தொடரில் ஜெயலலிதா குடும்பம் குறித்த சித்தரிப்பு.
ஆனால், உண்மையில் ஜெயலலிதாவின் குடும்பம் , அன்றாடக் காய்ச்சியாக இருக்கவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதாவின் தாத்தா மைசூர்* அரண்மனையில் திவானாக இருந்தவர்.ஜெயலலிதாவின் சித்தி விமானப் பணிப்பெண்ணாக இருந்தவர். சிறுமி ஜெயலலிதா மீது அனுதாபம் வரவேண்டும் என்பதற்காக ஜெயலலிதா குடும்பமே வறுமையில் தோய்ந்த குடும்பம் என்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படி செயற்கையாக காட்ட வேண்டும்? என்று தெரியவில்லை.
தன்னுடைய முதல் தமிழ் படமான வெண்ணிற ஆடை படத்தில் நல்ல நடிப்புத் திறனையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்* ஜெயலலிதா. ஆனால், இந்த வலைத் தொடரில், ஆடவேத் தெரியாமல், ஒரு நாள் முழுவதும் ஜெயலலிதா பாடாய் படுத்துவார்.
உண்மையில் ஜெயலலிதா யார் தெரியுமா?
13 வயதில் அரங்கேற்றம் நடத்தி நடிகர் சிவாஜி கணேசனால் வாழ்த்துப் பெற்றவர். வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கும்பொழுது, அவருக்கு 16 வயது. சிறுவயதிலேயே அரங்கேற்றம் நிகழ்த்தி காட்டிய அபாரமான நடனத் தாரகை ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவை ஆடவேத் தெரியாத ஒருவர் போலவும், இயக்குநர் அவரை நடிக்க வைக்க படாதபாடு பட்டது போலவும் காண்பிப்பது சரியா ? ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த காட்சியை கற்பனையாகக் கூட வைத்திருப்பார்களா,* ?
ஜெயலலிதா எம்ஜிஆருடன் நடித்த *முதல் படம் “ஆயிரத்தில் ஒருவன் “. அந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் , எம்ஜிஆர் மிகப் பெரிய நடிகர். திமுகவின் முதன்மையான பிரச்சாரப் பீரங்கி. அப்பேற்பட்ட எம்ஜிஆர், சிறுமி ஜெயலலிதாவின் சிறிய வீட்டிற்கு வந்து, தன் படத்தில் நடிப்பியா? என்று கேட்கிறார். புனைவுக் கதை ,கற்பனைக் கதை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், உண்மைக்கு நேர் எதிரான காட்சிகள் வைக்கலாமா?, இது எம்ஜிஆரின் ஆளுமையை சிறுமைப்படுத்துவது போலாகாதா,?
“ஆயிரத்தில் ஒருவன் “படத்தின் இயக்குநர் பந்துலு. அவர் மிகப்பெரிய இயக்குநர். படத்தின் நாயகன் எம்ஜிஆர். , சிறுமியான ஜெயலலிதா இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் அறிவுரை வழங்குவது போல் ஒரு காட்சி வருகிறது.
“ஆயிரத்தில் ஒருவன்“ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியமைத்தது ஜெயலலிதாதான் என்று இந்த படம் சொல்கிறது. கற்பனைக்காக கூட *இது போன்று உண்மைக்கு மாறான வரலாற்றை *சொல்லலாமா?
“ ஆயிரத்தில் ஒருவன் “கிளைமாக்ஸ் மக்களாட்சி தத்துவத்தை உரக்கச் சொன்ன காட்சி. மக்கள் மனதில் எம்ஜிஆருக்கு இருக்கும் சிம்மாசனத்திற்கு மகுடம் சேர்த்த காட்சி. அந்த காட்சிக்கு சொந்தக்காரர் பந்துலுவோ, எம்ஜிஆரோ கிடையாது. 15 வயதான சிறுமி ஜெயலலிதாதான் என்று இந்த வலைத் தொடர் சொல்கிறது. ஏற்கனவே அரசியலற்றவர்களாக இருக்கும் இந்த தலைமுறைக்கு இது தவறான புரிதலை ஏற்படுத்தும் அல்லவா ? ஜெயலலிதா அறிவுக்கூர்மையானவர் என்பதை காட்டுவதற்காக, மற்றவர்களின் ஆளுமையைக் குறைப்பது போல் அல்லவா* இருக்கிறது !
எம்ஜிஆர் ஜெயலலிதா கூட்டணியில் படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. மக்கள் மத்தியில் ஜெயலலிதாவிற்கும் செல்வாக்கும் கூடியது. இது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், ஜெயலலிதாவை எம்ஜிஆர் கண்காணிப்பில் வைத்திருந்தார். தன்னைத் தவிர வேறு* எந்த நடிகருடன் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார்* என்று இந்த வலைத் தொடர் சித்தரிக்கிறது. ஜெயலலிதா வீட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும், புகுந்து வேவு பார்க்கும் அளவிற்கு எம்ஜிஆர் நடந்துக் கொண்டார் . இதனால் ஜெயலலிதா ஒரு போதும் நிம்மதியாக இருந்ததில்லை.
சிறுமியாக இருக்கும்பொழுது, வறுமையின் காரணமாக படிப்பை இழந்தார். இளமைப் பருவத்தில், எம்ஜிஆரின் நடவடிக்கையால், தனது* சுதந்திரத்தை இழந்தார்.* இப்படித்தான் குயின் வலைத்தொடர்** சொல்கிறது.
ஆனால், உண்மையான வரலாறு என்ன தெரியுமா.?
எம்ஜிஆர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஒப்பந்தம் போடுவது உண்மை. ஆனால், ஜெயலலிதா விவகாரத்தில் எம்ஜிஆர் அவ்வளவு இறுக்கமாக நடந்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆருடன் **தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே, சிவாஜியுடன் பல படங்களில் *ஜெயலலிதா நடித்தார்.
ஒரு எம்ஜிஆர் படம், ஜெய்சங்கர் படம், அடுத்து சிவாஜி அல்லது ரவிச்சந்திரன்* என மாறி மாறி எல்லா நடிகர்களுடனும் ஜெயலலிதா நடித்து வந்தார்.* குயின் வலைத் தொடரில் குறிப்பிட்டிருந்தது போல், தொடர்ந்து* எம்ஜிஆர் படங்களில் மட்டுமே *நடிக்கவில்லை. அதிகமான படங்கள் எம்ஜிஆருடன் நடித்தார் என்பது மட்டுமே உண்மை. எம்ஜிஆரின் ஜோடி என பேசப்பட்ட காலத்திலேயே,* கலாட்டா கல்யாணம் , எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, என சிவாஜியுன் வெற்றிப் படங்களைத் தந்தவர் ஜெயலலிதா.
மஞ்சுளா வருகைக்குப் பின்* ஜெயலலிதாவுடன் நடிப்பதை எம்ஜிஆர் கொஞ்சம் குறைத்துக் கொண்டார். அதை குறிப்பாக ஒரு காட்சியில் காண்பித்திருக்கிறார்கள். அது உண்மை . ரிக்ஷாக்காரன் பட போஸ்டரை கையில் வைத்துக் கொண்டு, மஞ்சுளாவைப் பற்றி* ஜெயலலிதா விசாரிக்கும் காட்சி மிக பொருத்தமாக இருந்தது.
65 ம் ஆண்டிலிருந்து 71ம் ஆண்டு *வரை தொடர்ந்தும்,* சற்று இடைவெளி விட்டு 73 ம் ஆண்டு வரையும் *எம்ஜிஆருடன் நடித்தார் ஜெயலலிதா. ஆனால், இந்த காலகட்டங்களிலெல்லாம், எம்ஜிஆர் தன்னை* சந்தேகித்தார், வேவு பார்த்தார், அவரது கட்டுப்பாட்டில் இருந்தேன் என்று* ஜெயலலிதா புலம்புவது போல் இந்த வலைத் தொடர் சொல்கிறது. இது உண்மையா ? என்பதை எம்ஜிஆர் ஜெயலலிதா* ரசிகர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
சினிமாவிலிருந்தே ஒதுங்கி, எழுத்தாளராக பரிணமித்த ஜெயலலிதாவை எம்ஜிஆரே வீடு தேடி வந்து பார்க்கிறார். அப்போது ஜெயலலிதா அலட்சியமாக நடந்துக் கொண்டார். எம்ஜிஆர் சிரித்துக் கொண்டே பேசினார் என்று ஒரு காட்சி இருக்கிறது. அப்போது எம்ஜிஆர் முதலமைச்சர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கற்பனைக்காக கூட இப்படியொரு காட்சி நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. ஏன் இப்படி பதிவு செய்கிறார்கள் என்றும் புரியவில்லை?
உலகத் தமிழ் மாநாட்டில்,* ஜெயலலிதாவின் நாட்டிய நாடகத்திற்கு ஏற்பாடு செய்கிறார் ஆர்.எம்.வீரப்பன். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கட்சியில் சேர்கிறார் ஜெயலலிதா. இது வரலாறு.
இந்த வலைத் தொடரில் உலகத் தமிழ்மாநாட்டில் நடனமாடுவதை ஏளனமான விசயமாக ஜெயலலிதா நினைப்பது போல் ஒரு காட்சி வருகிறது.* எம்ஜிஆர் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் அவ்வளவு சலிப்புடன் ஜெயலலிதா கலந்துக் கொண்டாரா,? *ஜெயலலிதாவின் வரலாற்றில் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ,? இப்படி காட்சிகள் அமைப்பது ,எம்ஜிஆரையும், அவர் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையும் இழிவுப் படுத்தும் செயல் அல்லவா,? ஏன் இப்படிபட்ட காட்சிகள் வைக்கப்பட்டன .
கட்சியில் சேர விருப்பமே இல்லாத ஜெயலலிதாவை எம்ஜிஆர் நம்பிக்கை கொடுத்து சேர்க்கிறார். ஜெயலலிதாவால் கட்சி வளர்கிறது. அதிமுக மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவை விலக்கி வைக்க நினைக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆர் ஜெயலலிதாவை நம்புகிறார். திடீரென்று எம்ஜிஆரின் மரணத்தை காண்பிக்கிறார்கள். அதற்குப் பிறகு ஜானகி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். சசிகலா தரும் நம்பிக்கையிலும், ஆதரவிலும் ஜெயலலிதா அரசியலில் புது அவதாரம் எடுக்கிறார். இத்துடன் இந்த வலைத் தொடர் முடிகிறது.
எம்ஜிஆர், வரலாற்றை தெரிந்தவர்களுக்கும், சராசரி ஜெயலலிதா தொண்டர்களுக்கும் இந்த வலைத் தொடரை பொறுமையாக பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை.
பொருத்தமே இல்லாமல் பேசப்படும் தூய தமிழும்,* இந்தி சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பும்* அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. கௌதம்மேனன் தன்னுடைய காதல் படங்களை* எடுப்பது போன்ற காட்சி அமைப்பையும், வசனங்களையும் குயின் சீரியலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் இந்த பாணி, படத்தின் வீரியத்தையும், அரசியல் நெடியையும் முழுமையாகக் குறைத்துவிடுகிறது.
வரலாற்று ஆவணத்தை தழுவி எடுப்பவர்கள் அடிப்படையான அம்சங்களை மாற்றக்கூடாது. 62 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயங்கியதாக காண்பிக்கப்படுகிறது. இது அடிப்படையில் தவறு. தமிழ்நாட்டைப் பற்றி அடிப்படை வரலாறு தெரிந்தவர்கள்* படக்குழுவில் யாருமே இல்லையா? *என்ற கேள்வி எழுகிறது.
ஜெயலலிதா போன்ற வெகுஜன* ஈர்ப்புக் கொண்ட தலைவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கும்பொழுது, கூடுதல் கவனம் இருக்க வேண்டும். ஜெயலலிதா என்ற ஆளுமையை, எப்போதும் யாருடைய துணையையாவது *எதிர்பார்த்து நிற்கும், அனுதாபத்தை வேண்டி நிற்கும் சராசரியான பெண்ணைப் போல காட்டியிருப்பது சரியா? ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஏக்கங்களும், துக்கங்களும்* இருந்திருக்கலாம். ஆனால், அந்த கூறுகளை மட்டுமே ஜெயலலிதாவின் அடையாளமாக காட்டுவது சரியாகாது.
கற்பனைக் கதையாக எடுத்திருக்கிறோம் என்று சொன்னால், அது மிகப்பெரும் தவறு. கற்பனையாக கூட ஜெயலலிதாவின் ஆளுமையை நீங்கள் சிறுமைப்படுத்தலாமா? இந்த சீரியலை பார்க்கும் இளம் தலைமுறை, எம்ஜிஆரை கதாநாயகனாகப் பார்க்கமாட்டார்கள்.* ஜெயலலிதாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த வில்லனாகத்தான்* புரிந்துக் கொள்வார்கள்........... Thanks to mr. Chiranjeevi anees............
-
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற வாக்கியதிற்கு இணங்க 24.12.2019 செவ்வாய் அன்று 12. மணியளவில் பல ஜீவநதிகளை ஒன்றினைக்கும் வங்காளவிரிகுடா போல் விளங்கும் தானைதலைவர் மக்கள் திலகம் வாழும் தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் 32 வது நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அமைதி ஊர்வலம் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நமது பக்தர்களும் ஒன்று சேர்ந்தார்களா என்று ஐய்யப்பட்டுக்கொண்டிருந்த நமது தலைவரே ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதற்கான அடுத்த அயுத்த வேளைகள் ஆரம்பித்து விட்டது.ஒவ்வொரு பக்தனும் வீட்டைவிட்டு புறபட்டு விட்டான் என்று உறுதியான காலை 7 மணிமுதல் தான் தூறல் தொடங்கியது.அதற்கு முன் அதற்கான அடிசுவடுகூட கிடையாது.இது உண்மையான இல்லையா.ஒவ்வொரு பக்தனின் மனசாட்சியே பேசட்டும். ஆகவே இனிமேல் ஊர்வலத்திற்கு வந்த நாம் அனைவரும் மற்றும் வர இயலாத மற்ற அமைப்புகளிடமும் தெரிவித்து 3 மாதத்திற்கு ஒரு முறைசென்னையில் மத்திய இடத்தில் ஒரு சத்திரம் பிடித்து கூடி ஒரு நபருக்கு 150 ரூபாய் செலவுசெய்து சாப்பிட்டு விட்டு உரையாடுவோம்.மகிழ்வோம்.இது சாத்தியப்பட்டால் உழைப்புக்கும் பொருளாதாரதிற்கும் திறமைக்கும் ஏற்றவாறு பொறுப்பாளர்களை தேர்தெடுப்போம்.நல்லது கெட்டதிற்கு முடிந்தவரை சென்று வருவோம். பணம் இருந்தால் உதவுவோம்.புரட்சிதலைவரை இகழ்ந்தால் ஒன்று சேர்ந்து அடிப்போம் அல்லது போராடுவோம்.மற்றநேரங்களில் தலைவர் புகழ் பரப்புவோம்.வரும் தலைமுறைகளை உருவாக்குவோம்.அந்தந்த அமைப்புகள் சார்பாக கூடிபேசி விரைவில் முடிவெடுங்கள்.அதறக்கு அச்சாரமாக மக்கள் திலகத்தின் புகழ் வரும்காலங்களிலும் மென்மேலும்வளரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த பாகுபாடும் பார்க்காமல் 37 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு மகிழ்ச்சி யுடன் சம்மதம் தெரிவிக்கிறது. இவன்.ஷிவபெருமாள்........ Thanks.........
-
புரட்சித் தலைவர் மக்கள் திலகம் மனிதநேய வள்ளல் வாழும் கடவுள் இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக ஊர்வலமாக சென்று புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு அனைத்து சங்கங்களின் சார்பாகவும் நடைபெற்ற இந்த மௌன ஊர்வலம் ஒரு எழுச்சியாக இருந்தது புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதில் அவரவர் பங்களிப்பை செய்திருந்தார்கள் எங்கள் அனைத்துலக எம்ஜிஆர் திரைப்படத் திறனாய்வு சங்கத்தின் சார்பாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதானத்தை திரு செல்வகுமார் அவர்கள் வழங்கினார்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சைதை திருஎஸ் துரைசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.......... Thanks.........
-
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் !
__________________
மக்கள் திலகம் பெண்கள் இரவு நேரத்தில் பத்திரமாக வீடு திரும்ப முதன் முதலாக மகளிர் காவல் படையை உருவாக்கினார் !
கணவனால் கைவிடப் பட்ட பெண்கள் , விதவைகள் , முதிர்கன்னிகளுக்கு சத்துணவு அமைப்பாளர் ,உதவியாளர் வேலைகளில் முன்னுரிமை வழங்கினார் ! ஒரே நாளில் 12 ஆயிரம் பெண்களுக்கு அரசு பணியாளர் ஆகும் வாய்ப்பை கொடுத்தார் !
பெண்ணுக்கு உரிய மதிப்பு தரவேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆலய அறங்காவலர் குழுக்களிலும் ஒரு பெண்ணையும் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் !
பெண்களின் துயரமான விறகு அடுப்பு கொடுமையை தீர்ப்பதற்காக புகையில்லா அடுப்பு என எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டதும் எம் ஜி ஆர் தான் !
நன்றி ! திரு சைதையார் !.......... Thanks.........
-
ஜனவரி 2020ம் வருடம் அசத்தலான பிரம்மாண்ட தயாரிப்பு "உலகம் சுற்றும் வாலிபன்" 4 k டிஜிட்டல் ட்ரைலர் புதிய படங்களில் வெளியீடில் வழியில் திரையிடப்பட உள்ளதாக இனிய, இன்ப மகிழ்ச்சி தகவல்கள்...
-
திரையில் மட்டும்தான் நடிப்பு...
அரசியலில் இல்லை...........
போலி நாத்திகன் போர்வையில் இருந்தது கிடையாது.
பெரியாரின் நெறியிலே
அண்ணாவின் வழியிலே
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் அவரின் நம்பிக்கை
இனம், மதம், மொழி என அனைத்திற்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் தூக்கி வைத்து கொண்டாடிய திராவிடத் தலைவன்.
தன்னை எதிர்த்தவருக்கும் ஏற்றத்தை மட்டுமே பரிசாய் அளித்த ஏழைப் பங்காளன்.
தான் வாழ்ந்த காலத்தில் இவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதற்கு இன்று அவரின் நினைவு தினத்தில் ரோட்டோரங்களிலும், ஆட்டோ ஸ்டெண்ட்களிலும், தொழிலாளர் கூடங்களிலும் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு கடந்த 32 ஆண்டுகளாக எரிந்து வரும் விளக்கும் ஊதுபத்தியுமே சாட்சி. (மக்களாட்சியில் முதல்வர் மக்கள் திலகம்)
லோகநாதன்............ Thanks.........
-
இன்றைய 26-12-2019 "தினமணி" நாளிதழில் " "அரசியலை நோக்கி நடிகர்கள்"... கட்டுரையில் எப்பொழுதும் வென்றார் எம்.ஜி.ஆர்., பற்றிய கருத்துகள் 100% நிதர்சனம்... யதார்த்த உண்மை பதார்த்தமாக பதிய வைக்கப்பட்டுள்ளது அருமையோ அருமை..........
-
-
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் ! .......
___________________
மக்கள் திலகம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சுமார் 17 ஆயிரம் ரேஷன் கடைகள் மட்டுமே தனியார் மூலம் இயங்கிவந்தன பெரும்பாலும் பகுதி நேரமே இயங்கிவந்த ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குச் சேரவேண்டிய பொருட்கள் வெளிச் சந்தையில் கொள்ளைவிலைக்கு விற்பனை செய்யப்பட்டன அதனால் நேரடியாக அரசு மூலமாக 22ஆயிரம் முழுநேர நியாயவிலைக்கடைகளை திறந்து சாதனை படைத்தார் !
நன்றி ! திரு சைதையார் ........ Thanks.........
-
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் !
__________________
மக்கள் திலகம் பெண்கள் இரவு நேரத்தில் பத்திரமாக வீடு திரும்ப முதன் முதலாக மகளிர் காவல் படையை உருவாக்கினார் !
கணவனால் கைவிடப் பட்ட பெண்கள் , விதவைகள் , முதிர்கன்னிகளுக்கு சத்துணவு அமைப்பாளர் ,உதவியாளர் வேலைகளில் முன்னுரிமை வழங்கினார் ! ஒரே நாளில் 12 ஆயிரம் பெண்களுக்கு அரசு பணியாளர் ஆகும் வாய்ப்பை கொடுத்தார் !
பெண்ணுக்கு உரிய மதிப்பு தரவேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆலய அறங்காவலர் குழுக்களிலும் ஒரு பெண்ணையும் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் !
பெண்களின் துயரமான விறகு அடுப்பு கொடுமையை தீர்ப்பதற்காக புகையில்லா அடுப்பு என எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டதும் எம் ஜி ஆர் தான் !
நன்றி ! திரு சைதையார் !....... Thanks..........
-
தலைவர் நினைவுநாள் சிறப்பு பதிவு.
தலைவருக்கு நடிகர் வி.கே.ராமசாமியை மிகவும் பிடிக்கும்.. அவர் நடிப்பு திறமையை ரசிப்பார். ராமசாமிக்கு மது பழக்கம் உண்டு. இது நம் வாத்தியாருக்கு மன உளைச்சல் ஏற்படித்தியது.
மாட்டுக்காரவேலன் பட பிடிப்பில் இறுதி காட்சி படப்பிடிப்பு முடிந்து அதில் அவர் நடிப்பை கண்டு வியந்த வாத்தியார் அவரை தனியாக அழைத்து பேசினார்.
நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... எவ்வளவு பாடுபட்டு இந்த துறையில் நாம் வந்தோம்...இது உங்க சொந்த விஷயம் ஆக இருந்தாலும் இதை நம் குடும்ப விஷயமாக நான் நினைக்கிறேன்.
நல்ல கலைத்திறமை இருந்த பல நம் முன்னோடி நடிகர்கள் உடம்பில் ஆரோக்கியம் கெட்டு கலை திறமையை முழுவதும் காட்ட முடியாமல் இடையில் மறைய இந்த தீய பழக்கமே காரணம்.
நீங்கள் நல்ல நடிகர்..நான் உங்கள் ரசிகன்...நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து அதை நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும்...இதுவே என் ஆசை..இனி உங்களை நான் புதிய வி.கே.ஆர். ஆக பார்க்கணும் என்று சொல்ல.
உடனே கண் கலங்கி நம் இதயதெய்வத்தை கட்டி பிடித்து கதறி அழுத வி.கே.ஆர்..கண்ணீரை வாத்தியார் துடைக்க மீண்டும் பட பிடிப்பு தளத்துக்கு இருவரும் வந்தனர்.
மறுநாளே தன்னிடம் இருந்த மது பெர்மிட் ஐ
திரும்ப கொடுத்த வி.கே.ஆர்....அன்று முதல் திருந்திய மனிதன் ஆக நடிகராக மிளிர்ந்தார்.
நிகழ்வு பதிவு தலைவரின் மெய் காப்பாளர் ஐயா கே.பி.ஆர்..அவர்கள்.
வாழ்க வள்ளல் புகழ்.
என்றும் வாத்தியார் தொண்டன் ஆக நெல்லை மணி நன்றி..........
நேற்று எங்கள் பகுதியில் நினைவு அஞ்சலி படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது........... Thanks.........
-
MGR வாழ்க.
முகநூல் நண்பர்களே
மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி னார்
அதைப் படித்துப் பார்த்த எம்ஜிஆர் அவர்கள்
.
அந்தப்பாடலில் இரண்டுவரிகள்/ ஆபாசமாக இருக்கின்றன.
என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்
கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற ஆபாசமான பாடல் வரிகள்
,இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்
அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்களஎன்று உதவி டைரக்டர் ராஜ சேகரிடம் கொடுத்துஅனுப்பினார் MGR / ராஜசேகர் கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார் / MGR பாடலை மாற்றசொன்னாரா என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார்
பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது /
//////////////////////////////////////////////////--+--
வக்கீல் எம்ஜிஆரும் மாட்டுக்காரன் எம்ஜிஆரும்
தன் காதலி களுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்துள்ளது
வக்கீல் MGR பாடுகின்றார்/
பள்ளிக்ககணக்கு /கொஞ்சம் சொல்லி பழக்கு/ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு .
கதாநாயகி பாடுகின்றார் /
போடுங்கள் / கூண்டில்ஏற்றுங்கல் / நான் போதும் எண்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள் /
இந்தவரிதான்முதலில் கண்ணதாசன் எழுதிய வரி
இந்த வரி ஆபாசமாக உள்ளது என்று எம்ஜிஆர் மாற்றச் சொன்னார்
;/;/////////////////////////////;//;;;;;;//////////////
MGR / சொல்லியபிறகுமாற்றியவரி/
போடுங்கள் / கூண்டில்ஏற்றுங்கள்
உங்கள் பொன்மனதை சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள்
எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகள்வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்
எம்ஜிஆர் தன் படங்களில் நீதி நேர்மை சத்தியம் தர்மம் ஒழுக்கத்தை சொன்னார்
ஆகவே தான் அவருடைய புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது
பழைய சினிமா படத்தில்
கதாநாயகி பாடுகிற ஒரு பாடல் வரி எனக்கு நினைவுக்கு வருகிறது
கலப்பையை தோளில தூக்கி
காடு உழுகப் போற மச்சான்
கலப்பையை அழித்து உழுங்கள்
வந்தாளே மகராசி என்ற படத்தில் வருகின்ற இந்த பாடலை
திமுக பொதுக் கூட்டத்தில்
தீப்பொறி ஆறுமுகம் அவர்கள. ஏற்ற இறக்கத்தோடு அழகாக பாடுவார்
இந்தப் பாடலுக்கு விளக்கமும் கூறுவார்
இதைக் கேட்டு அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் கைத்தட்டி சிரி சிரி சிரி சிரிசிரி என்று சிரிப்பார்கள்
நன்றி / பொம்மை
மாத இதழ் ...........
1972........... Thanks...
-
-
*மருதூர்* *கோபாலமேனன்* *ராமச்சந்திரன்* . எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத, ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் இவரை மிக நல்ல மனிதர் என்றே போற்றியுள்ளனர். இளமைக் காலங்களில் வறுமையில் துவண்டபோதும், பின்னர் செல்வத்தில் புரண்ட போதும் இவரை எளியோரின் நண்பன் எனப் பாராட்டினர். நடிப்பில் மட்டுமல்லாது அரசியலிலும் தமக்கென ஒரு பாணியை, பாதையை வகுத்துக் கொண்டு வெற்றி பெற்றவர். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், இதயக்கனி எனப் பல பட்டப்பெயர்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். எனும் பெயர் இவரை உலகமறியச் செய்தது.
2017 ஜனவரி 17ஆம் நாளோடு, எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டுகள் நிறைவுற்றுவிட்டன. தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான, வெற்றிடச் சூழலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டினை சிறிதளவில் மழுங்கச் செய்துவிட்டன என்றால் மிகையில்லை.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, அரசியல் எனப் பல துறைகளில் பரிணமித்து, பரிமளித்திருந்தாலும் திரைத்துறையில் அவரது பயணத்தை நோக்கினால், அப்போதைக்குப் பிரபலமாயிருந்த ஒரே வெகுஜன ஊடகத்தை, மிகச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர் எம். ஜி. ஆர் என்று புரியும்.
ஒரு நடிகராக வாழ்க்கையைத் துவங்கி, பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்த போதிலும் அந்த அனுபவங்களை அடித்தளமாக அமைத்துக் கொண்டு, தனது ரசிகர்களது நாடித் துடிப்பைக் கச்சிதமாகப் படித்தறிந்து வெற்றிக்கான சூத்திரத்தை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். தொண்டையில் குண்டடிப்பட்டு குரல் சேதமடைந்த பின்னர், பின்னணி பேச வசதிகள் இருந்த போதிலும், தனது சொந்தக் குரலில் பேசி, உடைந்து போன உச்சரிப்பையும் மீறி ரசிகர்களைச் சென்றடைந்தார்.
நடிகர் திலகம் என்ற இமயம் எதிரே இருந்த போது, அதனுடன் முட்டி மோதாமல் அதைச் சுற்றிலும் நதியாக ஓடி, பலரது இதயங்களில் இடம் பிடிக்கும் லாவகத்தைப் புரிந்து வைத்திருந்தவர். ஏறக்குறைய 136 படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். ஒவ்வொரு காலகட்டத்திலும், தனது போட்டியாளர்களைப் புரிந்து கொண்டு தனது பாதையை மாற்றிக்கொண்டார் என்றால் அது மிகையில்லை.✍.......... Thanks...
-
-
-
https://i.postimg.cc/C5jmHsLR/IMG-4608.jpg
நண்பர் திரு ராமமூர்த்தி - வேலூர் அனுப்பிய புகைப்படங்கள்
-
-
-
இந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் (27/12/19)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை சென்ட்ரல் சினிமா* - கலங்கரை விளக்கம் -தினசரி 4 காட்சிகள்*
கோவை சண்முகா* -* தாய் சொல்லை தட்டாதே - தினசரி 4 காட்சிகள்*
-
எம்ஜிஆர்... அவர்தான்..... அவர் மட்டுந்தான்... பகுதி-2! ஏழுமலை வெங்கடேசன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - https://www.patrikai.com/mgr-he-was-...ai-venkatesan/......... Thanks.........
-
மேற்கண்ட பதிவில் மக்கள் திலகம் அவர்களின் இணையில்லா மாண்பினை சிறப்பாக கூறியிருக்கிறார்கள்............
-
#கண்ணதாசனின் #வாத்தியார்
மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதினார்...
அதைப் படித்துப் பார்த்த மக்கள்திலகம்
அந்தப்பாடலில் இரண்டுவரிகள் ஆபாசமாக இருக்கின்றன.
என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்...
கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற இந்த ஆபாசமான பாடல் வரிகள்...
இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்
அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்கள் என்று உதவிடைரக்டர் ராஜசேகரிடம் கொடுத்து அனுப்பினார் மக்கள்திலகம்... ராஜசேகர்கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார்.
"எம்ஜிஆர் பாடலை மாற்றச் சொன்னாரா?" என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார் கண்ணதாசன் அவர்கள்.
பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது
வக்கீல் எம்ஜிஆரும்....மாட்டுக்கார எம்ஜிஆரும்
தன் காதலிகளுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.
வக்கீல் எம்ஜிஆர் :
பள்ளிக்கணக்கு
கொஞ்சம் சொல்லி பழக்கு இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு...
கதாநாயகி :
போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
நான் போதும் என்று
சொல்லும் வரை
நீதி சொல்லுங்கள்...
இந்த வரிகள் தான் முதலில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்...
இந்த வரிகள் ஆபாசமாக உள்ளது என்று மக்கள்திலகம் மாற்றச்சொன்னார்
#மக்கள்திலகம் #சொல்லிய #பிறகு #மாற்றிய #வரிகள்....
"போடுங்கள்...
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன்மனதை
சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்..."
மக்கள்திலகம் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகளின் சாயல் துளிக்கூட வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்.
மக்கள்திலகம் தன் படங்களில் நீதி நேர்மை, சத்தியம், தாய்ப்பாசம், தர்மம், ஒழுக்கத்தைப் போதித்தவர்...
"என் பாடல் வரிகளை ஒருவர் திருத்துகிறார் என்றால் அது எம்ஜிஆராகத் தான் இருக்கமுடியும்...!" என்று கூறியவர் கண்ணதாசன் அவர்கள்............ Thanks.........
-
ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.
இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.
முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.
ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.
கொள்கைப் பாடல்
இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.
அதனை இப்போது காண்போமா?
“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.
அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?
ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?
இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!
“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!
பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!
இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.
நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!
பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!
“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”
பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?
இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!
“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”
எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.
இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!
இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?
“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”
- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?
“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”
என்றும்,
“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”
என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது........... Thanks..........
-
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற காவியங்களில் வந்த பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு மட்டுமில்லாமல் உண்மையிலே அவரது இயற்கையான அழகு மற்றும் அவருடைய கட்டு மஸ்தான உடலின் அழகினை பற்றி பாடலாசிர்யர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒரு தொகுப்பு .
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
இன்றே அவனை கைதி செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்
ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது... Thanks...
-
இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
(அன்றொரு...
ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
(அன்றொரு...
அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ......... Thanks.........
-
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் .
____________________
சத்துணவு உணவு ஆண்டு முழவதும் வழங்கப் பட்டது பள்ளியில் பயிலாத மாணவர்களுக்கும் தரமான சத்துணவு வழங்கப்பட்டது . இந்த திட்டத்தினால் 1கோடிபேர் பயன் அடைந்தார்கள் என்பது வரலாற்று சாதனை .
சத்துணவு திட்டத்திற்கு பின் தான் தமிழகத்தில் படிப்பறிவு அதிகரித்தது . இது தவிர காலணி, பாடப்புத்தகங்கள் ,பல் பொடி போன்றவைகளும் எம் ஜி ஆரால் இலவசமாக கொடுக்கப்பட்டது .
கல்வி சீர்திருத்தமாக பிளஸ்-2 பாடத்திட்டம் ,மருத்தவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு . தனியாருக்கு பொறியல் கல்லூரிகள் கொண்டு வந்ததும் எம் ஜி ஆர் தான் .அவரது கல்வி புரட்சியினால் தான் இன்று உலகமெங்கும் தமிழர்கள் ஐ டி, துறையில் பெரும்புரட்சி செய்து வருகிறார்கள்
நன்றி! திரு சைதையார்.......... Thanks.........
-
-
மக்கள் போற்றும் மக்கள் திலகம் .
____________________
49 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை
68 சதவீதம் என்று உயர்த்தி பெரும்புரட்சி செய்தவர் எம் ஜி ஆர் தான்.
சுப்ரிம் கோர்ட்டில் 50 சதவீதத்திற்குள் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டாலும் , சட்டப்படி 68 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி தமிழகத்தை தனி பாதையில் கொண்டு சென்றார் .
அது மட்டுமின்றி அரசு மானியம் , அரசு நிதி பெறும் பல்கலைக் கழகம் , உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துமே 68 சதவீதம் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தனார் .
நன்றி ! திரு சைதையார் ............ Thanks.........
-
"உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!
அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.
ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"
"போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!
புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!......... Thanks.........
-
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் 2019 .
2019ல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது . மலேசியா , சிங்கப்பூர் ,பிரான்ஸ் இங்கிலாந்து, இலங்கை , அமெரிக்கா நாடுகளிலிலும் சிறப்பாக எம்ஜிஆர் விழாக்கள் நடந்தது . மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய புதிய புத்தகங்கள் வெளிவந்ததது .நெல்லை மணி அவர்கள் எம்ஜிஆர் ஆல்பம் ஒன்றை சிறப்பான முறையில் தயாரித்து வெளியிட்டார் .
சென்னை சென்ட்ரல் - புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன் மத்திய அரசு அறிவித்து எம்ஜிஆருக்கு புகழை சேர்த்தது .
எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயங்கள் மத்திய அரசு வெளியிட்டது .
2019ல் எம்ஜிஆரின் 38 படங்கள் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது . எம்ஜிஆர் படங்கள் வெளியிடுவதில் கோவை நகர் முதலிடம் வகிக்கிறது
மதுரை நகர் 2 வது இடமும் சென்னை நகரம் 3 வது இடமும் பெற்றது .
சமூக வலை தளங்களில் எம்ஜிஆரை பற்றிய பல்வேறு தலைப்பில் கட்டுரைகள் வீடியோக்கள் வெளிவந்தது .ஊடகங்களில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்களில் எம்ஜிஆரின் செய்திகள் இடம் பெற்றது . புதிய திரைப்படங்களில் எம்ஜிஆர் பற்றிய காட்சிகள் பாடல்கள் இடம் பெற்றன .
மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நேரத்தில் எம்ஜிஆர் பெயர் எம்ஜிஆரின் இரட்டை இலை
கட்சியின் பெயர் வழக்கம் போல பிரச்சாரத்தில் இடம் பெற்றது .
24.12. 2019 எம்ஜிஆரின் நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது .
எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் , நம்நாடு , அன்பே வா , மாட்டுக்கார வேலன் , இதயக்கனி , ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்பட்டு 2020ல் திரைக்கு வர உள்ளது
முக நூல் . டுவிட்டர் , வாட்ஸ் ஆப் , மய்யம் போன்ற வலைத்தளங்களில் எம்ஜிஆர் புகழ் தினமும் இடம் பெற்றுள்ளது சிறப்பாகும் .
எம்ஜிஆரின் 104 வது பிறந்த நாள் விழா தொடக்கம் 2020ல் சிறப்பாக கொண்டாட உள்ளது ..
2019 வழக்கம் போலவே திரை மற்றும் அரசியல் களத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதலிடத்தில் நிற்கிறார் .
எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் தொண்டர்களுக்கும் பெருமைகள் நிறைந்த ஆண்டு 2019 தொடர்ந்து 2020லும் தொடரும் .............. ...... Thanks.........
-
அருமை கழக , மன்ற , மறவர்களே !!
நமது கண்கண்ட தெய்வம் !! மக்கள்திலகம் !! பாரதரத்னா !! டாக்டர் !!
திரு, புரட்சித்தலைவர் அவர்களின் !!
ரத்தத்தின் ரத்தமான !! விசுவாசிகளே !!
நமது மக்கள் திலகம் அவர்கள் மீது !! பற்றும் !! பாசம் கொண்ட !! அனைத்து பிரிவுகளின் தொழிலதிபர்களே !! திரு,மக்கள் திலகம் அவர்கள் காலத்தில் !! பொறியல் கல்லூரிகள் அமைத்த அன்பு திரு,உரிமையாளர்களே !! மற்றும் கட்டிடகலை நிபுணர்களே !! மற்றும் ஜவளிகடைகளின் திரு ,உரிமையாளர்களே !! ஐந்து நட்சித்திர ஹோட்டல்கள் மற்றும் ரீசார்டுகளின் திரு.உரிமையாளர்களே !!
அனைவருக்கும் பணிவான வணக்கம் பல,
இதன்மூலம் அன்போடும் !! பணிவோடும் !! தெரிவிப்பது யாதனில் !!
இந்த உலகிற்கு வாழ்ந்த தமிழ் கடவுள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திருவள்ளுவர் பெறும்தகை அவர்கள் !! 1330 திருக்குறளை !! இந்த உலகத்திற்கு !! வாழ்வியல் பண்புகளை !! நமக்கும் !! உலகமக்களுக்கும் !! அற்பணித்தார் !!
அவை அனைத்தும் இந்த உலகம் உள்ளவரை !! ஒரு மாபெரும் பொக்கிஷமாக !! உலகம் முழுவதும் உலாவருகிறது !! என்பதில் ஐயமில்லை !!
அதேபோல் நமது மக்கள் திலகம் அவர்கள் !! திரைத்துறையில் !! நடித்து வெளியான !! திரைப்டங்கள் 136 !!காவியங்களாக !! 1).சதிலிலாவதி முதல் !! மதுரையை மீட்டிய சுந்திர பாண்டியன் வரை !! அனைத்து திரைப்படங்களின் !!திரைபாடல்கள் !! தமிழ் !! தெலுங்கு !! மளையாளம் !! இந்தி !! ஒரே புத்தகமாக !! பாடல்கள் பொக்கிஷமாக !! A4 சைசில் !! ஆர்ட்டு பேப்பரில் !! பல வர்ணங்களில் !! எனது புதிய " ரியல் மன்னாதிமன்னன் " மாதம் இருமுறை இதழின் சார்பில் !! நமது மக்கள் திலகம் அவர்களின் !!திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர் !! இயக்குனர்கள் !! ஒளிப்பதிவாளர்கள் !! இசையமைப்பாளர்கள் !! பாடலாசிரியர்கள் !! வசனகர்த்தாக்கள் !! நடன இயக்குனர்கள் !! திரைத்துறை நட்சத்திரங்கள் !! மற்றும் திரைத்துறையின் தொழில்துறை நிபுணர்கள் !! ஒப்பனை காலைஞர்கள்!! ஆகியோரின் !! கட்டுரைகளுடன் மிக சிறந்த அரிய பொக்கிஷமாக தயாராகிறது !!
ஆகவே இந்தியா மற்றும் அயல்நாடுகளின் வாழும் தொழிலதிபர்களும் !! தங்கள் தலைமையின் கீழ் நடத்தப்படும் !! வர்த்தக நிறுவனங்கள் !! மற்றும் !! பொறியல் கல்லூரிகளின் விளம்பரங்களை !! இந்த அரிய பொக்கிஷியத்தில் !! இடம் பெற்றால் 100 ஆண்டுகளுக்கு மேல் இடம் பெற முழுப்பக்கம் !! வண்ணத்தில் விளம்பரம் செய்ய,ரூ, 10,000 மட்டும்தான் !!
தங்கள் விளம்பரம் இப்புத்தகத்தில் இடம் பெற தாங்களின் வர்த்தக நிறுவனத்தின் " லோகோ " உடன் D T P வண்ண Design செய்து ரூ.10,000 மட்டும் " " ரியல் மன்னாதிமன்னன் " என்கிற பெயரில் D D எடுத்து கிழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பும் படி அன்புடன் வேண்டுகின்றேன் ,
அனுப்பவேண்டிய முகவரி
" ரியல் ,மன்னாதிமன்னன் "
35/31.பாசியம் ரெட்டி முதல் தெரு
ஓட்டேரி.சென்னை,600012. இந்தியா தமிழ்நாடு ,
கைபேசி எண்கள்,9444 141938 & 7010993501.
குறிப்பு ; இதை படித்த அருமை நண்பர்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுவது தங்களும் இந்த அரிய பொக்கிஷத்தை பற்றிய இந்த பதிவை அனைவருக்கும் SHARE செய்து விளம்பரமும் பெற்றுதரும் படி அன்புடன் வேண்டுகின்றேன்,
என்றும் கண்கண்ட தெய்வம் !! மக்கள்திலகம் !! அவர்களின் விசுவாசி,
ஓம்பொடி,சி,பிரசாத் சிங்.
சென்னை,600012.............. Thanks.........
-
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் .
____________________
கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் தன்னிறைவு திட்டத்த்தைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் எம் ஜி ஆர்.
குடிநீர் வசதி , சிறுபாலங்கள் , பள்ளி கட்டிடங்கள் , ஊரக மருந்ததங்கள் , இணைப்புச் சாலை வசதிகள் , தாய் சேய் நலவிடுதிகள் , மயானத்துக்கு பாதை போன்ற அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டன.
மூன்றே ஆண்டுகளில் தமிழகம் முழவதும் தன்னிறைவு திட்டம் முழமையாக நிறைவேற்றப்பட்டன ஆம், ஊரகச்சாலை திட்டம் மூலம் சுமார் 6300 கி மீ நீளமுள்ள சாலைகள் அமைக்கப்பட்டன .குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டமும் பின்னர் இரு விளக்கு திட்டமும் கொண்டுவரப்பட்டது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிமுகப்படுத்தியும் எம் ஜி ஆர் தான் .
நன்றி! திரு சைதையார் .......... Thanks.........
-
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.
‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.
அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.
‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.
‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.
‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.
‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.
‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.
‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.
‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "
Nallathambi (son of Kalaivanar N.S.Krishnan) அவர்கள் ஆல்பத்திலிருந்து .
*MGR....the Great.* 🙏🏻........... Thanks.........
-
மக்கள் போற்றும் மக்கள் திலகம் .
____________________
தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு யாரும் செய்யமுடியாத அரிய முயற்சியை எம் ஜி ஆர் மேற்கொண்டார் ஆம் மதுவை தமிழகத்திலிருந்து விரட்டுவதற்காக புரட்சிகரமான அவசரச் சட்டம் கொண்டு வந்தார் .
மதுவிலக்கு சட்டத்தின் கீழ் முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை,இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறை மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார்.
சட்டம் இது போன்று கடுமையாக இருந்தால் தான் மக்களை குடியின் அசுரபிடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று எம் .ஜி .ஆர்., உறுதியாக நம்பினார் ............ Thanks.........
நன்றி! திரு சைதையார்.
-
கோடி மனிதர்களின்
குழுவில் ஒருமனிதன்
குணங்கள் நிறைந்திருக்கப் பிறந்தான்_அவன்
குங்குமநிறத்தினில் இருந்தான்...
முகம்
வாடித் தவித்தவரை
வயிறு பசித்தவரை
வாரி அணைத்துநலம்
புரிந்தான்_பிறர்
வாழ்வின் அவலங்களை
அறிந்தான்..
பிறர் வாழ்வின் அவலங்களை
அறிந்தான்!!
அவன் தேடிக் கொடுத்தபொருள்
தெய்வம் கொடுத்ததில்லை
திறமை அதற்குஇல்லை
தெரிந்தவர் நெஞ்சம் போற்றும்_மதி
தெளியார்நெஞ்சம் தூற்றும்!!
இங்கு நல்லவராயினும்
நாட்டினிலாயிரம் நாக்குகள்
அவரினைப் பழிக்கும்_ஒரு
நாளைக்குத் தருமம் விழிக்கும்!!
ஒரு நாளைக்குத் தருமம்
விழிக்கும்!!
பிறர் பேசிய பேச்சையும்
ஏசிய ஏச்சையும்
பெரிதாய் எடுப்பவர் பிழைப்பதில்லை_அவர்
பேரும் புகழும்
நிலைப்பதில்லை _மேல்..
வீசிய கல்லையும் மலராய்
நினைத்தால் விழுந்தவர் விழுந்தே
கிடப்பதில்லை _மன
வேதனையாலவர்
துடிப்பதில்லை _இங்கு..
நன்மைகள் செய்பவர்
நான்குமனிதரின் நாக்குகள்
சொல்வதை ஏற்பதில்லை_அவர்
நாடகம் நடிக்கையில் பார்ப்பதில்லை_என்றும்..
உண்மையின் வழியே
ஒழுங்காய்ச் செல்பவர்
உயிரை எமனும் பறிப்பதில்லை_அவன்
பறித்தால் அதனால் பயமுமில்லை_இங்கு..
ஏழைகள் இதயத்தில்
இருக்கிற தலைவன்
எந்த யுகத்திலும் இறப்பதில்லை_இதை
எடுத்துச்சொன்னால்
சிலர் பொறுப்பதில்லை!!
அவர் வேலையற்றவர் விவரம்கெட்டவர்
வீணர் என்பதில்
ஐயமில்லை_நம்
வீர எம்ஜிஆர் அழிவதில்லை!! ️
#என்றும்_எம்.ஜி.ஆர்...!.......... Thanks...
-
அனைவருக்கும் இனிய "புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள்......... என்றும், எப்பொழுதும் வாழ்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வான் புகழ்...
-
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் .
___________________
ஆனால் , எம் ஜி ஆர் சட்டத்துக்கு , அத்தனை எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன .குடிப்பது என்ன கொலைக்குற்றமா ? கொடுர பாவமா? என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் , அந்த சட்டத்தை மனவேதனையுடன் திரும்பப் பெற்பார் எம் ஜி ஆர்.
குடியினால் ஏற்படும் கொடுரங்களை தீர்க்கதரிசனமாக அறிந்து எம் ஜி ஆர். கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு, அன்றைய எதிர்கட்சிகள் ஆதரவு கொடுத்திருந்தால் இன்று தமிழகம் இநதியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் , உலகத்திற்கே முன்னோடி மாநிலமாகவும் இருந்திருக்கும் . மக்கள் நலனைமட்டுமே சிந்தித்து எம் ஜி ஆர் கொண்டு வந்த சட்டத்தை அத்தனை கட்சிகளும் எதிர்த்த காரணத்தால் தான் தமிழகத்தில் சாதுவாக நுழைந்த மது , இன்று அரக்கனாக உருமாறி ஆண்களையும் , பெண்களையும் ஆட்டுவிக்கிறது . இனி தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் மீண்டும் எம் ஜி ஆர் பிறந்து வந்தால் மட்டுமே முடியும் என்பது தான் வேதனையான உண்மை.
நன்றி! திரு சைதையார் ......... Thanks.........
-