2000 பதிவுகளை கடந்த எங்கள் முத்தான முரளி சாருக்கு வாழ்த்துக்கள்.ஏனைய நண்பர்கள் சொன்னதைப்போல நானெல்லாம் இந்த திரிக்கு வந்ததே நம் முரளி சாரின் பதிவுகளால்தான்.உங்களில் ஒவ்வொரு பதிவுமே எனக்கு ஒரு கோடிக்கு சமம்.
Printable View
2000 பதிவுகளை கடந்த எங்கள் முத்தான முரளி சாருக்கு வாழ்த்துக்கள்.ஏனைய நண்பர்கள் சொன்னதைப்போல நானெல்லாம் இந்த திரிக்கு வந்ததே நம் முரளி சாரின் பதிவுகளால்தான்.உங்களில் ஒவ்வொரு பதிவுமே எனக்கு ஒரு கோடிக்கு சமம்.
Dear Ragavendran sir,
Thanks for the photos of Bangalore Aruna Theatre celebration
Thanks for nice coverage of Aruna theatre Allappari by Mr Harish.
டியர் ராகவேந்திரன் சார் மற்றும் செந்தில் சார்,
அருணா தியேட்டர் அமர்க்களங்கள் அருமை! இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
மார்ச் 2013 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' 'வசந்த மாளிகை' சிறப்புத் தகவல்களுடன், நடிகர் திலகத்தின் அட்டகாசமான வசந்தமாளிகை போஸில் அட்டைப்படத்துடன் அருமையாய் ஜொலிக்கிறது. நடிகர் திலகத்தின் மீது மாறா அன்பு வைத்திருக்கும் இதயக்கனி திரு. விஜயன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றி. சமயம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் திலகத்தை கௌரவிக்க சற்றும் தயங்காத அவருக்கு நம் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
இப்போது அட்டைப்படம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-27.jpg
உள் அட்டைப்படம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-27.jpg
மிக மிக அபூர்வமான புகைப்படம்.
நடிகர் திலகத்தின் ஆசான் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை அவர்களுடன் 'வசந்த மாளிகை' படப்பிடிப்பில் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-17.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/4-15.jpg
நடிகர் திலகத்தின் நாடகக் குழுவில் அவருடைய குருவாக இருந்தவர் பொன்னுசாமி. இவர் மட்டுமின்றி அவருக்கு அடுத்த படியான ஸ்தானத்தில் இருந்தவரும் பொன்னுசாமி. இருவருமே யதார்த்தம் பொன்னுசாமி என்ற பெயரில் தான் புகழ் பெற்றனர். பின்னவர் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். இவர் யதார்த்தம் சின்ன பொன்னுசாமி என அறியப் பட்டார்.
மேலே உள்ள படத்தில் இருப்பது நாடகக் குழுவின் தலைவரும் குருவுமான யதார்த்தம் பொன்னுசாமி அவர்கள்.
நிழற்படத்திற்கு நன்றி வாசு சார். இதயக்கனி சினிமா ஸ்பெஷல் இதழில் வேறு பக்கங்களில் நடிகர் திலகத்தைப் பற்றிய கட்டுரை இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி ராகவேந்திரன் சார்,
நிச்சயமாக.
ஆனந்தின் அன்பு சாம்ராஜ்ஜியம் ஆல்பர்டில் தொடருகிறது
காலத்தால் அழியாத காதல் சாம்ராஜ்ஜியம் தன எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்றைய தலைமுறையினரையும் காந்தம் போல் கவர்ந்து வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மூன்றாவது வார சனிக்கிழமையிலும் கணிசமான கூட்டம்.
நேற்று ஞாயிறோ 50 ரூபாய் டிக்கெட் புஃல். 70 ரூபாய் டிக்கெட் இருக்கைகள் கிட்டத்தட்ட நிறைந்து விட்டன. 18 டிக்கெட்கள் மட்டுமே விட்டுப் போயின.
அநேகமாக அனைத்து திரையரங்களிலுமே ஓடிக் கொண்டிருக்கும் படங்களைப் பார்க்க பொதுமக்கள் வராத சூழலில் வசந்த மாளிகைக்கு மட்டும் திரண்டு வரும் மக்கள் கூட்டம்.
இதை தவிர நெல்லையில் வெற்றிகரமான இரண்டாம் வாரம், பழைய படங்களே திரையிடப்படாத [திருசெந்தூர் அருகில்] ஆத்தூர் தம்பையாவில் மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று நெல்லை மாவட்ட செய்திகள் கூறுகின்றன. இந்த வாரம் வெள்ளியன்று நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் வெளியாகலாம் என்றும் தகவல்.
அன்புடன்