இவருக்கு NT னே நெனப்பு போலிருக்கு. Double Role வேறு!!!????????????????????
Printable View
டியர் சின்னக் கண்ணன் சார்
என்னைப் போல் ஒருவன் பற்றிய தங்கள் கருத்துரை சரியானது மட்டுமல்ல, தங்கள் உள்ளத்திலிருப்பதை அப்படயே கூறும் தங்கள் நல்ல எண்ணத்தையும் காட்டுகிறது. பாராட்டுக்கள்.
டியர் ராகுல் ராம்
ஜெனரல் சக்கரவர்த்தி - தங்கள் பார்வையில் .... சிறப்பு... இது போல் அரிய படங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். தங்கள் தமிழும் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. பாராட்டுக்கள்.
என்னைப் போல் ஒருவன் படத்தைப் பற்றி கருத்துக்களைக் கூறிவிட்டு, பார்வைக்குத் தராமல் இருந்தால் தகுமா.
மௌனம் கலைகிறதே .... மயக்கம் வருகிறதே...
மெல்லிசை மன்னரின் சூப்பர் ரிதம் பாடலின் சிறப்பை மேலும் அதிகப் படுத்துகிறது..
தலைவரோ ... கேட்கவே வேண்டாம். ..
http://youtu.be/n7Qzz_2u-bQ
பின்னணி இசை இல்லாமலும் பின்னணி இசையோடும் படம் ஒரே மாதிரி இருந்ததா... கோபால் சார் .... இது உங்களுக்கே டூ மச்சாகத் தெரியவில்லை ....
Ha..Ha...Ha...! Gopal Sir,
Tanjore Kusumbu? மனசுல நிக்கறா மாதிரி நச்சுனு ஒன்பது வேடம் நம் தலைவர் புனைந்திருக்கிறார். அவர் அபிமானியாக இருந்து நான் ஒரு சாதாரண டபுள் ரோல் கூட செய்யவில்லைஎன்றால் என்னுடைய சித்தர் அவர் என்று சொல்லுவதில் என்ன கர்வம் எனக்கு இருக்கபோகிறது ?
Perfect tribute to Father's DayQuote:
தந்தையர் தினத்துக்கு நல்ல பாடல்களை தொகுத்து வழ்ங்கியிருக்கும் ரசிகப் பெருமக்களே,
தந்தை என்றால் mindless பாசம் மட்டும் தானா? தங்கப்பதக்கத்தில் நம் தங்கத்துக்கு தங்கம் வழங்கபட்டதே
அருமையான "தந்தை"யுமானார் என்பதால் தான். தாயுமாகி, தந்தையுமாகி, நல் ஆசானாக நல்வழிப்படுத்த நினைக்கும் தந்தை. அதை ஏற்கும் பக்குவமற்ற அரைவேக்காடு தனையன்.
பிள்ளையை கடிந்து அறம் வளர்க்கும் தந்தை, சிறுவன் தூங்கிய பின் மெதுவாய் முத்தமிடும் அன்புத் தந்தை.
இப்படிப் பட்ட தந்தைகளில் சேவை அல்லவா நம் நாட்டுக்குத் தேவை.
"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" அவர் பல்கலைக் கழகமாக விளங்கினார். இறுதியில் தேறாத மாணவனை, just pass செய்து அவ்வுலகம் அனுப்பிவிட்டு, மிடுக்குடன் பதக்கம் பெறும் உதாரணத் தந்தை.
கட்டபொம்மனாக நடிகர் திலகம் நடித்த ஒரே காரணத்தினால், எங்கே கட்டபொம்மனுக்கு ஏதாவது நம் ஆட்சியில் செய்தால், நடிகர் திலகத்தை மக்கள் மேலும் மேலும் நேசித்துவிடுவார்களோ என்ற கேவலமான தாழ்புனற்சியில் திமுக மற்றும் எந்த அரசாங்கமும் தங்களுடைய எந்த ஒரு ஆட்சிகாலத்திலும் கட்டபொம்மனுக்கு ஒரு துரும்பை கூட எடுக்காதபோது, அதை பற்றி சற்றும் கவலைபடாமல், பொருட்படுத்தாமல் கட்டபொம்மன் நாடகம் மற்றும் திரைப்படத்தால் தான் அடைந்த புகழையும் பெயரையும் மனதிற்கொண்டு அந்த விஸ்வாசத்தை காட்டும்விதமாக ஒரு தனி மனிதனாய் கட்டபொம்மனுக்கு ஒரு சிலை நிறுவி, கயித்தாரில் தான் நடிக்கும் ஆரம்ப காலத்தில் வாங்கிய கட்டபொம்மனின் இடத்தை அரசாங்கத்திற்கு இலவசமாக பத்திரம் செய்து கொடுத்த உன்னதமான வள்ளல் பெருந்தகை நம் நடிகர் திலகம்.,
கட்டபொம்மன் சிலையை திரு சஞ்சீவ ரெட்டி முன்னிலையில் கர்மவீரர் காமராஜ் அவர்கள் திறந்து வைக்கும் ஆவணம் !
மக்கள் வெள்ளம் அலைகடல் என எழுந்து வந்து பாராட்டும் காட்சி. !
Attachment 2435