Originally Posted by Murali Srinivas
இங்கே பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தோடு சம்பந்தம் உள்ள ஒரு செய்தி அண்மையில் கேள்விப்பட்டேன். ஆம், நடிகர் திலகத்தின் பழைய படம் வெளியிடப்பட்ட செய்தி. ஆனால் சென்னையில் அல்ல, மதுரையில். அண்மையில் மதுரை மீனாக்ஷி திரையரங்கில் நடிகர் திலகத்தின் "ராஜா" திரையிடப்பட்டிருக்கிறது. மதுரையில் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாவது அதிசயம் அல்ல. ஆனால் ராஜாவிற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. சாதாரணமாக ஒரு பழைய படம் வெளியிட்டால் வரும் கூட்டத்தை விட மிக அதிகமான கூட்டம். குறிப்பாக ஞாயிறு மாலைக் காட்சிக்கு வந்த இரண்டு மடங்கு கூட்டத்தைப் பார்த்து விட்டு தியேட்டர்காரர்களே அதிசயித்துப் போனார்களாம். இதில் முக்கியமான விஷயம் வந்த கூட்டத்தில் சரி பாதி பெண்கள் என்பதாகும். மதுரை எப்போதுமே நடிகர் திலகத்தின் கோட்டை தானே.
அன்புடன்
இந்த இனிய தகவலை தெரிவித்த நண்பர் பம்மல் சுவாமிநாதனுக்கு நன்றி.