Originally Posted by
kalnayak
மூவாயிரம் பதிவளித்த பம்மலாரே! முப்பதினாயிரம், மூன்று லக்ட்ஷம், முப்பதுலக்ட்ஷம், ... என பலப்பல கடந்து செல்ல, பல்லாண்டு வாழ்ந்து நடிகர் திலகம் புகழ் பாடிட வாழ்த்துகள்.
வாசுதேவனாரே!
கடலூர் முத்தையா திரைஅரங்கு 'சந்திப்பு' வெளியீடு விவர கலாட்டா கொண்டாட்டத்தை எழுதி எனது நினைவுகளையும் கிளறி விட்டீர்கள். நான் உங்களை போல் அதிதீவிர ரசிகனில்லை தான் (படம் வெளியானபோது சற்றே சிறுவன்). வீட்டிலும் ரசிகனாய் இப்படி கொண்டாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்க்கத்தவற மாட்டேன். நானும் கடலூரில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்தவன்தான். முத்தையா திரை அரங்கை நன்கு அறிவேன். கடலூர் திரை அரங்குகளுக்குள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை வெளியிடுவதற்கு போட்டியிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும் இந்த குடோன் முத்தையா திரை அரங்க நிர்வாகிகளுக்கு நடிகர் திலகத்தின் படங்களை திரை இடுவதற்கு பயங்கர பேராசை. எப்படியோ சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு 'சந்திப்பு' படத்தை வெளியிடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. பேராசை பேரு நஷ்டமாகி விட்டது. இந்த ரகளை ஆகிவிட்டது. நானும் ரசிகர்களின் ரகளையை பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் உறுதி செய்து விட்டீர்கள்.
நானும் 'சந்திப்பு' வெளியான முதல் வாரத்திலேயே இதே முத்தையாவில் ஒரு நாள் இரவு காட்சிக்கு எனது தந்தையாருடன் சென்று பார்த்து வந்திருக்கிறேன். எனது அப்பா கூட்டம் எப்படி என்று பார்க்க வரிசையினை சுற்றி பார்க்க போய், எனது அப்பாவின் கட்டுமஸ்த்தான உடலை பார்த்து மப்டி-யில் போலிஸ் வந்திருப்பதாக நினைத்து ஒருவர் பயந்து 'போலிஸ், போலிஸ்' என்று கத்தி கியூ-வில் குறுக்கே புக நினைத்தவர்கள் கியூ-வை விட்டு விலகி ஓடி ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கட் எடுத்து சென்றதும், நாங்கள் எளிதாக டிக்கட் எடுத்ததும் இப்போதும் என் நினைவில் புன்னகை தவழ வைக்கிறது.