Thanks for sharing .Though I don't understand fully , tears rolling
Printable View
கேட்டவைகளில் பிடித்தது -4
இனியது இனியது உலகம் - படம் தங்கை
எப்பேர்பட்ட கருத்துக்கள் தரப்பட்டுள்ளது இப்போதைய காலகட்டத்தில் மிக அவசியம் சப்பென்று வாழும் வாழ்வில் என்ன பெருமை எப்போதும் தைரியம் கொள்வது ஏகாந்தம் இந்தப்பாடல் என்றும் தங்கும் இவ்வுலகில்
A lovely song giving a positive attitude He who follows this will be surely shrewd
இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
பருவம் போகும் வழியோடு பயணம் போகும் விழியோடு
ரசிகன் என்னும் நினைவோடு நாளும் பொழுதும் நடை போடு
ராகத்தோடு , தாளத்தோடு ,பாவத்தோடு விளையாடு
நினைத்ததெல்லாம் முடிந்த பின்னே அடுத்த வாழிவில் அடிபோடு
இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
அச்சம் கொண்டால் சுகம் இல்லை - அடிமை வாழ்வில் சுவை இல்லை - தூங்கும் கண்ணில் ஒளி இல்லை - துள்ளி நடந்தால்
வலி இல்லை
நமது வாழ்வு , நமது சொந்தம், நமது எண்ணம் உணர்வோடு - நாளை வாழ்வு யாருக் என்று கேள்வி கேட்டு பதில் தேடு
இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
ராகத்தோடு , தாளத்தோடு ,பாவத்தோடு விளையாடு
நினைத்ததெல்லாம் முடிந்த பின்னே அடுத்த வாழிவில் அடிபோடு
உத்தமமான வரிகள் - சந்தோஷமாக இருங்கள் - பிறப்புக்கும் , இறப்புக்கும் நடுவே உள்ள நாட்கள் தான் வாழ்க்கை - எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை - exam centre is same - question papers are different - ஆனாலும் சந்தோஷமாக வாழ்வது நம் கையில் தான் இருக்கின்றது - மற்றவர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் - அவர்களின் உணர்வுகளையும் மதியுங்கள் , மிதிக்காதீர்கள் - அடுத்த கட்டமும் உங்களுக்கு நன்றாகவே அமையும்
அச்சம் கொண்டால் சுகம் இல்லை - அடிமை வாழ்வில் சுவை இல்லை - தூங்கும் கண்ணில் ஒளி இல்லை - துள்ளி நடந்தால்
வலி இல்லை
தையிரியம் , தன்னம்பிக்கை மிகவும் தேவை - ஈகோ அல்ல - நீயே உனக்கு நிகரானவன் ! உங்களுடன் வேறு யாரையும் compare செய்துகொண்டு , மன வேதனை அடையாதீர்கள் - உங்கள் நிலைமைக்கும் கீழே வாழ்பவர்கள் ஒரு கோடிக்கும் மேலே -------- யாருக்கும் அடிமை ஆகாதீர்கள் , அன்பிற்கும் மட்டுமே அடிமை யாக வாழலாம் -----
நாளை வாழ்வு யாருக் என்று கேள்வி கேட்டு பதில் தேடு
எதையுமே ஏன் , எதற்கு , எப்படி என்று கேள்வி கேளுங்கள் - விதண்டா வாதமாக அல்ல - இன்றைய வாழ்வும் , நாளைய வாழ்வும் உங்களுக்குத்தான் !!!
http://youtu.be/XbRUcqDobU8
தொடரும்
அன்புள்ள ராகுல் உங்கள் " நாம் பிறந்த மண் " பதிவு மிகவும் நன்றாக இருந்தது - nt யின் தரமான படங்கள் ஏராளம் ஏராளம் - அதை பார்த்து பெரு மூச்சு விடும் நபர்களும் ஏராளம் ஏராளம் - தொடருங்கள்
இத்திரியில் என் வருகைக்கு வாழ்த்துரை நல்கிய அன்புள்ளங்கள்
திருவாளரகள் ராகுல்ராம்,ரவிகிரன்சூர்யா,ரவி ஆகியோருக்கு என்
நன்றிகள்
கேட்டவைகளில் பிடித்தது -5
தங்ககளே நாளை தலைவர்களே - படம் : என்னை போல் ஒருவன்
தங்ககளே நாளை தலைவர்களே - நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்ககளே வாழும் தெய்வங்களே - நம் தேசம் காப்பவர்கள் நீங்கள்
நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும் தேடிய செல்வங்கள் - பள்ளி சாலை தந்தவன் ஏழை தலைவனை தினமும் எண்ணுங்கள்
அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை - தருமம் செய்யுங்கள்
அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
(தங்ககளே நாளை தலைவர்களே-----)
கூடும் உறவு கூட்டுருவென்று ஒன்றாய் வாழுங்கள் - கூடிய பிறகு
குற்றம் காணும் காணும் கொள்கையை தள்ளுங்கள்
என்றும் ஒன்றே செய்யுங்கள் , ஒன்றை நன்றே செய்யுங்கள் - நன்றும் இன்றே செய்யுங்கள் - நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
ஈகையில் நாளுமே வெற்றி மேல் வெற்றியே
(தங்ககளே நாளை தலைவர்களே-----)
இந்த பாடல் குழந்தைகளுக்காக மட்டும் அல்ல - குழந்தைகளாக இருந்து இன்று வளர்ந்திருக்கும் நம் எல்லோருக்கும் தான்
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
எவ்வளுவு முடியும் என்பது கஷ்டமான காரியம் தான் - நம்மை எல்லோரும் மட்டம் தட்டவும் வாய்ப்பு உள்ளது - பலவீனமானவர்கள் என்ற பெயரும் கிடைக்கலாம் - ஆனால் நேர்மையாக வாழ்வதில் தோல்வியே இல்லை என்பது 100% உண்மை .
கூடும் உறவு கூட்டுருவென்று ஒன்றாய் வாழுங்கள் - கூடிய பிறகு
குற்றம் காணும் காணும் கொள்கையை தள்ளுங்கள்
என்றும் ஒன்றே செய்யுங்கள் , ஒன்றை நன்றே செய்யுங்கள் - நன்றும் இன்றே செய்யுங்கள் - நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
எவ்வளவு உண்மை , - நம்மிடம் உள்ள குறைகளை தீர்க்கவே இந்த ஒரு ஜென்மம் போதாதே - ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும் - எதிலும் வெல்ல இந்த குணம் ஒரு தடை தானே ?!!
http://youtu.be/Xr4gvXXgCnU
தொடரும்
அன்புள்ள ரவி,கேட்டவைகளில் பிடித்தவை என்ற தலைப்பில் நீங்கள் தேர்வு செய்து,
வழங்கி வரும் நடிகர் திலகத்தின் பாடல்களின் வரிகளும்,இடையிடையே தங்களது
கருத்துக்களும் அருமை
கேட்டவைகளில் பிடித்தது -6
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - படம் பாபு
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே----)
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் - இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் - குளிர் மேகமன தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே----)
பல நூல் படித்து நீ வழங்கும் கல்வி -பொது நலம் நினைத்து நீ
வழங்கும் செல்வம் - பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் - இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
தன் வியர்வையிலும் உயர்ப்பினுலும் வாழ்வை கண்டு
தொழில் புரிந்து உயிர் வளக்கும் ஏழை - அவன் இதழ் மலரும்
சிரிப்பொலியை கேட்டேன் - அந்த சிரிப்பினிலே இறைவனை
நான் பார்த்தேன்
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
கடவுளை வெளியே ஏன் தேடவேண்டும்... அவன் நம் மனதில் தானே உள்ளான்...
கண்ணதாசனும், TMS உம் , NT யின் நடிப்பும் விஸ்வநாதன் வலையில் வந்து விழும்போது எழும் நாதத்துக்கும் , அருமைக்கும் ஈடு இணை இல்லை.
Wonderful song. One would get into nostalgia and emotion, after viewing the song. Such a touching one with the soothing music, lyrics and the great actor's classic act.
பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை இதை விட சுலபமாக சொல்லி விட முடியுமா ?
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை கண்டு தொழில் புரிந்து உயிர்வளர்க்கும் ஏழை - ஆகா எப்பேற்பட்ட கருத்து சிந்தனை ஆறுதல் தைரியம் நினைக்க நினைக்க ஆனந்தம் உண்டாகின்றது
http://youtu.be/k3YN6RCZHs0
தொடரும்
கேட்டவைகளில் பிடித்தது -7
ஆண்டவன் படைச்சான் - படம் : நிச்சய தாம்பூலம்
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
உலகம் எந்தன் கைகளிலே - உருளும் பணமும் பைகளிலே
யோசிச்சு பார்த்தால் நானே ராஜா - வாலிப பருவம் கிடைப்பது லேசா ?
உல்லாசம் , சல்லாபம் இங்கே உண்டூஊஊஊஊஊ
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
நடந்ததை எண்ணி கவலை பட்டால் , அவன் மடையன் -ஆஹா
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் , அவன் மூடன் - போடா
வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன் - அவன் இவனே
இவன் அவனே !- அட இன்று இல்லை நாளை இல்லை
இரவில்லை , பகலில்லை , இளமையும் , முதுமையும் முடிவுமில்லை - ஓஓஹோ
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
பணங்களை கேட்டு அதை பதுக்கி வைத்தால் அது மடமை -ஆஹா
பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடைமை - கையில்
கிடைப்பதை வீசி ரசிப்பதுதான் என் கடமை - அந்த பெருமை
எங்கள் உரிமை
நல்ல வெள்ளி துட்டு அள்ளி விட்டு , துள்ளி துள்ளி ஆட விட்டு
சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
உலகம் எந்தன் கைகளிலே - உருளும் பணமும் பைகளிலே
யோசிச்சு பார்த்தால் நானே ராஜா - வாலிப பருவம் கிடைப்பது லேசா ?
நடந்ததை எண்ணி கவலை பட்டால் , அவன் மடையன் -ஆஹா
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் , அவன் மூடன் - போடா
வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்
என்ன அருமையான வரிகள் - போடா வருவது வரட்டும் - என்று எவ்வளவு பேர்களால் சொல்ல முடியும் ?
நடந்ததை எண்ணி கவலை படுகிறோம் ; நடப்பதை எண்ணி வருத்தபடுகிறோம் ; மகிழ்ச்சி நம்மை தேடி வரும் போது நாம் இந்த உலகில் இருப்பதில்லை - பெரும் பாலும் மடையனாகவும் , மூடனாகவுமே நம் வாழ்க்கை ஓடி விடுகின்றது - இந்த அருமையான வரிகள் நம்மை மாற்றட்டும் !!!
http://youtu.be/CMFAK9GOv-c
தொடரும்
முரசுத் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் ஞான ஒளி திரைப்படம்
தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.அனைவரும் கண்டு களியுங்கள்
இன்று "good friday " கண்டிப்பாக ஞான ஒளி படம் எந்த சேனலிலாவது திரையிடபடும் . முரசு டிவி அந்த பெருமையை தட்டிக்கொண்டு போய்விட்டது . NT படங்கள்தானே எந்த occasion க்கும் பொருத்தமானவைகள் - எவ்வளவு யுகங்கள் சென்றாலும் இதுதானே நிரந்தர உண்மை ...
கேட்டவைகளில் பிடித்தது -7
எல்லோரும் கொண்டாடுவோம் -
படம்: பாவ மன்னிப்பு
Theme : நல்ல பண்புகள் நல்ல வாழ்க்கைக்கு ஒரு அஸ்திவாரம்
அற்புத வரிகளைக்கொண்ட அழகிய பாடல் ஒற்றுமை உணர்வை தூண்டும் பாடல்---------
கருத்தாழம் மிக்க மனம் குளிர்விக்கும் பாடல், கர்த்தரோ, அல்லாவோ அன்றி கிருஷ்ணாவோ, ஒருவன் நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டால், பெறுவான் பெருமை, விவேகம் மற்றும் மகிழ்ச்சி. கேட்கும்போதே காதுமடல்கள் குதூகலிக்க, ஆட்கொள்கிறது நெஞ்சை இந்த பாடல்வரிகள்----
இந்த பாடலை யாருமே இனிமேல் அலச முடியாதபடி முரளி செய்து விட்டார் -- இருந்தாலும் சில வரிகள் எவ்வளவு தடவை சொன்னாலும் சுவை குறைவதில்லை
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
(எல்லோ---)
கல்லாக படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபம் இல்லே
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
(எல்லோ---)
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
கருப்பிலே வெளுப்புமிலே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம்
(எல்லோ------)
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா
ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர்யாருமுண்டோ
படைத்தவன் சேர்த்து தந்தான்
வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்.
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
கல்லாக படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபம் இல்லே
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா
ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
எவ்வளவு உயர்வான வார்த்தைகள் - ஆடி முடிக்கையில் அள்ளி சென்றவர்கள் யாரேனும் இருக்கிறார்களா ?
இதற்குள் நமக்குள் எவ்வளவு வேறுபாடுகள் - நீ உயர்ந்தவன் , நான் உயர்ந்தவன் என்று -- வாங்கிய உடல் இரவல் , வாழும் வாழ்க்கை ஒரு நாடகம் , இதில் உறவுகள் நம்முடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்கள் - எதுவுமே நிலை இல்லாத இந்த உலகத்தில் நிலையாக இருப்பது நாம் செய்யும் நல்ல காரியங்கள் மட்டுமே - மனதிற்கு அமைதி வரும் போது , எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் எண்ணம் ஏன் வராது ???!!!!
http://youtu.be/ruMVBLeUsEw
தொடரும்
கேட்டவைகளில் பிடித்தது -9
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ------
படம் : அவன்தான் மனிதன்
Theme : உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்
ஆட்டுவித்தால் யார் ஒருவர் - ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு , என் நிழலில்
கூட அனுபவத்தின் சோகம் உண்டு - பகைவர்களை
நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம்
தோற்றுவிட்டேன் பாசத்தாலே ---
நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
(ஆட்டுவித்தால்-----)
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் -அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் - நானிருக்கும்
நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன் - இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் - நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் -
(ஆட்டுவித்தால்-----)
கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கை அளவே
ஆனாலும் கலங்க மாட்டேன் - உள்ளத்திலே உள்ளது தான் உலகம்
கண்ணா - இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்
கண்ணா - உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்
கண்ணா
((ஆட்டுவித்தால்-----)
இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் - என்னமான வரிகள் - பகவத் கீதை இந்த இரண்டு வரிகளில் அடங்கி விட்டதே !!
கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கை அளவே
ஆனாலும் கலங்க மாட்டேன் - உள்ளத்திலே உள்ளது தான் உலகம்
கண்ணா - இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்
கண்ணா
துன்பமெல்லாம் நம்மைவிட்டு விலக இந்த வரிகள் போதும் -------
http://youtu.be/H7xlhIaJFSQ
தொடரும்
Repeat posting
கேட்டவைகளில் பிடித்தது -10
அண்ணன் என்னடா - படம் - பழனி
Theme : மனித ஜாதியில் துயர்கள் யாவுமே மனதினால் வந்த நோய்கள்
அண்ணன் என்னடா - தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா -
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா - சொந்தம் என்பதும் ஏதடா -----
( அண்ணன் ---)
பெட்டை கோழிக்கு கட்டு சேவலை கட்டி வைத்தவன் யாரடா ?
அவை எட்டு குஞ்சுகள் பெற்று எடுத்ததும் சோறு போட்டவன் யாரடா ?
வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயர்கள் யாவுமே மனதினால் வந்த நோயடா - மனதினால் வந்த நோயடா
( அண்ணன் ---)
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்க்கிண்டார் பாரடா -
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவன் யாரடா ? , மதித்து வந்தவன் யாரடா ?
பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா -
பகைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா - அண்ணன் தம்பிகள் தானடா -
( அண்ணன் ---)
http://youtu.be/drBTwOv1QWk
தொடரும்
ரவி.. கே.பி இஸ் குட்.. எனக்கும் பிடித்த பாடல்கள் தான் அவை..
எல்லாரும் கொண்டாடுவோமும் பிடிக்கும்..ஆனால்..சில வரிகள் எப்போதும் என்னை நிரடும்..என்ன அர்த்தம் என..
//படைத்தவன் சேர்த்து தந்தான்
வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்.//
ஸாரி..இன்று வரை எனக்குப் புரியாத ஒன்று (கேட்டது தவறெனில் மன்னிக்க)
ரவி சார் நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அதற்கு நீங்கள் எழுதும் கருத்துகள்
அருமை தொடருங்கள்
நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெற்ற பாடல்களில்
நான் மிகவும் ரசித்து அனுபவித்த பாடல்கள் அவை
இலங்கை சாதனைகளின் தொடர்......
எதிரொலி.............................கொழும்பு...... ...............செலலமகால்.....61..நாட்கள்
எதிரொலி.............................கொழும்பு...... ...............ஈரோஸ்...............34..நாட்கள்
எதிரொலி.............................யாழ்நகர்...... ................லிடோ..................54.நாட்கள்
.................................................. ..................
எங்கள் தங்கம்.................கொழும்பு................... ...செல்லமகால்........55..நாட்கள்
எங்கள் தங்கம்.................கொழும்பு................... ...ஈரோஸ்................30..நாட்கள்
எங்கள் தங்கம்.................யாழ்நகர்................... ....வின்சர்..................43..நாட்கள்
ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது சாதனை எது?
அதன் அளவுகோல் எது?
அதிக நாள் ஓடுவதா?
அதிக வசூல் பெறுவதா?
அதிக மக்கள் பார்ப்பதா?
அல்லது
அதிக நாள் ஓட்டுவதா?
அதிக வசூல் பெற்றதாக பொய் வசூல் காட்டுவதா?
அதிக நாள் ஓடியதாக பொய்யான தகவல் தெரிவிப்பதா?
அல்லது குறைந்த நாட்கள் ஓடிய படத்துடன்
கூடிய நாட்கள் ஓடிய படத்தை ஒப்பிட்டு காட்டுவதா?
இதைத்தான் அடுத்தபக்கத்து நண்பர்கள் விரும்புகிறார்கள்
எனவேதான் அந்த ஒப்பீடுகள்.
(ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
திரையிடப்பட்டது
ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
அதற்கான பதிலடியை மின்மினி
பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
அது பழைய கதை அதை விடுவோம்
புது கதையை பாருங்கள்
ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதட் 2013 பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
அல்லது சாதனை காட்டுகிறார்கள)
ரவி,
உங்கள் எல்லா பதிவையும் படித்து ரசிக்கிறேன்.நீங்கள் நேர்த்தியாக திரியை கொண்டு செல்லும் பாணி பாராட்ட தக்கது.
ரவி கிரண் சூர்யா
நான் உம்மை ரசிக்க எந்த வேடமிட்டு வந்தாலும் சரியே.ஜமாயுங்கள்.
கோபு சார் ,
வருக.வருக. என் மாலையை (அல்லது பொன்னாடை)ஏற்று கொள்ளவும்.
சிவா
ஆச்சர்யம்,இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறேன்.இலங்கை பம்மலாரே(மார்ச் 2013 க்கு முந்திய) மிக மிக நன்றி கலந்த சந்தோஷங்கள்.
ராகுல்,
எல்லா சிவாஜி படங்களுக்கும் ஒரு எழுத்து வடிவ ஆவணம் தரும் உன் பங்கு மெச்ச தக்கது.
ஆறு திரையரங்குகளில் வெளியாக போகும் பாசமலர் பிரம்மாண்ட வெற்றி காண வாழ்த்துக்கள்.(Crossing 54th Year on 27th May)
பாசமலர்-1961
Meisner பள்ளி Stanislavsky பள்ளியிலிருந்து உருவானதுதான் என்றாலும் முக்கியமாக வேறுபட்டது Sense Memory முறை தவிர்த்து instict மற்றும் improvisation ஆகியவற்றுக்கு முக்கிய துவம் தந்து , நடிக்கும் போது தன்னுணர்வு கொண்ட முன் நிர்ணய அடிப்படையில் அமையாமல், கூட நடிப்பவர்களின் தன்மைக்கு ஏற்ப dynamic ஆக கணங்களின் சத்தியத்துக்கு ஏற்ப தகவமைப்பது. கீழ்கண்ட விவரங்கள் இன்னும் தெளிவாக்கும்.(Meisner எங்கே Stanislavsky முறையில் வேறு பட்டு நிற்பது என்பது.
1)Sense Memory முறை அறவே தவிர்க்க படுதல்.
2)எதையும் முன்கூட்டிய தீர்மானம் செய்யாமல் Spontaneous ,Instinct &Impulse அடிப்படையில் நடிப்பு.
3)ஒரு பாத்திரத்தை முன்கூட்டி வடிவமைக்காமல் ,செய்ய ஆரம்பித்த பிறகு உடன் நடிப்பவர்,காட்சிகளின் எண்ண எழுச்சிக்கு தக்கவாறு dynamism கொண்டிருத்தல்.
4)பகல் கனவில் மிதப்பது போல , உணர்ச்சிகளின் வயப்பட்ட நடிப்பு. வசனங்களை கூட முன் கூட்டிய உணர்ச்சி தீர்மானங்களில் அமையாமல் moment to moment அடிப்படையில் தீர்மானிப்பது.
5)Improvise to access an emotional life .
பாசமலர் ராஜசேகரனாக சிவாஜி நடித்ததை மீறி இந்த பள்ளி வகை சார்ந்த நடிப்புக்கு உதாரணம் தேடுவது மிக கடினம்.ஆரம்ப சில காட்சிகள்,கடைசி மூன்று காட்சிகள் (Stanislavsky method Acting ) தவிர்த்து அவர் பணக்காரன் ஆவதிலிருந்து , மலர்ந்தும் மலராத காட்சி வரை Meisner பள்ளி நடிப்புக்கு இலக்கணம் எழுத படும்.
பாசமலரை ரசிகர்கள் எந்தளவு புரிந்து கொண்டாடினார்கள் என்பதை என்னால் அளக்க முடியாது.வெளிப்படையாக பாசத்தை அடிப்படையாக கொண்டது போல தோற்றமளிக்கும் இந்த காவியம் ,திரைக் கதை பாத்திர வார்ப்புகள் , பாத்திரங்களின் உள்ளுணர்வுகள் ,மதிப்பீடுகள் ,உறவுகள்,பிளவுகள்,பிரச்சினைகள் அனைத்துமே உருவம்,உள்ளடக்கம் முற்றிலும் மற்ற சராசரி படங்களில் இருந்து வேறு பட்டது.துன்பியல் முடிவை நோக்கி அமைக்க பட்ட இறுதி காட்சியின் வெற்றி இதை பாசக் காவியமாக்கி விட்டாலும், இதன் எல்லைகள் மிக விரிந்தவை. nerrative surprise ஏராளம்.
அண்ணன்-தங்கை தங்களை தவிர யாருமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் என்று எவரும் கவனிக்க விரும்பாத சராசரி ஏழ்மையில் ஆற்றொழுக்காக செல்லும் உறவு, எல்லோருடைய கவனம் ஈர்க்கும் சமூக பொருளாதார உயர் நிலை அடையும் போது மற்றவர்களுடைய உறவு,நட்பு தலையீடுகளால், முறுக்கிக்கொண்டு கெட்டு நரகமாவதை அருமையாய் சொல்லும் காவியம்.ஏனெனில் அடிப்படையில் நம்மை நாமே உணர்வதற்கு நமக்கு முக்கியமானது நம்மை சுற்றியிருக்கும் மற்றவர்களே.நம்மை பற்றி எண்ண நீட்சியில் மற்றவர் மதிப்பீடு புகுந்து ,உறவுகள் சீர்கெடுமானால்,மற்றவர்கள் சார்ந்து நம் வாழ்க்கை நரகத்தில் தள்ள பட்டு விடும்.அதிலும் நாம் வாழும் முறை ஊர் சார்ந்த முறைமையில் வேறு பட்டிருந்தால்.
கதாநாயகன் பாத்திர வார்ப்பிலும் , மற்ற கதாபாத்திரங்களுடன் இணைவு-முரண் அனைத்திலுமே deviant என்று சொல்லப் படும் தன்மை கொண்டது .ஒரே ஒரு விஷயத்தை முன்னிறுத்தியே (தங்கை ,அவள் நல்வாழ்வு) நாயகன் முடிவுகள் அமைவது போல தோற்றம் கொடுத்தாலும், அந்த முடிவுக்கு வருமுன் பலவித குழப்பங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், சுயநலங்கள், சிறு சிறு வேற்றுமைகள் என்று இந்த படத்தின் பின்னல்கள்,சிடுக்குகள் நிறைந்த ஆழம் , ரசிகர்களால் உணரப் பட சிறிதே பாதை மாறி பயணம் செய்து ,நடிப்புக்கு வருகிறேன்.
இதில் அண்ணன்-தங்கை symbiotic relationship ,ஒருவரை தவிர மற்றோருக்கு எந்த பிடிப்போ,பற்றோ அற்ற ஒரு முனை பட்ட உறவு. இது ஒரு வித brainwash போல ,ஒருவரை தவிர இன்னொருவருக்கு எதுவும் முக்கியமில்லை என்ற psychotic obsession . இதை நான் வாழ்க்கையில் சந்தித்த சில முக்கியமான மனிதர்களுடன் கண்டிருக்கிறேன். முக்கியமாக அம்மா,சகோதரி சம்பந்த பட்ட உறவுகளில். இந்த மாதிரி மனிதர்கள் எடுக்கும் ,முடிவுகள், தியாகங்கள்,மற்ற முக்கிய உறவுகளின் சிதைந்த நிலை மற்றோருக்கு illogical தோற்றம் கொடுத்தாலும்,சம்பத்த பட்டவர்களின் கண்ணுக்கு அவை நியாயமே.
ராஜசேகரனை பொறுத்த வரை அவனுக்கு மேற்பட்ட சிந்தனை எவையும் கிடையாது. உண்மையானவன்,உழைப்பாளி என்பதெல்லாம் இருந்தாலும் பொதுநலன், குழு சார்ந்த பார்வை என்பது அறவே கிடையாது. அவன் பழைய வாழ்வை மறந்து பணம் பகட்டு ,அந்தஸ்து,கெளரவம் போன்ற மாயைகளில் உழல்பவனே.நிறைய இடங்களில் தன் நலன் சார்ந்து தங்கையின் நலனுக்காக ,மற்றோரை குப்பையாக தூக்கி எறிபவன்.அவனிடம் ஒரே நல்ல தன்மை தங்கை பாசம் மட்டுமே. மூர்க்க தனமான கண்ணை மறைக்கும் பாசம், தங்கையின் சேமிப்பாலும் ,ஆலோசனையாலும் கிடைக்கும் செல்வ நிலை அவளுக்கே சொந்தம், தான் guardian /custodian மட்டுமே என்று வாழும் நிலையில் தனக்கென்று உருவான குடும்பத்தை அந்நிய படுத்துவதும் அல்லாமல் ,தங்கையின் கணவன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று மற்றோர் சுயத்தை சீண்டும் முடிவுகளையும் நடைமுறை படுத்துகிறான்.இந்த மாதிரி சிக்கலான பாத்திரம் தமிழ் திரை கண்டதில்லை.என்னிடம் பல பேர் கேட்ட கேள்வி ,ஏன் எல்லாவற்றையும் தங்கைக்கு கொடுத்து இப்படி தெருவில் அலைய வேண்டும் என்ற கேள்வி? நான் ஏற்கெனெவே சொன்னது போல அசாதரணமான உறவு, மனநிலை,ஒருமுனை பட்ட உறவின் தாக்கம்,மூர்க்கத்தனமான பாசம் இவற்றில் ராஜசேகரின் செயலுக்கு அவனாலுமே விளக்கம் சொல்ல முடியாது.நான் பலமுறை வாழ்க்கையில் பார்த்த நிலைதான் இது.
நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.
படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுணர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.
பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -
தங்கையும் மட்டும் உலகம் என நினைப்பவன்.அவன் தன தங்கையும் தன்னைத்தவிர ஒருவன் மேல் அன்பு வைக்கமுடியும் எனும் உண்மையை முதலில் உள்மனதில் ஏற்க மறுத்து, பின்னால் அதிலுள்ள யதார்த்தத்தை அறிந்து, தன்னை மாற்றிக்கொள்பவன்.(இந்த நிலையை மகேந்திரன் நுணுக்கமாக தன "முள்ளும் மலரும் " படத்தில் விவரித்திருந்தார்.தன தங்கை சகோதரபாசத்திற்காக தன காதலையே தியாகம் செய்யும் நிலைக்கு வந்த பிறகே இருவரும் தத்தம் சகோதரிகளை அவர்கள் விரும்பியவருக்கே மணமுடிக்க சம்மதிக்கின்றனர்.)
Meisner பள்ளி சார்ந்த நடிப்பு என்பதால் ,சூழ்நிலை மற்றும் மற்ற கதாபாத்திரங்களை ஆழமாக அலசி விட்டு பிறகு நடிகர்திலகத்தின் நடிப்பை விரிவாக பார்ப்போம் .
நான் ஏற்கெனெவே கூறியபடி இந்த படத்தில் வில்லன் யாருமே கிடையாது அண்ணன் தங்கையின் அதீத பாசம்தான் ஒரே வில்லன். இந்த குருட்டு பாசமே இருவர் அழிவுக்கும் காரணமாகி defeatism நோக்கி பாத்திரங்களை தள்ளுகிறது.
ராஜசேகர் , ஆசை பட்டு பணக்காரனாகி பணக்கார வாழ்வின் அந்தஸ்து,தோரணை,வறட்டு கெளரவம் எல்லாம் சுமப்பவன்(நண்பன் புகழும் போது வெளிப்படையாய் ரசிக்கும் அளவு).நண்பனே ஆனாலும் ஆனந்தனை மாப்பிள்ளையாக ஏற்கும் பெருந்தன்மையோ,அவர்களை சுதந்திரமாக வாழவிடும் எண்ணமோ இல்லாதவனே. சில விஷயங்களில் குருட்டு பிடிவாதங்கள் உண்டு.சொத்தை பிரிப்பது என்பது அவன் பாசத்தை பிரிப்பது போல obsession கொண்டு நடப்பது, சுதந்திர மனப்பான்மை கொண்ட professional மனைவியிடம் ஒட்டாத சமூக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவளுக்கு அளிக்கும் சுதந்திரம் ஒரு விதத்தில் அவனை உயர் தளத்தில் வைத்தாலும் ,அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்ற அளவில் by default நடப்பதாகவே உணர்வோம்.தன்னுடைய சக நண்பர்கள் காட்டும் வாஞ்சையை அவர்களுடன் திருப்புகிறானா என்பதே கேள்விகுறி. தங்கை அவள் சார்ந்த obsessions இதை தவிர வேறு சிந்தனையோ ஒட்டுதலோ இல்லாதவன்.மற்றவர் மாறி வளரும் போது emotional வளர்ச்சி காணாது ,மனதில் செல்வந்தனாய் மட்டும் உணர்ந்து விடுகிறான்.
ராதா தன் அண்ணனின் நல்ல நண்பன் (அங்கீகரிக்கப்பட்ட)என்ற சுவாதீனத்தில் காதலில் விழுந்தாலும் ராஜசேகரன் மனதளவில் பணக்காரனாகி விட்டது போல, சில செல்வ வளங்களை அனுபவித்தாலும் மனதளவில் பழைய ராதாவாகவே தொடர்வது பின்னால் பல சிக்கல்களை விளைவிக்கும் முரணாகிறது. பாசம் பழைய படியே தொடர்ந்தாலும் நிஜமான பணக்கார அண்ணனுடன் , செல்வ சுகங்களை அனுபவிக்கும் ஏழை ராதாவாகவே தொடர்வது பெரிய முரண்.பிறகு தான் தன் கணவன் என்ற பெண்ணுக்குரிய அனுசரணை சார்ந்த சுய நலம் எட்டி பார்ப்பது ராஜசேகர் மனநிலைக்கு ஒத்ததாக இல்லாதது அடுத்த நிலைக்கு சிக்கலை வளர்க்கிறது.
ஆனந்தன், நடைமுறை லட்சியவாதி ஆனாலும்,ராஜசேகரன் உயர்நிலையை ஒப்பு கொள்கிறான்.(இரு முறை அடிபடும் போதும் எதிர்க்காமல் ).இந்த தாழ்மையுணர்வு ,வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க நேர்கையில் இன்னும் அவனை ஏற்கெனெவே சிறிது சீர்கெட்ட நண்பனுடன் ஆன உறவை சந்தேக கண் கொண்டே அளக்க,செயல்பட வைத்து விடுகிறது . அவன் ஏழை ராதாவை விரும்பி, அவளை பணக்காரியாய் பல சிக்கல்களுடன் அடைந்தது ,அவன் குணத்திலும் சிறிது குழப்பத்தை விளைவிக்கிறது.
விதவை ஏழை ,மீனாக்ஷி அம்மாளோ ,தனது ஒரே மூலதனமான மருமகனை வைத்து தன்னுடைய நிலையை உயர்த்த விடாமல் இடையூறாய் ஒரு ஒட்டு வாழ்வு. அவளுக்கு அண்ணன் தங்கை பிரிந்து பாகமும் பிரிந்தால் மட்டுமே அவள் ஒரு வீட்டில் தலைமை ஏற்று அவள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதற்கு ராதாவோ, ஆனந்தனின் நேர்குணங்களோ உதவாது என்பதால் சிறிதே தடம் மாறுகிறாள்.
மாலதி தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் குடும்ப பின்னணியில் வந்து இந்த மூட பாச சுழல் நிறைந்த இடத்தில் பொறியில் மாட்டிய எலியாய் அவதி பட்டு, ஒட்டாத வாழ்க்கையில் சடங்கு போல வாழ்ந்து தன் கணவன் மதிப்பு,சுயமரியாதை ,பணம் எதையும் காக்க இயலாததால் அண்ணன் காட்டிய வழியில் சென்று விடுகிறாள் (பேருக்கு மறுத்து விட்டு ,பிள்ளையையும் கணவனிடம் விட்டு தப்பிக்கிறாள்)
பாஸ்கரன் ஒரு நல்ல சகோதரனாக வழிகாட்டியாய் இருக்க நினைத்தாலும் , ராஜுவின் பைத்தியகாரத்தன பாசம், தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாது என்பது புரிந்து, ராஜுவின் சவாலை (முடிந்தால் நீ உன் தங்கைக்கு எதாவது பண்ணு என்னை போல் )மெளனமாக professional ,நல்ல பாரம்பரிய குடும்பத்து முறையில் சிக்கலில்லாது லட்சிய போர்வையில் தங்கைக்கு தற்காலிக விடுதலை தருகிறான்.
நண்பர் ரத்தினம் , எப்போதெல்லாம் ராஜுவின் மீது அக்கறை செலு த்துகிறாரோ ,அப்போதெல்லாம் (திருமண ஏற்பாடு,முனிசிபல் சேர்மேன்,குடும்ப சொத்து தீர்வு)அப்போதெல்லாம் அண்ணன் தங்கையின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளில் மூக்குடைப்பே பெறுகிறார்.
இது அழகான பாசத்தின் கதையாக அமர துவம் பெற்றாலும் , இந்த குருட்டு பாசமே வில்லனாகி அவர்களையும்,சுற்றி இருப்பவர்களையும் இந்த அளவு மன கிலேசம் கொள்ள வைப்பது ,இந்த படத்தின் வெளிப்படையான பல மாயைகளை தகர்த்து, பல வேறு பட்ட தளங்களில் சிக்கலான தளங்களில் திரைக் கதை பயணிக்கிறது.
சிவாஜி இந்த nuances உணர்ந்து நடித்ததால்தான் படம் இந்த அமரத்துவத்தை அடைந்துள்ளது.
நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.
ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .
ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.
ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.
தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.
வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.
தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.
செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.
தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஓட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .
இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.
இந்த படத்தின் கதாசிரியர் கொட்டாரக்கரா ,கேரளா மாநிலம் சார்ந்தவர் என்பதால் "மருமக்கள் தாயம்" என்னும் மரபை அறிந்ததால்,அதன் சாயலில் தமிழ் சூழலில் அமைத்த கதை ,அது வெளிவந்த காலத்தை விட ,அறிவெழுச்சி மிகுந்த தற்காலத்தில் புது புது பரிமாணம் தருவது ஒன்றும் அதிசயிக்க தக்கதல்லவே?
கோபால் - மகிழ்ச்சியான செய்தி - பாசமலர் 6 திரை அரங்குகளில் வரப்போவதை அறிந்து - உங்கள் அழகான நடை , மீண்டும் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை எங்கள் எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளது - நன்றி
அன்புள்ள CK - சௌந்தரிய லஹரியை புரிந்து கொண்டு ,தமிழில் அழகாக அர்த்தம் தருபவரா , இந்த எளிய வரிகளை புரிந்து கொள்ள வில்லை என்று சொல்பவர் - இருந்தாலும் , உங்களுக்கு தன்னடக்கம் மிகவும் அதிகம் . என் சிற்ற அறிவுக்கு எட்டியதை கீழே தருகிறேன் - ( disclaimer - நான் இயற்றியது அல்ல இந்த பாடல்)
உங்கள் நடையில் சொல்லவேண்டுமானால் - CKமுரளி பாவமன்னிபாயபவ :::
படைத்தவன் சேர்த்து தந்தான்
இறைவன் நமக்கு எல்லாமே அதிக அளவில் சேர்த்து கொடுத்துள்ளான் - ஒரே இனம் , ஒரே ஜாதி , ஒரே மதம் , ஒரே தெய்வம்
வளர்த்தவன் பிரித்து வைத்தான்
வளர்த்த விதம் நம்மை ஒரே இனம் , ஒரே ஜாதி என்ற கொள்கையிலிருந்து நம்மை பிரித்தது வைத்தன
எடுத்தவன் மறைத்து கொண்டான்
நம்மை சுரண்டுபவர்கள் ஏராளம் - அவர்கள் நம்மிடமிருந்து
மறைத்தும் ஏராளம்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
பறிகொடுத்த நாம் தெருவில் நிற்கிறோம்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
இந்த நிலையை மாற்றி , சுரண்டியவர்களை
கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
பறி கொடுத்தவர்களை மீண்டும் பழைய
நிலைக்கு கொண்டுவருவோம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
இன்று போல் என்றும் ஒன்றாய் கூடி ஒற்றுமையாய் , சந்தோஷமாய் இருப்போம்
திருப்தியான விளக்கம் என்று நினைக்கிறேன்
அன்புடன் ரவி
சிவா அவர்களே,
கனடாவில் நடிகர் திலகம் சிவாஜி விழா பற்றிய செய்திக்கு மிக்க நன்றி. விழா சிறப்புற நடந்தேற வாழ்த்துக்கள்.
தாங்கள் பதிவிட்ட அழைப்பிதழின் வண்ண நிழற்படம் அந்த இணைய தளத்திலிருந்து இங்கே மீண்டும் நம் பார்வைக்கு
https://tamilnaducentre.org/images/e...vaji-vizha.jpg
அன்புள்ள திரு சிவா
உங்கள் ஆணித்தரமான பதிவுகள் எங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன - எவ்வளவு உண்மைகள் ! எவ்வளவு பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன - சும்மாவா சொன்னார்கள் - NT ஒரு தங்க சுரங்கம் என்று - அந்த சுரங்கத்தில் எங்கு வெட்டினாலும் , தோண்டினாலும் தங்கம் மட்டுமே கிடைக்கும் - பொய் சொல்லும் கூட்டம் , மடமையை கொண்டே உருவான கூட்டம் எப்படி வேண்டுமானாலும் சொல்லிகொண்டு போகட்டும் - யாரும் பொய்யை சொன்னாலும் நாம் மெய்யை மட்டும் பேசுவோம் - வெற்றி நமக்குதான் !
உங்கள் அரிய பதிவுக்காக என் சிறிய பரிசளிப்பு இதோ ------
நடிப்புக்கு மட்டுமல்ல வசனம் உச்சரிப்புடன் கூடிய முகபாவம் இதற்கெல்லாம் இனி ஒரு நடிகன் பிறந்துதான் வரவேண்டும். அப்படி பிறந்தவன் யாரும் இல்லை , வாழ்ந்ததும் இல்லை , வரப்போவதும் இல்லை --வெற்றி என்ற வார்த்தைக்கு மறு அர்த்தம் NT தான்
http://youtu.be/ij1XPqCSVOA
கேட்டவைகளில் பிடித்தது -11
"செல்லகிளிகலாம் "படம் : எங்க மாமா
Theme : Expecting and Accepting are two sides of Life. Expecting can end in tears, while Accepting brings you cheers. Accept life the way it comes.
செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை
கன்றின் குரலும் , கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா - கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா ---
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா - இன்ப கனவை அள்ளி தரவே இறைவன் என்னை தந்தானம்மா
என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -- செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன் - தன்னை தேடி ஏங்கும் பிள்ளை தன்னில் உறக்கம் கொள்வான் அவன் - பூவும் பொட்டும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் -என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -- செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை
அநாதை என்று இந்த உலகில் யாரும் இல்லை - இறைவன் இருக்கும் வரை - நம்பிக்கையுடன் வாழுங்கள் -நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் -
http://www.youtube.com/watch?v=yglkh...48C6528F8CD802
நன்றி ரவி தங்களது விளக்கத்திற்கு :) மறுபடியும் ஒரு நன்றி - ஸ்போர்டிவ்வாக என் கேள்வியை எடுத்துக் கொண்டு கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு..என்ன பண்றது குரு.. வாயின் சிகப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே//கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் - போன்ற வரிகள் தான் சுலபமாகப் புரிகின்றன எனக்கு (என் வயசு அப்படி!!)
அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா :)
அப்புறம் காட்டுல போறச்சே பார்த்துப் போங்க...கிளிகளும் பூக்களும் கோபித்துக் கொள்ளப் போகின்றன..(பொதுவா மதுரைக் காரர்களுக்குத் தான் பேச்சு வழக்கில் ழ வராது..(எனக்கும்!!).. நீங்க மதுரை இல்லை என நினைக்கிறேன்!)
Mr Ravi
Your selection of NT's songs are simply superb. Pls continue the good work.
Regards
ரவி,
பழத்தின் தோல் பிரித்து சுளை எடுத்துக் தேன் தடவி கொடுப்பது போல் நடிகர் திலகத்தின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பு வரிகளை அடிகோடிட்டு அதை மேலும் விளக்கி மக்களுக்கு அளிக்கும் பாணி நன்றாகவே வந்திருக்கிறது. கூடவே வீடியோவும் வருகிறது. அதில் மட்டும் சிறு கவனம் தேவை. காரணம் ஒரு பக்கத்தில் 3,4 வீடியோக்கள் இடம் பெற்றால் திரியின் பக்கங்கள் எளிதில் திரும்பாது. அதாவது திரி hang ஆகும். குறிப்பாக broad band இல்லாமல் dial up connection வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்கள். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.
ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ் அவர்கள் தவறியதே இல்லை.
சிவா சார், 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை சொல்கிறீர்களே, இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் சென்னை சத்யம் திரையரங்கிலும் பேபி ஆல்பட் அரங்கிலும் மட்டுமே தலா ஒரு காட்சி ஓடுகிறது. ஆனால் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்தால் எஸ்கேப் திரையரங்கிலும் ஓடுவதாக கொடுக்கிறார்கள். அந்த திரையரங்கில் 13 நாட்கள் மட்டுமே ஓடியது [முதல் வாரம் இரண்டு காட்சிகள், இரண்டாவது வாரம் ஒரு காட்சி]. ஆனால் அங்கே ஓடுவதாக விளம்பரம் கொடுகிறார்கள். இன்றைய டெக்னாலஜி உலகத்தில் விரல் நுனியில் உண்மைகள் தெரியும் இந்த காலக் கட்டத்திலும் அதுவும் குக்கிராமம் கூட இல்லை தமிழகத்தின் தலைநகரிலே இல்லாத ஒன்றை இருப்பதாக தொடர்ந்து சொல்கிறார்கள் என்றால் பழைய காலத்தைப் பற்றி என்னதான் சொல்ல மாட்டார்கள்?
ஒரு Flash Back நினைவிற்கு வருகிறது. அதிக நாட்கள் முன்பல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தத விஷயம். 2012 மார்ச் 16 அன்று வெளியான கர்ணன் மகத்தான மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நாஞ்சில் நகரில் 50 நாட்களை நிறைவு செய்து ஓடிக் கொண்டிருக்கிறது. 8 வாரங்களை நிறைவு செய்து 9-வது வாரமும் ஓடும் என நினைத்திருக்கின்ற நேரத்தில் இறுதியில் 56 நாட்களோடு படம் எடுக்கப்படுகிறது. 57-வது நாள் அதாவது 9-வது வாரம் வெள்ளியன்று தினசரிகளில் வெளியான விளம்பரத்தில் நாஞ்சில் நகரின் பெயரும் சேர்ந்து இடம் பெற்று விட்டது. உடனே மாற்று முகாம் நண்பர்கள் கர்ணன் படத்தின் வெளியிட்டாளர் திரு சொக்கலிங்கம் அவர்கள் ஏதோ கிரிமினல் குற்றத்தை செய்து விட்டதைப் போல பொங்கி எழுந்தார்கள். போஸ்டர் அடித்தார்கள். ஏன் நமது ஹப்பில் கூட ஒரு புதிய id உருவாக்கி தாக்கி எழுதினார்கள்.
உண்மையில் நடந்தது என்ன? அன்றைய நாளில் வெள்ளியன்று தினத்தந்தியின் அனைத்து பதிப்புகளிலும் சினிமா விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் அதற்கு முந்தைய ஞாயிறன்றே விளம்பர matter-ஐயும் இடத்தையும் reserve செய்ய வேண்டும். ஏதாவது மாறுதலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் [அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு] செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள். ஞாயிறன்றும் சரி, செவ்வாயன்றும் சரி படம் வெள்ளியன்று மாற்றப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. வியாழன் மாலைதான் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு படம் அன்றைய இரவுக் காட்சியோடு எடுக்கப்பட்டது. சூழ்நிலை இப்படி இருக்க வெள்ளியன்று வெளி வந்த விளம்பரத்தை எப்படி மாற்றியிருக்க முடியும்? அதன் பிறகு வந்த விளம்பரங்களில் நாஞ்சில் நகரின் பெயர் இடம் பெறவில்லை. ஒரு நாள் அப்படி வந்ததற்கே துடித்தவர்கள் எல்லாம் இப்போது மூன்று வாரங்களாக தவறான தகவலோடு விளம்பரம் வரும்போது எங்கே போனார்கள்?
மற்றவர்களை விட்டு விடுவோம். என்னுடைய வருத்தம் என்னவென்றால் படம் எஸ்கேப் -ல் ஓடவில்லை என்பது தெரிந்தும் நண்பர் வினோத் போன்றவர்களும் அந்த திரியில் மிக இளையவர் [எனக்கு தெரிந்தவரை அவர் நடத்தும் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி பலரும் விஷம் கக்கினாலும் கூட தனிப்பட்ட முறையில் சிவாஜியின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாதவர் என நான் நம்புகின்ற] கண்ணன் என்ற ரூப்குமார் ஆகியோரும் கூட இந்த தவறான தகவலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்வது?
நம்மைப் பொறுத்தவரை நாம் எப்போதும் உண்மையாகவே வாழ்வோம். நாம் சொல்லி மகிழ உண்மை சாதனைகளே ஏராளமாக இருக்கின்றன. எனவே நான் எப்போதும் சொல்வது போல்
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!
அன்புடன்
கோபால்,
சில பதிவுகளை படிக்கும் போது அது இரண்டு வரிகளாக இருக்கலாம், இருபது வரிகளாக இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம், அதை படித்தவுடன் மன குளத்தில் ஒரு கல்லெறியப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிந்தனை அலைகளை உருவாகி இதைப் பற்றி நாமும் எழுத வேண்டும் என ஆவல் பிறக்கும் வண்ணம் வாசகனை தூண்டி விடும் சக்தி அத்தகைய எழுத்துக்களுக்கு உண்டாகும். அந்த சக்தி உங்கள் எழுத்துகளுக்கு பரி பூரணமாக இருக்கிறது. பாசமலர் பற்றிய பதிவு, இது மீள் பதிவுதான். சென்ற வருடம் நீங்கள் இதை எழுதிய போது பலமுறை படித்ததுதான். இருப்பினும் இன்றைக்கு படிக்கும்போது கூட அதே வாசனையோடு இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அலசப்படாத மேலும் பல கோணங்கள் இந்த ஸ்க்ரிப்டில் இன்னமும் இருக்கிறது என்பது நிச்சயம். அது போல தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரியாத கேரளத்தின் மருமக்கள் தாயம் என்ற சமூக சம்பிரதாயத்தையும் பாசமலர் கதாசிரியர் கொட்டாரகர அவர்களையும் இந்த கதையோடு இணைத்த விதம் பிரமாதம்.
பாசமலர் மீண்டும் வெளியாகிறது என்ற தகவலை அறிந்து நீங்கள் இந்த மீள் பதிவை செய்திருப்பது பொருத்தமானது. பாச மலர் மட்டுமல்ல நடிகர் திலகத்தின் பல படங்களும் திரையரங்குகளில் மீண்டும் பவனி வர இருக்கின்றன. திட்டமிட்டு செய்யப்பட்ட பொய் பிரச்சாரத்தினாலும் பழைய திரைப்படங்களை வெளியிடும் திரையரங்குகளை தாங்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருப்பது போல் காண்பித்து அந்த திரையரங்க உரிமையாளர்களை எப்போதும் தங்கள் control-ல் வைத்திருக்க விரும்பிய ஒரு சில விநியோகஸ்தர்களால் உருவாக்கப்பட்ட மாயை தோற்றம் அகன்று பல்வேறு திரையரங்குகளும் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட முன் வந்துள்ளனர். அந்தந்த படங்கள் வெளியாகும் நேரத்தில் அவற்றைப் பற்றிய விவரங்களை தருவோம்.
அன்புடன்
நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் உருவான விதம் பற்றி அலசும் பாடல்கள் பலவிதம் திரியை படிக்க
அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான சூழல் மற்றும் ஓபனிங் ஷோ அனுபவங்களை படிக்க பகிர்ந்துக் கொள்ள
இப்போதும் இன்றைய நாட்களிலும் நடிகர் திலகத்தின் படங்கள் தமிழகமெங்கும் மறு வெளியிடுகளில் புரியும் சாதனைகளை தெரிந்துக் கொள்ள
இவை அனைத்தையும் மற்றும் பல்வேறு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட திரிகளையும் ஒரே குடையின் கீழ் வாசிக்க
http://www.mayyam.com/talk/forumdisp...and-His-Movies
அன்புடன்
சின்னதாய் ஸாங்க்ஸ் தட் மேட் அன் இம்பேக்ட் ஆன் அஸ் த்ரெட்டில் பின்னால் சென்று பார்த்துக் கொண்டிருந்த போது..
அடடே..இந்தப் பாட்டு.. ஐ வில் சிங்க் ஃபார் யூ.. எனை மறுபடி பார்க்கத் தூண்டியது.. என்னா ஒரு துறுதுறுப்பு.. என்ன ஒரு ஆட்டம்…. மனஸ் பயங்கரமா சுறுசுறுன்னு ஆச்சு (ரவி..வீடியோ போடுப்பா)
நண்பர்களின் கமெண்ட்.. பெயரை நீக்கி..
//As time passed, my exposure to and interest in Tamil language and music grew by leaps and bounds. I became a fan of Kannadasan's lyrics and MSV's music. Gradually, the song that I am talking about became one of my favorites too.
This is arguably one of the earliest attempts in India at fusion music. And what a fusion it is! MSV at his musical best, TMS at his singing best (in spite of his English pronunciation), and Sivaji at his acting best! In am not sure who wrote the lyrics. Here it is, from the 1973 movie "manidharil maaNikkam"...//
// நான் - நிஜமாகவே உங்களுக்குத் தமிழ் தெரியாதா ..இண்ட்ரஸ்டிங்
சிவாஜியின் நடிப்பும் பலம் இந்த ப் பாட்டுக்கு.. படத்தில் கெளரவ வேடம் பத்து நிமிடம் தான் வருவார்..அதற்காக முழுப்படத்திலும் ஏவிஎம் ராஜனைப் பொறுத்துக் கொண்டு பார்த்தது அந்தக் காலம்!! //
//சிவாஜியின் அற்புதமான நடிப்புக்கு இன்னொரு சான்று இந்தப் படம். அவர் சிவாஜி என்பதையே மறக்க வைத்து உண்மையாகவே ஒரு "மாதிரி"யான டாக்டர் என்பது போல ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். திரைப்படங்களை ரசிக்காத, யார் நடிப்பையும் பாராட்டாத என் உறவினர் ஒருவரை வற்புறுத்தி அழைத்து சென்றார்கள். ( ஏதோ திருமணத்தின்போது கூட்டமாக போனதாக சொன்னார்கள் ) அப்போது அவர் "இவர் குணம் நிஜமாகவே இப்படித்தான்னு நினைக்கிறேன். இதெல்லாம் நடிப்புல வராது" என்று சொன்னாராம். அதன் பின் அவர் வேறு சிவாஜி படங்களைப் பார்த்து விட்டு வியந்து போனது தனிக் கதை. இந்த சம்பவம் எப்போதும் என் மனதில் நின்று போய் விட்டது!
சிகே...
நீங்க சிவாஜிக்காக பார்த்தீங்களா.. இல்லாட்டி பிரமீளா ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்"னு பாடி ஆடியதால் பார்த்தீங்களான்னு மத்தவங்களைக் கேட்டால்தானே தெரியும். ( அதெல்லாம் கல்யா..க்கு முன்னேன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம் )//
முரளி சார்.. அந்த ஒரே குடை திறக்க மாட்டேங்குது...:)
MURALI your publication of facts regaeding A.O ESCAPE THEATRE run 100 percent true i was just listening the advtersements and theatre schudles regularly though I was sitting in USA for the last sixmonths.
thankd for the FACTS given in your own style of writing without hurting the other side people which the other way done by other side friends always..keep it up sir. i have since returned to home. we will meet shortly.
Dear Murali Sir. Thoongupavargalai eluppi vidalam aanal thoonguvathu pol nadippavargalai eluppa iyalathu. They are still reluctant to accept their debacle with the miserable flop of AO in its release and unable to digest the bitter truth that their icon's movies are now outdated. Karnan upheld our respect and prestige as well as those of Panthulu though he changed his camp, getting his pay back even after a long time due to the evergreen and immortal nature of NT movies. Now it is evident that the other actor's movies need a rethinking before their restoration for rerelease as they may turn out as Marketless, Guranteeless and Revenueless movies! Summa padaththai veembukku otti enna payan!!