Originally Posted by
KALAIVENTHAN
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
மாற்றுத் திரியில் உங்களது கேள்விக்கு பதிலாக ஊழலுக்கு வக்காலத்து என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவு குறித்து நண்பர் கோபப்பட்டிருக்கிறாரே, கல், ரோமம் என்று திரு.கோபால் குறிப்பிட்டதை நீங்களாக ஏதோ கற்பனை செய்து கொண்டு குற்றம் சாட்டினால் என்ன சொல்வது? என்றும் கேட்டிருக்கிறார். ஆனால், நான் யார் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்த முந்தைய கருத்துக்கெல்லாம் கூட திரு.சிவாஜி கணேசன் அவர்களை நான் தாக்குவதாக கற்பனை செய்து கொள்வார். சரி போகட்டும்.
ஊழலுக்கு வக்காலத்து என்ற தலைப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்களுக்கு சால்ஜாப்பாக இதை கருணாநிதி சொன்னார் என்று கூறி நான் அற்ப சந்தோஷம் அடைவதாக தெரிவித்திருக்கிறார். உங்கள் நேர்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார். நானாவது சால்ஜாப்பாக சொன்னேன் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த நேர்மையின் மறுவடிவம் மற்றவர்கள் கூறியதாகக் கூட இல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன் புரட்சித் தலைவரை தானே நேரடியாக தாக்கி அற்பத்திலும் அற்பமான மகிழ்ச்சி அடைந்திருக்கிறாரே. 330ம் பக்கம் திரு.சிவாஜிகணேசனின் படங்கள் பற்றிய நினைவலைகள் தொடரில் , மதுரையில் நடந்த திமுக மாநாட்டில் தலைவர் பேசியதை ‘எம்.ஜி.ஆர். ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பற்றி கருணாநிதிதான் சொன்னார், x,y,z சொன்னார் என்று எங்களாலும் எழுத முடியும். ஆனால், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக அந்த நீதி நாயகம் அவர்கள் அப்படி செய்ய மாட்டார்தான். ஏனென்றால் மற்றவர்கள் கூறினார்கள் என்று எழுதாமல் இவரே எழுதி விடுகிறாரே. அதற்கு பதிலாகத்தான் நான் ‘ஊழலுக்கு வக்காலத்து’ என்ற தலைப்பிலேயே எனது கருத்தை பதிவிட்டேன்.
ஜனநாயகத்தில் யாரையும் எழுதாதே என்று யாரும் தடுக்க கூடாது. முடியவும் முடியாது. அந்த வகையில் அவர்களை நாம் தடுக்க முடியாது. நடந்த உண்மைகளை வரலாற்று சம்பவங்களைத்தான் சொன்னேன் என்று அவர்கள் கூறினால், அதே ஜனநாயக அடிப்படையில் வரலாற்று சம்பவங்களை நடந்த உண்மைகளை சொல்லும் உரிமை நமக்கும் உண்டே.
உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். நானாக திரு.சிவாஜி கணேசன் அவர்களை விமர்சித்தது இல்லை. இனி விமர்சிக்கவும் மாட்டேன். அதே நேரம், வரலாற்று உண்மைகள் என்ற பெயரில் தலைவரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுமானால், நானும் வரலாற்று உண்மைகளை எழுதுவேன் என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் திரு.............. யுகேஷ்பாபு. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்