நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இந்த இனிய நாளில் அவருடைய நினைவலைகளை , நட்பு ரீதியான நிகழ்வுகளை எண்ணி மகிழ்வோம் . அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் .
Printable View
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இந்த இனிய நாளில் அவருடைய நினைவலைகளை , நட்பு ரீதியான நிகழ்வுகளை எண்ணி மகிழ்வோம் . அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் .
நடிகர் திலகம் 87வது பிறந்த தினமான இந்த சுபதினத்தில், இப்பொழுது நில உச்சவரம்பு பற்றிய செய்திகள் பத்திரிகையில் வந்த வண்ணம் உள்ளன.
நில உச்சவரம்பு என்பது தொன்றுதொட்டு நடந்துவரும் ஒரு விஷயமாகும்.
இந்த அடிப்படையில், நில உச்சவரம்பு சட்டத்தை மையப்படுத்தி 1977 இல் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த அவன் ஒரு சரித்திரம் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் உருவாக இருக்கிறதென்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.
1977இல் வெளிவந்த அவன் ஒரு சரித்திரம் திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் நில உச்சவரம்பு சட்டத்தை நடைமுறைபடுத்தும் COLLECTOR ஆக வாழ்ந்துகாட்டியிருப்பார்.
சிறந்த கதை, திரைக்கதை, பாடல்கள் கொண்ட இந்த திரைப்படத்தை டிஜிட்டல் வடிவத்தில் நமது ரசிகர்களுக்கும், தமிழ் உணர்வு கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது !
http://i501.photobucket.com/albums/e...psbytvia0u.jpg
இன்று கலைகடவுளின் அவதார தினம்!
அந்த கலை தெய்வத்தின் கலையுலக பெருமைகளையும், அந்த தெய்வம் பலனை எதிர்பார்க்காமல், விளம்பரம் செய்யாமல் செய்த தான, தர்மங்களையும்,
மக்களிடம் தொடர்ந்து சொல்வோம்! என்ற உறுதிமொழியை நம் மையம் சிவாஜி திரி சிவாஜிரசிக நண்பர்கள் இன்றைய தினத்தில் எடுத்து கொள்வோ ஓங்குக சிவாஜி புகழ்!
வாழ்க சிவாஜி ரசிகர்கள்!!
சவாலே சமாளி சூட்டிங் ஸ்பாட்
http://i1065.photobucket.com/albums/...psh5mfame0.jpg
அனைவருக்கும்
சிவாஜி ஜெயந்தி வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/fnticg.jpg
அக்.1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு
சிவாஜி 25
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
- மானா பாஸ்கரன்
ஆனந்த விகடன்
இன்று
திரையுலகை ஆண்ட மகாராஜாவின்
பிறந்தநாள்
http://i1065.photobucket.com/albums/...pshz8ydhql.jpg
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, காலை 9 மணியளவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, உலக முதியோர் தினத்தையும், நடிகர்திலகம் சிவாஜி 88வது பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம், முதியோர் காப்பகத்தில், இன்று (01-10-2015) காலை 8 மணிக்கு இனிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நேருவுக்கும் சிவாஜிக்கும் சில பொருத்தங்கள்
இருவரும் நயாகராவின் ஒரு நாள் மேயர்கள்
இருவரும் குழந்தைகளுக்கு
எங்க மாமா
http://i1065.photobucket.com/albums/...pszl2v17sw.jpg
உலகப்பெருநடிகர், ஐந்து கண்டங்களுக்கும் முழுமை பெற்ற ஒரே கலைஞர், உலக நாடுகளால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் அடையாளம், மற்றவர்களை வாழவைத்துப்பார்த்து மகிழ்ந்த உன்னத மனிதர், விளம்பரமில்லாமல் அள்ளிக்கொடுத்த கலியுககர்ணன், கள்ளமில்லா வெள்ளையுள்ளம் கொண்ட கலைத்தாயின் மறுவடிவம், எங்கள் தலைவன் நடிகர்திலகம், பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, டாக்டர் சிவாஜி ஐயா அவர்களின் உதய நாளில் அவர் புகழையும், சாதனைகளையும் பட்டி தொட்டியெங்கும் பரப்பும் பணியில் தொய்வின்றி தொடர்வோம்.
நடிகர்திலகத்தின் சிறந்த ரசிகனாக, தூய தொண்டனாக தொடர யாருடைய அத்தாட்சிப் பத்திரங்களும், சான்றிதழ்களும் நமக்குத் தேவையில்லை. நம் மனசாட்சி ஒன்றே போதும். அதன் வழிகாட்டலில் தொடர்வோம்.
செந்தில்வேல் அவர்களைத் தொடர்ந்து, நடிகர்திலகம் சம்மந்தமான ஆவணங்கள் வைத்திருப்போர் அவற்றை பதித்து, நடிகர்திலகத்தின் புகழ் மென்மேலும் பரவிட உதவிட வேண்டுகிறேன்.
இந்நன்னாளில் இங்கு பதிவுகள் இட்ட நமது நடிகர்திலகம் தொண்டர்களுக்கும், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்களுக்கும் நன்றி.
1971 ஆம் ஆண்டு வெளிவந்த சினி சித்ரா இதழில் இருந்து.,
http://i1065.photobucket.com/albums/...pszylexfao.jpg
நடிகர் திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு 87வது சிவாஜி ஜெயந்தி வாழ்த்துக்கள்
1971 ஆம் ஆண்டு வெளிவந்த சினி சித்ரா இதழில் இருந்து.,
http://i1065.photobucket.com/albums/...pszylexfao.jpg
அய்யா..!
நீங்கள் பூமிக்கு வந்த
புனித தினத்தை
பிறந்த நாள் என்று சொன்னால்
சாதாரணமாகத் தெரிகிறது..
சிவாஜி ரசிகனுக்கு.
ஆகவேதான்,
அவதாரத் திருநாள் என்று
ஆனந்தக் கூத்தாடுகிறான்.
உதய தினம் என்று
உற்சாகமாய்க்
கூவுகிறான்.
ரசிகனுக்கு,
சிவாஜியென்றால்
உசத்திதான்
எப்போதும்.
இரண்டு மாதங்களுக்கு முன்
கண்ணீர் ததும்பிய விழிகளில்
உங்கள் பிம்பம் நிறைத்தவன்,
இன்று
ஆனந்தக் கண்ணீரில்
உங்களை நீந்த விடுகிறான்.
ஒரு அங்குலம்
பாக்கியில்லாமல்
ஓராயிரம் சுவரொட்டிகள்
ஒட்டப்பட்ட சுவர்களில்
உங்கள் உருவம் பொறித்த
சுவரொட்டி தேடும்
அவனது கண்கள்
நல்ல தேடலின்
உதாரணங்கள்.
மழை நாளில்
குடை போல்
ஒரு தேவையாக
உங்களை
அவன் பார்ப்பதில்லை
வறண்ட பூமி
செழிக்க வந்ததொரு
மாமழையெனவே
காண்கிறான் உங்களை.
உங்களை ரசித்த பிற்பாடு
அவன் காணும் மன அமைதி,
புயலடித்து ஓய்ந்த பின்னே
அழிவுற்ற ஊர் காணும்
அமைதியல்ல..
அன்போடு சிரித்திருக்கும்
ஆண்டவனின் ஆலயத்தில்
அரூபமாய்ப் பரவி நிற்குமே..
அந்தப் பேரமைதி.
அவனுக்குத் தெரியும்..
அவன் கொண்டாடும்
இந்தப் பிறப்பு
சாதாரணப் பிறப்பல்ல என்று.
அவனுக்குத் தெரியும்..
வலி தந்து நிகழ்கின்ற
சராசரி பிறப்பல்ல..இது.,
நம் வலி தீர்க்கவே
நிகழ்ந்த பிறப்பென்று.
அவனுக்குத் தெரியும்..
இது ஒரே ஒரு அன்னையைத்
திருப்தி செய்ய
நிகழ்ந்த பிறப்பல்ல..
பல கோடி அன்னையரை
பெருமிதங் கொள்ள வைத்த
பிறப்பென்று.
சற்றே இளைப்பாறத்தான்
திரைப் படத்தினூடே
இடைவேளை விடுகிறார்கள்.
மூன்று மணி நேரத்திற்குள்
பத்து நிமிஷம்
ஓய்வு தேடுகிற
எமக்காக
அரைநூற்றாண்டு காலம்
ஒரு நொடி இடைவேளையின்றி
நீங்கள் உழைத்த
உழைப்பின் மஹிமை
அவனுக்குத் தெரியும்.
உறவுகளின் புனிதத்தையும்,
சிநேகிதத்தின் பெருமையையும்,
உழைப்பின் மேன்மையையும்,
ஒழுக்கம் உயர்வு தரும் எனும்
உயரிய தத்துவத்தையும்,
தேசம் காக்க வேண்டிய
பொறுப்பையும்,
காதலின் மென்மையையும்.
கடமைக்குத் தப்பிக்காத
பொறுப்புணர்வையும்,
செய்யும் தொழிலைத்
தெய்வமாக்கும்
பெருங்குணத்தையும்,
காலத்தை மதிக்கும்
பண்பையும்,
கலையை வியாபாரமாக்காத
கண்ணியத்தையும்,
ஏமாற்று அரசியலால்
கிடைக்கிற
சிம்மாசனங்கள் வேண்டாமென
சத்தியத் தரையில்
சம்மணமிட்ட கம்பீரத்தையும்,
தமிழின் இனிமையையும்,
அவன்,
உங்களிடமிருந்தும்,
உங்கள் படங்களிலிருந்தும்தான்
கற்றுக் கொண்டானென்பதை
ஊரறியும்.
உலகறியும்.
அவன் உள் மனம் அறியும்.
சற்றும் எதிர்பார்த்திராத போது
"கிச்சுகிச்சு " மூட்டப்பட்டால்
உடம்பின்
அத்தனை பாகமும் கூசி,
ஒரு சிரிப்பு வரும்.
தவிர்க்க முடியாதது அது.
வேகாத வெயிலில்
திரிந்தலைந்து
வேலை செய்து,பசியாகி,
மரநிழலில் அமர்ந்துண்ணும்
தயிர் சாதம்,
மனசுக்குள்ளேயும்
ஒரு குளுமையைக்
கொண்டு வரும்.
தவிர்க்க முடியாதது அது.
பைசா பெறாத
சின்ன வயசுச் சண்டையில்
பத்து வருஷங்களுக்கு முன்
பிரிந்து போன நண்பன்,
பழசு மறந்து கை பிடித்துக்
கசிந்துருக..
கண்களின் அணையுடைத்துக்
கண்ணீர் வரும்.
தவிர்க்க முடியாதது அது.
உள்ளம் கூச கேட்ட உதவியை
உடனடியாய்ச் செய்தவருக்கு,
நன்றியுள்ள மனதில்
ஆலயம் உருவாகும்.
தவிர்க்க முடியாதது அது.
ஒரு நடிகனுக்கும்,
ரசிகனுக்குமான
வழமையான,சம்பிரதாயமான
பந்தங்களை மீறி
இன்று
ஒரு சிவாஜி ரசிகனுக்கு
சந்தோஷம் வரும்.
அதுவும்
தவிர்க்க முடியாதது .
அவனது இந்த சந்தோஷம்
இன்னும்
கோடி வருஷம் ஆனாலும்
இருக்கும்.
அவன் வீசும்
இந்த மகிழ்ச்சிக் கயிறு
அவனுடைய
பேரனுக்குப் பேரனுக்குப்
பேரனுக்குப் பேரனையும்
இறுக்கும்.
சென்னை நந்தனத்தில் வாழும் பால'சிவாஜி'!
ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத் தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை* தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவர்கள், அந்த நடிகர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெற்ற தோற்றங்களை ஒத்திருப்பர்.

ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் சிவாஜியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜி, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார்.
60 களில் பாசமலர் சிவாஜியை போல் தோற்றம் அளித்த இவர், இன்று படையப்பா, ஒன்ஸ் மோர் சிவாஜியை போலவே இருக்கிறார். முகம் மட்டுமின்றி, அவரது நடை, உடை, பாவனை என அனைத்துமே சிவாஜியை பிரதிபலிக்கிறது. சென்னை தெருக்களில் இயல்பாக இவர் நடந்துசெல்லும்போது பொதுமக்கள், சிவாஜிதான் நேரில் வந்துவிட்டாரோ என ஒருகணம் ஆச்சர்யப்பட்டுப்போகிறார்கள்.
வெள்ளை குர்தா அணிந்து, நெற்றில் விபூதி பட்டையுடன் கிளம்பிக்கொண்டிருந்த பாலசிவாஜியை சந்தித்தோம்.
“சின்ன வயசுல இருந்தே நான் சிவாஜி சாரோட ரசிகன். ஒவ்வொரு தடவையும் அவர் நடிச்ச படங்கள பாக்கும் போது, அவரோட கதாபாத்திரமாவே நானும் மாறிடுவேன். அவர் கார் ஓட்டுகிற மாதிரி காட்சி வந்தா, என் கால்களும் அசையும். 1960ல இருந்து நான் நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

இயல்பாகவே அவரைப் போன்ற முகத்தோற்றமும், சுருட்டை முடியும், உடைகளும் இருந்ததால, என் கூட நடிச்சவங்க எல்லாம் என்ன சிவாஜினுதான் கூப்பிடுவாங்க. ஒருமுறை பிளாசா தியேட்டர்ல ‘குலமா குணமா’ ங்குற படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூல நின்னுகிட்டு இருந்தேன். சிவாஜி சார் தான் நிக்குறார்னு நெனச்சு, நான் எவ்வளவு சொல்லியும், கேட்காம என்ன உள்ளே கூட்டிட்டு போய், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் குடுத்து, மரியாதை செய்தாங்க. அப்புறம்தான் புரிஞ்சிக்கிட்டாங்க. இருந்தும் சிவாஜி மாதிரி இருந்ததுக்காகவே டிக்கெட் காசு கூட வாங்காம படம் பாக்க வெச்சாங்க” எனக் கூறி நெகிழும் பாலசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்பட ஷூட்டிங்கின் போது பரணி ஸ்டூடியோவில் சிவாஜியை சந்தித்ததை தன் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவமாக குறிப்பிடுகிறார்.
1975 வரை நாடகங்களில் நடித்துவந்த பாலசிவாஜி, பின் வியாபாரத்தில் இறங்கினாராம். சில ஆண்டுகளுக்கு முன்வரை தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருப்பதாக கூறும் பாலசிவாஜி, விரைவில் வெளிவர இருக்கும் ஓர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் போது பலரும் தன்னை சிவாஜி என அழைத்ததால், தன் பெயர் பாலசிவாஜி என்றே மாறிப்போனதாக கூறும் அவர்,* தான் வெளியே செல்லும் போதெல்லாம் மக்கள் தன்னை சூழ்ந்து கொண்டு தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் பெருமையுடன் கூறுகிறார்.
“நெறைய பேர் என்ன பாத்து, அடடா! இவரு அப்படியே சிவாஜி சார் மாதிரியே இருக்காரே. ரெண்டு இன்ச் உயரமா இருந்தா சிவாஜி சாரே தான்னு சொல்லுவாங்க. இன்னும் சிலர், நீங்க சிவாஜி சாரோட தம்பியான்னு கூட கேப்பாங்க. மக்கள் இப்படி என்ன ஆச்சர்யத்தோட பார்க்கும்போது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்கிற பாலுசிவாஜி, "தம்பி... என்னை தேடி வந்து பேட்டி எடுக்கிற நீ நல்லா இருக்கணும்பா!" என பாசமலர் சிவாஜி பாணியில் பேசி வாழ்த்தினார் நம்மை.
நடிகர் திலகதிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த நாளில் சிவாஜி திரி நண்பர்கள் அவருடைய நடிப்பு பரிமாணங்களை மட்டும் விவாதிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
600 பதிவுகள் கண்ட அன்பு நண்பர் திரு.ஆதிராம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. ஆர்.கே.எஸ்.
அவன் ஒரு சரித்திரம் படம் டிஜிட்டலில் வெளியாகிறது என்ற தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி.
மன்னிக்க வேண்டும். ஒரு சிறு திருத்தம். நான் அந்தப் படத்தை ரிலீஸின்போது பார்த்தது. இருந்தாலும் என் நினைவுக்கு எட்டியவரை அதில் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தும் கலெக்டராக இருக்க மாட்டார்.
காசநோய் ஆஸ்பத்திரிக்காக தங்களது பூர்வீக நிலத்தை தந்தை (திரு.டி.கே.பகவதி அவர்கள்)யின் எதிர்ப்பையும் மீறி அரசுக்கு கையகப்படுத்தும் சப்-கலெக்டராக இருப்பார். பிறகு அவருக்கு கலெக்டராக பதவி உயர்வு கிடைக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பொன்னான நன்னாள் திருநாள்.
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்.
http://i1087.photobucket.com/albums/...7e72fcb35c.jpg
நடிகர் திலகம் நாடகங்களில் நடித்த சில அபூர்வ நிழற்படங்கள்.
'தேன் கூடு' நாடகத்தில் (மிக மிக அபூர்வமான படம்)
http://i1087.photobucket.com/albums/...02ab087046.jpg
'நீதியின் நிழல்' நாடகத்தில் ஒரு காட்சி.
http://i1087.photobucket.com/albums/...911dcb5c32.jpg
'தேன் கூடு' நாடகத்தில் (மிக மிக அபூர்வமான படம்)
http://i1087.photobucket.com/albums/...57b0a0ba77.jpg
'வேங்கையின் மைந்தன்' நாடகத்தில்
http://i1087.photobucket.com/albums/...1fe936984b.jpg
'வீர பாண்டியக் கட்ட பொம்மன்' நாடகமாக நூறு முறை இடம் பெற்ற இடங்கள்
http://i1087.photobucket.com/albums/...d2054b5749.jpg
http://i1087.photobucket.com/albums/...2/IMG_0027.jpg
http://i1087.photobucket.com/albums/...2/IMG_0028.jpg
http://i1087.photobucket.com/albums/...2/IMG_0029.jpg
'வீர பாண்டியக் கட்ட பொம்மன்' நாடகக் காட்சி.
http://i1087.photobucket.com/albums/...88c5101f17.jpg
நடிகர் திலகம் டாப் 10
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பார்வையில்.
(விகடன் தீபாவளி மலர் 2013.)
http://i1087.photobucket.com/albums/...%20-2/8-10.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/84.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/86.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/88.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/90-1.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/91-1.jpg
மிக மிக மிக அபூர்வமான படம்.
இந்தப் பெண் சிறார்கள் யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?
சாட்சாத் நம் நடிகர் திலகமும், காக்கா ராதாகிருஷ்ணனும்தான்.
மிக மிக மிக அபூர்வமான படம்.
'கதரின் வெற்றி' நாடகத்தில்தான் இப்படி சிறுமியர் வேடத்தில் இருவரும் தோன்றுகின்றனர். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் நடிகர் திலகம்!
கையில் குடம் வைத்திருக்கும் சிறு வயது அழகி சிறுமிதான் நம் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...0cfb954799.jpg
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நடிகர் திலகம் வாழ்ந்த வீடு.
http://i1087.photobucket.com/albums/...IMG_0004-4.jpg
மும்பை டெலிவிஷன் நாடகம் 'சத்ரபதி சிவாஜி' யில்.
http://i1087.photobucket.com/albums/...5442d6dfa9.jpg
எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகக் குழுவில் சிறு வயது நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...79d6a464cd.jpg
'நாக நந்தி' நாடகத்தில் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...160aa5ad9f.jpg
'சாம்ராட்' அசோகனாக.
http://i1087.photobucket.com/albums/...228146beda.jpg
இந்த ஒரு போஸுக்கு ஈடு இணை உண்டா?!
http://i1087.photobucket.com/albums/...f7865caeff.jpg
தெய்வத் தாயுடன் நம் 'தெய்வ மகன்'
http://i1087.photobucket.com/albums/...withmother.jpg
நேற்றைய மாலைமலர் http://i1065.photobucket.com/albums/...pstvpr6wuc.jpg