எத்தனையோ நடிகர்கள் படத்தில் நடக்கிறார்கள் ஆனால் படத்திற்கு படம் நடையில் வித்தியாசத்தை காண்பித்த ஒரே உலக மஹா நடிகன் நம் நடிகர் திலகம் தான் என்பதை பெருமையோடு மார்தட்டி கூறி கொள்ளலாம்.
Printable View
எத்தனையோ நடிகர்கள் படத்தில் நடக்கிறார்கள் ஆனால் படத்திற்கு படம் நடையில் வித்தியாசத்தை காண்பித்த ஒரே உலக மஹா நடிகன் நம் நடிகர் திலகம் தான் என்பதை பெருமையோடு மார்தட்டி கூறி கொள்ளலாம்.
ஹிட்லர் உமாநாத் படப்பிடிப்பிற்கு இடையே, நடிக நடிகையரின் கேள்விகளைத் தொகுத்து பொம்மை நிருபர் நடிகர் திலகத்திடம் அளிக்க, அதற்கு நடிகர் திலகம் அளித்த பதில்கள், பொம்மை சினிமா மாத இதழின் ஏப்ரல் 1981 இதழில் இடம் பெற்றன. அவற்றில் சில ஒவ்வொன்றாக இங்கே நம் பார்வைக்கு.
திரு எஸ்.பி.முத்துராமன். திரைப்பட இயக்குநர்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...82&oe=57154A3E
From Facebook
சமீபத்தில், பட்டிக்காடா..பட்டணமா...திரைப்படத்தினை மீண்டும் பார்க்க நேர்ந்தது...படம் வெளியாகி கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆனபோதும்...இப்போது பார்த்தாலும்...ரசிக்க வைக்கும் ஒரு அற்புதமான படம்.
சோழவந்தான் எனும் கிராமத்தில் வாழும் கண்ணியமான மிராசுதார் மூக்கையன், அவனது முறைப்பெண் கல்பனா, லண்டனுக்கு படிக்க சென்று மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கி திளைப்பவள் . கல்பனாவின் தந்தைக்கு மூக்கையனின் மேல் நல்ல அபிப்ராயமும் மரியாதை யும் கொண்டவர். கல்பனாவின் தாயாருக்கு மூக்கையனை கண்டால் வேப்பங்காய். சந்தர்ப்பம் மூக்கையன் கல்பனாவை கணவன் மனைவி ஆக்குகிறது. பிறகு கல்பனாவின் மேல்நாட்டு நாகரீகத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் விளைவாக இருவருக்குள் பிரிவு ஏற்படுகிறது..எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றி எரிய வைப்பது கல்பனாவின் தாயார். இந்த சூழல் மாறி, எப்படி மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பதே...கதை..
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பினை வெளிப்படுத்த வாய்ப்பளித்த அற்புதமான கதையமைப்புடன் வந்த முத்தான பல படங்களில் இதுவும் ஒன்று.. என்ன.. ஒரு அழகான விறுவிறுப்பான கதை அமைப்பு, அற்புதமான நகைச்சுவை, ஆச்சி மனோரமாவுக்கு லட்டு மாதிரி கேரக்டர்...மைனர் ஆக வரும் M.R.R. வாசு.. காமெடியில்..சரவெடிதான்...(என்ன வெள்ளையம்மா....இந்த மாமனுக்கு என்னைக்கு கோழி அடிச்சு கொழம்பு வெச்சு சோறு போட போறே...)
திமிரடித்தனம் என்றால் இதுதான் என காட்டும்....அதே சமயத்தில் கிளைமாக்சில் சரண்டர் ஆகும் அழகிய கதா...பாத்திரம்...கதாநாயகி ஜெயலலிதாவுக்கு. ..வீ.கே. ராமசாமிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஒரு பாத்திரம்... மனிதர் ஊதி தள்ளி விடுகிறார்...சுகுமாரி படம் பார்ப்பவர்களின் கோபத்தை ஏற்ற...பெரிதும் உதவுகிறார்...பாடல்கள்..அத்தனையும் தேன் சொட்டுகள் , தேனில் நனைத்த பலா சுளைகள்..எனலாம்...அனைத்துக்கும் மேலாக நடிகர் திலகத்துககாகவே அமைக்க பட்டதோ...எனப்படும்...திரைக்கதை, வசனம்... (வசனம் பாலமுருகன்...ஆகா...நறுக்கு தெறித்தது போல...காட்சிக்கு காட்சி...மிக பொருத்தமான வசனங்கள்..)
நடிகர் திலகம் ...நடிப்பதற்காகவே...பிறந்த அவதாரம் ஆயிற்றே...மனிதர் பின்னி எடுத்து விடுகிறார் ....வெகு இயல்பாக...அருமையான பொருத்தமான நடிப்பு..இப்போதும்...திரும்ப திரும்ப...பார்க்க வைக்கும் நடிப்பாற்றல்...அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்...
அசல் கிராமத்து பண்ணையாராக கம்பீரமான பொறுப்புள்ள குடுமி வைத்த விவசாயியாக வருவதாகட்டும்...ஒரு பொறுப்புள்ள பஞ்சாயத்து தலைவராக நடந்து கொள்வதிலாகட்டும், எனன மாப்பிளே.. ஊருலே...கோழியெல்லாம் ஊருலே நெறைய காணாம போகுதாமே...என...கூப்பிட்டு ஒரு MRR வாசுவை மிரட்டி ஒடுக்குவதில் ஆகட்டும்,
ஒரு சந்தர்ப்பத்தில்...மேல்நாட்டு ஹிப்பி பாடகன் போல வேடமிட்டு என் பேர் "முக்கேஷ்" நான் லண்டன்லேர்ந்து வந்திருக்கேண்டி..என் ...ஜிஞ்சினாக்குடி...என்று...நடனத்தில் கலக்குவதாகட்டும்...ஆங்கிலத்தில் அநாகரீகமாக திட்டும் மனைவியின் வாயடைக்கும் வண்ணம்..ஆங்கிலத்திலேயே...பேசி மடக்கி, நானும் படிச்சவன்தான்...படிக்கிறது அறிவ வளர்த்துக்கரதுக்கு,
இந்த மாதிரி ஆட்டம் போடுறதுக்கு இல்லே..என கூறும் லாவகமாகட்டும், மனைவியை பிரிந்து...துடிப்பதாகட்டும்...
பஞ்சாயத்தில் கணவன் மனைவியை சேர்ந்து வாழுவதுதான் புத்திசாலித்தனம் என சமாதான படுத்த முயல..." ஒங்க..பொஞ்சாதி எங்கே...பஞ்சாயத்து பண்ண ஒங்களுக்கு எனன யோக்கியதை இருக்கு" என ஒருவன் கேட்க...
வீட்டுக்கு வந்து... அப்பத்தா...சோழவந்தான் சுந்தர மகாலிங்க தேவன் மகன் மூக்கையா தேவனுக்கு இன்னைக்கு பஞ்சாயத்துலே கெடச்ச வரவேற்ப்ப நீ.. பாத்திருந்தேன்னா... அப்புடியே...பூரிச்சு போயிருப்ப...
அடாடா..நான் வராம போயிட்டேனே...
நான் வந்துருக்கேனே உயிரோட...
நாக்கு மேலே பல்லு போட்டு எவண்டா ஒன்ன கேள்வி கேட்பான்...
கேட்டான் அப்பத்தா...பொண்டாட்டியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா...பஞ்சாயத்து பண்ணுறதுன்னு கேட்டானே..ஒரு கேள்வி....
என்று வசனம் பேசி குமுறும் இடம்... நடிப்பின் உச்சக்கட்ட காட்சிகளுள் ஒன்று..
தாராளமாக புது பிரிண்ட் ஆக....ரீ ரிலீஸ் பண்ண வேண்டிய ஒரு படம்...
Dear Muthaiyyan Sir,excellent work of THIRUMAL PERUMAI
சில பழைய விஷயங்கள் , கேள்விப்படும் நமக்கு புதிய விஷயங்களாக இருக்கும்..!
ஒய்.ஜி. மகேந்திரன் சொன்ன ஒரு சுவையான .. பழைய விஷயம் இப்போதுதான் படித்தேன்..!
“ஜெமினி ஸ்டுடியோ அதிபரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன் , ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற , சிவாஜி நடித்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தை பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் , மேடைக்கு வந்த எஸ்.எஸ்.வாசன், சிவாஜியை கட்டியணைத்து அழுது விட்டார்.
நாடகத்தில் , தன் தாயைப் பற்றி, சிவாஜி பேசும்போது ,
“ பாத்திரத்தோடு பாத்திரமா தேய்ஞ்சாளே , விறகோட விறகா வெந்தாளே...” என்று தன் தாயார் தன்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று, வசனங்களில் சொல்வார் சிவாஜி.
எஸ்.எஸ்.வாசன், தன் தாயாரை தெய்வமாக மதித்தவர்.... இந்த நாடகத்தைப் பார்க்கும் போது, தன் தாய், தன்னை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்ற நினைவுகள் வந்து , அழுது விட்டார்...”
# இதைச் சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன் , இன்னும் கூட ஒரு சுவையான விஷயத்தையும் சொல்லி இருக்கிறார் ..
வியட்நாம் வீடு நாடக மேடையில் , பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரின் தாயார் படம் மாட்டப்பட்டிருக்குமாம்... அது நிஜமாகவே , எஸ்.எஸ்.வாசனின் தாயார் படம்தானாம் ..!
ஆம்... தன் சொந்தத் தாயின் படத்தின் முன் நின்று சிவாஜி பேசும் உணர்வுபூர்வமான வசங்களை கேட்கும்போது , எப்படி அழாமல் இருந்திருப்பார் எஸ்.எஸ்.வாசன்...?
ஒய்..ஜி. சொல்லி நான் அறிந்து கொண்ட புதிய விஷயம் :
சினிமாவாக வந்தபோது நாம் பார்த்து ரசித்த “வியட்நாம் வீடு” படத்தில் சிவாஜியின் அம்மா படம் மாட்டப்பட்டிருக்குமே...
அது நாடக மேடையில் மாட்டப்பட்டிருந்த அதே எஸ்.எஸ்.வாசன் அம்மாவின் படம்தானாம்...!
# அது ஏனோ ..ஒரு சில பழைய விஷயங்களை நினைத்துப் பார்க்கையில்
கண்ணீரும் , சந்தோஷமும் சேர்ந்தே வருகிறது...!
Courtesy net
கெளரவம் படத்தின் தயாரிப்பாளர் 1973ம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதவதற்காக கண்ணதாசனுக்கு முன் பணம் கொடுத்து புக் செய்திருந்தார் ஆனால் கவினரோ தன் வேலைகளை எல்லாம் மறந்து மலேசியாவில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருந்தார்.
இது போன்று தன் வேலையை மறந்து சரியான நேரத்தில் பாடல்களை தராமல் தாமதப்படுத்துவார் என்பது கண்ணதாசனின் மீதான பரவலான கருத்து. அந்த சமயத்தில் அவருடைய உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து அவர் எப்போதும் இப்படிதான் தாமத்தப் படுத்துவார் என்று கவிஞரின் குறைகளை கூறி தனக்கு அந்த வாய்ப்பை தருமாறு கேட்டார் ( அவர் இப்போது பெரிய தயாரிப்பாளர்) ஆனால் தயாரிப்பாளரோ கண்ணதாசனே பாடல்களை எழுதட்டும் என்று காத்திருந்தார்.
கவிஞர் மலேசியாவிலிருந்து வந்தவுடன் இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தார். தான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவர் தன்னை கவிழ்க்க பார்ப்பதை எண்ணி மனவேதனை அடைந்தார்.அடுத்த நாள் இயக்குனர் பாடலின் சூழ்நிலையை விளக்கினார். தான் எடுத்து வளர்த்த தன் வளர்ப்பு மகன் தன்னை எதிர்த்து நிற்கிறான் என்றார் இயக்குனர்.
வழக்கம்போல் தன் வாழ்கையின் வழியை அந்த படத்தின் பாடலில் எழுதியிருப்பார்.படத்தின் சூழ்நிலையை மறந்து இந்த சூழ்நிலையை மனதில் நினைத்தால் ஏதோ தனது உதவியாளர் செய்த துரோகத்திற்காக எழுதியது போலவே முழுப் பாடலும் இருக்கும். காலத்தால் அழியாத இந்த இரண்டு பாடல்களும் என்றும் மறக்க முடியாதவை.
இதோ வரிகள்
படம் : கெளரவம்
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கெளரவம் மாறுமா
அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம்
அவர்மேல் தொடுத்ததோ அர்சுனன் கெளரவம்
நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே.
ஆனால் இவ்வளவு நடந்தாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அந்த உதவியாளரை மீண்டும் சேர்த்து கொண்டார்.
பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்தகிளி
நான் வளர்த்த பச்சைகிளி நாளை வரும் கச்சேரிக்கு
சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்கிறது
செல்லமா எந்தன் செல்லமா
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டிலே வளர்த்து வந்தேன்
ஆண்டவன் சோதனையோ யார்கொடுத்த போதனையோ
தீயிலே இறங்கிவிட்டான் திரும்பி வந்து கால் பணிவான்
கண்ணதாசன் எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று எவரையும் நினைத்ததில்லை. தான் நினைத்ததை பாட்டில் அழகாக வெளிபடுத்தும் அற்புத ஆற்றல் பெற்ற காலந் தீண்ட கவிஞர் நம் கண்ணதாசன்.
சர்வதேச வேட்டி தினம்.
( 1 )
http://i1028.photobucket.com/albums/...ps7xbkazsq.jpg
சர்வதேச வேட்டி தினம்.
( 2 )
http://i1028.photobucket.com/albums/...pshxvyavuv.jpg
சர்வதேச வேட்டி தினம்.
( 3 )
http://i1028.photobucket.com/albums/...psj5ylxrut.jpg
சர்வதேச வேட்டி தினம்.
( 4 )
http://i1028.photobucket.com/albums/...psctz23pc0.jpg
சர்வதேச வேட்டி தினம்.
( 5 )
http://i1028.photobucket.com/albums/...psaz66nfp9.jpg