beautiful ...;
Printable View
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...8e&oe=57127CD8
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...f0&oe=570A8FC8
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...73&oe=5717C03C
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...05&oe=570A6779
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...9a&oe=5701A044
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
அணைத்திட நினைத்தே துடிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்
திரு ராகவேந்திரா அவர்களுக்கு,
தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கு
மக்கள் திலகத்தின் திரியின் அனைத்து
பதிவாளர்கள் சார்பாக நன்றியை
தெரிவித்துகொள்கிறேன்.
தங்களுக்கும் நடிகர் திலகம் திரியின்
பதிவாளர்கள் அனைவருக்கும்
எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
http://i65.tinypic.com/2ia35nt.jpg MAKKAL THILAGAM M.G.R
CONGRATULATIONS SAILESH SIR
http://i64.tinypic.com/2uyk6ip.jpg
Thanks Ragavendra Sir.
MAKKAL THILAGAM MGR IN ARASILANKUMARI - 1.1.1961. 56TH ANNIVERSARY.
Arasilankumari 1961
M.G. Ramachandran, M.N. Nambiar, Padmini, Rajasulochana, R. Nagendra Rao, S.A. Asokan, K.A. Thangavelu, M. Saroja and R.M. Sethupathi
Rafael Sabatini (1875-1950), with an Italian father and English mother, was a successful writer of adventure on the high seas and Ruritanian romance. He was popular during the late 19th Century and early 20th Century and had written novels, plays and non-fiction. His most successful novels were The Sea Hawk, Captain Blood and Scaramouche. Not surprisingly, his novels have been filmed more than once with success. Scaramouche was first filmed in 1921 (silent film) with the Hollywood star of the day Ramon Navarro, and was remade with greater success in 1954 with top stars Stewart Granger, Janet Leigh, Eleanor Powell and Mel Ferrer.
The Stewart Granger-starrer had long runs in India, including Madras City. It was adapted into Tamil by the successful college professor-turned-writer and director A.S.A. Sami (Velaikkari, Thanga Pathumai and Rajakumari) as Arasilankumari with MGR, M.N. Nambiar, Padmini, Rajasulochana and R. Nagendra Rao in major roles. Mu. Karunanidhi wrote the dialogue with alluring alliteration. (Rajasulochana who played one of the two major female roles, the other being Padmini, told this writer that Mu. Ka. was present on the sets coaching her and other artistes on the dialogue delivery.)
This film took as long as five years to complete for many reasons. Naturally, its success quotient on release was affected. Sami, who directed the major portion, had some differences with the hero and others. So he was replaced by editor-turned-director A. Kasilingam who completed the film. A period drama, Arasilankumari narrates the story of Arivazhagan (M.G. Ramachandran) and his sister Anbukarasi (Padmini). Anbukarasi falls in love with Vetrivelan (M.N. Nambiar), who is commander-in-chief of the royal army, but he tells Anbukarasi and Arivazhagan that he is just an ordinary citizen of the kingdom and marries Anbukarasi. Arivazhagan leaves on a mission after his sister’s marriage. After some time, Vetrivelan deserts his wife and child and returns to the palace. He starts plotting against the royal family. How his plans are set at nought by the hero and how his wife fights for him against her own brother form the rest of the film.
Padmini stole the film with her superb performance as the abandoned wife and her wonderful dialogue delivery. Rajasulochana as the princess and MGR’s love interest also created an impact though her role was somewhat limited.
The famous staircase sword fight scenes in the Hollywood movie were well adapted in this film with MGR-Nambiar. According to informed sources, these sequences took nearly a year to shoot.
The music had a good impact and one song, ‘Chinna payale’ (lyrics: Pattukottai Kalyanasundaram), filmed on MGR and sung off screen by T.M. Soundararajan became a hit. This song had meaningful lines, which contributed to its success and popularity. Even after half a century, it is still popular. Nambiar as the villain was his usual self. The veteran multilingual actor Nagendra Rao also contributed to the high standard of acting.
Despite the interesting storyline, successful adaptation of the Hollywood classic, pungent dialogue, melodious music and fine performances.
Remembered for: the melodious music, the catchy song ‘Chinna payale’ and fine performances by Padmini, Nambiar, MGR and Rajasulochana.
COURTESY - THE HINDU
1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன் நடிப்பு. நம்பியாரின் அப்பாவாக வருவது யார்? ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்.
படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி – நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள்.
ஜி. ராமநாதன் ஆச்சரியப்படுத்திவிட்டார். அவரது எல்லா படங்களிலும் கர்நாடக சங்கீதம் ஒரு அடி நாதமாக இருந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்தில் முக்கால்வாசி குத்து, கிராமப்புற மெட்டுக்கள்.
முதலில் நான் இதற்கு முன் கேட்டிராத, என்னை கவர்ந்த பாடல்கள்.
“ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் வழியிலே” – வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. துரதிருஷ்டவசமாக பாட்டு நெட்டில் எங்கும் கிடைக்கவில்லை. வரிகளை வைத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். பாடிய குரல்களில் டிஎம்எஸ் தவிர மற்ற குரல்கள் தெரியவில்லை. எம்ஜிஆரும் ராஜசுலோசனாவும் பார்க்க அழகாக இருந்தார்கள்.
“தூண்டிலிலே மாட்டிக்கிச்சு” – துடிப்பு நிறைந்த பாட்டு. இதுவும் நெட்டில் கிடைக்கவில்லை. ஒரு நாடகம் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருந்தது – பார்க்க சுவாரசியமாக இருந்தது.
அடுத்த இரண்டும் நான் முன்னால் கேட்டு, எனக்கு பிடித்த பாட்டுக்கள்
“சின்னப் பயலே சின்னப் பயலே” மாஸ்டர்பீஸ். பட்டுக்கோட்டையின் ஸ்பெஷாலிடியே எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துகளை எழுதுவதுதான். டிஎம்எஸ் பிய்த்து உதறிவிட்டார்.
“தாரா அவர் வருவாரா” கு.மா. பாலசுப்ரமணியம் எழுதி எஸ். ஜானகி பாடியது. நல்ல பாட்டு. இதுதான் ராமநாதனின் முத்திரை உள்ள ஒரே பாடல். க்ளாசிக்கல் சங்கீதத்தின் தாக்கம் தெரிகிறது.
மிச்ச பாட்டுக்களை நான் கேட்டதில்லை.
“ஏற்றமுன்னா ஏற்றம்” பட்டுக்கோட்டை எழுதி சீர்காழியும் டிஎம்எஸ்ஸும் பாடியது. இரண்டு முறை கேட்டால் பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்.
இதை தவிர “தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்” கண்ணதாசன் எழுதி சுசீலா பாடியது. “அத்தானே ஆசை அத்தானே” பிற்காலத்தில் பிரபலமான இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி பி. லீலா பாடியது.
சின்னப் பயலே பாட்டு சமீபத்தில் திருட்டுப் பயலே படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
கதை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்க வசதியாக அசோகன் எம்ஜிஆரின் காவலில் சுலோவை விட்டுவிட்டு போகிறார். அவர்களும் பாட்டு எல்லாம் பாடிக்கொள்கிறார்கள். நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப் பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாட்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!
எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
courtesy - RV- NET
31.12.1984
இந்த நாளில் அந்த நாளின் நினைவுகள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக தேர்ந்ந்தேடுக்கப்பட்ட தினம் .
http://i68.tinypic.com/24wc876.jpg
The following 2 images were taken from the Facebook Photos, posted by Mr. A.R. Hussain & Mr. S. Gurunathan.
http://i64.tinypic.com/345h9tz.jpg
The following 14 Posters were displayed in and around Madurai City - Photographed and sent by Mr. Mayilraj. Thanks to Mayilraj
http://i66.tinypic.com/2d83qsm.jpg
Courtesy : Facebook
http://i68.tinypic.com/2nibk1u.jpg
http://i65.tinypic.com/20s7s5d.jpg
" மய்யம் " இணைய தளத்தின் - மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி உட்பட அனைத்து திரி பதிவாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும்
" இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் "
http://i66.tinypic.com/2hwz9rp.jpg
அருமையான பதிவுகள் 6,000 கடந்த அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக !