http://i63.tinypic.com/2mwtqis.jpg
Printable View
அழைக்கின்றோம்
அரும்பெரும் விழாவிற்கு.....
*************************
எந்த களம் என்றாலும்
அக்களத்தில்,
தற்பெருமை தகடுகளை தவிடு பொடியாக்கி,
தன்னிகரில்லா தங்கத் தலைவராக வென்று தரணியாண்ட ,
தூயத்தலைவர்....
கொடைவள்ளல்,
வாழும்தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் 102வது மனிதநேயம் பிறந்த விழாவை முன்னிட்டு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " நடத்தும் " புரட்சித்தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019 " விழா பெங்களூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (10:03:2019) யன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை CKC கார்டன் 1வது (திறந்த வெளி) வீதியில் நடை பெறுகிறது.
விழாவில் மலேசியா மேகநாதனின் பொன்மனச்செம்மல் கலைக்குழுவினர் வழங்கும் மாபெரும் இசை மழையில்...
காலத்தால் அழியாத காவிய நாயகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1958,68,78ல் வெளிவந்த திரைப்படங்களின், பாடல்கள் மட்டும் பாடி அசத்த வருகிறார்கள்.
(திரு. மேகநாதன் கலைக்குழுவினர் பெங்களூரில் இசை விருந்து படைப்பது 3வது முறை என்பது குறிப்பிட தக்கது)
இந்த புனித விழாவில் வெளியூர்களிலிருந்து வருகை தருவோர் முன் கூட்டியே திரு. சம்பங்கி GSR (ஆனந்தபுரம்), திரு. ராஜசேகர் (காக்ஸ் டவுன்) , திரு. பிரகாஷ் (கே. எஸ். கார்டன்) இவர்களிடம் வருகை பதிவு செய்தவர்கள், தயவுசெய்து தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை (பாராட்டு சான்றிதழ் பெறுவதற்காக) கொடுக்கவும்.
விழா மேடையில்... சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவரும், பேங்க் ஆப் பரோடாவில் பணி ஓய்வு பெற்றவரும்....
இணையத்தில் (திரி) வள்ளல் மகான் எம்ஜிஆரின் பதிவுகளை (குறுகிய காலத்தில்) 25,000 பதிவிட்டு அபார சாதனை நிகழ்த்திய திரு. ஆர். லோகநாதன் அவர்கள் விழா மேடையில் கௌரவிக்கப் படுகிறார்கள்.
இந்த மாபெரும் சரித்திர சாதனை விழாவிற்கு மலேசியா நாட்டிலிருந்து, டாக்டர் நெல்சன் முருகன் அவர்களும், சவூதி அரேபியா நாட்டிலிருந்து கடல்ராஜா அவர்களும்,
மற்றும் நடிப்புக்காக...விளம்பரத்துக்காக...உதவிக்கரம் நீட்டாமல் கொடைவள்ளலின் கொள்கை வழியில், நாள்தோறும் தன்னை நாடி வரும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி ஆதரவளித்து வரும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப் பெற்ற , கருணைத்தாய் "கீதம்மாநாயக் " (திருநங்கை) அவர்களும் சிறப்பு வருகை தருகிறாரகள்.
கர்நாடக மாநில அ. தி. மு. க. முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. KR. கிருஷ்ணராஜ் அவர்கள் முன்னிலையில்... நமதுதெய்வம் எம்ஜிஆரின் தீவிர பக்தர்கள், தொண்டர்கள் நாமெல்லாம் ஒன்றுகூடி கொண்டாடும் இவ்விழாவிற்கு திரைத்துறை சார்ந்தவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவது திரு. ஏழுமலை (ராஜகோபால் கார்டன்) அவர்கள்.
சிறப்புரை வழங்குவோர்கள்....
முன்னாள் மாநகர உறுப்பினர் திரு.
(மம்தா) சரவணன(அல்சூர்) திரு. எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா,
மு. தமிழ்நேசன், காங்கிரஸ் பிரமுகர் திரு. சண்முகம், கர்நாடக கன்னடர் -- தமிழர் கூட்டமைப்பு குடும்பம் திரு. செந்தில்குமார் BNR ,
வாழ்த்துரை வழங்குவோர்கள்....
திரு. எம். ராஜா (சிக்பேட்டை தொகுதி முன்னாள் வட்டத் தலைவர் அ. தி. மு. க.)
திரு. எ. டாணியல் (பந்தல் அலங்கார சிறப்பாளர்)
திரு. க. ராஜசேகர் (மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் -- காக்ஸ் டவுன்)
திரு. எட்வின் குமார்
திரு. வெள்ளையதேவன் அவர்கள்.
வரவேற்ப்புரை திரு. சம்பங்கி GSR அவர்கள்,
நன்றியுரை திரு. என். பாஸ்கரன் அவர்கள். விழா ஏற்பாடு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "
விழா மேற்பார்வை....
திரு. சம்பங்கி GSR / திரு. பிரகாஷ் / திரு. ராஜசேகர்
விழா குழுவினர்....
ஆர். சீனிவாசன், அண்ணியப்பன்,
வடிவழகன், சௌந்தர், லால்பாக் மணி, மாயா, எஸ். முருகா, வீரா, கர்ணா, செந்தில், எஸ். ரஜினி வேலு, ஜே. ராஜூ, எஸ். வி. செல்வம், லஷ்மி, பெருமா, பூங்கா, அமுதா, முபீனா மற்றும் பலர்
வாருங்கள்....
சேருங்கள்....
ஒன்றுக்கூடி புனிதக் கடவுள் எம்ஜிஆரின் புகழ் பாடுவோம்.
இவன் :
எம்ஜிஆரின் நிழல் கானா க. பழனி
9900902321
சம்பங்கி GSR
9731185524
ராஜசேகர்
9880825975
டி. பிரகாஷ்
9964466361
குறிப்பு :
பெங்களூரில் விளம்பர பேனர், போஸ்டர், நோட்டீஸ் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளதால் முடிந்தவரை fwd செய்யவும் 🙏........... Thanks wa.,
அருமை சகோதரர் மக்கள் திலகம் திரியின் சூப்பர் ஸ்பீட் பதிவாளர் திரு லோகநாதன் அவர்கள் அமர்களமான 25001 பதிவுகள் கடந்து பயணம் செய்து கொண்டிருப்பதற்கு நமது உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் அளவில்லா மகிழ்ச்சி...👌 👍 👌...
திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் 54ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக மலர்கிறது.
சிறப்பு விருந்தினர்கள்
மாண்புமிகு சி. பொன்னையன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்... மாண்புமிகு தமிழ்மகன் உசேன், மாண்புமிகு சேவூர் ராமசந்திரன், மற்றும் திருமிகு கலக்கல் நடிகர் போளுர் ஜெயகோவிந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற வருகின்றனர்.
நிகழ்ச்சி நிரல்
*******************
விழாநாள் 8:3:2019
வெள்ளிக்கிழமை
பகல் 2 மணிக்கு
தர்காவில் சிறப்பு வழிபாடு .......
மாலை 5 மணியளவில்
திருவூடல் தெரு, எம்ஜிஆர் திடலில் மலேசியா புகழ் பொன்மனச்செம்மல்
கலைக்குழு மேகநாதன் வழங்கும் மாபெரும் இசை விருந்து.....
இரவு 7 மணியளவில்
சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை....
அத்தனை நிகழ்வுகளும் கண்டு களிக்க அனைத்து விசுவாச தொண்டர்களும், பக்தர்களும் வருக... வருக...
அழைப்பது...
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா
தலைமை கழகப் பேச்சாளர்
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் திருவண்ணாமலை
தமிழ்நாடு... Thanks wa.,
திரையில் ஒன்று நிஜத்தில் ஒன்று என வாழாதவர் எம் ஜி ஆர்
திரையில் வீரனாக என்றால்
நிஜத்திலும் வீராதி வீரனாக வாழ்ந்தார் திரையில் வள்ளல் என்றால்
நிஜத்தில் எட்டாம் வள்ளல் ஆனார்
திரையில் மன்னன் என்றால்
நிஜத்தில் மன்னாதி மன்னன் என்று
திரையில் எதிரிகளை மன்னித்தார்
நிஜத்தில் எதிரிகளை வாழவைத்தார்
திரையில் எதிலும் வெற்றி என்றால்
நிஜத்தில் எதிலும் வெற்றி என்றும்
எவராலும் வெல்ல முடியாத சூப்பர் பவர் கொண்டு யாவிலும் வெற்றி கண்ட எம் ஜி ஆர் ஒரு அவதாரம்
எம் ஜி ஆர் ஆக எல்லோர்க்கும் ஆசை
ஆனால் உலகில் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு எம் ஜி ஆர் இதுவே நியதி
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks wa.,............
புரட்சித்தலைவர் பெயரை முன்னிலைப்படுத்தாமல் எந்த தேர்தல் பிரசாரமும் நடைபெறாது. பிரதமரின் பேச்சில் மிக முக்கிய அம்சம் புரட்சித்தலைவரைப்பற்றித்தான்.............. Thanks wa., Sharing...
புராதன சிறப்பு மிக்க சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பெயரை என்றும் மதிப்புமிக்க எம்.ஜி.ஆர்., திருப்பெயர் சூட்டப்பட்டத்தில் மிகுந்த நிறைவான மகிழ்ச்சி👍👍👍 👌👌👌...
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 1963ல் நடித்து வெளிவந்த "பரிசு " படத்தில் கண்ணடிப்பது போன்ற காட்சி -இப்போதைய கேரளா நடிகை ப்ரியா வாரியர்
கண்ணடிப்பது போன்ற காட்சியுடன் ஒப்பீடு
http://i68.tinypic.com/15830v4.jpg
புகைப்பட உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு .
வட சென்னை , தங்கசாலை பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ராமு
(மாற்று திறனாளி ) வைத்துள்ள இருசக்கர வாகனத்தில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். உருவம் .
http://i63.tinypic.com/2nw3b5s.jpg