https://i.postimg.cc/tTWTjJ0b/IMG-4675.jpg
Printable View
https://youtu.be/x_y385UKOLo............ Thanks.........
அடுத்த மாதம் மொரீஷியஸ் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்... எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு நிகழ்ச்சி
சென்னை: மொரீஷியஸ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைப்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மாதம் அங்கு செல்லவுள்ளார்.
மொரீஷியஸின் கோரமண்டல் நகரில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின். சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். சிலை அங்கு நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
3 எழுத்து
மூன்றெழுத்து மந்திரச் சொல்லான எம்.ஜி.ஆரின் புகழை பாடும் வண்ணம் அவருக்கு சிலை நிறுவுவதும், அவரது பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளை நடத்துவதும் தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
எம்.ஜி.ஆர் சிலை
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மொரீஷியஸ் நாட்டில் எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டிருப்பதை கூறலாம். மொரீஷியஸின் கோரமன்டல் நகர் என்பது மிக முக்கியமான ஒரு சுற்றுலா இடமாகும். அந்த இடத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை நிறுவி அவரை பெருமைப்படுத்தியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி.
பரமசிவம் அழைப்பு
இதனிடையே தான் நிறுவிய எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்க வேண்டும் என பரமசிவம் பிள்ளை வையாபுரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அவரும் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர் மொரீஷியஸ் சென்று எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
மொரீஷியஸ் தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி எனக் கூறப்படும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இருந்தும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எம்.ஜி.ஆரை பற்றி அறிந்துக்கொள்ளும் வகையில் சிலைக்கு கீழ் அவர் செய்த சாதனைகளும், பெருமைகளும் அடங்கிய கல்வெட்டும் வைக்க பட உள்ளது ...
வாழ்க
✌உலகம் ✌சுற்றும்✌ வாலிபன்
புகழ் என்றுமே.............. Thanks............
https://youtu.be/benpvS6aEKw............. Thanks.........
https://youtu.be/qB9_2Q-iTgs........... Thanks.........
https://youtu.be/SD_FWnRk9y0......... Thanks.........
நாளை 3-01-2020 வெள்ளிக்கிழமை முதல் இந்த புத்தாண்டின் முதல் காவியமாக திருப்பூர்- அனிஸ் DTS சினிமாவில் தினசரி 4 காட்சிகள் என்றும் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர்... புரட்சி தலைவர் "நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் திரையிடப்படுகிறது......... Thanks.........
https://i.postimg.cc/FswYb0jB/1f6996...e59c10eb4d.jpg
கோவை செந்தில் குமரன் திரையரங்கம்
பொன்மனம் என்பதாலே பொன்மனசெம்மலை நாடாளவைத்தோம்
நடிக்க வந்த போது வீரமிக்க நடிப்பை ரசித்தோம்
கருத்துள்ள பாடல் வழி நல்வழி கூறிய போது வாத்தியாராய் பார்த்தோம் எம் ஜி ஆரை
கட்சி கொடியை தைரியமாக தன் நிறுவனத்தின் சின்னமாக காட்டி தான் எப்படி நாடாளுவேன் என காட்டிய போது ஒரு நல்ல அரசியல்வாதியாக பார்த்தோம் எம் ஜி ஆரை
தான் ஈட்டிய பணத்தை எல்லாம் ஏழைகள் துயர்துடைக்க கொடுத்த போது மனிதநேய கடவுளாய் பார்த்தோம் எம் ஜி ஆரை
தப்பு செய்தவரை தட்டி கேட்ட எம் ஜி ஆரை தலைவனாக பார்த்து நாடாள வைத்தோம் எவனும் நெருங்க முடியாத சக்தியோடு தொடர்ந்து மூன்று முறை
பொற்க்கால ஆட்சி தந்த எம் ஜி ஆரை தெய்வமாக பார்க்கிறோம் இன்று
இப்படி ஈட்டிய சகாப்த வாழ்வை கோமாளியாக திரையில் கிராப்க்ஸ் மூலம் பிரம்மாண்டம் காட்சி சிறுபிள்ளைதனமாக பஞ்சு டயலாக் கூறி பொம்மலாட்டம் காட்டி கோடிகளை பலதலைமுறைக்கு சேர்த்து பத்திரமாக்கி கொண்டு வயசு போன காலத்தில் பொழுதுபோக புகழ் தேடி மக்கள் சேவை போர்வையில் வரும் குள்ள நரி நடிகர்களே தமிழ் மக்கள் சினிமா பைத்தியங்கள் அல்ல சினிமா பார்ப்போம் எவரை தலைவராக்கணும் என்று தெரியும்
வாழ்க எம் .ஜி .ஆர் .,புகழ்............ Thanks.........
https://i.postimg.cc/wvM3jBjs/1a80e7...a46f5be02e.jpg
இன்று முதல்
திருப்பூர் மணீஸ் திரையரங்கில்
நினைத்ததை முடிப்பவன்
[url=https://postimg.cc/V0f9CyKR]https://i.postimg.cc/XqFst4FT/371ed0...c36a8b8caa.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், ஆதரவாளர்கள் , அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*
இந்த வாரம் (2020 -புத்தாண்டில் ) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.*திரைப்படங்களின் விவரம் .
-------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில் 31/12/2019 அன்று இரவு சிறப்பு காட்சியாக புரட்சி தலைவரின் "நேற்று இன்று நாளை " திரையிடப்பட்டது .
01/01/2020 புதன் முதல் கோவை டிலைட்டில்* தேவரின் "தாயை காத்த தனயன் "* * * * * * * * * *தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
03/01/2020 வெள்ளி முதல் கோவை சண்முகாவில் தேவரின் "நல்ல நேரம் "* * * * * * * * * *தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
03/01/2020 வெள்ளி முதல் திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் அரங்கில்** * * * * * * * * *"நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
03/01/20* திருச்சி முருகன் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்.
05/01/2020* ஞாயிறு மாலை சிறப்பு காட்சியாக கோவை செந்தில் குமரன் அரங்கில்** * * * * * * * * * *டிஜிட்டல் வடிவில் உருவான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "நம்நாடு"* * * * * * * * * * * கோவை* எம்.ஜி.ஆர். பக்தர்களுக்காக பிரத்யேகமாக* * திரையிட படுகிறது .* * * *
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்* கலையுலகின் "கலங்கரை விளக்கம் " ஒரு வார வசூலாக*சுமார் ரூ.1,20,000/- ஈட்டி அபார சாதனை. பிரிண்ட் படு மோசமாக இருந்த நிலையில்*இந்த வசூலானது பிரமிப்பாகவும், வினோதமாகவும் உள்ளது என மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .
தினத்தந்தி -03/01/2020* -என்றென்றும் கண்ணதாசன்*
----------------------------------------------------------------------------------
பாடல் எழுதுகின்றபோது சில சமயம் அந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை கேட்பார் அப்பா .* வழக்கத்திற்கு மாறாக அவர்களது பெயரை பாடலில்*சேர்ப்பார் .* சில சமயம் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை மறைமுகமாக*சொல்வார் .* சில நேரங்களில் நேரடியாகவும் சொல்லி விடுவார் .* பாடலுக்கு பாடல் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று அப்பா நினைப்பார் .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படம் பணத்தோட்டம் . அதில் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இருவரும் பாடுகின்ற ஒரு காதல் பாடல் .
சரோஜாதேவியை கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.* அதுமட்டுமில்லை .* சரோஜாதேவி பேசுகின்ற கொஞ்சும் தமிழ் அந்த காலத்தில் மிகவும் பிரபலம் .அத்துடன் சரோஜாதேவியின் உடலமைப்புக்காகவே* பெரும்பாலான படங்களில் அவர் அசைந்து நடந்து செல்வதை**( back shot) காட்டுவார்கள் .அதனால் பாடலின் தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆர். பாடுவதாக*
பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா*கோவில் கொண்ட சிலையா - கொத்துமலர் கொடியா*
என்று அப்பா எழுதினர் , எம்.ஜி.ஆர். கொடை வள்ளல் என்பது உலகிற்கு தெரியும் .**அவர் கேரளா மேனன் குடும்பத்தை சார்ந்தவர் .* இன்றைய கேரளம் அன்றைய சேர நாடு .ஆனால் எம்.ஜி.ஆர். முழுக்க முழுக்க வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் . என்பதும் அனைவருக்கும் தெரியும் .* அதனால் சரோஜாதேவி பாடுவதாக*
பாடுவது கவியா - இல்லை பாரி வள்ளல் மகனா*சேரனுக்கு உறவா - செந்தமிழர் நிலவா*
என்று எழுதினார் ,* இந்த வரிகளை சாதாரணமாக பார்த்தால்* ஒரு காதல் பாடல் போல தோன்றும் . ஆழமாக பார்த்தால்தான் அனைத்தும் விளங்கும் .
இந்தப்பாடல் பதிவு செய்யப்பட பிறகு எம்.ஜி.ஆர். அந்த பாடல் வரிகளை கேட்டுவிட்டு புன்னகை செய்தார் .* அடுத்த சில தினங்களில் அவர் அப்பாவை ஒரு ஸ்டுடியோவில் பார்த்தார் .**
என்ன கவிஞர் , சேரனுக்கு உறவா என்றார் எம்.ஜி.ஆர். ஆமாம் பாரிவள்ளல் மகன் . அவர்தான் செந்தமிழர் நிலவு* என்றார் அப்பா .* எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார் .
இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்* அதனை ஏற்றுக் கொள்வதற்கும் நல்ல மனம் வேண்டும் .இருவருக்கும் இரண்டும் இருந்ததால்தான் நமக்கு பல நல்ல பாடல்கள் கிடைத்தன .
தினமலர் -03/01/2020* - இது உங்கள் இடம் .
---------------------------------------------------------------
மற்றவர்களை பார்த்து ரஜினியும் பகல் கனவு .-* ஆர். ராஜகோபால் .
-----------------------------------------------------------------------------------------------------
தமிழக வரலாற்றில் எந்த ஒரு நடிகனும் முதல்வராக முடியாது என வாசகர் ஒருவர் இதே பகுதியில் கடிதம் எழுதியிருந்தார் . அவருக்கு என் பாராட்டுக்கள்*
பாக்யராஜ், சீமான் , டி. ராஜேந்தர் , போன்றோர் கட்சி ஆரம்பித்து எப்படியாவது தமிழக முதல்வராக வந்துவிட வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு வந்தனர் .**அது கனவோடு முடிந்தது. அவர்களால் வெற்றி பெற முடியவில்லை .
நடிகர் கமல் போன்றோர் என்ன தத்தி கிணத்தம் போட்டாலும் தேர்தலில் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது .* டிபாசிட் காலி ஆவதுதான் மிச்சம் .எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளாக திரைப்படத்தில் இருந்து , சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் .* மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் ஏழையின் சிரிப்பின் இறைவனையும் கண்டவர் .**
அவர் திரைப்படத்தில் நடிப்பாலும் , பாடல்களாலும், வசனங்களாலும் , ஒவ்வொரு மக்கள் மனதிலும் , ரசிகர் மனதிலும் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் .* அவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர் .* அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் , அவர் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார் .**
மேடையேறி வாய் கிழிய பேசும் சீமான், கமல், பாக்யராஜ் போன்றவர்கள் சாதாரண மக்களுக்கு என்ன செய்துள்ளனர் . எம்.ஜி.ஆர். இடத்தை எந்த நடிகனாலும் , நிரப்ப முடியாது . அவர் இடத்திற்கு , எந்த நடிகனும் வர முடியாது .**
எம்.ஜி.ஆரை போல் தங்களுக்கும் மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற* செய்வர்* என*தப்பு* கணக்கை ரஜினியும் போட்டுள்ளார் .
ஒவ்வொரு தேர்தலிலும், நடிகர் சீமான் அதலபாதாளத்தில்* தள்ளப்பட்டுள்ளதை*அறிந்தும் நடிகர் ரஜினியும் ஏன் பகல் கனவு காண்கிறாரோ தெரியவில்லை .
தினமலர்* - மனக்கதிர்*
------------------------------------
எம்.ஜி.ஆருடன் ரஜினியை ஒப்பிடாதீர - எஸ். ராமசுப்பிரமணியன்*
---------------------------------------------------------------------------------------------------
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எதிர்பாராத சூழ்நிலையில் , உரிய கால கெடுவுக்குள் வருமான வரிபாக்கி 11 லட்சம் ரூபாயை* செலுத்த மறந்து விட்டார் .அது நாளிதழ்களில் வெளியானது .**
இதை படித்த மதுரையை சேர்ந்த, எம்.ஜி.ஆரின் ரசிகரான, வயதான ஒரு முஸ்லீம் மூதாட்டி, , தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானம் வைத்து, 11 லட்சம் ரூபாயை* பெற்று இருந்தார் . தன மகனையும் உடன் அழைத்து சென்னை வந்தார் .
எம்.ஜி.ஆரை சந்தித்து , 11 லட்சம் ரூபாயை கொடுத்து ,, வருமான வரியை கட்டி கொள்ளுங்கள் என்றார் . ஏது* இவ்வளவு பணம் ,என கேட்ட எம்.ஜி.ஆரிடம் , நிலப்பத்திரத்தை அடமானம் வைத்த* விபரத்தை மூதாட்டி கூறினார் .
இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்தார் .* என் வரி பாக்கியை நான் கட்டி கொள்கிறேன் .* இதற்காகவா நிலத்தை அடமானம் வைத்து, பணத்தை கொண்டு வந்தீர்கள்.* இதுமாதிரி , இனி செய்யாதீர்* என, எம்.ஜி.ஆர் அறிவுரை கூறினார் .**
அத்துடன் கடனுக்கு பிடித்தம் செய்திருந்த வட்டி தொகையையும் , வழி செலவுக்கும் பணமும் வழங்கி, முஸ்லீம் மூதாட்டியை வழி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.*
கட்சி ஆரம்பிக்க போறேன், , முதல்வர் ஆகா போகிறேன், என புருடா விட்டு நடிகர் ரஜினி பிலிம் காட்டுகிறார் .* இவர் சொந்தமாக தயாரித்த சில படங்களில் நடித்து, அவை சரியாக ஓடவில்லை .* கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது .இவர் வைத்திருந்த கடன் பாக்கியை செலுத்த, எந்த ரசிகராவது பணத்துடன் வந்தார்களா ....
நாட்டில் ஓடும் நதிகள் அனைத்தையும் ஒன்றாக இணைப்பதற்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என ரஜினிஅறிவித்தாரே , இதுவரை, அவர் சல்லி காசு கூட அரசுக்கு தரவில்லை .* இந்த லட்சணத்தில் கட்சி ஆரம்பிக்க போறாராம்.* முதல்வர் ஆகா போறாராம் .
நடிகர் ரஜினி , அரசியலிலும் இறங்க மாட்டார். கட்சியும் ஆரம்பிக்க மாட்டார் .அவர் நடித்து வெளிவரும் படம் ஊத்தி கொள்ளும் பயத்தால், இப்படி கூறி கொண்டிருக்கிறார் .* எம்.ஜி.ஆர். என்றொரு மாமன்னனுடன் , இவரை யாரும் ஒப்பிட்டு பேசாதீர்கள்*.**
பொன்னியின் செல்வன்!!!
புரட்சி நடிகர் காவியத்தின் நாயகன்
வசனம் : கலைஞர்/"முரசொலி" சொர்ணம் அல்லது திரு. ஆர்.கே.சண்முகம்.
சண்டை பயிற்சி " ஸ்டண்ட் சோமு.
இசை: எஸ்.எம்.எஸ்/கே.வி.மகாதேவன் அல்லது மெல்லிசை மன்னர்கள்
உடைகள் - முத்து
இயக்கம் - எம்.ஜி.ஆர்
புரட்சித் நடிகரின் வாள் வீச்சு, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள்....இதை தானே நாம் எதிர்பார்த்தோம்!.
ஆனால் இன்று நவீன பொன்னியின் செல்வன்!!!! காவியத்தின் நாயகனாக புரட்சித் நடிகரை தவிர யாரையும் கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை.
நவீன பொன்னியின் செல்வன் .....படத்தில் கிராபிக்ஸ் வாள் வீச்சு கண்டிப்பாக இருக்கும்!!!!!
சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை......... Thanks.........
மக்கள் குரல் 31/01/2019
---------------------------------------
தமிழக துணை முதல்வர் ஓ..பி.எஸ்சுக்கு எம்.ஜி.ஆர். சிலை திறக்க அழைப்பு*
---------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வத்தை , தலைமை செயலகத்தில்*திங்களன்று* (30/01/2019) சந்தித்து , மொரீஷியஸ் நாட்டின் கோரமண்டல் நகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்குமாறு அழைப்பு*விடுத்தார் அந்த நாட்டின் முன்னாள்* அதிபர் பரமசிவம் பிள்ளை* வையாபுரி .உடன் சிலை திறப்பு விழா ஒருங்கிணைப்பாளர் திரு.செழியன் குமாரசாமி .
*டி.எம் . எஸ் எனும் இசை அரசரின் தனித்துவங்கள்*
1. தமிழை மெல்லின வல்லின இடையின வகைகளோடு அழுத்தம் திருத்தமாக உச்சரித்தது.
2) நடிகர்களின் குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை பொருத்திக்கொண்டு அதை ஒரு ஹம்மிங்கிலும் ... ஒரு சிரிப்பிலும்... ஒரு அட்சரங்களில் கூட பிறழாமல் பாடலைக் கொண்டு சென்றது
3) ஈரமும் கமபீரமும் குரலாய் இணைத்துக் கொண்டது
4) ஒவ்வொரு வரிகளுக்கும் பொருள் மாறாமல் பாவனைக் காட்டியது.
5) பாடலைப் பாடும் போதே அந்த சூழலை உள் வாங்குவது.
6) பார்க்கக் கூட அவசியம் இல்லாத படிக்கு குரலில் காட்சியை விவரிப்பது
7) கதாப் பாத்திரங்களின் குணாதிசியங்களைக் குரலசைவில் கொண்டு வருவது.
8) நவரசங்கள் அனைத்திலும் ரசங்கள் கெடாமல் பாடுவது.
9) தீவிர உழைப்பு. தன்னம்பிக்கை . தொழில் பக்தி. சுய திருப்தி . தெய்வ உணர்வு.குழந்தை மனசு. பரந்த குணம். அனுபவ தெளிவு . சிததர் மனோ நிலை. நேர் படப் பேசும் தைரியம் .
இவை எல்லாம் இப்போதல்ல பாடும் காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.
10) இறுதி மூச்சு வரை நேர்மறை சிந்தனையோடு உற்சாகமாக இருந்தும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து வருவது .
தலைவர் எம் . ஜி . ஆர் ... திலகர் சிவாஜிக்கு பாடி இருக்க வில்லை என்றாலும் மற்ற நடிகர்களுக்குப் பாடி பெரும் புகழும்.. பிறருக்குப் பாடிய அவர்களும் புகழடைந்தனர்.ஆனால் இவர் பாடி இருக்கவில்லை என்றால் இரு திலகங்களின் பாடல்களும் எடுபட்டிருக்காது.
சூரியனுக்கும் அஸ்தமனம் உண்டு.
சந்திரனுக்கும் அமாவாசைகள் உணடு.
டி .எம் . எஸ் மடடுமே பிரபஞ்சத்தில் பரிபூரணம்.
அவர் தெயவத்துவம் என்பதே அதற்கு காரணம் .
....
*நெகிழவுடன் கவிஞர் வைரபாரதி*........... Thanks...
புரட்சித் தலைவர் MGR எழுதிய" உலகம் சுற்றும் வாலிபன்", உருவான கதை (2)
✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
இலங்கைக்கு முன்னொரு முறை பயணம் சென்றேன். அப்போது இலங்கை நண்பர்கள் எனக்கும் திருமதி சரோஜாதேவி அவர்களுக்கும் பட்டம் வழங்க முடிவு செய்து அழைத்திருந்தார்கள். அதைப் பெறவும் , இலங்கையிலுள்ள நான் பிறந்ததாகச் சொல்லப்படுகின்ற கண்டியைக் காணவும் ஆவலோடு சென்றேன்.
நானா சென்றேன்! - எத்தனையோ நாட்கள் அனுமதிக்காக் காத்திருந்தும், போலீஸ் அதிகாரிகளிடம் நான் அழைத்துச் செல்லப்பட்டும் , புறப்படுவதற்குக் குறிப்பிட்டிருந்த நாள் நெருங்கி வந்து கொண்டிருந்தும் அனுமதி மட்டும் கிடைக்கப்பெற்றேனில்லை. " டில்லியிருந்து வருகிறது " என்பார்கள் ஒரு நாள் " விமானத்திலேயே அனுப்பப்பட்டு விட்டதாம் " என்பார்கள் இன்னொரு நாள் . அதென்னமோ எனக்கு இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கும் உரிமைச்சீட்டைச் சுமந்த அந்த விமானம் மட்டும், ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகியும் சென்னை வந்து சேரவேயில்லை!
கடைசியில் ஒருநாள் " சென்னை அரசினரின் சிபாரிசு இருந்தால் தான், டில்லியில் அனுமதி கிடைக்கும் என்ற நல்ல சேதி என்னிடம் சொல்லப்பட்டது . இல்லையென்று சொல்ல இத்தனை நாள் இந்த அனுமதிச்சீட்டு, ரயிலிலும் விமானத்திலும் அனாவசியமாகப் பயணம் செய்திருக்க வேண்டுமா? என்று எண்ணிய போது என் மேலும் என்னைச் சுற்றியுள்ளவர் மேலும் வெறுப்பே ஏற்பட்டது.
' ஆபத்பாந்தவன் 'என்பார்களே அதுபோல் என் மீது அன்பும் பாசமும் கொண்ட நண்பர் ஒருவர் சமயசஞ்சீவியாக வந்தார். அவர் நல்ல எழுத்தாளர் : கவிதை புனையும் திறமை பெற்றவர் ; பண்போடு பழகுபவர். அவருடைய பெயர் காஞ்சி அமிழ்தன் என்பது .
நன்றி நாளை தொடரும்
புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க... Thanks.........
"உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!
அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.
ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"
"போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!
புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!.. ....... Thanks.........
புரட்சி தலைவர் M.G.R. தனது ரசிகர்களில் ஏராளமானோரை அரசியலில் வளர்த்தவர். அவர்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்த்தவர். அவரால் அரசியலில் உயர்ந்து தனது அதிரடியான நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய முடிவுகளாலும் தமிழகத்தைக் கலக்கியவர் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன்!
சிறுவயதில் இருந்தே பி.எச். பாண்டி யன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1959-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும் போது அங்குள்ள நகராட்சி பயணியர் விடுதியில்தான் எம்.ஜி.ஆரை முதன் முதலாக சந்தித்தார். 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக பி.எச்.பாண்டியனை எம்.ஜி.ஆர். நியமித் தார்.
காலையிலேயே எம்.ஜி.ஆரின் ராமா வரம் தோட்டத்துக்கு பி.எச்.பாண்டியன் சென்று அங்கேயே சிற்றுண்டியை முடித்து விடுவார். பின்னர், நீதிமன்றம் சென்று விட்டு மதியம் சென்னை மாம்பலம் அலுவலகத்திலோ, அல்லது படப்பிடிப் பிலோ, எம்.ஜி.ஆர். எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவ ருடன் உணவருந்துவார். சில நேரங்களில் அவருக்காக எம்.ஜி.ஆர். காத்திருப்பார்!
1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியனை அதிமுக வேட்பாள ராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் எம்.ஜி.ஆர்.! 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். பின்னர், சபாநாயகராகவும் பி.எச்.பாண்டியன் உயர்ந்தார்.
துணை சபாநாயகராக பி.எச்.பாண்டி யன் இருந்தபோது, பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நடந்த உலக சட்ட மாநாட்டுக்கு அவரை முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். 15 நாட்கள் மாநாடு முடிந்து சென்னைக்கு விமானத்தில் அவர் திரும்பியபோது நள் ளிரவு 12 மணி. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் காத்திருந்து பி.எச்.பாண் டியனை கட்டியணைத்து எம்.ஜி.ஆர். வரவேற்றார். அவரது அன்பில் பாண்டியன் நெகிழ்ந்து போனார்.
1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை அலுவலகம் அரசின் பொதுத்துறையோடு இணைக்கப்பட் டிருந்தது. பி.எச்.பாண்டியன் சபாநாயக ராக இருந்தபோதுதான், முதல்வர் எம்.ஜி.ஆரோடு ஆலோசித்து அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திர மான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தை ஏற்படுத்தினார்.
‘‘நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். டிக்கெட் வாங்க கூட்ட நெரிசலில் முண்டியடித்துச் சென்றுகூட அவரது படங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அரசியலில் மட்டுமின்றி வழக்கறிஞர் தொழிலிலும் என்னை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று நான் சாப்பிடும் சாப்பாடு அவரது சாப்பாடுதான்!’’ என்று பி.எச்.பாண்டியன் நன்றியோடு கூறுகிறார்.
ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரோடு அவரது வீட்டில் இருந்து அவரது காரிலேயே புறப்பட்டார் பாண்டியன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி அவர் களை எம்.ஜி.ஆர். விசாரித்தார். அதில் ஒரு வர் நெல்லையைச் சேர்ந்த கமலா செந்தில் குமார். மற்றொருவர் சேலத்தைச் சேர்ந்த இளைஞர். இருவருமே பட்டதாரிகள். தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரி எம்.ஜி.ஆரிடம் மனு அளித்தனர். மறுநாளே இரண்டு பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். கமலா செந்தில் குமாரும் அந்த இளைஞரும் முறையே நெல்லை மற்றும் சேலம் மாவட்டங்களின் ஆவின் சேர்மன்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை அவர்களிடம் வழங்கினர். ‘‘இப்படி ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று பி.எச்.பாண்டி யன் கூறுகிறார்.
எந்த சூழலிலும் எம்.ஜி.ஆர். பதற்றம் அடைய மாட்டார். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வ தோடு, இக்கட்டான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். 1978-ம் ஆண்டு பார் கவுன்சில் பொன்விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. பி.எச்.பாண்டியன் அப்போது எம்.எல்.ஏ.மட்டுமின்றி, பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசினார்.
‘‘தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியை தலைநகராக மாற்றலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர்கள் கரவொலி எழுப்பினர். அவருக்குப் பின் பேசிய அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்த ராம் ஜெத்மலானி, ‘‘நெஞ்சுப் பகுதியில் இதயம் உள்ளது. தலைக்கு உள்ளே மூளை இருக்கிறது. அவற்றை இடம் மாற்றினால் என்ன ஆகும்?’’ என்றார். அதற்கும் பலத்த கரவொலி. தர்மசங்கடமான சூழ்நிலை. பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு!
கூறியதற்கும் கைதட்டுகிறீர்கள். உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?’’ என்று கூட்டத்தினரை எம்.ஜி.ஆர். கேட் டார். கூரையே இடிந்துவிழுவது போல கரவொலியும் ஆரவாரமும் எழுந்தன. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
‘‘1973-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர். மீது ஒரே நாளில் ஒன்பது மானநஷ்ட வழக்குகள் அரசு தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ‘‘என்ன செய்யலாம்?’’ என்று எம்.ஜி.ஆர். என்னுடன் ஆலோ சித்தார். உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். சார்பில் நான் மனு தாக்கல் செய்தேன். ‘‘அரசு தரப்பில் தொடரப்பட்ட முதல் வழக்கிலேயே மானம் நஷ்டம் என்றால் மீதி உள்ள 8 வழக்குகளில் இழப்பதற்கு மானம் இல்லை’’ என்று வாதாடி அப் போது நீதிபதியாக இருந்த வி.பாலசுப்பிர மணியம் மூலம் தடை ஆணை பெற்றேன். பின்னர், எம்.ஜி.ஆருக்கு எதிரான வழக்கு கடைசிவரை விசாரணைக்கு வரவே இல்லை’’ என்கிறார் பி.எச்.பாண்டியன்........... Thanks.........
திருச்சி முருகனில்* வெள்ளி முதல் (03/01/20) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
இரங்கல் செய்தி .
-----------------------------
அ.தி.மு.க. முன்னாள் சபாநாயகரும் , அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளரும், 1989ல் ஜானகி அணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் வென்ற இருவரில் ஒருவருமான திரு.பி.எச் . பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்து திறமையாக சட்டசபையை நடத்தியவர் . வானளாவ அதிகாரம் கொண்ட சபாநாயகர் என்ற பெருமை பெற்றவர் .ஆரம்பத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் , அ.தி.மு.க. கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகி , நெல்லை மாவட்டத்தில் கட்சி பணியாற்றி பிரபலமானவர் .**
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் மறைந்த திரு.பி.எச். பாண்டியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்*அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .
கல்கண்டு வார இதழ் -01/01/20
--------------------------------------------------
எம்.ஜி.ஆரின் நம்பிக்கை*
------------------------------------------
திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யு.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில், இருவரோடும்* இணைந்து நடித்தவர் என்ற பெருமை பெற்றவர் எம்.ஜி.ஆர்..* பாகவதருடன் அசோக்குமார், ராஜமுக்தி , ஆகிய படங்களிலும், பி.யு. சின்னப்பாவுடன் ரத்னகுமார் படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார் .* 1980ம் ஆண்டு பிப்ரவரி* 17ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது .* அன்று ஞாயிறுக்கிழமை செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னை தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது .* அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் , கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர். ரசித்து பார்த்தார் .* அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.* அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினார் .**
புரட்சித்தலைவர் தனது ரசிகர்களில் ஏராளமானோரை அரசியலில் வளர்த்தவர். அவர்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்த்தவர். அவரால் அரசியலில் உயர்ந்து தனது அதிரடியான நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய முடிவுகளாலும் தமிழகத்தைக் கலக்கியவர் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன்!
சிறுவயதில் இருந்தே பி.எச். பாண்டி யன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1959-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும் போது அங்குள்ள நகராட்சி பயணியர் விடுதியில்தான் எம்.ஜி.ஆரை முதன் முதலாக சந்தித்தார். 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக பி.எச்.பாண்டியனை எம்.ஜி.ஆர். நியமித் தார்.
காலையிலேயே எம்.ஜி.ஆரின் ராமா வரம் தோட்டத்துக்கு பி.எச்.பாண்டியன் சென்று அங்கேயே சிற்றுண்டியை முடித்து விடுவார். பின்னர், நீதிமன்றம் சென்று விட்டு மதியம் சென்னை மாம்பலம் அலுவலகத்திலோ, அல்லது படப்பிடிப் பிலோ, எம்.ஜி.ஆர். எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவ ருடன் உணவருந்துவார். சில நேரங்களில் அவருக்காக எம்.ஜி.ஆர். காத்திருப்பார்!
1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியனை அதிமுக வேட்பாள ராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் எம்.ஜி.ஆர்.! 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். பின்னர், சபாநாயகராகவும் பி.எச்.பாண்டியன் உயர்ந்தார்.
துணை சபாநாயகராக பி.எச்.பாண்டி யன் இருந்தபோது, பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நடந்த உலக சட்ட மாநாட்டுக்கு அவரை முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். 15 நாட்கள் மாநாடு முடிந்து சென்னைக்கு விமானத்தில் அவர் திரும்பியபோது நள் ளிரவு 12 மணி. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் காத்திருந்து பி.எச்.பாண் டியனை கட்டியணைத்து எம்.ஜி.ஆர். வரவேற்றார். அவரது அன்பில் பாண்டியன் நெகிழ்ந்து போனார்.
1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை அலுவலகம் அரசின் பொதுத்துறையோடு இணைக்கப்பட் டிருந்தது. பி.எச்.பாண்டியன் சபாநாயக ராக இருந்தபோதுதான், முதல்வர் எம்.ஜி.ஆரோடு ஆலோசித்து அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திர மான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தை ஏற்படுத்தினார்.
‘‘நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். டிக்கெட் வாங்க கூட்ட நெரிசலில் முண்டியடித்துச் சென்றுகூட அவரது படங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அரசியலில் மட்டுமின்றி வழக்கறிஞர் தொழிலிலும் என்னை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று நான் சாப்பிடும் சாப்பாடு அவரது சாப்பாடுதான்!’’ என்று பி.எச்.பாண்டியன் நன்றியோடு கூறுகிறார்.
ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரோடு அவரது வீட்டில் இருந்து அவரது காரிலேயே புறப்பட்டார் பாண்டியன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி அவர் களை எம்.ஜி.ஆர். விசாரித்தார். அதில் ஒரு வர் நெல்லையைச் சேர்ந்த கமலா செந்தில் குமார். மற்றொருவர் சேலத்தைச் சேர்ந்த இளைஞர். இருவருமே பட்டதாரிகள். தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரி எம்.ஜி.ஆரிடம் மனு அளித்தனர். மறுநாளே இரண்டு பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். கமலா செந்தில் குமாரும் அந்த இளைஞரும் முறையே நெல்லை மற்றும் சேலம் மாவட்டங்களின் ஆவின் சேர்மன்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை அவர்களிடம் வழங்கினர். ‘‘இப்படி ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று பி.எச்.பாண்டி யன் கூறுகிறார்.
எந்த சூழலிலும் எம்.ஜி.ஆர். பதற்றம் அடைய மாட்டார். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வ தோடு, இக்கட்டான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். 1978-ம் ஆண்டு பார் கவுன்சில் பொன்விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. பி.எச்.பாண்டியன் அப்போது எம்.எல்.ஏ.மட்டுமின்றி, பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசினார்.
‘‘தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியை தலைநகராக மாற்றலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர்கள் கரவொலி எழுப்பினர். அவருக்குப் பின் பேசிய அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்த ராம் ஜெத்மலானி, ‘‘நெஞ்சுப் பகுதியில் இதயம் உள்ளது. தலைக்கு உள்ளே மூளை இருக்கிறது. அவற்றை இடம் மாற்றினால் என்ன ஆகும்?’’ என்றார். அதற்கும் பலத்த கரவொலி. தர்மசங்கடமான சூழ்நிலை. பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு!
கூறியதற்கும் கைதட்டுகிறீர்கள். உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?’’ என்று கூட்டத்தினரை எம்.ஜி.ஆர். கேட் டார். கூரையே இடிந்துவிழுவது போல கரவொலியும் ஆரவாரமும் எழுந்தன. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
‘‘1973-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர். மீது ஒரே நாளில் ஒன்பது மானநஷ்ட வழக்குகள் அரசு தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ‘‘என்ன செய்யலாம்?’’ என்று எம்.ஜி.ஆர். என்னுடன் ஆலோ சித்தார். உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். சார்பில் நான் மனு தாக்கல் செய்தேன். ‘‘அரசு தரப்பில் தொடரப்பட்ட முதல் வழக்கிலேயே மானம் நஷ்டம் என்றால் மீதி உள்ள 8 வழக்குகளில் இழப்பதற்கு மானம் இல்லை’’ என்று வாதாடி அப் போது நீதிபதியாக இருந்த வி.பாலசுப்பிர மணியம் மூலம் தடை ஆணை பெற்றேன். பின்னர், எம்.ஜி.ஆருக்கு எதிரான வழக்கு கடைசிவரை விசாரணைக்கு வரவே இல்லை’’ என்கிறார் பி.எச்.பாண்டியன்
Whatsapp-ல் வந்தது