https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ec&oe=5E991B3F
Printable View
இரண்டாம் ஆண்டாக கோடை வெயிலில் பொது மக்களின் தாகம் தணிக்க, நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி...
ஏப்ரல் 13, 2020 முதல்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...56&oe=5E982651
Thanks Nilaa
1961ம் ஆண்டின் இறுதியில் நடிகர் திலகம் பம்பாயில் ஒரு நூலகம் மற்றும் கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு பம்பாய் பாரதி கலா மன்றம் சார்பில் ஆறு நாட்கள் தன் குழுவினரோடு நாடக விழா நடத்தி வசூலான தொகையை நன்கொடையாக அளிக்கிறார்........
நாடகங்கள் முடிந்த பிறகு பம்பாயின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன......
அதற்கான விளம்பரம்.......இதோ......
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cd&oe=5E988FEC
THANKS Luxmanan Luxmanan
நம் சுதந்திர இந்தியாவில்.போர்வந்தாலும் புயல் வந்தாலும் அரசாங்க த்துக்கும் இந்த நாட்டு மக்களுக்கு ம்உதவிசெய்வதில் முதல் ஆளாக நின்றவர் நம்தலைவர்தான் அவர் சினிமாவில் இருந்து விலகும் வரை இது நடந்தது.இப்போதுகோடிகணக்கில்சம்பளம்வாங்கும்நடிகர்கள ் இந்த நாட்டுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் ஒரு சாதாரண நடிகர் உதவி செய்தபிறகு தான் இவர்களுக்கு ஞானோதயம் வரும்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c1&oe=5E96DDC8
Thanks Selvaraj.K
இந்த நாட்டுக்கு ம்.நாட்டுமக்களுக்கும்.கனவில்கூட.துரோகம்நினைக்காத.த ுரோகம்செய்யாத இரண்டு உத்தமர் கள்.
கர்மவீரரைநினைத்துகொண்டிருப்பவர்கள்இப்போதுஅய்யனின்ர சிகர்கள்மட்டும்தான்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...10&oe=5E97C760
Thanks Selvaraj.K
ஒய் ஜி எம்மின் நான் சுவாசிக்கும் சிவாஜியிலிருந்து....
அன்னை இல்லத்தில், நடிகர் திலகத்தின் உடல், கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது. கலை உலகமே, கண்ணீரோடு நின்றது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டுப்போட்டு வந்த நாகேஷை, நான் உள்ளே அழைத்துச் சென்றேன்.
சில நிமிடங்கள் மவுனமாக இருந்தவர், திடீரென்று, "சார்... என்ன சார் இப்படி செய்துட்டீங்க! டேய்... (என்னைப்பார்த்து) இவர் இல்லைன்னா, தருமி இல்லடா...' என்று சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அதற்கு மேல், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக வெளியே சென்றார்.
தெய்வீகக் கலைஞர்கள்!
Thanks Palaniappan Subbu
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b3&oe=5E989F27
Thanks Rajaluxmi Babu
சிவாஜி எதிர்மறை ராசி உடையவர்.அது என்ன எதிர்மறை ராசி.நாம் யார் மீது உண்மையான அன்பு கொண்டு அவருடைய வளர்ச்சிக்காக உழைத்து உதவி செய்து அவரது முன்னேற்றத்துக்கு தாமும் ஒரு காரணம் ஆகிறோ மோ அவர ஒரு நாளைக்கு நம்மை விட்டுவிட்டு நமக்கு எதிர் முகாமில் போய் இணைந்துவிடுவார்.சிறு சிறு கரு த்து வெறுபாடுககளுக்காககடந்த கால நட்பையும் நன்றியையும் அடியோடு மறப்பது சினிமாவிலும் அரசியலிலும் சகஜம்.சிவாஜியையும் சிலர் அவ்வாறு மறந்துவிட்டார்கள்.அதில் முதன்மையானவர் ஜி.என் வேலுமணி.பதி பக்தி பட படத்தின் உச்சகட்ட காட்சி .ஜெமினியை நோக்கிச் சுட்ட ஒரு போலி துப்பாக்கி குண்டுசற்று தொலைவில் னின்று கொண்டு இருந்த தயாரிப்பு நிர்வாகி வேலுமணியின் தொடையில் பட்டு காயம் அடைந்து விழுந்துவிட்டார்.பதறிப்போன சிவாஜி உடன் இருந்து உதவிகள் செய்தார்.அவர மீது அனுதாபம் கொண்ட சிவாஜி தனியாக படம் தயாரிக்கும் படியும் அதில் நடித்து கொடுப்பதாக கூறினார்.
அவ்வாறே வேலுமணி தனியாக சரவணா ஃப்லிம்ஸ் ஆரம்பித்து சிவாஜி நடித்து பீம்சிங் இயக்கிய பாகப்பிரிவினை படத்தை தயாரித்து வெற்றிகண்டார்.அடுத்து அதே சிவாஜி பீம்சிங் யுனிட்டை வைத்து பாலும் பழமும் தயாரித்தார்.இந்த 2வெற்றிப் படங்களுக்குப் பிறகு வேலுமணி சிவாஜியை விட்டு விலகி பாதகானிக்கை படம் தயாரித்தார்படம் சரியாக போகவில்லை.பிறகு எம்ஜிஆரிடம் சென்று அவரை வைத்து பணத்தோட்டம் 'சந்திறோதயம்,கலங்கரை விளக்கம் படகோட்டி படம் எடுத்தார்.ஏ.பி நாகராஜன் இயக்கி தயாரித்து 3-11-1964 தீபாவளி அன்று வெளிவந்து வெற்றி பெற்ற சிவாஜியின் நூறாவது படமான நவராத்திரி படத்துக்கு போட்டியாக வேலுமணி தனது படகோட்டி யை வெளியிட்டார்.படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.அதன் பிறகு சில படஙகள் எடுத்த வேலுமணி பின்னாட்கலில் பல்லவன் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு சிரமங்களை சந்தித்தார்.ஆரூர்தாஸ் புத்தகத்தில் இருந்து.அடுத்து பந்துலு அவர்கள்
Thanks Vijaya Raj Kumar
அரிய படம்.
ஊட்டி பள்ளி ஒன்றில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...4c&oe=5E96ACAD
Thanks Luxman Raju
இன்று ( 19/03/2020 ) காலை 07.00A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" என் தம்பி " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, பாலாஜி பலரும் நடித்து ள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...88&oe=5E97FE7B
இன்று 19/03/2020 - காலை 11.00A.M. மணிக்கு சன் லைஃப் டி.வி. யில்
நடிகர்திலகம் நடித்த - லட்சுமி கல்யாணம் - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், சௌகார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...54&oe=5E975976
இன்று 19/03/2020 ராஜ் தொலைக்காட்சியில் மதியம் 1.30P.M. மணிக்கு நடிகர்திலகம் நடித்த மெகா ஹிட் படம். ¶
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...99&oe=5E99CF94
'அம்மாடி..பொண்ணுக்கு தங்க மனசு.. பொங்குது இந்த மனசு..கண்ணுக்கு ரெண்டு மனசு..அவ சொல்லுக்கு என்ன வயசு..சொல்லுக்கு என்ன வயசு ..'
இன்று 19/03/2020 - மதியம் 01.30.P.M. மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த "ராமன் எத்தனை ராமனடி" வெற்றி படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், கே.ஆர். விஜயா, நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8e&oe=5E97139D
இன்று 19/03/2020 வசந்த் டிவியில் இரவு 7.30 P.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" நீதி " சிறந்த படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெயலலிதா, சௌகார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0f&oe=5E98CB22
இன்று 20/03/2020 கேப்டன் டிவியில் மதியம் 02.00pm மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" அன்பே ஆருயிரே " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...4b&oe=5E986D61
இன்று 20/03/2020 இரவு 10.00pm மணிக்கு ஜெயா டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த " தாவணிக் கனவுகள் ". ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, பாக்கியராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f0&oe=5E980555
இன்று 20/03/2020 இரவு 07.00pm மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" தங்க பதுமை " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பத்மினி நடித்துள்ளனர். !!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9e&oe=5E9AC1D4
'வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்..ஞான சக்தி வேல்.'
இன்று 20/03/2020 மதியம் 2.00pm மணிக்கு பாலிமர் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த "கந்தன் கருணை"
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, ஜெமினி, சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0b&oe=5E984663
இன்று 20/03/2020 - மாலை 4.00pm மணிக்கு சன் லைஃப் டி.வி. இல்
நடிகர்திலகம் நடித்த - முரடன் முத்து - படத்தைகாண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், தேவிகா, நாகேஷ், மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f1&oe=5E986F9E
Thanks Jeyavelu Kandaswaami
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b5&oe=5E9C1C13
Thanks Selvaraj
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cb&oe=5E9A9791
Thanks Gururo Vmurugesan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...76&oe=5E9B3BE1
Thanks Gururo Vmurugesan
இன்று 21/03/2020 காலை 11.30 மணிக்கு பாலிமர் டி.வி.யில் நடிகர்
திலகம் நடித்த "ஜல்லிக்கட்டு". ¶
காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகம், சத்யராஜ், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e0&oe=5E99EEDE
அன்னை இல்லத்தின் விசுவாசிகள் பார்க்க மட்டுமல்ல ...ஷேர் செய்யவும் இந்த வீடியோ பதிவு....
ஐயுன் வழியிலேயெ மகன் பிரபுவும் கொடுப்பதில் இடது கைக்கு தெரியாமல் கொடுத்திருக்கிறார்
https://youtu.be/5XyuZUFrMc8
செய்யும் தர்மத்திற்கு சேனல்களின் தயவெதற்கு?
சிவாஜி நடித்த திரைப்படங்கள். 1950, 60-களில் அவரது ஒரு திரைப்படம் வெளியாகும்போது வீடுகளுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் அவரது ‘பாசமலர்’ அல்லது ‘பாலும் பழமும்’ போன்ற ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக திரைப்பட அரங்குகளுக்குப் போனார்கள். திரையரங்குக்குச் செல்லும்போது தங்களுடைய சகோதரர்களை, காதலரை, தந்தையரைக் காணச்செல்வது போன்ற ஓர் உணர்வு அவர்களுக்கு இருந்தது
தங்களை நேசிக்கும் தங்களுக்காகக் கண்ணீர் சிந்தும் தங்களுக்காக எல்லாவிதமான தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நாயகனைத் திரையில் காணும்போது அவரோடு எளிதில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள்.
‘பாசமலர்’ படத்தில் சாவித்திரியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு’ என சிவாஜி விம்மியபோது திரைக்கு எதிரே உட்கார்ந்திருந்த பெண்கள் கண்ணீர் வடித்தார்கள், சிலர் கதறி அழுதார்கள், எல்லோருமே பரிதவித்துப்போனார்கள்.
சிவாஜியின் படங்களில் அவரது ஏதாவதொரு பாத்திரம் பெறும் சிறிய வெற்றியைக் கண்டு குதூகலித்தார்கள். அவர் வாய்விட்டுச் சிரிக்கும் காட்சிகளைக் காண வாய்க்கும்போது புன்னகைத்தார்கள்.
அவற்றை அவர்கள் தம் முழு வாழ்நாள் வரையிலும் நினைவில் வைத்திருக்க விரும்பினார்கள். அவரது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நிச்சயமாகப் பொழுதுபோக்கு மட்டுமே அல்ல!
நன்றி!
தேவிபாரதி எழுத்தாளர்
இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து.....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...18&oe=5E9B0FE7
Thanks Ganesh Pandian
எஸ்.பி.செளத்ரிக்கு நிகராக எவருமே வரமுடியாது என்பதுதான், தங்கப்பதக்கத்தின் வெற்றி. அந்த செளத்ரியும் அவரின் நெஞ்சில் குத்திக்கொண்டு கம்பீரத்துடனும் பெருமையுடனும் காட்சி தரும் தங்கப்பதக்கமும், யாரால்தான் மறக்கமுடியும்?
உண்மையான போலீஸ்காரருக்கு பொய்யும்புரட்டுமாக ஒரு மகன். ஒரேயொரு மகன். வீட்டில் ஆரம்பிக்கிற திருட்டு, சூதாடுகிற புத்தி என்று அப்பனுக்குத் தப்பிப் பிறக்கிறான். சிக்கிக்கொள்கிறான். கூடுதல் பணம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு, ஊரைவிட்டு ஓடுகிறான். வடக்கே மாட்டிக்கொண்டு, சிறுவர் ஜெயிலில் அடைபடுகிறான். அந்த ஜெயில் வாழ்க்கையில் திருந்துவதற்குப் பதிலாக, இன்னும் பல சூதுவாதுகளையும் கெட்டதுகளையும் கற்றுக்கொண்டு வருகிறான்.
காசுபணத்தின் மீது ஆசை. அப்பாவின் மீது வெறுப்பு. எது செய்தாலும் அப்பாவுக்கு வலிக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய டார்கெட். அப்படியொரு கோபவிளைவில், குற்றவாளியின் மகளை மணந்துகொண்டு வந்து நிற்கிறான். ஆனால், சொக்கத்தங்கம் அவள்.
மகனின் தவறும் குறுக்குபுத்தியும் தெரியவர, அவனை ஆதாரத்துடன் பிடிக்க நாடகம் போடுகிறார் போலீஸ் அப்பா. அதில் வசமாய்ச் சிக்கிக்கொள்கிறான். இன்னும் கோபம் அதிகமாகிறது அப்பா மீது!
வீட்டைவிட்டே மனைவியுடன் செல்கிறான். அம்மாக்காரி துக்கித்துப் போகிறாள். கணவன் பக்கமும் நிற்கமுடியவில்லை; மகன் செய்வதும் தவறு என வெதும்புகிறாள். நொந்துபோகிறாள்; நோய்வாய்ப்படுகிறாள். படுத்தபடுக்கையாகிறாள். இறந்தும்போகிறாள்.
அங்கேயும் மகனாலேயே அவமானப்படுத்தப்படுகிறார். ஆனாலும் சட்டத்தை மீறுகிற மகனை, சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க போராடுகிறார். இறுதியில் தான் தூக்கிவளர்த்துக் கொஞ்சிய மகனையே சுட்டுக்கொல்கிறார்.
மிகப்பெரிய தேசவிரோத செயலை தன் முயற்சியால், கட்டிக்காத்த அந்தப் போலீஸ் அதிகாரிக்கு, தங்கப்பதக்கம் கிடைக்கிறது.
இந்தக் காக்கிச்சட்டைக்கான கடமையை செவ்வனே செய்துவிட்டோம் என்கிற நினைவு மட்டும் கண்ணில் நிழலாட நிற்கிறார். படம் முடிந்தும் கூட, நம் மனங்களில் எல்லாம் இன்றைக்கும் நின்றுகொண்டிருக்கிறார், டிஎஸ்பி செளத்ரி.
குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு, இங்கும் அங்குமாக அறையில் செல்வார் சிவாஜி. ‘பயலை எவ்ளோ நேரம்தான் தோள்ல சுமந்துட்டிருப்பீங்க?’ என்பார் கே.ஆர்.விஜயா. ‘நீ பத்துமாசம் சுமந்துருக்கியே. நான் பத்துசெகண்டாவது சுமக்கிறேனே...’ என்பார்.
பார்க்கிற எல்லோரின் வெறுப்புகளையும் சம்பாதிக்கிற கதாபாத்திரம் ஜகன் ஸ்ரீகாந்துக்கு. பேச்சில் அலட்சியம், வார்த்தைகளில் விஷம், செயல்களில் தேச விரோதம்
எலெக்*ஷன்ல நிக்கிற. எந்த அருகதையும் உனக்கில்லையே. ஏண்டா நிக்கிறே? - எதுவும் இல்ல. அதனாலதான் நிக்கிறேன் என்று படத்தில் வருகிற போதேல்லாம் அரசியல் சரவெடிகளை, திரிகிள்ளிப் போட்டு வெடிக்கச் செய்துகொண்டே இருப்பார் சோ. இதில் இரண்டு சோ வேறு. நக்கல்நையாண்டிக்கு கேட்கவா வேண்டும்? போலீஸ் சோ, அரசியல்வாதி சோ. அதிலும் அரசியல் சோ, வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என்று சொல்லிக் கலாய்த்தெடுத்துவிடுவார்.
பையனுக்கு முதலிரவு அலங்காரம் செய்யப்பட்ட ரூமில் சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும். ‘சரி அந்தப் பாலை எடு’ என்பார். வெட்கிப் போவார். ரேடியோவில், ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு. ஆனால் இதுதான் முதலிரவு’ பாட்டு.
மறுநாள். டைனிங் ஹால். ‘என்ன இது சாப்பாட்டுல உப்பும் இல்ல; புளிப்பும் இல்ல’ என்று சத்தமிடுவார். ‘வயசாயிருச்சுன்னா, இதெல்லாம் குறைக்கணும் மாமா’ என்பார் மருமகள் பிரமிளா. சாதத்தை உருட்டி உருட்டிச் சாப்பிடுவார் ஸ்ரீகாந்த். இது குடும்பத்துக்கு ஆகாது என்பார் பிரமிளா. எப்படி என்பார் சிவாஜி. என் மருமக இல்லியா அதான் என்பார் கே.ஆர்.விஜயா. நம்ம மருமகன்னு சொல்லேன் என்பார் சிவாஜி. அடுத்த சீன்... வாசலில் மேஜர் நிற்பார். சாப்பிட்ட துகள் பல்லிடுக்கில் ஒட்டிக்கொண்டதை நாக்கால் எடுத்துக்கொண்டிருக்கிற பாவனையில் ஸ்டைலாக வருவார் சிவாஜி!
மகன் ஸ்ரீகாந்தை அப்பா சிவாஜி மிகச் சாமர்த்தியமாகப் பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவார். எல்லாம் முடிந்ததும் ‘என்ன, சாப்பிடலையா?’ என்று விஜயாவிடம் கேட்பார். ‘ஒருநாள் சாப்பிடலேன்னா உயிரா போயிரும்?’ என்று முகம் தூக்கிக்கொள்வார். மருமகள் பிரமிளாவிடம் கேட்பார். அவரும் ‘ஒருநாள் சாப்பிடலேன்னா உயிரா போயிரும்’ என்று வாட்டத்துடன் சொல்லுவார். பிறகு ஒரு அதட்டல் போடுவார் சிவாஜி. இருவரும் டைனிங் டேபிளில் சாப்பிட உட்காருவார்கள். அவர்களுக்குப் பரிமாறுவார் சிவாஜி. ‘இதுக்கு முன்னாடி, எத்தனையோ பேரை கைது பண்ணிருக்கேன். நீ சந்தோஷப்பட்டிருக்கே. ஏன்னா... அவங்க யாரும் உனக்கு உறவு இல்ல’ என்பார். ‘நீங்க ஒண்ணை மறந்துட்டீங்க. உன்னோட பையன்னு நீ நினைக்கிறே. அவளோட கணவன்னு அவ நினைக்கிறா. ஆனா, அவன் என் பையன்னும் எனக்கும் இது வலிக்கும்னும் யாருமே நினைக்கலை’ என்று கலங்குவார். அப்போது, ‘மாமா நீங்க சாப்பிட உக்காருங்க’ என்பார் பிரமீளா. ‘ஒருநாள் சாப்பிடலேன்னா, உயிராப் போயிரும்’ என்று அவர்களின் டயலாக்கையே சொல்லிவிட்டுச் செல்வார். தியேட்டரில் விசில் சத்தம் பட்டையைக் கிளப்பும்.
அம்மா இறந்துட்டாடா என்று ஸ்ரீகாந்த் வீட்டில் நிற்கும்போது படுகிற அவமானம்... அந்தத் தகப்பனுக்கானது மட்டுமின்றி, நாம் படுகிற வலியாகவே உணர்ந்து கதறினார்கள் ரசிகர்கள்.
‘பெரியமனுஷனா இருக்கறதுக்கு ரெண்டு தகுதிகள் இருக்கு. ஒண்ணு... நன்றியை மறக்கறது. இன்னொன்னு... நல்லவங்களை மறக்கறது. என்பார் சோ. தியேட்டரில் விசில் பறக்கும்.
ஸ்ரீகாந்த் வேலை செய்யும் சிட்பண்டில் பணம் திருடுபோயிருக்கும். விசாரிக்க வருவார் சிவாஜி. அப்போது இருவருக்குமான கான்வர்சேஷன் அசத்தல். இறுதியாக, மிஸ்டர் ஜெகன். விசாரணை முடியும் வரை வெளிநாடு போகக்கூடாது என்பார் சிவாஜி. ‘எங்க அம்மாவும் அப்பாவும் எம்மேல ரொம்பப் பாசமா இருக்கறவங்க சார். பக்கத்து ஊருக்குக் கூட என்னை தனியா அனுப்பமாட்டாங்க’ என்பார் நக்கலாக. உடனே சிவாஜி, ‘வேலூருக்குப் போறதா இருந்தா, தனியாத்தான் போகணும் சார்’ என்பார் படு நக்கலாக!
இப்படி காட்சியும் காட்சிக்கான வசனங்களும் வசனங்களைச் சொல்லும்போதான முகபாவங்களும் ஒன்றோடொன்று போட்டிப் போடும்.
மகன் - அப்பா., கணவன் - மனைவி, மாமா - மருமகள், அதிகாரி - செளத்ரி என்று யாருடன் நின்று நடிக்கும்போதும் அதற்கேற்ற பாடிலாங்வேஜில் மிரட்டியெடுத்துவிடுவார் எஸ்பி சிவாஜிகணேசன்.
1974ம் ஆண்டு, ஜூன் 1ம் தேதி ‘தங்கப்பதக்கம்’ வெளியானது. இதோ... இப்போது 45 வருடங்களாகிவிட்டன. இத்தனை வருடங்களாகியும் எஸ்பி செளத்ரிக்கு ரிடையர்டே கிடையாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!
நன்றி!
வி.ராம்ஜி
இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...47&oe=5E9D00A7
Thanks Ganesh Pandian
இன்று 23/03/2020 காலை 10.00 A.M. மணிக்கு ராஜ் டிஜிட்டல் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த "அவன் ஒரு சரித்திரம் "
படம் காண தவறாதீர்கள்.
சிவாஜி, மஞ்சுளா, காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...55&oe=5E9E7198
இன்று 23/03/2020 - மதியம் 01.30.P.M. மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த" இமயம் "
இந்த படத்தில் நடிகர்திலகம், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ec&oe=5E9F048F
" நான் பிறந்த நாட்டுக் கெந்த நாடு பெரியது.... இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது...."
நாளை ( 24/03/2020 ) காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" தங்க சுரங்கம் " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c5&oe=5E9FF9F0