#Amy with her daddy!#AmyJackson The #Theri girl
https://pbs.twimg.com/media/CZamfrZUUAAr4XI.jpg
Printable View
#Amy with her daddy!#AmyJackson The #Theri girl
https://pbs.twimg.com/media/CZamfrZUUAAr4XI.jpg
ரஜினியிடம் தொலைபேசி எண் கேட்கும் தைரியம் இல்லை: அக்*ஷய்குமார்
ரஜினியிடம் தொலைபேசி எண் கேட்டு வாங்கும் தைரியம் தனக்கு இல்லை என்று இந்தி நடிகர் அக்*ஷய்குமார் தெரிவித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்*ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
இந்தியில் அக்*ஷய்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஏர்லிஃப்ட்' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்திருப்பதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தீர்களா என்ற கேள்விக்கு அக்*ஷய்குமார், "விருது கிடைத்ததில் சந்தோஷமாக இருக்கிறது. என்னிடம் ரஜினி சாருடைய தொலைபேசி எண் இல்லை. அவரிடம் தொலைபேசி கேட்டு வாங்கும் தைரியம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
'2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அக்*ஷய்குமார் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி மற்றும் அக்*ஷய்குமார் பங்கேற்கும் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
2.0 அப்டேட்ஸ்: உடலமைப்பை மாற்ற மாட்டேன்- அக்*ஷய்குமார் - tamil hindu
ரஜினி சார் முன் எந்த ஒரு எதிர்மறை சக்தியும் வெற்றி பெற முடியாது என்று நடிகர் அக்*ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்*ஷய் குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
'2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அக்*ஷய் குமார் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி மற்றும் அக்*ஷய் குமார் பங்கேற்கும் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்நிலையில் '2.0' படம் குறித்து அக்*ஷய் குமார் கூறும்போது, "ரஜினி சார் கையால் அடி வாங்குவதை பெருமிதமாக கருதுகிறேன். அவர் முன் எந்த ஒரு எதிர்மறை சக்தியும் வெற்றி பெற முடியாது.
இப்படத்துக்காக நான் எனது உடலமைப்பை எல்லாம் மாற்றவில்லை. என் உடலமைப்பை மாற்றவும் அனுமதிக்க மாட்டேன். எனது பகுதிக்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் சென்னையில் துவங்க இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
Anirudh Ravichander @anirudhofficial 2h2 hours ago
Happy Birthday Miss Jack :) @iamAmyJackson
https://pbs.twimg.com/media/CaBhITvUkAAZ-Z8.jpg
அறுந்த ரீலு 18: ஷங்கர் - விஜய் - விக்ரம் கூட்டணியை தள்ளிவைத்த ரஜினி - Tamil HINDU
http://tamil.thehindu.com/multimedia...m_2722069f.jpg
'ஐ' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் விஜய் மற்றும் விக்ரம் இணைந்து நடிக்கும் ஒர் அதிரடி படம் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
'ஐ' படம் வெளியானவுடன், தனது அடுத்த படத்துக்கான முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் இயக்குநர் ஷங்கர். இரண்டு நாயகர்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான ஆக்*ஷன் கதையை எழுதிவந்தார்.
'நண்பன்' படப்பிடிப்பின் போது, ஷங்கர் இயக்கத்தில் ஒரு நேரடி தமிழ் படம் பண்ண விரும்புவதாக விஜய் தெரிவித்திருந்தால் அவரை சந்தித்திருக்கிறார் ஷங்கர். "எப்போது படப்பிடிப்பு.. தேதிகள் மட்டும் சொல்லுங்கள்" என்று விஜய் சந்தோஷத்துடன் கேட்டிருக்கிறார். அப்போது அடுத்த ஆண்டு கொஞ்சம் தேதிகள் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார் ஷங்கர். இன்னொரு பாத்திரத்துக்கு விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
முழுவீச்சில் படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் போது தான் ஷங்கருக்கு "நாம ஒரு படம் பண்ணலாமா" என்று ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து எழுதி வந்த இரண்டு நாயகர்கள் கதையை அப்படியே ஓரம் வைத்துவிட்டு, ஷங்கர் தொடங்கிய படம் தான் '2.0'
இப்போதும் இரண்டு நாயகர்களுக்காக ஷங்கர் எழுதிய கதை அவரிடம் முழுமையாக இருக்கிறது. '2.0' படத்தைத் தொடர்ந்து அக்கதையை விஜய் - விக்ரம் இருவரையும் வைத்து இயக்கும் எண்ணமும் இருக்கிறது.
இயக்குநர் ஷங்கரின் கடும் கெடுபிடிகள் பிடியில் '2.0' படக்குழு - tamil hindu
மார்ச் மாதம் சென்னையில் தொடங்கவிருக்கும் '2.0' படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கடும் கெடுபிடிகள் விதித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்*ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், ரோபோக்களை வைத்து படமாக்க இருக்கும் காட்சிகள் எப்படி வரவேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஷங்கர்.
மார்ச் முதல் வாரத்தில் '2.0' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இப்படப்பிடிப்பின் முதல் கட்டத்தில் அக்*ஷய்குமார் - ரஜினி சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக்காட்சியை சண்டைக்கலைஞர்கள் சிலரை வைத்து காட்சிப்படுத்தி அதனை கிராபிக்ஸ் குழுவிடம் கொடுத்து எப்படி வரவிருக்கிறது என்று பார்வையிட இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அக்*ஷய்குமார் - ரஜினி சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறார். இக்காட்சிகள் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு அரங்கிற்குள் யாருமே மொபைல் போன் கொண்டுவரக் கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறார் ஷங்கர்.
மேலும், மிகவும் முக்கியமான காட்சிகள் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் இருக்கு புகைப்படக்காரர் கூட வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ஷங்கர். இக்காட்சியின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சின்ன புகைப்படம் கூட வெளியே போய்விடக் கூடாது என்பதில் மிகவும் திவிரமாக இருக்கிறார் ஷங்கர்.
Akshay-Rajinikanth’s fight scene costs a whopping Rs 20 crore
http://timesofindia.indiatimes.com/e...y/51022629.cms
'2.0' அப்டேட்: 2 ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர்கள் சென்னை வருகை - Tamil HINDU
'2.0' படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள் கென்னி பேட்ஸ் மற்றும் ஆரோன் க்ரிபன் இருவரும் சென்னை வந்திருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்*ஷ்ய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரஜினி மற்றும் ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதற்கட்ட படப்பிடிப்பில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு.
ரஜினி - அக்*ஷய்குமார் சம்பந்தப்பட்ட பிரதான காட்சிகளை விரைவில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக 'டை காஹார்ட்' மற்றும் 'ட்ரான்ஸ்பார்மர்ஸ்' படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு பணியாற்றிய 'கென்னி பேட்ஸ்(Kenny Bates)' பணியாற்ற இருக்கிறார். தற்போது 'பேட் மேன் Vs சூப்பர் மேன்' படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு பணியாற்றிய ஆரோன் க்ரிபனும் (Aaron Crippen) சென்னை வந்திருக்கிறார்.
இந்த இருவரின் மேற்பார்வையில் '2.0' படத்தின் சண்டைக்காட்சிகளைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் இருந்து சண்டை இயக்குநர் சில்வா மற்றும் அவருடைய உதவியாளர்கள் இச்சண்டைக்காட்சியில் பங்குபெற இருக்கிறார்கள்.
இப்படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்துவருகிறார்கள். இந்தியளவில் 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வரும் முதல் படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது