http://i57.tinypic.com/2epngg8.png
Printable View
தேர்தலை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்புள்ள ‘இரட்டை இலை’ சின்னத்தை மூடிமறைக்ககோரி தி.மு.க. வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை,
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்புள்ள ‘இரட்டை இலை’ சின்னத்தை மூடிமறைக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க.வின் சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
‘இரட்டை இலை’ சின்னம்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் சமாதி உள்ளது. இந்த சமாதிக்கு முன்பு அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ மிகப்பெரிய அளவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை அமைக்க தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 7–ந்தேதி வழக்கு தொடர்ந்தேன்.
இதை தெரிந்து கொண்ட தமிழக முதல்–அமைச்சர், எந்த முன்னறிவிப்பும் இன்றி 2012–ம் ஆண்டு டிசம்பர் 9–ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக இந்த சின்னத்தை திறந்து வைத்துவிட்டார்.
இப்போது, அதிக போக்குவரத்து உள்ள (மெரினா கடற்கரை முன்புள்ள) காமராஜர் சாலையில் ஆளும் கட்சி சின்னம் பெரிய அளவில் உள்ளது.
யானை சின்னம்
மே மாதம் 16–வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், ஆளும் கட்சி சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம், தேர்தலின்போது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தேர்தலின் அடிப்படை கொள்கையை பாதிக்கும் விதமாக உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில், பகுஜன சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான ‘யானை’ சின்னம், தேர்தல் நடைபெறும்போது, மூடி மறைக்கப்பட்டு வருகிறது.
மூடிமறைக்க வேண்டும்
அதுபோல, அரசு சொத்தான, எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்பு நிறுவப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தை மூடிமறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், இந்திய தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும். இதற்கு ஆகும் செலவு தொகையினை, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி வாதிட்டார்கள்.
நோட்டீசு
இதையடுத்து, மனுவுக்கு 10 நாட்களுக்கு பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
தலைவரின் அருமையான வாள்வீச்சு பாருங்கள் த்ரி நண்பர்களே
http://www.dailymotion.com/video/xro...jan_shortfilms
அன்னமிட்ட கைகளுக்கு அன்னமிடும் அன்னை
Attachment 3163
வாழ்த்து தெரிவித்த suharam மற்றும் Jaisankar அனைவருக்கும் நன்றி.
http://i871.photobucket.com/albums/a...psb34f086b.jpg
http://i871.photobucket.com/albums/a...ps8d31ac32.jpg
http://i871.photobucket.com/albums/a...ps5749772a.jpg
http://i871.photobucket.com/albums/a...ps8ea94e2b.jpg
http://i871.photobucket.com/albums/a...ps9d7353cc.jpg
http://i871.photobucket.com/albums/a...ps9ae1988a.jpg
Regards
1987-2014
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் , அரசியல் செல்வாக்கு , கட்சியின் ஆளுமை , அவருடைய படங்களின் மறு வெளியீடுகள் , அவருடைய ரசிகர்களின் , தொண்டர்களின் அசைக்க முடியாத எம்ஜிஆரின் மீது கொண்டுள்ள பக்தி , அவரிடம் உதவி பெற்றவர்களின் நினைவுகள் ,
எம்ஜிஆர் பெயரில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான மன்றங்கள் - பொதுநல அமைப்புகள்
எம்ஜிஆர் பட பெயரில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மாத இதழ்கள் - எம்ஜிஆர் பற்றிய
தகவல்களை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வார , மாத இதழ்கள் என்று மக்கள் திலகத்தின்
புகழ் பரப்பும் செய்திகள் 27 ஆண்டுகளாக வந்து கொண்டிருப்பது உலக வரலாற்றில் இதுவே
முதல் முறை என்பது கோடிக்கணக்கான உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமை தரும் தகவலாகும் .
1987-2014
27 ஆண்டுகளில் மறு வெளியீடு செய்யப்பட மக்கள் திலகத்தின் படங்கள் - 78.
திரையிட்ட எல்லா இடங்களிலும் அதிக நாட்கள் , அதிக முறை திரையிடப்பட்டு
விநியோகஸ்தர்களின் அமுத சுரபியாக இருப்பவர் மக்கள் திலகம் .
மறு வெளியீடு செய்யப்பட நகரங்கள் வரிசையில் சென்னை - மதுரை - கோவை நகரங்கள் முதல் மூன்று இடங்களை பெறுகிறது .
உலகளவில் ஒரு நடிகரின் படம் அவருடைய மறைவிற்கு பின்னர் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்குடன் இன்னும் ஓடிக்கொண்டிருப்பது மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமை .
இணைய தளத்திலும் மக்கள் திலகத்தின் பெருமைகள் பற்றிய பல சமூக வலை தளங்கள்
உள்ளது குறிப்பிடத்தக்கது .
மையம் திரியில் மக்கள் திலகத்தின் ஏழு பாகங்கள் - 16 லட்சம் பார்வையாளர்கள் -பிரமிக்க வைக்கும் சாதனைகள் .
எம்ஜியார் இன்னும் நம்மோடு வாழ்கிறார் .................