விரைவில்
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...ed50385d9de758
Printable View
Any function is there for Trailer/Audio release. Pls clarify Mr Raghavendra Sir.
Also inform us the tentative date of release of the movie.
Regards
சென்னை மகாலட்சுமியில் செப்டம்பர் 26 முதல் நடிகர் திலகத்தின் சங்கிலி வெளியாகிறது. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நேரத்தில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளியிடப்படும் படங்களின் லிஸ்ட்
சென்னை மகாலட்சுமி - சங்கிலி - 26.09.2014 முதல்
மதுரை - சென்ட்ரல் - வெள்ளை ரோஜா - 26.09.2014 முதல்
திருச்சி - கெயிட்டி - அண்ணன் ஒரு கோவில் - 27.09.2014 முதல்
கோவை - டிலைட் - அவன்தான் மனிதன் - 28.09.2014 முதல்
இதை தவிர நெல்லை மற்றும் சில ஊர்களில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு படங்களின் பட்டியல் மற்றும் வெளியிடப்படும் தேதி பற்றிய latest தகவல்கள்
சென்னை மகாலட்சுமி - சங்கிலி - 26.09.2014 முதல்.
http://i501.photobucket.com/albums/e...psf9fb09cf.jpg
மதுரை - சென்ட்ரல் - வெள்ளை ரோஜா - 26.09.2014 முதல்
http://i501.photobucket.com/albums/e...ps268089ec.jpg
திருச்சி - கெயிட்டி - அண்ணன் ஒரு கோவில் - 01.10.2014 முதல்
http://i501.photobucket.com/albums/e...psceaaeabe.jpg
கோவை - டிலைட் - எங்க மாமா - 28.09.2014 முதல்
http://i501.photobucket.com/albums/e...ps1eefd4ea.jpg
நெல்லை -சென்ட்ரல் - சந்திப்பு - 26.09.2014 முதல்
http://i501.photobucket.com/albums/e...pse515c024.jpg
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா இன்று முதல் சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு எப்போதும் போல் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்றைய தினத்தில் 4 காட்சிகளில் ஏறத்தாழ 700 பேர்கள் கண்டு களித்திருக்கின்றனர். சற்றேறேக்குறைய 15,000/- ரூபாயை மொத்த வசூலாக பெற்றிருக்கிறது. முதல் நாளைப் பொறுத்தவரை அண்மையில் வெளியான தங்க சுரங்கம் படத்திற்கு அடுத்தபடியான வசூல் இது. சென்ட்ரல் திரையரங்க வளாகமே முழுமையாக அலங்கரிக்கப்பட்டு அரங்கிற்கு வெளியேயும் மிகப் பெரிய பானர்கள் கட்டப்பட்டு ஒரு புதுப் பட ரிலீஸ் தோரணையில் டவுன் ஹால் ரோட்டில் போவோர் வருவோர் கவனத்தையெல்லாம் கவர்ந்து கொண்டிருக்கிறது என்று நண்பர் சந்திரசேகர் தகவல் தெரிவித்தார். குறிப்பாக நண்பர் சுந்தர்ராஜன் அவர்கள் பதிவிட்ட ரசிகர்கள் அமைத்துள்ள நடிகர் திலகத்தின் பல படங்களின் போஸ்கள் ஸ்டாண்டிஸ் கட் அவுட் ஆக அமைக்கப்பட்டு ஸ்டார் attraction ஆக திகழ்கிறது என்பதையும் சொன்னார்.
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் [முன்னரே குறிப்பிட்டது போல் இப்போது மகாலட்சுமியில் இரண்டு காட்சிகள் மட்டுமே ஒரு படம் திரையிடப்படுகிறது] நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விவரங்கள் கிடைத்தவுடன் அதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் சிறப்பான வரவேற்பை பெற்றதை பகிர்ந்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை முதல் பதற்றமான சூழல் இருந்தும் காலை மற்றும் மதிய காட்சிகளுக்கு 200-க்கும் அதிகமான மக்கள் வந்திருக்கிறார்கள். இன்று சற்று இயல்பு நிலை திரும்பியவுடன் பொது மக்கள் குறிப்பாக தாய்மார்கள் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருக்கின்றனர். இன்று நண்பகல் முதலே மதுரையில் சரியான மழை. விட்டு விட்டு பெய்த மழை மாலை நேரத்தில் வலுவாகவே பெய்திருக்கிறது. ஒரு பக்கம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுமோ என்ற பயம், பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாமல் குறைந்த அளவிலே ஓடும் சூழல், இவை போதாதென்று தொடர்ந்து பெய்த மழை இப்படி எதிர்மறை சூழல்களிலும் இன்று மாலைக் காட்சிக்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 450. ஞாயிறு மாலைக் காட்சியைப் பொறுத்தவரை தங்கசுரங்கதையும் தாண்டிய வசூல். இன்றைய தினம் இரவுக் காட்சியோடு மொதத் வசூல் ரூபாய் 40,000/--ஐ கடந்திருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் அந்த இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் மூன்று நாள் மொத்த வசூலில் புதிய சாதனை படைத்திருக்கும்.
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். தமிழகமெங்கும் நேற்று மாலைக் காட்சி நடைபெறவில்லை என்பதனால் நேற்று மதியக் காட்சி ஓடிய சங்கிலி திரைப்படமும் நேற்று மாலைக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்றைய தினம் பகல் மற்றும் மாலைக் காட்சிக்கு மக்கள் திரளாக வந்திருந்து ரசித்தனர்.மூன்று நாட்களில் நடைபெற்ற 5 காட்சிகளில் மொத்த வசூல் சுமார் ரூபாய் 30, 000/-.
கோவையில் அசாதாரண சூழ்நிலை சற்று தீவிரமாகவே இருந்தது. பதற்றம் முற்றிலும் தணிந்து விடாத நிலைமை. கோவை நகரை பொறுத்தவரை தனியார் பேருந்துகள்தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து. இன்றும் பெரும்பான்மையான தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலைமை. டிலைட் அரங்கை அடைவதற்கே பஸ் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து வரவேண்டிய நிலை. சென்னை போன்று ஷேர் ஆட்டோக்கள் இல்லாத இடம். நேற்று முதல் டிலைட் அரங்கில் தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட எங்க மாமா திரைப்படத்தை இரண்டு தினங்களில் நடைபெற்ற 3 காட்சிகளில் [டிலைட்டில் பகல் மற்றும் மாலைக்காட்சி என்று இரண்டே காட்சிகள்தான், அதிலும் நேற்று மாலைக்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது] இந்த அசாதாரண சூழலிலும் டிலைட் போன்ற அரங்கில் திரையிடப்பட்டும் கூட 460-க்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். இன்றைய பதற்றமான சூழலில் கோவையில் புதுப் படங்களுக்கு கூட பெரிய அளவில் ஆட்கள் வரவில்லையெனும் போது இது ஒரு மெச்சத் தகுந்த நிகழ்வு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
மதுரை மாகரம் குறிப்பாக திரையரங்குகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடும் என்று எண்ணி இருந்த நேரத்தில் இன்றும் சில பிரச்சனைகளை எதிர்க் கொண்டிருக்கிறது வெள்ளை ரோஜா திரைப்படம். இன்றைய தினம் வினியோகஸ்த சங்க தலைவர் அன்புச்செழியன் உண்ணாவிரதம் இருப்பதை காரணம் காட்டி மதுரை மாநகரிலே நண்பகல் காட்சியையும் பகல் காட்சியையும் ரத்து செய்ய சொல்லி தாக்கீது வரவே இரண்டு காட்சிகள் ரத்து என்று சென்ட்ரல் திரையரங்கில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு காலைக் காட்சிக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பகல் காட்சியும் இல்லை என்று இருந்த நேரத்தில் மதியம் இரண்டு மணி அளவில் நாளை தமிழகம் தழுவிய அளவில் நண்பகல் மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறவிப்பு வரவே அவசர அவசரமாக இன்றைய பகல் காட்சி நடைபெறும் என்று சொல்லி திரையிட்டு இருக்கிறார்கள். காலைக் காட்சிக்கு வந்து காட்சியில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற கணிசமான மக்கள் சரியான தகவல் சொல்லியிருந்தால் பகல் காட்சிக்காவது வந்திருப்பார்கள். சரியான முறையில் இந்த விஷயத்தை கையாளாமல் இப்படி சொதப்புவதின் மூலம் பாதிக்கப்படுவது படத்தை வெளியிட்டவர்தான். இனி நாளையும் இரண்டு காட்சிகள் இல்லை என்று சொன்னால் அது சரியான ஒரு முறைதானா என்ற சந்தேகம் எழுகிறது! ஒழுங்காக அனைத்தும் நடந்திருந்தால் மிகப் பெரிய வசூலை ஈட்டியிருக்க வேண்டிய படம் இப்படிப்பட்ட செய்கைகளினால் பாதிக்கப்படுகிறது.
கோவை சென்னை ஆகிய ஊர்களிலும் இது போன்ற பிரச்சனைகளே!
எப்போதும் போல அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் நடிகர் திலகம் வெற்றி வாகை சூடுகிறார்!
அன்புடன்
இன்றைய தினமும் மதுரையில் கடையடைப்பு, பேருந்துகள் இயக்கப்படாமை, பதற்றம் நிறைந்த சூழல் இவற்றோடு இன்றும் பலத்த மழை பெய்திருக்கிறது. இப்படி இருந்தும் வேலை நாளாக இருந்தும் மாலைக் காட்சிக்கு கணிசமான மக்கள் கூட்டம். இன்று இரவோடு மொத்த வசூல் சுமார் ரூபாய் 60,000/- ஐ எட்டியிருக்கிறது. 5 காட்சிகள் ரத்து செய்யபட்டும் 5 நாட்களில் இந்த வசூல். அதுவும் 1980-களில் வெளியான படத்திற்கு. இந்தப் படங்கள் எல்லாம் சரியாகப் போகாது என்று சொன்னவர்களையெல்லாம் திகைக்க வைத்து வசூல் செய்து வருகிறது சென்ட்ரல் சினிமாவில் வெள்ளை ரோஜா.
எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!
அன்புடன்
இன்று முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாக திருச்சி தகவல் கூறுகின்றன. இன்றைய தமிழக சூழ்நிலையிலும் வேலை நாளிலும் ஆயுத பூஜைக்கு முன்னேற்பாடுகள் நடக்கும் நிலையிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக இருந்த நேரத்திலும் இன்றைய தினம் 450 பேர் கண்டு களித்திருக்கின்றனர். இதில் வியப்பூட்டும் விஷயம் வந்தவர்களில் 100 பேர் பெண்கள் என்பதாகும். படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு மற்றும் வசூல் பற்றி மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக சொல்லியிருந்தேன். அதை உறுதிப்படுத்தும் வண்ணம் சரியான தகவலை வெளியிட்ட ராமச்சந்திரன் சாருக்கு நன்றி. பட வெளியிட்டாளர் பங்கை ராமச்சந்திரன் சார் சொல்லியிருக்கிறார். படம் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை எடுத்தோமென்றால் இந்த 5 நாட்களில் 2100 பேர் பார்த்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னால் படம் எந்தளவிற்கு steady-ஆக போயிருக்கிறது என்பது புரியும். கெயிட்டி தியேட்டர் அமைந்திருக்கும் ஏரியாவில் திரையரங்கிற்கு முன்னால் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடைபெற்று அதன் காரணமாக அங்கே பந்தல் சேர்கள் போன்றவை போடப்பட்டதால் அரங்க முகப்பே மறைக்கப்பட்டு படம் பார்க்க வந்த பலர் இதன் காரணமாக திரும்பி செல்ல நேர்ந்திருக்கிறது.
நடிகர் திலகத்தின் படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுவதை தடுக்கத்தான் எத்துனை முயற்சிகள்? இங்கேயெல்லாம் நடக்கும் நுண்ணரசியல் 99% மக்களுக்கு தெரிவதில்லை. சிவாஜி படங்கள் வராமல் தடுக்க முயற்சி எடுத்த பலரும் அது முடியாமல் புறமுதுகிட்டனர். இப்போது ஒரு சிலர் திருச்சியில் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மண்ணின் மைந்தர் concept. என்னவென்றால் இப்போது திருச்சியில் அண்ணன் ஒரு கோவில் படத்தை வெளியிட்டிருப்பவர் மதுரையை சேர்ந்தவர். சிவாஜி படங்கள் வருவதை விரும்பாத ஒரு சில மனிதர்கள் [இவர்கள் எண்ணிக்கையில் குறைவான நபர்களே. ஆனாலும் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்] அதை காரணம் காட்டி வெளியூர்காரர்கள் இங்கே வந்து படம் எப்படி போடலாம் என்ற கேள்வியை அரங்க உரிமையாளரிடம் எழுப்பி மறைமுகமாக ஒரு மிரட்டல் தொனியில் பேசி நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போடுவது அதையும் மீறி படம் வெளியிடப்பட்டால் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற படங்களை கழுத்தை நெரித்து அதன் காரணமாக படங்களை குறைந்த நாட்களில் மாற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிவாஜி படங்கள் நன்றாக வசூலிப்பதால் அவற்றை திரையிட அரங்க உரிமையாளர் ஆவல் காட்டுகிறார், முயற்சி எடுக்கிறார் என்றபோதினும் இது போன்ற சூழ்ச்சிகளையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.
எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!
சென்னை மகாலட்சுமியில் சென்ற வாரம் வெள்ளி முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். சென்ற வாரம் [ இப்போதும் கூட] நிலவிய அரசியல் சூழல், பல இடங்களிலும் தெருவெங்கும் நடந்த போராட்டங்கள், சில பல சங்கங்கள் நடத்திய பந்த்கள் அதன் காரணமாக நிறுத்தப்பட்ட காட்சிகள் என்று பலவகையான குழப்பத்திலும், மொத்தம் திரையிடப்படுவதாக இருந்த 14 காட்சிகளில் 3 காட்சிகள் ரத்து செய்யப்பட்டு 11 காட்சிகளே நடைபெற்ற நிலையிலும் சங்கிலி திரைப்படம் அந்த 11 காட்சிகளில் ரூபாய் 55,000/- வசூல் செய்திருக்கிறது. இரண்டு காட்சிகள் என்ற concept அறிமுகப்படுத்தப்பட்டபின் எந்த படமும் 11 காட்சிகளில் இந்தளவிற்கு வசூலிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது அமைதியும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் வந்திருக்கும் இந்த அருமையான வசூல், அனைத்துக் காட்சிகளும் ஓடியிருந்தால் இன்னும் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கும் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்