SUPERB FIGHTING SCENE.
http://youtu.be/jox_ESw6I0A
Printable View
SUPERB FIGHTING SCENE.
http://youtu.be/jox_ESw6I0A
Congratulations to all the friends here for completing Part 8 and commencing Part 9 and all the best for Professor Selvakumar.
8 வது பாகத்தினை இனிதே ஆரம்பித்து , தொய்வில்லாமல் , படுவேகத்தில்
பதிவுகள் செய்து முடிக்க காரணமாயிருந்த நண்பர் திரு.ரூப்குமார் அவர்களுக்கும்
அதற்கு பேராதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், பெருத்த நன்றி.
9 வது பாகத்தினை இந்த நன்னாளில் தொடங்கிய பேராசிரியர் நண்பர்
திரு.செல்வகுமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
8வது பாகத்தை விட , 9வது பாகத்தை அசுர வேகத்தில் கொண்டு செல்ல , ஒரு படைத்தலைவன் போல தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுவீர்கள் என்று
நம்புகிறேன்.
தங்களது வரவேற்பு மடலே ஒரு பிரம்மாண்டம்.
தங்களிடம் இருந்தும் , ஏனைய நண்பர்களிடம் இருந்தும் பல அரிய புகைப்படங்கள்,
ஆவணங்கள், புராதன/புதிய செய்திகள், பதிவுகளை நிறைய எதிர்பார்க்கிறேன்.
மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.
ஆர்.லோகநாதன்.
இன்று தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் படங்கள்.
--------------------------------------------------------------------------------------------
காலை 11 மணி - சன் லைப் - தாயின் மடியில்
மதியம் 2 மணி - வசந்த் - ராஜா தேசிங்கு
இரவு 7 மணி - சன் லைப் - மன்னாதி மன்னன்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த வார மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை - சத்யம் சினிமாஸ்
ஆல்பட் காம்ப்ளக்ஸ் -- ஆயிரத்தில் ஒருவன் 7 வது வாரம்.
மகாலட்சுமி - கண்ணன் என் காதலன்.
மதுரை - அரவிந்த் - நேற்று இன்று நாளை.
கோவை - டிலைட் - அடிமை பெண்
நெல்லை - சென்ட்ரல் - ஒளி விளக்கு
எட்டாவது வள்ளலின் புகழ்பாடும் திரியின் எட்டாவது பாகத்தைத் தொடங்கி வைத்து அருமையான பல பதிவுகளை வழங்கிய திரு.ரூப்குமார் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
அதே போன்று மக்கள் திலகத்தின் நவரச நடிப்பை நயமாக விளக்குவதற்கும், ஒளிவீசும் வைரமாக என்றும் விளங்கும் மக்கள் திலகத்தின் பல்வேறு பரிமாண சாதனைகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் அள்ளித் தெளிக்க 9ஆம் பாகத்தைத் தொடங்கி வைத்திருக்கும் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வரவேற்புகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது பொக்கிஷங்களிலிருந்து பல நன்முத்துக்கள் இந்தப் பாகத்தில் திரியின் நண்பர்களுக்கு பரிமாறப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
திரைப்படங்களை டிவிடியில் பார்க்கும் போது பெரும்பான்மையான படங்களில் டைட்டில் மற்றும் பாடல் காட்சிகள் வந்தால் fast forward செய்து விட்டு அடுத்த காட்சியைப் பார்ப்பது பெரும்பாலோரது வழக்கம். விதிவிலக்காக டைட்டில் காட்சிகளையும் கண்ணை விட்டகலா காவியங்களாகப் படைத்திருப்பார் மக்கள் திலகம். உதாரணம் உழைக்கும் கரங்கள், ஒளி விளக்கு, ரிக் ஷாக்காரன் போன்ற பல படங்கள். அதனை அழகுபட பதிவிட்ட நண்பர் திரு.ரூப்குமார் அவர்களுக்கு நன்றி.
http://i61.tinypic.com/14nodvr.jpg
A rare still from Mohanram's Website