http://i61.tinypic.com/5e74vb.jpg
Printable View
Today onwards
at trichy gaity
anbe vaa
infmn frm mr.mullai murthy, trichy
தனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!
இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!
வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!
எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த .எம்ஜிஆர் . மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மனிதரைப் பற்றி ..அன்பு உள்ளங்களே.. உங்கள் பதிவுகளை கட்டுரை வடிவில் வரவேற்றோம்.
Courtesy- vallamai
காவிரிமைந்தன்
சிறப்புக் குறிப்பு:
முதலாம் பரிசுகள் வரிசையில்..
1. சுடர்மதி மலர்வேந்தன் :
‘தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப்பற்றியதோர் கட்டுரை! கையின் கட்டை விரலாய்ச் சிறப்புப் பெற்றார்!
கல்லுக்குள் உளி செலுத்திச் சிற்பத்தைப் பெறவேண்டும். ஆனால் இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது என்பன போன்ற சித்திர வரிகள் மக்கள் திலகம் பற்றிய செய்திகளாகக் கோர்க்கப்பட்ட நேர்த்தி சிறப்பானது.
விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்.. இப்படி முதல்தரமான தலைப்புகள் பொருத்தம் நிறைந்த கருத்துச் செறிவுகளுடன் கட்டுரையை முதலிடத்தில் வைத்துள்ளார்.
2. ஞா.கலையரசி
காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் – துவக்கம் இப்படி!
சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1972, 1977,1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது போன்ற ரசமான வெளிப்பாட்டுடன் தொடர்கிறது கட்டுரை!
மிகுதியான கருத்துக்கள், பொருத்தமான ஆதாரங்கள் வரிசைக்கிரமமாக, எளிய தமிழில் உயிரோட்டத்துடன கூடிய படைப்பு.. முதலிடத்தில் ஒன்றாக!!
3. ஜியாவுத்தீன்..
திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது என வசீகரமான தொடங்கும் கட்டுரை,
ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம் என ஆணித்தரமான, நயமான வரிகளுடன் தொடர்கிறது!
எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என முடிகின்ற கட்டுரை தொடரோட்டத்தில் முதலாம் இடத்தில்!!
இரண்டாம் பரிசுகள் வரிசையில்:
1. வில்லவன் கோதை :
எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை என.. அழகான வெளிப்பாடு!
தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்! என்பன போல் பல சத்தான வரிகள் சுமந்தபடி, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவர் பேசப்படுவதான முத்துப் போன்ற முடிவுடன் அமையும் கட்டுரை, எளிய ஆழமான நடைத்தெளிவுடன் மக்கள் திலகத்தை ஓவியமாக்கி இரண்டாம் இடத்தில்!
2. எஸ்.சசிகலா:
“இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!
ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!
‘நாடகக் காட்சி’ போன்ற விளக்கத்துடனும் தெளிவடனும் உள்ள கட்டுரை, இரண்டாம் இடத்தில்!