Quote:
இப்புவியின் ஒப்பற்ற நடிப்புச் சக்கரவர்த்தியாக நடிகர்திலகம் உயர்ந்தமைக்கு எண்ணற்ற காரணிகள் இருப்பினும் என் எண்ணத்தில் நிழலாடுவது அவரது எலாஸ்டிக் போன்ற விரிந்து சுருங்கி இளகும் முகத்தின் தசைநார் அமைப்பும் பிளாஸ்டிக் போல வளைந்து குழைந்து நெகிழ்ந்து இறுகும் குளோசப் முக பாவனைகளுடன் கூடிய உடல்மொழி வெளிப்பாடுகளுமே!
அவரது கடின உழைப்புக்களுடன் கூடிய நாடகமேடைச் சூழல் பயிற்சிகள் அவருக்கு அபாரமான நினைவாற்றலுடன் இணைந்த மனனம் செய்யும் திறனை வளர்த்ததோடு மேடை பயத்தையும் அறவே நீக்கியது !!
நாடகத்தில் பின்னியெடுக்கும் எத்தனையோ நடிகமணிகளால் காமெரா முன்னால் பரிமளிக்க முடிந்ததில்லை!
ஆனால்... திரை ஒளிவெள்ளம் தன் மீது பாய்ந்த அந்த முத்தான முதல் வாய்ப்பிலேயே தன் மீது ஏற்பட்டிருந்த அவநம்பிக்கைகளை தவிடு பொடியாக்கி அதே திரைத் துறை ஜாம்பவான்களால் உலகம் இது போன்ற நடிப்பிமையத்தின் சிகரங்களை இதுவரை கண்டதில்லை இனிமேலும் காணப் போவதில்லை என்று போற்றிப் புகழும் நிலைக்கு தனது ஒப்பில்லாத நடிப்புத் திறனை நிரூபித்தவர் நடிகர்திலகம் !!