-
இந்த வாரம் 14.6.2019. வெள்ளிமுதல் சென்னை. அகஸ்தியா ஏ.சி.டி.டி.எஸ் 70.M.M.திரையரங்கில் புரட்சித்தலைவரின் காவல்காரன் இரவு 6.30.மணிக்காட்சி சென்னை.பாலாஜி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் கலங்கரைவிளக்கம் தினசரி.4.காட்சிகள் கோவை.சண்முகா மக்கள்திலகத்தின் பணக்காரக்குடும்பம் தினசரி.4.காட்சி சிவகாசி.லட்சுமி.ஏ.சி. கலையரசரின் அடிமைப்பெண் தினசரி.4.காட்சிகள் வெற்றிப்பவனி திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர்மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம்சார்பாக இதயங்கனிந்த உள்ளம்மகிழ்ந்த நல்வாழ்த்துக்களை யும் நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன் மதுரை எஸ்.குமார்............. Thanks wa.,
-
கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு.
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.
Ithayakkani S Vijayan.......... Thanks wa.,
-
நமது உடன்பிறவாத சகோதரர், அருமைக்குரிய
M. குமார் அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என்பதை மிகவும் வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு முப்பத்தெட்டு வருட பழக்கத்துக்கு சொந்தக்காரர். இதுவரை அவர் யாரிடமும் கடு ஞ்சொல் பேசி சண்டை செய்தது கிடையாது. தலைவர் மற்றும் கட்சியைப்பற்றி யார் விமர்சனம் செய்தாலும், எந்த இடமாக இருந்தாலும் தகுந்த பதிலடி கொடுக்கத் தவறாதவர். இவரைப்போல ரசிகர்களை இழப்பது, தலைவருக்கே பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி சென்னையில் எங்கு நடந்தாலும் குமார் அங்கு இல்லாமல் இருக்கமாட்டார். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொலைபேசியில் நான் பேசாவிட்டாலும், அவர் தவறாமல் பேசி விடுவார். அப்படிப்பட்ட சகோதரரை இன்று அவர் பேசாமல் படுத்து உறங்கியதை பார்த்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
அந்த அருமை சகோதரர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........... Courtesy : wa ,
-
இரங்கல் செய்தி .
--------------------------
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை உறுப்பினரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் தீவிர பக்தரும் ஆகிய திரு.வெற்றிலை குமார் என்பவர்
உடல்நல குறைவால் நோய்வாய்ப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 11.30 மணியளவில் காலமானார் .அவருக்கு வயது 60. பழகுவதற்கு இனியவர். அனைவரையும் சார்
என்று பெயருடன் மரியாதையாக அழைத்து பேசும் பழக்கமுடையவர் .
அன்னாரது பூத உடல் சென்னை திருவான்மியூரை அடுத்த வெட்டுவாங்கேணியில்
உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது .அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர் .திரு.குமார். அவர்களை பிரிந்து வாடும்,அவரது மனைவி, மகன்கள், குடும்பத்தினருக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் நானும் திரு.பாண்டியராஜும் இன்று காலையில் இறுதி அஞ்சலி செலுத்திய பின் இரங்கலையும் , ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டோம் .திரு.குமார் அவர்களது ஆன்மா சாந்தி அடைய அவர் பூஜித்த இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
ஆர். லோகநாதன் .
-
தற்போது கோவை சண்முகாவில் வெற்றிநடை போடுகிறது .
http://i64.tinypic.com/2prwkz6.jpg
-
தற்போது சென்னை அகஸ்தியாவில் தினசரி மாலை காட்சியில் வெற்றிகரமாக
நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/263e9tu.jpg
-
வெள்ளி முதல் (14/06/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/5d9uzt.jpg
-
-
-