I think Gnanaparavai got released with Dharmadurai and vaigasi poranthachu. I still remember manaroma's interview in DD. she said it was her previlege to act with NT.
Printable View
I think Gnanaparavai got released with Dharmadurai and vaigasi poranthachu. I still remember manaroma's interview in DD. she said it was her previlege to act with NT.
Surprise news!!!!Quote:
Originally Posted by Murali Srinivas
Not to act with, but to be paired with NT. It was first time for her.Quote:
Originally Posted by Avadi to America
Gnanaparavai is indeed a very strange film. NT plays some kind of mystical figure, someone who didnt even exist. The supporting cast were bad, though.
Also to be noted, this film brings back the old VV Sundram/NT/MSV combination. And yes, it has TMS too and Aanavam Kollathey Ngana penney song sounds like it was take from a time capsule.
If I remember right, NT's character in gnanap paravai was said to be drawn from Yagava Munivar!
Murali Sir,
Great compilation work of all NT films. Few more to come.
I would like to mention that Director Bharathan's first film in Tamil was "Aavaarampoo" (Actors: Vinith, Naasar, Koundamani, Music by Ilayaraja) and "Devar Magan" might be his second.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நான்
அனேகம் படங்களுக்கு எழுதியது பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்
ஆகவே இதை உலகறியச் சொல்லுகிறேன்
நான் எம் ஜி ஆர் அவர்களுக்கு 63 படங்களுக்கு எழுதி இருக்கிறேன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 66 எழுதி இருக்கிறேன்
இதில் எனக்கும் சிவாஜி அவர்களுக்கும் பிடித்த பாடல்
கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கிய 'பேசும் தெய்வம் என்னும்
படத்தில் 'அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ என்கிற* பாட*ல்
கே வி ம*ஹாதேவ*ன் அவ*ர்க*ள் இசைய*மைத்த*து
டி எம் சௌந்த*ர*ராஜ*ன் பி சுசீலா அவ*ர்க*ள் பாடிய*து
இதில் சிவாஜி அவ*ர்க*ளும் ப*த்மினி அவ*ர்க*ளும் ந*டித்தார்க*ள்
சிவாஜி அவ*ர்க*ளுக்கு அந்த*ப் பாட*லின் ச*ர*ண*ங்க*ள் வெகுவாக*ப் பிடிக்கும்
என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதைச் சொல்லி பாடித்தான் எனை வ*ர*வேற்பார்
என*க்கும் மிக*வும் பிடித்த* பாட*ல*து
song with Poet Vaali's intro
http://music.cooltoad.com/music/song.php?id=393549
regards
தேங்காய் சீனிவாசனின் கிருஷ்ணன் வந்தான் படம் பற்றி இங்கு சொல்ல வேன்டும்.
தேங்காய்க்கு உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது அவரைப்பார்க்கச்சென்ற நடிகர்திலகத்திடம், தேங்காயின் மனைவி, உங்களை வச்சு படம் தயாரிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறார் என்ரு சொன்னபோது, அதற்கு நடிகர்திலகம் இப்போ இண்டஸ்ட்ரியே சரியில்லையேம்மா. இப்போ ஏன் ரிஸ்க் எடுக்க விரும்பறான்? என்று கேட்க, அதற்கு தேங்காய், அப்படி சொல்லாதீங்க உங்களை வச்சு ஒரு படமாவது நான் எடுத்துடனும்னு ஆசையா இருக்கேன் என்றார்.
அப்படி நீ இவ்வளவு தூரம் பிடிவாதமா இருந்தீன்னா, உன்னுடைய படத்துக்கு நான் பணம் வாங்கமலே நடிச்சு த்ர்ரேன் என்று சொன்ன நடிகதிலகம் கிருஷ்னன் வந்தான் படத்துக்காக ஒத்தை ரூபாய் கூட வாங்காமல் இலவசமாக நடிச்சு கொடுத்தார்.
இத்தனைக்கும் நிறைகுடம், சிவந்த மண், சுமதி என் சுந்தரி ஆகிய படங்களில் நடிகர்திலகத்துடன் நடித்த தேங்காய், 1971 தமிழ்ப்புத்தாண்டு முதல் 1977 தீபாவளி வரை ஆறரை ஆன்டுகள் நடிகர்திலகத்துடன் இணைந்து நடிக்காத காலத்தில் அவரை மிகக்கடுமையாக விமர்சித்தவர் தேங்காய் சீனிவாசன். இருந்தாலும் அனைத்தையும் மறந்த நடிகர்திலகம், தனது சொந்தப்படமான அண்னன் ஒரு கோயில் மூலமாகவே மீண்டும் வாய்ப்புக்கொடுத்தார். அண்ணன் ஒரு கோயிலைத்தொடர்ந்து, அந்தமான் காதலி, தியாகம், பைலட் பிரேம்நாத், ஜஸ்டிஸ் கோபிநாத், திரிசூலம், இமயம், நான் வாழ வைப்பேன் . என்று தொடர்ந்து அத்தனை படங்களிலும் தேங்காய்க்கு வாய்ப்புக்கொடுத்ததுடன், கடைசியில் அவருடைய சொந்தப்படத்தையும் இலவசமாக நடித்துக்கொடுத்த பண்பாளர் நடிகர்திலகம்.
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் -1993
1. முதன் முதலாக இயக்குனர் மனோபாலா நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய படம் -பாரம்பரியம்
2. நடிகர் திலகத்துடன் சரோஜா தேவி, நிரோஷா போன்றவர்கள் இணைந்து நடித்த பாரம்பரியம் தீபாவளி நாளன்று (13.11.1993) வெளியானது.
வருடம் -1995
3. நடிகர் திலகத்தோடு மீண்டும் பாரதி ராஜா இணைந்த படம் - பசும் பொன்.
4. முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த படம் - பசும் பொன்.
5. நடிகர் திலகத்துடன் பிரபு, சிவகுமார் மற்றும் ராதிகா இணைந்து நடித்த பசும் பொன் 14.04.1995 அன்று வெளியானது.
வருடம் -1997
6. நடிகர் திலகத்துடன் முதன் முதலாக விஜய் இணைந்த நடித்த படம் ஒன்ஸ் மோர்.
7. இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் தயாரிக்க S.A. சந்திரசேகர் இயக்கிய படம் ஒன்ஸ் மோர்
8. 1997 ம் வருடம் ஜூலை மாதம் 3 ந் தேதி நடிகர் திலகத்திற்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு மறு தினம் (04.11.1997) வெளியான ஒன்ஸ் மோர் 100 நாட்களை கடந்து ஓடியது.
9. சென்னை M.M. திரையரங்கில் அதிக நாட்கள் (133) ஓடிய படம் ஒன்ஸ் மோர்.
10. நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் திலகம் நடித்த மலையாள படம் ஒரு யாத்ரா மொழி
11. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் மோகன்லால் இணைந்து நடித்த படம் ஒரு யாத்ரா மொழி.
12. பிரதாப் போத்தன் இயக்கிய ஒரு யாத்ரா மொழி 07.08.1997 அன்று வெளியாகி மெயின் சென்டர்களான திருவனந்தபுரம், எர்ணாகுளம். கோழிகோடு, திருச்சூர், பாலக்காடு, கொல்லம் போன்ற ஊர்களில் 70 நாட்கள் ஓடியது.
வருடம் -1998
13. இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க இதயத்தினுள்ளில் பேஸ் மேக்கர் (pace maker) பொருத்தப்பட்டிருந்த நிலையிலும், தான் அது வரை ஏற்காத வேடம் என்பதால் தலையில் கரகம் வைத்து ஆடும் நாட்டுப்புற கலைஞனாக தன்னுடைய 70-வது வயதில் நடிகர் திலகம் நடித்த படம் என் ஆச ராசாவே.
14. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் முரளி, ராதிகா, ரோஜா போன்றவர்கள் நடித்த என் ஆச ராசாவே 28.08.1998 அன்று வெளியானது.
வருடம் -1999
15. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் அர்ஜுன் இணைந்த படம் மன்னவரு சின்னவரு.
16. கலைப்புலி தாணு தயாரிப்பில் பி.என். ராமச்சந்தர் இயக்கிய மன்னவரு சின்னவரு 15.01.1999 அன்று வெளியானது.
17. நடிகர் திலகமும் ரஜினியும் கடைசி முறையாக இணைந்த படம் படையப்பா.
18. முதன் முதலாக கே. எஸ்.. ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த படம் - படையப்பா.
19. முதன் முதலாக நடிகர் திலகம் நடித்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த படம் - படையப்பா [நடிகர் திலகத்திற்கு பாடல் காட்சி இல்லையென்றால் கூட]
20. நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் தோன்றிய படையப்பா மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
21. 10.04.1999 அன்று வெளியான படையப்பா 88 அரங்குகளில் 100 நாட்களும் 6 அரங்குகளில் வெள்ளி விழாவும் கொண்டாடியது
22. நடிகர் திலகத்தின் நடிப்பாளுமையை மூவீ காமிரா கடைசி முறையாக உள் வாங்கிக்கொண்ட படம் - பூ பறிக்க வருகிறோம்.
23. இளைய தலைமுறையை சேர்ந்த ஏ. வெங்கடேஷ் இயக்க, இன்றைய நாயகர்களில் ஒருவரான விஷாலின் அண்ணன் அஜய், மாளவிகா மற்றும் நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்த பூ பறிக்க வருகிறோம் 17.09.1999 அன்று வெளியானது.
நடிகர் திலகத்தின் புதிய படங்கள் இதற்கு பிறகு வெளி வராமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சாகா வரம் பெற்ற படங்கள் தமிழகத்தின் பல நகரங்களிலும், சிற்றூர்களிலும் இன்றும் திரையிடப்படுகின்றன. அவை சாதனைகளை புரிந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் படங்களும் அவற்றை திரையிட திரையரங்குகளும் இருக்கும் வரை அவரது சாதனைக்கு முடிவேது?
அன்புடன்
PS: இந்த தொடரை பற்றிய ஒரு பின்னுரை விரைவில்
21. 10.04.1999 அன்று வெளியான படையப்பா 88 அரங்குகளில் 100 நாட்களும் 6 அரங்குகளில் வெள்ளி விழாவும் கொண்டாடியது
i just want to add one more info. padayappa ran 100 Days - 123 Centres in total
86 centers in Tamil Nadu
34 centers in Andhra
1 center in kerala
1 center in karnataka
1 center in mumbai
:2thumbsup:
RAJINI told in a recent interview that if he did not produce padayappa he would not have got chance to interact much with NT.
Murali sir,
Excellent work. Though I was not *that* interested in numbers, I was bowled over by the amount of information you were able to furnish with each and every movie :clap: Looking forward to the pinnurai!