-
சகோதரி சாரதா அவர்களின் நூற்றுக்கு நூறு திரைப்படப் பதிவின் மூலம் நூறு வெற்றிகரமான பதிவுகளைக் கண்டுள்ள மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் புகழ் பரப்பும் இத்திரி , மென்மேலும் ஜெயக்கொடிகளை நாட்ட வாழ்த்துக்கள் !
சாரதா அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள் !!
இத்திரி, ஜெய் பற்றிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது, விளங்கப் போகிறது என்பது திண்ணம் !!!
அன்புடன்,
பம்மலார்.
-
நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்ற மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றிய இந்தத் திரி நூற்றுக்கு நூறு வரவேற்புப் பெற்றுள்ளது என்பதற்கு இந்த குறுகிய காலத்திற்குள்ளாக எண்ணிக்கை நூறைத் தாண்டியதே சான்று. மக்கள் கலைஞர் அவர்களின் படங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் தாங்களும், அப்படங்களின் சாதனை உள்ளிட்ட தகவல்களை பம்மலாறாகப் பெருக்கெடுத்து ஓடும் அளவிற்கு இங்கு உள்ளீடு செய்யும் பம்மலாரும் மேலும் மேலும் பல நூறுகளைப் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்
-
வெள்ளிக்கிழமை ஹீரோவின் 1969-ம் ஆண்டு வெள்ளித்திரைக் காவியப்பட்டியல் :
(திரைக்காவியம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. அன்பளிப்பு - 1.1.1969 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி
2. அக்கா தங்கை - 28.2.1969 - பிளாசா, பிராட்வே, ராக்ஸி, நூர்ஜஹான் (100 நாட்கள் ஓடிய சூப்பர்ஹிட் படம்)
3. நில் கவனி காதலி - 7.3.1969 - மஹாராணி, கிருஷ்ணவேணி, சித்ரா (14.3.1969), சயானி(14.3.1969)
4. பூவா தலையா - 10.5.1969 (100 நாட்கள் ஓடிய நல்ல வெற்றிப்படம்)
5. ஆயிரம் பொய் - 11.7.1969 - கெயிட்டி, முருகன், சயானி, சீனிவாசா
6. மகனே நீ வாழ்க - 25.7.1969
7. பெண்ணை வாழ விடுங்கள் - 1.8.1969
8. கன்னிப்பெண் - 11.9.1969 - பாரகன், கிருஷ்ணா, மஹாலட்சுமி
9. நான்கு கில்லாடிகள் - 25.9.1969 - கெயிட்டி, அகஸ்தியா, நூர்ஜஹான்
10. பொண்ணு மாப்பிள்ளை - 26.9.1969 - சித்ரா, பிராட்வே, கிருஷ்ணவேணி, சரவணா
11. மனசாட்சி - 9.10.1969 - குளோப், ஜெயராஜ், மஹாலட்சுமி, மஹாராஜா
12. மன்னிப்பு - 28.11.1969
13. அத்தை மகள் - 11.12.1969
குறிப்பு :
1. அன்பளிப்பு, நடிகர் திலகத்துடன் மக்கள் கலைஞர் இணைந்த முதல் திரைப்படம்.
2. நில் கவனி காதலி திரைப்படம், 7.3.1969 அன்று மஹாராணியிலும், கிருஷ்ணவேணியிலும் வெளியானது. சித்ராவிலும், சயானியிலும், ஒரு வாரம் கழித்து 14.3.1969 அன்று வெளியானது.
அன்புடன்,
பம்மலார்.
-
சிறு வயதில் நான் பார்த்து ரசித்த சில படங்கள் ஜெய் நடித்தவை (துணிவே துணை, கல்யாணமாம் கல்யாணம், இது எப்படி இருக்கு, ஒரே வானம் ஒரே பூமி, enga paattan soththu போன்றவை).
பஞ்சு அவர்கள் தனது படங்களையே ரீமேக் செய்வதில் கில்லாடி. பிரபு, ராதிகா நடித்த மணமகளே வா படத்தை முதலில் பார்த்த போது இப்படத்தின் கதை முன்பே பார்த்தது போல தோன்றியது. மூளையை ரொம்ப கசக்கி பார்த்த போது (இது போன்ற விஷயங்களுக்கு நம்ம மூளை நன்றாகவே ஒத்துழைக்கும்) கல்யாணமாம் கல்யாணம் படத்தின் உல்டா என்பது புரிந்து போனது!
ஜெய் பாத்திரத்தை ராதிகாவுக்கும் ஜெய்சித்ரா பாத்திரத்தை பிரபுவிற்க்கும் (பாத்திரத்தின் தன்மை சிறிது மாற்றப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்) மாற்றி கொடுத்திருப்பார். அந்த படத்தின் சில பல நிகழ்வுகள் இதிலும் அப்படியே பார்த்ததாக ஞாபகம்.
-
சகோதரி சாரதா அவர்களுக்கு,
நல்ல படத்தை தேடிப் பிடித்து பக்ரீத் ஸ்பெஷலாக அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். கிழக்கும் மேற்கும் என்று தான் முதலில் பெயர் வைத்து பூஜை போட்டனர். ஆனால் என்ன காரணத்தாலோ சந்திக்கின்றன என்று சேர்த்து விட்டனர். சவாலே சமாளி படத்தைத் தொடர்ந்து மல்லியம் ராஜகோபால் அவர்கள் கிழக்கும் மேற்கும் என்ற பெயரில் நடிகர் திலகத்தை வைத்து பூஜை போட்டார். சவாலே சமாளி 150வது திரைப்பட மதி ஒளி மலரில் பின் அட்டையில் விளம்பரமும் வந்தது. அந்த படம் தொடரப்படாததால் அந்தத் தலைப்பினை இவர்கள் வைத்தனர். இப்படம் தேவி பேரடைஸில் நன்றாகப் போனது. வாணி ஜெயராமின் குரலில் சந்திர பிறை பார்த்தேன் பாடல் மிகப் பிரபலமானது. மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் திரையுலக சரித்திரத்தில் இப்படத்திற்குத் தனியிடம் உண்டு. அருமையான படம். நினைவூட்டியமைக்கும் வாய்ப்புக்கும் நன்றி.
ராகவேந்திரன்
-
Thank you very much saradha for this review. Ofcourse I have heard about this film but didnīt had the oppurtunity to watch it. Seems like a very good movie.
-
chandira pirai paarthen is a wonderful song
-
saradha madam..
review ezhudhuvadharkkaga meendum oru murai padam parkkireergala.. illai.. munbu parthadhin ninaivugalai veithu ezhudhugireergala?
anaithayum padaikka neram kidaippadhillai... irundhalum Jai & Ravi ... iru thirigal "to be readed" enru manadhukkul note panni veithirukkiren :)
-
dear saradha,
nandrgal pala .. ennudaya viruppamana nadigar patriya thiri thuvangiyadharku..
Naangu killadigalil - Nenjukku nimmadhi paadalum migavum prabalamana paadal
-
சாரதா,
டாக்சி டிரைவர் படத்தில் சுகமான சிந்தனையில் இதமான உறவோடு என்ற அருமையான டூயட் பாடலை [எஸ்.பி.பி. - ஜானகி] மறந்து விட்டீர்களே !
அன்புடன்