Quote:
Originally Posted by genesis
ஷாஜி கிட்டத்தட்ட இளையராஜாவை பற்றின என் கருத்தை தெரிவித்துள்ளார். அவரை புகழ வேண்டிய காரணங்களுக்காக புகழ்ந்து, குறைகைளையும் சுட்டி காட்டியுள்ளார். இந்த கட்டுரையில் 2 - 3 தவறுகள் உள்ளன என்பது உண்மை தான், அனால் அதை காட்டியே முழு கட்டுரையையும் தவறு என்று சொல்வது சரியல்ல. அவர் எதிர் பார்த்த மாதிரியே இளையராஜா பக்தர்களுக்கு இந்த கட்டுரையை படித்தால் கோபம் வருவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
இது topic ஐ விட்டு விலகி இருந்தால் கூட ஷாஜியின் கட்டுரையை பற்றிய ஒரு அபிப்ராயம் சொல்ல விரும்புகிறேன். ஷாஜி இசை பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும் இசை தவிர்த்த அவரது பேச்சுக்கள் எந்த விதத்திலும் அவரது இசை வெளிப்பாட்டை பாதிக்கவில்லை என்பது உறுதி அப்படி இருக்கும் போது இந்த இரண்டையும் இணைப்பது அவரது நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு துளி கூட அன்பே இல்லாத மற்றவர்களை அலட்சிய படுத்தும் மனப்பாவம் கொண்டவர் ராஜா என்பது கட்டுரையின் ஒரு சரடு ஒரு வாதத்திற்காக இது உண்மை என்று வைத்து கொண்டாலும் இந்த குணாதிசயங்கள் எந்த விதத்தில் அவரது இசை அமைக்கும் தன்மையை பாதித்தது என்பதை கூற வேண்டும் ஏறக்குறைய இது freudian ஆய்வை ஒத்தது. அந்த அளவுக்கு நமக்கு ஆய்வு செய்ய தகுதி உள்ளதா என்பதே கேள்விகுறி.
இன்னும் ஒரு நூற்றாண்டை கடந்து இந்த மாதிரியான அவதூறுகள் அவற்றை பரப்பி ஆனந்தம் கண்டவர்கள் எல்லாம் மறைந்த பின்னாலும் ராஜாவின் இசை நிலைத்து நிற்கும். அதில் கடலவு அன்பும் இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் நாட்டுப்புற இசையின் மீதும் அவர் கொண்டிருந்த காதலும் வெளிபட்டுகொண்டே இருக்கும் . ஜே மோ சொல்வதை போல இசை ரசிகர்கள் காலம் முழுதும் அதை தேடி வந்து கொண்டே இருப்பார்கள். இந்த மண்ணின் ஆத்மாவை தன் இசையால் கண்டடைந்த கலைஞனை நம் சிறுமைகளால் அளவிட கூடாது.