Madhu,
முதல் பக்கத்தில், முதல் போஸ்டுக்கு கீழே 'Index of songs' irukku paarunga! :)
http://forumhub.mayyam.com/hub/lyrsort.php?t=14891
Printable View
Madhu,
முதல் பக்கத்தில், முதல் போஸ்டுக்கு கீழே 'Index of songs' irukku paarunga! :)
http://forumhub.mayyam.com/hub/lyrsort.php?t=14891
பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மஹராணி
திரைப்படம்: தீபம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & எஸ்.ஜானகி
அந்தப்புரத்தில் ஒரு மஹராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மஹராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ
அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்
சங்கு வண்ணக் கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ணக் கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காளை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்
அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்
அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...ஆராரி...ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ
பாடல்: வைகை நீராட
திரைப்படம்: சின்னஞ்சிறு கிளியே
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகளாட
மடியில் எனை நீ தாலாட்ட
வைகை நீராட
உனக்கென நானும் எனக்கென நீயும்
படைத்தவன் வானம் பறந்துவிட்டானா
ஆஆஆ ஆஆஆ ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ
விழிகளில் தோன்றி
விழிகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீரும்
மறையும் கண்ணே உன் முகம் பார்த்தால்
மறப்பேன் உலகை உன்னுடன் சேர்ந்தால்
வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகளாட
மடியில் எனை நீ தாலாட்ட
வைகை நீராட
மறுமுறை நானும் பிறந்திட வேண்டும்
மஞ்சள் குங்குமம் நீ தர வேண்டும்
ஆஆஆ ஆஆஆ ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ
இனி வரும் ஜென்மம்...ம்ம்ம் ம்ம்ம்
இனி வரும் ஜென்மம் எந்நாளும் ஒன்றாக
இணையும் வரமே இறைவனைக் கேட்பேன்
இனிமை நினைவில் உன்னுடன் வாழ்வேன்
வைகை நீராட...ஆஆ ஆ
வானில் தேரோட...ஆஆ ஆ
மனதினில் நீயாட மாலைகளாட...ஆஆ ஆஆ
மடியில் எனை நீ தாலாட்ட...ஆரீரோ ஆராரோ
ஆரீரோ ஆராரோ...ஆரீரோ ஆராரோ
வைகை நீராட rare # priya :)
சின்னஞ்சிறு கிளியே movie lyrics by Gangai Amaran
Regards
பாடல் :வசந்தமும் நீயே
படம் : கண்ணீர்ப் பூக்கள்
பாடியவர் : எஸ்.ஜானகி
இசை : சங்கர் - கணேஷ்
வசந்தமும் நீயே... மலர்களும் நீயே
இளமாலையில் விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே
(வசந்தமும்)
மாலை நான் மலரானவள்
மார்பில் தேன் நதியானவள்
நாளும் நீ அதில் நீந்தவும்
தேடும் ஓர் கரை காணவும்
நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள் தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும்.. மருவுவதும்..
நூறாண்டு காலங்கள் நாம் காணலாம்
(வசந்தமும்)
ஆடை ஏன் கலைகின்றது
ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது
தேகம் ஏன் சுடுகின்றது
ஏன் இந்த மாயங்கள் யார் தந்தது
ஈரேழு ஜன்மங்கள் எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள் இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ..
(வசந்தமும்)
தீபங்கள் எரிகின்றன
தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது
ஆனந்தம் வருகின்றது
செவ்வானம் தேன் மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில் இசை எழுந்தது துயில் கலைந்தது
உயிர் கலந்தது தனை மறந்தது
காணாத பேரின்பம் நான் காண்கிறேன்
(வசந்தமும்)
arumai madhu , Pulamaipithan wrote 'வசந்தமும் நீயே
Regards
(Lyrics section நடுவில் இப்படி ஒரு கட்டுரை எழுதியமைக்காக 'பிரியா, மது, மற்றும் tfmlover' மன்னியுங்கள். ஆனால் எழுதியே தீர வேண்டும்)Quote:
Originally Posted by priya32
'நினைத்தால் போதும் பாடுவேன்' அருமையான தேர்வு.
உண்மைதான். சில படங்களில் ஒருசில பாடல்கள் ஓகோ என்று HIT ஆகும்போது, சில நல்ல மெலோடியஸ் பாடல்கள் பின்னால் தள்ளப்படுவது வாடிக்கை.
உதாரண்மாக 'எங்க வீட்டுப் பிள்ளையி'யில் "நான் ஆணையிட்டால்" பாடல் சூப்பர் HIT ஆக, அதைத்தொடர்ந்து 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாடலும் 'குமரிப்பண்ணின் உள்ளத்திலே' பாடலும் மக்களால் பேசப்பட, அருமையான மெலோடியான 'மலருக்கு தென்றல் பகையானால்' பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டது.
அதுபோலவே, குடியிருந்த கோயில் படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்ட்" சூப்பர் HIT ஆக, தொடர்ந்து 'துள்ளுவதோ இளமை', பின்னர் 'நான்யார் நான்யார்', 'நீயேதான் எனக்கு மணவாட்டி' மற்றும் 'என்னைத்தெரியுமா' பாடல்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்க, அருமையான மெலோடியான "குங்குமப்பொட்டின் மங்கலம்" பாடல் நிழலில் தள்லப்ப்பட்டது.
நான் மேற்சொன்ன பாடல்களில் எந்த ஒன்றும் அடுத்ததற்கு சளைத்ததல்ல. அத்தனையுமே தேன் சொட்டும் பாடல்களே. ஆனால் ரேஸில் ஓடும்போது சில நல்ல பாடல்கள் பின் தங்கி விடுகின்றன (அல்லது தங்க வைக்கப்படுகின்றன).
அப்படி ஒரு நிலைமைதான் 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் இடம் பெற்ற "நினைத்தால் போதும் பாடுவேன்" என்ற அற்புதப் பாடலுக்கும் நேர்ந்தது. ஏன் அப்படி?. கதாநாயகனும் கதாநாயகியும் இடம் பெறாத பாடல் என்பதாலா?.
தமிழ்த்திரையிசையிலேயே வித்தியாசமாகப் படமாக்கப்பட்ட "பூ முடிப்பாள் இந்தப்பூங்குழலி" பாடலுக்கும், அருமையான டூயட் பாடலான 'முத்துக்களோ கண்கள்' பாடலுக்கும் (இன்றும் இந்தப்பாடலைப்பாடாத மேடை ஆர்க்கெஸ்ட்ராக்களே கிடையாது), சோகத்தைபிழிந்து தரும் 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு' பாடலுக்கும் நடுவே
'கண்னன் வரும் நேரமிது' பாடலும்
'நினைத்தால் போதும் பாடுவேன்' பாடலும்
சற்று ஒதுக்கி வைக்கப்பட்டன என்பது வேதனையான உண்மை.
ஆனால் தரத்தில் எந்தப்பாடலுக்கும் இவை குறைந்தவை அல்ல.
'மெல்லிசை மன்னரின்' இசையில் எஸ்.ஜானகி அவர்கள் பாடிய ஏராளமான அருமையான பாடல்களில் ஒன்று இது. (மெல்லிசை மன்னரின் இசையில் ஜானகி அவர்கள் பாடிய இசைக்கடலின் சில துளிகளை வேறொரு இடத்தில் பட்டியலிட்டிருக்கிறேன். காரணம், எந்த தொலைக் காட்சியில் யார் தோன்றி எஸ்.ஜானகியைப் பற்றிப் பேசினாலும் 'எஸ்.ஜானகி என்ற ஒரு பாடகி பிறந்ததே 1976க்குப்பின் தான் என்பது போன்ற ஒரு திட்டமிட்ட மாயை பரப்பப் பட்டு வருகிறது).
எடுத்த எடுப்பிலேயே பஞ்சமத்தில் துவங்கும் பாடல் இது.
நினைத்தால் போதும் பாடுவேன்
அனைத்தால் கையில் ஆடுவேன்
(அப்படியே ஸ்தாயி இறங்கி)
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்னை மாற்றுவேன்
தொடர்ந்து இடையிசையில் சிதார் மற்றும் ஃப்ளுட் உடன் தபேலா. சட்டென்று இவை நின்று (சிவாஜி துப்பாக்கியுடன் ஓடிவரும் காட்சியை காட்டும்போது) வெறும் வயலின் மட்டும், பின்னர் காட்சி மாறி கீதாஞ்சலியின் நடனத்தைக் காட்டும்போது மீண்டும் ஃப்ளூட் மற்றும் தபேலா, மீண்டும் அதே பிட்டை வயலினில் வாசித்து நிறுத்த, சோலோவில் தபேலா, தொடர்ந்து ஜானகியின் நீண்டHUMMING சட்டென்று வயலின் அழுத்தலோடு பாடல் சரணத்துக்குள் நுழைய..... அப்பப்பா என்ன ஒரு இடையிசை....!!!!
பாலின் நிறம் போன்ற அழ்கான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும்போது எல்லோர்க்கும் சொல்ல
ஆகா... எஸ்.ஜானகியின் குரலில்தான் என்னென்ன மாடுலேஷன்கள். மெட்டமைத்தவர் யார். மெல்லிசை மன்னரல்லவா?
பாடலின் இறுதியில் வரும் நீண்ட வயலின் மற்றும் ஜானகியின் நீண்ட HUMMING படத்தில் இடம் பெற்றிருந்தபோதிலும், சிவாஜி கே.ஆர்.விஜயாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தொலைவில் ஒலிப்பதாக காட்டப் படுவதால், சற்று மாற்றுக் குறைந்து விடுகிறது.
ஸ்ரீதர் ஏன் இப்படி செய்தார் என்பதுதான் விளங்கவில்லை.
இப்பாடலில் கீதாஞ்சலியின் நடனம் கண்ணுக்கு அருமையான விருந்து. அதுவும் ஒரே ஷாட்டில் அவர் சுழன்று சுழன்று ஆடும்போது அருமையோ அருமை.
Song : Kaatchiyum Neethaan Kartpanaiyum Neethaan
Movie : Ennaippaar
Music : T G Lingappaa
Lyric : Thanjai N. Ramiah Dass
SJ with T R Mahalingam
ஆஆஆ..ஆஆஆ..ஆஆ..
காட்சியும் நீதான்
கற்பனையும் நீதான்
கண்வழியே புகுந்து
கருத்தினிலே விளையாடும்
காட்சியும் நீதான்...
நெஞ்சின் நினைவில் வந்து
நேசக் கதை பேசும்
கொஞ்சும் மொழியாலே
காதல்வலை வீசும்
காதல்வலை வீசும்
அழகின் பிம்பமே
அழியா இன்பமே
ஆசைக் கடலினிலே
அலையெனவே விளையாடும்
காட்சியும் நீதான்..
தென்றல் குழுமைதனை
பார்வையிலே காட்டும்
தேனின் இனிமைதனை
சொல்லினிலே கூட்டும்
தேனின் இனிமைதனை
சொல்லினிலே கூட்டும்
பெண்கள் திலகமே
எந்தன் உலகமே
இன்பம் நான் பெறவே
என் மனதில் விளையாடும்
காட்சியும் நீதான்..
முழங்கு இசையமுதால்
உள்ளமதை தீண்டும்
முல்லை மலர் சிரிப்பால்
புது உணர்வைத் தூண்டும்
முத்தமிழ் செல்வமே
மோகனவே வடிவமே
சித்திரம்போல் படிந்து
சிந்தனையில் விளையாடும்
காட்சியும் நீதான்
கற்பனையும் நீதான்
கண்வழியே புகுந்து
கருத்தினிலே விளையாடும்
காட்சியும் நீதான் !
Song : Pournami Nilavil
Movie : Kannippenn
Music : MSV
Lyric : Vaali
SJ with SPB
பௌர்ணமி நிலவில்
பனிவிழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
கதைகதையாக படிப்போமா
கதைகதையாக படிப்போமா
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ ம*துரையிலே
பிள்ளைத் த*மிழோ ம*ழ*லையிலே
நீ பேசும் த*மிழோ விழிக*ளிலே
நெஞ்ச*ம் முழுதும் க*விதை எழுது
கொஞ்சும் இசையை ப*ழ*கும் பொழுது
துள்ளும் இள*மைப் ப*ருவ*ம் ந*ம*து
தொட்டுத் த*ழுவும் சுக*மும் புதிது
கண்பார்வையே உன் புதுப் பாடலா?
பொன்வீணையே உன் பூமேனியோ
பிள்ளைப்பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னிபருவம் என்வடியில்
காலம்முழுதும் உன் மடியில்
பன்னீர் மழைதான் விழிமேல் பொழிய*
தண்ணிர் அலைபோல் குழல்போல் நெளிய*
தன்னம்தனிமை தணல்போல் கொதிக்க*
தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க*
பொன்னோவியம் என் மனமேடையில்
சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்
பௌர்ணமி நிலவில்
பனிவிழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
கதைகதையாக படிப்போமா
கதைகதையாக படிப்போமா ?
saradhaaji,
Please feel free write details about the songs, so that people like me would benefit reading about the song besides only plain lyric! :)
TFMLover,
Thanks for the details! :)