அநேகமாக பிப்ரவரி 14 - காதலர் தினத்தையொட்டி, காதல் காவியத்தினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Printable View
அநேகமாக பிப்ரவரி 14 - காதலர் தினத்தையொட்டி, காதல் காவியத்தினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Very apt date for the release of this Kadhal Kaviyam.
2013-ல் வெளியாக இருக்கும் காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை சாதனைகள் பல படைக்க வாழ்த்துகிறேன்! இந்த வருடத்தின் வெற்றி பயணத்தை இது துவக்கி வைக்கும் என நம்புகிறேன்!
அன்புடன்
அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய.... தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
2012 நவம்பருக்குமுன்னர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய திரிகள் நாளுக்கு நாள்
விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டு போனது பார்பதற்கும் படிப்பதற்கும்
மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடந்த 3 மாதகாலமாக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் திரிகள்
தொய்வடைந்த நிலை காணப்படுகிறது
கள உறவு பம்மலர் அவர்கள் லைபிரரி ஒன்றில் பழைய பத்திரிகைகளை பார்வையிட்டு முன்னைய சிவாஜி படங்களின்
விபரங்களை சேகரித்திருப்பதாக தகவல் அறிந்தேன் இனி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகள் களை கட்ட
தொடங்கும் என நினைக்கின்றேன்
நான் என்னிடம் இருந்த சில ஆவணங்களை பதிவிட்டேன். மேலும் ஒரு சில ஆவணங்கள் உண்டு அவற்றை பதிவிடலாம் என்றால்
எனது பதிவிடும் பாவனை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நிர்வாகத்திற்கு தனிமடல் அனுப்பியிருந்தேன்
ஆனால் எதுவும் நடக்கவில்லை ஏனைய hub உறவுகள் உதவுவார்கள் என நினைத்தேன் ஆனால் ஒருவருமே இதுபற்றி
எதுவும் செய்யவில்லை.
http://artie.com/veterans_day/arg-rw...07x165-url.gif
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
நீண்ட நாள் ஆவலுடன் காத்திருந்த வசந்த மாளிகை வெளியீடு உறுதி செய்யப் பட்டு விட்டது. இது தொடர்பான அரசு நடைமுறைகள் முடிந்து சான்றிதழ் பெறப் பட்டு விட்டது. 15 அல்லது 22 பிப்ரவரி வெளியாகலாம் என்றும் 8ம் தேதி நாளிதழ் விளம்பரங்கள் வரலாம் எனவும் தகவல்.
காதலர் தினத்தையொட்டி இக்காதல் உச்சக்காவியம் மீளுலா வருவது சாலப்பொருத்தமே..
இனிப்புச்சேதிக்கு நன்றி இராகவேந்திரருக்கு...
வசந்த மாளிகை வெளியீட்டுக் கொண்டாட்டங்கள்
காப்பிக் கோப்பையில் வசந்த மாளிகை .... முப்பரிமாணத்தில்
http://i1146.photobucket.com/albums/...psdba58bd5.jpg
வசந்த மாளிகை நிழற்படங்களின் கலவை - முப்பரிமாணத்தில்
http://i1146.photobucket.com/albums/...ps00b341c5.jpg
அதே நிழற்படம் - சாதாரண வடிவத்தில்
http://i1146.photobucket.com/albums/...psc38f9961.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
முப்பரிமாணத்தில் முத்திரை பதித்து விட்டீர்கள். superb
வண்ணம் கொஞ்சும் வசந்தமாளிகை ஆனந்த்-லதா இணையின் காதல் பரிமாணப் படங்களுக்கு நன்றி இராகவேந்திரர் அவர்களுக்கு..
வாணிஶ்ரீயின் கழுத்துக்கும் நடிகர்திலகம் முகத்துக்கும்தான் எத்தனை பொருத்தம்!
காதல், காதலர், அமர காதல், என்றாலே நினைவுக்கு வருவது தாஜ் மஹல். அங்கே இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியாவது எடுத்திருக்கலாமே என்று எத்தனை பேர் எண்ணியிருப்பீர்கள்... விரும்பியிருப்பீர்கள் ...
இதோ நம் எண்ணம் நிறைவேறுகிறது. தாஜ் மஹல் அருகே ஆனந்த்-லதா ஜோடியின் அழகான தோற்றத்தைக் காணுங்கள். முப்பரிமாணத்திலும் சாதாரண தோற்றத்திலும்.
http://i1146.photobucket.com/albums/...ps639bb992.jpg
http://i1146.photobucket.com/albums/...ps466a21dc.jpg
வெண்மாளிகைமுன் செந்தாமரைக்கு
நிலவைக் காட்டும் நிலத்துச் சூரியன்..
பாராட்டுகள் இராகவேந்திரருக்கு!
Superb Photos Mr Raghavendra Sir,
இந்த தாஜ் மஹல் டிசைனில் ஒரு விளம்பரம் வந்தால் எப்படி யிருக்கும். ஒரு சின்ன கற்பனை.
http://i1146.photobucket.com/albums/...pse897fb15.jpg
very nice Ragavendra sir
the fever catches-looking forward to celebrations
தினத்தந்தி 08.02.2013 தேதியிட்ட பதிப்பில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...ps281ac0fd.jpg
கலக்குகிறது விளம்பரம்..
தந்தியின் முதல்பக்கம் வலது மூலையில் தினம் கால்பக்கம் வந்த வசந்தமாளிகை அழகு விளம்பரங்களை தினம் தினம் பார்த்து ரசித்த
பள்ளிநாட்கள் பசுமையாய் இன்னும் மனதில்...
நன்றி ராகவேந்திரா அவர்களே!
காலத்தால் அழிக்க முடியாத சாதனைகளை நடிகர் திலகத்தின் படங்களுக்கு தந்த நான்மாடக்கூடலாம் மதுரையம்பதியில் காலத்தை வென்ற காதல் காவியம் வெளியாக இருக்கும் அரங்குகள்.
மினிப்ரியா
அண்ணாமலை
மதி
கொங்குநாட்டு சீமையின் தலைநகரிலே வெளியாக இருக்கும் அரங்குகள்
தர்சனா
ப்ரூக் பீல்ட்ஸ் [சத்யம்]
பஃன் சினிமாஸ் [Fun Cinema]
அன்புடன்
PS: இது தற்போதைய நிலவரம். இதில் மாறுதல்கள் ஏற்படலாம்
சுடச்சுடத் தகவல்கள்.. சூடு இன்னும் ஏறும்..
இது இன்னொரு கர்ணனாய் மாறும்..
நன்றி திரு முரளி ஶ்ரீனிவாஸ் அவர்களே!
நன்றி மாலை மலர் 12.02.2013 சென்னைப் பதிப்பு மற்றும் அதற்கான இணைய தள இணைப்புQuote:
டிஜிட்டல் கியூப்பில் மாற்றும் பணி முடிந்தது: வசந்த மாளிகை 80 தியேட்டரில் ரிலீஸ்
http://mmimages.maalaimalar.com/Arti...7_S_secvpf.gif
சென்னை, பிப். 12-
சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1972-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வசந்த மாளிகை. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கினார்.
இந்த படம் டிஜிட்டல் கியூப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் மார்ச் 1-ந்தேதி திரையிடப்படுகிறது.
வசந்த மாளிகை பிரிண்ட்கள் 'கியூப்' தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் காட்சிகள் திரையிடப்படும். அத்துடன் ஒலி அமைப்புகள் துல்லியமாக கேட்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் செலவில் இப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.
சிவாஜி நடித்த படங்களில் வசந்த மாளிகை சிறந்த காதல் காவிய படைப்பாக கருதப்பட்டது. இப்படத்தில் இடம்பெறும் மயக்கம் என்ன உந்தன் மவுனம் என்ன, யாருக்காக இது யாருக்காக, இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன், கலைமகள் கைப்பொருளே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன், குடிமகனே பெரும் குடிமகனே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.
இந்த படம் 13 இடங்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. மதுரை நியூ சினிமாவில் 200 நாட்களும், சென்னை சாந்தியில் 176 நாட்களும் ஓடியது.
திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மாயவரத்தில் நடந்த இதன் 100-வது நாள் விழாவில் சிவாஜி கணேசன், சுந்தரராஜன், சி.ஐ.டி.சகுந்தலா, குமாரி, பத்மினி ஆகியோர் ஒரே நாளில் பங்கேற்றனர். அப்போது இவ்வூர்களில் சிவாஜிக்கு வழிநெடுக ரசிகர்கள் திரண்டு அமோக வரவேற்பு அளித்தனர்.
கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்று சிவாஜி ரிஸ்க் எடுத்து நடிக்காத இப்படம் வெற்றிகரமாக ஓடியது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.
http://cinema.maalaimalar.com/2013/0...ished-vas.html
--விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுன்னு சொன்னே... விஷத்தைச் சொல்லலியே
---குடிகாரன் மனம் கூட வருந்தும்படி பேசறது அவங்க மரியாதை.. இதையெல்லாம் சட்டை செய்யாமப் போறதுதான் எனக்குத் தெரிஞ்ச மரியாதை..
--விருப்பமில்லைன்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது...
--இதுதான் இந்த அரண்மனையோட கௌரவம் --இல்ல.. கர்வம்!
--வரமாட்டா.. அவ்வளவு அகம்பாவம்.. ஆனா அவகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்...
--- பாலமுருகன் எழுதி நடிகர்திலகத்தால் சாசுவதமான வசனங்கள் இதுபோல் நிறைய்ய... இக்காவியத்தில்!
ஆவலை அதிகரிக்கிறது மாலைமலரில் வந்த தகவல்..
பதிந்தமைக்கு நன்றி திரு ராகவேந்திரா & திரு கே.சி,அவர்களே..
சற்று முன் வந்த தகவல்
மார்ச் 8 முதல் நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை தமிழகமெங்கும் வெற்றிக் கொடியை மீண்டும் நாட்ட வருகிறது. சென்னை ஆல்பர்ட், அபிராமி, வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகங்கள், பாரத், கிருஷ்ணவேணி ஆகிய திரையரங்குகள் இதுவரை கிட்டத் தட்ட முடிவாகியுள்ளன. மேலும் சில திரையரங்குகள் சென்னையில் இந்தப் பட்டியலில் சேரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் இது பற்றிய முழு விவரம் தெரிய வரும். தமிழகமெங்கும் பல திரையரங்குகள் இப்படத்தைத் திரையிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் படி பார்த்தால் கிட்டத்தட்ட 100 அரங்குகளில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
முறையான விளம்பரம் வரும் வரையில் இதனைப் பார்ப்போமே..
http://i1146.photobucket.com/albums/...ps34c98e29.jpg
ராகவேந்திர சார்
வசந்த மாளிகை 100 திரை அரங்கங்களில் வெளியஹும் என்ற இன்ப செய்திக்கு நன்றி
காதல் வெற்றி பெற வாழ்த்துகள் (கர்ணன் 120 தினங்களை கடந்த சமயம் ஜூலை மாதம் சத்யம் யில் கண்டது போல்
இந்த முறை வசந்த மாளிகை முடிந்தால் நம் நண்பர்கள் உடன் காண வேண்டும் )
Anandai Darisikka Thayaraguvom. Andandam Adaivom.
நடிகர்திலகம் நடிப்பதாய் ஒரு படம் முடிவான பின் , அதன் விளம்பரத்தை நான் கற்பனை செய்து
தரையில் எழுதிப்பார்த்ததுண்டு, சுவரிலும் எழுதிப்பார்ததுண்டு..
அதிகமாய் காகிதத்தில்.. அதற்கும் அதிகமாய் என் மனத்திரையில்..
இன்று திரு ராகவேந்திரா அவர்கள் இணையத்திரையில் அப்படிச் செய்து இதயத்தை நிறைத்துவிட்டார். நன்றி !
doorsteponnet.com
http://doorsteponnet.com/doorAdmin/p...santha%20m.jpg
VASANTHA MAALIGAI IS READY TO HIT THE SCREENS
Legendary actor Sivaji Ganesan starrer 1972 blockbuster, VASANTHA MAALIGAI is restored and the movie will hit the screens all over Tamilnadu on 7th December. The movie will be re-released by the producer Ramanaidu, and the movie ran for 750 days in theatre after its release. After the success of KARNAN, now it’s again Nadigar Thilagam Sivaji Ganesan’s vasantha maaligai, which is a remake of the Telugu hit PREM NAGAR by Nageswara rao and Vanisree played the female lead in both the languages.
tamil.oneindia.in
http://tamil.oneindia.in/img/2013/02...ivaji2-600.jpg
அத்தனை மொழிகளிலும் வெற்றி இந்தக் கதையை வேறு வேறு நடிகர்களை வைத்து, தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் தயாரித்து பெரு வெற்றியைக் குவித்தனர் அன்றைய நாட்களில்.
http://tamil.oneindia.in/img/2013/02...ligai3-600.jpg
ஒஸ்தியான காதல் படம் தமிழில் அன்றைக்கு ஓட்டத்தில் மட்டுமல்ல, வசூலிலும் சாதனைப் படைத்த படம் இது. அருமையான படமாக்கம், காதுக்கினிய பாடல்கள் - இசை, பிரமிக்க வைக்கும் நடிப்பு என அனைத்து வகையிலும் ஒஸ்தியான காதல் படமாகத் திகழ்ந்தது வசந்த மாளிகை.
http://tamil.oneindia.in/img/2013/02...ivaji1-600.jpg
13 இடங்களில் 100 நாட்கள் அன்றைக்கு இந்த படம் 13 இடங்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. மதுரை நியூ சினிமா தியேட்டரில் 200 நாட்களும், சென்னை சாந்தி தியேட்டரில் 176 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in/img/2013/02...ivaji3-600.jpg
இந்த படம் இப்போது டிஜிட்டல் கியூப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. டிஜிட்டலில் கர்ணன் படம் வெளிவந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வசந்த மாளிகை படத்தையும் டிஜிட்டல் கியூப்பில் மாற்றியுள்ளனர். இதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் மார்ச்-ல் திரையிடப்படுகிறது.
இன்று கிடைத்த செய்தி. நாளை தினத்தந்தியில் மார்ச் 8 முதல் என்று விளம்பரம் வருகிறது. அதில் ஆல்பர்ட், அபிராமி, பாரத், ஏஜிஎஸ் வில்லிவாக்கம், அம்பத்தூர் ராக்கி முதலிய தியேட்டர்கள் இடம் பெறும் என தெரிகிறது. Inox, Fame National முதலியவையும் லிஸ்டில் இடம் பிடிக்கும் என தெரிகிறது [ஆனால் விளம்பரத்தில் இடம் பெறாது].கொளத்தூர் கங்கா, காஞ்சி-ஸ்ரீநாராயணமூர்த்தி போன்றவைகளும் உறுதி செய்யப்பட்டு விட்டன. எஸ்கேப் இடம் பெறலாம். சத்யம், சாந்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாளை விளம்பரம் வந்தவுடன் தமிழகமெங்கும் உள்ள மற்ற பல அரங்குகளும் படத்தை வெளியிட முன்வரும் என தெரிகிறது. கிருஷ்ணவேணி அரங்கம் உறுதி செய்யப்படவில்லை. அது கடைசியில் தேவைப்பட்டால் இணைத்துக் கொள்ளப்படலாம். மேலும் உறுதியான் செய்திகள் தெரிதாவுடன் அவை இங்கே பகிர்ந்துக் கொள்ளப்படும்.
அன்புடன்
அன்பு வாசு அவர்களுக்கும், திரு முரளி ஶ்ரீனிவாஸ் அவர்களுக்கும்
உற்சாகம் ஏற்றும் உங்கள் பதிவுகளால் மனம் உன்மத்தம் ஆகிறது..
தந்தி விளம்பரம் வந்தவுடன் தாருங்கள்... இன்னும் ஜூரம் ஏறட்டும்!
நன்றி முரளி சார் வசந்த மாளிகை வெளியீடு மற்றும் தியேட்டர்கள் பற்றிய விவரங்களுக்கு.
கண்ணன் சார்,
மிக்க நன்றி! முரளி சார் கூறியிருந்தபடி வசந்தமாளிகை விளம்பரம் இன்று தந்தியில் வந்துள்ளது. இதோ அந்த விளம்பரம்.
http://i1087.photobucket.com/albums/...e946098d70.jpg
நம் நண்பர் ஒருவர் ஆர்வத்தில் எழுதிக் கொடுத்த கவிதை!
http://4.bp.blogspot.com/_Re6aMmhHQQ...a+maligai1.jpg
மார்ச் எட்டு
மேளம் கொட்டு
பிரம்மாண்ட செட்டு
அருமையான மெட்டு
கையைத் தட்டு
பாரு நெட்டு
மாளிகையை தொட்டு
மின்னல் வெட்டு
ஓடப்போவது தறிகெட்டு
கட்டுறியா பெட்டு?
Waiting for March 8,2013
டியர் வாசு சார்
உங்கள் நண்பருக்கு இந்தாருங்கள்
ஒரு ஷொட்டு
http://i1146.photobucket.com/albums/...psc2b59a74.jpg
Count down starts
days from now
21