Rare Images அபூர்வ நிழற்படங்கள்
ஞாயிறும் திங்களும் திரைக்காவியத்திலிருந்து
http://i1146.photobucket.com/albums/...ps473d333e.jpg
நிழற்படம் மங்கலாக உள்ளது. முடிந்த வரை சரி செய்ய முயன்றுள்ளேன்.
Rare Images அபூர்வ நிழற்படங்கள்
ஞாயிறும் திங்களும் திரைக்காவியத்திலிருந்து
http://i1146.photobucket.com/albums/...ps473d333e.jpg
நிழற்படம் மங்கலாக உள்ளது. முடிந்த வரை சரி செய்ய முயன்றுள்ளேன்.
Rare Info அபூர்வ தகவல்கள்
http://tamilnation.co/images/hundred...biahPillai.jpg
கிளாரினெட் சுப்பையா பிள்ளை ... இவருக்கும் நடிகர் திலகத்திற்கும் என்ன சம்பந்தம் ...
படியுங்கள் ...இந்த இணைப்பில்
அன்பு இராகவேந்திரர் அவர்களே..
உங்கள் சுட்டி அருமை..
கே டி சந்தானம் நிகழ்வை கோலிவுட் கிங் நிகழ்ச்சியில் கேட்டேன்.
கிளாரினெட் நிகழ்வு புதிதாய் அறிந்தேன்.. நன்றி..
நம்மவர் பி.ஏ. பெருமாள் அவர்களிடம் எத்துணை பக்தியாய் இருந்தார் என்பதும் நாம் கற்கவேண்டிய பாடம்.
காலந்தவறாமை, மொழி+ பண்பாட்டின் வேர் விடாப்பாசம், தேசப்பற்று, பெற்றவர் மதித்தல், குடும்பப் பாசம், குருபக்தி, நட்பு மறவாமை..
கற்கவேண்டியவை ஏராளம் நம் நடிகர்பெருமானிடம் இருந்து!
அன்பு இராகவேந்திரருக்கு
உங்கள் ஞாயிறும் திங்களும் நிழற்படம் அப்படம் காணும் ஆவலை விசிறி எரியவைக்கிறது..
நன்றி...
'இமய மலைச்சாரலிலே' இனிமை....
'மனிதனும் மிருகமும்' நினைவூட்டல்கள் மறக்க முடியாதவை.
'புன்னகை தவழும் மதிமுகமோ'... புளகாங்கிதம் அடைய வைக்கிறது.
நன்றி ராகவேந்திரன் சார். ('ஞாயிறும் திங்களும்' இதுவரை காணாத அறிய நிழற்படத்திற்கு ஸ்பெஷல் நன்றி.)
காவேரி கண்ணன் அவர்களே!
தாங்கள் பதிவிட்டுள்ள பிபிசி ஆவணப்பட பதிவை கண்டு களிப்புற்றேன். அற்புதமான சுட்டிக்கு நன்றிகள்.
நல்லவர் புகழை பறைசாற்றும் 'நக்கீரன்' கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-18.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-18.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/3-9.jpg
மனதைத் தைக்கும் சின்னக்குத்தூசியின் சொல்லாடலில் நல்ல கட்டுரை..
எடுத்து வழங்கிய வாசு அவர்களுக்கு நன்றி..
வாசுதேவன் அவர்களே..
உங்களைச் சிறப்படையாளமாய் எப்படி அழைப்பது? நெய்வேலி வாசு? பாதுகாப்பு வாசு?
NT always a Dhuruva Natchathiram. Iranthum Vazhum MAHAN.
கண்ணன் சார்,
நன்றி! உங்கள் 'அன்பு வாசு' என்றே அழைக்கலாம்.
http://artie.com/veterans_day/arg-rw...07x165-url.gif
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
நீண்ட நாள் ஆவலுடன் காத்திருந்த வசந்த மாளிகை வெளியீடு உறுதி செய்யப் பட்டு விட்டது. இது தொடர்பான அரசு நடைமுறைகள் முடிந்து சான்றிதழ் பெறப் பட்டு விட்டது. 15 அல்லது 22 பிப்ரவரி வெளியாகலாம் என்றும் 8ம் தேதி நாளிதழ் விளம்பரங்கள் வரலாம் எனவும் தகவல்.
புதிருக்கான விடை .....?
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
10. MANOGARA மனோகரா
http://padamhosting.com/out.php/i385...snap229180.png
படத்தின் நீளம் - 17885 அடிகள்
வெளியான நாள் - 03.03.1954
தயாரிப்பு - மனோஹர் ப்ரொடக்ஷன்ஸ்
இயக்கம் - எல்.வி.பிரசாத்
இசை - எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் டி.ஆர்.ராமநாதன்
கதை - ராவ் பஹதூர் பம்மல் சம்பந்த முதலியார்
வசனம் - மு.கருணாநிதி
ஒளிப்பதிவு - பி.ராமசாமி, ஜி.கே.ராமு
படத் தொகுப்பு - எம்.ஏ. திருமுகம்
நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ஹீராலால்
நடிக நடிகையர் - பசுபலேட்டி கண்ணாம்பா, கிரிஜா, எஸ்.ஏ. நடராஜன், டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், காகா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர்
மனோகரா காணொளி
இப்படம் யூட்யூப் இணைய தளத்தில் முழுவதுமாக தரவேற்றப் பட்டுள்ளது. அதற்கான இணைப்பு
http://youtu.be/Cgcr4LtxRos
வாசு சார்,
நக்கீரன் இதழில் வெளிவந்த சின்னக் குத்தூசி அவர்களின் கட்டுரை மிகவும் அரிய பொக்கிஷம். பகிர்ந்து கொண்டதற்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அன்புடன்
ராகவேந்திரன்
ராஜ் வீடியோ விஷன் வெளியிட்டுள்ள மனோகரா திரைப்படத்தின் நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...psd517f08e.jpg
பராசக்திக்குப் பிறகு வசூல்சக்ரவர்த்தி மகுடத்தைச் சூட்ட அடித்தளமிட்டக் காவியம் மனோகரா..
3 மொழிகளில் வெளியானது என நினைவு..
இராகவேந்திரரும், அன்பு வாசுவும் அரிய படங்கள், சுட்டிகள் தந்து இம்மைல்கல் காவியத்துக்கு அணி சேர்க்கிறார்கள்.. நன்றி!
---------------------------------------------------------------------
வனஜா அவர்களின் விருப்பப்பாடல் தெரிவுக்குப் பாராட்டுகள்.
இப்பாடலில் சில நொடிகள்...
விரக்திச்சிரிப்புடன்..மேலேறும்
நம் நடிகர்திலகம் விழிகள் வரைந்த கவிதை....
நீ கண்ணன்.. நான் அறிவேன்..
உன் நாடகம் முழுமை அடைய நான் உதவுவேன்..
உனை அறியாதுபோல் நான் நடிப்பதும் என் கொடை..
பிழைத்துப்போ கண்ணா... என் பெயர் கர்ணன்..
1964ல் வெளி வந்த கர்ணன் அக்காலத்திய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கக் கூடிய தாக்கத்தைக் காட்டிலும் 2012ல் வெளிவந்த கர்ணன் இக்காலத்திய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நிச்சயம் பல மடங்கு அதிகம் எனவே சொல்லலாம். காரணம், அக்காலத்திய இளைஞர்களுக்கு பெற்றோர்கள் மூலமாக பரவலாக மகாபாரதமும் கர்ணன் பாத்திரமும் முன் கூட்டியே ஓரளவிற்குத் தெரிந்திருந்தது. நடிகர் திலகத்தின் மூலம் அது இன்னும் அதிகமாக அப்போது சென்றடைந்தது. ஆனால் 2012ல் மகாபாரதமும் ராமாயணமும் மற்ற இதிகாசங்களும் இளைஞர்களுக்கு சென்று சேர்க்கும் அளவிற்கு வலுவான சாதனங்கள் இல்லை. முதல் சாதனம் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி போன்ற மூதாதையர். பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடித்தனம் செய்வதால் மூதாதையர் இருக்கும் வாய்ப்புக் குறைவு. பெற்றோர் மூலமாக குழந்தைகளுக்கு சென்று சேருமா என்றால், பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதே பெரிய விஷயம்.
இப்படிப் பட்ட சூழலில் வாராது வந்த மாமணி போல் கர்ணன் திரைக்காவியம், இளைஞர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த வடிவத்தில் வந்தது மட்டுமல்லாமல், நடிகர் திலகம் என்கிற மாபெரும் பொக்கிஷம் தமிழகத்திற்கு கிடைத்ததையும், இந்திய புராணங்களின் மகிமையையும் அதிலும் மகாபாரதத்தில் உள்ள சமுதாய குடும்ப சிக்கல்களின் சூழல்களையும், கர்ணன் பாத்திரத்தின் சிறப்பையும் கூறி, நடிகர் திலகத்தின் சிறப்பை ஆணித்தரமாக நிரூபித்து அவர்களுக்குள் மிகப் பெரிய அளவில் இடம் பெறக் காரணமாயிருந்தது. இதன் மூலம் நடிப்பின் மேன்மையை இப்போது தான் அவர்கள் உணரத் துவங்கியுள்ளனர்.
இந்த அளவிற்கு இன்றைய தலைமுறையிடம் கர்ணன் சென்று சேர்ந்ததற்கு மற்றொரு காரணம் மெல்லிசை மன்னர்களின் இசை. குறிப்பாக பாடல்கள். அதிலும் குறிப்பாக சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இந்தப் பாடல் சென்ற ஆண்டின் மிகச் சிறந்த பாடல் என்று கூறும் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.
இப்பாடல் நம் அனைவருக்குமே என்றுமே விருப்பமாக உள்ளது என்பது உண்மை.
இச்சந்தர்ப்பத்தில் திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தையும் நம்மால் நினைவு கூறாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும்.
மிக்க நன்றி சகோதரி.
என் விருப்பம்:
Fantasy,Concept/ Album அக்காலத்திலேயே மிக மிக புதிதாய் யோசித்து, தமிழ் இரசிகர்களுக்கு வழங்கிய கலைவள்ளல் நம் நடிகர்திலகம்.
அவரின் அங்கத்துடிப்பைக் கண்ட பின்னரே அந்த ஆழிப்பேரலை இசை உருவாக்கியதாய் மெல்லிசை மன்னர் சொல்வார்... '' எங்கே நிம்மதிக்கு?''
காகிதத்தில் கப்பல் கட்டி - அன்புக்கரங்கள்
யாரந்த நிலவு - சாந்தி
நதியினில் வெள்ளம் -தேனும் பாலும்
இப்படி நடிகர்திலகம் கற்பனைக்கு மேனி தந்து நமக்களித்த கவின்விருந்துகள் பலப்பல..
அவற்றில் ஒன்று இன்றைய விருப்பமாய்..
கரங்களுக்குச் சவால் விடும் கால் அசைவுகளில் தாளலயம் கேளுங்கள்..
நேர்க்கோடுகள் நடுவே நின்று ஜியோமெட்ரிக் கோலங்கள் காட்டும் அங்கங்களின் அளந்த கோணங்கள் காணுங்கள்..
மதுவின் ஊற்று திராட்சைக்கொத்தில் ஒன்றைக் கொய்யும் உருவகம் பாருங்கள்..
எத்தனை சுமைகளடா எனும்போது- தாங்கிச் சாய்ந்தவனின் உன்னத உடல்மொழிக் கவிதை சுவாசியுங்கள்..
காலத்தை வென்ற கலைஞனின் தீர்க்கதரிசனப் படைப்பழகைச் சுவையுங்கள்...
http://www.youtube.com/watch?v=6O1YxXvkc2Q
டியர் காவிரிக்கண்ணன்
படைத்தானே படைத்தானே -
நம்மை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதில் ரசனையை வளர்த்தானே
இருந்தால் இவர் போல் இருந்திட வேண்டும்
என்பது உண்மையடா
குடும்பம் மனைவி என்பது எல்லாம்
இவரின் பாடமடா
ஆசை பாசம் காதல் என்பது
வாழ்வில் உண்மையடா
இளமை தொடங்கி முதுமை வரையில்
என்றும் திலகமடா நமக்கு
அவரே திலகமடா
பல சரணங்கள் எழுதிக் கொண்டே போகலாம் ... தமிழ்த்திரையுலகில் சரித்திரம் படைத்த பாடல்களின் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளாகவே வரத் தகுதியுள்ள பாடல். Class to the peak எனச் சொல்லும் அளவிற்கு இப்பாடல் சிறப்பு வாய்ந்தது. கண்ணதாசன் மெல்லிசை மன்னர் சௌந்தர் ராஜன் இவர்கள் நடிகர் திலகத்திற்காக உருவாக்கும் பாடல்கள் .... இணையற்றவை ....
தங்களின் சிறந்த தேர்வுக்கு பாராட்டுக்கள்.
இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள். நடிகர் திலகத்தின் வாழ்வில் திருப்பு முனை உண்டாக்கிய சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்யம் நாடகத்தில் அவரை நடிக்க வைத்த அண்ணா அவர்கள் அம் மேடையில் நடிகர் திலகத்துடன் தோன்றும் காட்சியின் நிழற்படத்தின் மூலம் அவருக்கு நம் அஞ்சலி செலுத்துவோம்.
http://2.bp.blogspot.com/-VS0g2hCjeU...Ig/s1600/3.jpg
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
http://3.bp.blogspot.com/-mXF8x1ql5h...ra%2BJothi.jpg
11. ILLARA JOTHI இல்லற ஜோதி
வெளியான நாள் 09.04.1954
தயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ்
இயக்கம் – ஜி.ஆர். ராவ்
மேற்பார்வை – டி.ஆர்.சுந்தரம்
கதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன்
அனார்கலி நாடக வசனம் – மு.கருணாநிதி
இசையமைப்பு – ஜி.ராமநாதன்
இசைக்குழு – ஜி.ராமநாதன் இசைக்குழு
நடன அமைப்பு – ஏ.கே.சோப்ரா, மாதவன்
ஆடை அலங்காரம் – எம்.அர்த்தனாரி
மேக்கப் – ஜி.மாணிக்கம், டி.குருநாதன்
லேபரட்டரி – பி.வி.மோடக், டி.பி.கிருஷ்ணமூர்த்தி
எடிட்டிங் – எல்.பாலு
ஸ்டூடியோ – மாடர்ன் தியேட்டர்ஸ்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – மனோஹர்
தங்கவேலு – நெட்டிலிங்கம்
அசோகன் – மோஹன்
பெருமாள் – புரொபஸர்
கிருஷ்ணன் – மக்கு
திருப்பதிசாமி – சாவதானப் பிள்ளை
கொட்டாப்புளி ஜெயராமன் – கதை பார்ப்பவர்
சௌந்தர் – ராஜா மான் சிங்
ராமாராவ் – அமீனா
சேதுபதி – யூனானி டாக்டர்
பத்மினி – சித்ரலேகா
ஸ்ரீரஞ்சனி – காவேரி
சரஸ்வதி – அனந்தா
கமலம் - லக்ஷ்மி
நடனம் – சந்திரா, கமலா
பின்னணி பாடியோர்
பி.லீலா, ஜிக்கி, ஸ்வர்ணலதா, காந்தா, கஜலக்ஷ்மி, ஆண்டாள், ஏ.எம்.ராஜா
பாடல்கள்
1. கல்யாண வைபோக நாளே
2. பார் பார் பார் இந்த பறவையைப் பார்
3. சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே
4. பெண்ணில்லாத ஊரிலே
5. களங்கமில்லா காதலிலே
6. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
7. சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின்
8. கண்கள் இரண்டில் ஒன்று போனால்
9. கலைத் தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன்
10. உனக்கும் எனக்கும் உறவு காட்டி
இப்படத்தின் நெடுந்தகடு ஜெயம் ஆடியோ நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
http://i872.photobucket.com/albums/a...overs/IJFR.jpg
இல்லற ஜோதி திரைப்படத்தின் காணொளிகள்
Anarkali play அனர்கலி நாடகம்
http://youtu.be/L-zuhcyBblY
Ketpathellam கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
http://youtu.be/qT_RJI-m1qM
Kalangamilla – களங்கமில்லா காதலிலே
http://youtu.be/4g-4V2TjqA8
Siru vizhi – சிறு விழி
http://youtu.be/xx9iKti-njs
Paar paar – பார் பார்
http://youtu.be/caCzS9qamHU
kalyana vaiboga nale – கல்யாண வைபோக நாளே
http://youtu.be/kZAVRnIO2Ow
Unakkum Enakkum – உனக்கும் எனக்கும்
http://youtu.be/HFLfaDgxz_s
chittu pole – சிட்டுப் போலே
http://youtu.be/8qtn5UNCT0Q
காணொளிகள் உபயம் யூட்யூப் இணைய தளம்.
Dear Ragavendra
VM release news ku nandri-any chance the movie can be released in DTH?-nowadays new movies are shown in VijayHITS channel, and airtel movies, etc.
நடிகர்திலகம் பற்றி நினைவுத்தாம்பூலக் கவிதை தந்து மகிழ்வித்த இராகவேந்திரருக்கு நன்றி....
---------------------------------------------
இல்லற ஜோதி தகவல்கள், சுட்டிகளால் இன்றைய பொழுது இனிமையானது..
அனார்கலி கல்லறை முன் வசனம்.. அப்போது அவர் கரங்கள் குரலோடு இணைந்து வடிக்கும் உணர்வோவியம்..
வீணை, வயலின் வாசிக்கும் நேர்த்தி ( பாட்டும் நானேவுக்கு ஒத்திகை ...!!!!)
உழைத்து எமக்காய் எடுத்தளிக்கும் உன்னதப்பணிக்கு பாராட்டுகள் இராகவேந்திரருக்கு..
டியர் சங்கர்,
டி.டி.எச். வடிவம் அல்லது வெளியீடு பற்றிய எந்தத் தகவலும் தற்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
தங்கள் பாராட்டிற்கும் கவிதைக்கும் நன்றி காவிரிக் கண்ணன்.
பல ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இது வரை பார்த்திராதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் வெளியாகி யுள்ளது நடிகர் திலகத்தின் மாடி வீட்டு ஏழை திரைக்காவிய நெடுந்தகடு. ஜி.எல்.வி. நிறுவனம் இப்படத்தின் நெடுந்தகட்டினை வெளியிட்டுள்ளது.
http://i1146.photobucket.com/albums/...pseeb10784.jpg
நடிகர்திலகம் பற்றிய தகவல்கள் இரும்பு என்றால் - நீங்கள் காந்தம் இராகவேந்திரர் அவர்களே..
திரட்டித் தரும் அரும்பணிக்குப் பாராட்டுகள்!
சென்னை பிராட்வேயில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தது நினைவாடலில்...
தங்கள் பாராட்டிற்கு நன்றி காவிரிக்கண்ணன் அவர்களே. எல்லாப் புகழும் அவருக்கே
மிக மிக அரிய பதிவு.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவு அஞ்சலி.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, நடிகர் திலகத்திற்கு பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டம் கிடைக்கக் காரணமாய் இருந்த அண்ணா அவர்களின் 'சிவாஜி கண்ட இந்து சாமராஜ்யம்' நாடகத்தில் வரும் சில காட்சிகளின் வசனங்கள் இதோ உங்களுக்காக. மராட்டிய சிவாஜியாக நம் நடிகர் திலகமும், காகப்பட்டராக பேரறிஞரும் நடித்துள்ள அருமையான தமிழ்நடை கொண்ட வசனங்கள்.
பக்கம் 1
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-19.jpg
பக்கம் 2
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-19.jpg
பக்கம் 3
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-10.jpg
பக்கம் 4
http://i1087.photobucket.com/albums/...t%20-2/4-6.jpg
பக்கம் 5
http://i1087.photobucket.com/albums/...t%20-2/5-6.jpg
பக்கம் 6
http://i1087.photobucket.com/albums/...t%20-2/5-6.jpg
பக்கம் 7
http://i1087.photobucket.com/albums/...t%20-2/7-3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு..
அன்பு வாசுவிற்கு பாராட்டுகள்..
எங்கிருந்து அள்ளுகிறீர்கள் இப்பொக்கிஷங்களை?
முன்னோடி ஹப்பர்களை மலைத்தபடி பாராட்டிமகிழ்கிறேன்..
நன்றி ராகவேந்திரன் சார். வசந்த மாளிகை வரும் நாளை அறிவித்தமைக்கு நன்றி. முழு காணொளியில் மனோகரனைத் தந்து மகிழ்ச்சி பொங்கச் செய்து விட்டீர்கள். அண்ணாவுக்கு அஞ்சலி அருமை. இல்லறஜோதியின் இனிய பாடல்களின் தொகுப்புக்கு இனிய நன்றி! நீண்ட நாட்களாக ஏழையாய் இருந்த எங்களுக்கு மாடி வீட்டை பரிசாகத் தந்து மனம் குளிர செய்திருக்கிறீர்கள். அனைத்திற்கும் என் நன்றிகள்.
களிப்புற்றேன் கண்ணன் சார். அளப்பரிய அற்புதங்களை அள்ளித் தந்த அழியாப் புகழ் பெற்ற அருமை நடிக தெய்வத்தைப் படைத்தானே அந்த ஆண்டவன்... அவனுக்கு முக்காலமும் நன்றி! 'படைத்தானே' பாடலை பாங்காக கவிதை நடையில் இங்கு வழங்கிய தங்களுக்கும் என் அன்பு நன்றி!
தங்கை வனஜா,
உங்கள் விருப்பமாக கர்ணனின் நல்ல உள்ளத்தை இங்கு படம் பிடித்து எங்களை உறங்காமல் செய்து விட்டீர்கள். நன்றி!
என் விருப்பம் (2)
'வெள்ளிக்கிண்ண'த்தை அடுத்து எப்போதும் என் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பலாச்சுளைப் பாடல்.
அயல் நாட்டு மண்ணிலே என் ஆண்டவன் முதன் முதலாக அடியெடுத்து தொடங்கி வைத்த பாடல்.
ஈபில் டவரின் அழகை மிஞ்சும் ஈடு இணையற்ற தலைவரின் அழகு.
நிறைய எண்ணெய் தடவிய அடர்ந்த இருள் கேசத்தில், அளந்து தைத்த ஆடையில், அசகாய சூரனின் நடையழகில், காஞ்சனமாலையின் கைகோர்த்து... ஆண்டுகள் ஆயிரம் போனாலும் அ(ஜெ)கத்தை விட்டு அழியாத பாடல்.
http://www.kaathal.com/songs/lyrics/..._yuvaraani.gif
(விடுபட்ட மூன்றாவது சரணம்)
ஒருபக்கம் நான் பார்த்து மறுபக்கம் நான் பார்க்க ஒருநாளும் போதாதம்மா
மணிமுத்தம் வாய்சிந்த சிறுவெட்கம் முகம் சொல்லும் அதுமட்டும் போதாதம்மா
என் கேள்வி சுகமென்று உனைக் கேட்பது
நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதது
(பார்வை)
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியா இன்பம் மனதை இன்பச் சித்ரவதை செய்வதை எப்படி சொல்ல!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0jn0ZS5ePlU
தங்கையே! நிஜமாகவே உங்கள் விருப்பமா... அல்லது வம்பு விளையாட்டிற்காகவா? அது சரி! அறிஞர் அண்ணாவின் அற்புத தமிழை படித்து முடித்தீர்களா!