Ayirathil Oruvan re-released in Mahalakshmi theatre 2007.
http://i125.photobucket.com/albums/p...ps293835f3.jpg
This banner is more attractive then the restored version banner.
Printable View
Ayirathil Oruvan re-released in Mahalakshmi theatre 2007.
http://i125.photobucket.com/albums/p...ps293835f3.jpg
This banner is more attractive then the restored version banner.
Date of release 3.8.2007.
http://i125.photobucket.com/albums/p...psb04c72c2.jpg
Kadambathur 2007, August.
Raghasiya Police 115.
2007 October Madurai.
http://i125.photobucket.com/albums/p...ps4a094770.jpg
This thread is not sufficient to post re-released records of our Thalaivar movies from 2007 to present day.
http://i61.tinypic.com/28chmav.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ....
http://i58.tinypic.com/121zq60.jpg
தந்தையை இழந்து வாடும் எங்கள் அன்பு சகோதரர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்களுக்கு எங்கள் இதய தெய்வத்தின் ஆறுதல் கிடைக்க அனைவரும் வேண்டுகிறோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கர்ணன் 50வது நாள் விளம்பரத்தில் பாண்டி ருக்குமணியில் 50 நாட்கள் ஓடியதாக தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில் 25 நாட்கள்தான் அந்த திரையரங்கில் ஓடியது. முதல் வாரம் ருக்குமணியில் (ஸ்க்ரீன்-2) இரண்டு காட்சிகளாகவும் (மாலை 6.30 மற்றும் இரவு 9.30) இரண்டாவது வாரத்தில் முதல் மூன்று நாட்கள் ஸ்க்ரீன்-1 ஜீவா திரையரங்கில் இரண்டு காட்சிகளாகவும், பிறகு மீண்டும் ருக்குமணியிலும் திரையிடப்பட்டது. மூன்றாவது வாரத்தில் ஒரு காட்சி மட்டும் ருக்குமணியில் திரையிடப்பட்டு 25 நாட்கள் ஓடியது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i1170.photobucket.com/albums/...ps5c0838b0.jpg
BARATH THEATER 06.08.2006
http://i1170.photobucket.com/albums/...ps0b39ee11.jpg
Chennai Mahalaxmi Nadodimannan
http://i1170.photobucket.com/albums/...ps2f7eb300.jpg
THALAIVAR ID CARD WHILE HE ADMITTED IN APOLLO HOSPITAL
http://i1170.photobucket.com/albums/...ps1f515cab.jpg
1977 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று ‘இந்து’ ஏடு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தது.
”முதல்வர் பதவி என்பது அதிகாரம் வாய்ந்தது அல்ல. அதிகாரமும் பணபலமும் உள்ள பலரைத் தினமும் ச்ந்திக்க வேண்டிய ஓர் இடமே தவிர அதிகாரம் குவிந்துள்ள இடமல்ல என்று எம்.ஜி.ஆர் கூறியிருப்பதைப் பார்த்தால், அவர் முதல்வர் பதவி என்பது எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதையே தெளிவு படுத்துகிறது. தம்மை முதல்வர் பதவியில் அமர்த்திய அந்த மக்கள் சக்தியே தமக்கு எல்லாவிதமான எதிர்ப்புகளிலிருந்தும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். மக்களிடமிருந்து எந்தக் கருத்து வந்தாலும் அதை அவர் சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பார் என்பது உறுதி. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் எம்.ஜீ.ஆர். உற்சாகத்துடன் ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறார்”என்று கூறியிருந்தது.
முதல்வர் பதவியேற்ற புரட்சித் தலைவர், அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற தம் சகாக்களை அழைத்து, ”எதைச் செய்தாலும் அதில் ஏழைகளுக்கு என்ன நன்மை கிட்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செய்யுங்கள்” என்று கூறினார்.
மாநில அரசுகள் எதற்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதை புரட்சித் தலைவர் புரிந்து கொண்டார். மாநில அரசின் வருவாய் முழுவதும் கல்வி, சுகாதாரம், அரசு நிருவாகம் ஆகியவற்றுக்கே போய்விடுகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.
மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.
”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”
இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.
இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.
1978 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, இந்திரா காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகள் மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மகத்தான வெற்றி கிட்டியது. மொத்தமுள்ள 65 வட்டங்களில் (Wards) அ.தி.மு.க.வுக்கு 37 இடங்களும், இந்திரா காங்கிரசுக்கு 9 இடங்களும், கிடைத்தன. ஜனதாக்கட்சி தோல்வியடைந்தது. மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது! இதுவும் புரட்சித் தலைவரின் சாதனைகளுள் ஒன்றாகும்.
1978 ஆம் ஆண்டு செப்டம்பரில் மக்கள தி.மு.க. கலைக்கப்பட்டது. அக்கட்சி
யில் இருந்த நாவலர், ப.உ.ச, கே.இராஜாராம், செ.மாதவன் முதலியவர்கள் அ.இ.அ.தி.மு.க வில் சேர்ந்தனர்.
நாவலரைத் அ.இ.அ.தி.மு.க. தலைவர் பதவியிலும், ப.உ.ச.வை பொதுச் செயலாளர் பதவியிலும், மாதவனை கழகப் பொருளாளர் பதவியிலும், அமர்த்திக் கவுரவித்தார். புரட்சித் தலைவர். மாதவனைத் தவிர மற்ற மூவரையும் பின்னர் தம் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொண்டார்.
http://i1170.photobucket.com/albums/...ps603a72d3.jpg
எங்கோ பிறந்தார், நமக்காக வந்தார், தமிழகத்தை மட்டுமா ஆண்டார்? இல்லை உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தன்னிகரற்ற தலைவர் நம் மனதையும் அல்லவா இந்த நிமிடம் வரை ஆண்டு வருகிறார்! இதய தெய்வம் எம்.ஜி.ஆர்!! ஆம் இவர் மறைந்தார் இந்த உலகை விட்டு மட்டுமே, இன்றும் மறையாது வாழ்கிறார் கோடான கோடி அன்பு நெஞ்சங்களில்
http://i1170.photobucket.com/albums/...psc701da92.jpg
மீண்டும் வருமா அந்த " பொன்னான " நாட்கள் !
காவேரி நீர் திறந்து விடப்படவில்லை . இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் MGR பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் குண்டுராவை சந்தித்து பேச செல்கிறார் ( குண்டுராவ் அவர்கள் MGR அவர்களின் தீவிர ரசிகர் ) . சென்னையில் இருந்து MGR அவர்கள் நேராக முதல்வர் குண்டு ராவ் வீட்டுக்கு சென்று "டிபன் கொண்டுவா அம்மா, ஆனால் முதலில் குடிக்க நீர் கொடுங்கள் ( காவேரி ) " என்று அவர் துணைவியாரிடம் கேட்டு வங்கி சாப்பிட்டு விட்டு , குண்டுராவிடம் பேசிவிட்டு கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்லாமல் சென்னை திரும்பிவிடுகிறார் . " காவிரியில் நீர் திறந்து விடப்பட்டது "
---காங்கிரஸ் கட்சி K.S.அழகிரி MP ( பாலிமர் TV பேட்டி ) ...
http://i1170.photobucket.com/albums/...ps80fb5a40.jpg
அரிய படம் !
வாத்தியார் ......
சிலம்பாட்டத்தை ராசிக்கு
மக்கள் திலகம் "MGR"....
courtesy facebook
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.
ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.
பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
உலகத் தமிழ் மாநாட்டு மலரில் எழுதும் போது "பொதுவுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர்.
ஜீவா என்கின்ற மாமனிதனின் உயிரற்ற சடலத்தைத் தூக்கிச் செல்கிறபோது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அந்த ஊர்வலத்தில் நடந்து வருகிறார். ம.பொ.சி. வருகிறார். டி.கே.சண்முகம் வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் வருகிறார்கள். இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்படுகிற வேளையில் தான் டி.கே.சண்முகம் அங்கே பாடுகிறார்.
சரித்திரப் பிரசித்திப் பெற்ற ஜீவாவின் சரித்திரத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடுகிறார்.
காலுக்குச் செருப்பு மில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே
பசையற்றுப் போனோ மடா
நோய்நொடிகள் வெம்புலிபோல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா
பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாம் அழுவோம் - தோழனே
வீடுமுச் சூடும் அழும்
என்று டி.கே.சண்முகம் பாடிக்கொண்டே அழுகிறார், அழுதுகொண்டே பாடுகிறார். ஜீவாவின் உடலுக்கு முன்னே திரண்டு இருந்த அனைவரும் அழுதார்கள்.
எளிமையான தலைவராகவே கடைசி வரை வாழ்ந்த தோழர் ஜீவாவை மனதில் வைத்து போற்றுவோம்.
------------
ஜீவாவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கருத்து வந்தபோது, அப்படி சிலைவைக்கும் பழக்கம் நமது இயக்கத்தில் இல்லை, அது தனிமனித வழிபாடு போன்றது என்று ஒரு கருத்தை ஒருசிலர் சொல்லலாம். கருத்துச் சுதந்திரம் எல்லாக் கட்சியிலும் உண்டு. ஆனால், தோழர் பாலதண்டாயுதம் மறுக்கிறார். ஏன் நீங்கள் பல நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறபோது மார்க்ஸ் சிலையையும், லெனின் சிலையையும் நீங்கள் தூக்கிவரவில்லையா? ஏன் ஜீவாவுக்குச் சிலை வைக்கக்கூடாது? என்று கேட்கிறார்.
அப்படியானால், ஜீவா சிலைக்கு நிதி திரட்ட வேண்டும் என்றபோது, காலில் கிடந்த கொலுசுகளைக் கழற்றித் தருகிறார்கள் மாதர்கள், பொது உடைமை இயக்கச் சகோதரிகள். தங்களுடைய கைகளில் அணிந்து இருக்கின்ற நகைகளைக்கூடத் தருகிறார்கள். சரி பெருந்தொகை வேண்டுமே? மக்கள் திலகம் அள்ளித் தருகின்றவர் எம்.ஜி.ஆரிடத்தில் போகலாம் என்றபோது முதலில் பாலதண்டாயுதம் மறுக்கிறார். தொடக்கத்தில் அவரைப்பற்றி உயர்ந்த அபிப்பிராயம் வைத்து இருக்கவில்லை. அதெல்லாம் சொல்வார், செய்யமாட்டார் என்று கருதினார்.
ஆனால், தோழர் தா.பாண்டியன் அவர்கள், நாம் அவசியம் அணுகுவோம். அதில் என்ன தவறு? என்கிறார். அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் படப்பிடிப்பில் இருக்கிறார். தொடர்பு கொள்கிறார்கள். நாளைக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு வந்து விடுங்கள் என்கிறார்.
ஸ்டூடியோ வாசலிலேயே சைக்கிளில் ஒரு தோழன் தயாராகக் காத்துக் கொண்டு இருக்கிறான். ஐயா நீங்கள் இன்னாரா? என்று கேட்கிறான். பாலதண்டாயுதமும் தா.பாண்டியனும் செல்கிறார்கள். பின்னாலேயே கார்வரட்டும் என்று சைக்கிளில் போகிறான். அவனைப் பார்த்துவிட்டு, எம்.ஜி.ஆர். சூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து ஓடிவருகிறார்.
“பாலன், உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு ரொம்பப் பெருமை” என்று அழைத்து அமரவைத்து, அவரே சிற்றுண்டி எல்லாம் பரிமாறுகிறார். மற்ற பணியாளர்களை எல்லாம் வெளியே போகச் சொல்லிவிட்டு அவரே பரிமாறுகிறார்.
சூட்டிங்குக்குக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்என்ற தகவல் வந்தபோது, கோபப்பட்டு அதட்டுகிறார். ‘நான் யாரிடம் பேசுகிறேன் என்று தெரியும் அல்லவா? நான் வருகிறபோது வருவேன்’ என்கிறார்.
‘ஜீவாவுக்குச் சிலை வைக்க வேண்டும்’ என்று இவர்கள் கேட்டவுடன், துள்ளிக்குதித்துக் கட்டி அணைத்துக் கொண்டாராம். “ஒரு மாபெரும் தலைவர். நன்றாகச் செய்யுங்கள் என்று சொன்னதுடன், இவர்கள் கேட்காமலேயே, அந்தச் சிலைக்கு எவ்வளவு செலவு ஆகிறதோ, அதை நானே தருகிறேன்; பீடம் அமைப்பது மற்றும் விழாச் செலவுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றாராம். அப்படிச் சொன்னது மட்டுமல்ல, 5000 ரூபாய் பணத்தையும் தருகிறார் எம்.ஜி.ஆர்.
courtesy net
http://i1170.photobucket.com/albums/...ps3fde3700.jpg
மறைந்தும் மறையாத மானிட சகாப்தம் எம்.ஜி.ஆர்.
====================================
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ அல்லது வெறும் அரசியல்வாதியின் பெயரோ அல்ல - அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும்.
பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால்.
திரைப்பட துறையில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை.
அண்ணாவாக இருந்தாலும் சரி, ஆருயிர் நண்பராக இருந்தாலும் சரி, நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு.
மறைந்து 25 ஆண்டுகளுக்கு பின்னும், மக்களின் மனதில் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மு.க.முத்து தொடங்கி, T .ராஜேந்தர், ராதிகா, சரத்குமார், குஸ்பூ, வடிவேல் வரை முயற்சித்து பார்த்துவிட்டுத்தான் MGR இன் புகழ் சினிமா கவர்ச்சி என தங்களின...் மன ஆற்றாமையை வெளிபடித்து கொள்கின்றனர்கள்.
தி.மு.க. வின் வளர்ச்சியில் எம்.ஜி.ஆரின் பங்கு அளப்பரியது. ஏழை எளியோருக்கும் கட்சிக்கும் தன சொத்து முழுவதையும் கொடுத்துவிட்டு போன மனிதன்.
இன்றைய துரைமுருகன் முதல் முரசொலி மாறன் வரை அவரால் உதவி பெற்று படித்தவர்கள் ஏராளம். இன்றைய கருணாநிதி முதல் பல முன்னாள் அமைசர்கள் வரை அரசியல் வழ்க்கைபெற்றோர் பலர்.
எம்.ஜி.ஆர். காலத்தில் தான் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.
நேர்முக தேர்வு முறையை ஒழித்து, நுழைவு தேர்வு மூலம் சாமானியனும் போறயல், மருத்துவம் பயிலும் புரட்சி எம்.ஜி.ஆர். காலத்தில் உண்டானது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 51 % இட ஒதுக்கீடு என்பது சட்டமாக்கபட்டதும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தான்.
தஞ்சையில் தமிழுக்கு பல்கலை கழகமும், தமிழ் எழுத்துக்களை எளிமைபடுதும் நோக்கோடு தந்தை பெரியார் முன்மொழிந்த பெரியார் எழுத்துக்கள் நடைமுரைபடுத்தபட்டதும் எம்.ஜி.ஆர். காலத்தில் தான்.
ஈழத்தின் விடிவுக்கு உண்மையான கரிசனத்தோடு புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் அள்ளி கொடுத்த வள்ளல்.
எம்.ஜி.ஆர். புகழ் காலம் உள்ளவரை நிலைக்கும்.
மறைந்தும் மறையாத மானிட சகாப்தம் எம்.ஜி.ஆர்...
ஒ ...அப்படியா...சார்
தகவலுக்கு நன்றி...! இதே போல தவறு எப்புதுமே நடக்கும் போல இருக்கிறது. காரணம் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரத்திலும் கடந்த ஒரு வாரமாக தான் இதே போல தவறு திருத்தப்பட்டு சத்யம் மற்றும் ஆல்பர்ட் என்று வருகிறது.
அதற்க்கு முன்பு வரை திரையிட்டு எடுக்கப்பட்ட எஸ்கேப் திரையரங்கத்தின் பெயர் சத்யமுடன் வந்துகொண்டிருந்ததும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைகிறேன்.
மேலும் சத்யம் திரை அரங்கில் உள்ள studio 5 என்ற அரங்கும்..அதே போல ஆல்பர்ட் திரை அரங்கில் baby albert திரை அரங்கிலும் தான் ஆயிரத்தில் ஒருவன் ஒரு காட்சியாக ( மாலை காட்சியாக) கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அனால் விநியோகஸ்தர் விளம்பரங்களில் SATHYAM சினிமாஸ்...ALBERT என்று விளம்பரம் கொடுத்துக்கொண்டு வருகிறார்..! இது வியாபார நுணுக்கம் என்று நினைகிறேன்..முக்கால்வாசி படங்களுக்கு இப்படி தான் வரும்போலும்..!
பாண்டி போன்ற மிக சிறிய ஊரியில் புது படங்கள் தொடர்ந்து வந்த நிலையில் ...25 நாட்கள் அரங்கு நிறைந்து ஓட்டம் என்பது ஒரு சிறந்த சாதனைதான் என்பதை அனைவருமே அறிவோமே.
MAIN ஸ்க்ரீனில் ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திட்ட புதிய திரைப்படம் வரும்போது..பொதுமக்கள் வருகை அதுவரை ஓடிய படத்திற்கு தொடர்ந்து நிறைந்து காணப்படும்போது படத்தை தூக்காமல் மற்ற ஸ்க்ரீங்களில் திரையிடும் வழக்கம் MULTIPLEX வந்தவுடன் வசதிக்காக செய்யபடுகிறது.
உதாரணமாக நமது ஆயிரத்தில் ஒருவன் கூட SATHYAM CINEMAS என்று விளம்பரம் வந்தாலும் இரெண்டாவது வாரதிலயே STUDIO 5 அரங்கில் மாலை காட்சி இரவு காட்சி என்று மாற்றம் செய்யப்பட்டது.
அதே போல வ்யாழகிழமைகளில் மட்டும் கடந்த ஒரு சில வாரங்கள் ஆயிரத்தில் ஒருவனுக்கு பதிலாக BLIND DATE போன்ற ENGLISH கிளாச்சிக் படங்கள் ஏற்கனவே ஒப்பந்தப்படி திரையிடப்பட்டது. இவை அனைத்தும் திரை அரங்கம் மற்றும் விநியோகஸ்தர் அட்ஜஸ்ட்மென்ட் தான் !
இப்போது வரும் விளம்பரங்களில் கூட விநியோகஸ்தர் அதை கவனித்து பதிவு செய்தால் நன்றாக இருக்கும் !
தகவலுக்கு நன்றி சார்..!
:banghead::banghead::banghead::banghead::banghead:
1969- BOMMAI
http://i60.tinypic.com/ofpyeg.jpg