நடிகர்திலகம் சிவாஜி 13-ஆம் ஆண்டு நினைவு நாள் - 21-07-2014
http://i1234.photobucket.com/albums/...pse42142b2.jpg
Printable View
நடிகர்திலகம் சிவாஜி 13-ஆம் ஆண்டு நினைவு நாள் - 21-07-2014
http://i1234.photobucket.com/albums/...pse42142b2.jpg
தமிழக அரசியல் வரலாற்றில் கர்ம வீரர் காமராஜர் போல உண்மையான பொற்கால ஆட்சி செலுத்திய முதலமைச்சர்கள் எவரும் இல்லை !
மக்களுக்கு தேவையில்லாத திட்டங்கள் எதுவும் அவர் கொண்டுவரவில்லை. கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு பார்வை கொண்ட அருமையான திட்டங்கள்.
காமராஜர் போல ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட முதல்வர் தமிழகத்தில் இதுவரை யாரும் இல்லை இனி வரபோவதும் இல்லை.
கல்விக்கண் திறந்துவைத்த காமராஜர் குழந்தைகள் பசியுடன் இருந்தால் படிப்பு வராது என்பதன் அவசியம் உணர்ந்து மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார்.
அதற்க்கு நடிகர் திலகமும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் பண்டித ஜவஹர்லால் நேஹ்ருவிடம் கொடுத்தார், காமராஜர் மற்றும் c சுப்ரமண்யம் ஆகியோர் முன்னிலையில்
இந்த திட்டத்தின் மூலம் உண்மையிலயே குழந்தைகள் பசியாறி நன்றாக படித்தார்கள்.
இதே திட்டம் பிறகு என்னவெல்லாமோ விரிவுபடுத்தி...இன்று 3 முட்டை..வாழைபழம்...(இன்னும் தாம்பூலம் மட்டும் தான் இல்லை) இப்படி தேவையில்லாமல் குழப்பி குதப்பி, ஊழலுக்கு ஒரு திட்டமாக பயன்பட்டுவருகிறது.
இவ்வளவும் வயிறு முட்ட கொடுத்தால் எப்படி ஒரு குழந்தை மதியம் படிக்கும்..? தூக்கம் தான் வரும் !
கொண்டு வரும் திட்டம் கூட பயன் பெரும் வகையில் செயல்படுத்தவேண்டும்.
கர்மவீரருக்கு அந்த vision இருந்தது...மற்றவர்கள் இதை ஒரு vote bank நிரப்பும் ஒரு திட்டமாக எந்த ஒரு தரமும் இல்லாமல் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் !
அரசியலிலும் சரி சொந்த வாழ்கையிலும் சரி...கர்மவீரர் எவனுக்காகவும் பரிந்துபேசியதில்லை, பயந்ததும் இல்லை. !
அனால் ஒரு சிலர் , என்னமோ கர்மவீரர் யாரையோ பார்த்து பயந்தது போல ஒரு மாயை அந்தகாலத்திலிருந்து பரப்பிகொண்டுவருவது வேதனையான விஷயம். மற்றவர்களை போல பதவிக்கு ஆசைபட்டவரில்லை கர்ம வீரர் .
பிரதமராக பிரகாசமாக வாய்பிருந்தும்...பதவியை துச்சமென நினைத்து மக்கள் சேவையை உண்மையாக செய்தே ஒரே முதல் அமைச்சர் காமராஜர் ஒருவரே !
எங்கள் ஊரில் தூறல் நின்னு போச்சு பட வெளியீட்டு சமயம். 1982 லே என்று ஊகிக்கிறேன். கோமதி தியேட்டர் என்ற புது திரையரங்கு ஒன்று திறக்கப்பட்டது. முதல்படம் தூறல் நின்னு போச்சு போட்டார்கள். என்னுடைய நண்பர் ரிச்சர்ட் என்பவர் வேறு ஒரு பழைய திரையரங்கில் சினிமா படம் ஓட்டும் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். அது அவர்களுடைய குடுமபத் தொழில். அவரை திறக்கவிருக்கும் கோமதி திரை அரங்கிற்கு ஆப்பரேட்டராக நியமித்து விட்டார்கள். அந்தத் திரையரங்கை திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட விஐபி நம்முடைய நடிகர் திலகம்தான். ஜனத்திரள் என்றால் அப்படி ஒரு ஜனத்திரள். சமுத்திரம் போல கூட்டம் சேர்ந்து ஆரவாரம்.திரையரங்கு தாஜ்மஹால் போல ஜொலிக்கிறது. ரசிகர் மன்ற துணி பாணர்கள் எங்கு பார்த்தாலும் தொங்குகின்றன. சரியாக 9 மணிக்கெலாம் சொன்னபடி சிவாஜி டாண் என்று ஆஜராகி விட்டார். சந்தன நிறத்தில் ஜிப்பாவும்,சட்டையும் அணிந்து கையிலே வாட்ச் கூட கட்டாமல் ரொம்ப எளிமையாக தெரிந்தார். நானும் ரிச்சர்டும் காபின் அறையில் இருந்தோம். பாதுகாப்பாக அழைத்துவரப்பட்ட சிவாஜி ஆபரேட்டர் ரூமுக்குள் நுழைந்தார். மடித்து விடப்பட்ட ஜிப்பா. கருகருவென்று தலைமுடியை நிறைய எண்ணெய் தடவி அழுத்தி வாரி இருந்தார்.பார்க்க ரொம்ப ஸ்டைலாக தெரிந்தார். என் நண்பன் ரிச்சர்ட் ஒரு சிவாஜி பைத்தியம். நான் அதைவிட பைத்தியம். எங்களுக்கு கைகால்களில் நடுக்கம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.
நேராக உள்ளே நுழைந்த சிவாஜி யார் ஆபரேட்டர் என்று வினவினார். ரிச்சர்ட் அருகில் வந்தவுடன் அவன் தோள் மேல் கூடப் பிறந்த தம்பி போல கையைப் போட்டுக் கொண்டார். தம்பி..இப்போ நான் என்ன செய்யணும் என்றார். மெஷினில் ஒரு சுவிட்சைக் காட்டி இதை நான் சொல்லும் போது அழுத்தினால் போதும் அண்ணே என்றார் ரிச்சர்ட். ஆனால் டைமிங் முக்கியம் அண்ணே நான் சொல்லும் போது நீங்கள் அழுத்தினால் போதும் என்றார்.கீழே கடல் மாறிக் கூட்டம். யாரும் திரையை நோக்கவில்லை. அத்தனை பேரும் ஆபரேட்டர் ரூமையே வெறித்தபடி நோக்கியிருக்க ரிச்சர்ட் முதலில் வேறொரு மிஷினில் ஏதோ செய்ய திரையில் 14,13,12, என்று ரீல்கள் நம்பர் குறைந்து கொண்டே வந்தது. சரியாக 1 வந்ததும் போடுங்கண்ணே என்றார் ரிச்சர்ட். அவர் சொன்னபடி கரெக்டாக புது மிஷினில் சுவிட்சை முடுக்கி தூறல் நின்னு போச்சை தொடக்கி வைத்தார் சிவாஜி. ஒரு சிரமும் படாமல் ரிச்சர்ட் சொன்னதை கவனமாக உற்றுக் கேட்டு சரியான டைமிங்கில் மிஷினை இயக்கினார் பல படங்களில் நடிப்பால் துடிப்பை உண்டாக்கிய சிவாஜி. கீழே பெரும் சப்தம்.பின் தம்பி வரட்டுமா என்று கூறி விடை பெற்றார். அருகில் இருந்த நான் பிரமை பிடித்து நின்று விட்டேன். ரிச்சர்ட் புலம்பித் தள்ளிவிட்டான். தொடர்ந்து அவரால் படம் ஓட்ட முடியவில்லை. சிவாஜி போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். நிறைய ரசிகர் மன்றத்தினர் நடிகர் திலகத்தை வரவேற்று சிலைடுகள் போடச் சொல்லிக் கொடுத்தனர். அதுவும் சிலைடுகளை நிறுத்திக் காட்டு என்று ரிச்சர்ட் கையில் பணம் வேறு தந்தனர். ஐம்பது சிலைடுகளுக்கு மேல் இருக்கும். சிவாஜி சிலைடைப் பார்த்ததும் விசில் பறந்தது.
இன்றுகூட ரிச்சர்டைப் பார்த்தால் அவன் தோளைத் தொட்டு அவனே முத்தமிடுவான். சிவாஜி தொட்ட தோளாம். நேற்று ரிச்சர்ட் கூட தொடர்பு கொண்டபோது செல்போனில் இதுபற்றி பேசினோம்.
சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.
இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.
1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
"பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
"எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.
சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.
குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.
சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.
சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.
அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.
குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.
இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.
நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.
ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.
ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.
கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.
அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.
பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.
"சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.
வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.
சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.
இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.
நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.
மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.
குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.
இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.
தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.
தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.
மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.
ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.
நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.
அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.
நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.
அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.
அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
டியர் kcs சார்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் . முடிந்தால் 21ஆம் தேதி உங்களை கபாலி கோயிலில் சந்திக்க முயற்ச்சி செய்கிறேன்
சென்ற ஆண்டு நாம் சந்தித்து உரையாடினோம்
1980 க்கு பிறகு பிறந்த ஒரு வலைபதிவு நண்பர், சிம்மகுரலோன் அவர்களை பற்றிய எழுதி உள்ள ஒரு பதிவு . நண்பர்களின் பார்வைக்கு
http://vayalaan.blogspot.com/2014/07/blog-post_15.html
வாழ்த்துகள் சந்திரசேகர் சார்! நற்பணி விழாவும் அன்னதானமும் எப்போதும் போல் வெற்றிகரமாக நடக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Welcome Back Dhanusu!
நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி அவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியாகியும் மற்றும் சில வரும் வெள்ளியன்று வெளியாகவும் போகின்றன.
கோபி நகரில் வீராஸ் திரையரங்கில் கடந்த ஞாயிறு (ஜூலை 13) முதல் வசந்த மாளிகை தினசரி 4 காட்சிகள் வீதம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
வரும் வெள்ளி ஜூலை 18 முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் தினசரி நண்பகல் காட்சியாக வைர நெஞ்சம் திரையிடப்படுகிறது.
மதுரை சென்ட்ரலில் வரும் வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் சந்திப்பு வெளியாகிறது. மதுரை சென்ட்ரல் திரையரங்க வளாகமே இப்போதே விழாக் கோலம் பூண்டிருக்கிறது என்ற செய்தியை மதுரையிலிருந்து நண்பர் சந்திரசேகர் பகிர்ந்துக் கொண்டார்.
அன்புடன்
நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த இந்த திரியில் நடுவில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. விட்டுப் போன செய்திகளின் சுருக்கம் இதோ.
சென்னை மகாலட்சுமியில் மே முதல் வாரம் திரையிடப்பட்ட வைர நெஞ்சம் பலரின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெற்றியை அடைந்தது. படம் வெளிவருவதற்கு முன் படம் வெளியான காலத்தில் சரியாக போகாதை சுட்டிக் காட்டி அது போலவே இப்போதும் நடக்கும் என்று ஆரூடம் கூறியவர்களின் வாக்கை பொய்யாக்கி இந்த 2014-ம் ஆண்டு மகாலட்சுமியில் வெளியான பல படங்களையும் பின்னுக்கு தள்ளி அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 70,000/- ஐ தாண்டிய வசூலைப் பெற்றது.
மே இரண்டாம் வாரம் பிராட்வேயில் வெளியான நீதி, அந்த திரையரங்கில் கடந்த 3,4 மாதங்களாக திரையிடப்படும் எந்த படமும் வாடகையை கூட கவர் பண்ணுவதில்லை என்ற நிலையை மாற்றி வாடகையை தாண்டிய வசூலை பெற்று லாபத்தை ஈட்டியது.
ஜூன் முதல் வாரத்தில் மகாலட்சுமியில் வெளியான தங்கச் சுரங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பைலட்டில் வசூலித்ததை விட அதிகமாக மகாலட்சுமியில் வசூல் செய்தது. அதே நாட்களில் [ஜூன் 6 முதல் 12 வரை] பைலட்டில் நடிகர் திலகத்தின் மற்றொரு மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெளியிடப்பட்ட சூழலிலும் பொதுமக்களின் பேராதரவைப் பெற்று அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 78,000/- அளவிற்கு வசூலித்தது.
அதே நாட்களில் சென்னை பைலட்டில் இரண்டு காட்சிகளாக வெளியான எங்கள் தங்க ராஜா [அதற்கு ஒன்றரை மாதம் முன்புதான் மகாலட்சுமியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியிருந்தது] அந்த குறிகிய கால இடைவெளியையும் தங்கச்சுரங்கதின் போட்டியையும் சமாளித்து கணிசமான வசூலையும் பெற்றது.
மதுரையில் அதே நேரத்தில் சென்ட்ரலில் திரையிடப்பட்ட சங்கிலி திரைப்படம் எப்படி சந்திப்பு சென்னையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி சாதனை புரிந்ததோ அதே போன்றே சாதனையை புரிந்தது. நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் குறிப்பாக 1980-களில் வந்த படங்கள் ஓடாது என்று கொண்டிருந்ததையெல்லாம் முறியடித்து ஒரு வார வசூலில் ரூபாய் 80,000/- ஐ தொட்டு கணிசமான லாபத்தை வினியோகஸ்தருக்கு பெற்று தந்தது சங்கிலி.
இதே போல் நெல்லையில் எடுத்துக் கொண்டால் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ஒரு வார காலம் கலக்கியதை தொடர்ந்து ஸ்டைல் சக்கரவர்த்தியின் ராஜா அதே திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டது. அண்மைக் காலமாக எந்த பழைய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை பெற்று ஒரு வார விநியோகஸ்தர் பங்காக சுமார் பதினாலயிரம் [Rs 14,000/-] பெற்று தந்திருக்கிறது.
அதே நெல்லை சென்ட்ரலில் ஜூனில் வெளியான எங்கள் தங்க ராஜாவும் சரி தன பங்குகிற்கு விநியோகஸ்தர் பங்கு தொகையாக சுமார் 11,000/- ரூபாய் பெற்று தந்திருக்கிறது. இதை பார்த்து உள்ளம் பூரிப்படைந்த அரங்க உரிமையாளர் என்னவெல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கொண்டு வாருங்கள் திரையிட்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்பவர் நடிகர் திலகம் என்பதற்கு மற்றும் சில சான்றுகளும் தருகிறோம்.
மதுரையில் ஜெய்ஹிந்தபுரம் ஏரியாவில் அமைந்திருக்க கூடிய B கிளாஸ் தியேட்டர் அரவிந்த். பொதுவாக கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படுபவர்கள் அந்த திரையரங்கிற்கு வருவதை தவிர்ப்பார்கள். அந்த திரையரங்கில் மே மாதம் மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெற்றிகரமாக ஓடி வாடகைக்கு எடுத்து போட்டவருக்கு லாபம் கொடுத்தது கூட பெரிய விஷயமில்லை. கிளாஸ் படமான உயர்ந்த மனிதன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த திரையரங்கில் வெளியிடப்பட்டு அதுவும் வெளியிட்டவர்க்கு ஷேர் பெற்று கொடுத்திருக்கிறது.
இது போன்றே கோவை மாநகரில் அமைந்திருக்கும் டிலைட் திரையரங்கம். கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் பெண்கள் தவிர்க்கும் திரையரங்கம். காரணம் அதன் அருகே அமைந்திருக்க கூடிய டாஸ்மாக் பார். இதன் காரணமாகவே அங்கே இரவுக் காட்சி கிடையாது. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலிலும் அண்மையில் அங்கு வெளியான தங்கபதக்கம் வெளியிட்டவருக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.
ஆக எந்த ஊரிலும் எந்த சூழலிலும் எந்த அதிகார அரசியல் பின்பலமும் இல்லாமல் சாதனை புரிபவர் நடிகர் திலகம் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.அது வரும் காலங்களிலும் தொடரும். அந்த மகிழ்ச்சியான செய்திகளை நாம் இங்கே பகிர்ந்து கொள்வோம்.
அன்புடன்
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 1
முத்தமிழ் முழக்கமும் மூவேந்தர் முரசமும் முக்கனிச்சாரமும் மும்மூர்த்திகளின் அருளும், எமது மகளிரின் நால்வகை குணங்களும், ஐவகைநிலங்களும் பஞ்சபூதமும், அறுசுவையும், ஏழுகடல் ஏழுமலையும், எண்திசையும் நிறைந்திட்ட இப்புவியில் நவரசமும் காட்டி, பத்துத்திங்கள் கலைத்தாய் ஈன்றெடுத்த அவனியின் பத்தும் பறந்திடாத நடிப்புப் பசியுடன் கோலோச்சிய ஒரேஒரு நடிப்புக்கடவுளே! இருவிழிநீர் கோர்த்திட இருகரம் கூப்பி உங்கள் நினைவலைகளில் மூழ்கி முத்தெடுக்கும் இத்திரியில் நடிகர்திலகத்தின் கோடானுகோடி புகழார்வலர்களில் ஒருவனாக இருப்பதே என் வாழ்வின் பாக்கியம்!
https://i1.ytimg.com/vi_webp/xsCtzX-9TiU/mqdefault.webp
https://www.youtube.com/watch?v=GvTuUhcqEaw
https://www.youtube.com/watch?v=pgoqYK2fw08
அருமையான தொகுப்பு முரளி சார்
JULY-1971
ANANTHA VIGADAN
http://i58.tinypic.com/23rqu7o.jpg
esvee sir
என்ன சொல்லி எப்படி சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை
மிக அருமை
மூவேந்தர்கள்
(என அன்நாளில் அழைக்கப்பட்டார்கள்)
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...20311334_n.jpg
நண்பர் RKS அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார். பெருந்தலைவரின் பிறந்தநாள் பற்றியும் நடிகர் திலகத்தின் நினைவு நாள் பற்றியும் உரையாடல் நடந்தது. சென்ற வருடம் பெருந்தலைவரின் பிறந்த நாள் அன்று அவர் தமிழக முதல்வராக இருந்தபோது ஏற்படுத்திய தொழிற் புரட்சி பற்றி நமது நடிகர் திலகம் திரியில் பதிவு செய்திருந்தேன். அதை மீண்டும் தனக்காக மீள் பதிவு செய்ய முடியுமா என்று நண்பர் கேட்க இதோ அவருக்காக இந்த மீள் பதிவு.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்
தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.
கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்
தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
போன்றவை துவக்கப்பட்டன.
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.
அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.
இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.
எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.
மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?
அன்புடன்
Thanks Yukesh Sir, Senthil Sir,Esvee sir ,Siva,Murali,and RKS.
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
1972 பிறந்தது. முதல் படமாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா ஜனவரி 26 அன்று திரையரங்குகளுக்கு விஜயம் செய்தார். மதுரையில் சென்ட்ரலில் வெளியான படத்தின் ஓபனிங் ஷோ பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். இனி இந்த முதல் படமே 100 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் என்ற வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனவரி 26 புதன்கிழமை. அன்று 4 காட்சிகள். படத்தின் excellent ரிப்போர்ட் பார்த்ததும் வேலை நாட்களாக இருந்தும் 27 மற்றும் 28 வியாழன், வெள்ளி தினங்களிலும் காலைக் காட்சி சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இதற்கு பிறகு வந்த சனி ஞாயிறு இரண்டையும் சேர்த்தால் ஆக முதல் 5 நாட்களில் நடைபெற்ற 20 காட்சிகளும் புல். ப்ளாக் டிக்கெட் heavy rate-ல் போனது. முதல் 15 நாட்களில் நடைபெற்ற 52 காட்சிகளும் புல். அதே வேகத்தில் முதல் 23 நாட்களில் நடைபெற்ற 78 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 25-வது நாள் சனிக்கிழமை காலைக் காட்சிதான் சற்று கவலை தரக் கூடியதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க 24-வது நாள் வெள்ளியன்று மதியக் காட்சியில் சவாலே சமாளி படத்திற்கு ஏற்பட்டது போல் ஒரு ஷாக் ஏற்பட்டது. ஸ்ரீதேவியில் நடந்தது போலவே எண்ணிகையில் வெகு குறைவான டிக்கெட்டுகள் மட்டும் மீதம் இருக்க தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. இது ரசிகர்களை மிகவும் கோபத்துகுள்ளாகியது. மன்ற நிர்வாகிகள் அல்லது ரசிகர்கள் அரங்கின் வெளியே இருந்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
அந்த பக்கம் பிப்ரவரி 4 அன்று சிந்தாமணியில் சங்கே முழங்கு ரிலீஸ். 1972-ல் வெளியான எம்ஜிஆரின் முதல் மூன்று படங்களும் சிந்தாமணியில் வெளியாக இருந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கடைசி நேரத்தில் நல்ல நேரம் படம் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸால் அரங்கு மாற்றப்பட்டதையும் குறித்திருக்கிறேன். இந்த சூழலில் வெளியான சங்கே முழங்கு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சொல்லப் போனால் 72-ல் வெளியான படத்தில் 1968-ல் நடைபெற்ற தென்காசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்ற செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழை எம்ஜிஆர் படித்துக் கொண்டிருப்பது போல் காட்சி வரும். இந்த படம் தொடர் ஹவுஸ் புல் ஆகவில்லை.
மார்ச் 10 அன்று நல்ல நேரம் மார்ச் 11 அன்று ஞான ஒளி ரிலீஸ். இரண்டு படங்களின் ரிப்போர்ட் பற்றி ஏற்கனவே பேசினோம். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை பொறுத்தவரை ஞான ஒளி மற்றொரு பாபு என்றே சொல்லலாம். அதாவது உணர்வுபூர்வமான roller coaster ride. இதற்கு repeat ஆடியன்ஸ் factor ஒரு முக்கியமான காரணி. அதையும் தாண்டிய ஒரு ரெஸ்பான்ஸ் படத்திற்கு கிடைத்து தொடர் ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருக்கும் போது இரண்டாம் வாரம் என நினைக்கிறேன். வியாழன் அல்லது வெள்ளி ஏதோ ஒரு விசேஷ நாள் வரவே அதற்காக அன்றைய தினம் சிறப்புக் காட்சியாக காலைக் காட்சி போடப்பட்டது. அது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு வினையாக வந்தது. நல்ல நேரம் படத்தைப் பொறுத்தவரை அலங்கார் மற்றும் மூவிலாண்ட் திரையரங்குகளில் வெளியாகி இரண்டிலும் சேர்த்து 100 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது என்று ஞாபகம்.
இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காட பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்.
(தொடரும்)
அன்புடன்
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 2
தமிழ் திரையுலகில் பாடல் காட்சிகளில் பாடலின் கருத்து மற்றும் காட்சி சூழ்நிலைக்கேற்ற close-up expressions and body language, பின்னணி பாடும் கலைஞரின் குரல் modulations மற்றும் பாடல் வரிகளுக்கேற்ற perfect lip movement synchronization.....இவற்றின் சொந்தக்காரர் என்றுமே நடிகர்திலகம் மட்டுமே! தனது முதல் காவியமான பராசக்தியில் ஒரு புதுமுக நடிகர் என்ற எண்ணமே தோன்றவிடாது இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமனின் கடினபாவமிக்க பாடல்வரிகளை உள்ளத்தில் வாங்கி உதட்டில் வெளிப்படுத்தும் அழகை கா...கா பாடலின் மூலமும் (பெரும்பாலும் single shot frames per stanza of the song! without any camera fear....), பலே பாண்டியா திரைப்படத்தில் தனது குரலாகவே மாறிவிட்ட TMS வாயிலாக நீயே உனக்கு நிகரானவன் பாடலின் மூலமும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திய மந்திரவித்தையை ( இக்காட்சியின் பாதிப்பை மோகன்லாலின் "சித்ரம்" மலையாளத் திரைப்படத்தில் உணரமுடியும்) இக்காணொளிகள் உறுதி செய்கின்றன!
https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE
https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30
https://www.youtube.com/watch?v=eX_F2JR7Etk
10.01.1973
திரையிடப்பட்ட
வசந்த மாளிகை
யாழ்நகர்
வெலிங்டன்.....208 ..நாட்கள்
லிடோ...............28......நாட்கள்
ஓடிமுடிய பெற்ற மொத்த வசூல்
5.54.419.00
யாழ்நகரில் முதல்முதலாக 5லட்சத்தை தாண்டிய படம் வசந்த மானிகை
இரண்டாவதாக 5லட்சத்தை தாண்டிய படம் பைலட் பிரேம்நாத்
மூன்றாவதாக 5 லட்சத்தை தாண்டிய படம் உத்தமன்
சாதனையின் சிகரம் சிவாஜி சிவாஜி சிவாஜி
http://chennaionline.com/images/gall..._Photos_38.jpg
http://i157.photobucket.com/albums/t...psed1199a5.jpg
Dear All,
Due to hectic work schedule I was not able to visit this thread for the last 7/8 months.
How are you Ramajayam Sir?
After Pasamalar Function we are not in touch.Hope you are doing well.
Pammalar sir please let me know how to transfer Rs.1000/- for one copy of N T Filmography.
When it will be ready.I am eagerly awaiting to see that.
Regards to all fans.
Mohan Shivaji
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 3
மழையில் நனைந்து ஆடிப் பாடும் (Romantic Monsoon songs) அனுபவத்திற்கு தயாராகுங்கள் !!!!
Just for breaking the monotony....enjoy Gene Kelly's fantastic immortal dance sequence in his "Singing in the Rain"
தமிழ்த் திரையுலகில் காதல் பாடல்கள் தொகுப்பில் 'மழையில் நனைந்து' பாடும் பாடல்கள் ஏராளம்! காதல் மன்னரின் 'அவளுக்கென்று ஒரு மனம்', ரேவதியின் நடிப்பில்ஒரே மாதிரியான காட்சிகளில் வெளிவந்த 'புன்னகை மன்னன்' மற்றும் 'மௌனராகம்' , நடிகர்திலகத்தின் 'சபாஷ் மீனா' .........ராஜ்கபூர் நர்கிஸ் நடிப்பில் Shree420 குறிப்பிடத்தக்கவை! ஆனால் இப்படங்களுக்கெல்லாம் முன்மாதிரி மிகப்பழைய ஆங்கில பிரம்மாண்டமான Gene Kelly's Singing in the Rain என்பது வியப்பாக இருக்கும்!
சந்திரபாபு, நாகேஷ், ரவிச்சந்திரன், கமலஹாசன் துவங்கி பிரபுதேவா, லாரன்ஸ் வரை நமது நடன கதாநாயகர்கள் கடமைப்பட்டிருப்பது Fred Astaire and Gene Kelly , Elvis Presley and Michael Jackson என்னும் நான்குHollywood நடன ஜாம்பவான்களே!
https://www.youtube.com/watch?v=D1ZYhVpdXbQ
https://www.youtube.com/watch?v=2pjQ9qXwffg
https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU
https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM
https://www.youtube.com/watch?v=ofVnjzqy6cE
https://www.youtube.com/watch?v=mWbC_0o8J4k
இன்று மதியம்தான் மதுரை மாநகரில் ஹீரோ 72-ன் சாதனைகளைப் பற்றி பேசினோம். 72-ல் மட்டுமல்ல 2014-லும் தன்னை வெல்ல யாரும் இல்லை என்பதை மீண்டும் இன்று நிரூபிக்கிறார் நடிகர் திலகம். 1980-களுக்கு பிறகு வந்த நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடுகளில் ஓடாது என்ற மாயை தோற்றம் மீண்டும் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு புதிய சாதனை படைக்கிறது. இன்று நான்கு காட்சிகளில் மட்டும் படத்தை கண்டு களித்தவர்கள் 716 பேர். இதில் பெரிதும் குறிப்பிட வேண்டிய விஷயம் இன்றைக்கு மட்டும் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கையில் பெண்கள் மட்டுமே 100 பேர். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? தொலைக்காட்சி பெட்டியை விட்டு வெளியே வராத பெண்கள் அதுவும் இன்று முதலாம் ஆடி வெள்ளி, அந்த நாளில் காலைக் காட்சி [பல வருடங்களுக்கு பிறகு பெண்கள் வந்திருக்கின்றனர்] பகல் காட்சி மற்றும் மாலைக் காட்சி [இதற்கு மட்டும் 50 பேர்] என்று அனைத்துக் காட்சிகளுக்கும் பெண்கள் [நான் குறிப்பிடுவது பெண்கள் தனியாக திரையரங்கிற்கு வருவது] வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரீச். தொடரும் நாட்களின் விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்வோம்.
அன்புடன்
It is quite evident sivaa sir that our God of World Cinema is the UNDISPUTED BOX OFFICE EMPEROR IRRESPECTIVE OF COUNTRIES....
We can see 10 different magazine giving 10 different totals of number of 100 days films !
PEOPLE HAVE ALREADY STARTED MAKING NOTE OF IT AND NOW STARTED REALIZING POLITICAL SUCCESS IS DIFFERENT ....FILM CAREER SUCCESS IS DIFFERENT.....though better late than never !
I AGAIN REPEAT ! NONE HAS ACHIEVED THIS STATUS SO FAR !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 100 நாட்கள் மற்றும் 175உம் அதற்க்கு மேலும் ஓடிய படங்களின் எண்ணிக்கை விபரங்கள் அனைவரின் பார்வைக்கும் !
http://i501.photobucket.com/albums/e...psd2417045.jpg
UNLIKE OTHERS, THIS DOES NOT INCLUDE 100 DAYS RUN FILM BY SHIFTING
http://i501.photobucket.com/albums/e...ps7def0b43.jpg
July ஜூலை மாதத்தில் வெளியான நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியல் - Courtesy :- Raghavender Sir
1. Thirumbi Par திரும்பிப்பார் 10.07.1953
2. Anbu அன்பு 24.07.1953
3. Thuli Visham துளி விஷம் 30.07.1954
4. Annaiyin Aanai அன்னையின் ஆணை 04.07.1958
5. Ellam Unakkaga எல்லாம் உனக்காக 01.07.1961
6. Sri Valli ஸ்ரீ வள்லி 01.07.1961
7. Vadivukku Valaikaappu வடிவுக்கு வளைகாப்பு 07.07.1962
8. Paar Magalae Paar பார் மகளே பார் 12.07.1963
9. Kai Kodutha Deivam கை கொடுத்த தெய்வம் 18.07.1964
10. Thiruvilaiyaadal திருவிளையாடல் 31.07.1965
11. Thiruvarutchelvar திருவருட் செல்வர் 28.07.1967
12. Thillaana Mohanambal தில்லானா மோகனாம்பாள் 22.07.1968
13. Savaalae Samaali சவாலே சமாளி 03.07.1971
14. Thaenum Paalum தேனும் பாலும் 22.07.1971
15. Dharmam Engey தர்மம் எங்கே 15.07.1972
16. Engal Thanga Raaja எங்கள் தங்க ராஜா 15.07.1973
17. Imayam இமயம் 21.07.1979
18. Loory Driver Raajaakkannu லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 03.07.1981
19. Thaaikku Oru Thaalaattu தாய்க்கு ஒரு தாலாட்டு 16.07.1986
20. Once More ஒன்ஸ் மோர் 04.07.1995
சிறப்புத் தோற்றம்
21. Kuzhandaigal Kanda Kudiyarasu (G) குழந்தைகள் கண்ட குடியரசு 29.07.1959
22. Pillalu Thechina Thellalu Raajyam (G) (T) பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (தெலுங்கு) 01.07.1960
23. Baktha Thukkaaraam (G) (T) பக்த துகாராம் (தெலுங்கு) 18.07.1973
DURING THE INDO CHINA WAR - NADIGAR THILAGAM TOOK ALONG WITH HIM ALMOST ALL ACTORS TO ENTERTAIN OUR SOLDIERS WHO ARE TOILING IN THE BORDERS.
THIS WAS CALLED SIVAJI-SRIDHAR NIGHT.
OUR NATIONAL ACTOR's MAGNANIMITY TO SERVICE THE WARRIORS OF OUR BORDER :
http://i501.photobucket.com/albums/e...psadca91d0.jpg
BEFORE PARASAKTHI, OUR ACTING GOD HAS EVEN LENT HIS VOICE - Courtesy Raghavender sir
http://i501.photobucket.com/albums/e...ps1fc83655.jpg
PARASAKTHI - THE POST INTERVAL SESSION !
http://i501.photobucket.com/albums/e...ps778b6bf4.jpg
A LION's LOOK !!!
http://i501.photobucket.com/albums/e...ps789fca38.jpg
TIGER HUNTED BY OUR LION IN EARLY 60s
http://i501.photobucket.com/albums/e...ps389861b9.jpg
THE REAL TALENT OF NADIGAR THILAGAM UNLIKE THE REEL TALENT OF OTHERS
http://i501.photobucket.com/albums/e...ps398d02d6.jpg
THEDI VANDHA MAAPILLAI !
http://i501.photobucket.com/albums/e...ps37242ba9.jpg
SIMMA KURALUM VENGALA KURALUM
SEE THE RESPECT NADIGAR THILAGAM GIVES FOR THE ISAI KALAIGNAR !
ORU KALAIGNARUKKU KALAIGNANIN MARIYAADHAI
http://i501.photobucket.com/albums/e...ps60f0cd49.jpg