http://i60.tinypic.com/vmvn7q.jpg
Printable View
http://i60.tinypic.com/n3x2er.jpgஎன் பள்ளிபருவத்தில் பார்த்த படம் இது. சேலம் அப்சரா தியேட்டரில் முதல் காட்சியில் இந்த காட்சிக்கு மக்கள் ஆராவாரம் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. இப்போது இந்த காட்சியை பார்த்தாலும் உணர்ச்சி வசப்டுவேன். ஜீபோடு அவர் வேகமாக இந்த வயதில் ஓடுவது சரித்திரம்.. இன்று இந்த ஸ்டில்லை உங்களுக்கு பதிவு செய்வது எனக்கு மிகுந்த சந்தோசம். அப்போது இந்த படத்தை பார்க்கும்போது என் வயது பதினாறு இன்று என் வயது ஐம்பத்திரண்டு காலம் மாறினாலும் நினைவுகளுக்கு வயதாகவில்லை..நன்றி..நண்பர்களே..
அந்த கால கட்டத்தில் தலைவருக்கு வயதாகிவிட்டது என்று சில கூறு கேட்ட ஜென்மங்கள் சொல்லியதால் தலைவர் தான் எப்பொழுதும் உடலால் இல்லை மனதாலும் ஒரு வாலிபன் தான் என்று உணர்த்தி இந்த படத்தில் தலைவர் பல விசயங்களை செய்து கட்டி இருப்பார் .
குறிப்பாக தாங்கள் பதிவு செய்த ஜீப் காட்சி தலைவர் இறுதி கட்டத்தில் போடும் சண்டை காட்சி , ஒன்றே குலம் என்ற பாடலில் தலைவர் போட்டு இருக்கும் ஆசனம சூப்பர்
Yukesh Babu Sir,
Many will always "try to emulate" the Greats:
http://www.youtube.com/watch?v=Yx93YdMYL4k
http://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY
http://www.youtube.com/watch?v=dQaf7QU-OPQ
http://www.youtube.com/watch?v=AvFvCb4BliI
http://www.youtube.com/watch?v=TbH_6KGPobI
http://www.youtube.com/watch?v=Q1SRRwCP2UM
http://www.youtube.com/watch?v=Tvd1jA7Lv24
http://www.youtube.com/watch?v=w3RtLBdNeog
http://www.youtube.com/watch?v=r0HGz3QoSL8
http://www.youtube.com/watch?v=xCzVQBlIRQE
http://www.youtube.com/watch?v=LaiQgQ8_2FU
http://www.youtube.com/watch?v=Jopzs_0xOgU
http://www.youtube.com/watch?v=_cW2aNdWT4o
http://www.youtube.com/watch?v=iMrTgx9RV4w
and now S.A.Asokan - Valavanukku Vallavan
http://www.youtube.com/watch?v=olTtgpu4au4
saileshbasu;Super Posting Sir:
சார் , NT பட பாடல்களை பதிவிட்டு எங்கள் மனங்களை குளிர வைத்துவிட்டீர்கள் - நன்றி பல . உங்கள் திரியில் , NT பட பாடல்களை
பார்க்கும் பொழுது , ஒரு மொழி தெரியாத வெளிநாட்டில் , ஒரு தமிழரை சந்திக்க நேரிட்டு அவருடன் பேசும் போது எவள்ளவு சந்தோஷம் வருமோ அப்படி பட்ட ஒரு எல்லையில் இருக்கிறோம் ---- உங்கள் திரியில் ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லும் பண்பும் , ஒற்றுமையும் இந்த திரியில் பங்கு ஏற்க வேண்டும் என்ற ஆவலை எனக்கு ஏற்படுத்தின - ஒரு வாய்ப்பு கொடுத்த திரு கலைவேந்தனுக்கும் - உங்கள் எல்லோருக்கும் மீண்டும் என் பணிவான நன்றி - MT யை பற்றி பேச நிறைய விஷயங்கள் உள்ளன - மீண்டும் வருகிறேன்
அன்புடன்
ரவி
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்கள்
http://i59.tinypic.com/34sphkh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சட்டசபையில் எனது வாதத்தைக் கேட்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களே மறுநாள் வந்து பதில் கூறுவதாகச் சென்றதை மறந்துவிட வேண்டாம்!” - கருணாநிதி
--------------------------------------------------------------------------------
ஒரு முறை மக்கள் திலகத்தை சட்டப்பேரவையில் கருணாநிதி பாவி என்று அழைத்தார் . அதற்கு மக்கள் திலகம், ஆம் நான் பாவி தான் , பாவி என்றால் சாது என்று பொருள் என்று விளக்கம் சொன்னார் .
உடனே எழுந்த கருணாநிதி , அப்படி எங்கே பொருள் கூறப் பட்டுள்ளது என்று நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டார் .
பதிலுக்கு மக்கள் திலகம் , யாழ் அகராதியில் சாது என்று பொருள் உள்ளதாக சுட்டிக் காட்டியதை கருணாநிதி மறக்க வேண்டாம் ....
யாரை மலையாளி என்றாரோ அவரே இவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த வரலாறும் இதே சட்டப் பேரவையில் தான் அரங்கேறியது என்பதை கருணாநிதி மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோமே
courtesy net
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரைச் சூட்டி செல்வி ஜெயலலிதாவுக்கு மோடி பதிலடி , நாடார் சமூகத்தை கவரத் திட்டம் .- தினமலர் பிதற்றல்.
---------------------------------------------------------------------------------------------------
வரலாற்றை முழுவதுமாக மழுங்கடிக்கச் செய்தல் என்பது இது தான் . முதலில் காமராஜர் அவர்களை மக்கள் திலகம் எப்படி அணுகினார் என்று பார்ப்போம்
1960 களில் காமராஜரை மிகவும் தரக்குறைவாக தி மு க வினர் மேடைகள் தோறும் வசை பாடிய காலக் கட்டம் . அப்பொழுது , மக்கள் திலகம் தி மு க வில் இருக்கிறார் , பொதுச் செயலாளராக பேரறிஞர் அண்ணா அவர்கள் இருக்கிறார்கள் .
15 ஜூலை 1965 ம் ஆண்டு . காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு மக்கள் திலகம் பேசியது .
" அண்ணா எனது வழிகாட்டி , ஆனால் தலைவர் காமராஜர் " - என்பது தான் ....
இதனால் தி மு க வில் மக்கள் திலகத்திற்கு எதிராக குரல் எழும்பியது , ஆனால் மக்கள் திலகத்தை புரிந்துக் கொண்டிருந்த அண்ணா அவர்களோ இது குறித்து எதுவும் கூறவில்லை . மக்கள் திலகமும் தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியுடன் கூறிவிட்டார் . அது தான் மக்கள் திலகத்திற்கும் தி மு க விலிருந்த கருணாநிதி கும்பலுக்குமான முதல் உரசலாக அமைந்தது .
அது மட்டுமா ? மக்கள் திலகம் அ தி மு க வை துவங்கிய பின்னரும் காமராஜர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தப் பொழுதிலும் , அவர் பதிலுக்கு அவரை விமர்சிக்கவில்லை .
ஜனவரி 1973 , கணையாழி பத்திரிக்கையில் வந்த மக்கள் திலகத்தின் பேட்டியே அதற்கு உதாரணம் , அதில் வைக்கப் பட்ட கேள்வியும் மக்கள் திலகத்தின் பதிலும் இதோ :
கேள்வி : காமராஜ் உங்கள் இயக்கத்தை கண்டித்திருக்கிறாரே , எதனால் அப்படி ?
மக்கள் திலகத்தின் பதில் : -
" எனக்கு காரணம் புரியவில்லை ,. கொள்கை , தார்மீக அடிப்படையில் ராஜாஜி என்னை ஆதரிக்கிறார் . காமராஜ் வேறு காரணங்களுக்காக எதிர்கிறார் . ஆனாலும் அவருடைய தியாகத்தையும் மக்களிடையே அவருக்குள்ள பெருமையையும் நான் மதிக்கிறேன் . என்னைத் தூற்றினாலும் நான் அவரை வாழ்த்துவேன் . "
மேலும் திண்டுக்கல் இடைத் தேர்தலில் காமராஜரும் பெரியாரும் கூட அ தி மு க வுக்கு எதிராக விமர்சனங்கள் வைத்தப் பொழுதும் , அ தி மு க அமோக வெற்றி பெற்றது .
இன்னும் சிலர் சொல்வதுண்டு , மதிய உணவுத் திட்டத்தை மக்கள் திலகம் அபகரித்துக் கொண்டார் என்று , அதுவே தவறான கூற்று .
18 ஜூலை 1982 திருச்சியில் சத்துணவுத் திட்டத்தை மக்கள் திலகம் துவங்கி வைக்கையில் , காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை விரிவு படுத்தியே இந்தச் சத்துணவு திட்டம் கொண்டு வரப் படுகிறது என்று சொன்னவர் தான் மக்கள் திலகம் ...
அது மட்டுமில்லை , வரலாற்றிலேயே இல்லாத கதையாக , கிட்டத் தட்ட 70 லட்சம் குழந்தைகள் இந்த விரிவு படுத்தப் பட்ட சத்துணவுத் திட்டத்தினால் பயனடைந்தார்கள் , அது காமராஜர் காலத்தில் இல்லை .
காமராஜர் ஆட்சிக் காலத்தில் சில நூறு மதிய உணவுக் கூடங்கள் சில பள்ளிகளில் மட்டுமே செயல் பட்டது , ஆனால் மக்கள் திலகத்தின் விரிவு படுத்தப் பட்ட சத்துணவு திட்டத்தின் கீழ் 17000 இற்கும் மேற்பட்ட சத்துணவுக் கூடங்கள் உடனடியாக திறக்கப் பட்டது . இதுவும் வரலாறு .
சத்துணவு சமைப்பதற்கான ஆயாக்கள் , பொறுப்பாளர்கள் , அமைப்பாளர்கள் என்று 10000 இற்கும் அதிகமான நபர்களுக்கு உடனடி வேலையும் கிடைத்தது . இந்த பணி நியமனமே ஒரு உலகச் சாதனை தான் .
இது மக்கள் திலகத்தின் காலத்தில் என்றால் , அதே சமயத்தில் அம்மா அவர்களது அரசியல் திருப்புமுனையில் நாடார் சமூகத்தினரின் பங்கு மிகவும் முக்கியமானது .
அம்மா அவர்களது முதல் அரசியல் சவாலாக அமைந்தது தான் திருச்செந்தூர் இடைத் தேர்தல் . நாடார் சமூகத்தினர் அதிகப் படியாக வாழும் அந்தத் தொகுதியில் 1983 இல் இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டது . பால் கமிஷன் விவகாரத்திலும் , திருச்செந்தூர் கோவில் அதிகாரி கொலை விவகாரத்திலும் மிகவும் பரபரப்பாக இருந்த சமயம் அது .
தொகுதி முழுவதும் கருணாநிதியும் , அன்பழகனும் , வைகோ வும் சுற்றி வந்தனர் . மக்கள் திலகம் 5 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார் , மற்றப் படி தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டது அப்பொழுதைய கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த அம்மா அவர்கள் தான் .
வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்கிற சூழலில் , அ தி மு க 1710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அந்தத் தேர்தல் பிரசாரத்தின் பொழுது , நாடார் கிறிஸ்துவர்கள் அம்மா அவர்களிடம் வைத்த கோரிக்கை , அவர்கள் பிறபடுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் ... அதையும் மக்கள் திலகத்திடம் வலியுறுத்தி பெற்றுத் தந்தவர் அம்மா அவர்கள் ....
எனவே நாடார் சமூகத்திற்கு உரிமை கொண்டாடும் முன்னர் , அவர்களுக்காக செய்தது என்ன என்பதை பாரதிய ஜனதாவினர் பட்டியலிடட்டும் , சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பதில் இவர்களது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தட்டும் , நாடார் இன மக்கள் அதிகமாக பாதிக்கப் படக் கூடிய விவகாரம் அது .
காமராஜர் காலத்திலேயே வெற்றிகளை குவித்த இயக்கம் அ தி மு க . அதே சமயதில் அவர் மீது மட்டற்ற மரியாதையும் நன்மதிப்பையும் வைத்திருந்த , வைத்திருக்கும் இயக்கம் அ தி மு க . எனவே , தினமலர் காவடி எடுக்க வேறு ஏதாவது காரணத்தை தேடித் பிடிக்கட்டும் ....
courtesy net
ஆலயம் பதினாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்!’
– என்று பாரதி பாடியது எனக்கு உடன்பாடல்ல!
குடற்பசி கும்பியைக் குடைந்தெடுக்கும்போது –
ஏழை மாணவன் செவிகளில் ஏறுமா –
‘ஆத்தி சூடியும் அறஞ்செய விரும்பும்?’
அதனால்தான் –
‘சோத்தெப் போட்டு சொல்லிக் கொடுங்க!’
என்றார் கதர் வேட்டிக்காரர்;
அதை இன்னும் அகலப்படுத்தினார்
கறை வேட்டிக்காரர் !
- ' காவியக் கவிஞர் ' வாலியின்
' எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து .
courtesy net
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....
#சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !
நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்கவேண்டும்"
"ஆஸ்தியில் நம்பிக்கை வைப்பதைவிட ...ஆற்றலில் நம்பிக்கை வை " இவைகளையும் எம்ஜிஆர்தான் சொன்னது.
repeated article but interesting
இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.
இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.
இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.