நன்றி திரு.முத்தையன்
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
5 1/2 ஆண்டுகளாக ஒரு நடிகரின் படம் தொடர்ந்து ஒரு திரையரங்கில் திரையிடப்படுகிறது என்றால் உண்மையிலேயே இது கின்னஸ் சாதனை திரு.செல்வகுமார் சார். இதை கின்னஸ் சாதனை பதிவுக்கு உரிய முறையில் எடுத்துச் சென்றால் நிச்சயம் சாதனையாக இடம் பெறும் என்று கருதுகிறேன். தகவல் தெரிவித்த திரு.டி.டி. செல்வன் அவர்களுக்கும் பதிவிட்ட உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உண்மை வாழ்வில் நம்மால் அநீதி இழைக்கும் யாரையும் சவுக்கால் விளாச முடியாது ......ஆசை இருந்தால் கூட! அதை நம் சார்பாக மக்கள் திலகம் நிறைவேற்றும்போது மனம் நிறைகிறதே! என்னைப் பொறுத்த வரை மக்கள் திலகத்தின் ஒப்பனை துடிப்பும் துள்ளலுமாக வாழ்நாள் முழுவதும் மனதில்
பசுமரத்தாணியாக இறங்கியது அவரது வாழ்நாள் உச்ச சாதனைப் படமான எங்கவீட்டுப் பிள்ளையின் இந்த முத்திரைப் பாடலிலேதான் ! அந்த கால கட்டத்தில் இந்த சவுக்கடி zorroவாக தன்னை கற்பனை செய்து பாராதவர் எவருமில்லையே! எம்ஜிஆரிடம் சவுக்கடி வாங்க நம்பியாராக மாறவும் துடித்தவர் நிறைந்ததால்தான் இந்த ஒரே பாடல் அவரை ஆட்சி நாயகனாகவும் காட்சி மாற்றம் காண வைத்தது !!
காசு... பணம் ... துட்டு...மணி ....மணி .....நமக்கெல்லாம் என்றும் கற்பனைக் கனவே! பொன்னும் மணியும் வைரமும் கோமேதகமும்...கரன்சியும் காயின்களும்....கனவில் மட்டுமே நமக்கு சாத்தியம்!
மிகவும் ஹேண்ட்சம்மான தோற்றப் பொலிவில் தேவதையாக விஜயலலிதாவுடன் பசுமரத்தாணியாக நச்சென்று உலகின் ஸ்டைல்மன்னன் தானே
என்று நடை பயில்கிறார் நடிகர்திலகம் !! நம் கனவுக்குள் கனவாக அவர் என்றும் ஒளிவீசுவது இக்காட்சியமைப்பிலேதான்!! அவரோடு சேர்ந்து
நம்மையும் செல்வத்தின் வளத்தில் வெல்வெட்டின் விரிப்பில் மிதக்க விடுகிறாரே !!
இயற்கையிலேயே அலை பாயும் அழகிய ஹேர் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் திரைக் காதல் உருவகத்தின் மொத்த குத்தகைதாரரான காதல் மன்னர்.
என்னைப் பொருத்தவரை சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களில் அவர் மிகமிக எடுப்பாக கச்சிதமான உடல்கட்டில் பொருத்தமான உடையலங்காரத்தில் பசுமரத்தாணியாக நெஞ்சில் நுழைந்தது சாந்தி நிலையம் படத்தின் அழியாத இந்த ஓவியக் காட்சியமைபபில்தான்!!
-----------------------------
நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கு,
கருத்துக்களும் நீங்கள் தேர்வு செய்யும் பாடல்கள் மட்டுமல்ல, உங்கள் வர்ணனைகளும் பிரமாதம். தொடருங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்