//நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..//
பஸ்தான் சின்னா! நேற்றே ஆன்லைனில் புக்கிங் பண்ணியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும். 7 மணி நேரப் பயணம்.உங்களை மாதிரியே ஊருக்கு புறப்படறச்சே அவசரமா பதிவு போடுறேன்.:)
Printable View
//நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..//
பஸ்தான் சின்னா! நேற்றே ஆன்லைனில் புக்கிங் பண்ணியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும். 7 மணி நேரப் பயணம்.உங்களை மாதிரியே ஊருக்கு புறப்படறச்சே அவசரமா பதிவு போடுறேன்.:)
//எந்தக் காதல் பாட்டானாலும் எஸ்.பி.பி தான் வருகிறார் அந்தக்க் காலப் பாட்டுக்களில்.. நீர் திட்டினாலும் பரவாயில்லை..ஒரு பாட் போட்டுக்கட்டா..அத்தியாயத்துக்கு செலக்ட் செய்து எடுத்துவைத்திருந்த பாடல்களில் 80 பர்சண்ட் எஸ்.பி.பி.//
. பாவம்...புள்ள கெஞ்சுது.:) போடுங்க சின்னா! நான் எங்கப்பா திட்டினேன்? அப்பப்பா வைவேன்.:) அவ்ளோதான்.
திடீர்னு பார்த்தா ஒரு பாட் சிக்கிச்சு..ஷாக்காயிட்டேன்..:)
எஸ்.எஸ். ஆர் லதா.. ஏங்க என்னதாங்க நடந்தது..?!
அது போட்டாச்?
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக..சிலுச்சிலு குளுகுளு..
https://youtu.be/kEz09v7wPxI?list=PL2EC83F9FF28FCF6B
//பாவம்...புள்ள கெஞ்சுது. போடுங்க சின்னா! நான் எங்கப்பா திட்டினேன்? அப்பப்பா வைவேன். அவ்ளோதான்.// :) :) ஓ.கே.. சமர்த்தா போய்ட்டு வாங்க.. செந்தில் செந்தில்வேல் இருவரையும் ரொம்ப க் கேட்டதா சொல்லுங்க.. மருதமலை போனீங்கன்னா.. மயில் ரொம்ப இருக்குமாம் முருகனைப் பார்த்துட்டு பார்த்துவாங்க..அழகா இருக்கும் ( நான் நெஜம்மாவே பறவை மயில் சொன்னேங்க)
சின்னா!
நல்லா ஏமாந்தீரா? அது ஊட்டி வரை உறவு படத்தில் வரும் 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்' பாட்டுத்தான். ரீமிக்ஸில் யாரோடும் பேசக்கூடாது பாட்டின் ஆடியோவைப் போட்டு கலந்து கட்டி விட்டார்கள். அநியாயத்துக்கு ஏமாளியாய் இருக்கீரே! இந்தாங்க 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்'
https://youtu.be/hlUCEDlM-Wk
//அது போட்டாச்?//
இரட்டை மனிதன்
ல்லா ஏமாந்தீரா? அது ஊட்டி வரை உறவு படத்தில் வரும் 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்' பாட்டுத்தான். ரீமிக்ஸில் யாரோடும் பேசக்கூடாது பாட்டின் ஆடியோவைப் போட்டு கலந்து கட்டி விட்டார்கள். அநியாயத்துக்கு ஏமாளியாய் இருக்கீரே! இந்தாங்க 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்// ஹச்சோ அத முழுக்க கேக்க வேற கேட்டேன்.. தெரிஞ்ச மாதிரி இருக்கேன்னு வேறு ஒரு சம்சயம்.. ஸோ அந்தப் பாட்டு படத்துல இல்லையா..
//மருதமலை போனீங்கன்னா.. மயில் ரொம்ப இருக்குமாம் முருகனைப் பார்த்துட்டு பார்த்துவாங்க..அழகா இருக்கும் ( நான் நெஜம்மாவே பறவை மயில் சொன்னேங்க)//
மருதமலையிலே '16 வயதினிலே' ஓடுதா என்ன?:)
//அத முழுக்க கேக்க வேற கேட்டேன்//
உதட்டசவை கூடவா கவனிக்கிறதில்ல? நாலாங் கிளாஸ்ல இருந்து ரெண்டாங் கிளாஸுக்கு மாத்திட்டேன்.:)
//ஸோ அந்தப் பாட்டு படத்துல இல்லையா//
லேது:)
சின்னா!
இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.:)
https://youtu.be/4O4W1yeiBpk
வாசு சார்,
எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் இடம் பெற்ற,என் மனம் கவர்ந்த நான் உன்னை அழைக்கவில்லை-என் உயிரை அழைக்கிறேன் என்ற
பாடலைப் பதிவிடுங்கள்.
அன்புடன் கோபு.
கோபு, இந்தாருங்கள்..
https://youtu.be/XNOjcAZJoSM
//சின்னா!
இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.// டிஸ்லைக் திஸ் போஸ்ட்.. நற நற :)
நான் போட நெனச்சேன்னு சொன்னேனா என்ன..போட்டாச்சான்னு தானே கேட்டேன்..
வாசு சிக மதுண்ணா எல்லாம் பட்டய கிளப்புகிறார்களே
அடி தூள்
கோபு ஜி...
"ஏற்றிவைத்த தீபம் ஒன்று" என எங்கிருந்தோ வந்தாளில் ந.தி. சொல்லும் கவிதை எந்தப் படத்தில் என்று கேள்வி எழுப்பி விட்டு அதிலிருந்தே நான் உன்னை அழைக்கவில்லை என்று மறுத்துப் பேசுவது நியாயமா ?
வாசு ஜி..
கோவைக் கனிகளை கொத்தாமல் சங்கீதப் பழரசம் பிழிந்து கொண்டு வாருங்கள்.....
நானும் அவசரப் பதிவுகள்தான்.. என்ன சொல்ல என்ன சொல்ல ? எத்தனை பதிவு கொட்டிக் கிடக்குது ? ( படிப்பதற்கு !! )
சிக்கா.. மேற்கண்ட வரிகளை பாட்டாகவே படித்து விட்டு அந்தப் பாடலில் வீடியோவையும் பார்த்து விட்டு கோபப் பட்டால் கம்பெனி பொறுப்பில்லை.
ராஜேஷ்.... இசையரசியின் குரலில் ஒரு தொடர் போடுங்கோ..
From Paava Mannippu
ellorum koNdaaduvom....
http://www.youtube.com/watch?v=27nZJEdKEvw
மதுண்ணா இசையரசி தொடர் தானே போட்டுட்டா போச்சு
நீங்க சொல்லி கேட்க மாட்டேனா ... ஆமா வேலனோடு ஒரே ஊர் சுற்றல் போல .. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
குட்மார்னிங்க் ஆல்..
ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்..
//ஆனாலும் சி.க.வை நீங்கள் இப்படிப் பழி தீர்த்திருக்க வேண்டாம்... பாவம்.. சி.க// அதானே ராகவேந்தர் சார்.. எனக்கு பத் வி.கு பாட் கொடுத்தார் நான் ஒண்ணே ஒண்ணு வி.கு பாட் கொடுத்தேன்..அதுக்கே இப்படி..பேசாம தமிழ் சினிமாலல நியூ வில்லன் ரோல்க்கு ட்ரை பண்ணச் சொல்லலாமா.. :)
வாங்க ராஜேஷ்..ஹைய்யா இசையரசி தொடரா..எய்துங்க எழுதுங்க..
தாங்க்ஸ் பார் ஈத் விஷஸ் ராஜ் ராஜ் சார்..
முந்தா நாளிலிருந்து நான் இருக்கும் காம்பெளண்டில் கார்பார்க்கிங்க்ல் ஐந்தாறு ஆடுகள் வந்து இற்ங்கி விட்டன.. மேலும் பத்துபன்னிரண்டு ஆடுகள் வைக்க இடமில்லாமல் ஃப்ளாட்டின் மொட்டை மாடியில் டிஷ் ஆண்ட்டென்னா அருகிலேயே கட்டிப் போட்டு... செப்டம்பர் மாதத்தில் ...ஒரே “மே” சத்தம்...
நேற்று விடுமுறை இன்று விடுமுறை.. நாளை, நாளைமறு நாள் யூஸ்வல் வீக் எண்ட் என நாலு நாள் லீவ் என்றாலும் போன, முந்தைய வருடங்களைப் போல ஒன்பது நாட்கள் லீவ் விடாததில் இங்குள்ளவர்களுக்கு (இந்த நாட்டுக்காரர்களுக்கு) வருத்தமே..
நேற்றும் சில பல ஆஸ்திரேலியன் செம்மறி ஆடுகள் வந்திறங்கின..
புதன் கிழமை ஈவ்னிங்க் அலுவலக நண்பரிடம் கேட்டேன்..போன தட்வை ஆட்டின் விலை - குட்டி ஆடு பத்துப் பதினைந்து கிலோ தேறுகின்ற ஒன்றின் விலை போன வருடம் 50 ரியாலாம்.. (கிட்டத்தட்ட 8500 ரூபாய்) இப்போ எவ்ளோ இருக்கும்னு தெரியலை என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார்..
ம்ம... ஆடு பாடல்கள் என ப் பார்த்தால்..
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இந்தாளைப் பாரு..
ஆடுவது வெற்றி மயில்..(இது வேற ஆடு..!)
வேறென்ன ஆடு இருக்கு..
இதோ ஒரு ஆடு பாடல்
https://www.youtube.com/watch?v=YNwwNagH_VE
நீங்க சொன்னது இந்த 'ஆடு' தானே
https://www.youtube.com/watch?v=LjZ_5UfE6RM
நான்: ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ..(சி.க) மாமாவைப் பாரு... அவருக்கு என்னா வேணும்னு கேளு...
ஆட்டுக்குட்டி: ... அவருக்கு நல்ல பாட்டு இருந்தா போதும்.. வேறெதுவும் வேணாம்... அது எனக்குத் தெரியும்.. நீங்கள்ளாம் கொஞ்சம் ஒதுக்கிக்குங்க.. எப்பப் பாத்தாலும் லொள்ளு பண்ணிக்கிட்டு...
மது..
தமிழகம் சுற்றும் வேலனோடு பயணம் சிறப்பாக அமையட்டும்.
ராஜேஷ்
இசையரசியின் பாடல்கள் பற்றிய தொடருக்கு காத்திருக்கிறோம்.
அபூர்வமான பாடல்களை வெளிக்கொணருங்கள்.
Here is one from Rambaiyin Kaadhal
saanchaa saayira pakkame saayira semmari aadugaLaa......
http://www.youtube.com/watch?v=Osuwl_FCMWI
ரா (ஜேஷ் மற்றும் கவ்ஜி )
பத்தில் ஒரு பங்கு இடங்களுக்குக் கூட நான் செல்லவில்லை. ஆனால் படங்களைப் பார்த்தால் ( வசூல் ராஜா படத்துக்கு கேரளாவில் ஜெய்சூரியா படத்தை முக்கால் போஸ்டருக்கு அடித்திருந்தார்கள்) நானும் உலகம் சுற்றுபவன் போலத் தெரியுது..
என்னவோ போங்கோ... வேட்டையாடுங்கோ.. விளையாடுங்கோ
https://www.youtube.com/watch?v=XxR53NQB7AU
அப்புறம்..
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்த பதினாறு வயதினிலே பாட்டு....
ஒண்ணு ரெண்டு மூணூ நாலு அஞ்சு ஆறு
எல்லா ஆடும் இருக்குதான்னு அப்படின்னு லேட்டஸ்டா போஸ்ட் செஞ்ச கண்ணில் தெரியும் கதைகள் பாட்டு
வாடா கண்ணே வெள்ளாடு வாயிருந்தால் சொல்லி விடு என்ற தங்கதுரை பாட்டு
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு... எனும் சபதம் பாட்டு
ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி என்ற புத்திசாலிகள் பாட்டு
//நான்: ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ..(சி.க) மாமாவைப் பாரு... அவருக்கு என்னா வேணும்னு கேளு...
ஆட்டுக்குட்டி: ... அவருக்கு நல்ல பாட்டு இருந்தா போதும்.. வேறெதுவும் வேணாம்... அது எனக்குத் தெரியும்.. நீங்கள்ளாம் கொஞ்சம் ஒதுக்கிக்குங்க.. எப்பப் பாத்தாலும் லொள்ளு பண்ணிக்கிட்டு...// ராகவேந்திரர் சார் :) :) தாங்க்ஸ் ஆடு பார்க்கலாம் ஆடு..இன்னிக்கு பாக்க முடியாது..பிரியாணி ஆகியிருக்கும்..
ராஜ்ராஜ்சார்..சாஞ்சா சாயறபக்கம் பாட்டுக்கு தாங்க்ஸ்..ஃபேமஸ் பாட்டு அது..இல்லியோ.. ரம்பையின்காதல் பள்ளிப் பருவத்தில் பார்த்த படம்..கோபத்தில் தங்கவேல் நண்பர்களை எருமையே கழுதையே எனத் திட்டிவிட தேவலோகம் போய்வந்த அருளினால் அவர்கள் அப்படியே மாறிவிட அவர் அம்மா வந்து..அடப்பாவி இதுவரை மனுஷங்களோட ஃப்ரெண்ட்ஸா இருந்த்..இப்போ எருமை கழுதையோட இருக்க என வருத்தப்பட..அவற்றைத் தொட்டு அம்மா இவன் ரங்கன் இவன் சங்கன் எனத் தொட்டுச் சொல்ல அவர்கள் சுய உருவம் பெறும் காட்சி ஹிலாரியஸ் ஆக இருக்கும்..
மதுண்ணா..வேட்டையாடு விளையாடு மற்றும் ஆடு பாடல்களுக்குத் தாங்க்ஸ்.. ராஜஸ்தான் ரெஸ்டாரெண்ட் எங்கிட்டு இருக்கு.. வசூல் ராஜா போஸ்டர் உவமை அழகு.. :)
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்..இதுவரை இங்கு வரவில்லை என நினைக்கிறேன்..
செவத்த பொண்ணு என்று வருகிறது..சே..லிரிக்ஸில மிஸ்டேக் :)
https://youtu.be/PrneRsXjiZ0
ஆடுகள் நனைகின்றன என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடிய " ஆடு நனைசிதாம்" என்ற பாடல் ....
http://www.mediafire.com/listen/w3a7...aigindrana.mp3
ஆடு என்றால் கடா வும் அதில் சேர்த்தி தானே. வளர்த்த கடா முட்ட வந்தால் ... கல்தூணை சேர்க்கலாமா ?
வளர்த்த கடா என்றே ஒரு படம் உண்டு ஆடு பாடல் ஏதும் கிடைக்க வில்லை...
அனுராதா "ஆடு ஆடு" ன்னு ஆடுற பாட்டு உங்களுக்கு....
https://www.youtube.com/watch?v=tkxLh_RlN-w
நன்றி சுந்தர பாண்டியன் சார்..
யெஸ்..ஆடுகள் நனைகின்றன மதுரை ஸ்ரீதேவியில் 3 நாட்கள் ஓடி அதில் ஒரு நாள் பார்த்து மறு நாள் படத்தையே மாற்றி வேறு ஒரு பழைய படம் போட்டிருந்தார்கள்..கதானாயகி ரூபா என நினைவு.. வளர்த்த கடா என்றவுடன் வாகை சூடவா வில் வரும் ஒரு கடா நினைவுக்கு வருகிறது.. ஹீரோ அதனிடம் நீஎன்ன புலியா எனக் கேட்டு முட்டு வாங்குவார்..
ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு
பச்சைப்பசேல் என்று எங்கும் மரம் செடிகள் நிறைந்த பகுதி.கண்களுக்கு ரம்மியமான காட்சி. கூட்ஸ் ரயில் வண்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அதிக பெட்டிகளை கொண்டதாய் நீளமாய் அந்த ரயில் வண்டி வளைந்து செல்லும் அழகு எல்லோரையும் கவரும்.மேலே இந்தப் பிரபஞ்சத்தை நினைக்க வைக்கும் நீல நிற ஆகாயம்.ரயில் வண்டி செல்லும் இருபுறமும் பசுமை நிறைந்த காட்டுப்பகுதி.இப்போது கூரையில்லாத அந்த திறந்த நிலைப்பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பாத மனமும் உண்டோ இப்பூவுலகில்?ஒரு ஆணும் பெண்ணும்ஆடிக்கொண்டு அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.அது மேலும் உற்சாகத்தை கூட்டுகிறதே. இப்போது அவர்கள் பாடத்தொடங்குவார்கள் போல் தெரிகிறது.அவர்கள் பாடும் அந்த பாட்டை சற்று கேட்போமா?
இப்போது அந்த மங்கைஹம்மிங் செய்கிறாள்.
ஹாஹாஹாஹாஆகாகாகாகேகேகே
குரலிலே குயில் போலும்.இவ்வளவு நேரம் அதிசயித்த அந்த இயற்கையையே மறக்கசெய்த விட்டதே.சில நேரங்களில் இயற்கையையும் மீறிரசிக்க வைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கும் இருப்பதும் இயற்கைதானோ?
இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.
காட்டுப்பகுதியை பிளப்பது போல் வந்து கொண்டிருக்கிறதுஅந்த நீள ரயில் வண்டி.
அவர்களே இந்தக் காட்சியின் பிரதானம்என்பதால் இனி மங்கை, மன்னவன் என்று அழைப்போம்.
மங்கை தொடங்குகிறாள்:
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில்பூவாகி,
காயாகி,கனியாகி வண்ணம் பெறவோ
மங்கை முடித்ததும் மன்னவர் தொடர்கிறார்...
ஹஹாஹாஹாஹாக ஹேஹேகாஹஹாஹாஹாஹா
அடேங்கப்பா என்ன ஒரு வசீகரமான குரலய்யா.இந்த ஹஹஹாஹாஹாஹஹாவுக்கு கே இப்படி ஒரு ஈர்ப்பு சக்தி என்றால் பாடலைக் கேட்டால்....
பக்கம் வரவோ பத்து விரல்களில்
பந்தல் இடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடைபோலாடஎண்ணம்
இல்லையோ
"மேலாடை மேலாட
நூலாடை போலாட"
என்று பாடுவதை கேட்கத்தான் எத்தனை இன்பம்.
மறுபடியும் அந்த ஹம்மிங்.
ஹஹஹஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாகஹஹஹஹஹஹாகாகஹா
'இந்த ஹம்மிங்கில் இன்னும்இனிமை.
இனிமை மென்மை
அந்த
மென்மை பெண்மையின் குரலில்
வெளிப்படும்போது கூடுதல் இனிமை.
ஆகாயப் பார்வையில் ரயில் நின்று கொண்டு இருப்பதை பார்ப்பதே அழகு.அது மலைப்பாதையில் ஊர்ந்து செல்வதை பார்ப்பது அழகிலும் அழகு.அப்படித்தான் இந்தக்காட்சிசெல்கிறது.
இருட்டான ஆகாயத்தில் முழுநிலவு
இருக்கும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அது போல மலையை குகைபோல பாதையாக்கி.,அந்த குகைக்குள்ளிலிருந்து பார்த்தால் இருட்டு குகை வெளிப்பிரதேச வான் வெளிச்சத்தில் வான் +முழு நிலவுகாட்சியைப் போல் இருக்குமல்லவா?அதே போன்ற இடத்தை நோக்கித்தான் இந்த ரயில் பயணம் இப்போது ஆரம்பிக்கிறது.மன்னவனும்,
மங்கையும் இணைந்தபடி இருக்க
அந்தநீள் தொடர் ஊர்தி குகைக்குள்
செல்ல ஆரம்பிக்கிறது.ஊர்தி குகைக்குள் நுழைய நுழைய பக்கவாட்டு காட்சிகள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வர,கண்ணில் ஏற்படும்" க்ளாக்கோமா"நோய் போல்
அந்தக்காட்சி கண்கள் காணும் பேரின்ப கவிதை.மன்னவனும்,மங்கையும் குகையை நெருங்கும் சமயம் அவர்களின் மேல் மட்டும் வெளிச்சம் பட்டு அவர்கள் அந்தரத்திலே நிற்பது போல காட்சி அளிக்கும் அந்தக்
காட்சி க்கு மனம் மயங்கும். விழிகள் விரியும்.இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று யார்தான் யோசித்திருப்பார்கள்?
அந்த தண்டவாள ஊர்தி வட்டமான குகைப்பாதையில் நுழைந்ததும்
அந்த வட்டம் சிறிதாகி,மறைந்து இருள் சூழ்ந்து.,பின் சிறிது சிறிதாகபிறை போலஆரம்பித்து அந்த வட்டப்பாதை வெளிச்சம் பெறுவது,
கண்ணுக்கு கிடைத்த விருந்து.
மன்னவன் கீழே அமர்ந்திருக்க மங்கை நாணத்துடன்எழுந்து பொய்க்கோபத்துடன் நடக்கிறாள்.
மன்னவன் பாடுகிறான்:
நான் புஷ்பாஞ்சலிஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
மன்னவன் இடது புறமாக லேசாக சாய்ந்து வலது கையால்பாடல் வரிகளுக்கு காற்றில் அபிநயம் செய்வது வித்தைதெரிந்தவனின் ஜால வித்தை இது என்பது புரிகிறது.அவருடைய கை அசைவுகள் இவர் சாதாரண மனிதரில்லைஎன்பதை காட்டுகிறது."நான்ன்ன்ன் புஷ்பாஞ்சலி"என்று தொடங்குவது சுகமான ராகம்."நீ பொன்னோவியம் என்று மாற"என்பதை ஓவியம் வரைவது போல் காட்டும் விரல் அசைவுகள்
அதிக அலட்டல்கள் இல்லாமலும்
உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.
நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
அந்த ரசனைகளின் இந்த ரசிகையது
தேர்தேர்தேர் என்று ஆட
இன்பக் கவிதைகளின்வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத் தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகி
வண்ணம் பெறவோ...
சில பாடல்களை கேட்கும்போது நம்மையறியாமலேயே தாளம் போட வைக்கும். அதற்கு அந்தப்பாடல் உற்சாகமான மெட்டிலும் ,குஷியான இசையிலும் அமைந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு மெட்டிலும் இசையிலும் அமைந்த பாடல்தான் இது.இப்படி ஒருமெட்டு,இசைக் கலவையில் ,தேன் மதுர குரல்களும் சேர்ந்து கொண்டால் பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம்தானே!
ரயில்
மலை
அலுக்காது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் .இப்போது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இன்பம் இன்னும் மேல்.உயர்ந்த அந்த பாலத்தில் ரயில் செல்லும் அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் அப்போதைய பிரமாண்டம்.அதிரடி பாட்டுக்கள் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே இது போன்றரயில்காட்சிகளை படம் பிடித்து வந்த தமிழ்திரையுலகில் ஒரு மென்மையான காதல் பாட்டுக்கு
இந்த ரயில் பயண காட்சி படம் பிடிக்க பட்டிருப்பது புதுமையும் கூட.
யானைகள் நின்று கொண்டிருக்க மரம் செடி கொடிகளுக்கு இடையில் ரயில் செல்வது போல் படம் பிடிக்கப்பட்டிருப்பது காட்சிக்கு கூடுதல் சிறப்பு.
மங்கை பாடுகிறாள்:
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
புல்லாங்குழல் இசை கேட்பது ஒரு சுகம் என்றால்,இங்கே புல்லாங்குழல் என்று பாடுவதைக் கேட்பதே அதனினும் சுகம்.
ரயில் செல்லும் விளைவால் பின்புல காட்சிகளும் மாயையால் நகர, அதனுடன் இருவரின் ஆடலும்,பாடலுமாயும் அந்தக் காட்சி
இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
என்று அவள் முடிக்க,
சின்னக்கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
மன்னவனின் காந்தமும் சாந்தமும் இணைந்த குரல் நம்மை மென்மையாக மயக்க,
தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
என பெண் முடிக்க.,
முடிப்பது மேலும் தொடராதோ
என நாம் ஏங்க...
ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.
பாடல்:
பெண்:வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகிவண்ணம் பெறவோ
ஆண்: பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தலிடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ
(வெட்கப்படவோ...
ஆண்:நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னொவியம் போன்று மாற
பெண்:அந்த ரசனைகளின் இந்த ரசிகையது தேர்தேர்தேர் என்று ஆட
ஆண்:இன்பக்கவிதைகளின் வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
(வெட்கப்படவோ.,
பெண்:நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
ஆண்:சின்னஞ்சிறு கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
பெண்:தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
(வெட்கப்படவோ...
Vetka Padavo - Lorry Driver Rajakannu: http://youtu.be/Y-78SiZynzw
செந்தில்ல்ல்ல்வேஏஏஎல்...........செந்தில்வேல். ....
இது உற்சாகக் கூக்குரல்.. என் கரவொலி உங்களுக்குக் கேட்கிறதா.... :clap:
//ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு// இந்தப் பாட்டு இதுவரை நான் கேட்காத, பார்க்காத பாடல்.. (படமும் நான் பார்த்ததிலலை)
//இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.// என் மனமும் இப்போது பிரமிப்பில் இருக்கிறது செந்தில்வேல்.. இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்..
//உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.// எஸ்.. அண்ட் நைஸ்...
//ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.// யெஸ்.. உங்கள் நீரோட்டமான எழுத்தில் தெளிவான ரசனையில் காட்சிப்படுத்தியிருந்ததில்... என்று முன்னால் போட்டுக் கொள்ளுங்கள்..
ஒரே ஒரு குறை தான்.. ‘மன்னவன்’ காஸ்ட்யூம் கொஞ்சம் கோட் இல்லாமல் கேஸுவலாக விட்டிருக்கலாம்..
செந்தில்வேல் வெரிகுட்..கீப் இட் அப்... ப்
இன்னொரு சின்ன ரெக்வஸ்ட் ... ‘மன்னவன்’, பிரபு பாடல்களைத் தவிரவும் மற்ற நாங்கள் அறியாத கானங்களை தங்கள் எழுத்துக்கள் மூலம் காட்சிப் படுத்த வேண்டும் என ஆசைப் படுகிறேன்.. சரியா..
நன்றி நல்ல பாடல் அண்ட் ரசனை கலந்து தந்ததற்கு...
செந்தில்வேல்,
தங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து வன்மை எவ்வாறு வெளிப்படுகிறது பார்த்தீர்களா.. நடிகர் திலகம் உள்ளே புகுந்து விட்டால் அது தனி உதிர வகையாகி விடுகிறது. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஏற்படும் உத்வேகம் ஏதாவது ஒரு கலையில் அவனை அல்லது அவரை அல்லது அவளை மிகச் சிறந்த வகையில் பரிமளிக்க வைக்கிறது. அவ்வாறுள்ள போது தாங்களோ பல்துறை வித்தகராக பரிமாணம் எடுத்து வருகிறீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் தலைவர் மிக அழகாக் தோற்றமளித்திருப்பார். சி.க. சார் சொன்னது போல், கோட் அணியாமல் இருந்திருந்தால் இன்னும் அழகாய் காட்சி தந்திருப்பார். எந்த பிரகஸ்பதியோ அவரை இந்த மாதிரி காட்சிகளில் சில படங்களில் கோட்டுப் போடவைத்து, கவனத்தை சிதறடிக்க வைத்து விட்டார்.
என்றாலும் இப்பாடல் காட்சியில் தலைவரின் ஸ்டைலே தனி.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
Half Ticket / Half Saree songs!
தாவணி லாவணியும் அரை நிஜார் பேஜாரும் !!
Quote:
குழந்தைப் பருவத்தில் என்ன டிரஸ் போட்டாலும் (போடாவிட்டாலும்?!) ஆணோ பெண்ணோ அழகுதான் !
அதே ரெண்டுங்கெட்டான் பருவத்தில் ஆடையமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே அரை டிரவுசராகவும் தாவணியாகவும் மாறும்போது பெண்ணுக்கு அழகு ஏறுகிறது .....பையனுக்கு ?!
நிச்சயதாம்பூலம் படத்தில் நடிகர்திலகம் ஜமுனாவின் இளமைப் பருவத்தை மனதில் கொணர்ந்து பாடும் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ....முதல்..
அட்டகத்தியில் வரும் ஆடி போனா ஆவணி....
தாவணி வரை பருவப் பெண்டிரின் உடையழகு வர்ணிக்கப்படுகிறது..என்ன செய்ய...?!
கால நாகரிக மாற்றங்கள் பாவாடை தாவணியை முற்றிலும் ஒழித்து சூரிதார் பக்கம் திரும்பியதும் ஒரு பாதுகாப்பு வசதி நன்மை கருதியே !
அரை டிக்கட்டுகளின் அரை டிரவுசரும் மாற்றங்களை அடைந்து அறுபது வயது பெருசுகளும் வெளிநாட்டுக்காரர் போல ஸ்டைலாக போடுமளவு இருக்கிறது நாகரிக முன்னேற்றம் !!
ராமன் எத்தனை ராமனடி, தங்கப் பதக்கம், வசந்த மாளிகை படங்களில் நடிகர்திலகம் துணிந்து அரை டிரவுசர் போட்டு வருவார் !! காதல் மன்னரும் தனது
பங்குக்கு தேன் நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படங்களில் களத்தூர் கண்ணம்மா கமலஹாசன் ரேஞ்சில் அரைடிரவுசர் போட்டு கலக்குவார்!!
நான் படத்தில் ரவிச்சந்திரன் ரோசாப்பூ ரவிக்'கிக்'காரியில் சிவகுமார்.....
Part 1 : Half Trouser songs!!
காதல் மன்னர் Vs காதல் இளவரசர் !
காதல் மன்னரின் lake water surfing சாகசம் எழில் கொஞ்சும் மச்சகன்னி வைஜயந்தியுடன்!
https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k
காதல் இளவரசரின் அரைடிக்கட் பாலபருவம் !
https://www.youtube.com/watch?v=Axcrmw8OD4A
செந்தில் ஜி,
அருமை அருமை. உங்கள் எழுத்து வளம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
போற போக்கை பார்த்தா வாசுஜியையே மிஞ்சி விடுவீர்கள் போல
24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!
இப்போது இப்படிப் பாடத் தோன்றுகிறது !Quote:
திரிகளின் இரும்புக்கை எழுத்து மாயாவி திரைப்பாடல்களின் அக்குவேறு ஆணிவேரிஸ்ட் திரித்துவத்தின் வாஸ்து வாசு சாருடன்(அவரது தம்பியுடன்) அவர் வருகையால் குளிர்ந்த கோவை மாநகரில் எழுத்துக்களின் இளம்துருக்கியர் அரிமா செந்தில்வேல் மற்றும் நடிகர்திலகத்தின் பற்றுமிகு மருத்துவர் கனவான் டாக்டர் ரமேஷ் பாபுவுடன் அளவளாவிய இனிய பொன்மாலைப் பொழுது!!
உள்ளங்களையும் குளிர்வித்து நடிகர் திலகம் புகழ் பாடும் உணர்வுகளையும் ஒளிர்வித்தமைக்கு நன்றிகள் நன்றிகள்....நண்பர் வாசுஜி! Unforgetable moment with ever lingering memories!!
with regards,
senthil
https://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw
இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படிப் பாடுவோமோ?!
https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw
செந்தில்வேல் ஜி..
கலக்கோ கலக்ஸ்... இது போன்ற மனம் மயக்கும் திறனாய்வுகளை கொண்டு வந்து கொட்டுங்க என்று வேண்டுகிறோம்.
கோவையில் நடந்த கோலாகல சந்திப்பில் அலசப்பட்டு வெளிவந்த பாடல்கள் பற்றிய தொகுப்பை எதிர்பார்க்கிறோம்.
வாத்தியாரையா... தமிழகத்தில் ஏழரை போன பிறகுதான் டின்னர்.. ( நான் ஏழரைனு சொன்னது நேரத்தைத்தான் )
மதுஜி/ராஜ்ராஜ்ஜி
டின்னெர் என்று சொல்ல முடியாது இரண்டுங்கெட்டான் நேரம்...அன்னபூர்ணாவில் சுவீட் காரம் காபிதான்! வாசுவுக்கு அதிக நேரமில்லை....பிளாஷ் விசிட்....!