http://i1300.photobucket.com/albums/...psz6o4fffl.jpg
Printable View
Mr Muthaiyan Ammu,
Fantastic & Superb Photos of NT in Enga Mama. Handsome & Smart NT. Thanks a lot.
முத்தையன்
பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது.
என்றாலும் உளமார்ந்த பாராட்டுதல்களைக் கூறிக்கொள்கிறேன்.
எங்க மாமா ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் நெஞ்சிலும் உயர்ந்த இடத்தில் உள்ளதற்குக் காரணமே அதில் அவருடைய அற்புதமான, ஈடிணையற்ற எழில் பொங்கும் தோற்றமே. அதை அப்படியே நிழற்படங்களாய்க் கொண்டு வந்து தங்களுக்கும் எங்கள் நெஞ்சில் உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.
உளமார்ந்த நன்றி.
இராகவேந்தர் சார்,
தங்களது பாராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிவிடும் முறை தெரியாததால் திரியில் முழுமையாகப் பங்கேற்க இயலவில்லை.பணி ஓய்விற்குப் பின் இத்திரியின் பதிவுகள் எனக்கு ஆறுதலாக உள்ளது.
அன்புடன் கோபு.
நன்றி எனக்கு சொல்ல வேண்டம் நண்பர்களே..என் தலைவனின் படங்களைவிட நடிகர் திலகத்தின் படங்கள் அதிகம்..உங்களுக்கு பதிவிடுவதை எங்கே அவர்கள் கோபித்து கொள்வார்களே என்ற தயக்கம் எனக்கு உண்டு..இருந்தாலும் பதிவிட்டுகொண்டுள்ளேன்..நிச்சயம் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களின் பதிவுகளை நான் செய்வேன்..அதற்கான உடல் நிலை எனக்கு இரு பெரும் திலகங்களும் ஆசிர்வாதம் இருக்கும் என்றும் நம்புகிறேன்..நம்பிக்கை தானே வாழ்க்கை..
http://i68.tinypic.com/2wqbrd2.jpg
முத்தையன்Quote:
நன்றி எனக்கு சொல்ல வேண்டம் நண்பர்களே..என் தலைவனின் படங்களைவிட நடிகர் திலகத்தின் படங்கள் அதிகம்..உங்களுக்கு பதிவிடுவதை எங்கே அவர்கள் கோபித்து கொள்வார்களே என்ற தயக்கம் எனக்கு உண்டு..இருந்தாலும் பதிவிட்டுகொண்டுள்ளேன்..நிச்சயம் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களின் பதிவுகளை நான் செய்வேன்..அதற்கான உடல் நிலை எனக்கு இரு பெரும் திலகங்களும் ஆசிர்வாதம் இருக்கும் என்றும் நம்புகிறேன்..நம்பிக்கை தானே வாழ்க்கை..
இந்த மய்யம் இணைய தள உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் அனைவரும் நண்பர்களே. கருத்து வேறுபாடுகள் இருக்குமே தவிர, யாரும் யாரையும் பாராட்டத் தயங்குவதில்லை, தயங்கியதுமில்லை. எனவே தங்கள் பதிவுகளைப் பொறுத்த மட்டில் தாங்கள் நடிகர் திலகம் நிழற்படங்களைப் பதிவிடுவதை எந்தத் திரியிலும் யாரும் மகிழ்வும் வரவேற்பும் அளிப்பார்களே தவிர யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே தாங்கள் தயங்காமல் தொடர்ந்து தங்கள் மனதிற்குகந்த நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஈடுபடலாம்.
இருவரின் ஆசியும் தங்களுக்கு எப்போதும் உண்டு.
அன்புடன்
ராகவேந்திரன்
Thank you Mr. Muthaiyan Ammu. For NT film stills. May god bless you.
நினைப்போம்.மகிழ்வோம்-55
"ராஜபார்ட் ரங்கதுரை".
'மதன மாளிகையில்' பாடல்.
"ஸ்லோ மோஷன்" என்கிற
முறையில் படப்பதிவு செய்யப்
படாத போதும், ஸ்லோ மோஷனில் வருவது போல்
அவரே முயன்று நடந்து வரும்
அழகு.
நினைப்போம். மகிழ்வோம்-56
"உத்தமபுத்திரன்."
விக்கிரமனும், பார்த்திபனும்
முதன்முதலாய்ச் சந்திக்கும்
காட்சியில், விக்கிரமனின்
பாணியில் பார்த்திபனும்
சொல்லும் "ஹ".
( ஊன்றிக் கவனித்தால் தெரியும்.தானே சுயமாக பழக்கத்தில்சொல்லும் "ஹ"வுக்கும்,ஒருவரைப் பார்த்து அதேபோல் சொல்லும் "ஹ"வுக்கும் உள்ள வித்தியாசத்தையும்
அழகாகக் காட்டியிருப்பார். )
நினைப்போம்.மகிழ்வோம்-57
"முதல் மரியாதை."
சந்தைக் கூட்டத்தினுள் நடந்து
வரும் போது, குறுக்கே ஓடும்
ஒரு சிறுவனை, கையில் மடக்கி வைத்திருக்கும்
குடையைக் கொண்டு அடிப்பது
போல் சும்மா பாவனை செய்து
சொல்லும் "...டேய்".
கீழே தரப்பட்டுள்ள மேற்கோள் வேறோர் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். இன்றைக்கு நாட்டில் விருதுகளைத் திருப்பித்தரும் வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக எம்.ஜி.ஆர். அவர்கள் பாரத் விருதை 1973ம் ஆண்டு திருப்பித்தருவதாக மத்திய செய்தித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் விகடன் இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளது. அதில் பாரத் விருதை கலைஞரின் சிபாரிசின் பேரில் ஏ.எல்.ஸ்ரீநிவாசன் முயற்சியில் தனக்கு வாங்கித் தரப்பட்டதாக சட்டசபையில் நாவலர் நெடுஞ்செழியன் அறிவித்ததன் எதிரொலியாக இவ்விருதை எம்.ஜி.ஆர். திருப்பித்தருவதாக கூறியுள்ளார். தனக்கு சிறந்த நடிகர் விருது பெறும் தகுதி உள்ளதென்றும், அதற்கு எந்தவித சிபாரிசும் தேவைப்படாது என்று தான் நம்புவதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.
நாம் முன்னமே பலமுறை கூறி வந்துள்ளோம். இதன் மூலம் சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வரவேண்டிய பாரத் விருது யாருடைய முயற்சியால் மாறிப்போனது என்பது தெளிவாகிறது. (பாபு படம் ரீமேக் என்பதால் அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் சவாலே சமாளி படம் நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருதைப் பெற்றத்தரும் அளவிற்கு அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் அதன் காரணமாக நடிகர் திலகத்தின் பெயரே பரிசீலனைக்குட்பட்டது எனவும் அப்போது செய்திகளும் பரவின. ஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது நடிகர் திலகத்தின் பெயர் இல்லை. )Quote:
http://img.vikatan.com/news/2015/11/...%20leftttt.jpg
விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்!
கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மத்திய அரசை குற்றஞ்சாட்டி எழுத்தாளர்கள் பலர், தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்ற விருதுகளை திருப்பித் தந்து பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக கோபம் என்பது உணர்ச்சியை உடனே காட்டிவிடத் துடிக்கும் ஒரு உணர்வு. தேசத்தின் மீதான கோபம் எழும் போதெல்லாம், காந்தி மேற்கொள்கிற விஷயம் உண்ணாவிரதம். அடிப்படையில் அது அஹிம்சை வடிவம் என்றாலும், அதுதான் காந்தியின் உச்சக்கட்ட கோபம். இதை பின்பற்றித்தான் எழுத்தாளர்களும் தங்களுக்கு பெருமையளித்த விருதுகளை திருப்பித்தருவதும்.
ஆனால் இவ்வாறு விருதுகளை திருப்பி அளிப்பதற்கு எதிரான விமர்சனங்களும் எழுகின்றன.
இந்த நிலையில், சற்றேறக்குறைய 42 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவர், உள்ளுர் அரசியலில் உருவான ஒரு உஷ்ணமான சூழ்நிலையில், 'சிறந்த நடிகர்' என தனக்கு அளிக்கப்பட்ட பாரத் விருதை திருப்பியளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த நடிகர் எம்.ஜி.ஆர்.
அதுசரி பாரத் பட்டத்தை திருப்பியளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை உஷ்ணத்திற்குள்ளாக்கிய விஷயம் என்ன...
இதோ... எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.
திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.3.73.
மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.
http://img.vikatan.com/news/2015/11/...20600%2011.jpg
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”
இந்த அறிவிப்பு 8.2.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
http://img.vikatan.com/news/2015/11/...%20600%201.jpg
எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.
இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.
இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.]
ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.
எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்
விகடன் இணையதளப்பக்கத்திற்கான இணைப்பு - http://www.vikatan.com/news/article.php?aid=54624
மேற்காணும் தகவல் உதவி சிவாஜிகணேசன்.இன் வலைத்தளம் - www.sivajiganesan.in
இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படம் அனைவருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியது. இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் என்று வெவ்வ்வேறு கால கட்டத்தில் வந்ததாலும், மொழி மற்றும் டப்பிங், ரீமேக், நடிகர்கள் சம்பந்தமாய் அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கையே.
http://www.thehindu.com/multimedia/d...LD_257965f.jpg
அதனால் எனக்குத் தெரிந்தவரை இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' சந்தேகம் பற்றிய விளக்கங்களை இங்கே தருகிறேன். இதோ விவரங்கள்.
http://i1087.photobucket.com/albums/...355064/new.jpg
'ஸ்கூல் மாஸ்டர்' கன்னடத்தில்தான் முதலில் தயாரிக்கப்பட்டது. வெளியானது 1958-ல். (பிறகு தான் இந்தியில்... 1959-ல்) தமிழில் 'டப்' செய்யப்படாமல் நேரிடையாக 'எங்க குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழில் அதே ஆண்டில் வெளியானது. கன்னடத்தில் நடித்த அதே நடிகர்களே தமிழிலும் நடித்திருந்தனர். கன்னட வாடையாகவே இருக்கக் கூடாதே என்று தமிழில் 'குல தெய்வம்' ராஜகோபாலை காமெடிக்கு போட்டிருப்பார்கள். (கன்னடத்தில் அந்த மொழி நகைச்சுவை நடிகர்) சரோஜாதேவியும் தமிழுக்கு அப்போது பரிச்சயம்.
http://i1087.photobucket.com/albums/...5065/sdfgh.jpg
இதே 'ஸ்கூல் மாஸ்டர்' 1959-ல் இந்தியில் (கரண்திவான், ஷகீலா, சரோஜாதேவி, பந்துலு ) பந்துலு தயாரிப்பில் வெளிவந்த போது இதே ரோலை நடிகர் திலகமே இந்தியிலும் செய்திருந்தார். அப்போது ஒல்லியாக இருப்பார். ('மாஸ்டர்' ரோல் பந்துலுவிற்கே).
1964-ல் மலையாளத்திலும் வெளிவந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படத்தில் கௌரவ நடிகராக நடித்திருந்தார் சௌகார் ஜோடியுடன். மலையாளத்தில் 5 வருடங்கள் சென்று இப்படம் வந்ததால் இதில் திலகம் சற்று குண்டாகத் தெரிவார். 'ஸ்கூல் மாஸ்டர்' ரோல் 'திக்குரிச்சி சுகுமாரன் நாயருக்கு. இந்தப் படம் வெளிவந்த அதே தேதியில்தான் நடிகர் திலகத்தின் 'பச்சை விளக்கு' படமும் வெளிவந்ததாக நினைவு.
'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளத்தில் நடிகர் திலகம் நடிப்பு பற்றி.
http://i1087.photobucket.com/albums/...1355063/sm.jpg
இறுதியில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஸ்கூல் மாஸ்டர் 'திக்குரிச்சி'யை ரயில்வே ஸ்டேஷனில் கண்டு, வேண்டுமென்றே சிறை பிடித்து, மாஸ்டரின் இழந்த வீட்டிற்கு திரும்ப வரவழைத்து, தான்தான் மாஸ்டரின் சீடன் என்று காட்டிக் கொள்ளாமல் கழுத்தில் அங்கவஸ்திரத்துடன் வேட்டி சட்டை அணிந்து, 'இது நம் வீடுதான்' என்று திகைத்து நிற்கும் மாஸ்டர் தம்பதிகளை மிரட்டுவது போல பாவனை செய்து, சொந்தக் குரலில் மலையாள மொழியை அவ்வளவு அழகாகப் பேசி கலக்கி விடுவார் நடிப்பின் ஆசான்.
'திக்குரிச்சி'யிடம் 'போலாம்' என்று சொன்னவுடன் அவரும் வெளிக் கிளம்ப 'அவிடல்லா' என்று மிரட்டி 'Sit down' என்று சேரில் அமர வைத்து அவர் கையில் ஒரு பேப்பர் தந்து
'இனி ஈ வீடு விட்டுப் போவில்லன்னு எழுதணும்'
என்பார் படுகம்பீரமாக பின்னே கைகள் கட்டியபடி. 'திக்குரிச்சி' சுகுமாரன் நாயர் எழுத பேனா தேடியவுடன்,
'எந்தா...பேனா இல்லே ஹேய்! வல்லிய ஸ்கூல் மாஸ்டர்! (என்ன ஒரு நக்கல்!) ஒரு பேனா இல்லா. ம்...என்ட பேனா'
என்று மாஸ்டர் சிறு வயதில் தனக்கு ஞாபகார்த்தமாகக் கொடுத்த பழைய பேனாவை அவரிடம் நீட்டுவார்.
பின்,
'எழுதணும்... ஈ பேனா வச்சோடு .(என்ன அழகான எக்ஸ்ப்ரெஷன்) எண்ட ஓர்மைக்காயிது கலையாது சூச்சிக்கணும்'
(தப்பாய் இருந்தால் எல்லோரும் ஷமிக்கணும். ஞான் மலையாளம் அறியில்லா.):-D
என்று அந்தப் பேனாவை தன்னிடம் தரும் போது மாஸ்டர் சொன்ன அதே வார்த்தைகளை அவரிடம் சொல்வார்.
அதை வைத்து மாஸ்டர் அது தன்னுடைய மாணவன் ஜோனி என்று தெரிந்து எல்லையற்ற பாசத்தில் நடிகர் திலகத்தைக் கட்டிப் பிடித்து ஆனந்தப்பட, நடிகர் திலகமும் அது 'தான்'தான் என்பதை அமைதியாக தலையாட்டுதல் மூலம் கண்கள் கலங்கிய நிலையில் உணர்த்தி கொஞ்சமாக அழுதபடி மாஸ்டரை தழுவிக் கொள்வாரே!
என்ன உணர்ச்சிமயமான ஒரு காட்சி!
நடிகர் திலகம் ஏற்ற இறக்கங்களுடன் தந்து சொந்தக் குரலிலேயே மலையாளம் பறையும் போது மெய் சிலிர்த்துப் போகிறது. ரொம்ப ஆச்சர்யமாகவும், புதுமையாகவும் இருக்கிறது.
இப்போது நான் மேலே தந்துள்ள 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களின் நடிகர் திலகத்தின் ஸ்டில்களைப் பாருங்கள். உருவ வித்தியாசத்தை முதலில் உணரலாம். பின் ஒரே காட்சியில் நடிகர் திலகம் இரு மொழிகளிலும் தரும் முக பாவனைகளிலும் வித்யாசம் உணரலாம்.
இதுவல்லாமல் ஜெமினி 'ஸ்கூல் மாஸ்டரா'க நடிக்க, அவருடன் சௌகார் இணைய, தமிழில் மீண்டும் 'ஸ்கூல் மாஸ்டர்' தயாராகி 1973 ல் வெளிவந்தது.
http://i.ytimg.com/vi/dvIQFMz771Q/hqdefault.jpg
'பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ'
'தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே'
போன்ற காலத்தால் அழியாத புகழ் பெற்ற பாடல்கள்.
இந்தி, மலையாளம், கன்னட 'ஸ்கூல் மாஸ்டர்' களில் நடிகர் திலகம் ஏற்றிருந்த கௌரவ ரோலை தமிழில் நடித்திருந்தவர் முத்துராமன்.
இதே 'ஸ்கூல் மாஸ்டர்' பெயரில் விஷ்ணுவர்த்தன், சுஹாசினி, அவினாஷ் நடித்து கன்னடத்தில் 2010 ல் இன்னொரு படம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
http://2.bp.blogspot.com/_fKMLChf_W0...annada+(1).jpg