http://i68.tinypic.com/1607mgn.jpg
Printable View
மாலைச்சுடர் -
http://i65.tinypic.com/2h6wmsn.jpg
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
கவுண்டமணி காமெடி” யை விட பெரிதாக இருக்கிறது ,
இந்த “கருத்துக் கணிப்பு” காமெடி..!
இப்போது மட்டும் அல்ல...எப்போதுமே !
1982-ஆம் வருடம்...
அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி..!
அந்த சமயத்தில் பெரியகுளம் நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடத்த வேண்டிய எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டதாம் ..!
குறுகிய காலம்தான் பிரச்சாரம் செய்ய முடியும்...!
எப்படியாவது தி.மு.க.வைத் தோற்கடித்தாக வேண்டும் என்று ஊண் உறக்கம் இன்றி , ஊர் ஊராக , தெருத் தெருவாக சுற்றிச் சுழன்று சூறாவளியாய் பிரச்சாரம் செய்து முடித்து , சோர்ந்து போய் வந்தாராம் எம்.ஜி.ஆர். !
அனல் பறக்கும் பிரச்சாரம் நடத்தி முடித்து விட்டுத் திரும்பிய அவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருந்தது..!
ஆம்.... அந்த இடைதேர்தல் பற்றி , காவல்துறை ஒரு துல்லியமான கருத்துக் கணிப்பை நடத்தி முடித்து ,
அந்தக் கணிப்பின் முடிவை எம்.ஜி.ஆரின் கைகளில் பயபக்தியோடு கொடுத்தார்களாம்..!
படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர் அதிர்ந்து போனார்...!
“ இந்த இடைத் தேர்தலில் தி.மு.க. தான் வெற்றிபெறும்” என்று திட்டவட்டமாக சொன்னதாம் அந்தக் கருத்துக் கணிப்பு..!
அதிர்ச்சியில் இருந்து மீளாத எம்.ஜி.ஆர். , அந்த ரிப்போர்ட்டை தன் கையில் கொடுத்த அதிகாரியை நிமிர்ந்து பார்த்து கேட்டாராம் ...
“இந்தக் கருத்துக் கணிப்பை நான் நம்பலாமா..?”
“100% சதவீதம் நம்பலாம் ஸார்..”
அசையாமல் அப்படியே நெடுநேரம் அமர்ந்திருந்தாராம் எம்.ஜி.ஆர்..!
அடுத்த சில நிமிடங்களில் , அப்போதைய அமைச்சர் மற்றும் அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவரான அரங்கநாயகத்தை உடனே தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாராம் எம்.ஜி.ஆர்...!
“ இங்கே பாருங்க அரங்கநாயகம்...தோல்விதான் மக்களின் தீர்ப்பு என்று தெளிவாகத் தெரிந்து விட்டது..! கருத்துக் கணிப்பு கரெக்டாகத்தான் இருக்கும்..! எனவே நான் சொல்கிறபடி செய்யுங்கள்..!”
# எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி தேர்தல் முடிவு வருவதற்கு முதல் நாள் , “பெரியகுளம் நாடாளுமன்றம் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது ஏன்?” என்பதற்கு விளக்கம் சொல்லி , ஒரு நீண்ட அறிக்கையை தயார் செய்து , அதை அரங்கநாயகம் பெயரில் , “தினத்தந்தி”க்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்..!
[ அது செய்தியாக வெளி வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்..]
ஆனால்...அடுத்த நாள் காலை தேர்தல் முடிவு வெளிவந்தது...!
இப்போதும் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்...!
அ.தி.மு.க. வேட்பாளர் ஜக்கையன் 69260 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தார் !
# அதன் பின் நடந்தது என்ன..? ....அந்தக் கருத்துக் கணிப்பை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்த அந்தக் காவல்துறை அதிகாரி , அதற்குப் பின் எம்.ஜி.ஆரிடம் என்ன பாடுபட்டார் என்பதற்கான கணிப்பு ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை..!
# ஆம்...
“கவுண்டமணி காமெடி” யை விட பெரிதாகவே இருக்கிறது ,
இந்த “கருத்துக் கணிப்பு” காமெடி..!
அப்போதும்...இப்போதும்...!
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
தலைவர் ஆரம்பித்த கட்சி தலைவரின் நூற்றாண்டு கொண்டாடும் வேளையில் தமிழகத்தை ஆள்கிறது என்றால் இது போல சாதனைகள் தலைவர் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் .
விஜயகாந்த் சீமான் திருமாவளவன் நீங்கள் எல்லோரும் தலைவரை வம்புக்கு இழுத்தீர்கள் இப்பொழுது என்ன ஆச்சு deposit கூட கிடைக்கவில்லை விஜயகாந்த் சீமானுக்கு . மக்கள் நல கூட்டணி நாம கூட்டணி ஆனது . இனிமேலாவது எங்கள் தெய்வத்தை வணங்கி விட்டு உங்கள் பணிகளை தொடருங்கள் .
நண்பர் rks தங்கள் திரியில் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்று சாபம் இட்டார் ஆனால் இப்பொழுது என்ன ஆனது எங்கள் தெய்வத்தின் ஆசி இருக்கும் வரை எங்கள் கட்சிதனை அசைக்கவே முடியாது .
சென்னை: சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்களாக ஜொலித்தவர்கள், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்விகளை சந்தித்துள்ளனர். கேப்டன் பிரபாகரன், ரமணா, வல்லரசு உள்ளிட்ட பல்வேறு ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். உளுந்தூர்பேட்டை தொகுதியில், 26950 வாக்குகள் மட்டுமே பெற்று, இவர் 3வது இடத்தை பிடித்துள்ளார். Tamil film action heroes lose out in Tamilnadu assembly polls சூரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக ஜொலித்தவர் சரத்குமார். இவரும் விஜயகாந்த்தை போலவே, ஆக்ஷன் பிளஸ் சென்டிமென்ட் படங்களில் முத்திரை பதித்தவர். இம்முறை, சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில், 62356 வாக்குகளை பெற்று, 88,357 வாக்குகளை பெற்ற திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 26001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதேநேரம், திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்ட, வாகை சந்திரசேகர், அதிமுக கூட்டணி சார்பில் திருவாடானையில் போட்டியிட்ட கருணாஸ் போன்ற நடிகர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...ls-254124.html
தோல்வியை பரிசாக எதிரிகளுக்கு
கொடுத்து பழகியவர்கள் நாங்கள் ......
1984 தலைவர் ஆற்றிய சரித்திரம்
மீண்டிருக்கிறது .....
எங்கள் தஙக தலைவர் கணட கழகம்...
அம்மா அவர்களால் சாதித்திருக்கிறது...
கயவர் கூட்டம் ஒழிந்தது......
கோட்டையில் நமது கொடி
பறக்கும் ...
பறந்து கொண்டே இருக்கும்....
courtesy fb
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவரைபோல, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து நின்றவர்களை தோற்கடித்த வேட்பாளர்களையும், அவர்கள் சாந்த கட்சிகள் மற்றும் தொகுதிகளையும் ஒரு ரவுண்டு பாருங்கள்: ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் தங்க தமிழ் செல்வன், திமுகவின் மூக்கையாவை 30196 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். Here is the list of candidates who won with big margin of vote in the Tamilnadu assembly election அவினாசியில் அதிமுக வேட்பாளர் தனபால், திமுக வேட்பாளர் ஆனந்தனை 30674 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சென்னை, ஆர்.கே.நகரில் அதிமுகவின், ஜெயலலிதா, திமுகவின் சிம்லா முத்துச்சோழனைவிட 39545 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி தொகுதியில், அதிமுகவின் பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் அண்ணாதுரையைவிட அதிகமாக 42022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கீதா, திமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஐயரை விட 35301 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். குமாரபாளையத்தில், அதிமுகவின் பி.தங்கமணி, திமுகவின் யுவராஜைவிட, 47329 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். . ராமநாதபுரத்தில் அதிமுகவின் மணிகண்டன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவை 33 ஆயிரத்து 222 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவின் சந்திரபிரபா, புதிய தமிழகம் வேட்பாளர் முத்துகுமாரை 36673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கனகராஜ், காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனைவிட 36631 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். திருவாரூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தைவிட 68366 வாக்குகள் அதிகம் பெற்று, திமுகவின் கருணாநிதி வெற்றி பெற்றார். தொண்டாமுத்தூரில் அதிமுகவின் வேலுமணி, திமுக கூட்டணியிலுள்ள மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் கோவை சையது முகமதுவை 64 ஆயிரத்து 48 வாக்குகள் வித்தியாசத்தில் முந்தி சென்றபடி இருந்தார். திருப்பூர் வடக்கு தொகுதியில், அதிமுகவின் விஜயகுமார், திமுகவின் சாமிநாதனைவிட 37774 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...on-254113.html
ஊரை கொள்ளை அடிச்சாலும்!
,
உலகையே....கொள்ளை அடிச்சாலும்!
,
மனதை கொள்ளை அடிக்க முடியாது!
என புரிந்த நாள் இது!
அம்மா 23ம் தேதி பதவி ஏற்க உள்ளதால் அன்புமணி ராமதாஸ் 24ம் தேதி முதல்வராக பதவி ஏற்பார்.
best comedy
புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவை அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடத்துங்கள்....................................... .................................................. ................................................நன ்றி மறவாத நல்ல மனம் போதும்.............
புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாட நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!!!
மாவட்ட வாரியாக அதிமுக., திமுக.,வுக்கு எத்தனை தொகுதிகள் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக., 134 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர உள்ளது. திமுக., அணி 98 இடங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.
மாவட்ட வாரியாக எந்த அணிக்கு எத்தனை இடங்கள் என்ற விவரம் வருமாறு:
கோவை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 9
நீலகிரி: மொத்த தொகுதிகள்- 3; அதிமுக- 1; திமுக., அணி- 2
கரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
திருச்சி: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
அரியலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 1; திமுக., அணி- 1
திருவாரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 1; திமுக., அணி- 3
தஞ்சாவூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
புதுக்கோட்டை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 2; திமுக., அணி- 4
திண்டுக்கல்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
சிவகங்கை: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 2; திமுக., அணி- 2
மதுரை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 8; திமுக., அணி- 2
தேனி: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 4
விருதுநகர்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
ராமநாதபுரம்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
தூத்துக்குடி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
திருநெல்வேலி: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 6; திமுக., அணி- 4
கன்னியாகுமரி: மொத்த தொகுதிகள்- 6; திமுக., அணி- 6
சென்னை: மொத்த தொகுதிகள்- 16; அதிமுக- 5; திமுக., அணி- 11
திருவள்ளூர்: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 7; திமுக., அணி- 3
காஞ்சிபுரம்: மொத்த தொகுதிகள்- 11 அதிமுக- 5; திமுக., அணி- 6
கடலூர்: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
வேலூர்: மொத்த தொகுதிகள்- 13; அதிமுக- 7; திமுக., அணி- 6
திருவண்ணாமலை: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
விழுப்புரம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 3; திமுக., அணி- 8
கிருஷ்ணகிரி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
தர்மபுரி: மொத்த தொகுதிகள்- 5; அதிமுக-3; திமுக., அணி-2
சேலம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 10; திமுக., அணி- 1
நாமக்கல்: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
ஈரோடு: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 8;
திருப்பூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 6; திமுக., அணி- 2
பெரம்பலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 2;
நாகை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
சுதந்திர இந்தியாவில் அதிகப் படியான ஆண்டு தமிழகத்தை ஆட்சி புரியும் கட்சியாக அ தி மு க விளங்குகிறது .... மக்கள் திலகத்தின் சாதனையான தொடர் வெற்றி என்பதையும் செல்வி ஜெயலலிதா சாதித்துக் காட்டி விட்டார்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.
கருணாநிதியின் மனசாட்சி அவரை உறுத்திக்கொண்டே இருக்கும். 44 ஆண்டுகளுக்கு முன் பெரிய தவறு செய்து விட்டதை.இல்லையெனில் இரட்டை இலை இப்போது பயமுறுத்்திக்கொண்டு இருக்காதே!
courtesy net
வாத்தியார் 100 வது ஆண்டு பரிசு .... எங்கள் தங்கத்திற்கு .... எங்கள் தங்கத் தாரகையின் ஆட்சி .... தொடரும்
யார் வேணும்னாலும் என்னவேணும் னாலும் சொல்லிட்டு போகட்டும் ... மக்கள் சக்தி செல்வி ஜெயலலிதாவுக்குத் தான் .... மக்கள் திலகதிற்குத் தான் .... இரட்டை இலைக்குத் தான் ,,,, அதை எவரும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது ... வெற்றி நமதே ஆட்சியும் நமதே
என் மறைவிற்கு பிறகு என்னைப் பற்றி புரிந்துக் கொள்வார்கள் என்று பேசியிருக்கிறீர்களே , இப்படிப் பட்ட வார்த்தைகளை கூறி பதற வைக்க வேண்டுமா ?
என்று வாசகர் ஒருவரின் கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில் :
"தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும் . வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும் . பகலிருந்தால் இரவு இருக்கும் . செயலிருந்தால் விளைவிருக்கும் . இளமை இருந்தால் முதுமை இருக்கும் . பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும் .
ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப் படும் . எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் , அது அமரர் பேறிஞர் அன்னவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன் ..... "
இந்த இரு கழகங்களை நம்பிய அளவுக்கு மக்கள் வேறு எவரையும் ஏற்கவில்லை - நம்பவில்லை... " - நடுநிலையாளர்கள் கருத்து...
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜின் பதில்... :
நேற்று கட்சி ஆரம்பித்த புத்தம் புதியவர் முதல் சில தேர்தல்கள் கண்ட புதியவர்கள் வரை... மேடைக்கு மேடை... அனுதினம் சொல்லிக்கொண்டே வந்த வார்த்தை...
50 ஆண்டு கால திராவிட ஆட்சியில்... முன்னேற்றம் இல்லை... ஊழல் பெருகி விட்டது...
என் மக்கள் கணக்கு தெரியாதவர்களா...? இல்லை "கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்த உலக உன்னதரை" மறந்தவர்களா...?
நீங்கள் எல்லோரும் உங்கள் தலையிலேயே நீங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டீர்கள்...
50 ஆண்டுகள் என நீங்கள் சொன்ன அந்த கால கட்டத்தில்
" உண்மையில் மக்களோடு மக்களாக வாழ்ந்த அந்த உலக உன்னதரின் 11 ஆண்டு கால பொற்கால ஆட்சி" யும் அடங்கும் அல்லவா.... அந்த கால கட்டத்தை குறை சொன்னால்... யாருக்கு தான் கோபம் வராது...
ஆம் அதனால் தான் மக்கள் அந்த புத்தம் புதியவர்களையும் - புதியவர்களையும் நம்பவே இல்லை...
ஆம்............................................... .................................... அவரை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு... நம்பி கெட்டவர்கள் இதுவரை ( என்றுமே?! ) யாருமில்லை...
courtesy mayilraj fb
அரை நூற்றாண்டுக்கு மேல் எம் ஜி ஆர் என்னும் சக்தியால் திராவிட இயக்கம் ஆட்சியில் தமிழகத்தில்
சிறு எண்ணிக்கை ,கொண்ட திமுக வை எம் ஜி ஆர் ரின் இணைப்பால் ஆட்சி அமைக்க வைத்து அண்ணா பதவி ஏற்றார்
எம் ஜி ஆர் எனும் சக்தியின் துணை கொண்டு கருணாநிதி பதவி ஏற்றார்
எம் ஜி ஆர் எனும் சக்தியே பதவி ஏற்று ஒரு பொற்க்கால ஆட்சி தந்தது
எம் ஜி ஆர் எனும் சக்தியின் புகழால் இன்றும் ஆட்சியில் அ இ அ தி மு க இருக்கிறது
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் ஆக்க சக்தி
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் வெற்றி சக்தி
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் வீரசக்தி
எம் ஜி ஆர் இழிவுபடுத்தியோ அவர் புகழுக்கு கழங்கம் விழவிக்க நினைத்தாலோ அவர்கள் அழிவு அவர்களே தீர்மானித்தது போல்
வாலியை எதிர்த்தால் எதிர்பவரின் பாதிபலம் வாலி க்கு சென்று விடும் என ஒரு புராணக்கதையுண்டு
எம் ஜி ஆர் புகழை எதிர்த்தால் எதிராளியின் முழுபலமும் எம் ஜி ஆர் பக்கம் போய்விடும் என்றுஒரு எம் ஜி ஆர் புராணகதை உருவாகிறது
வெற்றி என்றாலும். கணிசமான சரிவை காட்டி எச்சரித்தபடியே மகுடத்தை தந்திருக்கிறது மக்கள் தீர்ப்பு..
எம்ஜிஆர் மறைந்து 28 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரும் அவரின் இரட்டை இலை சின்னமும் காட்டி வரும் ஆதிக்கம் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அதிசயமான பக்கம்..
மக்கள் மத்தியில் எப்போதுமே நேரடியாக நடமாடி மனதில் அகற்றமுடியாதபடி ஆழ்ந்து ஊடுறுவியதுதான் இதற்கு முக்கிய காரணம்.. சொத்துக்களை வாங்கிகுவித்திருந் தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது...
மக்களுக்காக நான் என்று சொல்பவர், நிஜ தவ வாழ்வுக்கு வந்து ஆட்சி செய்வார் என்று நம்புவோம்...வேற வழி.(!)
சரித்திர சாதனை!
இதுவரை, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்திராத அளவிலான விளம்பரங்கள் தி.மு.க.வால் வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி நிலவுவது போலவும், மக்கள் தி.மு.க.வை மாற்றாகக் கருதி அதற்கு ஆதரவு தரும் மனோநிலையில் இருப்பது போலவும் ஊடகங்களின் மூலம் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியும், பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரும் கையாண்டதைப் போன்ற கார்ப்பரேட் பாணித் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. ஈடுபட்டது. இருந்தும்கூட, அந்தப் பரப்புரைகள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
மதுவிலக்கை அமல்படுத்துவது, செல்லிடப்பேசி, விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல இலவச அறிவிப்புகள் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும்கூட தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அடிப்படையில் அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க.வைப் போலத் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவிலான மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதுதான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், வலுவான கூட்டணி பலமோ, சூழலோ இல்லாமல் தி.மு.க.வால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 1967-இல் கொள்கையில் ஒன்றோடு ஒன்று முரண்பட்ட எட்டு கட்சிகளின் கூட்டணியும், 1971-இல் இந்திரா ஆதரவு அலையும், 1989-இல் அ.தி.மு.க. ஜெ., ஜா. என்று பிளவுபட்டிருந்ததாலும், 1996-இல் மூப்பனாரால் த.மா.கா. தொடங்கப்பட்டு அதனுடன் தி.மு.க. செய்துகொண்ட கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைத்ததாலும்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இந்தக் காரணிகள் இல்லாமல் இருந்திருந்தால், அந்தத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
2006-இல் அப்போது மத்திய ஆட்சியில் இருந்த பலமான காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் என்று பலமான கூட்டணி இருந்துமேகூட, 96 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்று "மைனாரிட்டி' ஆட்சி அமைக்க முடிந்தது எனும்போது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை முற்றிலும் இழந்துவிட்ட காங்கிரûஸ முக்கியக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட தி.மு.க. வெற்றி பெறாதது வியப்பளிக்கவில்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் ஆதரவு பலமும்தான் இந்த முறை வெற்றியை நிர்ணயித்திருக்கிறது.
232 தொகுதிகளில் 130 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்கள். அதில் 80 பேர் அ.தி.மு.க. வேட்பாளர்கள். 5000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் 28 பேர். 2000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் 20 பேர் மட்டுமே. இதிலிருந்து, மக்கள் தெளிவாகவும், நிர்ணாயகமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
தி.மு.க. பலமான எதிர்க்கட்சியாக 89 இடங்களை வென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும், தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியையும் மக்கள் மாற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் வேறு மாற்று இல்லாததால் தி.மு.க.வுக்குக் கிடைத்ததுதான் தி.மு.க. 89 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும் வென்றதற்குக் காரணம். இன்னொரு பலமான மாற்று இருந்திருந்தால் தி.மு.க. அணி இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்திருப்பது சாத்தியமில்லை.
ஜெயலலிதா வேண்டாம் என்று கருதும் மாற்றத்தை விரும்புகிறவர்களைப் பொருத்தவரை, கருணாநிதி "வேண்டவே வேண்டாம்' என்கிற மனோநிலையில், ஒருவேளை தி.மு.க. மு.க. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அது அந்த இளைஞர்களைத் தி.மு.க.வை ஆதரிக்கத் தூண்டியிருக்கக் கூடும். 93 வயதில் தான்தான் முதல்வர் என்றும், தனக்கு இயற்கையாக பாதிப்பு நிகழ்ந்தால்தான் தனது மகன் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்றும் கருணாநிதி கூறியதைக் கேட்டுப் பலரும் முகம் சுளித்தனர்.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து வலம் வந்த அனைவரையும் வாக்காளர்கள் நிராகரித்து விட்டிருப்பது தேர்தல் முடிவுகளின் "ஹைலைட்!' தி.மு.க. மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ம.க.வுக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சறுக்கலாகவும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், அவரவர் உயரம் எவ்வளவு என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், அதற்கு மாற்று சக்தியாக வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
ஐந்தாண்டுகால ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு நியாயமாக ஏற்படும் சலிப்பையும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரதிபலிக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, பலமான கூட்டணி அமைக்க முற்படுவதுதான் வேறொருவராக இருந்தால் கையாளக்கூடிய தேர்தல் ராஜதந்திரம். ஆனால், துணிந்து தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 134 இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது என்பது தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை.
ஆறாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு இரண்டாவது முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த பெருமைக்கும் உரியவராகிறார்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் இந்த வெற்றிக்கு இன்னொரு சிறப்பும், முக்கியத்துவமும் உண்டு. தனது தலைவராகவும், இதய தெய்வமாகவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடக்கும் வேளையில், இந்த வெற்றிக் கனியை அவருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் என்பதுதான் அது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுமா என்பது சந்தேகம்தான்.
"மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கோஷத்துடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் துணிவான முடிவும், அவரது அசாத்திய தன்னம்பிக்கையும் மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது. அவர் தமிழக மக்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆறாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' நாளிதழின் சார்பில் வாழ்த்துகள்!
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்னமும் தன்னுடைய சாதனைகளை தொடர்கிறார் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கு , இரட்டை இலை சின்னத்தின் மகிமை ,
இன்று அதிமுகவை அரியணை ஏற்றியுள்ளது .2011 சட்ட மன்ற தேர்தல் , 2014 நாடாளுமன்ற தேர்தல் , 2016 சட்ட மன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் , செல்வாக்கு , சாதனைகள் யாராலும் வெல்ல முடியாது .அவருக்கு நிகர் அவரே . அவரின் பெயர் , அரசியல் செல்வாக்கு , புகழ் மூன்றையும் முன்னிலை படுத்தியதன் விளைவாகத்தான் இன்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி நிகழ்த்திய இமாலய வெற்றிகள் , சாதனைகள் எவராலும் ஈடு செய்ய முடியாத வரலாற்று நிகழ்வுகள் . எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவர் எல்லாம் போனாங்க
20.5.1973
வெற்றி சரித்திரம்
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியொரு
இடைத்தேர்தலை யாரும்
கண்டிருக்க முடியாது என்று சொல்லத்தக்க
அளவில் நடைபெற்றதுதான்
1973 -ம்ஆண்டு தமிழகம் சந்தித்த
திண்டுக்கல் இடைத்தேர்தல் !
அண்ணா தி மு க .தொடங்கிய ஆறு மாத காலத்துக்குள் 1973-ம ஆண்டு
மே மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டியில்
அண்ணா தி மு க மகாத்தான வெற்றி பெற்றது எம்ஜியாருக்குள்ள
மக்கள் சக்தியின் மகாத்தான ஆதரவை உலகுக்கு பறை சாற்றியது
அந்த இடைத்தேர்தல்
மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி
தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்
மாநிலத்தில் ஆளும் கட்சியாக
இருந்த திராவிடமுன்னேற்றகழகம் தமிழகத்தின் தனிப்பெரும்
தலைவராக திகழ்ந்து புகழ்பெற்ற
பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான
ஸ்தாபன காங்கிரஸ் என்ற மும்முனை தாக்குதலை
எம் ஜி ஆர் தலைமையிலான
அண்ணா தி .மு .க .இடது சாரிகளின் துணையோடு வெற்றிகண்டது
இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தி .மு .க மற்றும் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து
வீடு வீடாக தெருத்தெருவாக ஒரு சுவரைக்கூட விட்டு வைக்காமல்
தங்களது சின்னத்தை வரைந்து விட்டனர் .போதாக்குறைக்கு
மார்க்சிஸ்ட்கமயுனிஸ்ட் கட்சியும் தமது பங்குக்கு
தோழர் சங்கரையாவை வேட்பாளராக
அறிவித்து அவர்களின் சின்னத்தையும் வரைய தொடங்கிவிட்டனர் .அதன் பின்னர் தான் ,பி .இராம மூர்த்தியுடன் எம் .ஜி .ஆர் இந்திய கம்யுனிஸ்ட் தலைவராக இருந்த எம் .கல்யாண சுந்தரமும் பேசி
அ.தி .மு க .வுக்கு ஆதரவு கேட்டனர் .சி .பி. எம் .வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார் .
தேர்தலுக்கு மூன்று வாரங்கள் இருந்த நிலையில் தான் அண்ணா தி.மு.க.
வேட்பாளராக கே.மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை எம்.ஜி.ஆர். அறிவித்தார் அதன் பிறகு இரண்டொரு நாள் கழித்துதான்
வெற்றி சின்னமாம் இரட்டை இல்லை சின்னம் அறிவிக்கப்பட்டது
.
கட்சி புதியது ,வேட்பாளர் புதியவர் ,சின்னம் புதிது .இந்த நிலையில்
முழுக்க முழுக்க மக்களையும் ,தொண்டர்களையும் ,மட்டுமே நம்பி
எம்.ஜி.ஆர்.களம் இறங்கினார்
டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்கள் வந்து குவிந்துவிட்டனர்
மாநிலத்தின் மொத்த அமைச்சரவை யும் திண்டுக்கல் தொகுதியில்
முகாமிட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் புத்தம் புதிய கார்களும் ஜீப்புகளும்
பறந்து கொண்டிருந்தன .வீதிக்கு வீதி வண்ண விளக்கு அலங்காரங்கள் ,
கொடி,தோரணங்கள் ,கட் -அவுட்டுகள் ,போஸ்டர்கள் என்று ஆளும்
தி.மு.க.பணத்தை வாரியிறைத்தது .திண்டுக்கல் நாடாளுமன்றத
தொகுதியையே கோலாகலமாக்கிக் கொண்டிருந்தது .
ஆனால் அண்ணா தி.மு.க. வின் நிலையோ ?அறிவிக்கப்பட்ட இரட்டை
இலை சின்னத்தை வரைவதற்கு கூட சுவர்கள் கிடைக்கவில்லை
பிரசாரத்துக்கு பெரிய அளவில் வண்டி வாகனங்கள் இல்லை .ஆனாலும்
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும தொண்டர்கள் படையெடுத்து
வந்திருந்தினர் .அவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர் .வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தனர்
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை ,ஆத்தூர் ,சோழவந்தான் ,உசிலம்பட்டி ,திருமங்கலம் ,திண்டுகல்
ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆங்காங்கே அண்ணா தி.மு.க.
தொண்டர்கள் மிரட்டப்பட்டார்கள் ,தாக்கப்பட்டார்கள் .அ.தி.மு.க.கோடிக்
கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன .தொழில் துறை ரவுடிகளும் ,குண்டர்களும்,ஆயுள்கைதிகளும் நேரடியாக களத்தில் இறக்கி
விடப்பட்டு அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன இதற்க்கு மூல காரணமாக
இருந்தவர் மதுரை முன்னாள் மேயர் முத்து என குற்றச்சாட்டு அப்போது
எழுந்தது
இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு முதல் களப்பலியானவர் தான்
வத்தலகுண்டு ஆறுமுகம் என்ற அ.தி மு.க.தொண்டர் .திருச்சி சுசிலா ,கோடையிடி முத்துராமன் என்ற அ.தி.மு.க.பேச்சாளர் பங்கேற்ற பிரசரா
பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு தேர்தல் அலுவலகத்துக்கு வந்த
அந்த தொண்டனை குத்தி கொலை செய்துவிட்டனர் . அந்த தகவல்
அறிந்து .ஆறுமுகத்தின் இளம் மனைவி கர்ப்பவதியாக இருந்த சுந்தரியை
சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த எம்.ஜி.ஆர்.கண்ணீர்விட்டு அழுதார்
மே மாதம் முதல் வாரத்தில் இந்தச்சம்பவம் வத்தலகுண்டு நகரில் நடை
பெற்றது மே 11-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி படைப்பான
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது அன்று திண்டுகல்
நகரில் வரலாறு காணா வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டது
பிரசாரத்துக்காக லாரிகளில் வந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரட்டி
அடிக்கப்பட்டனர் .அன்று தான் விளாத்திகுளம் ஒன்றிய அ.தி.மு.க. அமைப்பாளர் யாக்கோப்பு
ரெட்டியார் வெட்டப்பட்டார்
இத்தகைய மிரட்டலும் ,மிரட்சியுமான சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆரின்
சூறாவளிப் பிரசாரமும் நடைபெற்றது .அவர் சென்ற வ்ழிஎங்கும்
மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து அவரைக்கண்டு
அவரதுஉரை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது .எங்கு திரும்பினாலும்
இரட்டைவிரல் காட்டி அ.தி.மு.க.வெற்றிக்கு கட்டியம் கூறிய அந்த
மக்கள் கூட்டம் 1973-மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற .வாக்குப்
பதிவின் பொது தங்கள் அமோக ஆதரவை எம்.ஜி.ஆர். மீது தங்களுக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தியது .
மே மதம் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிமுக வின் வெற்றி
தகவல்அறிவிக்கப்பட்டபோது ,தமிழகம் எங்கும் கோலாகலம் ,மக்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி
ஆறு மாதக் குழந்தையான அண்ணா தி.மு.க..அந்த இடைத்தேர்தலில்
பெற்ற வாக்குகளின் விபரம்
மொத்தம் வாக்குகள் ............643704
பதிவானவை ...........................491553
அண்ணா தி.மு.க.....................260930
ஸ்தாபன காங்கிரஸ் ............118032
தி.மு.க...................................... .... 93496
இந்திர காங்கிரஸ் ...................11423
இந்த தேர்தலில் அப்போதைய ஆளும் தி.மு.க மூன்றாம் இடத்துக்கு
தள்ளப்பட்டது இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் உட்பட மற்ற
அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்
http://s32.postimg.org/4px5jhb0l/WP_20160520_001.jpg
Kalki - weekly