https://scontent.fybz1-1.fna.fbcdn.n...81&oe=59E272D5
Printable View
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f0&oe=59D564F7
Sekar Parasuram ·
ஆட்சி அதிகாரம் கொண்டு நடிகர்திலகத்தின் அறிய பல சாதனைகளையும் சமுதாய தொண்டினையும் எப்படித்தான் மறைத்தாலுமே உண்மைகள் ஏதோ ஒரு வடிவத்தில் மீண்டும் மீண்டும் ... வந்துக் கொண்டேதான் இருக்கும்,
நடிகர்திலகத்தை தவிர்த்து விட்டு எந்த தலைவர்களின் (20 ஆம் நூற்றாண்டு) வரலாற்றையும் அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாத ஒன்று
Vasu Devan
· 5 hrs
என் கிராமம்... என் மக்கள்.
ராமாபுரம் என்ற ஊரில்தான் அப்பா ஆசிரியராக இருந்தார். அந்த ஊரின் சிறப்பம்சமே அது தலைவரது கோட்டைஎன்பதுதான். சிறிய ஊர்தான். ஒரு இருநூறு வீடுகள் இருக்கும். நான் எனது தாத்தா வீட்டில் தங்கி கடலூர் துறைமுகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். வாராவாரம் லீவுக்கு அம்மாவைப் பார்க்க வந்து விடுவேன். அப்புறம் தலைவர் படங்களின் ரிலீசின் போது ஊருக்கு வந்து விடுவேன். அப்பா கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் அந்த ஊரில் பணி புரிந்தார். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள elementary school. பின் எட்டாவது வரை விரிவு படுத்தப்பட்டு அப்போதைய கல்வி மந்திரி கக்கனை அழைத்து வந்து அப்பா அந்த ஸ்கூலை திறந்தார்கள். அம்மாவோ தீவிர வெறி கொண்ட சிவாஜி ரசிகை. தலைவர் என்றால் உயிர். நான் சொல்வது அறுபத்தைந்துகளின் கால கட்டத்தில். ராமாபுரம் ஒரு குக்கிராமம். மலைப்பாங்கான பகுதி. ஆனால் மண்வளம் நீர்வளம் அதிகம். புன்செய் சாகுபடிதான். கடலை என்னும் மணிலாக் கொட்டை, வாழை, கரும்பு, கம்பு பயிர்களை எங்கும் காணலாம். மலைப்பகுதி ஆதலால் சிலு சிலுவென்று இயற்கைக் காற்று நம்மைத் தீண்டியபடியே தவழும். ஒரே ஒரு டீக்கடை. அங்கே கம்பீரமான நம் 'வீர பாண்டியக் கட்டபொம்மன்' காலண்டரில் காட்சி தருவார்.
அம்மா மேல் அனைவருக்கும் ரொம்ப பிரியம். 'வாத்தியார் வீட்டு அம்மா' என்றுதான் அம்மாவை அனைவரும் அன்போடு அழைப்பார்கள். ஊரில் எந்தக் கல்யாணம் காட்சி நடந்தாலும் அம்மாதான் தாலி எடுத்துக் கொடுப்பார்கள். அவ்வளவு மரியாதை செய்வார்கள். அந்தந்த பயிர்களின் அறுவடைகளின் போது ஒருவர் விடாமல் அனைவரும் தங்களால் முடிந்த தானியங்களை, காய்கறிகளை, முந்திரிகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு போவார்கள்.அம்மா ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பார்கள். அதனால் அத்தனை பிள்ளைகளும் எங்கள் வீட்டிலேயேதான் கிடப்பார்கள். அனைத்து உதவிகளையும் செய்வார்கள். வீடு என்றால் கான்கிரீட் வீடு அல்ல. பனை ஓலைகளால் வேயப்பட்ட செம்மண் சுவர் கொண்ட குடிசைதான். தண்ணீர் எடுக்க மோட்டார் கொட்டகைக்குதான் போகவேண்டும். அங்கேயே குளித்துவிட்டு, துணிமணியெல்லாம் துவைத்துவிட்டு மண்பானையில் தண்ணீர் கொண்டு வருவோம். மோட்டார் கொட்டகையில் மோட்டார் இறைக்க வில்லை என்றால் தரைக் கிணறுதான். ராட்டினமெல்லாம் நீர் இறைக்கக் கிடையாது. தரையிலிருந்து நானூறு அடிகளுக்கு கீழேதான் தண்ணீர் இருக்கும். தண்ணீரே கண்ணுக்குத் தெரியாது. அப்படியே செப்புக் குடங்களின் கழுத்தில் கயிற்றின் சுருக்கை மாட்டி அப்படியே கைகளால் கீழே இறக்க வேண்டியதுதான். செப்புக் குடம் தண்ணீரைத் தொடுவதை உணர்வுகளால் புரிந்து கொண்டு அப்படி இப்படி அலசி தண்ணீரை மொள்ள வேண்டியதுதான். பல தடைகளைத் தாண்டி குடம் மேலே வரும் போது கால்வாசிக் குடத்தை மட்டுமே தண்ணீர் ஆக்கிரமித்து இருக்கும்.
அப்போதெல்லாம் மோட்டார் கொட்டகையில் மோட்டாரை ஸ்டார்ட் செய்ய தண்ணீரில் சாணத்தைக் கரைத்து மோட்டார் பைப்பின் வாயின் வழியே ஊற்றி பின் மோட்டாரை ஸ்டார்ட் செய்வார்கள். பின் தண்ணீர் வந்து அந்த அழுக்கெல்லாம் கிளியர் ஆனவுடன் ஒரே குதியும் கும்மாளமும்தான். முந்திரி விளைச்சலும் நிறைய. வாரம் ஒருமுறை சீசனின் போது கட்டுசாதம் கட்டிக்கொண்டு (புளியோதரையும், தளதள தயிர் சாதமும் மாவடுவும், நார்த்தங்காய் ஊறுகாயும்... கேக்கணுமா!) மோட்டார் கொட்டகை சென்று குளித்துவிட்டு அப்பா, அம்மா, நான் மற்றும் ஸ்கூல் பிள்ளைகள் ஸ்கூல் பிள்ளைகள் என்றால் சாதரணமாக எண்ணிவிட வேண்டாம். எட்டாவது படிக்கும் பிள்ளைகள் நல்ல ஆஜானுபாகுவாக, கிராமத்துக்கே உரிய வாட்டசாட்டமாக இருப்பார்கள். அனைவரும் கீழே ஜமுக்காளம் விரித்து நடிகர் திலகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால்.... அதற்குள் சில மாணவர்கள் தங்கள் தோப்பில் இருந்து பச்சை முந்தரிகொட்டை பறித்து வந்து தரையில் போட்டு காய்ந்த பனைமட்டை ஒலைகளை கொளுத்தியபடி கையில் வைத்துக் கொண்டு அந்த முந்திரிக்கொட்டைகளை மேலும் கீழும் பிரட்டி சுட்டு எடுத்து, கொட்டைகளை உடைத்து முந்திரிப்பருப்புகளை சாப்பிடத் தருவார்கள் டேஸ்ட் என்றால் அப்படி ஒரு டேஸ்ட் . சில வானரங்கள் பரந்து வளர்ந்து கிடக்கும் பனை மரங்களின் மேல் ஏறி நுங்குகளை நூற்றுக்கணக்கில் வெட்டிப் போடும். சில நண்பர்கள் லாவகமாக நுங்குகளின் தலைகளை சீவி முக்கண்ணன் முகம் போல அவ்வளவு அழகாகத் தருவார்கள். மூன்று கண்களிலும் ஆட்காட்டி விரலை மட்டும் நுழைத்து நோண்டி நோண்டி உர்ர்... உர்ர்...என நுங்கை உறிஞ்சி சுவைத்துச் சாப்பிட தவம் இருந்திருக்க வேண்டும். வேறு சில மாணவர்கள் ஈச்ச மரத்திலிருந்து கன்னங்கரேன்ற ஈச்சம் பழங்களை பனை ஓலைககளை பொட்டலம் போல மடித்து அதில் fresh ஆகக் கொண்டுவருவார்கள். அதன் சுவை இன்னும் அலாதி. இளநீர்கள் அவ்வளவு இனிப்பாக இருக்கும். கடலை செடிகளை அப்படியே வேருடன் பிடுங்கி வந்து அதை வேறு சுட்டுத் தின்னுவோம். காலை பத்து மணிக்கு உட்கார்ந்ததும் தீனி வேட்டைதான்.
மோட்டார் கொட்டகைக்கு அருகிலேயே அத்திமரம் ஒன்று உண்டு. கிளி மூக்கு போல சிவந்த அத்திப்பழங்கள் அடுக்கடுக்காய் தொங்கும். அவற்றையும் பறித்துப் பதம் பார்ப்போம். (ஆனால் புழு அதிகம் இருக்க வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாக சாப்பிட வேண்டும்)
மணி இரண்டிற்கு சோற்றுக் கட்டை பிரித்து விலாசுவோம். சாப்பாடு எங்களுடையது. மாணவர்கள் பிடிவைத்த பித்தளைக் குவளையில் அருமையான கேப்பங்கூழையும், (கேப்பங்க்கூழ் உடலுக்குக் குளிர்ச்சி) கம்பங்கூழையும் (கம்பங்கூழ் சூடு) கொண்டு வருவார்கள். கடிச்சிக்க பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் மிளகாய். சிலர் கத்தரிக்காய் போட்டு முதல்நாள் வைத்த கருவாட்டுக் குழம்பைக் கொண்டு வருவார்கள். அந்தக் குழம்பை கெட்டியான கேப்பங்கூழில் பிசைந்து சாப்பிட்டால்... ஆஹாஹா... சொர்க்கம் எங்கடா இருக்குமன்னு ஒருத்தன் கேட்டானாம் ..கருவாட்டுக் குழம்பில் என்று இன்னொருவன் சொன்னானாம்.
பேச்சு எதைப் பற்றியும் இருக்காது. தலைவரின் படங்களைப் பற்றிதான் பேச்சு. அப்பா டவுன் சென்றால் பொம்மை, பேசும்படம் இதழ்களை கட்டாயம் அம்மாவிற்கு வாங்கி வர வேண்டும். அம்மா அதைப் படித்து எல்லோருக்கும் தலைவரைப் பற்றி சொல்வார்கள். தலைவர் பற்றிய விவர ஆவணங்களை தனியே பிரித்து வைத்து விடுவார்கள். (அதில் அழிந்தது போக மீதி உள்ளதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்) தலைவரைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அம்மாவுக்கு அத்துப்படி. அடுத்த படம் என்ன... எப்போது ரிலீஸ் என்று அனைத்து மாணவர்களும் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள்.
ராமாபுரத்தில் ஒவ்வொரு குடிசையிலின் நுழைவாயிலிலும் தலைவர் படங்கள் பிரேம் போட்டு மாட்டியிருக்கும். முக்கியமாக பாடம் செய்யப்பட்ட புலியுடன் தலைவர் படு இளமையாய், இயற்கையான அழகுடன், கனகச்சித பேண்ட் ஷர்ட்டுடன் நிற்கும் அந்த உலகப் புகழ் பெற்ற ஸ்டில்லை அதிகமாகக் காணலாம். இன்றும் கூடக் காணலாம். அதற்குக் கீழேயே மண்பாண்டத்தில் கூழ் வைத்திருப்பார்கள். வெறி என்றால் இந்த வெறி அந்த வெறி கிடையாது... கண்மூடித்தனமான பக்தி. அத்தனை பேருக்கும் நான் செல்லக் குழந்தை. என் கால் தரையிலேயே படாது. நான் சிறுவன் என்பதால் யாராவது ஒருவர் தூக்கி வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். 'குட்டி சிவாஜி' என்று செல்லப் பெயர் வேறு.
ராமமூர்த்தி அண்ணன் வீட்டில் அவருக்கு தனிரூம். president இன் பிள்ளை. பெரிய கை. ஊரிலேயே பெரிய ஓட்டு வீடு. அந்த ரூமில் பார்த்தால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சுவரின் ஒரு இன்ச் கூட தெரியாத அளவிற்கு நூற்றுக் கணக்கில் தலைவரின் காலண்டர்கள் தொங்கும். வித விதமான காலண்டர்கள். ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், பாதுகாப்பு, இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, பிராப்தம், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, தேனும் பாலும், மூன்று தெய்வங்கள் என்று வித வித போஸ்களில் தலைவர் ஜொலித்தது இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது.
நான் முன்னமே குறிப்பிட்டது போல கடலூரில் நடந்த 'பாதுகாப்பு' பட ஷூட்டிங்கில் தலைவரை நேரிடையாக ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் கண்டு களிக்க, எரியும் நெருப்பில் பெட் ரோலை ஊற்றியது போல 'பாதுகாப்பு' ஷூட்டிங் ராமாபுரத்து மனிதர்களை மேலும் தலைவர் வெறியர்கள் ஆக்கியது. 'பாதுகாப்பு' எங்கள் கிராமத்தையே புரட்டிப் போட்டு விட்டது.
தங்கவேலு, ராசு, சுந்தர மூர்த்தி, பழனிவேலு, சின்னத்தம்பி, முனியன், கோவிந்தராசு, வீரப்பன், கோதண்டபாணி, சர்க்கரை, திருநாவுக்கரசு, ராமமூர்த்தி என்று பக்தர்கள் பட்டியல் அதுபாட்டுக்கு நீண்டு கொண்டே போகும்.
எங்கள் குடிசைக்குப் பின்னால் ஒரு பெட்டிக்கடை கம் ரிக்கார்டுகள் போடும் கடை. ஊரில் கல்யாணம், சுப நிகழ்சிகள் அனைத்திற்கும் அந்தக் கடையிலிருந்துதான் இசைத்தட்டுகள், ஆம்பிளிபயர்கள், புனல் ஒலிபெருக்கிகள் போகும். கடைக்காரர் எங்களுக்கு ரொம்ப தோஸ்த். தலைவர் தான் அவருக்கு தெய்வம். கடலூர் சென்று புதுப்படங்களின் ரிக்கார்டுகளை வாங்கி வருவார். அதைப் பார்க்க நீ... நான் என்று போட்டி. ஏனென்றால் இசைத்தட்டுகளின் கவர்களை அலங்கரிக்கும் நடிகர் திலகத்தின் மதிவதன முகத்தைக் கண்டு ரசிப்பதற்காக. கடைக்காரர் ரிக்கார்டுகள் வாங்கி வந்த உடனேயே ஒலிபெருக்கி வாயிலாக ஒலிக்கச் செய்து விடுவார். அவருக்கு அதில் நிரம்பப் பெருமை. ரெண்டாவது ஊர் முழுக்க அந்தப் பாடலைக் கேட்டு விடலாம். சின்ன ஊர்தானே! சவுண்டை வேறு அதிகமாக வைத்து விடுவார். அப்படிக் கேட்டது முதன் முதலாக நான் "ஒரு ராஜா ராணியிடம்". அவர் நாள்முழுக்க தலைவர் பாடல்களைப் போட்டு எல்லோருக்கும் மனப்பாடமே ஆக்கி விடுவார். 'பிராப்தம்' படம் வருவதற்கு முன்பாகவே "நேத்துப் பறிச்ச ரோஜாவை" எங்கள் ஊரில்முழுதும் பாடாத ஆளே இல்லை.
ஆச்சு... தலைவர் படம் கடலூரில் ரிலீஸ் என்றால் முதல் நாளே கிளம்பத் தயார் வேலைகள் நடக்கும். ராமாபுரத்திலிருந்து கடலூருக்கு அப்போதெல்லாம் பஸ் வசதிகள் கிடையாது. சாத்தங்குப்பம், கேப்பர்குவாரி மலை, TB ஆஸ்பத்திரி, அண்ணா கிராமம் வழியாக நடந்துதான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்கள் வரும். மேட்னிக்கு கிளம்ப வேண்டும். அம்மா முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்பதில் மாறியதே இல்லை. அப்பாவுக்கும் தலைவரை பிடிக்கும். கிராமத்து ஸ்கூல்தானே! அப்போதெல்லாம் யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். ஸ்கூல் லீவாக இருந்தாலும் சரி... லீவு விடாவிட்டாலும் சரி. தொண்டர் படை சூழ அம்மா... நான்... அப்பா பொடி நடையாக நடக்க ஆரம்பித்து விடுவோம். வழக்கம் போல கட்டு சாதம் உண்டு. ரசிகர் குழாம் அம்மாவுக்கு பாதுகாப்பாக பெரிய கம்பு, கழிகளை எடுத்துக் கொண்டு முன்னே இருபது பேர், பின்னே இருபது பேர் என்று பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு வருவார்கள். வழி நெடுகிலும் 'சிவாசி (அப்படிதான் அன்புடன் அழைப்பார்கள்) வாழ்க'... என்ற கோஷங்கள்தான். வழி நெடுக முந்திரிக்காடுகள். பயமாக இருக்கும். வழியில் ஒன்றிரண்டு கிராமங்கள்தாம். செம்மண் சாலைகள்தான். வழியில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. காலை ஒன்பது மணிக்கு கிளம்பினால் பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடலூர் சென்று விடுவோம். உடனே கியூவில் நிற்க ஆரம்பித்து விடுவோம். கடலூர் ரசிகர்கள் செய்யும் அமர்க்களங்களை ஆசைதீரப் பார்த்துக் கொண்டிருப்போம். மூன்று மணிநேரம் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு டிக்கெட் எடுக்கத் தயாராக இருப்பார்கள். நான் சிறுவன் என்பதால் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று விடுவேன்.
டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்ததும் எங்கள் ஊர்க்காரார்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வோம். பெஞ்ச் டிக்கெட்தான். சாய்ந்து கொள்ளவல்லாம் முடியாது. முதுகு வலிக்கும். படம் ஆரம்பிக்குமுன் கம்பெனியின் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தை பையன்கள் எடுத்துக் கொண்டு வந்து விற்க ஆரம்பிப்பார்கள். விலை எழுபத்தைந்து காசு அல்லது ஒரு ரூபாய் இருக்கும். 'வியட்நாம் வீடு' என்றால் வீடு போன்ற வடிவிலே கட்டிங் செய்து பாட்டுப் புத்தகங்கள் அழகாக வரும். அம்மா அனைத்தையும் வாங்கி விடுவார்கள். பின் படம் முடிந்ததும் ஊர் நோக்கி மறுபடி நடைபயணம். இரவு நேரம் பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் அதிகமாக பாதுகாப்பு கொடுத்தபடி எங்களை அழைத்துச் செல்வார்கள். மணி ஒன்பதுக்கெல்லாம் ஊர் போய் சேர்ந்து விடுவோம்.
தீபாவளி போன்ற விஷேச நாட்களில் காலையிலேயே பயணித்து விடுவோம். சொர்க்கத்தை பாடலியில் பார்த்துவிட்டு எங்கிருந்தோ வந்தாளை நியூசினிமாவில் முடித்துவிட்டு ஊருக்கு செல்வோம். வழி நெடுகிலும் படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சிகளை பேசி சிலாகித்துக் கொண்டே அசைபோட்டபடி வருவார்கள். அவரைப் போலவே நடந்து காட்டி நடிக்க முயன்று அதை நகைச்சுவையாக்கி.. ஏக ரகளை.
'தங்கப்பதக்கம்' முதல் ஷோ ரமேஷ் தியேட்டரில் முடித்துவிட்டு திரும்பும் போது அம்மா "என்னால் வரமுடியாது... அடுத்த காட்சியும் பார்த்து விட்டுதான் வருவேன்" என்று அடம் பிடித்து விட்டார்கள். அவர்களுக்கு இன்று வரை 'தங்கப்பதக்கம்' தான் உயிர். லேடீஸ் என்பதால் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கிட... தியட்டேருக்கு வெளியிலேயே கிட... பேனர்களை பார்த்துக் கொண்டு, தலைவருக்கு போடப்பட்ட மாலைகளை பார்த்துக் கொண்டு... குவியல் குவியலாய் வரும் ஜனங்களைப் பார்த்துக் கொண்டு... பொழுது போவதே தெரியாது. அன்றே இரண்டு முறை பார்த்தும் அம்மாவுக்கு திருப்தி இல்லை. விட்டால் செகண்ட் ஷோவும் பார்ப்பார்கள் போல் இருக்கிறது. ஒருவழியாக சமாதானம் சொல்லி அழைத்து வந்தோம் நானும் அப்பாவும்.
எப்படிப்பட்ட வாழ்க்கை! கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத 'சொர்க்க' போக வாழ்க்கை! மனமகிழ்ச்சியான வாழ்க்கை! சாப்பிட்டது கூழ், கஞ்சி என்றாலும் எங்கள் கிராமத்தவர் சிறியவர் முதல் பெரியவர் வரை பருகியது நடிகர் திலகம் என்ற அமிர்தத்தையல்லவோ!
என் கிராமம்... என் மக்கள்... என் தலைவன் புகழ் பாடிய கிராமம்... என் தெய்வத்தைக் கொண்டாடிய மக்கள்.
மறக்கத்தான் முடியுமா அந்த மாணிக்க நாட்களை!
கண்களில் நீர்த் துளிக்கிறது.
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0a&oe=59A4A878https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8d&oe=599BDEEB
அடடா அடிச்சான்டா அரை சதம்....
நாகர்கோயில் வசந்தம் பேலஸ் தியேட்டரில் வரும் வெள்ளிக்கிழமை 16.6.2017 அன்று ராஜபார்ட் ரங்கதுரை 50வது நாள்.....
இன்று வெளிவரும் புதிய படங்கள் பல கோடி ரூபாங்களில் பட்ஜெட் செய்து 1வாரம் அல்லது 2 வாரங்களில் தூக்கப்படுகிறது. ஏற்கனவே உலக மகா நாயகனின் கர்ணன் சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு கலக்கு கலக்கியது. சென்னையில் 150 நாட்களுக்குமேல ஓடி விழா கண்டது. இன்று ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டலில் 4 ஜியில் வெளியிடப்பட்டு நாகர்கோயிலில் 50 நாளை கடந்து ஓடப்... போகிறது என்றால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே , அது கலை உலகில் சிவாஜியை பார்த்துதானா?
உலகில் ஒரே சூரியன்...ஒரே சந்திரன்...அதுபோல் கலை உலகில் ஒரே சிவாஜி..........
திருச்சி எம்.சீனிவாசன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a8&oe=59D71F8C
இன்று பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் " தங்கச் சுரங்கம் "
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e5&oe=599E04CBhttps://scontent.fybz1-1.fna.fbcdn.n...36&oe=59E56A1D
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0e&oe=59DEDE9E
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தென் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், திருநெல்வேலியில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், 11 -06 - 2017 , ஞாயிறு மாலை தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் K .சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...08&oe=59E7A27F
4 August 2016 ·
நடிகர் திலகம் செய்த பல கொடைகள் உதவிகள் பலருக்கு தெரியவில்லை. தான் செய்த உதவிகளை சொல்லிக்காட்டாத பெருந்தன்மை காரணமாக நடிகர் திலகம் செய்த நற்காரியங்கள் பலரும் அறியமுடியாமல்போய்விட்டது.ஆகவே பலரும் தெரிந்துகொள்ளும்வகையில் ஒருசில பதிவுகள் இங்கே..)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...41&oe=59A7116D
.. வாழ்க வள்ளல்சிவாஜி!
தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். “சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார். “அதென்ன செய்திங்க?” என்றேன். “சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில்இ அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார். தொடர்ந்துஇ “விகடன் பொக்கிஷம் பகுதியில்இ பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும்இ அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பேஇ அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்திஇ அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25இ000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்திஇ அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம். உண்மையில்இ 1953-ல் ரூ.25இ000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10இ 7இ 5இ 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துஇ பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்கஇ சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில்இ பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்குஇ மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காகஇ கொழும்புஇ ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில்இ ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண்இ பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜிஇ நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார். சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போதுஇ “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால்இ அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை. “இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடுஇ மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.) நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன். வாழ்க வள்ளல் சிவாஜி! ...................
(நன்றி விகடன் வாழ்க வள்ளல் சிவாஜி! என்ற தலைப்பில் விகடன் எனதுடயறி பகுதியில்)
--------------------------------------------------------------------------------
மேற்கண்ட பதிவுக்கு அமைவாக இன்பா அவர்களின் செலுலாய்ட் சோழன் தொடரில் எழுதிய பகுதி
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fe&oe=59D6E188
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...13&oe=59E6B3E9
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...af&oe=59E3FC60
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4d&oe=59A0B963
நடிகர்திலகத்தின் உதவியால் கட்டப்பட்ட மூளாய் வைத்தியசாலையின்
இன்றைய தோற்றம்
http://oi63.tinypic.com/2z5ui6s.jpghttp://oi63.tinypic.com/s1ut50.jpghttp://oi65.tinypic.com/ibw19z.jpg
வைத்தியசாலை காரியாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நடிகர்திலகத்தின் புகைப்படம்
http://oi66.tinypic.com/2prb636.jpghttp://oi68.tinypic.com/wkodxz.jpg
(பொதுவாக நான் பதிவுகளின் எண்ணிக்கையை கவனிப்பதுமில்லை
அலட்டிக்கொள்வதுமில்லை எதிர்பாராதவிதமாக இப்பதிவு 3000 வது
பதிவாக அமைந்துவிட்டது)
27/05/1961 இல் வெளியீடு கண்ட பாசமலர் விமரிசனத்தை போட நினைத்து மறந்தேன். இதோ அது.அடுத்து எல்லாம் உனக்காக பற்றி ஒரு நீண்ட புது பதிவு வருகிறது.
Meisner பள்ளி Stanislavsky பள்ளியிலிருந்து உருவானதுதான் என்றாலும் முக்கியமாக வேறுபட்டது Sense Memory முறை தவிர்த்து instict மற்றும் improvisation ஆகியவற்றுக்கு முக்கிய துவம் தந்து , நடிக்கும் போது தன்னுணர்வு கொண்ட முன் நிர்ணய அடிப்படையில் அமையாமல், கூட நடிப்பவர்களின் தன்மைக்கு ஏற்ப dynamic ஆக கணங்களின் சத்தியத்துக்கு ஏற்ப தகவமைப்பது. கீழ்கண்ட விவரங்கள் இன்னும் தெளிவாக்கும்.(Meisner எங்கே Stanislavsky முறையில் வேறு பட்டு நிற்பது என்பது.
1)Sense Memory முறை அறவே தவிர்க்க படுதல்.
2)எதையும் முன்கூட்டிய தீர்மானம் செய்யாமல் Spontaneous ,Instinct &Impulse அடிப்படையில் நடிப்பு.
3)ஒரு பாத்திரத்தை முன்கூட்டி வடிவமைக்காமல் ,செய்ய ஆரம்பித்த பிறகு உடன் நடிப்பவர்,காட்சிகளின் எண்ண எழுச்சிக்கு தக்கவாறு dynamism கொண்டிருத்தல்.
4)பகல் கனவில் மிதப்பது போல , உணர்ச்சிகளின் வயப்பட்ட நடிப்பு. வசனங்களை கூட முன் கூட்டிய உணர்ச்சி தீர்மானங்களில் அமையாமல் moment to moment அடிப்படையில் தீர்மானிப்பது.
5)Improvise to access an emotional life .
பாசமலர் ராஜசேகரனாக சிவாஜி நடித்ததை மீறி இந்த பள்ளி வகை சார்ந்த நடிப்புக்கு உதாரணம் தேடுவது மிக கடினம்.ஆரம்ப சில காட்சிகள்,கடைசி மூன்று காட்சிகள் (Stanislavsky method Acting ) தவிர்த்து அவர் பணக்காரன் ஆவதிலிருந்து , மலர்ந்தும் மலராத காட்சி வரை Meisner பள்ளி நடிப்புக்கு இலக்கணம் எழுத படும்.
பாசமலரை ரசிகர்கள் எந்தளவு புரிந்து கொண்டாடினார்கள் என்பதை என்னால் அளக்க முடியாது.வெளிப்படையாக பாசத்தை அடிப்படையாக கொண்டது போல தோற்றமளிக்கும் இந்த காவியம் ,திரைக் கதை பாத்திர வார்ப்புகள் , பாத்திரங்களின் உள்ளுணர்வுகள் ,மதிப்பீடுகள் ,உறவுகள்,பிளவுகள்,பிரச்சினைகள் அனைத்துமே உருவம்,உள்ளடக்கம் முற்றிலும் மற்ற சராசரி படங்களில் இருந்து வேறு பட்டது.துன்பியல் முடிவை நோக்கி அமைக்க பட்ட இறுதி காட்சியின் வெற்றி இதை பாசக் காவியமாக்கி விட்டாலும், இதன் எல்லைகள் மிக விரிந்தவை. nerrative surprise ஏராளம்.இதை எழுதிய கொட்டாரகரா ,கேரளாவை சேர்ந்தவர் என்பதால் ,கேரளாவின் மரபான மருமக்கள் தாயம் எனும் தாய் தொடர் (மற்ற பகுதிகளில் தந்தை தொடர்)குடும்ப சங்கிலியை வைத்து,தமிழ் மரபில் அது விளைவிக்க கூடிய விபரீதங்களை யோசித்ததன் விளைவு நமக்கு கிடைத்த கதை பொக்கிஷம்.
அண்ணன்-தங்கை தங்களை தவிர யாருமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் என்று எவரும் கவனிக்க விரும்பாத சராசரி ஏழ்மையில் ஆற்றொழுக்காக செல்லும் உறவு, எல்லோருடைய கவனம் ஈர்க்கும் சமூக பொருளாதார உயர் நிலை அடையும் போது மற்றவர்களுடைய உறவு,நட்பு தலையீடுகளால், முறுக்கிக்கொண்டு கெட்டு நரகமாவதை அருமையாய் சொல்லும் காவியம்.ஏனெனில் அடிப்படையில் நம்மை நாமே உணர்வதற்கு நமக்கு முக்கியமானது நம்மை சுற்றியிருக்கும் மற்றவர்களே.நம்மை பற்றி எண்ண நீட்சியில் மற்றவர் மதிப்பீடு புகுந்து ,உறவுகள் சீர்கெடுமானால்,மற்றவர்கள் சார்ந்து நம் வாழ்க்கை நரகத்தில் தள்ள பட்டு விடும்.அதிலும் நாம் வாழும் முறை ஊர் சார்ந்த முறைமையில் வேறு பட்டிருந்தால்.
கதாநாயகன் பாத்திர வார்ப்பிலும் , மற்ற கதாபாத்திரங்களுடன் இணைவு-முரண் அனைத்திலுமே deviant என்று சொல்லப் படும் தன்மை கொண்டது .ஒரே ஒரு விஷயத்தை முன்னிறுத்தியே (தங்கை ,அவள் நல்வாழ்வு) நாயகன் முடிவுகள் அமைவது போல தோற்றம் கொடுத்தாலும், அந்த முடிவுக்கு வருமுன் பலவித குழப்பங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், சுயநலங்கள், சிறு சிறு வேற்றுமைகள் என்று இந்த படத்தின் பின்னல்கள்,சிடுக்குகள் நிறைந்த ஆழம் , ரசிகர்களால் உணரப் பட சிறிதே பாதை மாறி பயணம் செய்து ,நடிப்புக்கு வருகிறேன்.
இதில் அண்ணன்-தங்கை symbiotic relationship ,ஒருவரை தவிர மற்றோருக்கு எந்த பிடிப்போ,பற்றோ அற்ற ஒரு முனை பட்ட உறவு. இது ஒரு வித brainwash போல ,ஒருவரை தவிர இன்னொருவருக்கு எதுவும் முக்கியமில்லை என்ற psychotic obsession . இதை நான் வாழ்க்கையில் சந்தித்த சில முக்கியமான மனிதர்களுடன் கண்டிருக்கிறேன். முக்கியமாக அம்மா,சகோதரி சம்பந்த பட்ட உறவுகளில். இந்த மாதிரி மனிதர்கள் எடுக்கும் ,முடிவுகள், தியாகங்கள்,மற்ற முக்கிய உறவுகளின் சிதைந்த நிலை மற்றோருக்கு illogical தோற்றம் கொடுத்தாலும்,சம்பத்த பட்டவர்களின் கண்ணுக்கு அவை நியாயமே.
ராஜசேகரனை பொறுத்த வரை அவனுக்கு மேற்பட்ட சிந்தனை எவையும் கிடையாது. உண்மையானவன்,உழைப்பாளி என்பதெல்லாம் இருந்தாலும் பொதுநலன், குழு சார்ந்த பார்வை என்பது அறவே கிடையாது. அவன் பழைய வாழ்வை மறந்து பணம் பகட்டு ,அந்தஸ்து,கெளரவம் போன்ற மாயைகளில் உழல்பவனே.நிறைய இடங்களில் தன் நலன் சார்ந்து தங்கையின் நலனுக்காக ,மற்றோரை குப்பையாக தூக்கி எறிபவன்.அவனிடம் ஒரே நல்ல தன்மை தங்கை பாசம் மட்டுமே. மூர்க்க தனமான கண்ணை மறைக்கும் பாசம், தங்கையின் சேமிப்பாலும் ,ஆலோசனையாலும் கிடைக்கும் செல்வ நிலை அவளுக்கே சொந்தம், தான் guardian /custodian மட்டுமே என்று வாழும் நிலையில் தனக்கென்று உருவான குடும்பத்தை அந்நிய படுத்துவதும் அல்லாமல் ,தங்கையின் கணவன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று மற்றோர் சுயத்தை சீண்டும் முடிவுகளையும் நடைமுறை படுத்துகிறான்.இந்த மாதிரி சிக்கலான பாத்திரம் தமிழ் திரை கண்டதில்லை.என்னிடம் பல பேர் கேட்ட கேள்வி ,ஏன் எல்லாவற்றையும் தங்கைக்கு கொடுத்து இப்படி தெருவில் அலைய வேண்டும் என்ற கேள்வி? நான் ஏற்கெனெவே சொன்னது போல அசாதரணமான உறவு, மனநிலை,ஒருமுனை பட்ட உறவின் தாக்கம்,மூர்க்கத்தனமான பாசம் இவற்றில் ராஜசேகரின் செயலுக்கு அவனாலுமே விளக்கம் சொல்ல முடியாது.நான் பலமுறை வாழ்க்கையில் பார்த்த நிலைதான் இது.
நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.
படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுணர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.
பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -
Meisner பள்ளி சார்ந்த நடிப்பு என்பதால் ,சூழ்நிலை மற்றும் மற்ற கதாபாத்திரங்களை ஆழமாக அலசி விட்டு பிறகு நடிகர்திலகத்தின் நடிப்பை விரிவாக பார்ப்போம் .
நான் ஏற்கெனெவே கூறியபடி இந்த படத்தில் வில்லன் யாருமே கிடையாது அண்ணன் தங்கையின் அதீத பாசம்தான் ஒரே வில்லன். இந்த குருட்டு பாசமே இருவர் அழிவுக்கும் காரணமாகி defeatism நோக்கி பாத்திரங்களை தள்ளுகிறது.
ராஜசேகர் , ஆசை பட்டு பணக்காரனாகி பணக்கார வாழ்வின் அந்தஸ்து,தோரணை,வறட்டு கெளரவம் எல்லாம் சுமப்பவன்(நண்பன் புகழும் போது வெளிப்படையாய் ரசிக்கும் அளவு).நண்பனே ஆனாலும் ஆனந்தனை மாப்பிள்ளையாக ஏற்கும் பெருந்தன்மையோ,அவர்களை சுதந்திரமாக வாழவிடும் எண்ணமோ இல்லாதவனே. சில விஷயங்களில் குருட்டு பிடிவாதங்கள் உண்டு.சொத்தை பிரிப்பது என்பது அவன் பாசத்தை பிரிப்பது போல obsession கொண்டு நடப்பது, சுதந்திர மனப்பான்மை கொண்ட professional மனைவியிடம் ஒட்டாத சமூக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவளுக்கு அளிக்கும் சுதந்திரம் ஒரு விதத்தில் அவனை உயர் தளத்தில் வைத்தாலும் ,அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்ற அளவில் by default நடப்பதாகவே உணர்வோம்.தன்னுடைய சக நண்பர்கள் காட்டும் வாஞ்சையை அவர்களுடன் திருப்புகிறானா என்பதே கேள்விகுறி. தங்கை அவள் சார்ந்த obsessions இதை தவிர வேறு சிந்தனையோ ஒட்டுதலோ இல்லாதவன்.மற்றவர் மாறி வளரும் போது emotional வளர்ச்சி காணாது ,மனதில் செல்வந்தனாய் மட்டும் உணர்ந்து விடுகிறான்.
ராதா தன் அண்ணனின் நல்ல நண்பன் (அங்கீகரிக்கப்பட்ட)என்ற சுவாதீனத்தில் காதலில் விழுந்தாலும் ராஜசேகரன் மனதளவில் பணக்காரனாகி விட்டது போல, சில செல்வ வளங்களை அனுபவித்தாலும் மனதளவில் பழைய ராதாவாகவே தொடர்வது பின்னால் பல சிக்கல்களை விளைவிக்கும் முரணாகிறது. பாசம் பழைய படியே தொடர்ந்தாலும் நிஜமான பணக்கார அண்ணனுடன் , செல்வ சுகங்களை அனுபவிக்கும் ஏழை ராதாவாகவே தொடர்வது பெரிய முரண்.பிறகு தான் தன் கணவன் என்ற பெண்ணுக்குரிய அனுசரணை சார்ந்த சுய நலம் எட்டி பார்ப்பது ராஜசேகர் மனநிலைக்கு ஒத்ததாக இல்லாதது அடுத்த நிலைக்கு சிக்கலை வளர்க்கிறது.
ஆனந்தன், நடைமுறை லட்சியவாதி ஆனாலும்,ராஜசேகரன் உயர்நிலையை ஒப்பு கொள்கிறான்.(இரு முறை அடிபடும் போதும் எதிர்க்காமல் ).இந்த தாழ்மையுணர்வு ,வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க நேர்கையில் இன்னும் அவனை ஏற்கெனெவே சிறிது சீர்கெட்ட நண்பனுடன் ஆன உறவை சந்தேக கண் கொண்டே அளக்க,செயல்பட வைத்து விடுகிறது . அவன் ஏழை ராதாவை விரும்பி, அவளை பணக்காரியாய் பல சிக்கல்களுடன் அடைந்தது ,அவன் குணத்திலும் சிறிது குழப்பத்தை விளைவிக்கிறது.
விதவை ஏழை ,மீனாக்ஷி அம்மாளோ ,தனது ஒரே மூலதனமான மருமகனை வைத்து தன்னுடைய நிலையை உயர்த்த விடாமல் இடையூறாய் ஒரு ஒட்டு வாழ்வு. அவளுக்கு அண்ணன் தங்கை பிரிந்து பாகமும் பிரிந்தால் மட்டுமே அவள் ஒரு வீட்டில் தலைமை ஏற்று அவள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதற்கு ராதாவோ, ஆனந்தனின் நேர்குணங்களோ உதவாது என்பதால் சிறிதே தடம் மாறுகிறாள்.
மாலதி தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் குடும்ப பின்னணியில் வந்து இந்த மூட பாச சுழல் நிறைந்த இடத்தில் பொறியில் மாட்டிய எலியாய் அவதி பட்டு, ஒட்டாத வாழ்க்கையில் சடங்கு போல வாழ்ந்து தன் கணவன் மதிப்பு,சுயமரியாதை ,பணம் எதையும் காக்க இயலாததால் அண்ணன் காட்டிய வழியில் சென்று விடுகிறாள் (பேருக்கு மறுத்து விட்டு ,பிள்ளையையும் கணவனிடம் விட்டு தப்பிக்கிறாள்)
பாஸ்கரன் ஒரு நல்ல சகோதரனாக வழிகாட்டியாய் இருக்க நினைத்தாலும் , ராஜுவின் பைத்தியகாரத்தன பாசம், தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாது என்பது புரிந்து, ராஜுவின் சவாலை (முடிந்தால் நீ உன் தங்கைக்கு எதாவது பண்ணு என்னை போல் )மெளனமாக professional ,நல்ல பாரம்பரிய குடும்பத்து முறையில் சிக்கலில்லாது லட்சிய போர்வையில் தங்கைக்கு தற்காலிக விடுதலை தருகிறான்.
நண்பர் ரத்தினம் , எப்போதெல்லாம் ராஜுவின் மீது அக்கறை செலு த்துகிறாரோ ,அப்போதெல்லாம் (திருமண ஏற்பாடு,முனிசிபல் சேர்மேன்,குடும்ப சொத்து தீர்வு)அப்போதெல்லாம் அண்ணன் தங்கையின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளில் மூக்குடைப்பே பெறுகிறார்.
இது அழகான பாசத்தின் கதையாக அமர துவம் பெற்றாலும் , இந்த குருட்டு பாசமே வில்லனாகி அவர்களையும்,சுற்றி இருப்பவர்களையும் இந்த அளவு மன கிலேசம் கொள்ள வைப்பது ,இந்த படத்தின் வெளிப்படையான பல மாயைகளை தகர்த்து, பல வேறு பட்ட தளங்களில் சிக்கலான தளங்களில் திரைக் கதை பயணிக்கிறது.
சிவாஜி இந்த nuances உணர்ந்து நடித்ததால்தான் படம் இந்த அமரத்துவத்தை அடைந்துள்ளது.
நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.
ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .
ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.
ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.
தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.
வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.
தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.
செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.
தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஒட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .
இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.
அவர் வாழ்நாள் ஆஸ்கார் பெரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.
Now venthar TV " kalvanin kathali" 2 pm onwards,
At vanavil TV channel " Neethi" from 1:30 pm onwards
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2a&oe=599F0179
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...65&oe=599C9819
Sundar Rajan
அன்பு இதயங்களே,
அரிசிக்கு கூட
மாற்று அரிசி ( வந்து விட்டது)
எங்கள் சிவாஜிக்கு ...
மாற்று
எப்போதும் வராது...
வராது...
இதற்கு மேல வார்த்தை
இல்லை
இலக்கியத்தில்
சொல்ல....
எதிரிகளை கலங்க வைக்கும்
துரோகிகளை துடிக்க வைக்கும்
மாபெரும் வெற்றியை தந்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...db&oe=59A1C406
Sekar Parasuram
எங்களுக்கு அரசியல் பதவி தேவையில்லை, விளம்பரங்கள் கொண்டு எதையும் அடையவும் அவசியமில்லை,
20 ஆம் நூற்றாண்டு தமிழக வரலாறு என்று எப்படி புரட்டி போட்டு எழுதினாலுமே எங்கள்
" நடிகர்திலகத்தை" தவிர்த்து விட்டு வரலாற்றை முழுமை படுத்த முடியாது.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...69&oe=59E25888
யூன் 14ம் திகதி வெளிவந்த
நடிகர் திலகத்தின் திரைகாவியங்கள்
குருதட்சணை 1969
ரத்தபாசம் 1980
யூன் 15ம் திகதி வெளிவந்த
நடிகர் திலகத்தின் திரைகாவியம்
பொன்னூஞ்சல் 1973
http://i1065.photobucket.com/albums/...pskldxqttf.jpg
S V Ramani
· 1 hr
"அவர் ஒரு சரித்திரம்" - 009
கலைஞானி நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
அன்னை இல்லம்'
... பெற்ற தாயிடம் அன்பும் அமைதியும், காதலியிடம் இயலாமையால் புலம்பலுமாக இருவேறுபாடு நிலைகள்.
படம் முற்பகுதியில் சிவாஜியின் காதல் பாட்டுகளுடன் இனிமையாக அமைந்தாலும், S V ரங்காராவிற்குத் தூக்குத
தண்டனை விதித்த பின்தான் முக்கிய கட்டத்திற்கு வருகிறது.
தான் பெற்ற தாயிடமே தான் அவரது மகன்தான் என்று கூற முடியாத நிலையில் மனம் வெதும்புவதும், தாயிடம் தந்தையின் தூக்குத் தண்டனையைப பற்றி சொல்ல முடியாமல் தவிப்பதுமாக சிவாஜி தனது உணர்ச்சிகளை அருமையாக வெளிப்படுத்துவார். அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக சில நிமிடங்கள் தனது உணர்சிகளை முகத்தில் பிரதிபலிப்பார். அடுத்த காட்சியில் இதற்கு மாறாக தன் காதலி தேவிகாவிடம் தன் தந்தையின் அன்பை நினைத்து நினைத்து அவர் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தார் என்று கூறி அவரது பாசத்தை நினைத்து மகிழ, இப்போது அவர் தன்னுடன் இல்லையே என்ற துக்கம் எல்லாம் ஒன்று சேர முகத்தில் பலவித பாவங்களை வெளிப்படுத்தும் காட்சி மிக அருமை .
தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி ஒரு மகனாக தனது கடமையை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பலவித உணர்ச்சிகளை ஒரு சேர மாறி மாறி பிரதிபலிப்பார் தந்தையின் கருணை மனு நிராகரிக்கபட்டதை தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று உரக்க சிரித்துக் கொண்டே கூறி மறுபடியும் ஒரு முறை சிரித்தபடியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார். அரங்கில் மௌனம் நிலவும்
யாரிடம் காண முடியும் இந்த வேறுபட்ட நடிப்பு? இந்தப் படத்தைப பற்றி முழுமையாக எழுதினால் அது கோனார் நோட்ஸ் அளவிற்கு எழுத வேண்டும் என்பதால் முக்கியமான இந்தக் காட்சியுடன் நிறுத்திக்கொள்கிறேன்
வாழ்க சிவாஜி என்னும் மாபெரும் கலைஞன்.
ஜெய் ஹிந்த்!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...34&oe=59A074C2
சிவா சார்,
பாகம் 19 ஐ அம்சமாகத் துவங்கியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
'ஸ்டைல் சக்கரவர்த்தி' விஜயகுமார் (மீள்பதிவு... சில புதிய விளக்கங்களுடன்)
http://i1087.photobucket.com/albums/...n31355/r_2.jpg
"மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....
அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....
"மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....
"தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...
"சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...
"யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,
"அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...தான் முன்னம் ராமனாக நம்பியாரிடம் உதைபடும் அந்த குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி 'சடேலெ'ன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!
நம்பியாரின் மேல் சூட்கேஸில் உள்ள பணத்தை வீசி அடிக்கும் போது 'எத்தனை லட்சம் வேணும்?' என்று கேட்பார். இந்தக் காட்சியை அப்படியே ஓடவிட்டு கண்ணை மூடிக் கொண்டு தலைவர் சொல்லும் அந்த வசனத்தைக் கேளுங்கள். சிங்கம் ஒன்று நேரில் பேசுவது போல அப்படி ஒரு கர்ஜனையாய் அது ஒலிக்கும்.
'லட்சாதிபதியா வரணும்னு சொன்னே இல்லே! கோடீஸ்வரனா வந்திருக்கேன்...கூப்பிடு உன் தங்கையை' என்று கர்ஜித்துக் கொண்டே கையில் இருக்கும் பிரம்பால் வெகு நேர்த்தியாக நம்பியாரின் இடது மார்பில் பாய்ச்சி நிற்க வைப்பார். உலகில் உள்ள ஒவ்வொரு துரும்பும் இவர் சொல் கேட்கும். அவருக்கு அடங்கும். இந்தப் பிரம்பும் அப்படித்தான்.
"கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர, ஆனால் ஆழமானதேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு ('தேவகி') என்று கூப்பிட்டபடி பிரம்பை விசிறியபடியே 'சட்'டென்று உடலை இடப்புறமாகத் திருப்புவார். காமெராவுக்குக் கட்டுப்படாத ஸ்பீடாக அது இருக்கும். அளித்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்கள். எப்படி இருக்கிறது?)
http://i1087.photobucket.com/albums/...an31355/r2.jpg
'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)
19 அல்லது 20 படிக்கட்டுகளில், அனாயாசமாக அவ்வளவு வேகத்தில், அதாவது ஆறே வினாடிகளில் இறங்கி வந்து விடுவார். இந்த ஸ்பீடில் வேறு எவரும் இறங்கி வரவே முடியாது...இயலாது..அவர் ஒருவரைத் தவிர. இறங்கும் வேகம் ஒருபுறம் இருக்கட்டும். இறங்கும் அழகு...ஸ்டைல் இருக்கிறதே அதை பற்றி வார்த்தைகளால் வடித்து விட இயலுமா?
இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?
மூவாயிரம் முத்தான பதிவுகள் தந்த சிவா சாருக்கு நல்வாழ்த்துக்கள்
Radhakrishnan Saijayaraman
· 4 hrs
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் புதுவை ஒதியஞ்சாலை திடல் (இன்றைய அண்ணா திடல் ) நடிகர் திலகம் பேசவிருந்த பொதுக்கூட்டம் . திடல் நிரம்பி வழிகிறது . கூட்டம் தொடங்கியது . உடனே ஒரு மறைந்த தலைவர் பெயர் கூற விரும்பவில்லை , நடிகர் சிவாஜி வரவில்லை ,நடிகரை பார்க்க வந்தவர்கள் கிளம்பி செல்லலாம் என்று அறிவித்தார். ஒரு சில நிமிடங்களில் திடல் காலியாகிவிட்டது. . பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் அரண்டு போய் நின்றது இன்னும் என் கண்ணில்..
சிவாஜி புதுவை வந்துவிட்டார். ஆனால் கடுமையான ஜுரம...் .அப்போது திலகம் இரவு பகல் பாராமல் படபிடிப்பில் கலந்து கொண்டிருந்த நேரம். கூட்டத்திற்கு செல்ல விரும்பியவரை நமது ரசிகர்களும் , திலக த்தின் மேல் பற்று கொண்ட கட்சி தலைவர்களும் நீங்கள் வரவேண்டாம் என்று தடுத்து விட்டனர். இது தெரியாத அந்த தலைவர்
சிவாஜியை பார்க்க வந்தவர்கள் கிளம்பலாம் என்று கூறி கூட்டத்தை காலியாக்கி விட்டார்.
நடிகர் திலகத்தின் பவர் என்ன என்பதை அன்றைய தலைவகர்ள் கண்கூடாக கண்டனர்..
https://www.facebook.com/trichy.srin...6004453175513/
Trichy Srinivasan
· Yesterday at 02:13 ·
19. நான் வணங்கும் தெய்வம் :
நேற்று 20வது படமாக ரங்கோன் ராதா வெளியிட்டேன். நேற்றே கூறினேன் அதற்கு முன்பாக வந்த இந்த நான் வணங்கும் தெய்வம் படத்தை 19 வதாக இன்று போடுவதாக, இப்போது போட்டுவிட்டேன் நண்பர்களே.
இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். அதாவது, திரு. நாகையா அவர்கள் டாக்டராக வருவார், அவர் ஒரு விஷப்பரீட்சை நடத்துவதற்காக அதாவது ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு மருந்தை மனித உடம்பில் செலுத்திப்பார்க்க சிவாஜியை பயன்படுத்துவார், அந்த மருந்தை செலுத்தியவுடன் சிவாஜியின் குண...ம், தோற்றங்கள் மாறும் , மிகவும் விபரீதமாகி இறுதியில் அவருக்கு மாற்று மருந்து கொடுத்து, நிலைமையை சீராக்குவதாக கதை. இந்தக் கதை அந்த காலத்திலேயே படமாக்கப்பட்டது, மிகவும் ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. சிவாஜி என்ற மகா கலைஞர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று, அனைத்தையும் விரைவிலேயே முடித்து சாதித்து விட்டார். இன்று கூட வரும் படங்கள் அனைத்தும் சிவாஜியின் பழைய படங்களின் கதைகளை தழுவாமல் வர சந்தப்பமே இல்லை. நீங்கள் எந்த படத்தை எடுத்துப் பார்த்தாலும் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் சிவாஜியின் பழைய பட வாடை அடித்தே தீரும்.
இப்படத்தில் நாகையா கதாபாத்திரம் கௌரவம். சிவாஜி மிக பெரிய நடிகர் அதே சமயம் எனக்கு நாகையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ். வி. சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா , நாகேஷ், போன்ற மிக பெரிய ஜாம்பாவான்களையும் மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் நாகையா அவர்கள் சிவாஜியின் அதிக படங்களில் மிக, மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரக் கூடியவர். இப்படம் மிகவும் ஒரு வித்தியாசமான படம் சிவாஜிக்கு. நன்றி
திருச்சி எம்.சீனிவாசன்.
"காவியமா நெஞ்சில் ஓவியமா",
" வண்ணத் தமிழ் பெண் ஒருத்தி கண்ணெதிரே வந்தாள் "
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்...
" பாவை விளக்கு "
http://i64.tinypic.com/168v66e.jpg
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சமீபகாலமாக மதுரையில் சினிமா சம்பந்தப்பட்ட விழா எதுவுமே நடைபெற்றதில்லை, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படவிழாவினைத் தவிர...
2013ல் கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றி விழா மதுரை மக்களே வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா எந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமலே காலை நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டது, திரையுலகினரை திரும்பி பாா்க்க செய்தது.
அதற்கு பிறகு, தற்போது மீண்டும் நமது கலை தெய்வத்தின் மற்றொரு வெற்றி விழா. நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியம் ராஜபார்ட் ரங்கதுரை தொடர்ந்து 25வது நாள் கண்டது.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் சார்பில் மதுரை மீனாட்சி பாரடைஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றிவிழாவினை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தென்சென்னை சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் ஜெயக்குமார் அவர்கள் மாபெரும் ஒத்துழைப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டல் தயாரிப்பாளர். தியேட்டர் நடத்துபவர், பட விநியோகஸ்தர் ஆகியோருக்கு நினைவுப்பரிசையும் வழங்கினார். ஜெயக்குமார் அவர்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
25வது நாள் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நான். பச்சைமணி, வெங்கடேஷ் போன்றோர் சில முன்னேற்பாடுகளை செய்ய தியேட்டரில் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கூடி செய்து வந்தோம். விழாவினை முன்னிட்டு காலை முதல் ஒலிபெருக்கியில் நடிகர்திலகத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
மாலை 5 மணி முதல் ரசிகர்கள் தியேட்டரில் குவியத் தொடங்கினர். தொடர்ந்து 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மாலை ரங்கதுரையை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் மதுரையை சேர்ந்த மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதியமே ராஜபாளையத்தை சேர்ந்த அருமை சகோதரர் திருப்பதி ராஜா அவர்களும், டிஜிட்டல் தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகர்கோவிலை சார்ந்த த.ஜெகன் ஆகியோர் வந்து விட்டனர். அவர்களும் தங்களது விழாவிற்கு தங்களது முழு ஒத்துழைப்பை கொடுத்தனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டார். கார்த்திகேயன் அவர்களுக்கு ஜெயக்குமார், பச்சை மணி, அவனியாபுரம் குப்புசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தினர். பின்னர் படத்திற்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நினைவுப்பரிசினை கார்த்திகேயேன் அவர்கள் வழங்க பட தயாரிப்பாளர், தியேட்டர் நிர்வாகி மற்றும் விநியோகஸ்தருக்கு வழங்கினார்.
தியேட்டருக்கு அருகில் வசிக்கு பொதுமக்கள் அனைவரும் இப்படி ஒரு விழாவினை தாங்கள் இதுவரை இந்த தியேட்டரில் பார்த்ததில்லை எனக் கூறி அனைவரும் குழந்தைகளுடன் தியேட்டர் வளாகத்திற்குள் வந்து விழாவினை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரைச் சேர்ந்தவர்களோ வியப்பில் ஆழ்ந்தனர். இவ்வளவுக்கும் விழா மிகவும் சிறியதாக தான் நடைபெற்றது. இதற்கே இப்படி என்றால் மக்கள்தலைவரின் மற்ற படவிழாவினை இவர்கள் பார்த்திருந்தால்....
தியேட்டேருக்குள் நமது இதயங்கள் அனைவரும் இளைஞர்களாகவே மாறியிருந்தனர். மனது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கோயிலுக்கு சென்றால் மன அமைதி ஏற்படும் என்பார்கள். ஆனால் நமது நடிகர்திலகத்தின் இதயங்களுக்கோ அவர் படம் ஓடும் தியேட்டரே கோவில் அவரே தெய்வம். தன் மனக்கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடித்து விட்டார் நம் கலைக் கடவுள்.
ரசிர்களின் பேப்பர் மழையில் தியேட்டர் முழுவது பேப்பரால் மூழ்கியது. இன்றை ரசிகர்களுக்கு இந்த பேப்பர் மேட்டர் அவ்வளவாக தெரியாது. அதிலும் ரோஸ் என்பவர் ஜிகினா பேப்பராக போட அந்த பேப்பா் தியேட்டருக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் கலகலத்து போய் விட்டனர். ஒருவர் நடிகர்திலகத்தை,எங்கள் தலைவரை மதித்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கோசம் எழுப்பி காங்கிரஸ் கட்சி சிவாஜி அவர்களை மறந்ததை நினைவுகூர்ந்தார்.
ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பாட்ட ஆரவாரம் நிச்சயம் விண்ணிலிருக்கு நமது தலைவருக்கு கேட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. வெளியில் மக்கள் பேசிக்கொண்டது. சிவாஜி ரசிகர்கள் சிவாஜி ரசிகர்கள் தான் விழாவினை அமர்க்களப்படுத்தி விட்டார்கள் என் காதில் விழுந்தது.
அடுத்த விழாவிற்கு தயாராவோம் எனக் கூறி அனைவரும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம், நானும் தான்...
படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, சோமசுந்தரம் சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் ஜோதிபாஸ்கரன், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சிவாஜி செல்வம், பழனிச்சாமி, பழனிக்குமார், சிவக்குமார், பத்மநாபன் கார்த்திகேயன், கே.கே.நகர் குமார், எம்.என்.குமார் மற்றும் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
25வது நாள் வெற்றி விழாவின் புகைப்படங்கள் சில.....
ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியத்தை டிஜிட்டலில் தயாரித்த பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகயேன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிய போது....
உடன் இருப்பவர்கள் இடமிருந்து வலம் ரமேஷ்பாபு, திருப்பதி ராஜா, மீனாட்சி பாரடைஸ் தியேட்டர் மணிகண்டன், ஆர்.எம்.எஸ் மாணிக்கம், ஜெயக்குமார, பழனிச்சாமி, ஜோதிபாஸ்கரன், கார்த்திகேயன், குமார், சிவாஜிகணேசன்.இன் சுந்தராஜன், பச்சைமணி, சோமசுந்தரம் ஆகியோர்.
http://www.sivajiganesan.in/Images/150617_6.jpg
வழங்கப்பட்ட நினைவுப் பரிசு.
http://www.sivajiganesan.in/Images/150617_1.jpg
மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய போது... உடன் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, தேனுார் சாமிக்காளை, தெப்பக்குளம் பால்பாண்டி, பச்சைமணி ஆகியோர்..
http://www.sivajiganesan.in/Images/150617_3.jpg