http://i67.tinypic.com/14ty0d1.jpg
http://i66.tinypic.com/2uq0jrd.jpg
http://i64.tinypic.com/97sk6o.jpg
Printable View
எம்.ஜி.ஆரைக் கிண்டலாக??
-----------------------------------------------------
எம்.ஜி.ஆரின் கொடை--மனித நேயம்-சினிமா-ஏழைகளின் பால் இரக்கம்--இத்யாதி இத்யாதி காரணங்களால் நாம் அவரை விரும்புகிறோம் என்பது ஒரு புறமிருக்க--
எம்.ஜி.ஆரைப் புகழ்ந்ததால் நான் அடைந்த குழப்பத்தைப் பற்றியே இந்தப் பதிவு??
ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள்!!
காஞ்சி மகா முனியின் பிரதம சீடர்களில் ஒருவர்.
காஞ்சி முனி காலடி என்னும் ஊரில் இருந்தபோது முழுப் பணிவிடையும் முகம் மலரச் செய்தவர் அதனாலேயே ஆச்சாரியாரின் முகமலரச் செய்தவர். இப்படியும் சொல்லலாம்--
காலடியில் காஞ்சி முனி அருள் பாலிக்க--அவர்-
காலடியில் கிடந்தவர் இந்த காமாட்சி ஸ்வாமிகள்!!
ஒரு நாள் பெரியவர்,,இவரிடம் கேட்கிறார்?
நான் பூலோக வாழ்க்கையை முடிச்சுக்கப் போறேன். நீ என்ன பண்ணறதா நினைச்சுண்டிருக்கே??
நான் படிச்ச வேதம் மூலம் புரோகிதம் செய்யட்டுமா??
இ9ல்லேடா!! இந்தக் காஞ்சி காமாட்சி உன் வாக்குல இருக்கா! நம்ப பக்தாளுக்கு அருள்வாக்கு சொல்லு!!
குருவின் ஆணையை ஏற்றவர் இன்று வரை தினமும் இருபது பேருக்கு அருள்வாக்கு சொல்வதுடன்,,சில அற்புதங்களையும் அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டி அவர்களது பிரச்சனைகளை தீர்த்து .வருகிறார்.!!
நாமாகத் தட்டில் போட்டால் தவிர இவர் தனியாக பணம் கேட்பதே இல்லை!!
அம்பாளின் 102 அம்சங்களையும் தனித் தனி கோயிலாக,,கண்ணன் தாங்கல் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்.
அம்பாளின் 102 அம்சங்களுக்கும் தனித்தனி கோயிலாக ஒரே இடத்தில் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரு நாள்,,குறுஞ் சிரிப்புடன் திடீர் என்று என்னிடம் கேட்டார்?
தியாகு! உனக்கு எம்.ஜி.ஆர்ன்னா ரொம்பப் பிடிக்குமோ?
வேகமாகப் பதில் சொன்னேன்!--ஆமாம் என்று!
எதனாலப் பிடிக்கும்?
கொடையாளி!!
ஏன்? ஊருலே வேற யாருமே தர்மம் பண்னறதில்லையா??
இல்லே--அவரோட சினிமாக் கருத்துக்கள்--
நான் முடிக்கு முன்னரே குறுக்கிட்டார்--
ஏன்? மத்தவா யாருமே நல்ல கருத்துக்கள் சொன்னதில்லையா??
இப்படி நான் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து சொல்லச் சொல்ல--அவரும் சளைக்காது பதில் கொடுத்துக் கொண்டே வந்தவர்--
அதே சிரிப்புடன் என்னைப் பார்த்தவர்--சொன்ன விளக்கம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது?
பெரியவாள் ஒரு நாள் சீடர்கள் எங்ககிட்டே சொன்னார்!
எனக்குத் தெரிஞ்சு இப்போ மனுஷ ரூபத்துலே இருக்கற கடவுள் நம்ம ராமச்சந்திரன் ஒருத்தன் தான்!!
அவன் இப்போ இல்லே இன்னும் பல ஜென்மாக்களில் வித விதமாய் பொறந்து லோக ஷேமத்துக்காக மெனக்கெடுவான்!!!
அதனால தியாகு! நீ சொன்ன அத்தனை அம்சங்களையும் பட்டியல் போடறதை நிறுத்திண்டு,,,அவர் தெய்வ அம்சம் பொருந்திய சித்தர்ங்கற கோணத்திலே அவரைப் பாரு!!
காமாட்சி ஸ்வாமிகளுக்கு எம்.ஜி.ஆர் பற்றி மகா பெரியவர் சொன்னதை,,அவர் என்னிடம் விளக்கிய விதம்??---
படாதிபதிகளை பணம் பார்க்க வைத்தார்!
பாடாதிவதிகளைப் பதம் பார்க்க வைத்தார்!!
மடாதிபதிகளை மயக்கியது எப்படி??
எம்.ஜி.ஆரின் ஆன்மா தெய்வ அம்சம் பொருந்தியது என்பதை இந்த இடத்தில் நாம் ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்???.......... Thanks wa.,
வெற்றி வெற்றி வெற்றி .... மாபெரும் வெற்றி .. .சென்னை அகஸ்தியா 70MMவில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக மக்கள் திலகத்தின் நினைத்தை முடிப்பவன் 21/06/2019 முதல் தினசரி 3/ 6 30 காட்சிகள் அனைத்து பக்தர்களும் தவறாமல் கலந்து கொண்டு தரிசிக்கமாறு கேட்டு கொள்கிறோம் ...வாழ்க தமிழ்.. வளர்கMGR ...பக்தர்கள்... Thanks wa.,
.
நண்பர் திரு.சுகாராம் அவர்களின் கவனத்திற்கு ,
சென்னை அகஸ்தியாவில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ,
1.தர்மம் தலை காக்கும் ,
2.எங்க வீட்டு பிள்ளை
3. காவல்காரன்
திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது வாரமாக (மூன்றாவது வாரமல்ல )
நினைத்ததை முடிப்பவன் நாளை முதல் (21/06/19) தினசரி 2 காட்சிகள் திரையிடப்படுகிறது .வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் இப்படி தொடர்ந்து
அகஸ்தியாவில் திரையிடப்பட்ட வரலாறில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
எப்பொழுதும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி, புரட்சி நடிகர் வழங்கும் " பெரிய இடத்துப் பெண்" தினசரி 4 காட்சிகள் சென்னை - ஒட்டெரி ஸ்ரீ பாலாஜி dts திரையரங்கில் வெற்றி உலா.........
மக்கள் திலகத்தின்" நினைத்ததை முடிப்பவன் ",திரைப்படம் சென்னை அகஸ்தியா 70 MM திரையரங்கில் நடைபெறுகிறது.ஆகவே 23.06.2019 ஞாயிறு மாலை காட்சியில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பூமியில் வாழ்ந்த பொழுது தமிழக மக்களுக்கு திடசெல்வத்தை பூ மாரி பொழிந்த வாழும் தெய்வம் புரட்சி தலைவர் அவர்களையும் - புரட்சி தலைவி அவர்களையும் விண்ணுலகில் இருக்கும் இவ்வேளையில் தமிழக மக்களுக்கு ( நீரை) பூ மாரி மழை பொழிய வேண்டி புரட்சி தலைவர் பக்தர்கள் சார்பாக பிராத்தனை செய்ய உள்ளதால் மண்மேடு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நம் மகானுக்கு பூ மழை பொழிய கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வேண்டுகிறோம்*.......... Thanks wa.,
கலையுலக காவலரின்..."அடிமைப்பெண்" காவியம் திருப்பூர்- மனீஸ் A/C dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் ... நடைபெறுகிறது என்கிற தகவல் கோவை நண்பர் தெரிவித்தார்.........
நாளை கோவையில் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்பான இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை மரியாதை நிமிர்த்தமாக சந்திக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. நமது தலைவரின் புகழை பரப்பும் நல் உள்ளங்கள் எப்பொழுதும் தனித்தன்மையுடன் செயல்படுங்கள் உங்கள் உரிமையை வேறு ஒருவர் முன்னேற வழி வகுத்துக் கொடுக்காதீர்கள். என்றும் நாம் தலைவரின் உண்மை யானவர்களாக பயணிப்போம். அது தான் கடைசி வரை நிலைக்கும். என்றும் நானும் உங்களில் ஒருவனாக இருக்கும் புரட்சித்தலைவரின் பக்தன் உரிமைக்குரல் ராஜு. -.நாளை ......(23.06.2019. ஞாயிறு) சந்திப்போம். ஒன்றுபடுவோம். தலைவர் புகழ் காப்போம். நன்றி!........... Thanks wa.,
தென் இந்தியாவில் செயல்படும் புரட்சித்தலைவரின் அன்பு இதயங்களாகிய நல் உள்ளம் படைத்தவர்களே! இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழை மேலும் மேலும் விரிவுபடுத்த தொலைநோக்கு பார்வைக்கு கொண்டு செல்ல நாம் ஒன்றுபட. வருங்காலம் உண்மையான தலைவரின் உள்ளங்கள் மூலம் நிலை பெற..... தென்னக எம்.ஜி.ஆர். புகழ்பரப்பும் குழு அமைக்க பயணம் மேற்க்கொள்ள போகிறோம். இடை தரகர்கள் ,போலிகள் உள்ளே நுழையாத படி ஒற்றுமையை நிலை நிறுத்த சென்னை முதல் கன்னியகுமாரி வரை தலைவரின் அபிமானிகளை சந்திக்கும் பணி ஜுலை மாதம் முதல் தொடங்கப்படுகிறது. மற்றும் புதுச்சேரி கர்நாடகா(பெங்களுர்) .கேரளா (திருவனந்தபுரம்) ஆந்திரா ( சித்தூர்) என எங்கெல்லாம் தலைவர் அபிமானிகள் இருக்கின்றார்களே அங்கெல்லாம் ஒற்றுமையை வளர்த்து ஒன்றுபட பாடுபடுவோம். அனைவருக்கும் நன்றி! உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa...
#கடைக்கண் #பட்டால் #போதுமே
சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.
சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது.
300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.
#குசேலன் #கூட #கண்ணனுக்கு #அவல் #தந்து, #அதை #அவன் #தின்றதற்கு #பின்னாலேதான் #கஷ்டம் #நீங்கினான். #ஆனால் #என் #இதயதெய்வத்தின் #கடைக்கண்பார்வை #பட்டதுமே, #சங்கரய்யா #சங்கடம் #போய் #சந்தாேஷஅய்யா #ஆகிவிட்டார்.......... Thanks wa.,
என்றும், எப்பொழுதும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்தம் லட்சிய படைப்புகள் " அன்பேவா"," நம்நாடு" டிஜிட்டல் பரிமாணத்தில் அருமையாக வந்திருக்கிறது எனும் மகிழ்ச்சியான தகவல் இனிய தோழர்களே.........
திமுகவின் சொத்தாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சொத்துதானே.ஆம் புரட்சி தலைவர் தான் அவரை சட்டக்கல்லூரியில் படிக்க வைத்து ஆளாக்கினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அஇஅதிமுக வை ஆரம்பித்த போதிலும் துரைமுருகன் தொடர்ந்து திமுகவிலேயே இருந்து வருகிறார்.1977லே புரட்சி தலைவர் முதல்வராக இருந்த போது மு.க.ஸ்டாலின் அப்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லை சட்டமன்ற திமுக வரிசையில் கலைஞர் மற்றும் பேராசிரியருக்கு அடுத்ததாக நட்சத்திர பேச்சாளர்களாக துரைமுருகன், ரகுமான்கான்,க.சுப்பு ஆகியோர் திகழ்ந்த வேளையில் ஒரு நாள் அவையில் அதிமுக அரசை பற்றி காரசாரமாக பேசி கொண்டே அவையை விட்டு வெளிநடப்பு செய்ய துரைமுருகன் முயன்ற போது மயங்கி கீழே விழுந்தார் உடனே பதட்டத்துடன் ஓடி வந்த புரட்சி தலைவர் துரைமுருகனை தாயுள்ளத்துடன் தனது மடிமீது சாய்த்து வைத்து அவரது உள்ளங்கை மற்றும் உள்ளங்காலினை பரபரப்புடன் தேய்த்து மயக்கம் தெளிவித்து துரைமுருகனை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினார் புரட்சி தலைவர்.இதை நாடே அறியும் அன்றைய தினம் இதை பாராட்டி வெளியிடாத பத்திரிகைகளே இல்லை.தன்னை பற்றி விமரிசித்த ஒருவர் இன்னலுற்ற போது ஓடோடி சென்று உதவி செய்திட்ட புரட்சி தலைவரின் மனிதநேய மாண்பே காலத்தாலும் அழிக்க முடியாத சொத்து என்பதை தெரிந்து கொள்க......... Thanks wa.,
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர்.
நாடோடியாக தமிழ்நாட்டிற்கு வந்தேன். உயிர் வாழ்வதற்காக ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். சிறிய அளவில் தமிழ்மொழியைக் கற்றேன். இன்று மக்களின் அன்பைப் பெறக்கூடிய அளவு தகுதி பெற்றுள்ளேன். வாழ வழியின்றி தவித்த எனக்குத் தமிழ்நாடும், தமிழ்மொழியும் வாழ்வளித்தன. அந்த நாட்டை என்றும் மறக்க மாட்டேன். என்னை வாழ வைத்த தமிழ் மொழி என்றும் வாழ வேண்டும். அதற்காகவே நான் நன்கொடையளிக்கிறேன்.
தமிழ் மொழி என்றும் அழியாதது. அழியக் கூடாது. அந்த மொழியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்யத் தயங்க மாட்டேன். ஏழையாக இருக்கும்போது உள்ள குணம் சிறிது நிதி கிடைத்தவுடனே மாறிவிடக் கூடிய தன்மையில் பலர் இருப்பதை கண்டிருக்கிறேன். அந்த அளவு நானும் மாறிவிடக்கூடாது. துன்பத்திலேயே வளர்ந்து வந்தவன் நான். ஆகையால் துயர்படுவோரின் நிலையை நேரடியாக அறிந்த நான் எனக்கு கிடைக்கும் பணத்தைத் துயர்படுவோரின் நல்வாழ்வுக்காக பலியிடத் தயங்க மாட்டேன். நாடோடியாக வந்த என்னை வாழ வைத்த தமிழ்நாடும், தமிழ் மொழியும் தான். அந்த நாட்டிற்கு என்றும் நான் கடமைப் பட்டவனாக இருப்பேன்.
புரட்சி நடிகர் பேச்சு 27.10.1959........... Thanks wa .,
எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.
ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.
ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது............... Thanks wa.,
என்னைப் பொறுத்தவரை தலைவரின்
வயது யாருக்குமே தெரியாது, ஆனால்1977ல் சட்டமன்றத்தில் தலைவர் பேசிய போது சென்னைக்கு எம்டன் கப்பல் வந்தபோது பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன்...கப்பலை ப் பார்க்கச் சென்றேன்...ஆனால் பார்க்க முடியவில்லை என்று பேசியது...சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது...அந்தக்கப்பல் சென்னைக்கு வந்த ஆண்டு 1914...அப்படி இருக்க யார் அவர்...1917ல் பிறந்தார் என்று சொன்னது...,தலைவர் உயிரோடு இருந்தவரை யாருமே சொன்னதில்லையே... Courtesy: fb.........
ஆல்பர்ட் பால்... என்கிற நான்... மும்பையில் பிறந்து வளந்தவன். என்னுடைய 13 வயதில் தலைவர் எம்.ஜி ஆர்., படங்கள் (காவியங்கள்) பார்த்துட்டு அவரின் ரசிகன் ஆனேன். ரசிகன் மட்டும் இல்லாமல் தலைவர் ரசிகர்கள் அனைவரையும் ஒன்று இணைத்து மக்கள் திலகம் MGR ரசிகர் மன்றம் என்று மாட்டுங்க என்ற இடத்தில் ஆரம்பித்து வைத்தோம்.இனிமேல் அடிக்கடி எங்கள் ரசிகர் மன்றம் மூலம் செய்த காரியங்கள் உங்களுடன் பகிந்து கொள்வேன்...... Thanks wa.,
மும்பையில் மூன்று தியேட்டர்ல தமிழ் படம் தினசரி நாலு காட்சிகள் நடக்கும், மற்ற இடங்களில் ஞாயிறு காலை காட்சி நடக்கும். தலைவர் படம் ரிலீஸ் ஆகும் கூட்டம்
.. அலைமோதும். எங்கள் மன்றம் சார்பாக தியேட்டர் அலங்காரம் செய்யப்படும்.படம் ரிலீஸ் ஆகும் முந்தய இரவு தியேட்டர் போய் எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை நண்பர்களீடம் கூறி விட்டு நான் வீட்டுக்கு போய் விடுவேன். மறுநாள் காலை போய் பார்த்தால் மிகவும் அருமையாக அலங்காரம் செய்து இருப்பார்கள். இப்படி தலைவர் புது படம் ரிலீஸ் ஆகும் நேரங்களில் அலங்காரம் செய்வோம். எங்கள் மன்றம் தவிர மற்ற ரசிகர்கள் குவிந்து விருவார்கள். ............. Thanks wa.,
இதயக்கனி திரைப்படம் மும்பையில் ரிலீஸ் ஆன அன்று இரவு மன்றம் சார்பாக சிறப்பு காட்சி நடத்தப்பட்டது. படத்தின் கதாநாயகி ராதா சலுஜா அவர்களை கூப்பிட்டு விழா நடத்தினோம். படத்தின் இடைவெளி நேரத்தில் திரை மேடையில் அவரை கூப்பிட்டு வரவேற்பு அளித்தோம். நாங்கள் மன்றம் சார்பாக ஒரு சிறப்பு மலர் ஒன்றை தயார் செய்து இருந்தோம். அதை ராதா சலுஜா அவர்கள் மூலம் வெளியீடு செய்தோம். ....தலைவர் ரசிகர்கள் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போல பல விஷயம் உங்கள் உடன் பகிர்ந்து கொள்வேன்......... Thanks wa.,
1976 ஆண்டு ஜனவரி மாதம் 13 தேதி என்னால் மறக்க முடியாத நாள். மும்பையில் இதயக்கனி சிறப்பு காட்சி ரசிகர் மன்றம் சார்பாக நடத்தி சிறப்பு மலர் வெளியிட்டம். சென்னை சென்று தலைவர் அவர்களை சந்தித்த முடிவு செய்தோம். மன்றம் நண்பர்கள் உடன் கார் மூலம் சென்னை புறப்பட்டு போனோம். தலைவர் சத்திய ஸ்டுடியோவில் இருப்பது தெரிந்து உடன் அங்கு புறப்பட்டு போனோம். ஸ்டூடியோ உள்ள பல தரப்பு முக்கியஸ்தர்கள் தலைவரே காண காத்து இருந்தார்கள். எங்களை கண்ட தலைவர் உதவியாளர் உடனே தலைவருக்கு நாங்கள் வந்து இருப்பதை கூறி உள்ளார். தலைவர் உடனே எங்களை ஷுட்டிங் நடந்த இடத்துக்கு வர கூறினார். நாங்கள் அவரை சந்தித்து நாங்கள் கொண்டு வந்த மலரை தலைவர் கிட்ட காண்பிச்சேன், முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் படித்தார், தலைவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். மகாராஷ்டிரா முதல்வர், Governer, மற்ற முக்கியமானவர்கள் வாழ்த்துக்கள் மடல் அதில் இருந்தது.பத்து நிமிடம் எங்கள் உடன் பேசிட்டு நாளை பொங்கல் தோட்டத்தில் வந்து போகவும் என்று அன்புடன் அனுப்பி வைத்தார்.எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்தும் எங்களை உடனே பாக்க கூப்பிட்டு பேசியதும் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தலைவர் ரசிகர்களை எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம்......... Thanks wa.,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.
பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது.
சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி.
என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய் யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!
பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப் பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!
வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்.............. Thanks wa.,
ஒரு மாமனிதர் இருந்தார்!
கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…
கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…
கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.
அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.
கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!
20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.
அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.
முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.
எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.
மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’
எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.
அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.
‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.
தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.
‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’
நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!
அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…
ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…
ஏன் தெரியுமா?
இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!
இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.
வாழ்க நீ எம்மான்…!
courtesy டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
net- envazhi........... Thanks wa.,
https://i.postimg.cc/RFWGPGSB/IMG-20190625-WA0007.jpg
திருப்பூர் மணீஸ் சினிமாஸ்
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார்.
இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை.
உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்
தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். #அவரது #பாதிப்பு #இல்லாத #ஹீரோ #தமிழ்சினிமாவில் #இல்லை. #ஏன் #சிவாஜி #கூட #அவரது #பாணியில் #நடிக்க #முயன்றிருக்கிறார்.......... Thanks wa.,
எம்.ஜி.ஆர் புரட்சி மன்றம் சென்னை அலுவலகத் திறப்பு விழா. 07/07/2019.a இடம் :73/86. மூர் தெரு மண்ணடி ,சென்னை- 600001. Contact MGR BOSSCOR. 9840367225 GURUNATHAN 09176361050 ....... ........ Thanks wa.,
அமரர் அண்ணன் எம்ஜிஆர் .எம்.குமார் அவர்கள் அகஸ்தியா திரையரங்கில் 23.6.19. மாலை காட்சியில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள்( குழுவுடன்) எங்களுடன் தன் உயிருக்கும் மேலாக நேசித்த தங்கத்தைலை வரை.மக்கள்தலகத்தை இதயதெய்வம் புரட்சி தலைவர் அவர்களை அகல்விளக்கும் கற்பூரமும் சுடர்விட்டு எறிய "நினைத்ததை முடிப்பவன்" காவியம் உண்மையில் நினைத்ததை முடித்தவர்......... சிரித்து கொண்டே புகைப்பட உருவில் வந்து ரசித்து அனுபவித்து அற்புத காட்சி..இதுவரை இந்த பாக்கியம் தமிழகத்தில் யாருக்கும் ஸ்ல கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.............. Thanks wa.,
எம்ஜிஆருக்கு அமைந்த உயர்வு போல் வேறு எவருக்கும் அமையவில்லை .காரணம் எம்ஜிஆர் குறிக்கோளோடு வாழ்ந்தார் . உழைத்தார். தன்னை நம்பினார் . ரசிகர்களை நம்பினார் . மக்களை நம்பினார் . , வெற்றி கண்டார் . வரலாறு படைத்தார் .
1947ல் கதாநாயகன்
1950ல் சூப்பர் ஸ்டார்
1954ல் வசூல் சக்கரவர்த்தி
1956ல் மதுரை வீரன் - இமாலய வெற்றி
1957ல் திமுக வெற்றிக்கு உதயசூரியன் எம்ஜிஆர் உழைப்பு
1958ல் நாடோடி மன்னன் - வரலாற்று வெற்றி விழாக்கள்
1960ல் மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961ல் சமூக புரட்சி படம் திருடாதே - சீர்திருத்த காவியம்
1962ல் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்பு
1963ல் 9 படங்களில் நடித்து மாபெரும் புகழ் ஈட்டியவர்
1964ல் ரசிகர்களை தீவிர பக்தர்களாக மாற்றிய எம்ஜிஆர் படங்கள்
1965ல் எங்க வீட்டு பிள்ளை - நாடே வியந்து பாராட்டி ஏற்று கொண்டது
1966ல் மீண்டும் 9 படங்களில் எம்ஜிஆர் ஜொலித்தார் .ரசிகர்கள் பேரானந்தம்
1967ல் மறுபிறவி . தேர்தலில் வெற்றி . நிலைத்து நின்றார் .
1968ல் ஒளிவிளக்கு 100வது படம் , வெற்றி மேல் வெற்றி
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தித்திக்கும் விருந்து ரசிகர்களுக்கு .
1970ல் மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா .புகழ் உச்சக்கட்டம் .
1971ல் தேர்தலில் வெற்றி . ரிக் ஷாக்காரன் இமாலய வெற்றி .
1972ல் பாரத் எம்ஜிஆர் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - அதிமுக உதயம் .
1973ல் திண்டுக்கல் வெற்றி வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் வைர கிரீடம் .
1974ல் புதுவை - கோவை வெற்றி .உரிமைக்குரல் 200 நாட்கள் .
1975ல் இதயக்கனி இமாலய வெற்றி .
1976ல் அரசியல் மற்றும் திரை உலகில் முடி சூடா மன்னன் .
1977 - 1987 வரை முடிசூடிய மன்னன் .
எம்ஜிஆரா ... அவருக்கு நடிப்பே வராது
எம்ஜிஆர் படமா ....நல்லா இருக்காது
என்று கிண்டல் கேலி செய்த புண்ணியவான்கள்
இன்று
எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம்
எம்ஜிஆர் படங்கள் - மிகவும் அருமை
பாராட்டை அள்ளி குவிக்கிறார்கள் . காலம் கடந்து உண்மையை உணர்ந்த அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி .
தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இணைந்த பிறகு திரை உலகில் கொடி கட்டி பரந்த தேசிய கட்சி தயாரிப்பாளர்களின் படங்களில் மக்கள் திலகம் சிறந்த கதாநாயகனாக நடித்து வெற்றி கொடி நாட்டினார் .
திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே தேசிய விருதுகளை பெற்ற பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே என்பது சாதனையின் சிகரம் .
பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்..... சைதை மூர்த்தி... ........... Thanks wa.,
#முத்துக்கள் #மூன்று
வாத்தியாரை, சோ கடுமையாக எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு புரட்சித்தலைவர் ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்தலில், நம்ம வாத்தியாரு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார்...
ஒரு விஷயம் பார்த்தீங்கன்னா, சோவுக்கு வாத்தியார் மீது அதிகளவு அன்பும் பாசமும் இருந்திருக்கவேண்டும்...!!!
எங்கள் தங்கம் திரைப்படத்தில் கூட மேடையில் அமர்ந்திருக்கும் புரட்சித்தலைவரிடம் 'வாத்தியாரே வாத்தியாரே' என பாசமாக அழைப்பதிலும் சரி...
வாத்தியாரின் கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளி கொஞ்சுவதிலும் சரி...சோவின் ஆழ்மனதில் வாத்தியார் மீது எந்தளவு அன்பாயிருந்திருக்கிறார் என்பதை உணரலாம்.
இதெல்லாம் தாண்டி சோ, நம்ம வாத்தியாரைப் பற்றி சொன்ன நேர்மையான, காலத்தால் அழிக்கவே முடியாத வரிகளை இன்றளவும் நாம் அனுபவித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்...
நம்ம வாத்தியாரை 'இறைநிலைக்கே' கொண்டு சென்ற வார்த்தைகள் தான் இவை :
1. விளம்பர நோக்கம் இல்லாமல் எம்ஜிஆர் பிறருக்கு உதவுவதை பார்த்திருக்கிறேன். திரைப்படத்துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’
2. வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ (சட்டாம்பிள்ளை சோவிடம் சொன்னது)
3. உலகில் எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு...
ஆனால் எம்ஜிஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு...
இது போல நற்சான்றிதழ்கள் உலகில் வேறு எந்த மனிதருக்கோ, நடிகருக்கோ, ஏன் உலகத்தலைவர்களுக்குக்கூட கிடையாது... ............ Thanks wa.,
கண்மூடி ஆதரிக்கவில்லை எம். ஜி. ஆரை .,
நூற்றாண்டு கழிந்து விட்டது கூறு எம் ஜி ஆர் போல் ஒரு கருணை மிக்க மகானை ..........
தன் படம் உலக படதரத்திலே இருந்து விலக்கி நல்வழி காட்டும் காவியமாக அமைத்த எம் ஜி ஆர் போல் ஒருவரை காட்டு ...
சேர்த்த சொத்தை தனக்கென வைக்கமல் ஊருக்கு கொடுத்த உத்தமனை காட்டு...
ஒரு மேலாதிக்க காங்கிரஸ் ஆட்சியை தூக்கி வீசி அங்கு திராவிடத்தை அமரவைத்த வீரமிக்க சக்தி கொண்ட எம் ஜி ஆரை போல் ஒருவரை காட்டு...
மக்களை தன்னை வாழவைத்தவர்களை வதைத்த சிங்களத்தை எதிர்த்து போரிட்ட தைரியமிக்க ஒரு தலைவரை காட்டு ...
தமிழகத்தை எம். ஜி. ஆர்., போல் பொற்கால ஆட்சி தந்த ஒரு முதல்வரை காட்டு ...
எம் ஜி ஆரை போல் மக்களை நேசித்த ஒரு தலைவரை காட்டு ...
நாட்டு மக்கள் எம் ஜி ஆரை போல் எவரை நேசித்தார் காட்டு ...
எம் ஜி ஆர் ஒரு சகாப்தம்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Thanks wa.,