-
தமிழ் திரையுலகில் அன்றும்... இன்றும் ...வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்தான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து..... கடந்த சில தினங்களுக்கு முன் தந்தி டிவி யில் பேசிய ரவீந்திரன் துரைசாமி என்ற நபர் தலைவரை பற்றி வேண்டுமென்றே தவறான தகவல்கள் தகவல்கள் கொடுத்திருக்கிறார். இந்த லாக்அவுட் நேரத்தில் யார் படங்கள் அதிகம் ஒளிபரப்பப்பட்டது என்பது பற்றி. தமிழில் மொத்தம் 60 சேனல்கள் உள்ளது. ஆனால் பழைய படங்கள் ரெகுலராக ஒளிபரப்பபடுவது 3சேனல்கள தான் .அந்த ரவீந்திரன் துரைசாமி மொத்த சேனல்களையும் கணக்கில் எடுத்து கொண்டு தலைவர் படங்கள் குறைந்த அளவில்தான்(வாரத்திற்கு ஒரு படம் தான்) ஒளிபரப்பபடுகிறது என்றும் மற்றவர்கள் படங்கள் தான் அதிகமாக ஒளிபரப்பபடுவது என நரித்தனமாக பேசியிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 80 தலைவர் படங்கள் ஒளிபரப்பட்டிருபது எல்லோரும் அறிந்த உண்மை. இந்த உண்மையை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அந்த பேர்வழி பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கதக்கது. புரட்சித்தலைவரின் ரசிகர்கள், அபிமானிகள், பக்தர்கள் அனைவரும் அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்து நமது
ஒற்றுமையை காட்டவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்........
-
#இந்தக்காலத்தில் #இப்படியுமா!
யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக் கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், #இதிகாசத்தலைவன் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கும் பொருந்தும்.
இசை மணி என்றும் இசை ஞானச் செம்மல் என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த தில்லையாடி சிவராமன் என்பவர். எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்ஜிஆர்.
அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து இப்பொழுது எம்ஜிஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்? என்று புலம்ப, மனம் நெகிழ்கிறார் அவர்.
அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்ஜிஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது அவர் அங்கு இல்லை.
நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்ஜிஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் #மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.
இப்படியும் ஒரு மனிதரா? என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.
இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்ஜிஆரின் இன்பக்கனவு நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். இன்பக்கனவு நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.
எம்ஜிஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்ஜிஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் #நாடகத்தை #இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.
தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். "#இந்தகாலத்தில் #இப்படியும் #ஒரு #மனிதரா...?" மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.
நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்ஜிஆர் எப்படி #இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார்...
வீரப்பா...!
"தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும்... என்று நான் நினைத்திருந்தேன். இன்று அதை செய்தும்விட்டேன். என் மனதில் இருந்த மிகப்பெரிய #குறை #நீங்கியது. இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..." என்று கண்ணீர் மல்கினார்.
நமக்கு இதையெல்லாம் பார்க்கும்போது வாத்தியார் தெய்வத்திற்கும் மேலாகத் தான் தெரிகிறார்.........
-
அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?
அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி...
இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓட.
விசில் அடிச்சான் குஞ்சுகளா...விரைவில் வெம்பி பழுத்த பிஞ்சுகளா.
இவை எல்லாம் ரசிகர்கள் மன்றம் கண்ட தோழர்களுக்கு வழங்க பட்ட சர்டிபிகேட்கள்.
அந்த பொன்மன செம்மல் ஆட்சியில்.
1.முதன் முதலாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2....விவசாய விளைநிலங்கள் பரப்பளவு 17 லட்சம் ஹெக்டேரில் இருந்து 70 லட்சம் ஹெக்டேர் ஆக 10 ஆண்டுகளில் உயர்ந்தது.
3....கரும்பு விளைச்சலில் இந்தியாவில் 10 ஆண்டுகள் முதல் இடம்.
4...நெல் உற்பத்தியில் 2 ஆம் இடம்.
5....மின் உற்பத்தியில் 3 ஆம் இடம்.
6....ஆலயங்கள் தோறும் விளக்கேற்றி வைக்கும் திட்டம் இந்தியாவில் முதன் முதலாக இங்கே தமிழகத்தில்.
7....விளைச்சல் இல்லாத நேரங்களில் விவசாயிகளின் சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை கடனுக்கு பதில் பறிமுதல் செய்யக்கூடாது என்ற சட்டம் முதலில் இந்தியாவில் இங்கே.
8....குடிசை வீடுகளுக்கு குண்டு பல்பு இப்ப இருந்தா எல்.ஈ.டி.. போட்டு இலவச மின்சாரம்.
9....முதன் முதலாக விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்.
10....அரசு சார் ஓட்டுனர்களுக்கு உணவு படி.
11....முதன் முதலில் குடும்ப ரேஷன் அட்டைகள் வழங்க பட்டது தலைவர் ஆட்சியில்.
12..காவலர் உடை சீர்திருத்தம், மகளிர் காவல் துறை....கொண்டு வந்தார்.
13....அறநிலையத்துறை மூலம் சிறப்பு திருமணம்..வசதி இல்லா ஜோடிகளுக்கு சீரவேட்டி, புடவை, தாலி மற்ற சீர்பொருள்கள் வழங்க பட்டு திருமணம்
இன்னும் இருக்கு ஏராளம்....தொடரும்...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன்..
இந்திய அளவில் எந்த லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்காத ஒரு சில முதல்வர்களில் ஒருவர் நம் தலைவர்.........
-
"எம்.ஜி.ஆரின் இசை ஞானம்"
M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
நவரத்தினம் படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!
பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஒருதாய் மக்கள் படத்தில் எம்.ஜி.ஆர்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. மை ஃபேர் லேடி, சவுண்ட் ஆஃப் மியூசிக் ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார் என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக பணம் படைத்தவன் படத்தில் அகார்டியன், கண்ணன் என் காதலன் படத்தில் பியானோ, ஒருதாய் மக்கள் படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். எங்கள் தங்கம் படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
மன்னாதி மன்னன் படத்தில் இடம்பெற்ற ஆடாத மனமும் உண்டோ?... பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய லதாங்கி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தபேலா தரங்கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.
வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமனுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்.
நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை தாளம் என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் தபேலா தரங்கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்
என்ற வரிகளை மிகச் சரியாக டைமிங் தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
என்ற வரி களில் கடைசி எழுத்தான வேயின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். லாங் ஷாட்டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ஆடாத மனமும் உண்டோ?... என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?...
____________________________________________
எம்.எஸ்.சுப்பு லட்சுமி கதாநாயகியாக நடித்த படம் மீரா. இந்தப் படத் தில் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மதுரை சோமு போன்ற கலைஞர்களின் கச்சேரிகளை ரசித்துக் கேட்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்..........
____________________________________________
-
"எம்.ஜி.ஆர், சினிமாவிலும் பின்பற்றிய தர்மம்"!
M.g.r. தனது படங்களின் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சென்றார். படங்களின் கதை, வசனம், பாடல்கள் மட்டுமின்றி, படத்தின் பெயரே மக்களுக்கு நேர்மறையான, நல்ல செய்திகளை சொல்வதாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அது ஒரு வியாபாரமும் கூட. நேரடியாகவும் மறைமுகமா கவும் அந்த தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் இருக்கின்றனர். அப்படி ஒரு தொழிலாக செய்யும்போது அதை லாப நோக்கோடுதான் செய்யமுடியும். லாபம் வந்தால்தான் அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் பிழைக்க முடியும். அதற்காக படங்களில் மசாலா விஷயங் கள் சேர்ப்பது தவிர்க்க முடியாதது. பொழுதுபோக்கும், வணிக வெற்றிக் கான லாப நோக்கமும் இருந்தாலும் கூட, அதிலும் ஒரு தர்மத்தை கடைபிடித்து சினிமாவின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். பதிய வைத்தார்.
சினிமா திரையரங்கு சென்று படம் பார்க் காதவர்களுக்கு கூட, சுவரொட்டிகளும் படத்தின் பெயரும் கண்களில்படும். எனவே, படத்தின் பெயரே நல்ல கருத்துக் களையும் உழைப்பின் மேன்மையையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். அதன் விளைவுதான் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலை காக்கும்', 'தொழிலாளி', 'விவசாயி' , 'நீதிக்குத் தலைவணங்கு', 'உழைக்கும் கரங்கள்'… என்று நீளும் அவரது படங்களின் பெயர்கள்.
எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.
லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.
''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழு வினர் வியந்தனர்.
'நல்ல நேரம்' படத்தில் உழைப்பின் மேன் மையை வலியுறுத்தும் வகையில் கவிஞர் புலமைப் பித்தன் எழுதிய ''ஓடி ஓடி உழைக் கணும்…' என்ற அற்புதமான சூப்பர் ஹிட் பாடல் உண்டு. எம்.ஜி.ஆரின் அழகும் இளமையும் கூடிய வழக்கமான சுறுசுறுப்பு, காட்சிக்கு கூடுதல் பிளஸ். இந்தப் பாடலில் கவனிக்கத் தவறக் கூடாத ஒரு விஷயம். மக்களுக்கு வித்தை காட்டிக் கொண்டே பாடும் இந்தப் பாடலின்போது, ஒரு இடத்தில் கைகளை தரையில் ஊன்றி எம்.ஜி.ஆர். மூன்று முறை 'பல்டி' அடிப்பார்.அப்போது, அவ ரது உள்ளங்கைகள் தரையில் பதியாது. விரல்களை மட்டுமே ஊன்றிக் கொள்வார். இதை கவனித்துப் பார்த்தால் தெரியும். உடல் எடை முழுவதையும் விரல்களில் தாங்குகிறார் என்றால் அவரது விரல் களுக்கு உள்ள வலிமை புரியும்.
படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்தப் பாடலில் அமைந்த வரிகள்...
'நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்'
இதுதான் எம்.ஜி.ஆர்............
-
" எம்.ஜி.ஆர், - அவர் புகழுக்கு முடிவேது?"
m.g.r.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!
பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.
பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.
இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.
எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.
அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.
முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!
மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!
முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.
‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.
எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!
பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.
தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!
‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.
**********.........
-
சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆர் புலிதான் . அவர் படங்களிற்க்கு விளம்பரம் தேவையில்லை.
எம்.ஜி.ஆர். நடித்து 1971-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘ரிக் ஷாக்காரன்’. பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்.ஜி.ஆர். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வெலிங்டன், லிடோ ஆகிய திரையரங்குகளில் 1972 இல் "ரிக்க்ஷாக்காரன்"
திரையிடப்பட்டது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட "குத்துவிளக்கு" என்கிற திரைப்படம் 1972 இல் யாழ் Windsor தியேட்டரில் திரையிடப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள அதிகமான பாடசாலைகளில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. காலை 9:00 மணிக்கு பாடசாலையிலிருந்து பஸ் மூலம் எங்களை Windsor தியேட்டருக்கு அழைத்து ச்சென்றார்கள். Windsor தியேட்டர் கோலாகலமாக தோரணங்களால் ஜோடிக்கப்பட்டிருந்தது.
Windsor தியேட்டருக்கு அருகாமையில் Lido தியேட்டரில் " இன்று முதல் எம்ஜிஆர், மஞ்சுளா நடித்த "ரிக்சாக்காரன்" என்று சிறிய பலகை வைக்கப்பட்டிருந்தது. இரு தியேட்டர்களையும் ஒரு சிறிய சுவர் பிரிக்கிறது . குத்துவிளக்கு படத்திற்கு வந்தவர்களில் அரைவாசிக்கு மேட்பட்டவர்கள் Lido தியேட்டர் மதில் பாய்ந்து ரிக்க்ஷாகாரன் படத்தை பார்க்க நுழைந்துவிட்டோம் . இப்படம் யாழ் welington தியேட்டரில் House Full காட்சியாக காலை 8:00 மணியிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. காலை 9;00 மணிக்கு Lido தியேட்டர் House Full ஆகிவிட்டது. இரு தியேட்டர்களும் 3 நிமிடம் நடக்கும் தூரத்தில் உள்ளது. மறக்கமுடியாத அந்த நாட்கள் .......
"பூனையல்ல புலிதானென்று போகப்போக காட்டுகிறேன் ....."........
-
'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்...
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்
அத்தியாயம்: 18
21 வயதில் எம்.ஜி.ஆருக்கு அந்த வயதுக்கே உரிய காதல் எண்ணம் அரும்பியது. திரைப்படங்களில் கதாநாயகிகளை உருகி உருகி காதலித்து வெற்றிபெற்ற எம்.ஜி.ஆரால் தன் முதல் காதலில் வெற்றிபெற முடியாமல் போனது ஆச்சர்யமல்ல. தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாயிற்றே!
இளைய மகனும் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்த சத்தியபாமா, பெரிய பிள்ளையைப் போன்றே ராம்சந்தருக்கும் உறவிலேயே பெண் பார்த்து திருமணத்தை முடித்துவைக்க முடிவெடுத்தார். பாலக்காட்டில் சில நாட்கள் தங்கி அப்படி ஒரு பெண்ணை தேடிப்பிடித்தார்.
பாலக்காட்டில் துாரத்து உறவினர் ஒருவருடைய மகள்தான். பெயர் பார்கவி. நல்ல கோதுமை நிறம். கேரளாவுக்கே உரிய அழகு. மகனுக்கு நிச்சயம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் திருமணத் தேதியையே குறித்துவிட்ட சத்தியபாமா, “என்ன செய்வாய் என்று தெரியாது. தம்பியை உடனே பாலக்காட்டிற்கு அனுப்பிவை. நீயும் வந்துவிடு”- என நிலைமையைச் சொல்லி சக்கரபாணிக்கு கடிதம் எழுதினார். ஆனால் தம்பியின் சுபாவம் அறிந்தவரான சக்கரபாணி, திருமணம் நிச்சயமான தகவலை சொன்னால் கோபப்படுவானே தவிர ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதை உணர்ந்திருந்தார்.
அம்மாவின் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு அன்றிரவு முழுவதும் யோசித்து ஒரு தீர்வு கண்டார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்றுதான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே...பெரியவர் சக்கரபாணி சொன்னது ஒரே பொய்தான்.
“ஊருக்கு போன இடத்தில் அம்மாவுக்கு உடல் சுகமில்லையாம். உடனே உன்னையும் மணியையும் பார்க்கனும்னு புலம்பறதா உறவினர்கள்ட்ட இருந்து தபால் வந்திருக்கு. உடனே புறப்பட்டுப் போ... நானும் அண்ணியும் பின்னாடியே வர்றோம்”
'அம்மாவுக்கு உடல் சுகமில்லையா'
- அதிர்ந்துபோன எம்.ஜி.ஆர் அடுத்த ரயிலிலேயே பாலக்காட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு போனபின்தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து தாயிடம் கோபப்பட்டார். 'திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் தான் பாலக்காட்டிலேயே செத்துப்போவேன் என சத்தியபாமா மிரட்டிப் பணியவைத்தார். ஆனாலும் கோபம் இருந்தது. எல்லாம் பார்கவியை பார்க்கும்வரையில்தான். மணமேடையில் பார்கவியை பார்த்தபின் அவரது கோபம் போன திசை தெரியவில்லை.
'திருமண உடையாக தான் கதர்தான் அணிவேன்' என்ற ஒற்றை நிபந்தனையுடன் பார்கவி கழுத்தில் தாலி கட்டினார் எம்.ஜி.ஆர். (பார்கவியுடனான எம்.ஜி.ஆரின் திருமணம் நடந்தது 1939 ம் ஆண்டின் பிற்பகுதி என்றே கணிக்கமுடிகிறது. அதுபற்றிய தெளிவான குறிப்பு எங்கும் கிடைக்கப்பெறவில்லை.)
சென்னையில் எம்.ஜி.ஆரின் இல்லற வாழ்வு துவங்கியது. அப்போதுதான் எம்.ஜி.ஆர் நடித்து 'மாயா மச்சீந்திரா' படம் வெளியாகி இருந்தது. அப்போதுதான் தனது கணவர் சினிமா நடிகர் என்ற விஷயமே பார்கவிக்கு தெரியவந்தது.
சுத்த சைவமான பார்கவி கணவருக்காக சைவ உணவுகளை சமைக்கக் கற்றுக்கொண்டார். சக்கரபாணி குடும்பத்தினருடன் எளிதாக ஒட்டிக்கொண்டார். எந்த மனவேறுபாடுமின்றி இயல்பாக அவர் எல்லோரிடமும் பழகிய விதம் சத்தியபாமாவுக்கு மகிழ்ச்சியளித்தது. மகனுக்கு நல்லதொரு மனைவி வாய்த்ததில் அவருக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. தனது மகள் தங்கமணி உயிரோடு இருந்தால் எப்படியெல்லாம் இருப்பார் என கற்பனை செய்திருந்தாரோ அப்படியே பார்கவியின் குணம் இருந்ததும் அவருக்கு கூடுதல் சந்தோஷம்.
இதனால் மருமகளை தங்கமணி என்ற தனது மகளின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார். பார்கவி என்ற தனது சொந்தப் பெயரையே மறந்துவிடும்படி கொஞ்சநாளில் உறவினர்கள் அனைவராலும் தங்கமணி என்றே அழைக்கப்பட்டார் பார்கவி.
இல்லற வாழ்க்கை இனிதாக கடந்துகொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அரிதாகவே வாய்ப்புகள் வந்தன. அதுவும் சிறுசிறு பாத்திரங்கள். கதாநாயகன் வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு அவை வெறுப்பையே தந்தன. என்றாலும் பொருளாதார சூழலுக்காக அவற்றில் நடித்துவந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அவர் எதிர்பார்த்த கதாநாயகன் கனவு நிறைவேறும் நாள் வந்தது.
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு துவங்கிய சிலநாட்களில் தயாரிப்பாளருக்கும் படத்தின் இயக்குனர் நந்தலால் என்பவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்கும் மனவருத்தமடையச் செய்யும் சில சம்பவங்கள் நடந்தன. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார். கதாநாயகி அவரின்
முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.
அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து, 'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட, எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார். எம்.ஜி.ஆர் மனதில் இது நீங்காத காயத்தை ஏற்படுத்திவிட்டது. ஆயினும் அரிதாக கிடைத்த கதாநாயகன் வாய்ப்பை அவசரப்பட்டு இழந்து எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என தன் வேதனையை வெளிக்காட்டாமல் தொடர்ந்து நடித்தார்.
ஆனால் விதி வேறுவிதமாக வேலை செய்தது. அடுத்த சில நாட்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் முற்றி படமே நின்றது. கதாநாயகன் கனவு கலைந்த விரக்தியில் எம்.ஜி.ஆர் வீட்டில் முடங்கிக்கிடந்தார் சில மாதங்கள். அதேசமயம் அவருக்கு சினிமாத்துறை மீது கோபமும் எழுந்தது. அந்தக் கோபத்தில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவெடுத்தார் அவர்.
என்ன முடிவு அது..?
http://www.vikatan.com/news/coversto...isode--18.html
Quote
நவீனன் 1,007
Posted March 7, 2017
"சினிமாவை வெறுத்து இராணுவத்தில் சேரப்போன எம்.ஜி.ஆர்” : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 19
சினிமா வாய்ப்புகள் இல்லாததும், கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பும் கடைசி நேரத்தில் கைநழுவிப்போன விரக்தியில் எம்.ஜி.ஆர் தீவிர சிந்தனை வயப்பட்டார். 'திருமணமாகிவிட்டதால் அடுத்தடுத்து குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கலாம்; நாடக சம்பாத்தியத்தில் அவற்றை ஈடுகட்டமுடியாது. அதேசமயம், “டேய் நம்ம ராம்சந்தர் சினிமாவில் நடிக்கிறான்டா” என அவனது நண்பர்கள் அவரை உயரத்தில் வைத்து கொண்டாடிக்கொண்டிக்கிறார்கள். இந்த நேரத்தில் சினிமாவில் கிடைத்த தோல்வியோடு நாடகத்திற்கே திரும்பினால் அவர்கள் முகங்களில் எப்படி விழிப்பது”.. 'ராம்சந்தர் தோத்துட்டான்டா' என அதே வாயால் அவர்கள் கேலி செய்ய மாட்டார்களா..' பல இரவுகள் எம்.ஜி.ஆருக்கு இதே சிந்தனை. தீவிர சிந்தனைக்குப்பின் சினிமா சாராத ஒரு தொழிலுக்கு சென்றுவிடுவதென்ற ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அதாவது யாருக்கும் தெரியாமல் சினிமாவை விட்டே முற்றாக விலகுவது என்ற முடிவு!
சென்னையில் அப்போது இரண்டாம் உலகப்போருக்கான சூழல் நெருங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்துகொண்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்துவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று எம்.ஜி.ஆர் நம்பினார். ராணுவத்திற்கான தேர்விலும் பங்கேற்றுவிட்டு கடிதத்திற்காக காத்துக்கொண்டிருந்தநேரத்தில் மீண்டும் ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது அவருக்கு. சாதாரண வேடம் இல்லை... கதாநாயகனாக!
அதேசமயம் எம்.ஜி.ஆர் ராணுவத்தில் வேலைக்கு சேருவதென எடுத்த முடிவு தாயார் சத்தியபாமாவுக்கு தெரியவர கொதித்துப்போனார். “ தங்கம்போல இரண்டு பசங்களை பெத்திருக்கேன். எங்கேயோ கண்காணாத இடத்துல போய் நீ இருக்கியா இல்லையான்னு சந்தேகத்தோட நான் என் வாழ்க்கையை வாழனுமா...அப்படி ஒண்ணும் நீ லட்சம் லட்சமாக சம்பாதிக்கத்தேவையில்ல...இங்கவே இரு....”
மீண்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் சொன்னபடி வாய்ப்பு தரவில்லை அந்த சினிமா நிறுவனம். ஆனால் இந்த முறை விரக்தியடையவில்லை, சினிமா வாய்ப்புகளுக்காக ஸ்டுடியோக்களின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தார்.
அப்படி கிடைத்ததுதான் அசோக்குமார் பட வாய்ப்பு. அன்றைய சூப்பர் தியாகராஜ பாகவதருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சியளி்த்தது. அந்த காலகட்டத்தில் வாழ்க்கை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் பார்கவியுடனும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தமுடியவில்லை அவரால். அத்தனை மன்ச்சோர்வுக்குள்ளாகியிருந்தார் அக்காலத்தில். இருந்தாலும் 'சினிமாவில் என்றாவது ஒருநாள் நாம் வென்றுவிடுவோம்' என்ற நம்பிக்கை மட்டும் மனதில் கனன்றுகொண்டேயிருந்தது.
அப்போது இரண்டாம் உலகப்போருக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. போரின் விளைவாக சென்னை நகரத்தின் மீது குண்டுகள் பொழியும் என்று பீதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. சென்னையின் பிரபலஸ்தர்கள் பலரும் வந்தவிலைக்கு தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு ரயில் ஏறினார்கள் சொந்த ஊருக்கு. சத்தியபாமாவும் அந்த யோசனையை தெரிவித்தார் மகன்களிடம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சினிமாவில் வெற்றிபெறுவதற்கான காலம் கனிந்துவரும் சூழலி்ல் உயிருக்கு பயந்துபோய் ஓடிவிடுவதா என சகோதரர்கள் இருவருமே
தெளிவாக சொன்னார்கள். சத்தியபாமா, “குறைந்தது மருமகள் பிள்ளைகளை மட்டுமாவது பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பிவிடலாம். போர் முடிந்து ஆபத்து இல்லையென்பது முடிவானபின் அழைத்துக்கொள்ளலாம்” என்று யோசனை சொன்னார். அதை ஏற்றார்கள் மகன்கள்.
ஆனால்கணவரைப் பிரிய இரு மருமகள்களுமே சம்மதிக்கவில்லை. இறுதியாக ஒப்புக்கொண்டனர். ரயில் நிலையத்தில் தங்கமணியும், சக்கரபாணி மனைவி நாணிக்குட்டியும் அழுது அழுது விங்கிய கண்களுடன் பாலக்காட்டிற்கு புறப்பட்டனர். பாலக்காட்டிலிருந்து தங்கமணி கணவருக்கு கடிதம் எழுதியபடியே இருந்தார். பார்கவி புறப்பட்டுச் சென்ற 20 வது எம்.ஜி.ஆருக்கு திடீரென மனைவியின் ஞாபகம் நினைவில் வந்துவந்து சென்றது. மறுநாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் எம்.ஜி.ஆர் புறப்பட்ட அதேநேரத்தில் பாலக்காட்டிலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி அனுப்பப்பட்டது.
தந்தி சென்னை வந்துசேர்ந்த சமயம் எம்.ஜி.ஆர் பாலக்காட்டில் தங்கமணி வீட்டை அடைந்துவிட்டார். மகிழ்ச்சியான மனநிலையில் வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அதிர்ச்சி. தங்கமணியின் படத்திற்கு மாலைபோட்டி வத்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. 'ஐயோ' என்று அலறியபடி கீழே விழுந்தார் எம்.ஜி.ஆர். சக்கரபாணி மனைவி நாணிக்குட்டி மச்சினரைத் தேற்றி விஸயத்தைச் சொன்னார்.
முன்தினம் காலை மார்பு வலிப்பதாக சொல்லி தண்ணீர் வாங்கிக்குடித்த தங்கமணி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். உடனடியாக எம்.ஜி.ஆருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்கள். தந்தி வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் கிளம்பிவிட்டதால் இந்த விபரங்கள் தெரியாமல் அவர் வந்து சேர்ந்திருக்கிறார். நாயர் வகுப்பினரின் குல வழக்கப்படி உடலை சீக்கிரம் புதைத்துவிட்டிருக்கிறார்கள். பேரிடியாக சொல்லப்பட்ட இந்த தகவலால் நொந்துபோனார் எம்.ஜி.ஆர். மனைவியின் உடலைக்கூடபார்க்கமுடியாமல் போன சோகத்திலிருந்து அவர் மீள பல மாதங்கள் ஆனது.
இதனிடையே சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. சிறுசிறுவேடங்கள் என்றாலும் நடிக்க ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் தமிழறியும் பெருமாள், தாசிப்பெண், ஹரிச்சந்திரா படங்கள் வெளியாகின. இதன்பிறகு சாலிவாஹனன். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தினால் பெரிய புகழ் ஒன்றும் கிடைத்துவிடவில்லை என்றாலும் வேறொரு வகையில் இந்தப் படம் எம்.ஜி.ஆர் வாழ்வி்ல் முக்கியத்துவம் பெற்றது. ஆம்... இந்த படத்தில்தான் தன் வாழ்வின் பிற்பகுதியில் தன்னுடைய நெருங்கிய நண்பராகப்போகிற முக்கிய நபர் ஒருவரை அவர் சந்தித்தார். அந்த சந்திப்பிற்குப்பிறகு எம்.ஜி.ஆர் தன் திரைப்பட வாழ்வின் வளர்ச்சிக்கான முக்கியமான முடிவுகளை எடுத்தார்.
யார் அவர்....
தொடரும்...........
-
சூப்பர் தகவல்... கடந்த 18-04-2020 முதல் 24-04-2020 வரையிலான Television Rating Points (TRP) சன் டிவியில் ஒளிபரப்பான படங்களில் "எங்க வீட்டு பிள்ளை" 5 வது இடத்தை கைப்பற்றி மாபெரும் மகத்தான சாதனை படைத்திருக்கிறார் இன்றும் மக்கள் திலகம்... அதற்கு முன் 4 இடங்களில் விஜய், சூர்யா படங்கள், செய்தி சேனல் இடம் பெற்றுள்ளன. தகவல் தெரியப்படுத்திய நண்பருக்கு நன்றி...
-
தினமணி*-கொண்டாட்டம் -03/05/20
---------------------------------------------------------
குரலை மாற்றி பாட முடியாது*
------------------------------------------------
மறைந்த பிரபல தமிழ் பின்னணி* * *பாடகர் டி.எம்.சவுந்தரராஜனைப்போல குரலை*மாற்றிப்பாட யாராலும்** முடியாது .
1950ஆம் ஆண்டு முதல் 70களின் கதாநாயகர்கள், துணை நடிகர்கள் , நகைச்சுவை நடிகர்கள் , சில வில்லன் நடிகர்கள் எல்லாம் டி.எம்.எஸ். தமக்கு பாடமாட்டாரா என்று தவம் கிடந்தார்கள் .**
எம்.ஜி.ஆரிலிருந்து* நாகேஷ், தேங்காய் ஸ்ரீநிவாசன், அசோகன், எம்.ஆர். ராதா வரை எவரையும் டி.எம்.எஸ். விட்டுவைக்கவில்லை .
புதிய படங்களின் இசை தட்டுக்கள் புதிதாய் வெளியாகிறபோது* அவற்றை வீதியெங்கும் கேட்கும்படி ஒலிபரப்பிப்* பிரபலபடுத்துவது அந்தக்கால சவுண்ட் சர்வீஸ் கடைகளின் வழக்கமாக இருந்தது .**
காவல்காரன் ரிலீசான புதிதில்* நினைத்தேன் வந்தாய் நூறுவயது , கேட்டேன் தந்தாய் ஆசை மனது என்கிற பாட்டு காந்தமாக* இழுத்தது*
(ஏ. எ . ஹெச் .கே. கோரி எழுதிய ஊருக்கு ரெண்டு கதை நூலில் இருந்து*-தங்க சங்கர பாண்டியன், சென்னை .
-
#எழுத்தாளர் #கிரிதரன் #என்பவரின் #பக்கங்களிலிருந்து :
நீங்கள் சினிமா ரசனை உள்ளவர் என்பதை உங்கள் முகநூல் காட்டித் தருகின்றது. அதிலும் எம்ஜிஆர் பற்றி உங்கள் ரசனை அபரிமிதமாக உள்ளது... கொஞ்சம் அதைப்பற்றிச் ?சொல்லுங்கள்...?
என்னைப்பொறுத்தவரையில் பல்வேறு கருத்துகளை, உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை, பாடகர்களின் குரல், பாடல்வரிகள் ஆகியவற்றுக்காகச் சினிமாப்பாடல்கள் என்னைக் கவர்வன. உண்மையில் நான் அதிகமாகச் சினிமாப்படங்களைப் பார்த்தவனல்லன். சிறுவயதில் அறுபதுகளில் எம்ஜிஆரின் படங்களை அதிகமாகக் பார்த்த காரணத்தால் அவரின் திரைப்படங்கள் மூலமே நான் சினிமா பார்க்கத் தொடங்கியதன் காரணமாக என் பால்ய காலத்தின் என் விருப்பத்துக்குரிய நடிகராக எம்ஜிஆர் இருந்தார்.
அவ்விதம் என் நெஞ்சில் ஆழமாக எம்ஜிஆர் பதிந்ததற்கு முக்கிய காரணங்கள் அவரது வசீகரம் மிக்க முகராசி. அடுத்து அவரது திரைப்படங்களில் வரும் ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் கருத்துள்ள பாடல்கள். அப்பாடல்களே எனக்கு எம்ஜிஆர் திரைப்படங்கள் பிடிக்கக் காரணம்...
அதுவும் குறிப்பாக அறுபதுகளில் , ஐம்பதுகளில் வெளியான அவரது திரைப்படங்கள். அவரின் இறுதிக்காலப்படங்கள் பலவற்றை நான் அதிகம் பார்க்கவில்லை. அவற்றிலுமுள்ள ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் பாடல்களை நான் இரசிப்பதுண்டு.
உளவியல் அறிஞர்தம் கோட்பாடுகளின்படி ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் தனக்குத்தானே கூறிக்கொண்டு வருவாரானால் #அக்கோட்பாடுகள் அவருடன் #ஒட்டிப்பிறந்தவையாய் இருந்திருக்கும். மேலும் அதைக்கேட்கும் மனிதரின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து அம்மனிதரின் வாழ்வை #ஆரோக்கியப் #பாதைக்குத் திருப்பும். உண்மையில் எம்ஜிஆரின் திரைப்படப்பாடல்கள், ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் திரைப்படப்பாடல்கள், மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது , கேட்பவர்கள் மனதில் ஆழமாகப்பதிந்து விடுகின்றன.
இவ்வகையில் ஆரோக்கியமான விளைவினைக் கேட்பவருக்கு ஏற்படுத்துகின்றன. உண்மையில் எம்ஜிஆரின் இரசிகர்களான #பாமர #மக்கள் பலருக்கு நூல்கள் வாங்க, வாசிக்க எல்லாம் நேரம், சந்தர்ப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரின் பாடல்களை அவர்கள் கேட்டார்கள். அவை அவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஆரோக்கியமான விளைவுகளை, சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்குமென்றே நிச்சயமாகக் கருதுகின்றேன்.
இலக்கியத்திலுள்ளது போல் கலைகளிலின்றான சினிமாவிலும் பல பிரிவுகள் உள்ளன. குழந்தைகளுக்கான படம், பக்திப்படம், அறிவியற்படம், பொழுதுபோக்கு வெகுசனத்திரைப்படம், #கலைத்துவம் மிக்க திரைப்படம் என்று பிரிவுகள் பல.
எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பொழுது போக்குப் படங்களில் வைத்துக்கணிப்பிட்டாலும், நல்ல கருத்துகளைப் போதித்ததால் அவை சமுதாயத்திற்கு #ஆரோக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ளன என்பது என் உறுதியான கருத்து.............
-
தெரியாதது #கடலளவு
சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.
"உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...
பின்னர்,
அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.
அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,
#அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...
வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...
படித்ததைப் பகிர்கிறேன்...
வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'.........
-
#பண்பு
1977 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் மதுரை மாவட்டம் தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்...
அப்போது விஷமி ( வேற யாரு, கட்டுமரம் கும்பல் தான்...) ஒருவர், ஒரு பொட்டலத்தை எம்ஜிஆர் மீது வீசினார்.
எம்ஜிஆர் தற்செயலாக விலக, அந்தப் பொட்டலம் அருகிலிருந்த பாதுகாவலர் மேல் விழுந்தது...
அது மாட்டுச்சாணம் என்பதைத் தெரிந்துகொண்ட மக்கள்திலகம், 'என் மீது விழுந்தது பூ பொட்டலம்... அதனால் அனைவரும் அமைதியாக இருக்கவும்...' என்று கூறினார்...
உடனே அருகிலிருந்த மக்கள், 'இது பூ பொட்டலம் இல்லை, மாட்டுச்சாணம்.. என்று சொல்லி அதைக் காண்பிக்கவும் செய்தனர்...
அப்போது மக்கள்திலகம், 'இதனாலனென்ன குறைந்துவிடப்போகிறது, மாட்டுச்சாணத்தைப் பூவாக நினைத்துக் கொள்வோம்.....'
என்றார் பெருந்தன்மையுடன்........
-
"நான் ஆணையிட்டால் அது நடந்தது விட்டால், இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்; உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை, அவர் கண்ணீர் கடலிலேயே விழமாட்டார்."
எம்.ஜி.ஆரின் திரைப்பட கொள்கை அரசியல்...
எம்.ஜி.ஆர் திரைத்துறைக்கு வந்தது எந்த நோக்கத்திற்கு என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்றாலும், அவரது ஒவ்வொரு அடியும் தன் தாயார் பட்ட கஷ்டங்கள், அண்ணன் சக்கரபாணி மும் தானும் சிறுவயதில் அனுபவித்த சிரமங்களை, வேறு எவருக்கும் ஏற்பட்டு அனுபவிக்க கூடாது என்ற நோக்கத்தில் இருந்ததை அவருடைய நகர்வுகள் தெரிவிக்கின்றன. வரலாறும் அப்படித்தான் சொல்கிறது.
துவக்கத்தில் துணை நடிகராக கால் பதித்தார். சிறிது சிறிதாக முன்னேறி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். காங்கிரஸ் சார்புடைய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு நட்பாகி, அண்ணாவின் பிடித்தமானவரானார். நாடகங்களில் வசனம் எழுதிக் கொண்டிருந்த கருணாநிதி நட்பாகி, மார்டன் தியேட்டரில் வசனகர்த்தா வாக் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்கிறார். அதனால் எம்.ஜி.ஆர் தான் நடித்த ராஜகுமாரி, மந்திரி குமாரி போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். படங்களும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலிருந்து எம்.ஜி.ஆர், யார் வசனம் பாடல்கள் எழுதினாலும் மக்களுக்கு புரியும்படி யாகவும் நல்ல கருத்துக்கள் கொண்டதாகவும் பார்த்து கொள்வார்.
1950 களில் மருதநாட்டு இளவரசி, மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதில்தான், எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் இடம் பெற்றது. எம்.ஜி.ஆரின் முதல் அரசியல் பாடலும் அதுதான். அதிலிருந்து கட்சியின் கொள்கைகளை கதைகளிலும் பாடல்களிலும் இடம்பெற செய்தார். அரசியலிலும் தீவிரமானார்.
"மலைக்கள்ளன்" திரைப்படம் அந்த வரிசையில் எம்.ஜி.ஆருக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கும் "ராபின் ஹுட்" கேரக்டர்.
டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய படம். ஆங்கிலப் படத்தின் தழுவலாக, வெற்றிக்கான கதையாக இயக்குநர் இக்கதையை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும். ஆனால் இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாதைக்கு திசை காட்டியாக அமைந்தது.
திரைப்படத்தின் பெயர் மலைக்கள்ளன் ஆக இருந்தாலும் கதாநாயகன் திருடுவதாகக் காட்சி அமைப்பு கிடையாது. மற்றவர்கள் கொள்ளை அடித்ததை பறித்து காவல்துறையிடம் ஒப்படைக்கும் பாத்திரமாகத் தான் படைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்திற்கும் வசனகர்த்தா மு.க தான். வசனங்களில் ஆங்காங்கு லேசாக அரசியல் தூவப் பட்டிருக்கும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும், அந்த கால சமூக வாழ்க்கையையும், அரசியலையும் இடித்துக் காட்டும் வசனங்கள் இடம் பெற்றிருந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கும்.
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று துவங்கும் பாடலில் ஒரு அரசிற்கான கொள்கைத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும்.
"எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் -
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் -
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் -
அதில்ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் திரட்டுவோம்".
ஒரு அரசு அமைந்தால் செய்யப் போகிற பணிகளை தொகுத்து அறிவிப்பது " தேர்தல் அறிக்கை". இந்தப் பாடல் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கை போலவே அமைந்திருக்கிறது. கல்வி, தொழில், வீடு என அடிப்படை தேவைகளை செய்வதான வாக்குறுதிகள் இந்தப் பாடலில் அளிக்கப்படுகின்றன.
தவறு இழைக்கிற ஒரு அரசாங்கத்தை இடித்துக் காட்ட, இன்றைய தேதிக்கும் இந்தப் பாடல் பயன்படுகிறது என்பது இந்தப் பாடலின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் திரைபடத்தின் அரசியல் பார்வையை வெளிப்படுத்திய முதல் பாடல்.
அடுத்து "மர்மயோகி" திரைப்படம் எம்.ஜி.ஆரின் நாயக பிம்பத்தை கட்டமைத்த வரிசைப் படம். அரசை தவறான வழியில் கைப்பற்றிய அரசியிடம் இருந்து நாட்டை மீட்கும் போராட்டம். அதே சமயம் ஏழை, எளியோருக்கு பாடுபடும் நாயகன் வேடம். அப்படியே மக்கள் மனம் கவர்ந்த நாயகனாக உருவாக்கப்பட்டது 'கரிகாலன்' கதாப்பாத்திரம்.
"மதுரை வீரன்" திரைப்படம் ஒரு குல தெய்வமாக விளங்கும் மதுரை வட்டார வீரனின் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் மதுரைவீரன் சாமியை வணங்கும் ஒரு சமூகத்திற்கு எம்.ஜி.ஆர் ஆதர்ச நாயகன் ஆனார். இந்தத் திரைப்படத்தினால் அவர் பின் அணி திரண்டவர்கள், எம்.ஜி.ஆரின் இறுதி காலம் வரை அவருக்கு அரசியல் ரீதியாக பலமாக இருந்தார்கள். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஏய்ச்சிப் பிழைக்கும் பிழைப்பே சரிதானா" என்றப் பாடல் சமூக பிரச்சினைகளை பட்டியலிடுகிறது. நுணுக்கமாக இப்படி பாடல்கள் மூலம் அரசியல் செறிவூட்டப்பட்டன
எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அரசியல் கருத்துகளை கொண்டிருந்தன. அவருக்கு அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தின. அவரை அரசியல்வாதியாக்கின.
இந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அரசியல் புகுத்தி ஒரு திரைப்படத்தை கொண்டு வந்தார். அது "நாடோடி மன்னன்". அவரே தயாரிப்பாளர், அவரே இயக்குநர், அவரே கதாநாயகன். அதிலும் இரட்டை வேடம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவரே செதுக்கி, செதுக்கி உருவாகினார். இசையை அவரே தேர்ந்தெடுத்தார். பாடல் வரிகளை அவரே தீர்மானித்தார். நாயக பிம்பத்தை கட்டியமைப்பதாக ஒவ்வொரு காட்சியையும் அமைத்தார்.
"நாடோடி மன்னன் " திரைப்படத்திற்கு பின்னதான படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும், கதை, காட்சி, வசனம், இசை, பாடல் என அத்தனையிலும் எம்.ஜி.ஆரின் பங்களிப்பும், தலையீடும் இருந்தன. தனக்கான அரசியல் இவை அத்தனையிலும் பிரதிபலிக்குமாறு பார்த்துக் கொண்டார்.
இந்தப் படத்தின் ஹிட் பாடல்,
"தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா".
இனத்தின் பெருமைகளை அடுக்கி, கேட்போரை தன்வயப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளை தரும் பாடல். பகுத்தறிவுக் கருத்துகளை சொல்லும் பாடல் முடியும் போது அரசியல் பேசுகிறது. இப்படியான அறிவுரை கூறும் 'கொள்கைப் பாடல்' தவறாமல் எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பிடித்தது.
அதேப் படத்தில், மற்றொருப் பாடல் தமிழை வணங்கி அதன் பெருமைகளை எடுத்துரைக்கிறது. அதே சமயம் அரசியலையும் சொல்கிறது.
"செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி
மேலாய்
பிறிதொரு தெய்வம் இலை என்பதாலே
செந்தமிழே வணக்கம்
ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய் ".
தமிழ், திராவிடம் என்ற திராவிட இயக்க அரசியலை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியதால், திராவிடப் பற்றாளர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். திராவிட, தமிழ் உணர்வை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்தார்.
இதற்கு பிறகு எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அவருக்கான அரசியலை மையமாக வைத்தே பின்னப்பட்டன. அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் அவருக்காகவே வடிவமைக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் ஏற்று நடித்த பாத்திரங்கள் மது அருந்த மாட்டார்கள், புகை பிடிக்க மாட்டார்கள், தவறான வார்த்தைகளை பிரயோகிக்க மாட்டார்கள்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் குரல் கொடுப்பவராக, பாடுபடுபவராக, தன்னையே தியாகம் செய்பவராக எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் அமைக்கப்படும். ஒரு கட்டத்தில் கதாபாத்திரம் என்பதைத் தாண்டி எம்.ஜி.ஆரே அப்படித் தான். வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். தான் கொண்ட கொள்கையை மக்களும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தாது. அவர்களின் மனங்களில் நீங்கா இடம்பெறலானார்.
கதாநாயகியை தவிர மற்ற பெண்களை தாயாக, சகோதரியாகத் தான் பாவிப்பார்.
அரசர் காலத்து படம் என்றால், இழந்த நாட்டை மீட்பவராக, புரட்சியாளராக, அரசை நேர் வழிப்படுத்துபவராக எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். இது மெல்ல, மெல்ல மக்கள் மனதில் அவர் தான் நாட்டை வழிநடத்த சரியானவர் என்ற எண்ணத்தை பதியம் போட்டது.
பிறகு உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக தன் கதாபாத்திரங்களை அமைத்துக் கொண்டார். விவசாயியாக, தொழிலாளியாக, மீனவராக, ரிக்*ஷா ஒட்டுபவராக என அவர் ஏற்கும் கதாபாத்திரம், அந்த சாராரின் மனதில் தங்களை அந்தக் கதாபாத்திரமாக வரித்துக் கொள்ளும் மனோ நிலைக்கு கொண்டு சென்றது.
ஒரு கட்டத்தில் தங்களை அவர்கள் எம்.ஜி.ஆராகவே வரித்துக் கொண்டார்கள். அதில் தான் எம்.ஜி.ஆரின் வெற்றி அடங்கியிருந்தது.
தம்மால் முடியாதவற்றை, கதாநாயகன் செய்யும் போது தாங்களே அந்த இடத்தில் இருப்பதாக நினைத்து கைத்தட்டி விசில் அடிக்கும் மனப்பான்மையை ரசிகர்களிடம் ஏற்படுத்துவதில் தான் திரைப்படத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது. அதை மிக அழகாக, நைச்சியமாக தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்த எம்.என்.நம்பியாரை நிஜ வாழ்க்கை வில்லனாக நினைக்கும் அளவிற்கு மக்கள் மனநிலை இருந்தது.
திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரை தாக்க வரும் நம்பியாரை பார்த்த உடன், "தலைவரே, எழுந்திருங்க. கத்தியால குத்த வர்றான்", என்று குரல் எழுப்புமளவிற்கு அவரது ரசிகர்கள் அப்பாவிகளாக இருந்தது அவருக்கு இன்னும் வசதியாகப் போனது.
ரசிகர்களை தொண்டர்களாகவும், மக்களை ரசிகர்களாகவும் மாற்றும் ரசவாதத்துடன் தான் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் திரைக்கதையும், வசனமும், பாடலும் அமைக்கப்பட்டன.
அப்படி தான் நாடோடி மன்னன் திரைப்பட வசனங்கள். எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் மனதில் இடம்பிடித்தார் என்பதற்கான உதாரணம்.
அரசன் இறந்து விட்ட நேரத்தில் மார்த்தாண்டன் அரசவையால் அரசனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஆனால் இன்னொரு கும்பல் பின்னிருந்து ஆள்கிறது. உணவு இல்லாமல் சமூகத்தில் பதற்றம். மக்கள் வீராங்கன் தலைமையில் போராடுகிறார்கள். மார்த்தாண்டன், வீராங்கன் இரு பாத்திரங்களையும் எம்.ஜி.ஆரே ஏற்று நடித்தார்.
மார்த்தாண்டன் இடத்தில், வீராங்கன் எம்.ஜி.ஆர் மன்னராகப் பதவி ஏற்க வேண்டிய சூழல். அப்போது சில நிபந்தனைகளை விதிக்கிறார் வீராங்கன். அப்போது நடக்கும் உரையாடல்.
"நான் சாதாரணக்குடியில் பிறந்தவன். பலமில்லாத மாடு, உழமுடியாத கலப்பை, அதிகாரமில்லாதப் பதவி இவைகளை நான் விரும்புவதே இல்லை. உங்கள் கட்டாயத்திற்காக மன்னனாக இருக்க சம்மதிக்கிறேன். ஆனால் சட்டமியற்றும் அதிகாரம் என் கையில் தான் இருக்க வேண்டும்", வீராங்கன்.
"மக்களின் நிலை அறியா புதியவனை பதவியில் அமர்த்தி, அதிகாரத்தை அவன் கையில் கொடுப்பது ஆபத்து வீராங்கா".
"மக்களின் நிலை அறியாதவன் நானா, நீங்களா ?. அமைச்சரே நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன். பெரிய இடத்தின் உள்ளே புகுந்து தான் என் உலகம் மாறியிருக்கிறது. என் உள்ளம் மாறிவிடவில்லை".
வீராங்கனாக எம்.ஜி.ஆரின் இந்த வசனங்கள் ஒரு எதிர்காலத் தலைவரின் பிரகடனமாகவே மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
மன்னனாகப் பொறுப்பேற்கும் வீராங்கன் அரசவையில் வெளியிடும் அறிவிப்புகள் அடுத்து.
"மற்றவர்கள் பின்பற்றுவதற்காக நானே முதலில் செய்து காட்ட விரும்புகிறேன்.
வேலை செய்ய முடியாத வயோதிகர்களுக்காகவும், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைப்பதற்காகவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன்", வீராங்கனாக எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பு உண்மையாக எம்.ஜி.ஆர் அறிவித்ததாகவே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இதுவே பிற்காலத்தில் அவர் வள்ளலாக பார்க்கப்பட அடிப்படையாக அமைந்திருக்கும்.
"பெரியோர்களே, பொதுமக்களே நம் நாட்டின் நலன் கருதி சில புதிய சட்டங்களை அவசரமாக நிறைவேற்றி, உடனடியாக அமலுக்கு கொண்டு வர விரும்புகிறேன்", மன்னன் அறிவிக்க, அறிவிப்பு துவங்குகிறது.
"உழுபவனுக்கே நிலம் உரிமையாக்கப் படுகிறது. உரிமைக்காரருக்கு நஷ்ட ஈடு, நிலத்தின் வருமானத்தில் கால் பங்கு.
விளைச்சல் காலத்தில் நிலவரி விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு, இரண்டாண்டுகள் தொடர்ந்து விளையாமல் போனால் குடும்பத்தின் தேவைக்கேற்ப மானியம் வழங்கப்படும்.
பெரிய மாளிகைகளில், சிறு எண்ணிக்கை கொண்ட குடும்பங்கள் வாழ்வது கூடாது. ஒரு பகுதி அவர்களுக்கு போக, மீதிப் பகுதி குடிசை வாழ்வோரை கொண்டு வைக்கப்படும். "
"குடிசைகளை என்ன செய்வது?" , அமைச்சர் குறுக்கிட
"தேவை இல்லாத காரணத்தால் குடிசைகள் கொளுத்தப்படும்", மன்னர் பதில் அளிக்கிறார்.
அறிவிப்பு தொடர்கிறது,
" தொழில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பத்து சதவீதமும்மற்றவை தொழிலாளர்களுக்கும் பிரித்துத் தரப் பட வேண்டும்."
"அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்களா?", கேள்வி குறுக்கிடுகிறது.
" தவறு. பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள் ", அரசனாக வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர் புன்னகையோடு அறிவிக்கிறார்.
திரையரங்குகளில் இருந்த ரசிகர்கள், எம்.ஜி.ஆர் தம்மிடம் நேரடியாக இதை அறிவித்ததாக உணர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பு , " அய்ந்து வயதான உடனே குழந்தைகளை கட்டாயமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோர்களுக்கு தண்டனை உண்டு".
"வசதி இல்லாத பெற்றோர்கள் என்ன செய்வது?", நக்கல் கேள்வி.
" அவசரப்படாதீர்கள்", கையமர்த்துகிறார் எம்.ஜி.ஆர்.
"பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரை, மாணவர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது", அறிவிப்பாளர்.
" பொக்கிஷம் காலி", வில்லன் நம்பியார் பொங்குகிறார்.
"மக்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தை மக்களுக்காக செலவிடுகிறோம்", அரசர் எம்.ஜி.ஆர் பதிலளிக்கிறார்.
கலப்பு மணம் செய்வோருக்கு அரசாங்க செலவில் திருமணம் செய்து வைக்கப்படும். கலப்பு மணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்க உத்தியோகத்தில் முதல் சலுகை அளிக்கப்படும். "
திராவிட இயக்கத்தின் சாதி ஒழிப்பிற்கான புரட்சிகர நடவடிக்கை இங்கு வீராங்கன் அறிவிப்பாக வெளிப்பட்டது.
"பிச்சை எடுப்பது குற்றம், பிச்சை இடுவதும் குற்றம்.
விவசாயிகள் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ஒரு வீடு, அய்ந்து காணி நிலம், இரண்டு காளைகள், நாலு மூட்டை விதை நெல், ஒரு கலப்பை தரப்படும்."
"விவசாயிகளையே பார்க்கிறார் மன்னர். நகரத்தைப் பற்றி கவலையேப் படவில்லையே", ஒரு கலகக் குரல்.
முழுவதையும் கேளுங்கள் ", அரசர் எம்.ஜி.ஆர்.
" நகரத்தில் வாழ்பவருக்கு திறமைக்கேற்ற தொழில் கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும். ", அறிவிப்பை கேட்ட மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். " இதுவல்லவா சட்டம் ", என்று குரல் எழுப்புகிறார்கள்.
" இந்த சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம்", கொதிக்கிறார் வில்லன் நம்பியார். அவருக்கு துணையாக அரசவையோரும் எதிர்க்கின்றனர்.
"தேவை இல்லையா. இந்த சட்டங்கள் உங்களுக்கானது மட்டுமல்ல.", என்று அரசவையை பார்த்து கூறிய மன்னர் எம்.ஜி.ஆர் மக்களை பார்த்து," உங்கள் அபிப்ராயம் என்ன?" என்று கேட்கிறார்.
"எங்களுக்கு இந்த சட்டங்கள் தான் தேவை", மக்கள் குரல் உயர்ந்து எழுகிறது. ஆரவாரம் உச்சம் அடைகிறது.
"பார்த்தீர்களா, உட்காருங்கள்", என்று அரச சபையினரை பார்த்து இந்தப் படத்தின் அவரது தனி செய்கையான, தன் மூக்கை விரலால் சுண்டி விடுவார்.
பிறகு மக்களைப் பார்த்து, " கூடிய விரைவில் உங்கள் ஆட்சி நிறுவப்படும்", என் புன்னகைப்பார்.
அது தமிழக மக்களை பார்த்துக் கூறிய வார்த்தைகள்.
பாமர மக்களுக்கு இந்தப் புரட்சிகர திட்டங்கள் பிடித்துப் போனது.
"எம்.ஜி.ராம்சந்தர் ஆக அறிமுகமானவர், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகி, எம்.ஜி.ஆர் எனப்பட்டு "புரட்சி நடிகர்" ஆகிப் போனார்.
ஒரு ஆட்சிக்கான செயல்திட்டங்கள் மொத்தமும், வீராங்கன் எம்.ஜி.ஆர் திட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
விமர்சகர்கள் தி.மு.கவின் திட்டங்களை திரைப்படங்களில் புகுத்துகிறார் எம்.ஜி.ஆர் என்று சொன்னார்கள்.
"நாடோடி மன்னன் " திரைப்பட வெற்றி விழாவில் பேசிய எம்.ஜி.ஆர், "தி.மு.க நாட்டு மக்களுக்கு பணியாற்றுகிறது
ஆளுகின்ற அரசானது இப்படித்தான் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும்
என்பதை சொல்லவே நாடோடி மன்னன் தயாரிக்கப்பட்டது", என்று உரையாற்றினார்.
நாடோடி மன்னன் திரைப்படத்தை, பெரும் முதலீட்டில் தயாரித்த பிறகு எம்.ஜி.ஆர் சொன்னதாக ஒரு செய்தி உண்டு. "படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி". படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதும் , எந்த கொள்கைக்கா திரைப்படத்தில் நடித்தாரோ, அதன்படி வாழ்ந்து காட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று எம்.ஜி.ஆர், மன்னரானதும் வரலாறு..........
-
''எம்.ஜி.ஆரைக் கண்டு பிரமித்த சின்னப்பா தேவர்": நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். அத்தியாயம்-20
1945 ல் வெளியான 'சாலிவாஹனன்' எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் பெரிய அளவு அந்தஸ்து அளித்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் திரையுலகில் வெற்றிபெறுவதற்காக எம்.ஜி.ஆர் சில முன்னெடுப்புகளை எடுத்துக்கொள்ளக் காரணமான படம் எனலாம். பின்னாளில் தன் திரைப்பட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறப்போகும் தயாரி்ப்பாளர் ஒருவரை சாதாரண நடிகராக இந்தப் படத்தயாரிப்பின்போதுதான் எம்.ஜி.ஆர் சந்தித்தார். அவர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவர்!
எம்.ஜி.ஆர் தன் நெருங்கிய நண்பர்களில் சிலரைத்தான் 'முதலாளி' என அழைப்பார். அந்த அரிதான மனிதர்களில் சின்னப்பா தேவர் குறிப்பிடத்தக்கவர். தேவர், எம்.ஜி.ஆரை 'ஆண்டவனே' என்று அழைப்பார். அத்தகைய நெருக்கமான நட்பு கொண்டிருந்தனர் ஒருவருக்கொருவர்.
கோவை ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28-ம் தேதி பிறந்தவர், மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்கிற எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் அவர்.
வறுமையினால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல்,கோவை "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளியாக சேர்ந்து, தொடர்ந்து பால் முகவர், அரிசி வியாபாரி என அடுத்தடுத்து பல தொழில்களில் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் நட்டமடைந்து பிறகு சோடா கம்பெனி ஒன்றையும் கொஞ்ச காலம் நடத்தியவர். ஆனால் சோர்ந்துபோகாமல் தன் உழைப்பின்மீது நம்பிக்கையோடு தொடர்ந்து உழைத்தவர் சின்னப்பா தேவர்.
இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடையவரான சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். ஓய்வு நேரங்களில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்றதனால் கட்டு மஸ்தான தேகத்துடன் கம்பீரமாக இருப்பார். இதுவே அவரது வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்றிருந்த புராண இதிகாச படங்களே, திரைப்படங்களாக மீண்டும் தயாரிக்கப்பட்டன. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. புராண வேடங்களுக்கு ஏற்ற உடற்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். புராண படங்களை எடுப்பதில் அப்போது புகழ்பெற்றிருந்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் அப்போது வரிசையாக அம்மாதிரி திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. பின்னாளில் பிரபலமாக விளங்கிய கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாதச் சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மற்ற சில நிறுவனங்களிலும் அவர் தொடர்ந்து நடித்துவந்தார்.
அப்படி கிடைத்த ஒரு வாய்ப்புதான் 'சாலிவாஹனனி'ல் பட்டி என்கிற வேடம். முதன்முறையாக எம்.ஜி.ஆருடன் இணைந்த அவர் அந்தப் படத்தில், தான் எம்.ஜி.ஆரை சந்தித்த அனுபவத்தை அந்நாளைய பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்...
“கோவையில் 'சாலிவாஹனன்' படம் தயாராக ஆரம்பித்திருந்த சமயம், விக்ரமாதித்தனுக்கு துணையான பட்டி வேஷத்தை எனக்கு அதில் கொடுத்திருந்தார்கள். ஒருநாள் மேக்கப் அறையிலிருந்து முருகா என்று சொல்லியபடி வேஷம் அணிந்து வெளியே வந்தபோது, எதிரே கம்பீரத்துடன் ராஜ உடையில் ஒருவர் நின்றிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே வசீகரப்படுத்தும் உருவம். தங்கத்தை ஒத்த மினுமினுப்பான தேகம்.உள்ளத்தின் தெளிந்த நிலையையும், களங்கமற்றத் தன்மையையும் காட்டும் முகம். கருணை கொண்ட ஒளி வீசும் கண்கள். நான் ஒரு வினாடி நின்றுவிட்டேன். என்னைப் பார்த்த அவரும் அப்படியே நின்றுவி்ட்டார். என் கண்கள் முதலில் பேசின. உதடுகள்மெல்ல அசைந்தன. 'நீங்கதான் பட்டியாக இதில் நடிக்கிறீர்களா...' குரலில் வெண்கலத்தின் எதிரொலி.
'ஆமாம்.'
மேலே நான் ஏதோ கேட்க விரும்புகிறேன் என்பதை அவர் எப்படியோ புரிந்துகொண்டுவிட்டார்.
'நான்தான் இதிலே விக்கிரமாதித்தன். என் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன். உங்கள் பெயரை நான் தெரிந்துகொள்ளலாமா?' என்றார் அடக்கத்துடன்.
ஆச்சர்யம் விலகாமல் என் பெயர் ஊர் வகுப்பு இவற்றை சொல்ல ஆரம்பித்தேன்.
அப்போது நான் நல்ல திடகாத்திரமாக இருப்பேன். அகன்ற மார்பு, குன்றுகளை நிகர்த்த தோள்கள் என்றெல்லாம் சொல்வார்களே அதேபோல எனது தேகமும் இருக்கும். இதற்குக் காரணம் நான் செய்துவந்த தேகப்பயிற்சியும் கலந்துகொண்ட விளையாட்டுக்களுமே.
எனது தேகத்தை பார்த்த எம்.ஜி.ஆர், 'உங்க பாடியை நன்றாக வைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறீர்களா' என்று வினவினார். 'ஆம்' என்றேன். இப்படி எங்களது அறிமுகம் எங்களுக்குள்ளேயே நடந்தது. வேறு யாரும் எங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை வணக்கம் என்ற வார்த்தையுடன் அன்று நாங்கள் பிரிந்தோம். ஆனால் அதே வார்த்தையுடன் மறுநாள் மீண்டும் சந்தித்தோம்.
தொடர்ந்து எங்களைப்பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது. ஆலவிருட்சத்தின் வேர்களைப் போன்று ஆழமாகப் பதிந்து அதன் விழுதுகளைப்போல படர ஆரம்பித்தது.
கோவை ராமநாதபுரத்தில் வீரமாருதி தேகப்பயிற்சி சாலை என ஒன்றுள்ளது. அங்கு அடிக்கடி நான் போய் தேகப்பயற்சி செய்வேன். எம்.ஜி.ஆருடன் அறிமுகமானபின் அங்கு நாங்கள் சேர்ந்தே செல்வோம். எம்.ஜி.ஆர் அங்கு அடிக்கடி வந்து பலவிதமான தேகப்பயிற்சிகளை செய்வார். பளுதூக்குதல், பார் வேலைகள் செய்தல், மல்யுத்தம், குத்துச்சண்டை கத்திச்சண்டை சிலம்பம், கட்டாரி இப்படியாக பலப் பயிற்சிகளில் ஈடுபடுவார்.
அவர் மட்டுமே பயிற்சிகளைச் செய்துவிட்டு போக மாட்டார். அங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் இவற்றை பொறுமையுடன் சொல்லிக்கொடுப்பார். அவர் கற்றுக்கொடுப்பாரே தவிர, அவருக்கு யாரும் எதையும் கற்றுக்கொடுத்து நான் பார்த்ததில்லை. இவற்றையெல்லாம் நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கும் இம்மாதிரியான ஸ்டண்ட் வேலைகளில் விருப்பம் அதிகமுண்டு என்பதை தெரிந்துகொண்ட அவர், என்னை அழைத்து. 'சினிமாவில் இப்படித்தான் கத்திச்சண்டை இருக்கவேண்டும். கம்புச் சண்டைகளும் சிலம்புச் சண்டைகளும் இப்படித்தான் அமைக்கவேண்டும்' என்று சொல்வார்.
குறிப்பாக சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளை எப்படி புகுத்தவேண்டும் எந்த இடத்தில் புகுத்தவேண்டும், எப்படி அமைக்கவேண்டும் என்பதையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்தான்.
கோவையில் என் வீடும் அவர் தங்கியிருந்த இடமும் சில அடி தூரங்களில்தான் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நாங்கள் உலாவுவோம். அப்படி பல சமயங்களில் மருதமலை முருகன் கோவிலுக்குப் போவோம்.
ஜுபிடரில் ஸ்ரீமுருகன் படத்தில் நடித்து முடித்தபின் அவருக்கு 'ராஜகுமாரி' வாய்ப்பு வந்தது. ஆனால் அத்தனை எளிதாக அது கிடைக்கவில்லை. போராடித்தான் அப்படியொரு வாய்ப்பை பெற்றார். அதுவும் நிச்சயமானதா என்று நிலையில்லை.
அந்த படத்தில் கதாநாயகனுடன் சண்டையிடும் ஒரு முரடன்வேடம் உண்டு. 'அதில் நீங்கள்தான் நடிக்கவேண்டும்' என்றார். எனக்கு மகிழ்ச்சிதான். மறுநாள் தயாரிப்பாளர்களை சந்தித்து என்னை அந்த வேடத்துக்குப் போடும்படி சிபாரிசு செய்தார்.
'உங்களை கதாநாயகனாகப்போட்டு படம் எடுப்பது இதுதான் முதல்தடவை. அப்படியிருக்க பிரபலமில்லாத ஒருவரைப்போய் நீங்கள் இப்படி சிபாரிசு செய்யலாமா?... பெரிய ஆளாகப்போட்டு எடுத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும்' என்று அவர்கள் எதிர்வாதம் செய்தார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆர் விடவில்லை.
'நம்மிடையே திறமையுள்ளவர்கள் இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? படம் எடுத்துப்பார்ப்போம். திருப்தியாக இருந்தால் வைத்துக்கொள்வோம். எந்தவித வாய்ப்பும் தராமல் ஒருவரின் திறமையை எடைபோட்டுவிடக்கூடாது தேவரையே போடுங்கள்' என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். தனது நிலையே ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் எதிராளிக்கு சிபாரிசு செய்த நல்ல உள்ளம் கொண்ட ஒரு நடிகரை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.
இறுதியாக அந்த வேடத்தை எனக்கே தந்தார்கள்.
'அண்ணே இந்த ஃபைட்டிங் சீன்ல பிச்சு உதறுறீங்க.. பிரமாதமாக செய்யுங்க...' என்று படம் முழுக்க உற்சாகப்படுத்தினார்.
முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம். அதேசமயம் எனக்கும் அவருக்கும் சேர்ந்து கிடைத்திருக்கும் முதல் பெரிய சந்தர்ப்பம். இரண்டும் எங்கள் உற்சாகத்தை வளர்த்தன.”
இப்படி தான் புகழடையாத காலத்திலேயே மனிதாபிமானம் மிக்கவராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததை விவரித்திருக்கிறார் தேவர்.
எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால நண்பரான தேவர் பின்னாளில் படத்தயாரிப்பாளராக மாறி படங்களைத் தயாரித்தபோது எம்.ஜி.ஆர் மீதான ஒரு அவப்பெயரை நீக்கி எம்.ஜி.ஆரின் வாழ்வில் முக்கியமான ஒரு நபராகவும் மாறினார்.
திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இருந்த அவப்பெயர் என்ன...அதை தேவர் எப்படி நீக்கினார்?...
தொடரும்.... .........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு மிகவும் ராசியான "மே " மாதம் .....
மே மாதத்தில் வெளிவந்து வெற்றி கண்ட படங்கள் ..........
பெரிய இடத்துப் பெண் - 1963
சந்திரோதயம் - 1966
அடிமைப்பெண் - 1969
என் அண்ணன் - 1970
ரிக்க்ஷாக்காரன்- 1971
உலகம் சுற்றும் வாலிபன் -1973
நினைத்ததை முடிப்பவன் - 1975
உழைக்கும் கரங்கள் - 1976
இன்றுபோல் என்றும் வாழ்க -1977
உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி இயக்கம் கண்டு கட்சி துவங்கிய 6 மாத நிறைவடைந்து, 7ம் மாதம் தொடங்கிய
சமயத்தில் நடைபெற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் புரட்சித்தலைவரின் அதிமுக மாபெரும் வெற்றி அடைந்த வரலாற்று சிறப்பு மிக்க மாதம் மே -1973............
-
"ஒளி விளக்கு" ... காவியம் மன்னர் மன்னவரின்
"100" பெருமிதம் ததும்பும் நிறைவான படைப்பு... இந்த காவியம் அடைந்த அற்புதமான வெற்றியை நமது ரசிகர்களே சில சமயங்களில் 1968ம் ஆண்டில் 2ம் ரேங் (இரண்டாமிடம்) வசூலில் என கருத்து தெரிவிக்கின்றனர்... 1 ரேங் எது?! அதுவும் நமது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் மற்றுமொரு அற்புதமான படைப்பு "குடியிருந்த கோயில்" ...மேற்கண்ட 2 படங்களும் ஹிந்தி பட தழுவல் தாம். ஆனாலும் நம் சிற்பி அவர்கள் தம் எண்ணத்திற்கேற்ப பல்வேறு விடயங்களை தான் நமகேற்ப மாற்றி அளிக்கும் அதி உன்னத கலை மேதையாயிற்றே... அவ்வாறு உளி கொண்டு செதுக்கப்பட்ட காவியங்கள் தான் சோடை போயிருமா?!... இரண்டும் இரு வேறு முறைகளில் சிறப்பான அமைப்பாக வெளியானவை... அதனால் தான் இரண்டு காவியங்களும் முதலிடம் என கருத தக்கவை தரத்திலும், வசூலிலும்...
-
உதாரணமாக திருச்சி & தஞ்சை (tt) ஏரியாவில் " ஒளி விளக்கு" பல இடங்களில் 50 நாட்கள் தாண்டி ஓடி வசூலில் தனி பெரும் சாதனை செய்திருக்கிறார் மக்கள் திலகம்... திருச்சி - ராஜா, கும்பகோணம்- ஸ்ரீ விஜயலட்சுமி திரையரங்குகளில் மட்டும் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் வந்தது. ஆனால் தஞ்சை- ஸ்ரீ கிருஷ்ணா, மன்னார்குடி - ஸ்ரீ செண்பகா அரங்குகளில் 99 நாட்களில் நல்ல வசூலுடன் ஓடி கொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்டது. காரணம் 100 நாட்கள் ஓடியதற்கு போனஸ் உட்பட பல பரிசுகள் அளிக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க இது போல திரையரங்க உரிமையாளர்கள், பட விநியோகஸ்தர்கள் செய்து பலி கொடுக்க நம் தலைவர் படங்கள் மாட்டிக்கொண்டன... பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி ஊர்களில் வெற்றிகரமாக 11 வாரங்கள் அட்டகாசமாக ஓடியது ஒளி விளக்கு. அதேபோல் " குடியிருந்த கோயில்" பல்வேறு இடங்களில் 10 - 13 வாரங்கள் சூப்பர் வசூலுடன் 1968ம் வருடத்தை கலக்கியது எனில் மிகையாகாது...
-
#எம்ஜிஆர் #மதித்த #தாய்குலம்
பெண்களை மிகவும் மதித்தவர் எம்.ஜி.ஆர்.அவர் அனைத்துப் பெண்களையும் தாயாக பாவித்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார்.இடைவேளையில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கண்ணீர் விட்டார்.
கணவரை இழந்த அந்த பெண் உணவுக்கே கஷ்டப்படுவதாக கூறினார்.உடனடியாக எம்.ஜி.ஆர் அவரது உதவியாளரை அழைத்து அந்த பெண்ணை அவரது அலுவலகத்தில் உட்கார செய்யுமாறு உத்தரவிட்டார்.அதன்படி உதவியாளரும் செய்தார்.
சிறிது நேரம் சென்றபின் எம்.ஜி.ஆர். வரும் நேரம்.உதவியாளர் உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். தனது தாயார் சத்தியாவின் முழு உருவப் படத்தை வைத்து, அதன் முன்பு அவருடைய ஆசனத்தை வைத்திருப்பார்.தினமும் அம்மாவை வணங்கிவிட்டு அந்த இருக்கையில் உட்காருவது வழக்கம்.அவரைத்தவிர வேறு யாரும் அதில் உட்காருவது இல்லை.
ஆனால் அறையில் உட்கார வைக்கப்பட்ட பெண், அதில் உட்கார்ந்து வியர்வை வழிய அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் நின்றார்.
அதே நேரம் எம்.ஜி.ஆரும் உள்ளே வந்தார்.அவர் அந்த பெண் அசந்து தூங்குவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே, மின் விசிறியைப் போட்டு விட்டார்.பின்னர் அங்கு விளையாடிக்கொண்டியிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருந்தார்.
அந்த பெண் கண் விழித்தபோது, அஞ்சிய பெண்ணைப் பார்த்து, "உன் வீட்டுக்கு அனைத்து உதவிகளும் வரும். நீ செல் அம்மா" என்று எம்.ஜி.ஆர் கூறி வழியனுப்பி வைத்தார்.
இதுதான் எம்.ஜி.ஆரின் பண்பு.எல்லா பெண்களையும் தாயாக நேசித்தவர். இந்த சம்பவம் இலக்கியத்தில், முரசுக்கட்டிலில் அமர்ந்த பிசிராந்தையாருக்கு சேர அரசன் வெண்சாமரம் வீசிய நிகழ்ச்சியை ஒத்துள்ளது அல்லவா!!
எம்.ஜி.ஆர் வெள்ளை மனம் கொண்டவர்.எவராலும் வெல்ல முடியாத 'வெல்ல' மனம் கொண்டவர்.திரைப்படத்தில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போனார்கள்.அதைப் போலவே நிஜத்திலும் அவரை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.அவர் வெற்றி பெற்ற போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமாக தமக்கு ஆதரவளித்த மக்களையே கூறினார். எனவேதான் அவர் மக்களாட்சியைக் கொடுத்தார்..........
-
தேவருடன் எம்.ஜி.ஆர் செய்துக்கொண்ட ஒப்பந்தம்; நூற்றாண்டு நாயகன் எம்*.ஜி.ஆர். அத்தியாயம் -21.
'சாலிவாஹனன்' படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட சாண்டோ சின்னப்பா தேவர் - எம்.ஜி.ஆர் நட்பு இறுகி இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பிரபலமாகாத காலத்தில் பழக்கமான இருவரும் புகழடைந்தபின்னும் அதைத் தொடர்ந்தனர். நடிகரிலிருந்து தயாரிப்பாளராக உயர்ந்த சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரைக் கொண்டே தன் முதற்படத்தைத் துவக்கினார். தேவர் படங்களில் தொடர்ந்து நடித்ததன்மூலம் திரையுலகில் எம்.ஜி.ஆர் தன்மீதிருந்த அவப்பெயரை நீக்கிக்கொண்டார்.
ஆம், 'எம்.ஜி.ஆர் படங்கள் குறித்த தேதியில் வெளிவராது. அந்தளவுக்கு கால்ஷீட் சொதப்புவார். தன் விருப்பம்போல்தான் படத்தைத் திரையிட அனுமதிப்பார். தயாரிப்பாளரை படுத்தி எடுத்துவிடுவார். மொத்தத்தில் எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுப்பது லாபம்தான் என்றாலும் அது யானையைக் கட்டித் தீனிபோடுவது போன்ற பெரும் பணி' - இவைதாம் அந்தப் புகார்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்த இந்தக் களங்கத்தைத் துடைத்தவர் சின்னப்பா தேவர்தான். 50 களின் மத்தியில் தேவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்திருந்தது. அதேசமயம் கையில் கொஞ்சம் காசும் இருந்தது. தன் தம்பி திருமுகமும் சினிமாவில் எடிட்டிங் மற்றும் இயக்கத்தில் அனுபவம் பெற்றிருந்ததால் சினிமாப்படங்கள் தயாரிப்பதென்ற முடிவுக்கு வந்தார். முடிவெடுத்ததும் நேரே போய் அவர் நின்றது எம்.ஜி.ஆரின் லாயிட்ஸ் சாலை இல்லத்தில்தான்.
வீட்டின் வாசலில் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், “முருகா நான் படம் தயாரிக்கிறேன். நீங்கதான் ஹீரோ. நல்லபடியா நடிச்சுக்கொடுங்க... இந்தாங்க அட்வான்ஸ்” என வெள்ளந்தியாக சொன்ன தேவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் எம்.ஜி.ஆர். காரணம் எம்.ஜி.ஆருக்கு அப்போது கொஞ்சம் மார்க்கெட் குறைந்திருந்த நேரம். தன் படங்கள் சரிவர போகாத நேரத்திலும் தன் மீது நம்பிக்கை வைத்து தேவர் தன்னை ஒப்பந்தம் செய்யவந்ததே எம்.ஜி.ஆரின் ஆச்சர்யத்துக்கு காரணம்.
அதேசமயம் மார்க்கெட் குறைந்திருந்த அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்போது தேவை ஒரு நல்ல கதையும் அதை எடுக்க சினிமாவில் அனுபவமும் நிர்வாகத்திறமையும் கொண்ட ஒரு பெரிய நிறுவனம். இதனாலேயே பல சிறுநிறுவனங்கள், அனுபவமில்லாதவர்களிள் வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் அப்போது தவிர்த்துவந்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் திரையுலகில் புகழ்வெளிச்சம் கிடைக்க ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் முன்பணத்துடன் அவரைத்தேடி வந்தார் தேவர்.
படம் இல்லாத நேரத்தில் வரும் பட வாய்ப்பை ஒப்புக்கொள்வது புத்திசாலித்தனம் என்றாலும், 'சினிமா தயாரிப்பில் தேவருக்கு இது முதல்முயற்சி.. சினிமா தயாரிப்புக்கு முற்றிலும் புதியவர். ஏற்கெனவே, தான் ஆரம்பித்த சில தொழில்களில் நட்டங்களை சந்தித்தவர். அனுபவமிக்க புகழ்பெற்ற நிறுவனங்களே வெற்றியைத் தக்கவைக்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் தேவர் படம் தனக்கு எந்தளவுக்கு வெற்றியைத் தரும்' என்ற சிந்தனை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. ஆனாலும் யோசித்து நேரம் கடத்தவில்லை. தேவர் மீது முழு நம்பிக்கையோடு மறுபேச்சின்றி வீட்டின் வாசலிலேயே வைத்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரின் இந்த உடனடி சம்மதத்திற்குப் பின்னணி ஒன்றுண்டு.
அது என்ன பின்னணி?!
எம்.ஜி.ஆரும் தேவரும் தொடர்ந்து படங்களில் இணைந்து நடித்துக்கொண்டிருந்த நேரம் அது. 'மர்மயோகி' படத்தில் தேவரும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்துக்கொண்டிருந்த போது இருவருமே சினிமாவில் வெற்றிக்கோட்டைத் தொடப் போராடிக்கொண்டிருந்தார்கள்.
கோவையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் இருவருக்கும் ஓய்வு கிடைத்தால் மருதமலைக்குச் செல்வார்கள். ஒருமுறை அப்படிச் சென்றபோது, “முருகா, திறமையும் உழைப்பையும் போட்டு சினிமாவுல நாம் போராடுகிறோம். ஒருநாள் நாம இதில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். அப்படி நம்மில் யார் ஒருவர் நல்ல நிலைக்கு வந்தாலும் மற்றொருவரை மறக்காமல் கைதூக்கிவிடவேண்டும்”- என்றார் தேவர். அதற்கு எம்.ஜி.ஆர், “கண்டிப்பாண்ணே” என உறுதி கொடுத்தார். தேவர் தன்னை ஒப்பந்தம் செய்ய வந்தபோது இந்த 'பழைய ஒப்பந்தம் எம்.ஜி.ஆரின் நினைவில் ஒருகணம் வந்துபோயிருக்கவேண்டும். அதனால்தான் படத்தின் வெற்றி தோல்வியைப்பற்றி சிந்திக்காமல் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இரண்டு நண்பர்களின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. 'தாய்க்குப்பின் தாரம்' வெளியானபின் எம்.ஜி.ஆரின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்களின் கார்கள் லாயிட்ஸ் சாலையில் அணிவகுக்க ஆரம்பித்தன. தேவரும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். பெரிய பெரிய நிறுவனங்களே மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு படத்தயாரிப்பில் தேவர் ஒரு விஷயத்தைச் செயல்படுத்திக் காட்டினார். ஆம், தன் படங்களின் பூஜையன்றே அதன் வெளியீட்டுத்தேதியையும் அறிவிப்பார்.
ஒருநாள் முன்னதாகவோ தள்ளியோ இன்றி, குறித்தநேரத்தில் அது வெளியாகும். பெரிய நிறுவனங்களே பின்பற்றமுடியாத இந்த விஷயத்தை தேவர் எளிதாக சாத்தியப்படுத்தினார்.
தாய்க்குப்பின் தாரம் படத்தில் துவங்கி 1973 ல் வெளியான நல்லநேரம் வரை மொத்தம் 16 படங்கள் தேவர் ஃபிலிம்சுக்கு நடித்துக்கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆச்சர்யம் என்னவென்றால், 'படத்தைத் தாமதமாக முடித்துக்கொடுப்பார்’ என்றும் ’சரியான ஒத்துழைப்பு தரமாட்டார்' என்றும் கூறப்பட்ட எம்.ஜி.ஆரின் இந்தப் படங்கள் அனைத்தும் குறித்த தேதியில் வெளியாயின என்பதுதான். இதில் 'தேர்த்திருவிழா' என்ற படம் 16 நாட்களில் தயாரிக்கப்பட்டு வெளியானது என்பது திரையுலகம் இன்றும் நம்பாத விஷயம். இப்படி எம்.ஜி.ஆரை வைத்து, தான் தயாரித்த படங்களை குறித்த தேதியில் வெளியிட்டு அவருக்கு இருந்த அவப்பெயரை நீக்கினார் தேவர். எம்.ஜி.ஆர் படங்கள் தாமதமாவதற்கு எம்.ஜி.ஆர் மட்டுமே காரணமில்லை என்று திரையுலகம் அப்போதுதான் உணர்ந்தது.
தன் திரையுலக வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளரின் படங்களில் எம்.ஜி.ஆர் அதிகம் நடித்திருக்கிறார் என்றால் அவர், சின்னப்பா தேவர் ஒருவர்தான். எம்.ஜி.ஆர், ஜானகியை மணந்தபோது சாட்சிக் கையெழுத்திட்டதும் தேவர்தான் என்பது பலரும் அறியாத செய்தி.
தொடரும்.........
-
எம்.ஜி.ஆர். நூல் வரிசை : 002
எம்.ஜி.ஆர் கதை,
(எம்.ஜி.ஆர். வாழ்ந்த இடங்களுக்கு சென்று சேகரித்தது)
நூல் ஆசிரியர் இதயக்கனி எஸ் விஜயன்.,
குறிப்பு : எம்.ஜி.ஆர். அவர்களின் கேரளா தொடர்ப்புகளிருந்து சுவாரசியமாக ஆரம்பிக்கும் அருமையான நூல்.
நூல் விலை : Rs.200.00 (நான் வாங்கிய காலத்தின் விலை இது. தற்போதைய புதிய பதிப்புகளில் விலை மாறுபடலாம்)
பதிப்பகம் : இதயக்கனி பிரசுரம், 12/32, வீரபாண்டி நகர் 2 வது குறுக்கு தெரு, சூளைமேடு, சென்னை 94.
தொலைபேசி 9344554777.
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் எம்.ஜி.ஆர். நூல்களை தேடித்தேடி சேகரித்து படிப்பவன். அவரை பற்றிய நூல்கள் 500க்கும் மேல் வெளியாகியுள்ள நிலையில், என்னிடம் 120 நூல்கள் மட்டுமே உள்ளது. என்னிடம் இருக்கும் நூல்களின் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விபரங்களையும் முடிந்தளவு தினம் ஒன்றாக வெளியிட முயற்சிக்கின்றேன். என்னை போன்ற எம்.ஜி.ஆர். நூல் சேகரிப்பாளர்களுக்கு இந்த நூல்களை வாங்க விரும்பினால் அவர்களுக்கு இந்த முயற்ச்சி பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கிலே. எம்.ஜி.ஆர். நூல்களை பற்றிய எனது இரண்டாவது பதிவாகும் இது.
நீங்களும் உங்கள் சேகரிப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்களின் முன்புறத் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விவரங்களையும் Commend பகுதியில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தயவு செய்து Inboxல் இட வேண்டாம். எல்லோரும் பார்க்கும் வகையில் Commend பகுதியிலியே வெளியிடுங்கள். இது நாம் எல்லோரும் நமக்குள் பரஸ்பரம் உதவி செய்வது போன்ற ஒரு நல்ல ஏற்பாடுதான். இன்றிலிருந்து நூல் வரிசை 120 வரும்வரை (அதாவது என்னிடம் இருக்கும் நூல் வரை) வேறு எந்த பதிவுகளும் இந்த முகநூலில் வராது.
மேலும், நீங்கள் Commend பகுதியில் வெளியிடும் உங்கள் வசம் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்கள் எனது சேகரிப்பில் இல்லை என்றால்.. அதையும் இதே போலவே வெளியிடுகிறேன் விபரங்கள் தந்த உங்கள் பெயருடனேயே. அதற்க்கு முன்புறத் அட்டைப்படம், நூல் பற்றிய விவரங்கள் அச்சிடபட்ட பகுதிகள் போட்டோ எடுத்து அனுப்புங்கள். ஆசிரியர் பெயர், விலை, பதிப்பக விலாசம், தொலைபேசி எண் எல்லாம் உள்அடங்கியதாக இருந்தால் மிகவும் நலம். இப்போது நான் வெளியிட்டது போலவே.
முடிந்தளவு இந்த பதிவை SHARE செய்யுங்கள். அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களிடமும் சென்று சேர வசதியாகும்.
நன்றி ஒரு எம்.ஜி.ஆர். பக்தனாக........
-
#எம்ஜிஆர் #மதித்த #தாய்குலம்
பெண்களை மிகவும் மதித்தவர் எம்.ஜி.ஆர்.அவர் அனைத்துப் பெண்களையும் தாயாக பாவித்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார்.இடைவேளையில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கண்ணீர் விட்டார்.
கணவரை இழந்த அந்த பெண் உணவுக்கே கஷ்டப்படுவதாக கூறினார்.உடனடியாக எம்.ஜி.ஆர் அவரது உதவியாளரை அழைத்து அந்த பெண்ணை அவரது அலுவலகத்தில் உட்கார செய்யுமாறு உத்தரவிட்டார்.அதன்படி உதவியாளரும் செய்தார்.
சிறிது நேரம் சென்றபின் எம்.ஜி.ஆர். வரும் நேரம்.உதவியாளர் உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். தனது தாயார் சத்தியாவின் முழு உருவப் படத்தை வைத்து, அதன் முன்பு அவருடைய ஆசனத்தை வைத்திருப்பார்.தினமும் அம்மாவை வணங்கிவிட்டு அந்த இருக்கையில் உட்காருவது வழக்கம்.அவரைத்தவிர வேறு யாரும் அதில் உட்காருவது இல்லை.
ஆனால் அறையில் உட்கார வைக்கப்பட்ட பெண், அதில் உட்கார்ந்து வியர்வை வழிய அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் நின்றார்.
அதே நேரம் எம்.ஜி.ஆரும் உள்ளே வந்தார்.அவர் அந்த பெண் அசந்து தூங்குவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே, மின் விசிறியைப் போட்டு விட்டார்.பின்னர் அங்கு விளையாடிக்கொண்டியிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருந்தார்.
அந்த பெண் கண் விழித்தபோது, அஞ்சிய பெண்ணைப் பார்த்து, "உன் வீட்டுக்கு அனைத்து உதவிகளும் வரும். நீ செல் அம்மா" என்று எம்.ஜி.ஆர் கூறி வழியனுப்பி வைத்தார்.
இதுதான் எம்.ஜி.ஆரின் பண்பு.எல்லா பெண்களையும் தாயாக நேசித்தவர். இந்த சம்பவம் இலக்கியத்தில், முரசுக்கட்டிலில் அமர்ந்த பிசிராந்தையாருக்கு சேர அரசன் வெண்சாமரம் வீசிய நிகழ்ச்சியை ஒத்துள்ளது அல்லவா!!
எம்.ஜி.ஆர் வெள்ளை மனம் கொண்டவர்.எவராலும் வெல்ல முடியாத 'வெல்ல' மனம் கொண்டவர்.திரைப்படத்தில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போனார்கள்.அதைப் போலவே நிஜத்திலும் அவரை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.அவர் வெற்றி பெற்ற போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமாக தமக்கு ஆதரவளித்த மக்களையே கூறினார். எனவேதான் அவர் மக்களாட்சியைக் கொடுத்தார்...........
.
-
[என்ன பெயர் வைப்பது
அந்தப் பல்கலைக் கழகத்துக்கு..?
ரொம்பவே யோசித்தார் எம்.ஜி.ஆர்.
அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க , அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .
எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?
ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..
சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர். தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –
அன்னை தெரசா !
ஆம்... அப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.
Mother Teresa Women's University !
விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...
ஆஹா..!!!
# இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :
“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து...”
அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
எந்தப் பல்கலைக்கழகம் சொல்லிக் கொடுத்தது
எம்.ஜி.ஆருக்கு இந்தப் பக்குவம் எனும் பாடத்தை...?]..........
-
அள்ளிக்கொடுத்த வள்ளல்...
எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சிகள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக்கொண்டிருந்தார்.
உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணராமல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.
அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப்பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’
எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டிலேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960-களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது......
-
#என் #காலில் #விழாதீங்க
ராமாவரம் தோட்டத்துக்கு ஒருமுறை திருக்குறள் முனுசாமி தன் மகனுடன் வந்திருந்தார்.
"நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்" என்று கண்ணீர் மல்க பொன்மனச்செம்மலின் பொற்கரங்களைப் பிடித்தவாறு கண்ணீர் மல்கினார்...
அந்த சமயம் ஒரு முதியவர் தனது மகளுக்கு வேலைக்கு சிபாரிசு செய்ததற்காக நன்றி கூறியதோடு மட்டுமல்லாமல், தடாலென்று எம்ஜிஆரின் காலில் விழப்போனார்...
#அதிர்ச்சியுற்ற #எம்ஜிஆர் அந்த முதியவரைத் தடுத்து நிறுத்தி, "#பெற்றோர்களின் #காலில் பிள்ளைகள் வணங்கலாம். உலக நன்மைக்காகப் பாடுபடும் #மகான்கள் #கால்களில் பக்தர்கள் விழுந்து வணங்குவது போற்றுதலுக்குரியது. பெரியவரே, உங்களுக்குத் தெரியாததில்லை...
மேலும், பொதுவாக மற்றவர்கள் நம் காலில் விழுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. #விழுபவரின் #பாவங்களை #சுட்டெரிக்கும் ஆற்றல் நம்மிடத்தில் இல்லை. நாம் செய்த பாவங்களுக்கே நம்மால் பரிகாரம் காணமுடியாத போது #மற்றவர்களின் #பாவங்களைக் கரைக்கும் சக்தி நமக்கேது...? "
என்றார் பொன்மனச்செம்மல்...........
-
#தலைவரின்_சிரித்துவாழவேண்டும்
[ 30 - 11 - 1974 ]
சென்னை பிளாசா, கிருஷ்ணா, மகாலெட்சுமி, கிருஷ்ணவேணி தியேட்டர் முதல் நாகர்கோவில் தங்கம் திரையரங்கம் வரை வெளியான தலைவரின் வெற்றிக் காவியம்...
தலைவர் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் தலைவரின் அப்துல் ரஹ்மான் கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது...
தலைவரின் இந்தக் கதாபாத்திரம்தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது...
இதே மாதத்தின் முதல் வாரத்தில் தலைவரின் உரிமைக்குரல் வெளியாகி மெகா ஹிட் ஆனது.
இருப்பினும் இந்த திரைப்படமும் தலைவரின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடித்தது...
தற்போது நோன்பு காலம்...
அனைவரும் மீண்டும் ஒரு முறை தலைவரின் இந்தப் பாடலை பார்ப்போம்.
வளர்க புரட்சித்தலைவர் புகழ்
#இதயதெய்வம்.........
-
ஒன்று மட்டும் சொல்ல ஆசைப் படுகிறேன்!
பல நாட்கள், அவர் படப்பிடிப்புக்கு நாட்களைக் கொடுத்து விட்டு. பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அதை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் வீணடித்து விட்டதை நான் அறிந்திருக்கிறேன். சரியான திட்டமின்றி வரும் இவர்கள் என்னை வீணே குறை கூறுகிறார்களே' என்று, இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் மனம் குமுறியிருக்கிறார் அவர். "பழி ஓரிடம் 'பாவம் ஓரிடம்' என்ற பழ மொழி யின் உண்மையை இம்மாதியான சந்தர்ப்பங்களில் தான் நான் அறிந்தேன்.
எனக்கு மட்டுமில்லை, நல்ல திட்டத்தோடு நாணயத்தோடு, யார் வந்தாலும் எம்.ஜி.ஆர். படத்தை நிச்சயம் முடித்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இதிலே சின்னவர்கள், பெரியவர்கள், பழகியவர்கள், பழகாதவர்கள் என்றெல்லாம் வித்தியாசமே அவர் பாராட்டுவதில்லை. தொழில் வேறு நட்பு வேறு என்று சொல்லி வரும் அவர், நான் இரண்டையுமே ஏமாற்ற விரும்புவதில்லை ' என்று அடித்துச் சொல்வார். "எம்.ஜி.ஆர். கதை அமைப்பில் குறுக்கிடுவார்; படப்பிடிப்பில் வந்து வசனத்தை மாற்றச் சொல்லுவார். காட்சியைத் திருத்துவார்' என்றெல்லாம் ஒரு புகார் இருந்து வருகிறது. என்னைப் பொறுத்த அளவில், அவர் இம் மாதிரி எந்தச் சந்தர்ப்பத்திலும் நடந்தது கிடையாது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ! கதையை அவர் ஆரம்பத்தில் படிக்கிறார். தனக்கேற்றதாக இல்லை யென்று பட்டால், திருத்தி அமைக்கும்படிச் சொல்கிறார். அப்படிச் செய்ய இயலாவிட்டால் அந்தக் கதையில் நடிப்பதையே ஒதுக்கி விடுவார் அவர்.
கஷ்டம் என்று யார் வந்து அவரிடம் முறையிட்டாலும் உடனே அவர் அந்த ஆளை வேலும் கீழுமாகப் பார்ப்பார். அவர் சொல்வது. உண்மை என. தனக்குப்பட்டால் யார் தடுத்தும் உதவி செய்வதை அவர் நிறுத்த மாட்டார்!
எம். ஜி. ஆர். நாஸ்திகரல்ல என்று தான் நான் நினைத்து வருகிறேன். மருதமலையில் நான் வேண்டிக் கொண்டபடி போட்ட மின் விளக்கை ஏற்றி வைத்து விட்டுப் பேசிய எம். ஜி. ஆர். தன் கொள்கை பற்றி விளக்கம் கொடுத்தார்.
தெய்வம் இல்லை என்று நாங்கள் சொன்னதில்லை. அதேபோல் கோயிலுக்குப் போகாதீர்கள் என்று நாங்கள் யாரையும் தடுத்ததுமில்லை. கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையே கண்டிக்கிறோம். நம்மை எல்லாம் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்றும், அதுவே கடவுள் என்றும் நாங்கள் கருதுகிறோம் '' என்றார்.
சமீபத்தில், சென்னையில் தியாகராய நகரில் நான் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்தேன்.
கிரகப்பிரவேசத்தன்று காலை பூஜை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல், பானையில் பொங்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். திடுதிடுப்பென்று உள்ளே வந்து நின்றார்.
'வாங்க வாங்க! பால் பொங்குது. நல்ல நேரத்திலே தான் உங்க காலை வச்சிருக்கீங்க' என்று என் தாயார், வாய் நிரம்ப அழைத்தார். எம்.ஜி.ஆர். அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டார். பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்.
நான் அழைக்காமலேயே, விஷயத்தைத் தெரிந்து. என் வீட்டிற்கும் வந்து, என்னை வாழ்த்தி விட்டுப் போன அந்த மனித தெய்வத்தின் தன்மையை நான் என்னென்பது? அதனால் தான் முருகனுக்கு அடுத்தபடியாக நான் எம்.ஜி. ஆரைப் போற்றி வருகிறேன்!.......சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்...
- பேசும் படம் 1963.........
-
22.05.1973
புதிய வரலாற்றை உருவாக்கிய திண்டுக்கல் இடைத்தேர்தல் ......
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அஇஅதிமுக இயக்கம் முதல் முறையாக கட்சி துவங்கிய 215 வது நாளில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியும் ஆளுங்கட்சியுமான காங்கிரஸ் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி , தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக முதல்வர் கருணாநிதி ஸ்தாபன காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் காமராஜரின் சீடர்களான நடிகர் சிவாஜிகணேசன் , அவரின் ஆதரவு நடிகர்கள் அவருடைய ரசிகர்கள் பத்திரிகை ஆசிரியர் சோ மற்றும் அனைத்து பத்திரிகைகள் எம்ஜிஆர் என்ற தனி மனிதரை எதிர்த்து அரசியல் பிரச்சாரம் செய்தார்கள் .
எம்ஜிஆர் தன்னுடைய உயிரான ரசிகர்களையும் , பொதுமக்களையும் நட்பு கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியையும் மட்டுமே நம்பி இரவு பகலாக உழைத்து வெற்றி கனியை பறித்து அரசியல் உலக வரலாற்றில் '' அண்ணா திமுக - இரட்டை இலை ''- எம்ஜிஆர்'' என்ற பிம்பத்தை உருவாக்கிய தினம் இன்று 22.05.1973. எம்ஜிஆர் 103 வது ஆண்டில் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 46வது ஆண்டில் வெற்றி நடை போடுகிறது .
எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலைமுறைகள் கடந்தும் இன்னும் துடிப்புடன் செயலில் இயங்கி கொண்டிருப்பது உலக வரலாற்றில் எந்த ஒரு நடிகருக்கும் தலைவருக்கும் கிடைக்காத பெருமை ......
சினிமாவில் எம்ஜிஆர் ஒரு சரித்திரம் ...
அரசியலில் எம்ஜிஆர் ஒரு சகாப்தம் ...
மக்கள் உள்ளங்களில் எம்.ஜி.ஆர்., ஒரு மனித நேய தலைவர் ............
-
விஜயாவாகினி தலைவர் வைஜெயந்திமாலா நடித்து கொண்டிருந்த பாக்தாத்திருடன் பட பிடிப்பு...
பாக்தாத் வாரிசான குழந்தை எம்ஜியார் அவர்களை எதிரிகள் கொலை செய்ய திட்டமிடும் காட்சி...சூது அறிந்த தலைவரின் அம்மா எஸ்.என்.லட்சுமி பால எம்ஜியாரை ஒரு பசு மாட்டின் மடியில் கட்டி விரட்டி தப்பிக்க விடும் காட்சி.
அப்போது மாடு ஓடிய பின் ஒரு புலி வந்து தலைவரின் அம்மாவை துரத்தி கொன்றுவிடும்......புலியுடன் என்.என்.லட்சுமி மோதி புரளும் காட்சியில் டூப் நடிகை நடிக்க.
காட்சி எடுக்கப்பட்டு வரும் போது அந்த புலி டூப் நடிகை மார்பில் பாய்ந்து கடித்து குதறி விட ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைகிறார் அந்த டூப் நடிகை.
செய்தி அறிந்த செம்மல் பறந்தோடி வந்து அந்த நடிகையை அள்ளி கொண்டு ஓடி அரசு மருத்துவமனையில் சேர்கிறார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட 3 மாத காலம் நீடித்த சிகிச்சையில் தலைவர் ஒரு ஆள் போட்டு தாய் தகப்பன் கணவர் இல்லாத அந்த நடிகையின் உடல்நிலை முன்னேறும் வரை இதர செலவுகளை பராமரிக்கிறார்.
3 மாதங்கள் கழித்து டிஸ்சார்ஜ் ஆகி தலைவர் அனுப்பிய காரில் வீடு திரும்பி கொண்டு இருந்த அந்த துணை நடிகை வீட்டில் கொண்டு விட போகிறார்கள்....வீட்டு வாடகை 3 மாத பாக்கி, தொடர்ந்து நடிக்க நாட்கள் ஆகும் என்பதால் வயிற்று கவலைகளை சுமந்த படி கார் செல்ல.
கார் கோடம்பாக்கம் தாண்டி வலதுபுறம் ட்ரஸ்ட் புரம் நோக்கி செல்ல....அந்த நடிகை என் வீடு இங்கே இல்லை எங்கே போகிறீர்கள் என்று கேட்க...
அம்மா டிரஸ்ட் புரம் 4 வது தெருவில் உங்களுக்கு இனி சொந்த வீடு சாவி என்னிடம் இருக்கு மற்ற செலவுகள் நீங்கள் செய்ய பணமும் இருக்கு என்று சொல்ல அந்த நடிகையின் நெஞ்சில் கடவுளாக தோன்றுகிறார் நம் தலைவர்.
தலைவர் நம்மை விட்டு பிரிந்த போது சென்னை எம்ஜியார் நகரில் இருந்து திருச்சி சென்று ஒரு மகள் தன் தகப்பனுக்கு செய்வது போல ஓர் ஐயர் கொண்டு காவிரி கரையில் ஈமகிரியை செய்கிறார் அந்த தங்கப்பன் என்ற நடன மாஸ்டரின் உதவியாளர் ஆன அந்த டூப் நடிகை சூரியகுமாரி..
வாழும் போதே வரலாறாக மாறி போன புரட்சிதலைவர் புகழ் காப்போம்.........
நன்றி...தொடரும்..........
-
"கலங்கரை விளக்கம்" பட ரிலீஸ்
பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.
வேலுமணியைப் பார்த்தவுடன், என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா? என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
அதற்கு வேலுமணி, அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்
. என்கிறார்.
சொல்லுங்க!
பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.
அப்புறம் என்ன
அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?
இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குதாம். அதான்
நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்.. என்று வேலுமணி தயங்கிச தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.
எல்லாவற்றையும் பொறுமையாக்க்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டா இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்
என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.
மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.03.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.
திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.
ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா? என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள். தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.
கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க
. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க
என்று சொல்லி அனுப்பிவிட்டுக்காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, இதோ பாருங்க முதலாளி
ஒருவேளை நாங்க எல்லோமு சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்
என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.........
-
ஒரு சமயம் தலைவர் "பொம்மை" என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.
ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்...
நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.
அதற்கு தலைவர் பதில்.
படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.
ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.
தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.
யார் அவர் என்றால்
அவர் பெயர் 'பாரதி'...தலைவருடன் அவர் நடித்த படம் "நாடோடி".
நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.
வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன...நன்றி...
-
ஒரு சமயம் தலைவர் "பொம்மை" என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.
ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்...
நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.
அதற்கு தலைவர் பதில்.
படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.
ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.
தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.
யார் அவர் என்றால்
அவர் பெயர் 'பாரதி'...தலைவருடன் அவர் நடித்த படம் "நாடோடி".
நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.
வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன்...நன்றி...
-
#இந்த விழாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி.
பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த கத்திப்பாரா நேரு சிலை திறப்பு விழா.
__________________________________________
புரட்சித்தலைவர் இறந்த போது ராஜீவ்காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தி:
"மிகச் சிறந்த பாரதக் குடிமகனின் மரணத்துக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. எம்.ஜி.ஆர். சிறந்த தேசபக்தர். நாட்டுப்பற்று அவர் இதயத்தில் ஆழப் பதிந்து இருந்தது. இந்தியாவின் பாரம்பரியத்தில் அவர் பெருமிதம் கொண்டு இருந்தார். இந்தியாவின் ஒற்றுமையைப் புனிதமாகவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை புனிதமான கடமையாகவும் அவர் கருதினார். இந்திய மக்களால் மட்டும் அல்லாமல் இலங்கை நாட்டு மக்களாலும் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது மரணத்தில் என் சொந்த இழப்பு மிகப்பெரியது ஆகும். எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி, என் தாத்தா நேருவின் சிலை திறப்பு விழா ஆகும். அவரது முடிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பாக அந்த விழா நடந்தது. அப்போது என் குடும்பத்தின் 3 தலைமுறையினருடன் அவருக்கு உள்ள தொடர்பை எடுத்துக் கூறினார். இது அவரது விடைபெறும் நிகழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது," என ராஜீவ் காந்தி கூறி இருந்தார்...........
-
உலகின் முதல் #எம்ஜிஆர். சிலை எது ?
எம்.ஜி.ஆர். படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர், அ.தி.மு.க. கொடியை
வடிவமைத்தவர் திரு அங்கமுத்து.
அவர் 1988 ல் தன் கைப்பட தனது தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிளாஸ்டர் ஆப்
பாரிஸில் சிலை வடித்து தன் திருப்திக்காக இல்லத்திலேயே வைத்திருந்தார். அங்கமுத்து காலமாகிய பின் அவர் வசித்த மாடி அறை பாதுகாக்கப்பட்டு வருகின்றது
எம்.ஜி.ஆர். சிலையுடன், உலகின் முதல் சிலை என்ற பெருமையுடன்.
அங்கமுத்துவின் அனுபவங்களை
திரு கொற்றவன் பேட்டி கண்டு 'இதயக்கனி' யில் எழுதினார். அப்போதே எம்.ஜி.ஆர். சிலையும் படமெடுக்கப்பட்டு 'இதயக்கனி' யில் இடம் பெற்றது.
Ithayakkani S Vijayan with Angamuthu Shanmugam........
-
ரவீந்தர் என்பவர் #எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் இடிந்த கோயில் நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் இன்பக் கனவு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். நாடோடி மன்னன் படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். நாடோடி மன்னன் படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர் என்று அறியப்பட்டவர்.
ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள் என்று ரவீந்தர் கூறி யதும், ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்? என்று சக்ரபாணி கேட்டார். வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.
பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே? என்றார். அதற்கு ரவீந்தர், எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும் என்றார்.
எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வரவில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.
சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன் என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபதுலட்ச ரூபாய்க்கு சமம்.
ரவீந்தர் உடனே, அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங்கன்னு நினைச்சேன் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, என்னய்யா புரியாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன் என்றார்.
எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டார்..........
-
எம்.ஜி.ஆர். நூல் வரிசை : 003
“எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்”,
நூலாசிரியர் – கே.பி. ராமகிருஷ்ணன்.,
குறிப்பு : எம்.ஜி.ஆர். அவர்களின் மெயக்காபாளராக, அவரது பல படங்களுக்கு டூப்பாக, ஸ்டன்ட் நடிகராக 1957 முதல் அவர் அமரராகும் 1987வரை 30 ஆண்டுக்காலம் அவருடனேயே பயணித்தவர் என்பதால் இவர் சொல்லும் செய்திகள் அனைத்தும் அரிய பொக்கிஷமாக சுவையான நடையில் விறுவிறுப்பாக இருக்கும் அருமையான நூல்.
நூல் விலை : Rs.100.00 (நான் வாங்கிய காலத்தின் விலை இது. தற்போதைய புதிய பதிப்புகளின் விலை மாறுபடலாம்)
பதிப்பகம் : விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600002.
தொலைபேசி – 044 28524074.
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் எம்.ஜி.ஆர். நூல்களை தேடித்தேடி சேகரித்து படிப்பவன். அவரை பற்றிய நூல்கள் 500க்கும் மேல் வெளியாகியுள்ள நிலையில், என்னிடம் 120 நூல்கள் மட்டுமே உள்ளது. என்னிடம் இருக்கும் நூல்களின் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விபரங்களையும் முடிந்தளவு தினம் ஒன்றாக வெளியிட முயற்சிக்கின்றேன். என்னை போன்ற எம்.ஜி.ஆர். நூல் சேகரிப்பாளர்களுக்கு இந்த நூல்களை வாங்க விரும்பினால் அவர்களுக்கு இந்த முயற்ச்சி பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கிலே. எம்.ஜி.ஆர். நூல்களை பற்றிய எனது மூன்றாவது பதிவாகும் இது.
நீங்களும் உங்கள் சேகரிப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்களின் முன்புறத் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விவரங்களையும் Commend பகுதியில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தயவு செய்து Inboxல் இட வேண்டாம். எல்லோரும் பார்க்கும் வகையில் Commend பகுதியிலியே வெளியிடுங்கள். இது நாம் எல்லோரும் நமக்குள் பரஸ்பரம் உதவி செய்வது போன்ற ஒரு நல்ல ஏற்பாடுதான். இன்றிலிருந்து நூல் வரிசை 120 வரும்வரை (அதாவது என்னிடம் இருக்கும் நூல் வரை) வேறு எந்த பதிவுகளும் இந்த முகநூலில் வராது.
மேலும், நீங்கள் Commend பகுதியில் வெளியிடும் உங்கள் வசம் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்கள் எனது சேகரிப்பில் இல்லை என்றால்.. அதையும் இதே போலவே வெளியிடுகிறேன் விபரங்கள் தந்த உங்கள் பெயருடனேயே. அதற்க்கு முன்புறத் அட்டைப்படம், நூல் பற்றிய விவரங்கள் அச்சிடபட்ட பகுதிகள் போட்டோ எடுத்து அனுப்புங்கள். ஆசிரியர் பெயர், விலை, பதிப்பக விலாசம், தொலைபேசி எண் எல்லாம் உள்அடங்கியதாக இருந்தால் மிகவும் நலம். இப்போது நான் வெளியிட்டது போலவே.
முடிந்தளவு இதை SHARE செய்யுங்கள். அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களிடமும் சென்று சேர வசதியாகும்.
நன்றி ஒரு எம்.ஜி.ஆர். பக்தனாக.........
-
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம்.
12/04/2020 அன்றைய தொடர்ச்சி ....
இன்று
04/05/2020
நண்பர்களா? நயவஞ்சகர்களா?
'திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்
தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதம்
அந்தப்படக் கதையின் சிறப்பை நான் அறிந்திருந்ததே முக்கியக்
காரணமாகும்.
ஒருவனுக்கு நண்பர்கள் என்று இருப்பார்களானால், அவர்கள்
அவனுடைய நல் வாழ்வுக்காக வேண்டி, கடிந்துரைக்க அவசியம்
ஏற்பட்ட போதிலும் பின் வாங்காமல், அதனால் அவனுக்குத்
தாங்கள் விரோதியாகும் நிலை ஏற்படுவதையும் பொருட்படுத்
தாமல் அவனுக்குப் புத்திமதி கூறித் திருத்த முயன்றால்தான்
‘நண்பர்கள்' என்ற பெயருக்குப் பொருத்தமுடையவராவார்கள்.
ஒரு பழமொழி உண்டு.
எடுத்துச் சொல்லு,
இடித்துச் சொல்லு!
இரண்டும் பயன் தரவில்லை என்றால் அவனைத்தன்
உள்ளத்திலிருந்து ('நண்பன்' என்ற தகுதியை விட்டு) 'எடுத்து
எறி' என்பதே அது.
நண்பன் செய்வது தவறுதான் என்று தெரிந்த பிறகும் அதைக்
கண்டிக்காமல் பாராட்டிக்கொண்டே இருந்தார்களானால்
நாளடைவில் அந்த நண்பன் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கே
வந்து விடுவான்.
தான் நினைப்பதுதான் சரி,
தான் சொல்வதுதான் சரி!
தான் செய்வதுதான் சரி,
அதை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்;
இல்லையென்றால் அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள்;
அலட்சியப்படுத்துகிறார்கள்; தனக்குக் கேடு செய்கிறார்கள்
என்றே முடிவெடுத்து விடுவான். இந்த மாதிரி ஓர் எண்ணத்தை
அவனிடம் உருவாக்குகிற அவர்கள் எப்படி நண்பர்களாவார்கள்?
நயவஞ்சகர்கள்! நம்பிக்கைத் துரோகிகள்! இதைத் தவிர வேறு
என்ன பெயரைச்சொல்லி அவர்களை அழைப்பது?
ஏனென்றால், தனிப்பட்ட ஒருவனை மட்டுமா அவர்கள்
கெடுக்கிறார்கள்! அந்தத் தனி மனிதன் புகழும் செல்வாக்கும்
உடையவன் என்று வைத்துக்கொள்வோம். எல்லா வசதிகளையும்
பெற்ற அவனுடைய செயல் பல கிளைகளாக விரிந்து,
எங்கெல்லாமோ பரவி, ஒரு வலிய சமூகத்தையே கூடத் தீண்
நாசப்படுத்திவிடக்கூடுமே!
இதே போலத்தான் சினிமா நாடகக் கலைஞர்கள் தவறான
ஒன்றை நியாயமென்று கருதி, தாம் எண்ணுவதுதான் சரி என்று
முடிவு கொண்டுவிட்டால், அவர்களுடைய கலைத் திறமையின்
வாயிலாக மக்கள் உள்ளத்தில் பதிய வைக்கும் அந்தக் கருத்துகள்
ஒரு சமூகத்தையே தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சக்கி
படைத்தவைகளாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக்
கொள்வது என்னைப் போன்றவர்களின் மிகப் பெரிய
பொறுப்பல்லவா!
அதுவும், ஓர் அரசியல் கொள்கையை உளமார ஏற்றுச் செயல்
பட்டுக்கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களின் கண்
காணிப்போ, கட்டுப்படுத்தும் பெரியவர்களின் எச்சரிக்கையோ
இல்லாதிருந்தால் அவன் நிலை என்னாவது!
ஆனால், அன்று எனது கருத்து நியாயமானது என்றுதான்,
என்னிடம் எந்தப் பயனையும் எதிர்பாராத, என் வாழ்வில்
அக்கறை கொண்ட நண்பர்களும் கருதினார்கள். எனவே,
அவர்களும் அதை ஆதரித்தார்கள் எனினும், எனக்கு அந்த
அனுபவம் ஏன் ஏற்பட்டது?
சூழ்நிலை மாறிற்று!
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் என் விருப்பத்திற்கிணங்க, நான்
கூறிய நிபந்தனையோடு, திருமதி சரோஜாதேவி அவர்களை
அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
துவக்கத்தில் நான் 'கால்ஷீட்' கொடுத்த போதெல்லாம்
அவரும் வந்து நடித்தார்.
இடையில் எனக்குக் கால்முறிவு ஏற்பட்டது. அதனால்
என்னென்னவெல்லாம் ஏற்பட்டன என்பதைப் பிறகு
சொல்கிறேன்.
'திருடாதே' படம் என் நிலைமை காரணமாக எடுத்து முடிக்கப்
படாமல் இருந்தது. எனக்குக் கால் குணமான பிறகு, இந்தப்
படத்தை முடிக்கும் முயற்சி தொடங்கியபோது, ஏற்கெனவே
அந்தப் படத்தில் புதுமுகமாக வந்து நடித்துக்கொண்டிருந்த திருமதி
சரோஜாதேவி அவர்கள். அறிமுகமான, பிரபல நடிகை
யாகியிருந்தார்.
நான் தயாரித்த, 'நாடோடி மன்னன்' படம் வெளிவந்து
அதனாலும் அவருக்குப் புகழ் ஏற்பட்டிருந்தது. வேறு பல
நடிகர்களுடன் நடிக்கக்கூடிய வாய்ப்பையும் புகழையும் அவர்
பெற்றிருந்தார்.
அதனால் 'திருடாதே' படத்திற்கு நான் கொடுக்கிற கால்
ஷீட்டை அனுசரித்து அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
அவர் எப்போது 'கால்ஷீட் கொடுத்தாரோ, அதை அனுசரித்து
நான் 'கால்ஷீட்' கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.
"நீங்கள் ஏன் அவருடைய 'கால்ஷீட் டை அனுசரித்துக்
கொடுக்க வேண்டும்?" என்று ஒரு கேள்வி கேட்கப்படலாம்!
இந்தக் கேள்விக்கு நான் இரண்டொரு வாக்கியங்களில் பதில்
சொல்லி விடமுடியாது.
என்னுடைய அப்போதைய நிலைமையை அப்படியே படம்
பிடித்துக்காட்டினால் தான் சரியான விளக்கமாக அது அமைய
முடியும்.
கால் முறிவுக்குப் பின்....
நான் கால்முறிவு குணமாகி வெளிவந்தேன். அதை அடுத்து
முதன் முதலாக நான் நடித்து வெளிவந்த ஒரு சமூகப் படம்
குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை! அது மட்டுமல்ல.
"எம்.ஜி. ராமச்சந்திரன் சமூகப்படத்தில் நடித்தால் ஓடாது"
என்று கூடச் சிலர் துணிந்து சொல்லத் தொடங்கினர்.
"இனிமேல் எம்.ஜி. ராமச்சந்திரன் ராஜ உடை போட்டுக்
கொண்டு கத்தியைச் சுழற்றலாமே தவிர, அந்த மாதிரிப்
படங்களுக்குத்தான் வரவேற்பு இருக்குமே தவிர, சமூகக் கதைப்
படங்களில் நடிப்பதற்கு அவர் பொருத்தமானவரில்லை
மக்களுக்கும் பிடிக்கவில்லை" என்ற முடிவுக்கும் சிலர் வந்திருந்
தார்கள். இந்த முடிவுக்கு வரவேற்புத் தருவதுபோல, புதுப்
படங்களில் நான் ஒப்பந்தமாகக் கூடிய நிலையும் ஏற்படவில்லை.
நாடகத்தில் மீண்டும் நடிப்பது என்பதும் சுலபமில்லை
ஏனென்றால் என் கால் முறிவுக்கு முன் என்னை வைத்து
படமெடுத்துக்கொண்டிருந்த பலருடைய படங்கள்
அப்படியப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அரை குறையாக
இருந்தன. அவரவர்கள் பத்துலட்சம், பன்னிரண்டு லட்சம் என்று
பணத்தைப் படத்தில் முடக்கியிருந்தார்கள்.
இந்த சினிமாப் படம் இருக்கிறதே, அது ஒரு விந்தையான
அதே நேரத்தில் ஒரு பயங்கரமான தன்மையை உடையது.
முடிவடையாமலும், முடிவடைந்து வெளிவராமலும் தேங்கி
விடுமானால் எவ்வளவு லட்சத்தை விழுங்கி அது
உருவாகியிருந்தாலும், அது வெறும் 'ஸெலுலாய்ட்' என்றுதான்
கருதப்படுமே தவிர, அதற்கு யாதொரு மதிப்பும் ஏற்படாது.
முடிக்கப்பட்டு, வெளிவரும் படத்திற்குத்தான் மதிப்பு.
ஆகவே, அரை குறையாக நின்றுவிட்ட என் படங்களுக்கு
மதிப்பேற்பட வேண்டுமானால், அவை உடனே முடிக்கப்பட
வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.
அவ்வாறு அவை முடிக்கப்பட வேண்டுமானால், அந்தப்
படங்கள் வெளிவந்தால் நிச்சயம் வெற்றி அடையும் என்ற
நம்பிக்கை, படத்தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, அந்தப்
படங்களுக்குரிய பட விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட வேண்டும்!
அப்படி அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஏற்பட வேண்டு
மென்றால், நான் நடிக்கும் ஏதாவது ஒரு படம் உடனே
வெளிவந்து, அது நன்றாக ஓடி, வெற்றியையும் பெற்றுத் தீர
வேண்டும். அப்போதுதான் மீண்டும் என் படங்களுக்குப்
புத்துயிரும் புதுவாழ்வும் உண்டாக முடியும் என்ற கட்டாய
நிலைமை ஏற்பட்டிருந்தது.
எதிர்ப்புக் கணைகள்
இதற்கிடையில், பரணி ஸ்டூடியோவில், பிரபலமான ஒரு
சிறந்த நடிகருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது
பேசிய பலருள் சிலர், என்னைப் பற்றிச் சில வருந்தத்தக்க
கூற்றுக்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமாகத்
திரு. கண்ணதாசன் அவர்களால் பேசப்பட்ட பேச்சின் பெரும்
பகுதி என்னைத் தாக்குவதாகவே அமைந்திருந்தது.
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..........
-
ஒரு முறை எம்.ஜி.ஆர்.மதுராந்தகம் ஏரி அருகே ஷூட்டிங் சென்று கொண்டிருந்தார்.
கருக்கலைல் முதல் ஷாட்.
கார் செங்கற்பட்டு அருகே போய் கொண்டிருந்த போது ஓரத்தில் ஒரு அம்பாசிடர் நின்று கொண்டிருந்தது.
உடனே தன் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கிப் பார்த்தார்.
உள்ளே எம்.எஸ்.சுப்புலட்சுமி.
''என்னம்மா இந்த நேரத்தில்?"
''மதியம் மதுரையில் சொந்தக்காரர் வீட்டில் க்ரகப்ப்ரவேசம், மாலை நெல்லையில் கச்சேரி, இரண்டு டயர் பஞ்சர் ''என்றதும், முதலில் தன் வண்டியில் அவர்களை ஏற்றி விட்டு 'நீங்கள் போங்கள்,நான் பார்த்து கொள்கிறேன்,உங்கள் வண்டி தயாராகி நேரே வீட்டுக்கே வந்து சேரும்''
என்றார்.
அவரை அனுப்பி விட்டு காத்திருந்தார்.
ஒரு சைக்கிள் காரன் வந்தான்.
அவனை நிறுத்தி எங்கே போறே?"
''மதுராந்தாகம் ஐயா என் பேரு மர்மயோகி நீங்கதான்யா வெச்சீங்க"என்றான்.
ட்ரைவரை அழைத்து எம்.எஸ்.அம்மா காரை எப்படியாவது ரிப்பேர் செய்து கல்கி கார்டனின் விடச்சொல்லிவிட்டு மரம்யோகியின் சைகிளில்
ஏறிக் கோண்டார்.
மர்மயோகியை பின்னால் உட்கார வைத்து மதுராந்தகம் மண்டபத்திற்கு சென்றார்.
மண்டபத்தில் மகிழ்ச்சி.
மர்மயோகி சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம் தான்.
''சைக்கிள் விலை கேட்ட ''எம்.ஜி.ஆர்.பத்து சைக்கிள் வாங்கி தந்து ஊரில் குறைந்த வாடகைக்கு விடச்சொன்னார்.
அந்த நேரத்தில் மர்மயோகிக்கு பையன் பிற்ந்திருந்தான்.
'புதுமைப்பித்தன்' வளர்ந்ததும் அவனை டாக்டர் ஆக்கிய எம்.ஜி.ஆர்.மதுராந்தக்கத்தில் அவனுக்கு க்ளினிக் வைத்துக் கொடுத்து மதுராந்தகம் மற்றும் இடங்கள் சுற்று வட்டார மக்களுக்கு இலவச சிகிச்சை ஏற்பாடு செய்தார்.
அப்படிப்பட்டவர் எம்.ஜி.ஆர்...
கச்சேரி முடிந்து சென்னை திரும்பிய எம்.எஸ்.மர்மயோகி குடும்பத்திற்கு டி.ஐ.சைக்கிள் ஏஜென்சிஸ் எடுத்து தந்தார்....
நல்லவர்கள், நல்ல மனம் படைத்தவர்கள் அப்படித்தான்.....
எழுத்தாளர்
சுப்ரஜா ஸ்ரீதரன்...
அவர்களின் வலை தளம் பக்கத்தில் இருந்து..........
-
கொடை வள்ளல் எம்ஜிஆர் புகழ் வாழ்க
ஜி.என்.வேலுமணியின் சரவணா ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்த படம் குடியிருந்த கோயில். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் ஜெயலலிதா, ராஜஸ்ரீ ஆகியோர் புரட்சித் தலைவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 15 - 03 - 1968 அன்று படம் வெளியாகி 146 நாட்கள் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
எனக்கு 90களில் விவரம் தெரிந்த காலகட்டத்தில் இந்த படத்தை தியேட்டரில் காணும்பொழுது புரட்சித் தலைவரின் பெயர் போடும் போதும், புரட்சித்தலைவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கும் ஆரவாரம் அடங்குவதற்கு நீண்ட நேரமாகும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க...........
-
மக்கள் திலகம் ஆட்சியில் இருந்தபொழுது மேலும் பல சாதனைகள் பதிவில் விடுபட்டுள்ளது..... அவைகள்...
1 சைக்கிளில் இரண்டு பேர் செல்வதை அனுமதித்தது.
2. ஆட்டோவில் மூன்று பேர்கள் செல்ல அனுமதித்தது.
3 கிராமங்களுக்கு முதல்முறையாக பேரூந்து வசதி ஏற்படுத்தியது
4 சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டத்தின்கீழ் கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு 1982 ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
5. அதே போல் சென்னை நகரத்திற்கு உள் வட்ட சாலை, வெளிவட்ட சாலைகளுக்கு திட்டம் அனுமதி அளித்தது.
6 பேரூந்தில் பெண்களுக்கு சரிபாதி இருக்கைகள் ஒதுக்கி ஆணையிட்டது.
7 மதுரையில் தமிழ் சங்கம் அமைத்தது
8 தமிழ்நாட்டில் பல கோயில்களில் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாமல் இருந்த நிலையை போக்கி வருமானமில்லாத எல்லா கோயில்களிலும் ஒரு வேளை பூஜைக்கு வித்திட்டார்.
7 கல்விதுறையில் பல பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தினார் கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், ஆகியோர் பெயர்களில் அமைத்தார்.
8 பொறியியல் படிப்பு நகர்புற மாணவர்களுக்கு மட்டும் என்பதை மாற்றி கிராமப்புற மாணவர்களையும் பொறியியல் பட்டதாரி ஆக சுய நிதி கல்லூரிகள் மூலம் வித்திட்டார்.
9 குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிராம நகரங்களில் பல குடிநீர் திட்டங்களை அமல் படுத்தினார்
10 சென்னை நகர் குடிநீர் பணிக்கு தனியாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தார்.
11 அதே போல் கோவைக்கு சிறுவாணி குடிநீர் திட்டத்தையும், மதுரைக்கு வைகை அணை குடிநீர் திட்டத்தையும் அமல்படுத்தினார்.
112. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் சம்பந்தி உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்............