:noteeth:
Printable View
:noteeth:
கீழே விழுந்து பல்லையும் காலையும் உடைத்துக்கொண்ட பெண்,அலங்காரம் செய்துகொள்ள மறுத்து, இப்படிச் சொல்லிக்கொள்கிறாள். அவள் விழுந்த இடம் , ஒரு தரிசுப் பகுதி. அந்தப் பெண்ணின் சொற்களில் நான் கேட்ட இயற்கைக் கவிதை இது. Occasion: Just before being taken for a second orthopedic appointment.
ஓடை!
பணிவான அலைகள் கண்டேன்
பையநீ கடலுக் கேகு!
அணிகுளிர் ஓடை! உன்றன்
அடிகளைத் தொடர்தல் இல்லேன்.
மெல்லநீ ஒழுகு வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்
நாடிப்பின் வருவேன் அல்லேன்!
கரையோர மரம்க லங்கும்!
காணும்வெண் தளிர லங்கும்!
முரலும்வண் டுன்ம ருங்கில்,
முன்செல்க தொடர்தல் இல்லேன்.
ஆயிரம் ஒளிபாய் எல்லோன்;
ஆயிரம் நிலவு இலங்கும்!
ஆயின் நான் தொடர்தல் இல்லேன்
அடிகளிங் ககல்வேன் அல்லேன்.
டென்னிசனின் ஆங்கிலக் கவிதையைத் தழுவியது.
அருஞ்சொற்பொருள்
மேல் இடுகையில் உள்ள ஓடை என்னும் கவிதைக்கு விளக்கம்.
(டென்னிசனின் ஆங்கிலக் கவிதையை ஒட்டியது )
பணிவான : மெல்ல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடை, தனக்குப் பணிவு காட்டுகதாகக் கூறுவது கற்பனை
பைய நீ கடலுக்கு ஏகு= மெதுவாக நீ கடலுக்குச் செல்க; அணி குளிர் ஒடை = அழகிய குளிரோடையே!
நல்லோடை = நல்லோடையாய்;
கரையோர மரம்க லங்கும்! - இங்கு கவிஞன், ஓடை மரத்தையும் அழைத்துச் செல்லாமல் தானே ஓடுவதனால், மரம் கலக்கம் அடைவதாகக் கற்பனை செய்கிறான்.
வெண்தளிர் : இது "ஆஸ்பன்" (aspen) என்ற ஒருதளிர் வகை; வெண்மை நிறமுடையது.
அலங்கும் =" கவலைப்படும்." (Tennyson: to quiver). பிரிவு ஆற்றாமை காரணம். alangku-tal 1. to move, shake, swing, dangle, to be in motion; 2. to be agitated in mind, troubled.
துடித்தது எனில் மிகையாம்.
முரலும் = ரீங்காரம் செய்யும்; மருங்கில் =( உன்) பக்கத்தில் அல்லது அருகில்.
ஆயிரம் ஒளியாய் = ஆயிரம் அல்லது பல இடங்களில் தோன்றுவது;
எல்லோன் = சூரியன்.
அடிகள் இங்கு அகல்வேன் அல்லேன் = என் காலடிகள்
எடுத்துவைத்து இங்கிருந்து உன்னுடன் வரமாட்டேன்.
Alfred Tennyson, 1st Baron Tennyson, FRS (6 August 1809 – 6 October 1892) Poet Laureate.
மேனெடிது சென்ற பருந்தின் மிசையூர்ந்து
தானர சானதாம் தேன்சிட்டு -- மாநிலத்தீர்!
எண்ணிய தாங்கே உரைப்பீரேல் ஏனையவர்
பண்ணுவரே பாங்குடன் மற்று.
என்றேனும் என்றூழ் இலதாமோ மேகமுந்தான்
நின்றுமறைத் திட்டதோர் நேர்ச்சியினால்!---சென்றுமேல்,
ஊர்தியில் வானூர்ந்தால் உன்கண்முன் காதலரை
யார்மறைத் தாலும் அது.
இ-ள்: மேனெடிது = ஆகாயத்தில் நெடுந்தொலைவு; சென்ற = பறந்து சென்ற; பருந்தின் = கருடனின்; மிசையூர்ந்து = முதுகில் இருந்துகொண்டு; தானர சானதாம் தேன்சிட்டு = அப் பருந்தால் முடியாதபோது, தான் மேலும் உயரப் பறந்து தேன் சிட்டு அரசானதாம்; -- மாநிலத்தீர்!Quote:
Originally Posted by bis_mala
எண்ணிய தாங்கே உரைப்பீரேல் = நீங்கள் இதுகாறும் எண்ணியதை எடுத்துச் சொல்வீரேல்; ஏனையவர் = மற்றவர்கள்;
பண்ணுவரே பாங்குடன் மற்று.= நீங்கள் விட்ட இடத்திலிருந்து மற்றவற்றைத் தொடர்வார்கள் அல்லரோ? என்றவாறு.
இதன் பொருள்:Quote:
என்றேனும் என்றூழ்........மறைத் தாலும் அது.
என்றேனும் என்றூழ் இலதாமோ = சூரியன் காணாமற் ோய்விடுமோ? மேகமுந்தான் நின்று மறைத் திட்டதோர் நேர்ச்சியினால்! = மேகங்கள் அதன்கீழ் நின்று மறைத்திருக்கும் நிகழ்வினால், ---சென்றுமேல்,= வானத்திற் சென்று, ஊர்தியில் வானூர்ந்தால் = வான ஊர்தியில் மேகங்களின் மேல் பறந்தால்; உன்கண்முன்;= உன் கண்முன்னே ( சூரியன் தெரியும்) ; காதலரை
யார்மறைத் தாலும் அது.= உன் காதலனை யார் உன்னிடமிருந்து மறைத்தாலும், அப்படியே ஆகும். மறைக்கலாகாது என்றவாறு.
காதலனைக் காணாத காதலியைத் தேற்றியது.
முந்தை ஒருவழியில் வந்த இனமெனின்போர்
எந்த வகையிலும் இல்லாமல் -- செந்தண்
உறவில் ஒருங்கிருக்கும் உண்மை அரபு
கொரியர் கருதியினிக் கூறு.
முந்தை = முன்னாளில் ; ஒருவழியில் வந்த இனமெனின் = ஒரே வம்சத்தில் வந்த இனத்தவர் என்றால்;
போர் = போர்செய்தல் ;
எந்த வகையிலும் இல்லாமல் = எப்படியும் நடைபெறுதல் இல்லாமல்;
-- செந்தண் உறவில் = நட்பு நிறைந்த உறவில்; ஒருங்கிருக்கும் = ஒன்றாக இருக்கின்ற ;
உண்மை = உண்மை நிலை;
அரபு = அரபுக்களையும்;
கொரியர் = கொரியமக்களையும்;
கருதி = ஆய்ந்து பார்த்து;
இனிக் கூறு.= இனிமேல் கூறுவாயாக.
கருத்து: ஓரினத்தவர் ஒற்றுமை கொள்வர் என்பது பொய்.
கொங்கலர்தேர் தேனீ
முன்னிருப்ப தொருநச்சுச் செடியாம்
முனைந்துவரும் தேனீயும் அறிந்தே
எண்ணரிய நறுமணமே பரப்பும்
எழில்மலரைத் தான் நாடி அமரும்!
அஞ்சிறையின் கொங்கலர்தேர் தேனீ
அதுதன்னை ஏமாற்றும் வித்தை
தன் சிறைக்குள் தான்கிடக்கும் மாந்தன்
தாரணியில் கண்டறிந்த துண்டோ?
மின்னாற்றல் பயன்படுத்தி,
குளிரூட்டிய அறைக்குள்ளே,
கொசுக்கள் வருவதில்லை;
குறைவில்லா நல்லுறக்கம்!
கொசுக்களையே ஒழித்துவிட்டால்,
குவலயத்தில் உண்டாகும்,
மின்னாற்றல் கால்பங்கு
மிச்சமன்றோ தோழியரே?
கொசுப்பெண்ணை நாடிவரும்
கொசுப்பசனைத் திருத்திவிட்டு,
கருக்குலைவு நிறைவுறுத்திக்
கலைபரப்பும் மலையகத்தில்,
வசப்படுமே கொசுவொழிப்பு!
வாழ்விலினி இன்பமதே!
உசுப்பிவிட எழமறுக்கும்
உறக்கமினி சிறக்கவரும்.
மலையகம் = மலேசியா.
பசன் = பையன்.
Things Never Prohibited.
"பொட்டுவைத்தால் மெத்தப்பாவம்,
பூவைத்தால் தேவக்கோவம்!!
விட்டுவைத்தால் சமயக்கேடு"
வெற்றுக்கூச்சல் இதுவே பாடு.
அந்தக்காலச் சமயாசிரியர்
அறிந்திராத இவற்றையெல்லாம்
அவர்கள் பேரால் தடைபோட்டார்கள்
அந்தக்கூச்சல் மிகவே பாடு.
உழைத்துண்ட எல்லாமே ஒட்டுயிர்க்காய் ஈந்தான்
இளைத்தானே மாந்தன் இழிந்து.
நிஜம்தான்! Madam.
உங்கள் ஊருக்கு இது "வரும்" ஆனால் "வராது"!
மேறகண்ட இடுகையில் வரும், வராது என்பதற்கான விளக்க-
ங்கள்:
இந்தக் கொசு ஒழிப்புத் தொழில் நுட்பம், அதற்கான விலையைச்
செலுத்த நீங்கள் தயாரானால், நிச்சயம் வரும். ஆகவே
வருமென்றேன்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிகின்றது. மரபணு
மாற்றம் செய்யப்பட்ட கொசு மனிதனைக் கடித்து,
ஆடவர்பெண்டிர் இரு பாலாரும் கரு தொடர்பான
கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, குழந்தைப்பேற்றுத் திறனை
இழந்துவிட்டால் என்செய்வது ? ் அப்படி நடக்காது என்பதற்கு
மலேசிய அரசு என்ன உறுதிமொழி (உத்தரவாதம்) தரமுடியும் ? ....
என்றெல்லாம் எதிர்ப்பு.......
இயற்கையில் இப்படித் தலையிடுவது எப்படித் தகும்? என்றும்
கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே, வராது என்றேன்.
இப்போது நேயர்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று
நினைக்கின்றேன்.
வேறு அரசுகள், இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை...
இயற்கையின் அடிமைஇம் மனிதன் -- இவனோ
இயற்கையை மாற்றிடத் தக்க நற் புனிதன்?
இயற்கையைப் படைத்தவன் இறைவன் -- அவனே
இயற்கைக்குக் கட்டளை இடத்தகும் நிறைவன்!.
:omg::frightened:
விபரீத விளைவுகள் இருக்குமென்றால் வேண்டவே வேண்டாம், சாமி! கொசுக்கடியெல்லாம் ஒரு கொசுக்கடி போல, கற்பனை செய்ய முடியாத நவீன துன்பங்களை எண்ணும் போது! மரபணு மாற்றிய விதையையும் எதிர்ப்பவள் நான். இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும், விபரீத ஆராய்ச்சிகள் வேண்டாம் என்பதுவே என் கட்சி!
எலிசபெத் டெய்லர்.
எட்டுமுறை மணவிலக்கு -- இதற்கே
என்னென்ன காரணமோ?
ஒட்டிவாழும் முனைமுகத்தில் -- எதையும்
வெட்டிப்பேசும் தோரணையோ?
ஆடவனை அடைந்தபின்பே -- அவன்
அசடுவந்து குடைந்ததுவோ?
பாடிவந்த காதல் தேனீ --- வீசும்
பனிக்காற்றில் தெலைந்ததுவோ?
மரணத்தின்பின்தான் சொர்க்கம்
மகிழ்வாய் நீ இனியுறங்கு.
சரியான இரங்கற்பா!
nanRi madam.
வந்துகண் டோர்க்கெலாம் வாரி வழங்கினார் அருளை;-அத்துடன்,
வந்தண் மியோர்க்கு வடித்தளித் தார்பொற் பொருளை! -எத்திசை,
சென்றிடு போதிலும் சீரிய அவர்புகழ் கேட்டோம் --ஒத்தவர்
சீருல கத்தினில் யாரையும் கொணர்ந்தெதிர் காட்டோம்.
தெய்வமென்றே யாரும் பூசனை செய்தவர் தமக்கு --ஒருசிறு
தீமையும் நேர்ந்ததென் றாலதை ஏற்குமோ நெஞ்சம்?
கையுயர் போதெலாம் பற்பல படைத்தளித் தவர்க்கு-- பிணிதரு
காய்ச்சல் எனவொரு நாடக மேஇனி மிஞ்சும்.
கேட்டபோ தெல்லாம்நீ உதவி செய்தாய்,
கேடகற்றி வாழ்வைநீ விளக்கம் செய்தாய்!
ஊட்டமிகப் பெற்றதெலாம் மறக்கப் போமோ?
ஊரறிய விந்தைபுரிந்் துயர்ந்து நின்றாய்.
நாட்டமுடன் நானுனையே வணங்க, இங்கே
யாமிருக்க அச்சமிலை எனவே கையை
ஆட்டியப யம்தந்தாய் அயர்வு தீர்ந்தேன்
அகிலம்நீ நீங்கினையோ என்றும் உள்ளோய்!
உடற்சட்டை களைந்ததனால் ஓய்வ துண்டோ
உன்பற்றா ளர்தமக்குன்் கடைக்கண் பார்வை?
கடல்வட்டம் நிலவரம்போ டிவை கடந்து
கனிந்தஅருள் நீபொழியத் தடைகள் ஏது?
விடலறியார் உமதுதிரு வடிகள் தம்மை
விழைந்தணுகும் நல்லடியார்; சத்ய சாயி,
உடலொருமைக் குள் அடங்கா ஆன்ம ஞானி
உலகில்நீ வலம்வந்தே ஓங்கி நிற்பாய்.
உயர்ந்த மகானுக்கு அழகிய அஞ்சலிக் கவிதை..
உலகம் முழுக்க செலுத்துகிறது அஞ்சலி!
Thanks for your appreciation ! supra
தேர்வும் தேர்தலும் ஒன்றுக்கொன்று
திறமான ஒற்றுமைகள் தெரியக்காட்டும்,
ஆர்வம் கூடிவர ஆடிப்பாடி
அகமகிழ அவைபோலச் சிலவே யுண்டு.
தோற்றவர்க்கு மறுவழியில் அமைச்சர் வேலை.
துரைத்தனத்தார் தரவந்த போதும், "வேண்டாம்!
ஏற்றவனாய் மக்கள் எனைக் கருத வில்லை,
இனி எதற்கோ?" என்று நின்றார் அஃதே வீரம்!
ஊழல் இலா நாடெங்கே? -- வான்
உச்சியிலே பறந்தபடி,
ஆழ்கடல்ம லைகடந்து -- தேடி
அலுத்ததே மிச்சமாச்சு.
பற்றாத காரணத்தால் -- ஊட்டுப்
பெற்றாலும் வேறுசிலர்
வற்றாத வசதியரும் -- வாங்க
வழிகண்டார்; ஏன்? செல்வீர்!
செத்தாலும் வாய்க்கரிசி -- வந்து
சேர்பிணமே எரிசேரும்,
எக்காலும் தீர்வில்லா -- ஓர்
இழிநோய்க்குள் இவ்வுலகம்.
---------------
மலர்கள் குலுங்கினால் -- இங்கு
மனமகிழ் வாக்கும் ஒருநிகழ்வாம்;
மலைகள் குலுங்கினால் -- அஃதிம்
மன்பதை மாய்க்கும் குலைநடுக்கம்.
(வேறு சந்தம்.)
அறிவெழு பூங்காவெனும் -- புகழ்
ஆர்ந்தெழும் யப்பான் நிலத்தினிலே;
செறிவுறு மண்பிளந்தே -- மக்கள்
செத்தனரே துன்பம் உறப்பலரே.
பூவெனத் தந்துவந்தான் -- இறை
பூமியைப் பொன்றாத மக்கள்குலம்,
மேவி மகிழ்வுறத்தான் -- பின்னும்
பூவெனவே எண்ணிக் குலுக்கினனோ?
commentary.
தந்துவந்தான் - தந்து உவந்தான்; தந்து
மகிழ்ந்தான்.
ஆர்ந்தெழும் - நிறைந்து எழும்;
செறிவுறு = solid
யப்பான் = ஜப்பான்.
பூமியைப் பூவாக மக்களிடம் தந்தான் இறைவன். அதனால்தானோ, அப்போதைக்கப்போது பூவைக் குலுக்குவதுபோல, பூமியையும் இறைவன் குலுக்கிவிடுகின்றான், ஏற்படும் சேதங்களை மறந்தானோ?
உலகத்தை "மலர்தலை உலகம்" என்பதுமுண்டு. தலை = இடம்.
பன்மலர்கள் அழகுத்தொடுப்பு.
வகைவகையாய்ப் பூக்கள்பல
படைத்தவனோ பல்சுவைஞன்!
வகைப்படுத்தித் தொகைப்படுத்தி
வைதிறத்தில் ஒப்பவர்யார்?
இவ்விதிக்கு மக்களினம்
எவ்வகையில் வேறுபடும்?
பழகிடும்பல் இனமாந்தர்
பன்மலர்கள் கவின் தொகுப்பே.
வீட்டுக்குப் பக்கத்தில் சாலைமேம் பாடு,
விழையாத பெருமக்கள் இவண்யாரும் இல்லை;
மேட்டுக்கும் காட்டுக்கும் திருத்தங்கள் செய்து
மிக்க அழ கானதொரு பலவழிகள் சாலை.
நாட்டுக்கும் பெருமிதமே நயந்திடுவ தாக
நல்லபடி அமைத்தார்கள் ஆனாலும் பாரீர்!
வீட்டுக்கே எதிருள்ள கடைக்குத்தான் போக
வேண்டுமிரு கல்தொலைவு பயணிக்க, ஐயோ!
என்முன்னே தோன்றிய பூதமே - நீ
இரு இரு உன் செந்நீர் குடிக்கிறேன்!
கண்முன்னே பேருருக் காட்டினால் -நான்
கானகத்துள் ஓடேன் துடிக்கிறேன்!
எதிருள்ள கடைக்குத்தான் போகும்நிலை இங்கே
எளிதாக நகைச்சுவையில் சொல்லிவைத்த பாங்கு
ச்திராடி மனதினிலே சிரிப்பினையே கொணர்ந்தே
தட்டாமல் சிந்தனையும் கொளவைத்த தின்றே..
சிவ மாலா.. பூதமும் நகைச்சுவையில் அழகு... எழுதுங்கள் இன்னும்..
பூதத்தினிடம் தொடர்ந்து பெசுவது:
பலமணி நேரம்நான் பட்டினி -- உனைப்
பார்த்ததும் அச்சத்தை விட்டினி,
நிலைதரும் ரத்தமு றிஞ்சுவேன் -- அது
நேர்ந்ததும் உள்ளுரம் மிஞ்சுவேன்,
நன்றாகவா இருக்கிறது?
II was in fear that someone may scold me for writing in this way......
எழுதுங்கள்..
என்னிடம் பேசிய அதற்கு நான் சொன்ன பதில்:
(--எனைச்)
சுற்றிப் பறந்த சிறு கொசுவே-- இனிச்
சும்மா நீ போவாயோ மசகே -- இட்டுப்
பற்றிக் கடித்த இடம் அரிப்பே -- அடித்துப்
பட்டென்று கொன்றுனைச் சிரிப்பேன்.
(வேறு சந்தம் )
அமுதுபோல் என் ரத்தம் குடித்தாய் -- அமுதில்லை
அரும்பூதம் என்றென்னை அழைத்தாய் ;
உமிழ்ந்துண்ண உனதென்று நினைத்தாய் -- குடித்ததில்
உன்குஞ்சு தொண்டையும் நனைத்தாய்.
எல்லாம் கொசுக்கடி பற்றியது.
Two days ago, I went to the garden behind to tend the plants there and get some flowers. Badly bitten by mosquies there.....Whilst applying BALSEM AKTIV ointment, the lines found expression......I am glad this thing turned out to be something to read....
தவித்தபடி பேசியே தன்னுயிர் ஈந்து
கவிதையைத் தந்த கொசு..
லக்கி..இங்க அவ்வளவா கொசு கிடையாது...சென்னை போனாத் தான் கஷ்டம்..உடலெல்லாம் திட்டுத் திட்டாய் சிவப்பாய்ச் சில கண்கள் முளைத்திருக்கும்..