மோனை என்பது நயம் கருதி சேர்க்கும் ஒன்று தானா, அல்லது கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்றா?
Printable View
மோனை என்பது நயம் கருதி சேர்க்கும் ஒன்று தானா, அல்லது கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்றா?
கவிதைக்கு அழகு எதுகை மோனை எல்லாம். அவை இல்லாமல் எழுதினால் செந்தொடை. தமிழில் நிறைய எதுகை மோனைகள் கிடைக்கின்றன. வரட்சி ஒன்றுமில்லை.
கருத்துக் கெடவருமானால், மோனை இல்லாமலும் எழுதலாம்.
காய்ச்சீர்கள் வரும் வெண்பா கவர்வதில்லையா?
நீங்கள் ஏற்றுகொண்டது இயற்சீர்களால் மட்டும் ஆன வெண்பா.
The rhythm you proposed, so to speak, is closer to Asiriyappaa.
பிடிக்காது என்றில்லை.
இயற்சீர்கள் மட்டுமே ஈற்றடிக்கு ஒத்ததாய் மாற்ற நினைத்து அப்படியே வந்துவிட்டது. Not the most imaginative changes on my part.
One for the rains in Chennai today
சேகரன் மாரிமுகில் சந்தடியில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமி்லை சாலையது
சாகர மானது பாரு
கன்னடக் கவிஞர் போல -பேரு, ஊரு, ஆரு, என்பனவே பிடித்திருக்கும் போலும்.Quote:
Originally Posted by P_R
பெங்களூர் > பெங்களூரு!!
சரி, வழி - மார்க்கம் என்பன ஒரு பொருட் சொற்கள். இதைக் "கூறியது கூறல்" என்பர். இதைத் தமிழாசிரியர் ஏற்பதில்லை. வழி - மார்க்கம் இவற்றுக்கு வெவ்வேறு பொருள் இருப்பதாகக் காட்டினால் மட்டுமே ஒத்துக்கொள்வர்.
Try to explain that they are not synonymous here....
:lol:Quote:
Originally Posted by bis_mala
பாரு -guilty as charged. உங்கள் இடுகையைப் படிக்கும் வரைத் தோன்றவில்லை.
வழிமார்க்கம் என்ற சொற்பிரயோகம் பேச்சுவழக்கில் உண்டு. பாதை என்ற literal sense இல் அல்ல. "இந்த பிரச்சினைக்கெல்லாம் வழிமார்க்கம் ஏதாவது ஆண்டவன் தான் காட்டணும்" என்பது போல.
ஆக இது கூறியது கூறல் தான், என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் பேச்சுவழக்கில் உள்ள இந்த பிரயோகத்தை literalஆக பயன்படுத்தி புன்முறுவல் ஈட்ட முயன்றேன்.
இன்னொரு சறுக்கல்: ஈற்றடியில் சாகரத்துக்கு சரியாக சீர்மோனையும் சிக்கவில்லை
சென்னைத் தெருக்களெல்லாம் ஆறுகள்போல் ஆகிவிட்ட காட்சிகளைத் தொலைக்காட்சியில் மலேசியாவில் கண்டோம். அந்தோ பரிதாபம்!Quote:
Originally Posted by P_R
வழிமார்க்கத்தைச் சற்று ஒதுக்கிவைத்துவிடுவோம்.
உங்கள் பாடலில், ஒன்றுதவிர ஏனைச் சீர்களிலெல்லாம் முதலெழுத்து நெடிலாக வந்துள்ளது. ஆகவே பாவில் நெடில் வண்ணம் பயில்கின்றது. தொல்காப்பியர் காலத்தில் 20 வண் ணங்கள். பிறகாலத்தில் பல.
சந்தடி என்ற சொல்லை எடுத்துவிட்டு, நெடில் முதலாகிய ஒரு சொல்லை/சீரைப் புகுத்தி, முற்றும் நெடில்வண்ணம் பயிலும்படி செய்யுங்கள் பார்க்கலாம்.
Note: cantadi 1. , tumult, uproar; 2. dense crowd
or சந்து+அடி?
சாகரம் சார்சகசை ் சாற்று.
சாலைகள் கடலின் சகோதரியாய்விட்டன என்று கற்பனை
செய்தவாறு.
பிடித்திருந்தால் ஈற்றடியை அப்படி மாற்றிகொள்ளுங்கள்.
சார் = சார்ந்த; சகசை = அக்காள் அல்லது தங்கை.
This may induce some further imagination into it. If you prefer....
இன்னொன்று:
வழி மார்க்கம் = நீர் வழிந்துவிடுவதற்கான மார்க்கம் (வழி - வடி) என்றும் .....................
Quote:
சேகரன் மாரிமுகில் சந்தடியில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமி்லை சாலையது
சாகர மானது பாரு
சேகரன் மாரிமுகில் சேர்மறுகில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமிலை சாலையது
சாகரம் சார்சகசை சாற்று.
எல்லாம் நெடில் முதலாக வந்து யான் கூறிய வண்ணம் பயிலும்.
சே, மா, சே, சோ.
வா, போ, மா, சா,
சா, சா, சா! என்று முதலெழுத்துக்களை நீட்டிப் படிக்கவும்.
சேர் மறுகு = சாலையுடன் சென்று சேரும் சந்து.
சேகரன் = சிவபெருமானை யுடைய; மாரி = மாரியம்மை அனுப்பிய; முகில் = மேகமானது; சேர் மறுகில் = (சாலையுடன் இணையும்) சந்தில்; சோர்ந்திடவே= மழைபொழியவே; வாகனம் = வண்டிகள்; போக = செல்வதற்கு; வழி மார்க்கமிலை = நீர் வழிந்திட மார்க்கம் இல்லாமையால்; சாலை அது = அம் மறுகு சேரும் சாலை; சாகரம் = கடலினை; சார் = சார்ந்ததாகிய; சகசை = (அக்கடலின்) சகோதரி ஆய்விட்டது;; சாற்று = இதைச் சொல்வாயாக. என்று பொருள் உரைக்க.
இது கவிஞர் எண்ணிய பொருளின் சற்றே வேறுபடுவதாம்.
இனி, மேற்கண்ட மூன்று வரிகளில் ஆக்கியோன் பயன்படுத்திய சில சொற்கள்:
சேகரன் = சேகு+அரன்.
செம்மை நிறமுடையோனாகிய சிவன்.
சே+கரன் = சிவந்த கரங்களை உடையோன்.
சே = சிவப்பு.
சேகரன் என்பது சந்திர சேகரன் என்ற சொல்லின் சுருக்கமாகவும் கொள்ளக்கூடும். தமிழில் பிறைசூடி என்பதாம்.
சேகரன் : முன்னிலை அல்லது முதன்மை வகிப்பவன் என்பது அகராதிப் பொருள்.
சேகரி+அன் = சேகரன் என்று கொண்டு, மழைமுகில் நிலத்தினின்றும், கடலினின்றும் நீரைச் சேகரித்துக்கொண்டு, பெய்கிறது என்று சொல்வது புதுமை. (Personification).
சகசை என்பது சகஜா என்ற சங்கதச் சொல்லின் திரிபு.
சக = உடன்;
ஜா = பிறந்தவள்.
வனஜா, கிரிஜா, பத்மஜா என்பவை போல.
சகசை - எனக்குப் புதுச்சொல். நன்றி.Quote:
Originally Posted by bis_mala
:clap:Quote:
சேகரன் மாரிமுகில் சேர்மறுகில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமிலை சாலையது
சாகரம் சார்சகசை சாற்று.
சாகரம் சார்சகசை சாற்று என்றால், கடலின்பால் சார்புடைய உடன்பிறப்பு (போன்றவள்) (என்று) சொல்வாயாக!
என்று பொருள்.
சாகரம் சார்சகசைச் சாற்று என்றால், கடல் சார்ந்த உடன்பிறப்பு, "முழுமை(யாக)" என்று பொருள்.
(1)சால்+து - முழுமையுடையது, மிகுதியானது,
நிறைவானது என்பது.
(2)சாற்று என்ற வினைச்சொல்லுக்குச் "சொல்வாயாக" என்று மட்டுமே பொருளாம்.
இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானும் இம்மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
Please examine this veNpaa: ethukai, mOnai, thaLai and rhythm and let's have your critical appreciation of the stanza with regard to these and such other aspects.
Thanks P_R for your appreciation.
சிறு மாற்றம் செய்து அலகிட்டேன்Quote:
Originally Posted by bis_mala
அலகிட்டால்..Quote:
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
1- நேரசை
2- நிரையசை
22-12-12-11
221-111-12-11
22-12-12-11
21-22-1
தளைகள்
1ல் அடி: விளமுன்நேர், விளமுன்நேர், விளமுன்நேர்
1ல் அடிக்கும் 2வது அடிக்கும்- மாமுன்நிரை
2வது அடி- காய்முன்நேர், காய்முன்நேர், விளமுன்நேர்
2வது அடிக்கும் 3வது அடிக்கும் - மாமுன்நிரை
3வது அடி - விளமுன்நேர்,விளமுன்நேர், விளமுன்நேர்
3வது அடிக்கும் 4வது அடிக்கும் -மாமுன்நிரை
4வது அடி - மாமுன்நிரை, மாமும்நிரை
அடி எதுகை
இர-பர, விரி-அரி
சீர்மோனை
பரந்த-பெண்பாலைப் பாசமென்
விரிகடல்-வானுமிம்
ஓசை
1,3 & 4 ம் அடிகள் ஒரே ஒலியில் இருக்கின்றன
கடைசி வரி 21-22-1 என்று பிரித்திருந்தாலும் அரியது ணிந்துவாழ் வார் 22-12-1 என்றும் பிரிக்கலாம். விளமுன்நேர், விளமுன்நேர் என்றாலும் தளை தட்டாது. 'நாள்' என்ற ஈற்றுச்சீர் வரை 1,3 போலவே ஓசை நயம் வருகிறது.
இரண்டாவது அடியில் அப்படி இல்லை. அதை கொஞ்சம் tweak செய்து பார்க்கலாம்.
செய்ய முனைந்திருப்பேன். ஆனால் எனக்கு பொருள் சரியாக விளங்கவில்லை :oops:
பொருள்
Quote:
இரந்துகொண்டு் ஒண்பொருள் செய்வல் என்பானும்
பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்
விரிகடல் ஊடு செல்வானும் இம்மூவர்
அரிய துணிந்து வாழ்வார்.
கடைசி அடி: மேற்பட்ட மூன்று செயல்களை செய்பவர்கள் துணிந்து வாழ்வது அரிது
விரிகடல் ஊடு செல்வான் - one who dares to seek his fortune in the high seas
பரந்துகொண்டு ஒழுகும் பெண்பால் - women who share affections with many ; unchaste அத்தகைய பெண்களை விரும்புபவன் (பரத்தை என்ற சொல்லுக்கு இது தான் வேரா?)
இரந்துகொண்டு ஒண்பொருள் செய்வல் - பிச்சை எடுத்து பொருள் சேர்ப்பவன். (ஒன்பொருள்?)
குழப்பம் என்னவென்றால் முதலிரண்டு செயல்கள் மோசமானவையாகவும், மூன்றாவது நற்செயலாகவும் இருக்கிறது. அதனால் சரியாகப் புரிந்துகொண்டேனா என்று சந்தேகம்
1. பிச்சை வாங்கிப், பணக்காரன் ஆவது அரிது;
2.பரத்தையிடம் பாசம் ஏற்படுவது அரிது; (அவள் பணத்துக்கு நடிப்பவள். பாசம் பணத்தின்மேலதாம்.)
3.கடலூடு சென்று மீள்வது அரிது;
அரிய இவற்றுள் ஈடுபடுவோர், துணிவு கொள்ளத்தகாத இடத்துத் துணிவு கொள்கிறவர்கள்.
அங்ஙனம் துணிதல் ஆகாது என்பதாம்.
இதுவே இதன் பொருள்.
பிச்சை வாங்கியே பணக்காரன் ஆகிவிடலாம் என்று நினைக்கிறாயா? அது நடக்காது; (ஆகவே உழைத்துப் பணம் ஈட்டு);
பரத்தை உண்மைப் பாசம் தருவாள் என்று கனவு காண்கிறாயா? அது நடக்காது; (ஆகவே கற்புடைய மங்கையை மணந்து வாழ்க )
பெருங்கடல்மேல் பயணம் செய்து மீண்டுவிடலாம் என்று நினைக்கிறாயா? அது நடக்காது; (ஆகவே பயணம் போனால், உயிருக்கு ஆபத்து உண்டாகும்படி போகாதே).
நடக்காது என்ற ஒவ்வொன்றும் ஒருகால் நடக்கலாம்; அது உனக்கு வாய்க்கும் என்பது என்ன திண்ணம்?
நல்ல உறுதியான பயன் விளையத்தக்க காரியங்களில் ஈடுபடு என்பது அறிவுரை
You may try "tweaking"....now. Let our readers enjoy!Quote:
Originally Posted by P_R
HAPPY 2011 TO ONE AND ALL!!
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரத்தையர் அன்பினை பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
Quote:
Originally Posted by P_R
அந்தப் பாடல் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் என்ற நூலில் உள்ளதாகும்.
சங்க- (அல்லது சங்கம் மருவிய காலத்து )ப் புலவர் நல்லாதனார் இயற்றியது.
புலவர் ஒரு வகைச் செப்பலோசையில் பாடியதை, மிகத் திறமையாகவே வேறொரு வகைச் செப்பலோசையில் எழுதியுள்ளீர்கள்.
என் பாராட்டுக்கள்.
:oops: நான் ஏதோ இங்கு பயிற்சிக்காக நீங்கள் தந்தது என்று நினைத்தேன்.Quote:
Originally Posted by bis_mala
நன்றிQuote:
Originally Posted by bis_mala
சங்கப் புலவரின் வெண்பா என்று தெரிந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதை ஒரு வெண்பாவாகப் புனைந்து சொல்லுங்கள்....எப்படி வருகிறதென்று பார்த்து அனைவரும் இன்புறுமாறு......!
சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
றுங்கள் மனத்திலே உள்ளுணர்வு --- தங்கிற்றேல்
என்னதான் செய்திருப்பீர் சொல்லுவீர் இங்கெவரும்
அன்ன தறியும் படி.
You may also scan, detect faults and comment freely on the above veNpaa!!
Will try today. Meanwhile something I wrote yesterday:
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
தளை தட்டவில்லை (இதைப் போய் ஒரு விஷயமாக ஒவ்வொரு தடவையும் சொல்லிக்கொண்டிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம். எனக்கு இது பெரும் முயற்சியாக இருப்பதால் சொல்லத் தோன்றுகிறது!)Quote:
Originally Posted by bis_mala
சாய்வு - incline என்ற பொருள் தான் பரிச்சயம்.
முதலடியில் பொழிப்பு மோனை (1-3 சீர்கள்) வருகிறது.
'உங்கள் மனத்திலே' என்று இரண்டாம் அடியை படிப்போமானால், உங்கள்/உள்ளுணர்வு என்று பொழிப்பு மோனை வருவதாகக் கொள்ளலாம்.
Quote:
Originally Posted by bis_mala
சீரும் சிறப்புமுடை பாணர் கவிகுறையைச்
சீரும் அடியுமென கற்கும் சிறுவனிவன்
கூறத் தயங்குவதில் ஏதும் வியப்பிலையே:
யாரும் முழுதுணரா ஈசன் முனிந்ததனால்
கீரன் கதிநினைவில் உண்டு
"கவிகுறையை" (கூறுதல்) என்பதற்கும் "கவியில்குறை" (கூறுதல்) என்பதற்கும் பொருள் நுட்ப வேறுபாடு ஏதேனும் தென்படுகின்றதா?
மேலும் "கவிக்குறை" என்பதும் "கவிகுறை" என்பதும் ஒரே பொருள் தருமா?
மற்றவை நிற்க.
Just for discussion...
உள்ளத்தில் உண்டு கள்ளமாய்க்கவிபாடும் கிடக்கை
வெள்ளத்தில் மிதக்கும் சந்தனத்தின் மரங்களுடன்
பள்ளத்தில் நிதம் வீழும் பாண்டியரின் சங்கக்கவியருவி
வெள்ளமொத்த உங்கள் கவி கண்டக்கால்.
தப்பிருந்தால் சொல்லவும். திருத்திக்கொள்வான் வெற்றிவிநாயகன்.
Quote:
Originally Posted by jaiganes
இது பாவினத்தில் அடங்கும் கவி.
நல்ல முயற்சி; நன்று.
chAyvu 1. slope, declivity, side of a hill; 2. bias, partiality; 3. defect, deficiency; 4. straitened circumstances; 5. going obliquely; turning aside, obliquity, divergency; 6. inclination, bent of mind; 7. death; 8. gradientQuote:
சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
கவிதையில் வந்த "சாய்வு" என்ற சொல்லின் பொருள், மேலே தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளது.
Quote:
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
இரு வேறு ஒன்றாமோ = இருவே றொன்றாமோ. தளை தட்டியது.
இறுதி அசை (அசைச்சீர்), தாம் என்று முடிதல் வேண்டும்.
தான் , ஒருமை; தாம் - பன்மை.
இருவேறு, ஒன்றாமோ என்பவை, ஒருபொருளனவாம். கூறியது கூறல் எனலாமோ? You may try explaining.
கவிக்குறை என்றுதான் வந்திருக்கவேண்டும்.Quote:
Originally Posted by bis_mala
கவியில்குறை மேலும் சிறப்பான சொல். கவியின் (கவிஞரின்) குறை என்ற பொருள்படுபடி இருப்பதை மாற்றி கவியில் குறை என்று தெளிவாக்குகிறது.
மற்றபடி மொத்த உள்ளடக்கமும் எனக்கு அவ்வளவு திருப்தியில்லை. 'குறைகண்டவரை பொசுக்கிய இறையனாரும் சங்கப்புலவர் தானே, எதற்கு வம்பு' என்று பொருள்படும்படி எழுத முயன்றேன். சரியாக வரவில்லை.
ஆம் அதனால் தான் பிரித்து எழுதினேன்.Quote:
Originally Posted by bis_mala
இருவேறே - என்று மாற்றினால் தட்டாது.
ஒ..நன்றி. திருத்திக்கொள்கிறேன்.Quote:
இறுதி அசை (அசைச்சீர்), தாம் என்று முடிதல் வேண்டும்.
தான் , ஒருமை; தாம் - பன்மை.
இல்லை.Quote:
Originally Posted by bis_mala
ஒன்றா(கு)மோ என்பது "ஆர்ப்பையும் அமைதியையும்" பற்றிய சொல்
உரைநடையில் சொல்வதானால்:
ஆர்ப்பும் அமைதியும் ஒன்றாகுமா? (அதுபோல தான்) ஈர்ப்பும் பரிவும் இரு வேறு (உணர்ச்சிகளே).
ஈர்ப்பும் பரிவும் இருவேறே ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியுந் தாம்.
ok. good.Quote:
Originally Posted by P_R
சொல்ல நினைத்ததோ ஒன்றாம் எழுதுங்கால்
வல்ல பிறிதொன்று தோன்றியதே--வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்.
You may scan and analyse. Rewrite if you feel it should be rewritten.
I donno if this was posted earlier...
posting this link about phonetic analysis of venba.
http://www.infitt.org/ti2003/papers/19_raman.pdf
Beautiful.Quote:
Originally Posted by bis_mala
வல்ல என்ற சொல் positive அல்லவா. நினைத்ததை விட வல்லதாக ஒன்று தோன்றினால் தத்தளிக்க வேண்டாமே.
Tried a change
Quote:
சொல்ல நினைத்ததை யாப்புக் கலத்தினில்
அள்ள சிறிதேதான் மிஞ்சியதே - வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்
பென்டோன்வில்லில் பனிமழை
பாரினில் உண்டோ வள்ளல் வானைப்போல்
காரினில் நடமிடும் மயிலைப் புரந்தவன்
தேரினை துவண்ட கொடிக்குக் கொடுத்தவன்
உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்
காருக்குப் பனியுடை பொருத்தும்.
திருத்தம் ......
வையத் திலையொரு வள்ளல் வான்நிகர்
பரியது ஞெமிலிக் கீந்தவன் புகழும்
பரியது கொடியினுக் கீந்தவன் புகழும்
எனினும் உயிர்மேல் அன்பிவை. உயிரிலா
காருக்கும் ஆடை உடுத்து.
Quote:
Originally Posted by jaiganes
நல்ல கரு
ஆனால் தளை தட்டுகிறது
உண்டோ (தேமா 11) வுக்குப்ப பின் நிரை வர வேண்டும் வள் - நேரசை
நடமிடும் (கருவிளம் 22) க்குப்பின் நேர் வர வேண்டும் மயி - நிரையசை
கொடுத்தவன் (கூவிளம் 12) க்குப் பின் நேர் வர வேண்டும் உயி - நிரையசை
மிகுந்தது (கருவிளம் 22)க்குப்பின் நேர் வர வேண்டும் உயி - நிரையசை
காருக்குப் (தேமாங்காய் 111) க்குப் பின் நேர் வர வேண்டும் பனி-நிரையசை
நடமிடும் /புரந்தவன் - tense முரண்
'பொருத்தும்' என்ற சொற்பிரயோகமும் கொஞ்சம் இடிப்பதுபோல இருக்கிறது. அல்லது நான் பிழையாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.
நாலாவது அடி மட்டும் வேறு எதுகை. bis_mala, இப்படி வரும் வகைகள் உண்டா?
Quote:
Originally Posted by P_R
"உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்"
இங்கு உயிரி(ன்) - உயிரி(லா) என எதுகை கிடைக்கிறது.
ஓரடி விட்டு எதுகை வருவதும் உண்டு; ஆகையால், OK.
இந்தப் பாடலைச் செப்பம் செய்து வெண்பாவாக்கிப் பாருங்கள்...
எப்படி உருக்கொள்கிறது என்று பார்ப்போம்.
முதல் திருத்தம்..Quote:
Originally Posted by bis_mala
உலகம் கண்டிரா வள்ளலே வானமே!
கலகம் ஒன்றிலை தேர்ந்ததோர் விடையிது.
பழகும் கொடிக்குத் தேரினைத் தந்தவர்
உலவும் மயிலுக்குப் போர்வையை ஈந்தவர்
உயிரெனத் தேர்ந்து உதவியை அளித்தார்
உருளும் சகடம் உயிரிலாதோர் உலோகக்
காருக்குப் பாலுடை தரும்.
நீங்கள் சொல்வது சரிதான்.....ஆனால், முயலுக்காக அம்பெய்-Quote:
Originally Posted by P_R
த வேடன்முன், செடிமறைவிலிருந்து புலியொன்று தோன்றி-
னால், சமாளிக்க இயலாத அளவுக்குப் பேரிடர் ஆகித்
தத்தளிக்க மாட்டானோ? ஆகவே வேடனின் திறன் இங்கு
கேள்விக்குறி ஆகிவிடுகின்றதன்றோ....
வல்லனவெல்லாம் நல்லனவென்று .... எப்படி......?
நன்று! இருப்பினும் முதலிரண்டு அடிகளில் மோனை போடQuote:
Tried a change
Quote:
சொல்ல நினைத்ததை யாப்புக் கலத்தினில்
அள்ள சிறிதேதான் மிஞ்சியதே - வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்
முயலலாமே.....try a little bit more.......
உலகம் (புளிமா -21) should be followed by நிரை (2). கண் is நேர்Quote:
Originally Posted by jaiganes
வானமே (கூவிளம் 12) should be followed by நேர். கல is நிரை
...like this check throughout for the following 3rules
மா (X1)- followed by நிரை
விளம் (X2) - followed by நேர்
காய் (XX1)- followed by நேர்
Tried this:Quote:
Originally Posted by bis_mala
I wanted to retain யாப்புக் கலத்தினில் for the pun.Quote:
உள்ளக் கருத்தினை யாப்புக் கலத்தினில்
அள்ள முடிந்தது அற்பம்தான் - வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்
So in the first line I only got the 2,4 மோனை