Yahoo Waiting for RAJA Superb thriller, action, adventure where NT will be lean Charismatic.
Printable View
Yahoo Waiting for RAJA Superb thriller, action, adventure where NT will be lean Charismatic.
'ராஜா'ன்னா ராஜாதான்...
அனைவரும் எதிர்பார்க்கும் 'ராஜா' வருகிறார்.
http://i1087.photobucket.com/albums/...n31355/R-7.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'பாசமலர்' காவியத்தின் காலத்தை வென்ற நடிகர் திலகத்தின் நடிப்புக் காட்சி.
"நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கௌரவத்தை இழப்பதை விட கூட்டத்தை இழப்பது மேல்" (ஆத்திரத்தையும் கோபத்தையும் கண்கள் அனலாய் கக்க, குரலின் வேகம் படிப்படியாக உயர, கொந்தளிக்கும் உணர்ச்சியை சற்றே அடக்கிக் கொண்டு, புருவங்களை உயர்த்தி, வெறிகலந்த பார்வையை ஓரக்கண்களால் ஆனந்தன் (ஜெமினி) மேல் படரவிட்டு, கோபத்தின் உச்சத்தை பென்சிலைக் கத்தியால் சீவிக்கொண்டே காட்டி, வெறியை வெளிப்படுத்தும் வேங்கைத்தனம்).
"பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா"...(மற்ற விரல்கள் மூடியிருக்க இடது கை கட்டை விரல் மட்டும் முற்றிலும் இடப்பக்கம் நோக்கி சுட்டிக் காட்டும்)
"புற்றுக்கருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா"... (அதே கட்டை விரல் பாம்பு படமெடுத்தாடுவதை நர்த்தன அசைவுகளில் நயமாக, நரித்தனமாக உணர்த்தும்)
"காட்டுக்குள்ளே குழி பறிப்பது யானை ஒய்வு பெறுவதற்காகவா"...
"கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா"... (ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல்களின் இடையே சற்றே மடக்கிய சீரான இடைவெளியில் மூன்று விரல்களும் அரைவட்ட எதிரும் புதிருமான சுழற்சியில் அல்லோலகல்லோலப் படுத்தும் )
"இல்லை... இதெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற பேய்வெறி (கடுமை கலந்த சிரிப்புடன் 'ம்'..என்று சொல்லாமலேயே உதடுகளைக் குவித்து மேலும் கீழுமாக ஒரு தலை அசைவு) அந்த வெறிதான் உனக்கு...பெயர் பொதுநலம்".(கேலியும், கிண்டலும் கலந்த நக்கல் சிரிப்பு)
"இப்படியெல்லாம் பேதங்கள் பேசி பிளவு உண்டாக்குவதற்காகத்தான் (சுழலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது வலது காலை ஷூவுடன் தூக்கி முன் இருக்கும் மேஜை மீது ஆணவத்துடன், முதலாளி என்ற கர்வத்துடன் 'டக்'கென வைத்தல்) அன்று என்னிடம் பிடிவாதமாக வேலை கேட்டாய்"
ஜெமினியின் வார்த்தைகளில் கோபம் தலைக்கேறி, எரிமலையாய் நாற்காலியை விட்டு 'மிஸ்டர் ஆனந்த்' என்று சுழல் நாற்காலியை வேகமாகச் சுழற்றி விட்டு எழுந்து "I am the whole proprietor of the concern...I can do what for I like" என ஆங்கிலத்தில் கர்ஜித்து முழங்கி....
எழுத ஆரம்பித்தால் திரியின் பக்கங்கள் போதாது...
அந்த நடிப்பு ராட்சஷரின் மேற்கூறிய அட்டகாசங்கள் முதன் முறையாக இணையத்தில் வீடியோவாக உங்கள் பார்வைக்கு.
http://www.youtube.com/watch?feature...&v=rpCAfFYUAGA
அன்புடன்,
வாசுதேவன்.
facebook இணையதளத்தில் (Thamizhthirai.com) தரவேற்றப்பட்டுள்ள 'பாசமலர்' திரைக்காவியத்தின் வெள்ளிவிழாக் காட்சிகளின் மிக மிக அரிதான வண்ணப் புகைப்படங்களின் அணிவகுப்பு.(சாம்பிளுக்கு சில)
http://a3.sphotos.ak.fbcdn.net/hphot...30073879_n.jpg
http://a6.sphotos.ak.fbcdn.net/hphot...62569333_n.jpg
http://a5.sphotos.ak.fbcdn.net/hphot...90281752_n.jpg
http://a1.sphotos.ak.fbcdn.net/hphot...96775106_n.jpg
http://a4.sphotos.ak.fbcdn.net/hphot...94147290_n.jpg
அனைத்து புகைப்படங்களையும் காண இணைப்பு கீழே
http://www.facebook.com/media/set/?s...1129531&type=3
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்
பாசமலர் வெள்ளி விழா நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள்.... ஆஹா...அன்று காணக் கிடைக்காதவை இன்று நம் கண்முன்னே .. இதை தரவேற்றியவருக்கும் நன்றி, இங்கே பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
மிக மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தாய் திரைப்படம் தற்போது நெடுந்தகடாக...
http://i1146.photobucket.com/albums/...OTEESVARAN.jpg
http://i1146.photobucket.com/albums/...SVARANREAR.jpg
டியர் கோபால் பாசமலரே!
தங்கள் உன்னதப் பாராட்டிற்கு நன்றி! என்ன இது?... குட்டுக்கள் வாங்க நான் என்ன சத்ருவா?... பாசப் பாராட்டுக் குட்டுகளுக்கும், சத்ருவுக்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாதவனா நான்? ஓடமாட்டேன்.... இங்கேயேதான் இருப்பேன். (தலைவர் என் உயிர்க் காவியமான 'ஞான ஒளி'யில் சொல்வது போல) போதுமா?... குட்டுக்கள் வாங்க என்னை விட திறமைசாலி நீங்கள்தான்...ஹா ஹா ஹா...சோஜ்ஜா ராஜகுமாரி சோஜ்ஜா.
மிக மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தாய் திரைப்படம் தற்போது நெடுந்தகடாக...
டியர் ராகவேந்தர் சார்,
நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த "தாய்" படம் பற்றிய தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி!
டியர் வாசு சார்,
'பாசமலர்' திரைக்காவியத்தின் வெள்ளிவிழாக் காட்சிகளின் போது எடுக்கப்பட்ட தலைவரின் வண்ணப் புகைப்படங்கள் மிக அரிதான ஒன்று! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!!!
For us all NT movies sorgamthan. But when we rerelease these movies, I feel personally that encashing upon the grand gala success of Karnan we must be cautious in selecting the priority for rereleases. otherwise, I fear that dilution will be there in rejuvenating the fan base for our NT from the current generations. When we are thinking of VPKB on the anvil, if we rerelease in a hasty manner without modern formatting and color enhancements, will it not affect the succession of success by VPKB following the footsteps of Karnan? Rerelease is the right of the person owning the movie but I sincerely feel that if we plan meticulously with a priority of rereleases then we really do the respectful homage to our NT. VPKB, Pudhiya Paravai, Thiruvilayadal, Vasantha Maligai, Sivandha Mann, ... like that. No doubt Raja and Sorgam are fine but before release reediting and quality improvisations shall be contemplated. Padharadha Kariyam Sidharadu!
வடசென்னை தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள mm திரையரங்கில் நாளை 22.06.2012 முதல் தினசரி 4 காட்சிகளாக கர்ணன் திரையிடப் படுகிறது.
டியர் செந்தில்,
தங்கள் கருத்தில் உள்ள ஆதங்கம் நியாயமானது. ஒலி ஒளி நவீன மயமாக்கலுடன் திரையிடப் படக் கூடிய படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் உள்ள வேறுபாடு படங்களின் மறு வெளியீட்டினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தங்களுக்குத் தெரியாததல்ல. சாதாரணமாக வெளியீடு செய்யப் படக்கூடிய படங்களே நவீன மயமாக்கலுடன் மீண்டும் மறு வெளியீடு செய்யப் பட்டாலும் கூட வரவேற்பில் நிச்சயமாக வேறுபாட்டைக் காணும். காரணம் அதன் தாக்கம், சூழல், அரங்குகளின் தன்மை இவையெல்லாம் காரணிகள். அதனால் தாங்கள் அச்சப் படத் தேவையில்லை. நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்த வரையில் முதல் வாரம் சாதாரணமான பிரதியில் திரையிடப் பட்டு மறு வாரம் நவீன மயமாக்கலுடன் வித்தியாசமான பெரிய அரங்குகளில் திரையிடப் பட்டாலும் கூட இரு தரப்பு விநியோகஸ்தர்களுக்கும் வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
உதாரணத்திற்கு ராஜா முதன் முதலில் 1972ல் திரையிடப் பட்ட போதே தேவி பேரடைஸ் திரையரங்கில் அப்படத்தைப் பார்த்தற்கும் மற்ற திரையரங்குகளில் அப்படத்தைப் பார்த்தற்கும் வேறு பாடு தெரிந்தது. தேவி பேரடைஸின் அப்போதைய நவீன ஒலியமைப்பில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையில் டைட்டில் கார்டில் ராஜா என்ற கோரஸ் குரல் தேவி பேரடைஸில் தனி ஈர்ப்பினை அளித்தது. அதற்காக அப்படத்தின் வெற்றி தேவி பேரடைஸோடு நின்று விடவில்லை. இது ஒரு உதாரணமே.
அன்புடன்
கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீட்டு 100வது நாளையொட்டி காணப்படும் சுவரொட்டிகள்
திவ்யா பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்
http://i872.photobucket.com/albums/a...hdayPoster.jpg
ரசிகர்கள் சார்பில் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்
http://i872.photobucket.com/albums/a...100thday01.jpg
தங்களின் தெய்வீகப் பாராட்டுக்கு பணிவான நன்றிகள், அடிகளாரே..!
நன்றி, சந்திரசேகரன் சார்..!
டியர் வாசுதேவன் சார்,
நடிப்பு ராட்சஸர், பார்ப்பவர் அனைவரையும், அல்லோலகல்லோலப்படுத்தும் அட்டகாச காட்சியின் வீடியோவை ஒரு வீரியமான ஆய்வோடு வழங்கியமைக்கு உளப்பூர்வமான பாராட்டுக்கள்..!
"பாசமலர்" வெள்ளிவிழா புகைப்படங்கள் கிடைத்தற்கரியது..! இணையத்தில் அவற்றை தரவேற்றியவருக்கு இமாலய நன்றிகள் என்றால் இங்கே இடுகை செய்த தங்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள்..!
[சென்ற வருடம்(2011), "பாசமலர்" காவியத்தின் பொன்விழா நிறைவின்போது, நமது ராகவேந்திரன் சார் இந்த வெள்ளிவிழா வண்ணப் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே இடுகை செய்து, ஏனைய புகைப்படங்களைக் காணச் சுட்டியையும் அளித்திருந்தார் என்பதும் இவ்வமயம் குறிப்பிடத்தக்கது..!]
டென்னிஸ் பேட்டுடன் நமது "ராஜா", திவ்யம்..!
அன்புடன்,
பம்மலார்.
THE ONE & ONLY "ராஜா" [வெளியான தேதி : 26.1.1972]
சிறப்புப்பதிவு
[அருமைச் சகோதரர் mr_karthik அவர்களின் அன்புக்கட்டளைக்கிணங்க..]
சாதனைச் செப்பேடுகள்
கலைக்குரிசிலின் கொடைக்கரங்கள்
தேசிய திலகம் அளித்த நன்கொடை : குமுதம் : __.1.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5949-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5946-1.jpg
'50 நாள் வசூல் சாதனை' விளம்பரம் : தினத்தந்தி : 19.3.1972
["ராஜா"வின் வெற்றிகரமான 54வது நாளன்று வழங்கப்பட்ட சாதனை விளம்பரம் இது]
http://i1110.photobucket.com/albums/...GEDC5947-1.jpg
பிரம்மாஸ்திரம்
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 4.5.1972
[இந்த பிரம்மாஸ்திரத்தை 'சிவாஜி மதம்' சார்ந்த எவரும் பிரயோகிக்கலாம்]
http://i1110.photobucket.com/albums/...GEDC5940-1.jpg
50வது நாள் விளம்பரம் (இலங்கை - யாழ்ப்பாணம்) : மின்மினி (இலங்கை சினிமா இதழ்) : 20.5.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5948-1.jpg
குறிப்பு:
அ. சூப்பர்ஹிட் காவியமான "ராஜா" 100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - தேவிபாரடைஸ் - 108 நாட்கள்
2. சென்னை - ராக்ஸி - 101 நாட்கள்
3. மதுரை - சென்ட்ரல் - 101 நாட்கள்
4. திருச்சி - பேலஸ் - 101 நாட்கள்
5. கொழும்பு (இலங்கை) - சென்ட்ரல் - 100 நாட்கள்
ஆ. சென்னை 'அகஸ்தியா'வில் 78 நாட்கள் ஓடி அட்டகாச வெற்றி கண்ட "ராஜா", தமிழகத்தில் வெளியான ஏனைய எல்லா அரங்குகளிலும் 44 நாட்கள் முதல் 78 நாட்கள் வரை ஓடி பம்பர்ஹிட்.
இ. ஸ்டைல் சக்கரவர்த்தியின் ரசிகர்களுக்கென்று ஒரு ஸ்பெஷல் காவியம் என்றால் அது "ராஜா".
பக்தியுடன்,
பம்மலார்.
அந்த சர்ப்ரைஸ் பதிவு நாளை..!
வாசு சார், அந்த ஆச்சரியப் பதிவைக் கண்ட குதூகலத்தில், தாங்கள், வானுக்கும் பூமிக்கும் குதிக்கப் போகிறீர்கள்..!
அன்பு பம்மலார் சார்,
'பாசமலர்' பதிவுகளுக்கு தங்களின் விலையில்லா மதிப்பு மிக்க பாராட்டு என் மீது தாங்கள் கொண்ட அளவில்லாத பாசத்தை குறிக்கிறது. மிக்க நன்றி!
THE ONE & ONLY "RAJA" ராஜாவுக்கெல்லாம் நான் தான் ராஜா என்று சொல்லாமல் சொல்லுகிறது.
பதிவுகளின் ராஜா நடிப்புலக ராஜாவின் சாதனை செப்பேட்டு விளம்பரங்களை பதித்து பட்டை கிளப்பி விட்டார். அதுவும் பிரம்மாஸ்திரம் பிரமாதத்திலும் பிரமாதம். திரியின் பத்தாம் பாகத்தின் 23-ஆவது பக்கம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.
தேசிய திலகம் 'ராஜா' மூலம் விமானப் படையில் பணிபுரிந்து நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈன்ற வீரர்களின் மனைவிமார்களுக்கு ஷேம நலநிதி அளித்தது இவர்தான் உண்மையான வள்ளல் என்பதைக் காட்டுகிறது.
அருமையான 'ராஜா' பதிவுகளை அளித்த 'ராஜா'வின் ரோஜாவே! பிடியுங்கள் என் அன்புப் பரிசாக
http://stat.homeshop18.com/homeshop1..._HS18-1273.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பு பாராட்டு மழையில் என்னை நனைய விட்டு திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். நேற்று நாம் இருவரும் கைபேசியில் உரையாடும் போது 'பாசமலர்' பதிவுகளை நேரிடையாக பாராட்டியதற்கு என் இதயம் மலர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சொர்க்கத்தை வரவேற்க சிவப்புக் கம்பள விரிப்பு அட்டகாசமாக தயாராகி விட்டதே! ஆர்ப்பாட்டமான வரவேற்பு.
'தாய்' படம் நெடுந்தகடாக வந்த தகவலை அளித்து எங்களுக்கெல்லாம் தாயாக வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள். அனைவரின் நெடுநாளைய கனவு 'தாய்' நெடுந்தகடு. நன்றி!
செந்தில் அவர்களின் கருத்திற்கான தங்கள் பதிவு உண்மையிலேயே அருமை. நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையில் 'டூரிங்' தியேட்டர் ஆனாலும் சரி, மல்ட்டி காம்ளெக்ஸ் தியட்டர்கள் ஆனாலும் சரி வெற்றியில் வித்தியாசம் ஏது? அருமையான பதிவு.
கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீட்டு 100வது நாள் சுவரொட்டிகள் வெற்றிக் கம்பீரத்தோடு பவனி வருவதை பதிவு செய்தமைக்கு நன்றி!
டியர் சந்திர சேகரன் சார்,
பதிவுகளுக்கான தங்கள் உடனடி அன்புப் பாராட்டுதல்களுக்கு அருமை நன்றிகள்.
நலத்திட்டங்களுக்கோர் ஒரு நற்பேரவை கண்ட தங்களின் நலத்திட்ட உதவிகள் தொடரட்டும். 20.6.2012 புதனன்று, சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்துடன் இணைந்து வடசென்னை மாவட்ட சிவாஜி பேரவை மிக விமரிசையாக நடத்தும், மாணவ-மாணவியருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் பெருவிழா ஒரு பெருமைமிகு விழா.
Deccan Chronicle - 21-06-2012 பதிவிற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
டியர் ஜேயார் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்ற்கள். ஒரு வழியாக 'தாய்' நம்மை வந்து அடைந்து விட்டாளே!
கர்ணன் 100வது நாளையொட்டி அடியேன் உருவாக்கிய எளிய டிசைன்
http://i872.photobucket.com/albums/a...AYDESIGN01.jpg
சிவாஜி செந்தில் சார்,
உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். இந்த பிரம்மாண்ட வெற்றி எனக்கு சிறிது பயத்தையும் கொடுக்கிறது. புற்றீசல்களாய் படங்கள் ரிலீஸ் செய்ய பட்டு சரியான பிரிண்ட், எடிட் செய்ய படாமல்,சரியான contamporary appeal உள்ள படம் தேர்வு செய்ய படாமல், போதிய கவனிப்பை பெறாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். நாம் அந்த காலத்தில் திட்டமிடாமல், marketing துறையில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்தது போல் இந்த காலத்திலும் இருக்கலாகாது. சொக்கலிங்கம் நமக்கு அருமையான பாதையை ,துவக்கத்தை கொடுத்துள்ளார். வெற்றியின் போதுதான் மிக மிக எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
இனி நாம் தேர்ந்தெடுக்க கூடிய படங்கள்-
உத்தம புத்திரன்- வர்ணம்,டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன்.-சரியாக எடிட் செய்ய பட்டு.
வீர பாண்டிய கட்ட பொம்மன்- இரண்டு மணி நேர படமாக,டிஜிட்டல் உடன்.
திருவிளையாடல்- அப்படியே-மீனவ காட்சிகளை தூக்கி விட்டு.
புதிய பறவை- மெருகேற்றி, அசல் இசையை கெடுக்காமல் டால்பி செய்து, ராமசாமி,நாகேஷ் ,எ.கருணாநிதி காட்சிகளை கொளுத்தி விட்டு.
சிவந்த மண்- அப்படியே.
வசந்த மாளிகை-
சொர்க்கம் தவிர்க்க வேண்டிய படம்.எனக்கு சுத்தமாக உடன் பாடில்லை.கர்ணனுக்கு அடுத்து வர அருகதை அற்றது.
பம்மலாரே,
அழகான பிரம்மாஸ்திரம். முக்கியமான சமயத்தில் மறந்து போனால் மீண்டும் திரியில் பார்த்து விடலாம். ஆனால் கொடுக்க தாமதம் ஆனதால்,மாணவர் கோபித்து சென்று விட்டார் போலும். காணவே இல்லையே!!??
வாசு சார்,
உங்களுக்கு குட்டுகளை தாங்கும் வல்லமையை வளர்த்த பெருமை என்னை சாரட்டும். அது என்ன சார், நீங்கள் மன்னவன் வந்தானடி கேசா?இல்லை நான் புலியா?உங்கள் பெரிய பதிவுகளை விட மிக சிறிய பதிவுகள் எங்களை ரொம்ப யோசிக்க வைக்கின்றன.
டியர் பம்மலார் சார்,
பிரம்மாஸ்திரத்தை மறக்காத கர்ணன் நீங்கள்.. தங்களுக்கு மட்டும் அது மறக்காது என்ற ஆசீர்வாதம் உண்டு. சமயம் பார்த்து ஏவும் வல்லமை படைத்தவர் நீங்கள். கீப் இட் அப். ராஜா 100 காட்சிகள் அரங்கு நிறைந்த மறுநாள் தியேட்டரில் நண்பர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது. தேவி பேரடைஸின் பின் பக்க வாசல் திறந்திருந்தாலும் அந்த வழி தூரம் சற்றுக் குறைவு என்றாலும் அண்ணா சிலையருகில் ராஜா விற்காக வைக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்டமான பேனரைப் பார்ப்பதற்காகவே அந்த வழியே வீட்டுக்கு செல்வோம். மஞ்சள் உடையில் டையுடன் இரு கைகளையும் சவாலுக்கு அழைக்கும் வகையில் வைத்துக் கொண்டு நிற்கும் அந்த போஸ் பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. அந்த போஸ் படத்தில் இடுப்பு வரையில் தான் வரும். முழு போஸும் பேனரில் மட்டுமே இடம் பெற்றது. அந்த பேனரைப் பார்க்க வேண்டுமானால் பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் நடிகர் திலகத்தைக் காரில் அழைத்துச் செல்லும் காட்சியில் பார்க்கலாம்.
வாசு சார் அந்தக் காட்சியிலிருந்து அந்த பேனரின் நிழற்படத்தை எடுத்து இங்கே இடுகை செய்ய முடியுமா.
அன்புடன்
NT eleder son Thalapathy Ramkumar is acting in Director's Shankar's movie IN an important Character. Wishing him all the best
I too agree with Gopal Sir, the then fans were helpless in making the deserved NT movie 100 days movie not been able to do anything to run for 100 days as other movie might be waiting which must not be done now . All I wish to suggest is select NT 50 movies social, mythological, fantasy may conduct a poll among members of the thread , accept suggestions and then proceed because what shanti Chokalingam has given (momentum) must not be spoiled , if done so we will be back to square.
BUt Thruvilayadal Fisher man Scene's must not be cut NT unique walk in that portion will be missing. Also calling a movie like sorgam unfit after Karnan is bit too much but it might be a variety for audience
Gopal sir I too prefer Uthmaputhiran in Colour form as many people might not have seen it
ராஜா- 1972
என்னால் மட்டுமல்ல. எந்த சிவாஜி ரசிகராலும்(மற்றவர் ரசிகர் ஆனாலும்) மறக்க முடியாத படம். ஆனந்த விகடன் விமரிசனம் சொன்னது "ஜேம்ஸ்பேண்ட் " என்றாலே அடி,உதை, குத்து என்று மட்டுமே இருந்ததை மாற்றி ,அதை இவ்வளவு ரசிக்கும் படி ,பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை, வித்யாசமான சிவாஜி " என்று பாராட்டியது. தங்க சுரங்கம் மிதமான வெற்றியை பெற்றதால் சிறிது ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு உற்சாக பானமாய் ராஜா. உடையில்,நடையில்,பார்வையில் ,பேச்சில் ,இளமையில்,காதலில்,மோதலில் துள்ளோ துள்ளு என்று துள்ளும்.மன்மதனை வெட்கி தலை குனிய வைக்கும் ஆண்மையான அழகு. ராஜான்னா ராஜாதான் என்பது போல் NT னா NT தான். 1972 இன் இமாலய வெற்றி படங்களை துவங்கி வைத்தது ராஜாதான்.(பாபுவிற்கு பிறகு அடுத்த படம் என்றால் எங்கள் சிவாஜியின் நடிப்பின் range புரிந்திருக்க வேண்டுமே??)
எனக்கு பிடித்த பல பல காட்சிகள் -பட்டியல் இட பக்கங்கள் போதாதையா. உதாரணம் சில- ஆரம்ப அறிமுகம் மனோகர் உடன், டென்னிஸ் பேட் காட்சி,
ஜெயலலிதாவுடன் அறிமுக அசத்தல், நீ வர வேண்டும், பாலாஜியுடன் விசாரணை காட்சி(வில்லன்களின் விசாரணை), ரந்தாவுடன் அவருடைய மிக சிறந்தது என்று நான் கருதும் சண்டை காட்சி, கல்யாண பொண்ணு,இரண்டில் ஒன்று, உச்ச காட்சி .
நான் சுமார் 100 முறையாவது பார்த்திருப்பேன்.
COLOURFUL AND ATTRACTIVE YOUR KARNAN DESIGN raghavender sir.
shanthi chokalingam has given us a very good start As our members say we must be very cautious in selecting the movies for digital version to maintain the karnan success rate.
my choice obviously Pudiyaparavai and Uttama putrian at the moment.
celebrating the mega success with all my fellow NADIGARTHILAGAM fans PROUDLY.
http://www.nadigarthilagam.com/image...umarspeaks.jpg
from http://timesofindia.indiatimes.com/e...w/14319729.cmsQuote:
Ace cinematographer P C Sreeram has been roped in by Shankar for his next with Vikram and Samantha, which has been titled I.
A source close to the unit reveals, "The Tamil alphabet 'I' has several meanings including beauty, king, vulnerability, music, guru and fear. Similarly, the film will have various facets which will be explored by Shankar. It's a romantic thriller, and we've already recorded a song with Vijay Prakash, which has been set to tune by A R Rahman. Mollywood actor Suresh Gopi and Ramkumar Ganesan will also be part of this multi-starrer, which will go on floors in Chennai from July 15. We've also roped in several Hollywood technicians for costumes and special effects."
டியர் ராகவேந்திரன் சார்,
'பட்டிக்காடா பட்டணமா'வில் நீங்கள் குறிப்பிட்டிருந்த நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.
http://i1087.photobucket.com/albums/..._002681014.jpg
மற்றும் அப்போது 'சாந்தி' யில் ஜெய்சங்கர் நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஓடிகொண்டிருப்பதைக் காணலாம்.
http://i1087.photobucket.com/albums/..._002685652.jpg
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 2.
படம்: ராஜா
வெளிவந்த ஆண்டு: 26.1.1972
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
சண்டைப்பயிற்சி : மாதவன்
நடிகர் திலகம் மோதும் வில்லன்: ரந்தாவா
இயக்கம்: சி.வி.ராஜேந்திரன்.
"Excuse me mam"என்று 1972-லேயே சொல்லும் ஸ்டைல்
வில்லனை விழுங்கும் ஏளனப் பார்வை
விழுந்தவுடன் துள்ளி எழுந்து நிற்கும் வேகம்
தீர்க்கமாக எதிராளியைக் கணிக்கும் கழுகுக் கண்கள்
வில்லனைக் கண்ணடித்து வெறுப்பேற்றும் நக்கல்
எதிரியின் பிடியில் சிக்கும்போது வலியை உதட்டைக் கடித்து வாய்வழி காண்பித்தல்
கழுத்தில் தொங்கும் மிக அழகான அந்த சின்ன கருப்பு 'டை'
டார்க் ப்ளூ பேன்ட், ஓவர்கோட், உள்ளே தெரியும் வெள்ளை நிற ஷர்ட்
'ஸ்டைல்' என்ற சொல்லின் மொத்த உருவமே!
உன்னை வெல்ல இனி உலகில் யார்?
முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YCcymIVgvf4
அன்புடன்,
வாசுதேவன்.
"Excuse me mam"என்று 1972-லேயே சொல்லும் ஸ்டைல்
வில்லனை விழுங்கும் ஏளனப் பார்வை
விழுந்தவுடன் துள்ளி எழுந்து நிற்கும் வேகம்
தீர்க்கமாக எதிராளியைக் கணிக்கும் கழுகுக் கண்கள்
வில்லனைக் கண்ணடித்து வெறுப்பேற்றும் நக்கல்
எதிரியின் பிடியில் சிக்கும்போது வலியை உதட்டைக் கடித்து வாய்வழி காண்பித்தல்
கழுத்தில் தொங்கும் மிக அழகான அந்த சின்ன கருப்பு 'டை'
டார்க் ப்ளூ பேன்ட், ஓவர்கோட், உள்ளே தெரியும் வெள்ளை நிற ஷர்ட்
'ஸ்டைல்' என்ற சொல்லின் மொத்த உருவமே!
உன்னை வெல்ல இனி உலகில் யார்?
+1000000000000000000000000000000000000000000000000 000000000000000000000000000 %
நன்றி கோபால் சார். மிக்க நன்றி! தங்களுக்கும் எனக்கும் ராஜாவைப் பொறுத்தவரையில் ஒரே ரசனை என்பது ஆச்சரியமான, பெருமைப்படவேண்டிய + விஷயமல்லவா!
'Raja' The famous title show stills
http://i1087.photobucket.com/albums/..._000054427.jpg
http://i1087.photobucket.com/albums/..._000041848.jpg
http://i1087.photobucket.com/albums/..._000049922.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நாளை...
ஸ்டைல் சக்கரவர்த்தி "ராஜா"வின் கண்கவர் சிறப்பு நிழற்படங்கள் என்றும் மறக்க முடியாதபடி.
http://t3.gstatic.com/images?q=tbn:A...Rq3BP70XkUpk8w
அன்புடன்,
வாசுதேவன்.
dear Gopal Sir. I thank you very much for having expressed similar feelings. All NT movies are classics but for a modern day rerelease to cope up with the present generation's tastes, a lot of careful editing, coloring or color enhancements,wide screening, 3D with audio corrections.. are required. A lot of patience and painstaking efforts only can convert all these movies to stage a successful return to find the place in the young minds. B/W classic Films like Uththama Puththiran, Thookkuth thookki,Parasakthi, Manohara, Deiga Magan, Gnana Oli,Uyarndha Manithan, Pattikkada Pattanama, Vietnam Veedu, Babu, Bale Pandiya, Kappalottiya Thamilan,and all the Pa series with Bhimsingh need conversion to color and digitization. As far the priority is concerned for the color classics in my humble opinion the order or sequence shall be VPKB, Pudhiya Paravai, Vasantha Maligai, Thiruvilayadal, Thillana Mohanambal, Sivandha Mann, Saraswathy Sabatham, Thiruvarutchelvar,OOty varai Uravu, Thangappathakkam, Gauravam,Thirisoolam, Sumathi En Sundari, Sorgam, Engirundho VAndhal, Mudhal Mariyadai,.... like that the acting prowess of NT will be deeply implanted coupled with grand success like Karnan, if meticulously planned.