http://youtu.be/stzaQakDNBw
Printable View
ராமமூர்த்தி சார்,
மலைக்கள்ளன் படத்தின் வீடியோ பதிவிற்கு நன்றி.
செல்வகுமார் சார்.
மலைக்கள்ளன் படம் பற்றி மேலும் பல தகவல்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மேலும் ஒவ்வொரு பாடலையும் குறிப்பிடும் போது அந்தப் பாடலை எழுதியவர் யார், பின்னணி பாடியவர்கள் யார் என்ற விபரங்களையும் பதிவு செய்ய தங்களை ஏற்கனவே கேட்டுக் கொண்டேன். அதனை மறுபடியும் நினைவுபடுத்துகிறேன். நன்றி.
மக்கள் திலகத்தின் ''மலைக்கள்ளன் '' படம் பற்றிய பதிவுகள் - தகவல்கள் - வீடியோ வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திரியின் நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் இனிய தகவல் .
நம் ஆவணதிலகம் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான ''மக்கள் திலகம் மலர் மாலை ''-1
முதல் பதிப்பு வெற்றிகரமாக பெங்களுர் நகரில் 14.4.2013ல் நடந்தேறியது .
தற்போது மக்கள் திலகத்தின் மலர்மாலை -1 இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு வர உள்ளது .
1.9.2013 ''இதயக்கனி '' மாத இதழின் பின் அட்டையின் உள் புற அட்டை படத்தில்
மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 விளம்பரம் வந்துள்ளது .
http://i1273.photobucket.com/albums/...ps8f610845.jpg
மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக விமர்சனம் .
எம்ஜியார் ரசிகர்கள் கூறிய கருத்துக்கள்
.
வின்ஸ்டன் டான் - என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த மலர் மாலை புத்தகம் மூலம் நிறை வேறி உள்ளது .
ரவி .- மக்கள் திலகத்தின் அட்டகாசமான .இது வரை பார்க்காத நிழற் படங்கள் அடங்கிய தொகுப்பு பிரமாதம் .
நீலகண்டன் - திரு பம்மலாரின் தலையங்கம் - வைர வரிகள் .
முரளி - 134 எம்ஜிஆர் படங்களும் மனதை கொள்ளை அடிக்கிறது .
வெங்கடேஷ் - எம்ஜிஆருக்கு இந்த மாதிரி யாரும் இது வரை புத்தகம் போடவில்லை .
மோகன் குமார் - உலக தரம் வாய்ந்த உன்னத புத்தகம் .
http://i39.tinypic.com/6tp7o5.jpg
மணி - எம்ஜிஆரை நேரில் பார்ப்பது போல உணர்வு தூண்டுகிறது .
கண்ணன் - புதுமையான முயற்சி -திரு பம்மலாரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .
கஜநாத் சிங்- எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்யும் இந்த காலத்தில் இப்படி ஒரு மெகா சைசில் மக்கள் திலகத்தின் சினிமா படங்கள் வந்திருப்பது சாதனையே .
ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .
தாமஸ் - எங்கள் எம்ஜிஆரின் எல்லா போஸ் படங்களும் சூப்பர் .
யூனுஸ் - உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ எம்ஜிஆருக்கு இப்படி ஒரு பிரமாண்ட மலர் படைத்த திருபம்மலாரை எப்படி பாராட்டினாலும் தகும் .
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரும் ....
வினோத் சார்,
பம்மலாரின் புத்தகத்தை பாராட்டி தங்களிடம் பகிர்ந்து கொண்ட நண்பர்களின் கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.
குறிப்பாக
இந்தப் பாராட்டளித்த ஜெய் சாருக்கும் என் நன்றிகள்.Quote:
ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இக்காலத்தில், இது போன்ற புத்தகத்தை பம்மலார் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களோடு நிறுத்தி விடாமல் அந்தக் காலத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
பொன்மனசெம்மலின் 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" கதைச் சுருக்கம்
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு" ... இது வள்ளுவர் வாக்கு
அந்த பொய்யா மொழியை மெய்ப்பிக்கும் வகையில் நின்றான் மலைக்கள்ளன் !
மலைக்கள்ளன் ..... ஆம், அவன் மலையிலே மறைந்து, வாழும் கள்ளனாகத்தான் காலங் கடத்தி வந்தான். ஏன் ?
கொலை, கொள்ளைகளை நடத்தி, மலை போல் செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்ற பேராசையினாலா ...... ? அல்லது பிறர் துன்பத்தின் மீது
தனது இன்ப மாளிகையை அமைத்துக் கொண்டு ஆனந்த வாழ்வு நடத்த வேண்டுமென்ற எண்ணத்தினாலா ?
இல்லை ; அவன் சுயநலவாதியல்ல ; பொது நலத் தொண்டன் ! அப்படிப்பட்ட அந்த அதிசயக் கள்ளனின் அந்தரங்கம் என்ன ? அவன் மலையிலே மறைந்து வாழ நேர்ந்ததின் மர்மம் என்ன ?
அதுதான் கதை !
மலைக்கள்ளன் ஏழைகளின் தோழனாக, பகல் வேஷம் போடும் பணக்காரர்களின் பரம வைரியாக வாழ்ந்தான். துஷ்டர்களை அடக்கும் முயற்சியில் துணிகரமான செயல்களைச் செய்தான். அதனால், உண்மையறியாத உலகம் அவனுக்கு "கொலைகாரன்", "கொள்ளைக்காரன்" என்ற பட்டம் சூட்டியது.
சுருங்கச் சொன்னால் விஜயபுரி வட்டாரமே "மலைக்கள்ளன்" என்ற பெயரைக் கேட்டதும், இடியோசை கேட்ட நாகம் போல பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.
பூங்கோதை, விஜயபுரி மிராசுதாரான சொக்கேசமுதலியாரின் ஒரே மகள் அழகில் அல்லி மலர்.; தைரியத்தில் அல்லி ராணி. அவள் மீது மையல் கொண்டான் வீரராஜன். வீரராஜன், சொக்கேசரின் தங்கை மகன் தான். ஆனால் அவனுக்கு பெண் தர சொக்கேசர் விரும்ப வில்லை. பூங்கோதையும் சம்மதிக்க வில்லை. காரணம் வீரராஜன் ஒரு அழகு விரும்பி. ... அயோக்கிய சிகாமணி என்பது தான்.
வீரராஜனின் அக்ரமச் செயல்களுக்கு அவனது அத்யந்த நண்பரான குட்டிபட்டி ஜமீன்தார் உடந்தையாக இருக்கிறார். அவர்களுக்கு கொள்ளை காத்தவராயன் கையாளாக இருக்கிறான். ஒரு நாள் சொக்கேசர் பூங்கோதைக்கு மாப்பிள்ளையைத் தேடி வெளியூருக்கு போயிருந்த சமயத்தில், வீரராஜன், காத்தவராயனை
ஏவி, நள்ளிரவிலே பூங்கோதையைத் தூக்கிவரும்படி செய்கிறான்.
ஆனால், இதை தன் சகாக்கள் மூலம் அறிந்த மலைக்கள்ளன், காத்தவரயனின் ஆட்களிடமிருந்து தந்திரமாகப் பூங்கோதையை மீட்டு தன் மலை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் போயிருந்த சமயத்தில் ஏற்பட்ட அவஸ்தைகளை எண்ணி, சொக்கேசர் மிகவும் வேதனை அடைகிறார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும், ஏட் கருப்பையாவும், எப்படியோவது பூங்கோதையை கண்டு பிடித்து வீடு சேர்ப்பதாக ஆறுதல் கூறுகின்றனர்.
மலைக்கள்ளன் வீட்டிற்குச் சென்ற பூங்கோதையை, அங்கிருந்த சின்னி என்பவன் அன்புடன் உபசரிக்கிறான். முதலில் மலைக்கள்ளன் மீது வெறுப்புக் கொண்டிருந்த பூங்கோதை, அவனது நேர்மையான நடத்தையைக் கண்டு, அவன் மீது விருப்பும், விசுவாசமும் கொள்கிறாள் மேலும், பூங்கோதையின் விருப்பபடியே மலைக்கள்ளன், தன் நண்பர் ரஹீமின் கோச்சு வண்டியில் அவளை வீட்டிற்கு அனுப்பவும், அதே சமயத்தில் அவளைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் காத்திருந்த காத்தவராயனது ஆட்கள் ஏமாறும்படி செய்யவும் ஏற்றதோர் திட்டம் வகுத்து அதன்படியே செய்கிறான். அதனால் பூங்கோதையை வீரராஜனிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகப் பெருமை பேசிய காத்தவரயானும் பூங்கோதையை தன் மனைவியாக்கி கொள்ளலாம் என்று பகற் கனவு கண்ட வீரராஜனும் ஏக்கமும், ஏமாற்றமும் அடைகின்றனர். ஆனால் , அதே சமயத்தில் பூங்கோதையை மீண்டும் பார்க்க நேர்ந்த்ததால், காமாக்ஷியம்மாளும், சொக்கேசரும் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகின்றனர்.
இந்நிலையில் குட்டிபட்டி ஜமீன்தார் சொக்கேசருக்கு தர வேண்டிய பாக்கியை பைசல் செய்யும் விஷயமாக சொக்கேசரை அரியபுரத்திற்கு வரும்படி செய்து, அங்கே முன்னேற்பாட்டின்படி அவரை இரகசியமாக ஒரு வீட்டில் போட்டு அடைத்து விடுகின்றனர். வீரராஜன் தனக்குப் பூங்கோதையை கல்யாணம் செய்து கொடுப்பதோடு, அவரது ஆஸ்தி முழுவதையும் தன் பேரில் எழுதி வைக்கும்படியும் சொக்கேசரை வற்புறுத்துகிறான் . மேலும் அவரை வற்புறுத்தி தன் ஆபத்தை நீக்க, உடனே தன்னை வந்து பார்க்கும்படி பூங்கோதைக்கு ஒரு கடிதம் எழுதித் தரும்படியும் செய்கிறான். பிறகு அந்த கடிதத்தை, தனது ஆசை நாயகியான ஜானகியின் மூலம் பூங்கோதைக்கு அனுப்பி, அவளை தந்திரமாகத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறான்.
தந்தையைக் காணத் தவித்து கொண்டிருந்த பூங்கோதையிடம், வீரராஜன் ஆசை வார்த்தைகளைப் பேசி பூங்கோதையை பலவந்தம் செய்யவும் முற்படுகிறான்.
அவனது சூழ்ச்சியை அறிந்து, தடுக்க முன்வந்த ஜானகியின் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறான். அந்த சமயத்தில் மலைக்கள்ளன் அங்கே தோன்றி, அவனைக் கட்டிப் போட்டு விட்டு பூங்கோதையை அவளது வீடு சேர்க்கிறான்.
சொக்கேசரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வெகு சிரமப்பட்டு சொக்கேசரின் இருப்பிடத்தை அறிந்து, அப்துல் ரஹீம் சாயபுவின் உதவியால் தகுந்த ஏற்பாடுகளுடன் சென்று ,சொககேசரை மீட்டு, வீரராஜன் குட்டிபட்டி ஜமீன்தார், காத்தவராயன் ஆகியவர்களை கைது செய்கிறார். மேலும், அப்துல் ரஹீம் தன் நண்பனான மலைக்கள்ளனிடமிருந்து பல கேஸ்களில் திருட்டுப் போன பொருள்களை எல்லாம், அதற்கு சம்பந்தப்பட்ட ஆட்களையும் கொண்டு வந்து சேர்க்கிறார். ஆகவே, மலைக்கள்ளன் மீது சுமத்தப் பட்டிருந்த குற்றங்கள் எல்லாம் நிவர்த்தியாகின்றன.
பூங்கோதையையும், தன்னையும் காப்பற்றியதற்காக சொக்கேசர், அப்துல் ரஹீம், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியவர்களுக்கு ஒரு விருந்து வைக்க ஏற்பாடு செய்கிறார். விருந்தின் போது அப்துல் ரஹீம், சொக்கேச முதலியாரின் குடும்பத்துக்கு மலைக்கள்ளன் செய்த உதவிகளுக்கு பிரதியுபகாரமாக, பூங்கொதையை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படி சொக்கேசரை கேட்கிறார். காமாஷியம்மாள் அதைக் கேட்டு ஆத்திரப்படுகிறாள் .ஆனால், அப்துல் ரஹீம், மலைக்கள்ளனது பூர்வாங்கத்தைப் பற்றிய உண்மைகளைச் சொன்னதும் அவள் ஆத்திரம் ஆனந்தமாக மாறுகிறது.
அப்துல் ரஹீம், மலைக்கள்ளனைப் பற்றி காமஷியம்மாளிடம் வெளியீட்ட உண்மைகள் தான் என்ன ?
மர்ம மனிதனாகவே வாழ்ந்த அந்த மலைக்கள்ளன் யார் ?
அவனது அந்தரங்கங்கள் அனைத்தும் அறிந்த வைத்திருந்த அப்துல் ரஹீம் யார் ?
மலைக்கள்ளன் வீட்டிலிருந்த சின்னி யார் ?
மலைக்கள்ளன் பூங்கோதையின் மீது காதலின் முடிவென்ன ?
என்ற வினாக்களுக்கெல்லாம் விளக்கம் தேவையா ? விரைந்து செல்லுங்கள் பஷிராஜாவின் மலைக்கள்ளனைப் பார்க்க !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.
.
இத்திரியினில் பொன்மனசெம்மலின் முதல் படத்திலிருந்து பதிவிட்டு வரும் படத்தகவல் மற்றும் கதைச் சுருக்கம் இவை யாவும் எனது முன் அனுமதியின்றி புத்தகமாகவோ அல்லது வேறு வடிவங்களிலிலோ பிரசுரிக்கலாகாது.
மீறி வெளியிட்டால் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்களை மலைக்க வைத்த மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படத்தின் கதைசுருக்கத்தை பதிவு செய்த பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இத்தனை கோடி ரசிகர்கள் மத்தியில் உலகநாயகன் எம்ஜிஆர் திரைப்படங்கள் 134-ன் பாட்டுபுத்தங்களை (திரைப்படம் வெளியானபோது வெளியிடப்பட்டது) தன்னகத்தே வைத்து எம்ஜிஆர் ரசிகர்களுக்கெல்லாம் பெரிய ரசிகராக தாங்கள் இருப்பது கண்டு நாங்கள் பேருவகை அடைகிறோம். தங்களின் இதுபோன்ற பதிவுகளை என்றென்றும் எதிர்பார்க்கும்
அன்பன் கலியபெருமாள்
http://i39.tinypic.com/11uzwhk.jpg