பில்ட் up கொஞ்சம் ஜாஸ்தி இல்ல
Printable View
பில்ட் up கொஞ்சம் ஜாஸ்தி இல்ல
நிழல் நிஜமாகிறது 1978
கலாகேந்திர தயாரிப்பு
பாலசந்தர் டைரக்டர் அனந்து உதவி direction
ஆஸ்தான cameraman லோகநாத்
எடிட்டிங் கிட்டு
மேக்கப் சுந்தரமுர்த்தி (இவர் நிறைய படங்களில் நடித்தும் இருக்கிறார் )
இசை வேறு யார் நம்ம மெல்லிசை மன்னர் தான்
கமல், சுமித்ரா,ஷோபா,சரத்பாபு,அனுமந்து (அறிமுகம்) ,பாலகிருஷ்ண மௌலி,ஒரு விரல் கிருஷ்ணா ராவ் ,சுந்தரிபாய்,மனசாட்சி நடராஜன்
இப்படி 9 characters வைச்சு பாலச்சந்தர் உருவாக்கிய படம்
இது ஒரு தெலுகு ரீமேக் என்று சொல்பவர்களும் உண்டு .
"செலேகம்மா செப்பிண்டி1977"
(சங்கீதா சுமித்ரா ரோல்லிலும் ,ஸ்ரீப்ரிய ஷோபா ரோல்லிலும்
ரஜினிகாந்த் கமல் ரோல்லிலும் ,நாராயண ராவ் அனமந்து ரோல்லிலும்
வருவார்கள் சரத்பாபு ரோல் யாருக்கு என்று மறந்து விட்டது
ஆபீஸ் வேலை சமயத்தில் 1985-86 கால கட்டத்தில் கடப்பா வில் ஒரு டென்ட் திரை அரங்கில் பார்த்த நினவு )
மலையாள ரீமேக் என்று சொல்பவர்களும் உண்டு
(அடிமைகள் 1976 என்று நினைவு இந்த படம் பார்த்தது இல்லை.டைட்டில் கூட நினைவில் இருந்து எழுதுகிறேன் தவறாக இருந்தால் திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்)
தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லகூடிய பாத்திரங்களின் பெயர்கள்
சஞ்சீவி,திலகம்,இந்து,சலம் என்கிற வெங்கடாசலம் (இந்த சலம் என்ற பெயரை சுமித்ரா (இந்து) கூபிடுவதே தனி அழகு) ,செவிடன் என்கிற காசி,நாய்டு என்கிற மன்மத நாய்டு,பொன்னம்மா என்கிற புகையிலை கிழவி
location என்று எடுத்து கொண்டால் ஒரு தெரு (காலனி மாதிரி ) எல்லாம்
தனி தனி வீடுகள்
மிக கூர்மையான வசனங்கள்
எடுத்துக்காட்டிற்கு ஒன்று
மன்மத நாயுடு கொஞ்ச நாள் ஊரில் இருக்க மாட்டார்
அதற்குள் திலகம் சலத்திடம் தன பெண்மையை இழந்து கர்பமாகி இருப்பாள் . அதனால் பிரச்சனை ஆகி திலகம் வீட்டை விட்டு துரதபடுவாள் . ஊருக்கு வெளியே குடிசை போட்டு வாழ்ந்து கொண்டு இருப்பாள் அவளுக்கு செவிடன் காசி துணையாக இருப்பன்
ஊரிலிருந்து வந்தவுடன் நாய்டு சொல்லும் வசனம்
"கொஞ்ச நாள் ஊரில் இல்லை.எதாவது விசேஷம் உண்டா "
அதற்கு பக்கதுவீடுகரர் "திலகம் முழுகாம இருக்காளாம் "
உடனே நாய்டு "தெருவில் யாரு காரணம்னு பேசிகிறா "
அதற்கு பக்கதுவீடுகரர் "எல்லோரும் சஞ்சீவிதான் காரணம் " என்பார்
உடனடி reply from நாய்டு "நீ ஒன்னு சஞ்சீவினா இந்துனா முழுகாம இருக்கணும் "
மனதை மயக்கிய காட்சி அமைப்புகள் என்று ஒரு திரி ஆரம்பித்து அந்த திரியில் இந்த மாதிரி நிறைய எழுதலாம்
இனி பாடலுக்கு செல்லலாம்
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே (ஹ ஹ) கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே (ஹ ஹ) கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால்தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால்தானோ
அவள் அருஞ்சுவை பால் என ஏன் சொன்னான் அது கொதிப்பதினால்தானோ
(கம்பன்)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமை அன்றோ
அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவம் அன்றோ
(கம்பன்)
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே
(கம்பன்)
எவ்வளவு எளிமையான வரிகள்,
மிக குறைந்த இசை கருவிகள் ,
பாடலை இரவு நேர effect இல் படமாக்கப்பட்ட விதம்
(மிக குறைந்த ஒளி அமைப்பு ) ,
ஒரு பங்களாவின் மொட்டை மாடி மற்றும் எதிர் வீட்டு ஜன்னல் மற்றும் அந்த வீட்டின் படுக்கை அறை (இது தான் இந்த பாடலின் location ),
காட்சியமைப்பை உள்வாங்கிய பாடகரின் குரல் ,
நடித்த நடிகரின் ஆரவாரமில்லாத அலட்டல் இல்லாத நடிப்பு
(casual என்று சொல்வார்களே பாடலின் இறுதியில் பேண்டை கழற்றி லுங்கிக்கு மாறும்விதம் மற்றும் கொடியில் பேன்ட்ஐ போடும் விதம்)
இந்த பாடலை வேதகாலம் தொட்டே வரும் பெண் சமுகத்தின் மீது உமிழும் ஆணாதிக்க சமுதாயத்தின் எச்சில் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு
ck சார்
என் தர்ம பத்தினியின் நாமகரணமும் அதே தான்
இரண்டாவது பாடல்
இந்து கொஞ்சம் சண்டிராணி மாதிரி (அறிவாளி மனோரமா)
ஆரம்பித்தில் இருந்தே சஞ்சீவியை வெறுக்கிறாள்.
திலகம் கர்ப்பம் ஆனதற்கு சஞ்சீவி தான் காரணம் என்று
நினைக்கிறாள்.ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமா தன்னை (தன் மனதை) சஞ்சீவியிடம் இழக்கிறாள் .
பாலா மற்றும் வாணியின் குரல்
இலக்கணம் மாறுதோ ஒ ஒ (அருமையான தபேல இசை)
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்
முதல் சரணத்தில்
கவிஞரின் கவிதை ஊற்றாய் பொங்கி வருகிறது சஞ்சீவியின்
மன நிலையில்
கல்லான முல்லை, இன்றென்ன வாசம்
காற்றான ராகம்,ஏன் இந்த தாகம்
வெண்மேகம் அன்று, கார்மேகம் இன்று
யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
(இலக்கணம்)
கதாநாயகனை புரிந்து கொள்ளாத கதாநாயகியின் மன நிலையை
மிக எளிமையான அனுபவ மொழியில் விளக்கும் கவிஞர்
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பையோ
விளக்கி வைப்பாயோ
திலகம் மற்றும் செவிடன் இருவரையும் கொண்டு வருகிறார்
அலை ஒசையென்ன்,இடி ஒசைஎன்ன
எது வந்த போதும் நீ கேட்கவில்லை
அலை ஒசையென்ன்,இடி ஒசைஎன்ன
எது வந்த போதும் நீ கேட்கவில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்க கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம் பூர்வஜன்ம பந்தம்
(இலக்கணம் )
மிக அருமையான காட்சி அமைப்பு
இந்துமதியின் படுக்கை அறை , monthly சீட் காலேண்டர்
பேன் காற்றினால் பறந்து அதன் பின்னே ஓட்டபட்டிருக்கும்
சஞ்சீவியின் இந்துவினால் கிழித்து போடப்பட்ட படத்தின் ஒட்டு படம் ,
திலகத்தின் குடிசை, காலை உதயத்தின் சூரிய ஓளி கீற்று ,
திலகம் குடிசை வீட்டின் வாசல் பெருக்கி கோலம் போடுவது
அதே நேரத்தில் இந்துவும் தன வீட்டில் வாசல் பெருக்கி கோலம் போடுவது , அப்போது சஞ்சீவி விஜய் ஸ்கூட்டர் இல் வந்து நிறுத்திய உடன் சந்ஜீவிக்க்காக கோலத்தை அழித்து பின் சஞ்சீவி அதை கண்டும் காணமல் செல்வது
சோப்பு முதல் சுபம் வரை நிஜமாகிய நிழல்
நிழல் நிஜமாகிறது படத்தில்
சுமித்ரா நட்டுவாங்கத்துடன்
கமல் இன் ஒரு பெஸ்ட் பரத நாட்டிய முத்திரை ஒன்று 2 அல்லது 3 நிமிடங்கள் வரும்
இந்த காட்சி அமைப்பே ரொம்ப அருமையாக அமைந்து இருக்கும்
சலங்கை ஒலிக்கு முன்னோடி
டியர் கிருஷ்ணாஜி,
பதிவுகள் அனைத்தும் டாப். ஒன்று இரண்டு என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியும் இருபது, இருபத்தைந்து பதிவுகளுக்கு சேர்த்து பொதுவாக ஒரு சபாஷ். மற்றவை தொட்டுக்காட்டிய பாடல்களாக இருந்தபோதிலும், விளக்கமாக எழுதிய 'நிழல் நிஜமாகிறது' பாடல்கள் இரண்டும் அருமை.
'இலக்கணம் மாறுதோ' பாடலுக்கு நானும் ஒரு பதிவு எழுதி, அதை பதிவிடலாம் என்று திரிக்கு வந்தால், அதே பாடலைப்பற்றி அருமையாக எழுதிவிட்டீர்கள். இருந்தாலும் நம்முடைய பதிவையும் இடுவோம் என்று பார்த்தால், பல விவரங்கள் ஒன்று போல அமைந்துள்ளன. மீறி பதிவிட்டால் 'அரைத்த மாவு' (ரிப்பீஈஈட்டு) ரேஞ்சுக்கு அமைந்துவிடும் என்பதால் பதிவை கைவிட்டேன்.
உடனே கே.பாலச்சந்தர் சாருக்கு போன் செய்து 'மன்மத லீலை'க்கு 99 வருட உரிமை வாங்கிவிட்டேன். இப்போது 'மன்மத லீலை' எனக்குச் சொந்தம். ஒவ்வொரு பாடலையும் தனித்தனி பதிவாக அலச விருப்பம். நன்றாயிருக்குமோ இல்லையோ படிக்க வேண்டியது மக்கள் தலையெழுத்து.
க்ருஷ்ணா சார் ஷமிக்கணும் :)
//சோப்பு முதல் சுபம் வரை நிஜமாகிய நிழல்// உண்மை..எனக்க்கும் பிடித்த படம்..க்ளைமாக்ஸை விட்டு விட்டீர்களே..அழகிய க்ளைமேக்ஸ்.. குள்ள(பிஞ்சு) கத்திரிக்காய்க்குக் கண்ணாடி மாட்டினாற்போல் சுமி.. முட்டைக் கண் அந்த பட்டைக் கண்ணாடியில் முறைப்பதுவும் ஒரு அழகு.. சிகரெட் லைட்டரிடம்..உனக்கு அம்மாவின் பெட்ரூம் தான்கேக்குதா அல்லதுவேற என்னவோ வசனம்..கமல் சொல்லும் நையாண்டி நளினம்..வேக வேகமாய் கோலமிட்டுக்கொண்டிருந்த சுமி கமல் பைக்கைப் பார்த்ததும் டபக் டபக்கென கோலக்கோட்டை அழிப்பது..கமல் உள்ளே வராமல் திரும்பிச் செல்வது அப்புறம் ஷோபாவின் காய்கறி மூக்குக்கண்ணாடி.. இம்ம் இன்னும் நிறையச் சொல்லலாம்..
கார்த்திக் சார் க்ளாப் க்ளாப்.. (வேறொன்றுமில்லை மன்மதலீலையை வரவேற்க நாங்கள் ரெடி)
டியர் வாசு சார்,
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் 'சமையல்காரன்' படப்பாடலை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். ஒவ்வொரு வரியும் மிக அருமை. என்ன ஒன்று, 'நிர்மலா புராணம்' கொஞ்சம் தூக்கலாக இருந்தது. (வீட்டம்மா இதையெல்லாம் படிப்பார்களா?). சரிதான், ஒண்ணுமில்லாத மொக்கை நடிகைகளுக்கெல்லாம் புராணம் பாடும்போது அழகான 'வெண்ணிறக்கொடியிடை' நிர்மலா பற்றி கொஞ்சம் தூக்கலாக எழுதுவது தப்பில்லை. ஜமாயுங்கள்.
நிஜமாகவே வீடியோவில் பார்க்க அழகாகவே இருக்கிறது. ஆனால் முத்துதான் நிம்மியின் நெளிவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார். அவரது சொந்தக்குரலில் 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப்பேருங்க' என்ற சராசரிப்பாடலும் படத்தில் உண்டு.