http://i1146.photobucket.com/albums/...ps0402e0a6.jpg
Printable View
Eid Mubarak to all our Islam friends!
Regards,
R. Parthasarathy
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்!
http://www.youtube.com/watch?v=ruMVB...yer_detailpage
இந்த திரியில் மிக அக்கறை காட்டும் ஓய்வு பெற்ற வாத்யாருக்காக ,அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.
பாடல்
அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்
உரை
தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.
பாடல்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது
உரை
எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்
ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.
பாடல்
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்
உரை
சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது
ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.
பாடல்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே
உரை.
இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு
கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.
பாடல்
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே
உரை.
தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)
பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.
பாடல்
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்
உரை
சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து
செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.
பாடல்
கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது
உரை.
தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல
நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு
ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.
தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.
பாடல்.
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை
உரை
பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.
காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.
பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.
வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.
பாடல்
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே
உரை
தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது
ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு
பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து
உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.
பாடல்
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்
உரை
தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை
மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .
தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை
இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.
பாடல்
காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.
உரை
உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி
அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி
உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து
மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.
பாடல்
நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்
நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை
உரை
ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதை
பாடல்
எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை
நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை
உரை
எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.
பாடல்
வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது
உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு
உரை
எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.
பாடல்
ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக
உரை
ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .
பாடல்
தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை
ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே
உரை
human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்
அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..
பாடல்
தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
உரை.
உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்
உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,
எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.
இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் சிவாஜிகணேசன்...ஒரு சுவாரசியத் தகவல்...!
கடவுள்களின் பெயர்கள், தங்களது மனதுக்குப் பிடித்த தலைவர்களின் பெயர்கள், தமிழறிஞர்களின் பெயர்கள், சாதனையாளர்களின் பெயர்கள், அல்லது தங்களது முன்னாள் காதலன், காதலி ஆகியோர்களின் பெயர்களைத்தான் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வைப்பது வழக்கம். ஆனாலும், ஒரு சிலரிடம் உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள், உங்க பெயரோட அர்த்தம் என்னன்னு கேட்டல் சொல்லத் தெரியாது.
திரையுலகில் பெயர் என்பது மிகவும் முக்கியம், பெற்றோர் வைத்த நிஜப் பெயரை மாற்றி சினிமாவுக்காக வேறு பெயரை வைத்துக் கொண்ட நடிகர்களும், நடிகைகளும், இயக்குனர்களும் அதிகம். அதில் ஜோசியம், ராசி வேறு கலந்திருக்கும். இவர்களில் இயக்குனராக அறிமுகமான போதே தன்னுடைய பெயராலும் திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாக சங்கர் என்றுதான் எழுதுவார்கள், ஆனால் இவரோ பெயரிலும் ஷங்கர் என போட ஆரம்பித்தார். தனக்கு இந்தப் பெயரை அம்மா எதற்காக வைத்தார்கள் என சமீபத்திய விழா ஒன்றில் ஷங்கரே தெரிவித்தார்.
“எனக்கும் 'செவாலியே சிவாஜிகணேசன்' அவர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. எனது அம்மா தீவிரமான திரைப்பட ரசிகை. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அன்று இரவே அவருக்கு பிரசவ வலி எடுத்து நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த பின் அவர் எனக்கு ஷங்கர் என பெயர் வைத்தார். நான் பிறந்த அன்று என் அம்மா பார்த்த படத்தில் சிவாஜி அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் சங்கர். அதையே எனது பெயராக அம்மா வைத்து விட்டார்கள்.
எனக்கும் சிவாஜி அவர்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'காதலன்' படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக அவரைத்தான் முதலில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒரு நடிப்புச் சிங்கத்துக்கு தீனி போடும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். அவரை இயக்க முடியவில்லையே என்ற குறை இருந்தாலும் ரஜினி அவர்கள் நடித்த படத்திற்கு 'சிவாஜி' என பெயர் வைத்து என் ஆசையை தீர்த்துக் கொண்டேன், ” என்றார்.
17/8/1963 இல் முத்து லக்ஷ்மி-சண்முகம் தம்பதியருக்கு மகனாக பிறந்த (தாய்,மகன் இருவரும் சிவாஜி ரசிகர்கள்) எஸ்.ஷங்கருக்கு செவாலியே சிவாஜி விருது தந்த விஜய் டி.வீ க்கு நன்றிகள்.
இவர் தாய் , சிவாஜி பட பாத்திரத்தின் பெயரை வைத்திருந்தால் , அது 17/8/1963 க்கும் முன் வெளியானதாக இருக்க வேண்டும். நினைவு தெரிந்து 1952 முதல் 1963 வரை வெளியான படங்களில், அன்னையின் ஆணை 1958(அப்பா சிவாஜி பெயர்), பலே பாண்டியா 1962 (விஞ்ஞானி ரோல் பெயர்) ஷங்கர் என்று இருப்பதால் ,பலே பாண்டியா நினைவான பெயரே ஷங்கருக்கு சூட்ட பட்டிருக்க வேண்டும்.