அய்யா பெரியவரே மறு வெளியீடு என்றல் என்ன ? 300 படங்களில் ஒன்று மீண்டும் வெளிவந்தால் மறு வெளியீடு என்று அர்த்தமா ? புரிந்து கொண்டேன்
Printable View
ஒ அப்போ ....1964இல் வெளிவந்த கர்ணன் திரைப்படம் 108 நாட்கள் ஓடிய பிறகு .....இன்று வரை தமிழகம் முழுதும் வேறு திரையரங்கில் ஒருமுறை கூட வந்ததே இல்லையோ ??????
அல்லது கர்ணன் திரைப்படத்தை தவிர வேறு ஒருபடமும் வேறு ஒரு திரை அரங்கிலும் ரிலீசுக்கு பிறகு வந்ததே இல்லை என்ற வாதமோ ?
இதென்ன புது பொய் ? ஏதேது .....இவரின் பொய் ஓட்டத்திற்கு ஒரு அளவே இல்லை போல் இருக்கிறது !
தவறாக புரிந்துகொண்டால், புரிந்ததாக நினைக்கப்படும் அனைத்தும் தவறான புரிதல்தான் என்பதை சரியாக புரிந்துகொண்டால் சரி !
ரிலீசுக்கு பிறகு முதல் முறைக்கு பிறகு வருவது எல்லாமே மறுவெளியீடுதான். அப்படி பார்த்தால் கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாமே மறுவெளியீடு தான் பிரிண்டில் வெளிவரும் வரை !
டிஜிடல் வடிவில் கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் பொருத்தவரை புத்தம் புதிய வெளியீடு தான். 100% மறுவெளியீடு என்று கூறுவது முறையல்லஅல்ல.
காரணம் இரெண்டுமே தொழில்நுட்பம் மற்றும் தரவேற்றம் புதிதாக செய்யப்பட்டு புதிய censor certificate உடன் , டிஜிடலில் வெளிவந்துள்ள திரைப்படம்.
திரைப்படத்தின் வண்ணம், இசை, பின்னணி இசை சேர்ப்பு இவை அனைத்தும் செய்தபின் censor போர்டுக்கு படத்தை காண்பித்து censor certificate கிடைத்த படம். படத்தின் கதை மற்றும் நடிக நடிகையர் பழயவர்கள்தான் மறுப்பதற்கில்லை. புதிய வடிவில் புதிய பரிமாணத்தில் வெளிவந்தால் அது புதிய படமே.
இனிவரும் வீரபாண்டிய கட்டபொம்மன், உலகம் சுற்றும் வாலிபன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை உட்பட அனைத்து படங்களும் வெளியீட்டால் புதிய படங்களே !
வெளியிட்ட திரை அரங்குகளோ மகாலச்மியோ, மதுரை சென்ட்ரலோ, திருநெல்வேலி சென்ட்ரலோ அல்லது திருச்சி கெய்டியோ அல்ல !