-
டியர் பம்மலார்,
சித்ரா பௌர்ணமி திரைக்காவியத்தின் சிறப்பினை அதனுடைய விளம்பரத்தை வைத்தே கூறி விடுவீர்கள்... அட்டகாசம்...
மெல்லிசை மன்னரின் சிறப்பான இசையில் இனிமையான பாடல்கள்.
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய காலம் உண்டு, பருவம் உண்டு என்கிற இனிமையான பாடல்..
http://www.youtube.com/watch?v=fA0o1I2lflo
டி.எம்.சௌந்தர்ராஜன், சுசீலா குரல்களில் ...சூப்பரோ சூப்பர்...வெள்ளுடை வேந்தரின் வெளுத்துக் கட்டும் ஸ்டைல்... பார்த்து மகிழுங்கள்...
செந்தூர நெத்திப் பொட்டின் நளினம், அது சித்திரக் கோலம்...
சௌந்தர்ராஜனின் குரல்... ஆஹா... கேளுங்க கேளுங்க... கேட்டுக்கிட்டே.... பாருங்க பாருங்க... பார்த்துக்கிட்டே...
http://www.youtube.com/watch?v=8Fzm8HVzge0&feature=fvsr
-
-
'சித்ரா பௌர்ணமி' யில் சிங்கத்தமிழனின் சீர்மிகு,சீற்றமிகு நடிப்பில் அற்புதப் பாடல்கள்.
என்னடி சின்னக்குட்டி...போட்ட புள்ளி சரிதானா?....
http://www.youtube.com/watch?v=N8045Rvtzio&feature=player_detailpage
வந்தாலும் வந்தான்டி ராஜா...
http://www.youtube.com/watch?v=uckFlXsmneU&feature=player_detailpage
நீயும் வாழ வேண்டும்...
http://www.youtube.com/watch?v=xZj54M_kwx0&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
-
அகிலம் போற்றும் அரும்பெரும் நடிப்பு மேதையின் 42-ஆவது அழகோவியம் 'அம்பிகாபதி'.
தஞ்சை ராமையாதாஸ், கவியரசர், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம் கோபாலகிருஷ்ணன், கு.சா.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அற்புத வைரவரிப் பாடல்கள்.
ஜி.ராமநாதன் அவர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இசை....
மன்மதனையே அழகில் மிஞ்சும் மகா நடிகர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்...
அற்புதக் குரலில் அனாயாசமாய் பாடும் டி.எம்.எஸ். மற்றும் சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், வி என்.சுந்தரம், சுசீலா, ராஜேஸ்வரி....
இனிய குரலுக்கு ஒரு அஷ்டாவதானி பி.பானுமதி...
அருமையான இயக்கத்திற்கு ப.நீலகண்டன்.
எக்காலத்திலும் மனதில் ரீங்காரமிட்டு வலம் வந்து கொண்டிருக்கும் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள். கண்டும் கேட்டும் இன்புறுங்கள்.
சோறு மணக்கும் சோநாடாம்...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xsC2RB6SO-0
என் ஆசைக் கனியமுதே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N3t9kUnPL5k
அம்புலியைக் குழம்பாக்கி....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ga9Nrh7i0-U
கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_iV1tFns0Bs
மாசில்லா நிலவே நம்....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fb1uJPhkpLc
வாடா மலரே ! தமிழ்த் தேனே....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=45sjbjyko5I
வானம் எங்கே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hFpRS6omL5Y
ஆடட்டுமா...கொஞ்சம் பாடட்டுமா...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sunl2TR9jC8
கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...(டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வெண்கலக் குரலில்)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Eezd4TKyAyk
கண்ட கனவும் இன்று பலித்ததே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HMLqmEnAGE0
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
அன்பு நண்பர்களே!
எனக்கு மிக மிக மிக பிடித்தமான நடிகர் திலகத்தின் காவியங்களுள் அம்பிகாபதியும் ஒன்று. அந்த அழகு மதிவதன முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அதுவும்
http://i1087.photobucket.com/albums/..._020991682.jpg
வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடலுனை கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைத்து நினைத்து கவிமலர் தொடுத்த
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே...
பாடல் காட்சியில் இந்த மனிதப் புனிதர் வாயசைக்கும் அழகும், இம்மியளவு கூடப் பிசகாமல் முகபாவங்களில் புகுந்து விளையாடும் வித்தைகளும் இருக்கிறதே! நடிப்பின் இறைவா! நின்னை அடைய நாங்கள் செய்த புண்ணியம்தான் என்ன!
கண்களில் கண்ணீருடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்,
நிச்சயமாக ஒவ்வொரு ரசிகருக்கும் கண்ணீரால் கண்கள் குளமாகும் தங்கள் பதிவுகளைப் பார்த்தால்...
அதே உணர்வுடன்
-
பல ஆண்டுகளுக்கு முன் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் புதல்வர் சீதக்காதியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் சொன்னார், திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாடலை தன் தந்தை எழுதியதாகவும் ஆனால் படத்தில் கண்ணதாசன் பெயர் வந்ததாகவும் சொன்னார். சமீபத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கான ஒரு வலைப்பூவில் இதே தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரம் உண்டா என்பது தெரியவில்லை. இருந்தால் அதனைப் பதியலாம். அப்பாடல் பதிவான ஒலிப்பதிவுக் கூடப் பொறியாளர் அல்லது அவருடைய உதவியாளர் அல்லது ஏ.பி.என். உதவியாளர் யாராவது இருந்தால் அவர்கள் தான் இதை உறுதி செய்ய முடியும்.
கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்கான வலைப்பூ
அன்புடன்