-
NT with MGR
-
அன்பு கார்த்திக் சார்,
'சந்திப்பு' கட்டுரையை தாங்கள் ரசித்துப் படிக்கும் அளவிற்கு என்னால் எழுத முடிந்தது பெரும் பாக்கியமே! நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து பாராட்டி மெச்சும் தங்கள் உயர்குணம் எல்லாவற்றையும் விட போற்றுதலுக்குரியது. மனம் மகிழ்ந்து தாங்கள் பதிவைப் பாரட்டியதற்கு நெஞ்சமெல்லாம் நிறைந்த எனது ஆழ்ந்த, அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதெற்கெல்லாம் காரணகர்த்தாக்கள் நீங்கள், சாரதா மேடம், ராகவேந்திரன் சார், அன்புச் சகோதரர் ஆருயிர் பம்மலார் சார், அன்பு முரளி சார், பிரபு ராம் சார் போன்ற அற்புதமான பதிவாளர்கள் அல்லவா! இத்தருணத்தில் அனைவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மீண்டும் தங்களுக்கு என் கனிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
அன்றைய நடிகைகளான ராஜஸ்ரீ மற்றும் காஞ்சனா இருவரும், இணைந்து அமர்ந்திருக்கும் இன்றைய ஃபோட்டோவை, இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள், esvee சார்..!
நதியும் மதியும் இணைந்திருக்கும் அருமையான ஃபோட்டோவுக்கு நன்றி, கோல்ட்ஸ்டார்..!
-
டியர் ராகவேந்திரன் சார்,
'சந்திப்பு' பதிவு பற்றிய தங்களின் உயரிய பாராட்டுதல்களுக்குத் தலை வணங்குகிறேன். ரசிக வேந்தராகிய தங்களது உற்சாகமூட்டும் மனப்பான்மைக்கும், உன்னத பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி!
நடிகர் திலகம் சிவாஜி நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தைப் பற்றி திரு மருது மோகன் ஆற்றிய சிறப்புரையினை நாம் இங்கு காணொளியாய் வழங்கியதற்கு என் அன்பான நன்றிகள்.
-
டியர் வாசுதேவன் சார்,
கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடலாக "அன்பளிப்பு(1969)" பாடலை அன்பளிப்பாக அளித்த தங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது..! [இப்பாடலுடன் ஒரு போனஸ் காட்சி வேறு..!]
நன்றி ! நன்றி ! நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
அன்பு சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,
எங்கள் எல்லோருக்கும் சீனியர் ரசிகரான தங்களது மகிழ்வான பாராட்டுதல்களை தங்களுடைய ஆசீர்வாதங்களாய் எண்ணிக்கொண்டு பூரிக்கிறேன். மிக்க நன்றி சார்!
-
முத்தான முரளி சார்,
'சந்திப்பு' பதிவைப் பற்றி தாங்கள் பாராட்டியுள்ள விதம் உண்மையிலேயே என் கண்களைக் குளமாக்கி விட்டது. பழுத்த அனுபவம் வாய்ந்த தங்களின் உயரிய எழுத்துப் பதிவுகளுக்கு என்றுமே நான் முதல் ரசிகன். தங்களைப் போன்ற சிறந்த பதிவாளர்களை முன்னுதாரணமாய் எடுத்துக் கொண்டு பதிவுகளை அளிப்பதில் மிகுந்த பெருமையும், பேருவகையும் அடைகிறேன். தங்களின் அற்புதமான பாராட்டிற்கு நன்றி கலந்த ஆனந்தக் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்.
-
அன்பு பம்மலார் சார்
இவ்வளவுதானா?...இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150 வது நாள் மெகா வெற்றிவிழா பதிவுகளைப் பற்றித்தான் கேட்கிறேன். யம்மாடி!... மலை போல் வந்து குவியும் பதிவுகள். சலிக்காமல் தங்கள் சீரிய உழைப்பால் வந்து கொண்டிருக்கும் 'கர்ணன்' விழா பற்றிய பதிவுகளை எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் சலிக்கவில்லை. விழா நிகழ்வுகள் பற்றி தாங்கள் திரியில் பதிவு செய்திருக்கும் அத்தனை பதிவுகளையும் ஒன்று திரட்டி ஒரு மெகா புத்தகமாகவே வெளியிட்டு விடலாம் போல. எண்ணிலடங்கா எமப்பதிவுகளுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகுமோ?
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களுக்காக 'படிக்காத மேதை'யின் பக்காவான ஸ்டில்லை பளிங்கு போல் அளித்ததற்கு நன்றி.
'சந்திப்பு' காவியத்தை என்னுடன் கைகோர்த்து முத்தையாவில் பல்வேறு சிரமங்களுக்கிடையில் கண்டு களித்ததற்கு நன்றி! ஆமாம் சார்! தங்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற பாராட்டுப் பதிவுகள் மூலம் என்னை திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். அதற்காக ஆயிரமாயிரம் நன்றிகள் தங்களுக்கு.
கேட்டதும் கொடுக்கும் அன்பு பம்மலார் அவர்கள் "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா ! கிருஷ்ணா !" வை ஜெயந்தி அன்று தந்ததில் ஆச்சரியம் என்ன?
-
டியர் ஆனந்த் சார்,
தங்களது மேலான அன்பிற்கு மிக்க நன்றி! நமெக்கெல்லாம் ஒரே தெய்வம்தான்.
-
டியர் ஜோ சார்,
உளம் கனிந்த நன்றிகள் சார். தங்களின் சந்திப்பு பட அனுபவம் மிக்க சுவையாக இருந்தது. ஐந்தாம் வகுப்பு மாணவராய் இருக்கும் போதே நடிகர் திலகத்தை சந்திக்க வேண்டும் என்ற தங்களின் பேரவா ஒன்று போதும் தங்களை நடிகர் திலகத்தின் உயரிய ரசிகர் என்று உலகிற்கு எடுத்துக் காட்ட. நானும் நீங்கள் சொன்னது போல் ஒலி அமைப்பாளரை ஒருமுறை இம்சை செய்து 'நீதி' இசைத்தட்டு முகப்பை எப்படியோ வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். பத்திரமாகப் பாதுகாத்தும் வருகிறேன்.
நீங்கள் கடலூர் அடிக்கடி வருவீர்களோ! அனேகமாக நீங்கள் குறிப்பிடும் தியேட்டர் நியூசினிமா என்று நினைக்கிறேன். அதுதான் ஆற்றுப் பாலத்தின் கீழே அமைந்துள்ளது. முத்தையா பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே இருக்கிறது. இப்போது முற்றிலும் பாழ் பட்ட நிலையில். தியேட்டர் எப்போதோ இழுத்து மூடப் பட்டு விட்டது. ஒருபகுதி டூ வீலர் (கட்டண)ஸ்டாண்டாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.