http://i40.tinypic.com/inwiyx.jpg
Printable View
கண்ணியமான ஒரு குடும்ப சித்திரம் மக்கள் திலகத்தின் "குடும்ப தலைவன்".
பள்ளி காலத்தில் பரகோன் திரை அரங்கில் இந்த திரைப்படம் பார்த்தேன். வழக்கம் போல நல்ல கூட்டம் சனிகிழமை மதியம் காட்சிக்கு. இந்த திரைப்படம் எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் இரெண்டாம் நிலையில் இருக்கும் படம். முதல் நிலயில் என்றுமே எனக்கு "பாசம்" திரைப்படம் தான்.
காட்சி அமைப்பு எல்லாமே அருமையாக இருக்கும். இவரும் அசோகனும் நல்ல புரிதலோடு பரஸ்பரம் நன்கு நடித்திருப்பார்கள். அவருக்காக இவர் காதலை தியாகம் செய்ய முனைவது. அது அறியாமல் அவர் இவர் மீது கோபம் கொள்வது ..இப்படி நல்ல ஒரு திரைக்கதை குடும்பதலைவனில் காணலாம்.
திரு. MGR அவர்கள் இதில் காதலை மறக்கவும் முடியாமல் தியாகம் செய்ய முடிவெடுத்து அதன் பின் அந்த வேதனையை நினைத்து நினைத்து நெஞ்சம் விம்மும்போது படம் பார்க்கும் நமக்கே தொண்டையை அடிப்பது போன்ற ஒரு நிலை ஏற்படுவது மறைக்க மறுக்க முடியாதது !
மக்கள் திலத்தின் திரைப்படங்களில் இரெண்டே இரண்டு சண்டைகாட்சிகளை கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும். தேவருடன் சகதியில் சண்டையிடும் காட்சி....highlight !
பாடல்களை பற்றி கூறவே வேண்டாம்...அவ்வளவு இனிமை...! குறிப்பாக ஏதோ..ஏதோ..ஏதோ ஒரு மயக்கம் ..அது எப்படி..எப்படி எப்படி வந்தது எனக்கும்.....நல்ல பதிவாக்கம் !
எல்லா படங்களிலும் ஏதாவது குறை இருக்கதான் செய்யும் ...எனவே குறைகளை மறந்து இந்த படத்திற்கு 100/100 தாராளமாக தரலாம் !
மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படம் பெங்களூரில்
நடை பெற்ற போது ஹிந்து பேப்பரில் வந்த விளம்பரம் .
கினோ
நாஸ்
சங்கீத்
சாந்தி
4 அரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .
http://i41.tinypic.com/4lg80l.jpg
சேலம் - அலங்கார் திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
நேற்று இன்று நாளை -1974
http://i44.tinypic.com/iddssh.jpg
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் 1977 ஆண்டு
பொம்மை சினிமா இதழுக்கு நடிகை லதா அவர்கள் மக்கள் திலகத்தை பேட்டி எடுத்த போது வந்த படம் .
மக்கள் திலகம் மிகவும் எளிமையாக சாதாரண நாற்காலியில் அமர்ந்து பேட்டி தருகிறார் .பேட்டி எடுப்பவர் சோபா இருக்கையில் அமர்ந்திருக்கிறார் .மக்கள் திலகத்தின் எளிமை என்னவென்று சொல்ல ?
http://i40.tinypic.com/xba7th.jpg
http://i42.tinypic.com/2ibnvcx.jpg
MAKKAL THILAGAM INTERVIEW AFTER 1977 PARLIMENTARY ELECTION .
வினோத் சார். இந்த பதிவுக்கு ஆயிரம் மதிப்பெண்கள் கொடுத்தாலும் ஈடாகாது...
அன்பு, அடக்கம்,ஆதரவு, இனிமை, ஈகை, உண்மை, உழைப்பு, உயர்வு, உறுதி, ஊக்கம், எளிமை, ஏற்றம், ஒப்பில்லாமை, ஓய்வறியாமை இவை மட்டுமன்றி எல்லா உயர் குணங்களும் ஒருங்கே பெற்றவர்தான் நம் தெய்வம்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இன்று மதியம் கே டிவி யில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் நீரும் நெருப்பும் கண்டு மகிழ்தேன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்கள் திலகத்தின் இரட்டைவேட நடிப்பு மிக அபாரம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். நல்ல கதை, சீரிய வசனம், இனிமையான பாடல்கள், சரியாக தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள். மக்கள் திலகத்தின் மாறுவேட நடிப்பு குறிப்பாக சீன வைர வியாபாரி, வண்டிக்காரர் வேடம் மிக நேர்த்தி. சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் வேகம் சூப்பர்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். பில்மோக்ராப்பியில் மீண்டும் வந்து நமது தலைவரின் குமாரி கதை சுருக்கத்தையும் பாடல்களையும் பதிவு செய்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..தாங்கள் மீண்டும் இந்த திரிக்கு வருவதால் தலைவரின் திரைப்படங்களை பார்க்கும்போது ஏற்படும் உத்வேகம் தற்போது ஏற்படுகிறது..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Now in Sun Life TV Channel
http://padamhosting.com/out.php/i892...3h21m10s11.png
எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாகவே பொன்மனச்செம்மல் பிலிமோகிராபி நியூஸ் அண்ட் இவண்ட்ஸ் திரியில் குமாரி படத்தின் திரைக்கதை, பாடல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்த பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். போனில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள். திரியில் எனக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளீர்கள். உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்காகவும் மீண்டும் நமது திரியில்
பொன்மனச்செம்மல் படங்களைப் பற்றிய அனைத்து அரிய தகவல்களையும் தருகிறார்
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் பின்வரும் இணைப்பினைக் கண்டு களியுங்கள்
http://www.mayyam.com/talk/showthrea...ews-amp-events
The theme revenge in our MGR movies.
A list complied in srimgr.com
http://mgrroop.blogspot.in/2013/07/sweet-revenge.html
Any news about the release of Nadodi Mannan, Madurai Veeran dialogs by Kannandasan pathipagam?
And also the release date of Naan Yen Piranthen.
MGR wearing white chappals in this image is very rare too.
ரூப் சார், நாடோடி மன்னன், மதுரை வீரன் வசனங்கள் கண்ணதாசன் பதிப்பகத்தில் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் ஏன் பிறந்தேன் பற்றிய விபரங்கள் தெரியவில்லை . இன்னமும் விரைவில் என்ற விளம்பரம் மட்டுமே காணப்படுகிறது.
Dear Roop Sir,
This Interview, in detail, was published in the AUGUST 1977 BOMMAI (Monthly Issue) at that time.
I do remember that I have the issue. If not posted by Vinodh Sir, I will trace out from the old Records, available with me and post it.
Thanks & Regards,
Ever Yours : S. Selvakumar
ENDRUM M.G.R.
ENGAL IRAIVAN
இன்று காலை முரசு தொலைக் காட்சியில் மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படத்தின் அனைத்து பாடல்களும் ஒரு படப் பாடல் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். பாடல் காட்சிகளில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு மிகவும் பிரமிக்க வைக்கின்றது. அன்றைய இளம் நாயகியர் லதா மற்றும் மஞ்சுளாவோடு அவர் ஆடும் வேகம் அற்புதம். மற்றும் ராஜஸ்ரீ அவர்களோடும் மக்கள் திலகம் மிக சிறப்பாக பாடல் காட்சிகளில் ஆடி நடித்துள்ளார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள். வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
மக்கள் திலகத்தின் '' சபாஷ் மாப்பிளே ''
14.7.1961
இன்று 54வது ஆண்டு துவக்கம் .
மக்கள் திலகம் நடித்த நகைச்சுவை படம் . மக்கள் திலகமும்
எம்.ஆர் . ராதாவும் அடிக்கும் காமெடி காட்சிகள் அட்டகாசம் .
இனிய பாடல்கள் நிறைந்த படம் .
http://i44.tinypic.com/v31xr9.jpg
மக்கள் திலகம் அவர்களுக்கு புரட்சி நடிகர் பட்டம் கிடைத்த செய்தி .
நன்றி - இனைய தளம் .
உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார் உறந்தை உலகப்பன். மணப்பாறையைச் சேர்ந்த வசந்தகலா நாடக மன்றத்தின் நிர்வாகி அவர். எளிமையான முறையில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த அவருக்கு பிரபலங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தும் ஆசை வந்தது. அதன்மூலம் தன்னுடைய நாடகத்துக்கு விளம்பரமும் கிடைக்கும்; கூடுதல் வசூலும் கிடைக்கும் என்று நினைத்தார்.
ஆசை வந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர். கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். இருவருக்கும் முறைப்படி கடிதம் எழுதினார் உலகப்பன். இருவருமே தேதி கொடுத்தனர். 5 ஏப்ரல் 1952 அன்று நடந்த அரும்பு நாடகத்துக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதி. முன்னிலை வகித்தவர் எம்.ஜி.ஆர்.
நாடகம் தொடங்கியது. சில நிமிடங்களில் கருணாநிதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார் உறந்தை உலகப்பன். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை இந்த மேடையில் வைத்து நீங்கள் கொடுக்கவேண்டும். தலையசைத்துவிட்டு மேடையேறினார்
கருணாநிதி.
அன்பு மூன்றெழுத்து. பாசம் மூன்றெழுத்து. காதல் மூன்றெழுத்து. வீரம் மூன்றெழுத்து. களம் மூன்றெழுத்து. வெற்றி மூன்றெழுத்து. அந்த வெற்றியை நோக்கி நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்ற அண்ணா மூன்றெழுத்து. அதைப் போலவே மூன்றெழுத்துக்காரரான எம்.ஜி.ஆருக்கு இந்த மேடையில் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
பிறகு எம்.ஜி.ஆர் பேசினார். புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்கிய கருணாநிதிக்கும் உலகப்பனுக்கும் நன்றி தெரிவித்தார்.
sabash mappile-1961
still from shooting spot
http://i42.tinypic.com/rusiug.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர் பட்டம், கலைஞர் வழங்கிய தகவலை பதிவு செய்திட்டதற்கும்,
சபாஷ் மாப்பிளே படத்தின் வீடியோ மற்றும் ஸ்டில் வழங்கியதற்கும்.. நன்றி வினோத் ஸார்.