http://i57.tinypic.com/33eschw.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ,"நான் ஏன் பிறந்தேன் "- சிறப்பு பார்வை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
1. குடும்ப பாங்கான கதைஅமைப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன இயல்பான, அருமையான நடிப்பு திறமைகளை நவரசத்தோடு வழங்கிய முதன்மையான காவியம்.
2. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில் ,தாய்மை, மதுவின் சீர்கேடு நாட்டுப்பற்று, கணவன் மனைவி உறவுகள், குழந்தைகளுடன் பரிவு,
தங்கை பாசம், அடுத்தவருக்கு உதவும் பண்பு, படித்து வேலைக்காக
திண்டாடுவது , வேலை கிடைத்தபின் தொழிலில் நேர்மை , கடனாளி -
களிடம் நேர்மையுடன் வாதாடுவது ,துரோகம் செய்த சகோதரியை
மன்னிற்று ஏற்று கொள்வது , குடும்பத்தினர் படும் அவஸ்தைகளை
கண்டு மனம் உருகுவது , காஞ்சனாவின் நோயை தீர்க்க முற்படுவது ,
காஞ்சனாவை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவது ,குடும்பத்திற்கும் போதிய நேரம் செலவிட முடியாமல் தவிப்பது - காதலி வீட்டிற்கு
வரும்போது மனைவி ,பெற்ற தாய்க்கு தெரியாமல் தப்புவது
-இப்படி பல கோணங்களில் , பல பரிமாணங்களில் , தன் முகத்தில்
பல பாவங்களை காட்டி ரசிகர்களை பரவசபடுத்தினார் நமது மக்கள்
திலகம்.
3. இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் தன் இசை திறமையால்
அனைத்து பாடல்களையும் இனிய கீதங்களாக வடிவமைத்தார்.
4. டைட்டில் இசை கேட்பதற்கு இனிமையாகவும் , வித்தியாசமாகவும்
இருந்தது.
5. நகைச்சுவை மன்னர்கள், நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன் ,
இருவரும் வயிறு குலுங்க சிரிக்கவும் சில சமயங்களில் சிந்திக்கவும்
வைத்தார்கள். நகைச்சுவை நடிகர் ஐசரிவேலன் சற்று வித்தியாசம்
குணசித்திர வேடம்.
6. மேஜர் சுந்தரராஜன் அப்பா வேடத்தில் அருமையாக நடித்தார்.
7. மேஜரிடம் நடிகர் கோபாலகிருஷ்ணன் நமது மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களை அறிமுகம் செய்யும்போது , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். பேசும் வசங்களின் போது அரங்கமே அதிரும்.
அவை.: அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும், சிரிப்பவர்களை
சிந்திக்க வைக்க வேண்டும் என்பது.
8. நடிகர் கோபாலகிருஷ்ணன் மேஜரிடம் அறிமுகம் செய்யும் போது
புரட்சி தலைவரை "நல்லவர்க்கு நல்லவர், கெட்டவர்க்கு கெட்டவர் "
என கூறும்போதும் அரங்கம் அதிரும் காட்சிகள்.
9. முதல் சண்டை காட்சியில் வில்லன் நம்பியார் , சக ஸ்டன்ட்
நடிகர்களிடம் , "அவன் ஒத்து ஆளே பத்தாளை அடிப்பான் "
ஜாக்கிரதை என்று சொல்லும் காட்சியில் கூட அரங்கம் அதிரும்.
10. முதல் பாடல் - நான் ஏன் பிறந்தேன் - பாடலில் சமுதாய சீர்கேடுகள்,
நாட்டுப்பற்று, தனி மனிதன் நாட்டுக்கு செய்ய வேண்டியது ,
குழந்தைகள் பள்ளிபருவத்தில் பெற்றோருக்கு பெருமை தேடி
தருவது , பெற்றோரூம் குழந்தைகளை பரிவுடன் அனுசரிப்பது ,
போன்றவற்றை உணர்த்தும் காட்சிகள்.
11. தம்பிக்கு ஒரு பாட்டு - கதை சொல்லும் அழகோடு , பல தத்துவ
வரிகள் மனதுக்கு இதமாக இருக்கும்.
13. உனது விழியில் எனது பார்வை - கணவன் மனைவி பாச உறவுகள்
வெளிப்படுத்தும் அருமையான காதல் பாடல்.
14. நான் பாடும் பாடல் - உடலுக்கு மன வலிமையை கொடுக்கும்
உணர்சிகரமான பாடல். -டி.எம்.எஸ். ராக பாவத்தோடு , ஏற்ற
இறக்கத்தோடு பாடிய , அடிக்கடி கேட்க தூண்டும் பாடல்.
15. என்னம்மா சின்ன பொண்ணு - புரட்சி தலைவர் தனது நடன
அசைவுகளை சற்று கவர்ச்சியாகவும், இளமை துள்ளலுடன்
அளித்துள்ள பாடல்.
16. மீண்டும் தம்பிக்கு ஒரு பாட்டு - குழந்தைகள் பாடும் தத்துவ பாடல்
இதை கேட்கும்போது புரட்சி தலைவரின் கண்களில் நீர் சுரக்கும்.
கேட்பவர்க்கும், பார்ப்பவர்க்கும் கூட.
17. தலைவாழை இலை போட்டு - ஜிக்கி .சுசீலா பாடிய மாங்கல்ய
வலிமையை பற்றிய ருசிகரமான பாடல்.
18. நான் ஏன் பிறந்தேன் 09/06/1972 அன்று வெளியாகியது.
இன்று 43 வது ஆண்டு துவக்க தினம்.
19. குளோப், ஸ்ரீகிருஷ்ணா , சரவணா, பழனியப்பா அரங்குகளில் 50நாள்
வெற்றிகரமாக கடந்த படம்.
20. ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ஏற்கனவே "ராமன் தேடிய சீதை " ஓடி
கொண்டிருந்ததால் சில நாட்களுக்கு காலை 7 மணி , 10 மணி
காட்சிகள் நடைபெற்றன.
21. முதல் நாள் காலை 10 மணி காட்சி பார்த்து ரசித்தேன். சில நாட்கள்
கழித்து தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது.
22. முதல் நாள் பார்த்து விட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் அருமையான குடும்ப பாங்கான பாத்திரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிப்பு மனதுக்கு இதமாகவும், நிறைவை தருவதாகவும்
பேசி கொண்டனர்.
23. புரட்சி தலைவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று,
சில இடங்களில் சங்கர் கணேஷ் பின்னணி இசை பிரமாதம்.
சமீபத்தில் உட்லண்ட்ஸ் சிம்பொனியில் பார்த்து ரசித்தேன்.
24. திரை அரங்குகளில் எப்போது திரையிட்டாலும் பார்க்க தவறுவதில்லை.
25.பொன்மன செம்மலின் நடிப்பு பரிமானங்களுக்காகவும் , பாடல்களுக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய படம்.
ஆர். லோகநாதன்.
Courtesy - face book - director sankar
பிம்பமும் நிஜ வாழ்வும்
http://i58.tinypic.com/8w0h3t.jpg
அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது.
தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான். தமிழ் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட அந்த பிம்பத்தை முதலமைச்சராக அவர் பெற்ற தோல்விகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த பத்தாண்டுகளில் அவர் அசாதாரணமாக எதையாவது செய்ய முயன்றாரா? ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்கள் எவை? இந்தக் கேள்விகள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. ஆனால் திரைப்படங்களின் வழி நிலைபெற்றுவிட்ட அவரது பிம்பங்கள் அவரது தோல்விகளுக்கப்பாலுங்கூட முக்கியமானவை.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
இதையெல்லாம் விட முக்கியமான பாடல் ஒன்று உண்டு. 1968இல் திரைக்கு வந்த அவரது ஒளிவிளக்கு திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.
தெய்வமாக்கிய பாடல்
எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.
சாகாவரம் பெற்ற பாடல்
அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் எம்.ஜி.ஆர்., என்ற அந்த தெய்வத்தை தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள். 1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார். 1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார். அவர் அவர்களுடைய இதய தெய்வம். கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத அவரது இதயத்தின் துடிப்பு. அவர்களைப் பார்க்கும்போது இன்னும் பல வருடங்களுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்.
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கட்டுரையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பங்கேற்ற அத்தனை பட குழுவினரும் எந்த அளவிற்கு கடினமாக உழைத்து ,ஒத்துழைப்பு தந்துள்ளார்கள் என்பதை மக்கள் திலகம் விரிவாக விளக்கியுள்ளது அருமையான தகவல்கள் .
இனிய அன்பர்கள் செல்வகுமார் , திரு லோகநாதன் இருவரின் நான் ஏன் பிறந்தேன் படம் பார்த்த அனுபவ பதிவுகள்
நன்றாக இருந்தது .புதுவை நகரில் தொழிலாளி படம் பற்றிய தகவல் தந்த இனிய நபர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி .
நான் ஏன் பிறந்தேன் ஓடிகொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்திற்கு பாரத் பட்டம் விழாக்கள் சிறப்பாக நடை பெற்று கொண்டு வந்த நேரத்தில் தினத்தந்தியில் மக்கள் திலகத்தின் செய்திகள் இருட்டடிப்பு நிகழ்வுகள் துவங்கியது .
மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது .
நவமணி - சுதேசமித்திரன் - தினமணி போன்ற தினசரி பத்திரிகைகள் மூலம் மக்கள் திலகத்தின் பட செய்திகள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது .
MGR
http://i62.tinypic.com/11c4hdx.jpg
This shot was taken during my photo walk on the beach . This is the memorial for magnetic three words named MGR which is relevant and popular even 26 yrs after his death which is easily visible by the sheer number of people who throng this place and the number of cut outs and photos of that man
This Man is excellent example of rags to riches from being a person who was fanning to kings in movies to becoming super star to the power of infinity and went on to become CM. Here is a person charisma which sways people including myself
Thanks Balaji
இன்றும், என்றும் திரையுலகை ஆளும் எங்கள் சந்திரன்
http://i60.tinypic.com/2ceiwjk.jpg
இன்றும் திரையுலகில் புரட்சித்தலைவரின் தாக்கம் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு மக்கள் திலகம் இடம்பெறும் காட்சிகளும், அவரைப்பற்றிய வசனங்களும், அவருடைய திரைப்படங்களின் சுவரொட்டிகளும் இடம்பெறாத திரைப்படங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அந்த அளவிற்கு இன்றும் அவர் திரையுலகை ஆக்கிரமித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரண் எம்ஜிஆர் ரசிகராக நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சப்பை சுவரொட்டியில் உலகமெங்கும் நல்ல நேரம் எம்ஜிஆர் சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், இதற்கு ஒரு படிக்கு மேலே, திரைக்கு வரவிருக்கும் ஒரு படத்தில் இளம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி எம்ஜிஆர் ரசிகராக நடித்துகொண்டிருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'உன் சமையலறையில்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிநேகாவிடம்:
பிரகாஷ்ராஜ் போனில் : இப்போது ஒரு கேசட் போடுகிறேன் யார் வாய்ஸ் என்று சொல்லுங்கள்.
சினேஹா: சோனியா காந்தி.
பிரகாஷ்ராஜ்: இல்லை. அவங்க மாமியார்..இந்திரா காந்தி. அடுத்த கேசட்டை போடறேன் யார் வாய்ஸ் சொல்லுங்கள்.
சினேஹா: இது எம்ஜிஆர்...நம்ம தலைவர்
பிரகாஷ்ராஜ்: இதை எப்படி உடனே கண்டுபிடிச்சே.
சினேஹா: என்னங்க. எம்ஜிஆரை தெரியாதவர் யார் இருக்க முடியும். அதுவும் நான் அவருடைய தீவிர ரசிகை"
என்று சொல்லி 'அதோ அந்த பறவைப் போல' பாடலைப்பாடி ஆக்ஷன் செய்வார். இந்த காட்சியில் ரசிகர்கள் பெருமளவில் ஆரவாரம் செய்தனர்.
இதிலிருந்து திரையுலகம் இருக்கும் வரை மக்கள் திலகத்தின் புகழும், தமிழன் இருக்கும் வரை புரட்சித்தலைவரின் புகழும் நீடித்திருக்கும் என்பது தெளிவாகிறது. திரையுலகில் பல நட்சத்திரங்கள் மின்னி மறைந்தாலும், என்றும் ஒளிவீசி மறையாது நிலைத்து நிற்கும் ஒரே சந்திரன் - எங்கள் (ராமச்) சந்திரன்தான் என்பதில் ஏது ஐயம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் திரிக்கு வருகைபுரிந்த திரு கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி .
1972ல் மக்கள் திலகம் சந்தித்த பல சோதனைகளில் தினத்தந்தியின் இருட்டடிப்பும் ஒன்று .
அன்றைய ஆளும் அரசின் அடக்கு முறை - திரை உலகம் -பத்திரிகைகளின் ஆதரவு இன்மை -
இந்த சூழ் நிலையில் மக்கள் திலகம் தன்னுடைய சோதனைகளை சற்றும் மனம் தளராமல்
ரசிகர்களின் ஆதாரவுடன் எல்லோரையம் வென்று சாதித்து வெற்றி கண்டார் .
dear esvee. As an actor, NT's hardcore fans like me may have a difference of opinion as regards his acting skills. But as a human being, MGR is unique as a phenomenon in political arena that is infested with communal and monetary based politics within politics.His moves were well planned and he made the right usage of his movies as the rungs to climb up the success ladder and getting into the hearts of downtrodden people as an alter ego of ''Robin Hood' of movie fanatic tamilians irrespective of caste or community or cadre after his huge hit 'Madurai Veeran' and stabilized his unicode image of do-gooder in subsequent films.As far MGR was concerned people were undivided by caste or community which culminated into the phenomenal 'MGR Vote Bank' that exists even now undeterred. Leave aside movies... we know his strengths and weaknesses.. he remained just a sheer seasonal entertainer or a show man without bothering for the emotional quotient of his films or he might have thought that when NT and GG look after that task well..why should I? MGR's legacy remains still unshaken and unstirred even as politically his image is not maintained by his party high cadres for reasons that are murky. NT and MGR seemed to have a proper understanding though professional competitions were inevitable due to the differing fan bases. Opinions are divided, but both thilagams command respect and love alike.
இனிய நண்பர் திரு செந்தில்
மக்கள் திலகத்தை பற்றி தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் உண்மையே . திரை உலகின் பொற்காலம் என்றால் அது
மக்கள் திலகம் - நடிகர் திலகம் - ஜெமினி கணேசன் மூவரும் ஆண்ட நாட்கள் மறக்க முடியாது .மூவரின் படங்கள்
ஒரு காவியங்கள் .மூன்று வித ரசிகர்கள் ..மாறுபட்ட ரசனைகள் - ஆரோக்கியமான போட்டிகள் மறக்க முடியாத
இனிய நாட்கள் மீண்டும் வருமா ?.
புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற பட்டப்பெயரை மாற்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பட்டத்தை வழங்கியவர்
திரு கே .ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் . 1980 ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கே.ஏ .கே அவர்களுக்கு
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாலை அணிவிக்கும் காட்சி
http://i57.tinypic.com/n20t95.jpg
COURTESY - THIRU PRADEEP BALU
http://i1170.photobucket.com/albums/...psabbea442.jpg
1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் என் அண்ணன் படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி பிரம்மாண்டமான கட் அவுட் இது. இதை நிறுவ மொத்தம் 70கிலோ ஆணிகள் பயன்படுத்த பட்டன.இந்த கட் அவுட் கீழே நிற்கும் மனிதர்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும் .மிக அரிதான புகைப்படம் இது.
http://i1170.photobucket.com/albums/...pse3be7599.jpg
எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு வயது 97 "
1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தலைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.
எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது.
ஆனந்த விகடன் பத்திரிக்கையில், புரட்ச்சிதலைவர் மீது
மக்கள் வைத்திருந்த அன்பையும் ஆதரவையும் பிரதிபலிக்கும்
விதமாக அட்டைப்படத்தில் போடப்பட்ட அற்புதமான கார்டூன் இதுவாகும் .
விகடனின் கார்டூன் வெளியீட்ட கருத்து படத்தில் உள்ளபடி, அன்று முதல் உலகம் உள்ளவரை மக்கள் புரட்ச்சிதலைவர் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்துகொண்டே இருப்பார்கள் .
'என் ரத்தத்தின் ரத்தமே’ என்கிற புகழ்பெற்ற வரியை எம்.ஜி.ஆர். எதற்காகச் சொன்னார்?''
''எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, குண்டு அடிபட்ட எம்.ஜி.ஆர். குற்றுயிராகப் படுக்கை யில் உயிருக்காகப் போராடினார். அவர்பால் அளப்பரிய பாசம்கொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் கொடுக்கத் தங்கள் பெயரைப் பதிவுசெய்தார்கள். ஆனாலும், அவருக்குப் பொருந்திய சிலரின் ரத்தம் ஏற்கப்பட்டது. தனக்குப் புத்துயிர் தந்த தொண்டர்களை மேடைதோறும் தவறாமல் பேச்சின் துவக்கத்திலேயே அப்படி அழைப்பார். கரவொலி விண்ணைப் பிளக்கும்!''
- ஆர்.கே.சுந்தரம், வடபழனி.
நானே கேள்வி... நானே பதில்!
courtesy vikatan e-magazine
http://i1170.photobucket.com/albums/...ps6eb1adaf.jpg
தனது சொந்த ஊரான கொடுமுடியில் , ' கொடுமுடி கோகிலம் '
என்று அழைக்கப்பட்ட திருமதி கே.பி.சுந்தராம்பாள் கட்டிய புதிய
திரையங்க திறப்பு விழாவில் , அன்றைய முதல்வர் கலைஞர் ,
மக்கள் திலகம் எம்ஜியார் , செல்வி ஜெயலலிதா .
WATCH CLIPPING FROM 1.01 ONWARDS
https://www.youtube.com/watch?v=Y3go...X1q_iFEI_sIUkK
WATCH CLIPPING FROM 4.40 TO 6.40
https://www.youtube.com/watch?v=6Sp4vatY3VA
WATCH CLIPPING FROM 8.00 TO 8.25
https://www.youtube.com/watch?v=ezdvgqPgcAA
WATCH KAVALKARAN BOXING FIGHT IN RASUKUTTY MOVIE
https://www.youtube.com/watch?v=S1U_PeDzkX0
WATCH CLIPPING FROM 0.20 TO 0.35 FROM VALTER VETRIVEL THIS IS P.VASU OWN FILM HE DEDICATED THE MOVIE TO OUR THALAIVAR
https://www.youtube.com/watch?v=qDRqytBZri8
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகத்தின் படமும் , பெயரும் இடம் பெற்ற மற்ற படங்களின் வீடியோ தொகுப்புகளை மிக அழகாக பதிவிட்டு இன்றைய திரை உலக தலை முறையினரும் எந்த அளவிற்கு மக்கள் திலகத்தை நேசிக்கிறார்கள் என்பதை உணர வைத்துள்ளீர்கள் . நன்றி .
yukesh
super document
http://i58.tinypic.com/2vbn1v9.jpg
சஞ்சய் காந்தி அவர்கள் விமான விபத்தில் இறந்தபோது அங்கு எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய இருவரும் சென்றிருந்தனர். உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டபோது எல்லோரும் அவரவர் காரில் சென்றுவிட கருணாநிதி தனித்து விடப்பட்டார். அப்போது எம்.ஜி.ஆர். அவரைத் தன்னுடன் காரில் ஏற்றிச் சென்றார். இது நடந்தது ஜூன் 1980-ல்.
அதன் பிறகு வந்த சாவி இதழில் வந்த கேள்வி-பதில்:
கேள்வி: எம்ஜிஆர் கருணாநிதியை தன் காரில் அழைத்துச் சென்றதைப் பற்றி?
பதில்: அது எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையைக் குறிக்கிறது (நிஜமாகத்தான் கூறுகிறேன்)
சாவி அமெரிக்கா செல்லவிருந்தார். அப்போது கருணாநிதி சட்டசபை தேர்தலில் நின்றார் (அண்ணாநகர் தொகுதி என்று நினைவு. சாவி தனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆகவே அவர் அமெரிக்கா செல்லும் முன்னால் கருணாநிதி வீட்டிற்கு சென்ற போது அவர் சாவியுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அது சாவிக்கு சுருக்கெனப் பட்டிருக்கிறது. ஆகவே எம்ஜிஆரின் பெருந்தன்மையைப் பற்றி அந்த பதில். அதற்குப் பிறகு எம்ஜிஆரைப் பற்றியக் கட்டுரையின் தலைப்பு: "கொடுத்துச் சிவந்தக் கரங்கள்".
courtesy - net
comments portion
வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறேன். அருமையான நகைச்சுவை எழுத்து.
எனக்குத் தனிப்பட்ட முறையில் திரு. எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். எந்த அறிமுகமும் இல்லாத எனக்குத் தெரிந்த நபருக்கு அவர் எழுதிய வேண்டுதல் கடிதத்திற்கு பதிலளிக்கும் வண்ணம், வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து முறையாக பல நேர்முகத் தேர்வுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இறுதியாக நில அளவைத்துறையில் "ப்பிர்க்கா சர்வேயர் வேலை கிடைத்தது.
திரு. எம்.ஜி.ஆர் தொலைநோக்குடன் 1980க்ளில் நிறைய சுயநிதி பொறியியல் கல்லூரி, polytechnic-களுக்கு அனுமதி தந்து இட ஒதுக்கீடு B.E, B.Tech, 3year Engg diplomas படிப்பது இன்றுஅனைத்து சமூக மாணவர்களுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது. (தரம் வேறு விஷயம்! தரத்திற்கன காரணிகள் வேறு!)
தமிழகத்தில் திரு. காமராஜருக்குப் பிறகு கல்வித் தொலைநோக்கு இருந்த அரசியல் தலைவை எம்.ஜி.ஆர் மட்டுமே!
அம்மாதிரியே ஏழைகட்கு கொடுத்துச் சிவந்த அரசியல்வதியின் கரங்கள் எம்.ஜி.ஆருடைய கரங்களே!
அன்புடன்,
குவைத்திலிருந்து-ஹரிஹரன்
எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்...
1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்திராகாந்தியின் மரணமும், எம்ஜிஆரின் உடல் நலக்குறைவும் தேர்தலில் பிரதிபலித்தன.
பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். 1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.
இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்.ஜி.ஆரை தீவிரமாக விமர்சித்தவன்.
1987. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்கள். திடீரென ஊரே மயான அமைதி. எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி.
நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். தலைவர் கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.
.......................................
அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்.
என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம். “எப்படி தெரியும்பா?” “என்னாப்பா எம்ஜிஆர தெரியாதா?”
ஆட்டோ சிறிது தூரம் சென்றது. பெரிய ஜெயல்லிதா வரவேற்பு டிஜிட்டல் பேனர். கீழே ஏழு,எட்டு நபர்கள். அதிமுக நிர்வாகிகளாக இருக்கலாம். இப்போதே லேசாக வளைந்து தயாராக இருந்தார்கள். கொடநாடு போக ஜெ கார் வரப் போகுது போல. எம்ஜிஆர் காலத்தில் இந்தக் கூன் விழவில்லை, அதிமுகவினருக்கு.
எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....
Posted by சிவசங்கர் எஸ்.எஸ்
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்”
இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.
இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.
எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்.
நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.mgr anniv 3
எம்.ஜி.ஆர் யார்? அவர் தமிழரா? மலையாளியா? இலங்கை பிரஜையா? என்ற விவாதம் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்தது.
இந்த விவாதங்களுக்கு 1985ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்பொருள் ஆர்வலருமான புலவர்.செ. ராசு. இவர் வரலாற்று பூர்வ ஆதாரங்களோடும், சரியான சான்றுகளோடும் எழுதி வெளியிட்ட “செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் – ஓர் வரலாற்று ஆய்வு” எனும் நூல்தான், எம்.ஜி.ஆர் ஒரு தமிழரே என்பதை ஆணித்தரமாக நிறுவியது.
ஒருவர் எங்கு பிறந்து வளர்ந்தாலும், அவரது பூர்வீகத்தைக் கொண்டுதான் அவர் இன்னார் என அடையாளப்படுத்தப்படுவார்.
அந்த வகையில் எம்.ஜி.ஆர் பிறந்தது இலங்கையின் கண்டி நகர் என்றாலும், அவரது தாய், தந்தையர் கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் மூதாதையர் யார்? அவர் எந்த வழித்தோன்றல் என்பதையெல்லாம் வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்த புலவர் ராசு, எம்.ஜி.ஆர் தமிழர்தான் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்தார்.mgr anniv 4
“எம்.ஜி.ஆரின் முன்னோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை மாவட்டம் காங்கேயம் பகுதியில் வாழ்ந்துவரும் மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் எனக் குறிப்பிடும் புலவர் ராசு, “கொங்கு வேளாளரில் தென்கரை நாட்டு சங்கராண்டாம்பாளையம் பெரிய குளத்து வேணாரு வழியிலும், வடவனூர் வேளாளர் மரபினரான தாய்வழியிலும் தோன்றி, வேளாளர் குலத்துச் செம்மலாக, வேளிர்குல வேந்தராக உள்ள எம்.ஜி.ஆர் கொங்கு நாட்டுக் குடும்பத்தில் பிறந்த தமிழரே என்பது விரிவான வரலாற்று ஆய்வு கூறும் உண்மையாகும்” என்று தமது நூலின் மூலம் புலவர் செ.ராசு தெளிவு படுத்தியுள்ளார்.
மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.
தமிழ்த்திரைப்படத்துறையில் கால்பதிப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. 1936ம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர் சுமார் பத்தாண்டுகள் பெரும் போராட்டத்தைச் சந்தித்த பிறகே பிரபலமானார். நாற்பதுகளின் பிற்பகுதியில், ராஜகுமாரி, மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி என கதாநாயகன் பாத்திரப்படைப்பு தம்வசம் வந்தபிறகு எம்.ஜி.ஆர் அதை தம் ஆற்றல், உழைப்பு, தகுதி, திறமையின் மூலம் தக்கவைத்துக் கொண்டு, 1976ம் ஆண்டுவரை திரையுலகச் சக்கரவர்த்தியாக வலம் வந்தார்.
“உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.
திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல படைத்து ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தார்.
1972ஆம் ஆண்டு அண்ணாதிமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்.,அடுத்த ஐந்தே ஆண்டுகளில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து 1980-84 பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று சுமார் 11 ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பேற்று தமிழ் மாநிலத்தின், தமிழக மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு உழைத்தார். சத்துணவு திட்டம் போன்ற, ஏழைகளுக்கு நலன்பயக்கும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினார்.
1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்க நாட்டின் புரூக்ளின் டவுன்ஸ்டேட் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர் இல்லாமலேயே அவரது அண்ணாதிமுக, அவர் கண்ட இரட்டை இலைச் சின்னத்தின் மூலம் மகத்தான வெற்றியைப் பெற்றது. மரணப்படுக்கையில் இருந்த எம்.ஜீ.ஆரும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றார்.
http://i57.tinypic.com/f2n0np.jpg
அந்தக் காலக்கட்டத்தில், திமுக தரப்பில் “எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை. அமெரிக்காவில் ஐஸ் பெட்டிக்குள் எம்.ஜி.ஆர் உடலை வைத்திருக்கிறார்கள் தேர்தல் முடிந்ததும் அதைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவார்கள். அவர் உயிருடன் இருப்பதாக இங்கு உள்ளவர்கள் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
உடனே அண்ணா திமுக தரப்பில், எம்ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் மருத்துவ மனையில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினர்.
அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் திமுகவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து எம்.ஜி.ஆரின் அண்ணா திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தனர்.
திராவிட இயக்க அரசியலில் இருந்தாலும், எம்.ஜி.ஆர் தேசிய சிந்தனையும், தெய்வ நம்பிக்கையும் கொண்டவராகவே வாழ்ந்தார்.
தமிழக அரசியலில் தலைவர்கள் அனைவரும் போற்றத்தக்க, ஏழை, எளிய, நலிந்த மக்கள் பாராட்டத்தக்க நல்லதொரு மனிதராக, நாடு போற்றும் தலைவராக வாழ்ந்தார்.
மிகச்சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, எந்த பின்னணியும் இல்லாமல், ஒரு மனிதன் தன்னந்தனியாக போராடி, தான் உழைப்பால் உயர்ந்து உச்சத்தை எட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு எடுத்துக்காட்டு.mgr shoot
ஏழை, எளிய மக்களின் அன்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு திரையுலகில் கோலோச்சிய, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென, தனித்துவமிக்க முத்திரையைப் பதித்த எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி இப்பூவுலகை விட்டு மறைந்தார்.
அவர் மறைந்து கால்நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், அவரது பெயரும், புகழும் இன்னும் நிலைத்துள்ளது. இன்றைய அரசியலிலும் எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் சக்தி ஆளமைத் தன்மையுடன் உள்ளது என்பதே யதார்த்தம்.
சாகாவரம் பெற்ற ஒர் சரித்திரம், சென்னை மெரீனா கடற்கரையின் மணல் வெளியில், சந்தனப் பேழையில் துயில் கொள்கிறது. இன்றளவும் அந்த மனிதரின் நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அன்றாடம் வருகை தந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்வதைக் காணலாம்.
எம்.ஜி.ஆர் புகழ் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதற்கு இதுவே சான்று.
courtesy - net
1977 தேர்தல் முடிவுகள்தான் முதன்முறையாக அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினாற் போலிருந்திருக்கிறது. ’ரேடியோ பெட்டி முதல் சுற்றில் பெரும்பாலான இடங்களில் எம்ஜிஆரின் அஇஅதிமுக தான் முன்னிலை’ என்றதை அவர்களால் கிஞ்சித்தும் நம்பவே முடியவில்லையாம். மறு நாள் செய்தித்தாள்களில் வெளியான முழு முடிவுகளில் அதிமுகவினர் வாங்கிய வாக்குக்களைப் பார்த்த பின்னர்தான் சலிப்போடு ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இவ்வளவு நேரம் பாட்டி சொன்ன கதைகளுக்கிடையே, இப்ப அம்மா உள்ள வந்துட்டாங்க.
1980 ல் அதெப்படியோ ஒரே நேரத்தில் சர்க்கரையையும், வேப்பஞ்சாறும் ருசித்தார்களாம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுகிறதாம், அதே சட்டமன்றத் தேர்தலில் தலைகீழ். இரண்டாம் முறையாக எம்ஜிஆர் வெற்றி பெற்றிருந்திருக்கிறார். 1982 ல் வரவேண்டிய சட்டமன்றத் தேர்தல் அதெப்படி 1980 லியே வந்தது ? ஆமா, அப்பல்லாம் அப்படித்தான், நடுவண் அரசு நினச்சா போதும் மாநில ஆட்சிய கலைச்சிடலாம். நல்லவேளை உச்சநீதிமன்றம் தலையிட்டதால இப்பல்லாம் அந்த அட்டூழியம் ரொம்பக் கிடையாது.
1984 ல் பால்யத்திலேயே ஓரளவு தேர்தல் களேபரங்களை என்னால் யூகிக்க முடிந்துவிட்டது. எம்ஜிஆர் கிட்னி ஃபெய்லியராகி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தும், பெரிய பலனில்லாமல் உடல் நலம் அடிக்கடி குன்றிப்போன சமயமது, எம்ஜிஆர் ஊரில் இல்லாமலயே நடந்த தேர்தல் அது.
ஒளியும் ஒலியும் பார்க்க, எதிர் வீட்டிற்கு போனால் சவுகார் ஜானகி வெள்ளைச் சேலையில் ‘இறைவா உன் மாளிகையில்.......’ என்று கதற, எதிர் வீட்டு அக்கா கண்களிலிருந்து கர கரவென கண்ணீர் வீழ்ச்சி.
எம் ஜி ஆர் களத்தில் இல்லாத சூழலில், இம்முறை திமுக வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வராவார் என எங்கள் குடும்பத்தின் பெரும்பாலோர் காத்திருக்க, ஆர். எம். வீரப்பன், பாக்யராஜை அமெரிக்க ப்ருக்ளீனுக்கு அனுப்பி, எம்ஜிஆர் ஃபோட்டோவுடன் வரச் செய்கிறார். சவுகார் ஜானகியும், பாக்யராஜூம் இணைந்து எம்ஜிஆர் மூன்றாம் முறையாகவும் முதல்வராக சிறு உதவி புரிந்திருக்கிறார்கள்
courtesy - net
THE FOLLOWING SONSGS TELECASTED IN TV THAT TIME
https://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ