http://i57.tinypic.com/14tau4w.jpg
Printable View
தலைவரின் மேற்கண்ட ச்டில்ல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை..நன்றி நண்பர்களே..அன்புடன் முத்தையன் அம்மு..
http://i60.tinypic.com/xc920w.jpg
1980- தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில்
அ.இ.அ.தி.மு.க-கம்யூனிஸ்ட் ஒருஅணியாகவும்
தி.மு.க.-காங்கிரஸ் மற்றொரு அணியாகவும்
போட்டியிட்டு 234 தொகுதிகளில் அஇஅதிமுக கூட்டணி
162 இடங்களிலும் அதாவது அஇஅதிமுக 128-தனித்து
பெற்றது.
திமுக கூட்டணி திமுக 38-காங்கிரஸ் 30-முஸ்லீம்லீக் 1 பெற்றது.
சென்னை அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டிருந்தார்.
எண்ணிக்கை முடிவு அவரைஎதிர்த்துபோட்டியிட்ட
அஇஅதிமுக வேட்பாளர் எச்.வி.ஹண்டே 600 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றபெற்றதாக
செய்தி வெளிவந்தது.
உடனே செdன்னையிலுள்ள திமுக முக்கிய நிர்வாகிகள்
ஓட்டு எண்ணும் மையமான பச்சையப்பன் கல்லூரி சுற்றி வளைத்தனர்
ஆர்.டி.சீதாபதி-செங்குட்டுவன்-டி.ஆர்.பாலு-சைதை கிட்டு-
அண்ணாநகர் அய்யநாதன் உள்ளிட்ட பலர் ,கருணாநிதி
தோற்றுவிட்டதாக அறிவித்துவிட்டு எந்த அதிகாரியும்
உயிரோடு போக முடியாது. என்று மிரட்டல் விட்டனர்.
பிடிவாதமாக மறுவாக்கு எண்ணவைத்து அதில் காங்கிரஸின்
துணையோடு தபால் வாக்கு-செல்லாத வாக்குகளில்
தில்லுமுல்லுகள் செய்து இரவு 11 மணிக்கு கருணாநிதி
வெற்றிபெற்றதாக வானொலியில் அறிவிக்கவைத்தார்கள்.
கருணாநிதியை தொடர்ந்து வெற்றிபெறுபவர் எனக்காட்டு
வதற்காக எத்தகைய வன்முறைகள்-முறைகேடுகள்-தில்லுமுல்லுகளில் ஈடுபட்டார்கள் என்பதை மற்ற எல்லோரையும் விட திமுக முக்கியபுள்ளிகளுக்கு
நன்றாகவேதெரியும்.
அப்போதும்கூட எச்.வி.ஹண்டே வழக்கு தொடரப்போவதாக
புரட்சித்தலைவரைச் சந்தித்து கொன்னார். ஆனால்
புரட்சித்தலைவர் எதிர்கட்சித்தலைவராக கருணாநிதி
அமரட்டும் என்றுகூறி ஹண்டேயை மேல்சபை உறுப்பினராக்கி அமைச்சராக்கினார்.
இதிலிருந்து கருணாநிதியின் சிறுமதியும்
புரட்சித்தலைவரின் பெருந்தகையும் விளங்கும்
ஆதாரம்: 14.03.2015 தினமலர் நாளேடு(துரை கருணா)
மேலே உள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். வாழ்க்கையில் நொடித்துப் போய் பிழைப்புக்காக தெருவில் வித்தை காட்டுவது போன்ற கதையமைப்பில், நல்ல நேரம் படத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்..’ பாடலின் இடையே வரும் காட்சி இது.
இந்தி படத்தில் திரு.ராஜேஷ் கன்னா நடித்துள்ளார். திரு.ராஜேஷ் கன்னா அவர்கள் சிறந்த நடிகர். ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர். மறுக்க முடியாது.
ஆனால், இந்தக் காட்சியில் திரு.ராஜேஷ் கன்னாவையும் தலைவரையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வித்தை காட்டும்போது உயரமான மூங்கில் கழியில் உடலை தாங்கி அந்தரத்தில் நிற்பது போன்ற காட்சி. உடலில் மூங்கில் கழி பதிந்திருக்கும் இடம் நெஞ்சையும் வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் உதரவிதானம் (diaphragm) என்று சொல்லப்படும் பகுதி. ராஜேஷ் கன்னா கழியில் அதிகம் அழுத்திக் கொண்டதாக தெரியவில்லை. தலைவர் நன்கு அழுந்தி நிற்கிறார். ஜிப்பாவில் அந்த பகுதியை சுற்றி இருக்கும் சுருக்கங்களே சாட்சி. ராஜேஷ் கன்னாவின் ஜிப்பாவில் அந்த அளவு சுருக்கங்கள் இல்லை.
உதரவிதானத்தில் அழுத்தம் ஏற்படும்போது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். சிரித்துக் கொண்டே மக்களுக்கு வித்தை காட்டினாலும் கூட, மூச்சு விட முடியாததால் ஏற்படும் சிரமம், முக்கல், சிரித்தபடி இருக்கும் தலைவரின் வாய் பெரிதாக இருப்பதை பார்த்தாலே தெரியும். திரு.ராஜேஷ் கன்னாவிடம் இது இல்லை. தலைவரின் அற்புதமான, இயல்பான நடிப்புக்கு இந்தக் காட்சி ஒரு உதாரணம். நன்றி திரு.முத்தையன் அம்மு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உழைப்பவரே உயர்ந்தவர்
‘‘மன்னர்களிடம் இருந்த 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த விளக்கை வீட்டில் வைத்திருந்தால் யோகம் வரும், அதிர்ஷ்டம் பிய்த்துக் கொண்டு அடிக்கும், பணம் கொட்டும்’’ என்று கூறி அதை ரூ.15 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விலை அதிகம் என்று கருதினாலும் அந்த விளக்கை ரூ.15 லட்சம் கொடுத்து வாங்கவும் சிலர் தயாராக இருந்துள்ளனர். அதற்குள் மோசடி பற்றி தகவல் கிடைத்து போலீசார் தலையிட்டு விளக்கை வைத்திருந்தவர்களை கைது செய்து, பழமையான, அதிர்ஷ்ட விளக்கையும் (?!) பறிமுதல் செய்துள்ளனர்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ரூ.15 லட்சம் விலை கொடுத்து ஒருவர் வாங்குகிறார் என்றால் அவர் ஏற்கனவே வசதியானவராகத்தான் இருப்பார். சரி... கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் கடன் வாங்கியாவது விளக்கை வாங்குகிறார் என்றே வைத்துக் கொள்வோம். விளக்கை வாங்குவதற்கு காரணம்.... யோகம் வரும், அதிர்ஷ்டம் அடிக்கும், பணம் கொட்டும் என்பதுதானே?
உழைப்பை நம்பாமல், இதுபோன்று குறுக்கு வழிகளில் அதிர்ஷ்டத்தை இன்னமும் கூட நம்புகிறவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அந்த ரூ.15 லட்சத்தை வைத்துக் கொண்டு ஒரு தொழில் தொடங்குவோம் என்ற சிந்தனை கூட அவர்களுக்கு இல்லை.
தலைவர் எப்போதுமே உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் அளிப்பார். அவரே வாழ்வில் கஷ்டப்பட்டு, எவ்வளவோ இன்னல்களை கடந்து, உழைத்து முன்னேறியவர்தான். அதிர்ஷ்டத்தை நம்பவில்லை. தலைவரின் படங்களிலும் உழைப்பை வலியுறுத்தும் காட்சிகள், பாடல்கள் இருக்கும். காட்சிகள், பாடல்களை விடுங்கள் படத்தின் தலைப்பே உழைப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘உழைக்கும் கரங்கள்’, ’ஊருக்கு உழைப்பவன்’ என்று இருக்கும். கையெழுத்து போடும்போது கூட ‘உழைப்பவரே உயர்ந்தவர், அண்ணா நாமம் வாழ்க’ என்று எழுதித்தான் அதன் கீழே கையெழுத்திடுவார்.
சகோதரர் திரு.கலியபெருமாள் அவர்கள் பதிவிட்ட மேலே உள்ள படத்தைப் பாருங்கள். முதல்வராக இருந்தபோது கூட, ஒரு அரசு நிகழ்ச்சியில் மண் வெட்டி எடுத்து வெட்டுகிறார் பாருங்கள். வேறு யாரையாவது செய்யச் சொல்லி இருக்கலாம். அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர, கண்ணசைத்தால் செய்ய ஆயிரம் பேர் உண்டு. முதலமைச்சராக இருப்பவர் மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் தானே மண்வெட்டியால் வெட்டுகிறார் என்றால் தலைவருக்கு உழைப்பில் அவ்வளவு விருப்பம், நம்பிக்கை, ஆர்வம்.
‘ஓடி ஓடி உழைக்கணும்...’, ‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே..’ என்று உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைவரின் பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவரது திரைப்படங்கள் வெறும் படங்களல்ல. வாழ்க்கையை மேம்படச் செய்யும் பாடங்கள். பாடல்கள் அதிர்ஷ்ட விளக்குகள் அல்ல. வழிகாட்டும் ஒளிவிளக்குகள். அதனால்தான் அவை இன்றைய சமூக சூழலுக்கும் பொருத்தமாக இருக்கின்றன.
அதிர்ஷ்ட விளக்கு பற்றிய செய்தியை பார்த்ததும் மகாதேவி படத்தில் வரும் ‘தாயத்து... தாயத்து...’ பாடல்தான் நினைவுக்கு வந்தது. கண் தெரியாத சாயபு போல வேடமிட்டு, அருமையாக நடித்திருக்கும் தலைவர், தாயத்துக்குள் ரகசிய செய்தியை வைத்து மக்களிடம் விநியோகம் செய்வார்.
அப்போது அதிர்ஷ்ட விளக்கை நம்புகிறவர்களைப் போல, ஒருவர் கேட்பார்.
‘ஏம்பா, பணம் வருமானத்துக்கு ஏதாவது இருக்கா இதிலே?’ .... அவர் கேட்பதன் உள்ளர்த்தம் அதிர்ஷ்டம் அடிக்குமா? என்பதுதான்.
அதற்கு, பாட்டுக்கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் மூலம் தலைவர் சொல்லும் பதில், எல்லாரும் மனதில் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டியவை...
‘ஒடம்ப வளைச்சி நல்லா உழைச்சு பாரப்பா
அதில் உனக்கும் உலகத்துக்கும் நன்மை இருக்கு
சும்மா ஒக்காந்திருந்துக்கிட்டு சேக்குற பணத்துக்கு
ஆபத்திருக்கு அது உனக்கெதுக்கு?’
என்ன அருமையான அர்த்தம் பொதிந்த வரிகள். உழைப்பை நம்பாதவர்கள் இப்படித்தான் அதிர்ஷ்ட விளக்கையும் வாஸ்து பொம்மைகளையும் தேடி அலைகின்றனர். வாழ்க்கைக்கு வழிகாட்டும் தலைவரின் பாடல்களை கேட்டாலே நாம் தெளிவாக இருப்போம்.
இந்த விளக்கை வைத்திருந்தால் யோகம் வரும், கொட்டும் பணத்தை எண்ண முடியாது என்றெல்லாம் அளந்தார்களே... அவர்களுக்கு இப்போது சிறை யோகம். அங்கு கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இருந்தாலும் ஆசை யாரை விட்டது? எனக்கு காவல்துறையில் சில நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் கிடைத்த தகவல்...பறிமுதல் செய்யப்பட்ட அதிர்ஷ்ட விளக்கை போலீசார் சிலரே நப்பாசையுடன் வெறித்து பார்த்ததாக கேள்வி.
சொல்ல மறந்து விட்டேனே. மன்னர்களிடம் இருந்த விளக்கு, 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றெல்லாம் சொல்லப்பட்ட அந்த விளக்கு.....
நகைச்சுவை சேனல்களில் அந்த காட்சியை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன். விளக்கை தயார்படுத்தும் திரு. கவுண்டமணியை பார்த்து, ‘இதிலே எப்படிண்ணே விளக்கெரியும்?’ என்று கேட்டவாறே மேண்டிலை பிய்த்து எறிவாரே திரு.செந்தில்... அதே தான்.
‘பெட்ரோமாக்ஸ் விளக்கு’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் மகத்தான வெற்றிப்படைப்பான
"எங்க வீட்டுப் பிள்ளை " யின் 50 வது (பொன் விழா ) ஆண்டு விழா மலரின் முன்புற ,
மற்றும் பின்புற தோற்றங்களும், செய்திகளும் நண்பர்களின் பார்வைக்கு.
http://i58.tinypic.com/2hwp6j7.jpg