படம்: ஊட்டிவரை உறவு
பாடல் காட்சி: பூமாலையில்
http://i57.tinypic.com/2dqu5u9.jpg
Printable View
படம்: ஊட்டிவரை உறவு
பாடல் காட்சி: பூமாலையில்
http://i57.tinypic.com/2dqu5u9.jpg
வாசு - அருமை என்று சொல்வது தமிழ் அகராதியில் மிகவும் குறைந்த வார்த்தை - சரியான வார்த்தை கிடைத்தவுடன் ( எந்த யுகத்தில் கிடைக்கும் என்று தெரியவில்லை ) உங்கள் பதிவுக்கு பதில் போடுகிறேன் .
அன்புடன்
Gap filler 1 : Train fight scene : NT Vs Sean Connery! (Sorkkam Vs From Russia with Love)
சி க Vs சீ கா (சிவாஜி கணேசன் Vs சீன் கானரி ): ரயில் பெட்டி சண்டை
சீன் கானரி உடல் பலத்தில் தனக்கு நிகரான ஒரே ஒரு வில்லனை (Robert Shaw) சமாளிக்கையில் சிவாஜிகணேசன் இரண்டு அடியாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே !Quote:
நடிகர்திலகம் சிவாஜிகணேசனும் ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரியும் ஒரு சில அளவீடுகளில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி சாதனையாளர்கள் !!குறிப்பாக நடையின் கம்பீரம் உடையின் மிடுக்கு வசன உச்சரிப்பும் உடல்மொழி பாவங்களும் !!
நடிப்பின் பரம்பொருள் நடிகர்திலகம்! இந்த உலகம் இருக்கும்வரை ஜேம்ஸ் பாண்ட் என்றாலே சீன் கானரிதான் !
இருவரின் காவியப் படங்களும் மறுவெளியீட்டு மதிப்புள்ளவை. நடிகர்திலகத்துக்கு கர்ணன்...சீன் கானரிக்கு கோல்டுபிங்கர்!
1982ல் கோல்டுபிங்கர் கோவை ரெயின்போ திரையரங்கில் நான்காவது மறுவெளியீடு கண்டபோது 65 நாட்கள் தினசரி 3 காட்சிகளாக ஓடி வசூல் சாதனையில் கோவையை பிரம்மிக்க வைத்தது!!(மூன்றாவது மறு வெளியீட்டில் யு ஒன்லி லிவ் டுவைஸ் 42 நாட்கள், ஆறாவது மறு வெளியீட்டில் தண்டர்பால் 35 நாட்கள்)
நடிகர்திலகம் தங்கசுரங்கம் படத்தில் சீன் கானரியின் இன்ஸ்பிரேஷனில் துப்பறிவாளராக ஆக்ஷனில் அசத்தியிருப்பார்!
சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற ரயில்பெட்டி சண்டை/சிவந்த மண் ஹெலிகாப்டர் சேஸ் ஆகியவை ப்ரம் ரஷ்யா வித் லவ் படத்தில் இடம்பெற்ற சீன் கானரி சண்டைக்காட்சிகளின் விறுவிறுப்பான தழுவலே!!
https://www.youtube.com/watch?v=g74zRNWwfkY
https://www.youtube.com/watch?v=b10MvNfvoWM
Sivaji Ganesan - Definition of Style 22
http://i1146.photobucket.com/albums/...ps9eb07e44.jpg
Cauvery (1955)
Filmography link:
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1015395
காவேரி . 1955ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் 20வது திரைக்காவியம். இப்படம் நல்ல வெற்றி பெற்றதற்கு அத்தாட்சி, வேலூர் ராஜா திரையரங்கில் 100 நாட்களைக் கடந்து ஓடியதாகும்.
இருந்தாலும் ரசிகர்களிடம் இப்படம் மிக மிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்று காரணம் தெரியவில்லை. ஆனால் உத்தம புத்திரனுக்கே பெப்பே காட்டும் அட்டகாசமான ஸ்டைல் காட்சிகள் நடிகர் திலகத்தால் நமக்கு இப்படத்தில் வாரி வழங்கப்பட்டுள்ளன. ஒரு காட்சியை சொல்ல வேண்டும். இளவரசன் விஜயனாக வரும் நடிகர் திலகத்திடம் வேற்று நாட்டுத் தூதாக வரும் பி.எஸ்.வீரப்பா, தங்கள் அரசர் விஜயனை தன் புதல்விக்கு மணாளனாக்க விரும்புகிறார் என்று சொல்லும் போது..
https://www.youtube.com/watch?v=XxYiypio1gk
பார்க்க 1.09.39 வினாடியில்
ஹோ.. என்று ஒரு Reaction தருவார் பாருங்கள்..
வசனமின்றி கேலியாக நக்கலாக சிரிப்பார் பாருங்கள்..
கதைகளில் எழுத்தாளர்கள் வர்ணிக்கும் அந்த ஏளன சிரிப்பிற்கான அர்த்தம் அங்கே செதுக்கப்பட்டிருக்கும்.
படம் முழுதும் அங்கங்கே மிக நுணுக்கமான ஸடைல் காட்சிகள் இன்றைய கால கட்டத்தில் திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டால் ரசிகர்கள் ஒரு வாரத்தில் அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுவார்கள்.
குறிப்பாக இரு பாடல் காட்சிகள் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இளவரசன் சந்தர்ப்ப வசத்தால் மன நலம் குன்றியவனாக நடிக்கிறான். தன் தந்தையையும் குருசுவாமியையும் நம்ப வைப்பதற்காக அவ்வப்போது ஆடிப் பாடுகிறான். பேசிக் கொண்டிருக்கும் போதே பாடுகிறான். இப்படி ஒரு காட்சியில் தான் இரு பாடல்கள் இடம் பெறுகின்றன.
சிந்தையறிந்து வாடி..
https://www.youtube.com/watch?v=sQw6sSdiEfk
இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் குரல் யாருக்குப் பொரூந்தியதோ இல்லையோ நடிகர் திலகத்திற்கு மிகச் சிறப்பாக அமைந்தது. டி.எம்.எஸ். வந்த பிறகு கதை மாறியது வேறு விஷயம். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஓரிரு படங்களில் வி.என்.சுந்தரம் பாடியிருந்தார். என்றாலும் சி.எஸ்.ஜெயராமன் குரல் நன்கு அமைந்த்து என்பது மறுப்பதற்கில்லை.
சிந்தையறிந்து வாடி பாடல் காட்சியுடன் துவங்குவது இளவரசன் விஜயனின் மனநலம் குன்றிய நடிப்பு. அது சிறப்பாக அமைய வேண்டும், தான் நினைத்த்து நிறைவேற வேண்டும் என்பதற்காக செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டு பாடலைத் துவங்குகிறார். அங்கேயே ஆரம்பித்து விடுகிறது அவருடைய ஆளுமை.
வலது கையை மார்பின் மீது வைத்துக் கொண்டு இடது உள்ளங்கையைத் தரையைப் பார்த்தவாறு வைத்து தொங்க வைத்து அபிநயத்தைத் துவக்குகிறார்.
பின் அப்படியே இடது கையை இடுப்பின் மீது வைத்து, வலது கையை பின்புறம் கொண்டு சென்று வாடி என்பதை உணர்த்தும் விதமாக முன்னால் கொண்டு வருவதும்,
செல்லக் குமரன் என்ற வார்த்தைக்கு முருகனைக் குறிக்கும் வகையில் இடது கை கட்டை விரலை உயர்த்தி, வலது கையில் மூன்று நடுவிரல்களை மட்டும் உயர்த்திக் காட்டுவதும்,
செந்தூர் இடம் தங்கும் குன்றாள் மலர்க்கந்தன் என்ற வரிகளின் போது வலது கையை பின்னாலிருந்து கொண்டு வநது இரு கைகளையும் குவித்து இடத்தை உணர்த்துவதும் அதே சமயம் கழுத்திலிருந்து தலையை மட்டும் தனியே வலப்புறமும் இடப்புறமும் ஆட்டி அபிநயம் புரிவதும்,
இப்போது சிந்தை என்ற சொல்லுக்கு தன் வலது கை விரல்களால் மார்பை சுற்றி சிந்தையை உணர்த்துவதும், அப்போது ஒலிக்கும் வீணையிசையின் போது ஒய்யாரமாக புன்னகைத்த படியே பின்புறம் நடந்து செல்வதும்,
சின்னஞ்சிறு வயதில் என்னை மாலை ... என்று கூறும் போது இரு கைகளையும் குவித்து பின் இரு கைகளிலும் கட்டை விரலையும் சுட்டு விரலையும் இணைத்து கழுத்தைச் சுற்றிக் கொண்டு சென்று மாலையை உணர்த்துவதும்,
கைகளைத் தொட்டானே என்ற வரிகளின் போது வலது கையால் இடது கை மணிக்கட்டைத் தொட்டு வளையலை உணர்த்துவதும்,
அதே சமயம் முகத்தில் அந்த வெட்கத்தை அப்படியே சித்தரிக்கும் முக பாவம்,
அன்னம் பாலும் வெறுக்க அவனியை கைவிட்டானே என்கின்ற வரிகளின் போது முகத்தில் பாவத்துடனும், இருபுறமும் திரும்பி தலையில் கை வைத்து ஒரு விதமான வெறுப்பை சித்தரிப்பதும்
அடிமை செய் என்னை என்றே முடிய மறந்திட்டானே என்கின்ற வரிகளின் போது முகத்தை வேறு பக்கம் திருப்பி கைகளை வேறு பக்கமாக் கொண்டு சென்று வெறுப்பாக உதறும் விதமும்,
அதே பாவத்துடன் திரும்பி சென்று திவானில் அமரும் போது கைகளை முகவாய்க்கட்டையில் ஊன்றி தலையைக் குனிந்து சிந்திப்பதும்..
... தெய்வமே... இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் உன்னை மிஞ்ச எவனாலும் முடியாது என்பதை ஆணித்தரமாக அப்போதே நிரூபித்து விட்டீரே எனக் கூவுகிறது மனது..
இப்பாடல் காட்சி முடிந்த சற்று நேரத்தில் மற்றோர் பாடல் காட்சி.. மாங்காய்ப் பாலுண்டு மலை மேலிருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி...
மாங்காய்ப் பாலுண்டு
https://www.youtube.com/watch?v=XvLNA-AewBE
இசைச்சித்தர் குரல் பின்னணியில் ஒலிக்க காமிரா சாலையில் துவங்கி அப்படியே அறைக்குள் நுழைகிறது. இரு கால்கள் பாட்டுக்குத் தாளம் போடுகின்றன.
இப்போது திரும்புகிறார் பாருங்கள் அந்த ஸ்டைல் மன்ன்ன்.. ஆஹா.. அந்தப் புன்னகை அப்படியே நம்மை மயக்கிப் போட்டு விடும்... அதற்கேற்ப காமிரா க்ளோஸப்பில் அவரைக் காட்டும் போது ... இந்தப் புன்னகை தவழும் மதிமுகத்தை பெரிய திரையில் கற்பனை செய்து பாருங்கள்... மெய்மறந்து போவீர்கள்...
இப்போது தான் ஒரு புதிய இலக்கணத்தை வகுக்கிறார் நடிகர் திலகம். பொதுவாக கன்னத்தில் கை வைத்தால் முகம் சோர்வாக, வாட்டமாக, இருக்கும் மனநிலை சோகமாக இருக்கும். ஆனால் அதை சந்தோஷமான பாவனைக்கும் பயன் படுத்தலாம் என்ற இலக்கணத்தை இக்காட்சியில் நடிகர் திலகம் நிரூபித்திருப்பார்.. கன்னத்தில் கை வைத்து ஒரு புன்னகையை உதிர்ப்பார் பாருங்கள்... ஆஹா... சொர்க்கம் என்பது இது தானோ என மனம் குதூகலிக்கும்..
பாடும் போதே யாரோ வரும் அரவத்தைக் கவனிக்கும் முக பாவனையைத் தன் கண்கள் மூலம் சித்தரிக்கும் பாங்கு.. குருசுவாமி வருவதைக் கவனித்து எழுந்து வந்து வெட்ட வெளி தன்னில் என்ற வரிகளைப் பாடும் போது இரு கைகளையும் 180 டிகிரி க்கு விரித்து விரல்களின் மூலம் அலையைப் போன்று அசைத்து மேடும் பள்ளமுமான ஒரு வெட்டவெளி தன்னை சித்தரிக்கும் அபிநயம்,
பட்டயம் ஏதுக்கடி என்கின்ற வரிகளின் போது முகத்தில் ஓர் அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதம்,
இப்போது அவர் உதிர்க்கும் ஓர் விஷமப் புன்னகையை கவனியுங்கள்..
உடனே சிரித்துக் கொண்டே மாங்காய்ப் பாலுண்டு என்ற வரிகளைப் பாடுகிறார். அப்படியே ரிவர்ஸில் ஆடிக்கொண்டே போகும் ஸ்டைல்...
ஆஹா... அனுபவிக்க வேண்டும் சார் ... சிவாஜியை ரசிக்க வேண்டும் சார்.. அவர் வெறும் நடிகர் திலகமல்ல ... ரசனையை ஊட்டிய கலைத் தெய்வம்...
இப்போது கவனிக்க வேண்டும்.. ஒரு விதமான உள்ளர்த்த்த்தோடு மலைமேலிருப்போர்க்கு என்று வலது கையை உயர்த்தி சொல்லும் நேர்த்தி.. அதில் பொதிந்துள்ள உள்நோக்கங்கள்..
தேங்காய்ப்பால் ஏதுக்கடி என்ற வரிகளின் போது இடது கையை மடித்துக் கொண்டு அதன் மேல் வலது கையை வைத்து முகவாய்க் கட்டையில் விரல்களை வைத்து அழுத்தும் பாவனை, மீண்டும் அதே பாவனையை செய்து கொண்டே கட்டிலில் அமரும் போது ஒரு அலட்சியம்,
இப்போது இசை மேதையின் கைவண்ணம், தாளத்தை வேகப்ப்டுத்துகிறார். அதற்கேற்ப தலையைப் பக்க வாட்டிலும் முன்னும் பின்னும் ஆட்டும் ஸ்டைல், கைகளை இடமும் புறமும் ஆட்டும் வேகம்,
கூட்டைக் குழியிலே மண்ணை எடுத்து ... இந்த வரிகளின் போது உடம்பை சிலிர்க்கும் அட்டகாசம் (திருவிளையாடலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே காவேரி வந்து விட்டதாக்கும்), வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் என்று சொல்லும் போது தலைமேல் பானை வைத்திருப்பது போல் ஒரு பாவனை, அதே வரிகள் மீண்டும் பாடும் போது திரையில் நம்மைப் பார்த்து அந்த உடல் மொழியையும் சிலிர்ப்பையும் சித்தரிக்கும் போது,,.
நம்முடைய கை என்ன பூவையா பறித்துக் கொண்டிருக்கும்.. திரையரங்கில் எழுந்து குதிக்க மாட்டோமா என்ன.. நினைத்துப் பாருங்களேன் தியேட்டர் அனுபவத்தை..
இத்திரைக்காவியத்திற்கு இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார். சில பாடல்களை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையமைத்திருந்தனர்.
http://2.bp.blogspot.com/_rQdqjfXOKY...0/udumalai.jpg
காவேரி திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி.
இன்று மே 23.05. அவருடைய நினைவு நாள். இந்தப் பதிவு அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.
பி.கு.
இப்பதிவில் குறிக்கோள் காட்டப் பட்டுள்ள பாடல் வரிகளில் சில இடங்களில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும்.
http://i1065.photobucket.com/albums/...psu6khrglj.jpg
http://i1065.photobucket.com/albums/...pswonbph03.jpg
சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் 15000 ரூபாய் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தகோவையைச் சேர்ந்த மாணவிக்கு இன்று கோவையில் வழங்கப்பட்டது.மேலும் மாணவியின்வருங்கால கல்விகட்டணம் முழுவதையும் திரு .பிரபு அவர்கள் ஏற்றுக்கொள்வதாக சென்னையிலிருந்து போனில் அறிவித்தார்.இந்நிகழ்ச்சி விக்ரம்பிரபு மன்றம் சார்பில்நடத்தப்பட்டது.
விழாவில் மூன்று தலைமுறைகளாக இப்பணிகளைநடிகர்திலகத்தின் குடும்பம் செய்து வருகின்றது என்றும் சிவாஜி அவர்கள் இன்றும் கொடைவள்ளல் கர்ணனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விழாவுக்கு
வந்திருந்தஅனைவரும் உரையாற்றினர்.இப்படி பேசிய அனைவரும் சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்.சிவாஜி மேல் அவர்கள் வைத்துள்ள மதிப்பு நம்மை பெருமைப்பட வைத்தது.
http://i1065.photobucket.com/albums/...psiwt8actd.jpg
உடுமலை நாராயண கவியாரின் உன்னதமான பாடல்கள் தூக்கு தூக்கி திரைப்படத்தில் நடிகர்திலகம் நடிப்புத் தூக்கலில் !Quote:
காவேரி திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி.
இன்று மே 23.05. அவருடைய நினைவு நாள். இந்தப் பதிவு அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.
by Raghavendhar
https://www.youtube.com/watch?v=PntvCg6O4Po
https://www.youtube.com/watch?v=7H4eZNkCWe0
https://www.youtube.com/watch?v=1S3JZU2tW7E
என்ன முரளி,
ராகவேந்தரின் செல்ல மிரட்டலில் பம்மிட்டீங்க போல.
ஒரு உபரி தகவல்.
பாலும் பழமும் டாக்டர் ரவி, டாக்டர் சேகர் குடும்பம் இருக்குமிடம் மதுரை. டாக்டர் ரவி படிப்பது மதுரையில். அவன் கல்யாணம் கட்டும் இரண்டாம் மனைவி மதுரையில் வாசிப்பார்.
இடம் பெயர்வது சென்னைக்கு.
ராகவேந்தர்,
காவேரி, ராணி லலிதாங்கி(ஏன் சாரங்கதாராவிலும்)படங்களில் , நடிகர்திலகத்தின் அழகு உருவம்,இளமையின் எழில்,துருதுருப்பு, உயிர்ப்பு கொண்டு நம்மை கட்டி போடும். அவரது உடலும் பராசக்தி காலத்திலிருந்து மாறுபட்டு சற்றே சதை போட்டு அவ்வளவு கச்சிதமாக இருக்கும். கண்களின் தீட்சண்ய ஒளி
அந்த உளியால் தேர்ந்த சிற்பியால் செதுக்க பட்டது போன்ற நாசி,(ஏன் அவர் காது அதன் மடல் கூட பிரம்மனின் ஸ்பெஷல் ),நொடியில் சிறு கூறில் கூட மாறும் முகபாவம், அத்துடன் ஒத்துழைக்கும் உடல் மொழி என்று தமிழர்கள் கும்பிட வேண்டிய ஒரே கலை கடவுள் ,இந்த திராவிட மன்மதனான கலை குரிசில்.
இந்த இரு படங்களிலும் நடனம் அவ்வளவு பிரமாதமாய் ஆடுவார். (இதிலும் கமலுக்கு முன்னோடி நடிகர்திலகமே)
கோபால்..
தங்களின் மண நாளையொட்டி என் உளமார்ந்த வாழ்த்துக்கள்..
தங்களின் குழந்தைகள் தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இடையேயான அந்நியோன்யமான புரிந்துணர்தலை, குறிப்பாக ஆரம்ப கால நாட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் இந்த மணநாளை சுவையாக்கும்... அவர்களுக்காக இதோ தலைவரின் நடிப்பில் வைரமுத்துவின் நினைவுப் பயணத்தில் சங்கர் கணேஷின் இசையில் தந்தை மகளிடம் தன் இல்லற வாழ்க்கையைப் பற்றி நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளும் இனிய பாடல்..
https://www.youtube.com/watch?v=yXnbMxFpT7A
கோபால்
தவறான சித்தரிப்பினால் அல்லது இருட்டடிப்பினால் அரச உடையில் தலைவரின் ஜொலிப்பை ஊடகங்களில் தெரிந்து கொள்ள இயலாமல் போய் விட்டது. இதை உடைத்து எந்த வேடமானாலும் தலைவரை யாராலும் மிஞ்ச முடியாது, அரச உடையில் அழகு தேவனாய் திராவிட மன்மதனாய் இளம் பெண்களின் கனவு நாயகனாய் வலம் வந்த நடிகர் திலகத்தின் மற்ற ராஜா ராணி படங்களைப் பற்றி - தாங்கள் கூறிய படங்கள் உட்பட - நாம் இன்னும் அலச வேண்டும்.. அலசுவோம்..
செந்தில்வேல்,Quote:
விழாவில் மூன்று தலைமுறைகளாக இப்பணிகளைநடிகர்திலகத்தின் குடும்பம் செய்து வருகின்றது என்றும் சிவாஜி அவர்கள் இன்றும் கொடைவள்ளல் கர்ணனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விழாவுக்கு
வந்திருந்தஅனைவரும் உரையாற்றினர்.இப்படி பேசிய அனைவரும் சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்.சிவாஜி மேல் அவர்கள் வைத்துள்ள மதிப்பு நம்மை பெருமைப்பட வைத்தது.
அருமையான தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
From today's (24.05.2015) The Hindu:
Our sincere Thanks to the Hindu for the news item.Quote:
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
May 24, 2015
He’s the man: For fans of Sivaji
http://www.thehindu.com/multimedia/d...4_2415854e.jpg
The Nadigar Thilagam Fans Association will screen Avanthan Manithan today at the Russian Cultural Centre, Alwarpet. Directed by A.C. Tirulokchandar, the film features Sivaji Ganesan, Jayalalithaa, Muthuraman, and Manjula. It has lyrics by Kannadasan and music by M.S. Viswanathan.
The screening will be preceded by the release of Nadippathilum Koduppathilum Sigaram Thotta Sivaji , a book by M. J. M. Jesupatham. Actor Y. Gee. Mahendra will receive the first copy, and Ramkumar Ganesan, president, All India Sivaji Rasigar Mandram, will formally release the book. Noted poet, writer and producer Panchu Arunachalam will be the chief guest.
Link for the web page: http://www.thehindu.com/todays-paper...cle7239596.ece
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை 1 : Cloud o' Nine desires!!Gravity Defying!!/வானம் வசப்படும்
Sky walker Sivaji Ganesan Vs Sky Diver/Skier Roger Moore/Bond3!
Quote:
பூமியில் நாம் கால் பதித்திருக்கும்போது (Down to the Earth) கட்டெறும்பின் கண்களுக்கு நம் மனித இனம் விஸ்வரூப ராட்சஷர்களாக தோன்றும்
அதே மனிதர்கள் ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது எறும்புகளாகவே தென்படுவர் !
ஆகாயத்தை நோக்கி எறியப்படும் எதுவுமே புவிஈர்ப்பினால் பூமிக்கு வந்து கால் பதித்தே தீர வேண்டும்! ஆனால் வளி மண்டலம் நீங்கி மேலே சென்றுவிட்டால் புவியீர்ப்பு இன்மையால் மிதக்கலாம்
அந்தரத்தில் நடக்கவும் ஆகாயத்தில் மிதக்கவும் ஆசைப்படாதோர் யாருமுளரோ?!
இக்கரை இச்சை!
ஆகாயத்தில் நடக்கும் ஆசையை விண்ணோடும் முகிலோடும் விளையாடும் நாரத வெண்ணிலாவாக தீர்த்துக் கொள்கிறார் நடிகர்திலகம்!!
நடிப்பின் நவரச வானவில் நடிகர்திலகம் மழை வான வில்லின் மீதும் (on Earth, other planets and stars too!!) சர்வசாதாரணமாக ஏறுகிறாரே!
https://www.youtube.com/watch?v=Rxthj4WsTzY
அக்கரைப் பச்சை !
ஆகாயத்தில் தன்னால் மிதக்கவும் எதிரிகளை மிதிக்கவும் முடியும்....போட்டிக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட்3 ரோஜர் மூர்!
https://www.youtube.com/watch?v=W_Jy_2HixK8
Quote:
Relax friends!! NT always comes back...so is Bond OO7!
Next episode : NT Vs JB in flight fight!
Sivandha Mann Vs Gold Finger!!
Cloud o' Nine desires!!Gravity Defying!!/வானம் வசப்படும்
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை 2 Flight Fight!! : ஆகாயத்தில் மிதக்கும் விமானத்திற்குள் எதிரியை மிதித்தல் சிவந்தமண் NT Vs Goldfinger Connery/Bond!
தரையில் கால் பதியுங்கள் நடிப்பு விமான கேப்டன்களே !!Quote:
விமானத்தில் இருப்பதே வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை!! இதில் விமானத்திக்குள் கட்டிப்புரண்டு சட்டை கிழியாமல் சண்டையெல்லாம் போட்டால்....NT's brilliant stunt moves and Connery's brutal stunt reflexes!!
For NT தேங்காய் வில்லனாமே.....ஹி ஹி
https://www.youtube.com/watch?v=bOinAa1K7DQ
Connery/Bond quips : Congratulations Goldfinger on your promotion...!!
https://www.youtube.com/watch?v=pHXevnoAciY
திருச்சி கெய்ட்டியில் இன்று மாலை காட்சி 75 சதவிகித அரங்கு நிறைவோடு இளையதிலகம் பிரபுவின் சின்னத்தம்பி 3 நாட்களில் ரூபாய் 5000 க்கும் அதிகமாக விநியோகஸ்தர் லாபம் பெற்று மக்கள் ஆதரவோடு வெற்றி நடைபோடுகிறது. இன்று மாலை காட்சியில் ஒவ்வொரு பாடலின் போதும் கைத்தட்டலும் விசில் சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது.
1991ம் ஆண்டு திரையுலகை புரட்டி போட்ட வசூலில் வரலாறு படைத்ததை இன்றும் பலர் பேசியதை கேட்க முடிந்தது. IPL FINAL தாண்டியும் மக்கள் வரவேற்பு நன்றாகவே இருந்தது.
https://pbs.twimg.com/media/CFyJljrUIAM3gz4.jpg
நேற்று சுமார் இந்திய நேரம் 9.00 மணி காலை, கலைஞர் டி வீயில் எஸ்.பீ.,பிறைசூடன் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி. எஸ்.பீ ,மெல்ல நட பாடிய ஒரு பாடகருக்கு assessment கொடுக்கும் போது ,அப்படியே மனம் பொங்கி நடிகர்திலகத்தின் நடிப்பை ,ஸ்டைல் ஐ சொல்லி சொல்லி ,அவர் அவர்தாங்க என சிலாகிக்க, பிறை சூடன் ,தான் எழுதிய கவிதையை சொல்லி நடிகர்திலகத்தை பற்றி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பொதுவாக நடிக-நடிகையரை பற்றி பேசியதே இல்லை. ஆனால் இந்த முறை ஒரு trans நிலையில் இருவரும் நினைவுகளில் மூழ்கி பரவசமானதை பார்க்க முடிந்தது.
சும்மாவா சொன்னார் சுஜாதா...
நடிகர்திலகம் இறந்த போது மட்டுமே ,அத்தனை அழுதவர் கண்ணீரிலும் உண்மை இருந்தது என்று.
நடிகர் திலகம் சண்டைக்காட்சி தொடர் (புதையல்) படித்து, பார்த்து, ரசித்து நன்றி சொன்ன வாசு, முரளி சார், ராகவேந்திரன் சார், கோபால், கிருஷ்ணா, (சப்போர்ட் பதிவு பிரமாதம்) ஆதிராம் சார், சிவாஜி செந்தில் சார், செந்தில்வேல் சார், ரவி சார், அலைபேசியில் பாராட்டு தெரிவித்த வினோத் சார், சின்னக் கண்ணன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அவன் தான் மனிதன்...
நேற்றைய மாலைப் பொழுது மற்றோர் மறக்க முடியாத இனிய மாலையாக அமைந்தது. நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் கவிஞர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம் அவர்களின் "நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி" நூல் வெளியீட்டு விழாவும் அவன் தான் மனிதன் 40வது ஆண்டு விழாவும் சிறப்புற நடைபெற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்கும் ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் நேரலை ஒளிபரப்பின் காரணத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்ற பரவலான அபிப்ராயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டு, அரங்கு நிறைந்ததுடன் பலர் நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டு களித்ததன் மூலம், நடிகர் திலகத்திற்காக எதையும் மக்கள் தியாகம் செய்வார்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நிரூபி்த்து விட்டது.
விழாவில் அன்புச் சகோதரர், அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் திரு ராம்குமார் கணேசன் அவர்கள் நூலை வெளியிட, நம் அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் பெற்றுக் கொண்டார். உடல் நிலை காரணமாக திரு பஞ்சு அருணாசலம் அவர்களால் பங்கேற்க இயலவில்லை.
பொதுவாக நடிகர் திலகத்தின் நடிப்புப் பற்றியே பலரும் நூல் வெளியிட்டு வந்த மரபை உடைத்து அவருடைய சமுதாயப் பணி, அவர் அளித்த நன்கொடைகள் இவற்றை எதிர்காலத் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்திலும் ஈடுபாட்டிலும் கவிஞர் திரு எம்.ஜே.எம். ஜேசுபாதம் அவர்கள் இந்நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து அவன் தான் மனிதன் திரைக்காவியத்தின் சிறப்பை நமது முரளி சார் எடுத்துரைத்தார். மேலும் நமது அமைப்பின் சார்பில் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப் பட்டது.
தன்னுடைய 90 வயதிலும் சிரமப்பட்டாலும் பரவாயில்லை இவ் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வந்திருந்து சிறப்பித்ததோடு மட்டுமின்றி முழுப்படத்தையும் அமர்ந்து பார்த்த நமது அமைப்பின் உறுப்பினர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்கள் நம் மற்ற ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
மிக நுட்பமாக ரசிக்கக் கூடிய ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் திலகம் மட்டுமே என்ப்து நேற்றும் நிரூபணமானது. குறிப்பாக அந்தப் படிக்கட்டு இப்படத்தில் ஒரு பாத்திரமாகவே மாறி விட்ட்து. ஆனந்த பவனத்தை விட்டு வெளியேறும் காட்சியில் வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது உணர்ச்சி மிகுதியில் இது ஒரு படம் என்பதையே மக்கள் மறந்து அனுதாபத்தில் திளைத்தது ரசமான அனுபவம் [இதே போன்று படையப்பாவிலும் காட்சி அமைந்திருந்தாலும் அதற்கும் இதற்கும் தான் எத்துணை வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார் தலைவர்...]. மாடிப் படிக்கட்டில் ஏறும் போது கூட அந்தப் பாத்திரத்தின் சூழ்நிலையைச் சித்தரிக்கும் வகையில் அந்த நடையில் காட்டியிருக்கும் வித்தியாசம்..
நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம் என்பது ஆணித்தரமாக அங்கே நிறுவப்பட்டது.
விழாவில் வெளியிடப்பட்ட நூலின் முகப்பு நம் பார்வைக்கு.
அரங்கிலேயே கணிசமான எண்ணிக்கையில் நூல் விற்பனையாகியுள்ளதாக வெளியீட்டாளர் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விலை என்னவென்று முன் கூட்டியே தெரியாத நிலையிலேயே இவ்வளவு பிரதிகள் விற்பனையாவது நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியம்.
நூலின் பிரதியைப் பற்றி அறிந்து கொள்ள நூலாசிரியர் கவிஞர் எம்.ஜே.எம். அவர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.... 9940225052
http://i1146.photobucket.com/albums/...psvtwqyxqo.jpg
விழா விவரங்களை முரளி சாரின் நேர்முக வர்ணனையில் அனுபவியுங்கள்.
நடிகர் திலகம் பற்றி உங்களுக்குள் இருந்து வரும் பல கான்செப்ட் கள் எங்களை ஆகாயப் 'பார்வை' பார்த்து அண்ணாந்து வியக்க வைக்கிறது.
அதுவும் பாண்ட் படங்களின் மீது தங்களுக்கிருக்கும் அதீத ஆர்வமும் அமர்க்களம். ஒரு காலத்தில் தேடி தேடி தியேட்டர்களில் பாண்ட் மூவீஸாக பார்த்த காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
என்னுடய முதல் choice 'Gold finger'. அதனுடைய பிரம்மாண்டமே தனி.
http://padamhosting.me/out.php/i5091...orlove1235.png
திரையுலகில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் சரித்திரம் படைத்த திருவிளையாடல் திரைக்காவியத்தின் பொன்விழா நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் கொண்டாட உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நமது எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறினால் இது மிகவும் சிறப்பானதாகவும் மறக்க முடியாத வகையிலும் அமைந்து வரலாற்றில் இடம் பெறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.
இதைப் பற்றி சில மேலான விவரங்களை நமது முரளி சார் கூறுவார்.
ஆவலுடன் காத்திருப்போம்..
ராகவேந்திரன் சார்,
காவேரி படத்தின் (Sivaji Ganesan - Definition of Style 22) 'சிந்தையறிந்து வாடி' பாடல் பற்றிய பதிவை படித்து ரசித்தேன். உண்மையாகவே அபார உழைப்பு. தலைவரின் அங்க அசைவுகளை அற்புதமான விளக்கங்களுடன் மிக மிக அழகாக தந்து தொடரை அலங்கரித்துள்ளீர்கள். ஒவ்வொரு வினாடியையும் தாங்கள் விவரித்து எழுதியிருப்பது அபாரம். இப்பாடலை நானே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். மிக மிகச் சிறப்பாக நீங்கள் என்றும் மறக்க முடியாத பதிவாக நெஞ்சில் நிலைக்கச் செய்து விட்டீர்கள்.
பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன்.
திலகத்தின் அந்த வெட்டும், ஒவ்வொரு அங்கமாகக் காட்டும் துடிப்பும். என்னத்தை சொல்வது? அபூர்வமான, திரியில் அதிகம் அலசப்படாத பாடலை தேர்ந்தெடுத்து, அமுத விருந்து படைத்ததற்கு நன்றி!
செந்தில்வேல் சார்,
http://www.freshcardsgifts.co.uk/ima...5573400000.jpg
தங்களுடைய ஆவணங்களின் பிரம்மாண்ட அணிவகுப்பை இப்போதுதான் சேர்த்து, தொகுத்து தனி போல்டரில் போட்டு வைத்தேன். சுயநலம் சிறிதும் பாராமல் இரவென்றும், பகலென்றும் பாராமல் தாங்கள் தலைவரைப் பற்றி அளித்துள்ள ஆவணங்களுக்கு என் வாழ்நாள் நன்றிகள். இது ஒரு சாதாரண வேலை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு பக்கமாக ஸ்கேன் செய்து அல்லது காமெராவினால் போட்டோ எடுத்து பின் சரி பார்த்து போட்டோ பக்கெட்டில் அப்லோட் செய்து அப்புறம் திரியில் ஒவ்வொன்றாக பதிவு செய்ய வேண்டும். நேரமும் உழைப்பும் அதிகமாக செலவாகும். நிறைய முறை நான் இரவுப் பணிக்கு செல்லும் போது அந்த நேரங்களில் கூட நீங்கள் ஆவணப் பதிவுகள் அளித்துக் கொண்டிருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
உடல் உழைப்பு, ஊன் உறக்கம் பாராமல் தாங்கள் செய்து வரும் இந்த அற்புதமான சேவைக்கு தலைவர் தனது ஆசிகளை தங்களுக்கு நிச்சயம் வழங்குவார். நானும், ராகவேந்திரன் சாரும் தினமும் உங்கள் ஆவணப் பதிவுகளைப் பற்றி உரையாடாமல் இருக்க மாட்டோம். நேரமின்மை காரணமாக தங்களுக்கு நான் முன்னமேயே இது பற்றி எழுத முடியவில்லை.
ஜெமினி சினிமாவின் தொகுப்பு அத்தனையும் என்னிடம் உள்ளது. முன்பு நானும் சில ஆவணங்களை அளித்து வந்தேன். பம்மாலாரும் அருமையாக அளித்து வந்தார். இப்போது நீங்கள். (எப்போதுமே நடிகர் திலகத்திற்கு இந்த சேவையை செய்ய ஒருவர் மாற்றி ஒருவர் இருப்பது இந்தத் திரியின் பெருமை மற்றும் அதிர்ஷ்டம்)
இந்த அரிய சேவைக்கும், காலம் கடந்து நிற்கக் கூடிய தங்களின் ஆவணங்களின் அணிவகுப்பிற்கும் மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை வாசு சார். தாங்கள் செந்தில்வேலுக்கு அளித்த பாராட்டுக்கள் அத்தனையும் உளமார ஆமோதிக்கிறேன். ஒரு கட்டத்தில் ஆவணங்களைப் போட்டு பக்கத்தை நிரப்புகிறார்கள் என்று நம் திரியிலேயே சிலர் எள்ளி நகையாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம். அதன் உழைப்பையும் அருமையினையும் புரிந்து கொள்ளாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கமெண்ட் அடித்ததும் நம் மனம் புண்பட்டதும் கடந்து போனவை. இன்று பலருக்கு அந்த ஆவணங்களே கேடயமாக விளங்குவதன் மூலம் அவற்றின் பெருமை அனைவருக்கும் புரிய வருகிறது. குறிப்பாக பம்மலாரின் விளம்பர ஆவண நிழற்படங்கள் சமுதாயத்தில் அதுவும் பழைய தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகப் பெரும் பங்காற்றும் பொக்கிஷமாக விளங்குவது மட்டுமின்றி தமிழ்த்திரைப்பட வரலாற்று ஆய்வில் இம்மய்யத்தின் பங்கினை மிகவும் கணிசமான அளவில் அளித்துள்ளது. இதன் மூலமும் தன் விலை மதிப்பில்லாப் பொக்கிஷங்களைப் பங்களித்ததன் மூலமும் இம் மய்யம் திரியினுக்கே பம்மலார் அவர்கள் பெரிய அளவில் பெருமை தேடித் தந்துள்ளார்.
அந்த வரிசையில் செந்தில் வேல் அளித்துள்ள ஆவணங்களும் சேர்ந்துள்ளன.
அவருக்கு மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி.
'அவன் ஒருவன்தான் மனிதன்'
காதழகிலும் காவியம் படைக்கும் இந்த ஸ்டில் கோபாலிற்காக
http://i1087.photobucket.com/albums/...074443.121.jpghttp://i1087.photobucket.com/albums/...074438.923.jpg
ஆனந்த பவனத்தை விட்டு வெளியேறி ஆனந்தம் இழக்கும் இந்த ஸ்டில் ரசிக வேந்தருக்காக
http://i1087.photobucket.com/albums/...074659.470.jpg
http://i1087.photobucket.com/albums/...074658.836.jpg
ஏலத்தின் போது தனக்கு ஏற்படவிருக்கும் கோலத்தை நினைத்து மௌனம் சாதிக்கும் இந்த ஸ்டில் முரளி சாருக்காக
http://i1087.photobucket.com/albums/...074445.569.jpghttp://i1087.photobucket.com/albums/...074435.450.jpg
எப்போதும் சமாதானத்தையே விரும்பும் சிவாஜி செந்தில் சாருக்காக இந்த ஸ்டில்
http://i1087.photobucket.com/albums/...074346.932.jpg
சூப்பர் வாசு சார்...Quote:
பார்க்கும் போதே பரவசமூட்டும் நெகிழ்வான காட்சியின் நிழற்படம்.. திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் போது நம்மை முற்றிலும் மெய்மறக்கவைத்து மூழ்க வைக்கும் மனோதத்துவ நிபுணர் நடிகர் திலகம். இந்த ஸ்டில் அதற்கோர் சாட்சி.
மிக்க நன்றி
வாசு சார்
தாங்கள் அளித்த இந்த நிழற்படமே இணைய தளங்களின் மூலம் ஹிந்து நாளிதழில் நேற்று இடம் பெற்றுள்ளது.
பார்த்தேன் ராகவேந்திரன் சார். நீங்கள் அளித்த ஹிந்து வையும் பார்த்தேன்.
23 மே 2015 சனிகிழமை வெளி வந்த தினமணி ஜங்ஷன் பகுதியில் கட்டுரையாளர் தீனதயாள் எழுதி உள்ள சாவித்திரி பற்றிய நினைவுகளில் இருந்து ஒரு பகுதி
’குறவஞ்சி’ முதலில் எஸ்.எஸ்.ஆரும் பண்டரிபாயும் ஜோடியாக நடிக்க வேகமாகத் தயாரானது. கலைஞருக்கும் ராஜேந்திரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் முடங்கிவிட்டது. கருணாநிதி சிவாஜியிடம் சென்றார். அவரது ‘மேகலா பிக்சர்ஸில்’ சாவித்ரியை குறவஞ்சியாக நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள்.
கலைஞரின் வசனத்தை, சுகம் எங்கே படத்தில் ஏற்கனவே பேசி நடித்ததும், வணங்காமுடியின் முன் அனுபவமும் சாவித்ரிக்கு உண்டு. அதனால் சாவித்ரி சட்டென்று, சிவாஜியின் இன்ஸ்டன்ட் நாயகியாகி உதவினார்.
மு.கருணாநிதியின் எழுச்சிமிக்க வசனங்களைப் பேசுவதில் முதலிடம் பெற்ற கணேசனோடு நேரடியாக மோதிப் பார்க்கும் அரிய சந்தர்ப்பம். அரிமாவின் குகையிலேயே சிந்தித்தும் சீறியும் பேசி நடித்ததில் சாவித்ரியின் புகழ் எப்போதும் போல் அதிகரித்தது.
சிவாஜியை மேடைகளில் தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கிப் பேசிய நேரம். குறவஞ்சியில் நடிக்கவே கூடாது என்றெல்லாம், ரத்தக் கையெழுத்திட்டுக் கடிதங்கள் எழுதினார்கள் சிவாஜி ரசிகர்கள். ’பராசக்தி’ கணேசன் பெருந்தன்மையாகத் தன் தோழருக்குத் தோள் கொடுத்துத் துன்பத்திலிருந்து தூக்கி நிறுத்தினார். குறவஞ்சி முழுமையாகி வெளி வந்தது. கலைஞர் பெருத்த நஷ்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.
நடிகர் திலகத்துடன் நடித்த முதல் அனுபவம் குறித்து சாவித்ரி கூறியவை:
http://media.dinamani.com/2015/05/22.../pasamalar.jpg
‘பெம்புடு கொடுகு தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் அண்ணனுடன் நடித்தேன். அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை.அண்ணியாகத் தோன்றினேன். அமரதீபத்தில் கதாநாயாகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிவாஜியுடன் நடிப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உள்ளூற ஒரு பயமும் இருந்தது.
நீளமான வசனத்தை உணர்ச்சியுடன் பொழிந்து தள்ளுவதில், சிவாஜிக்கு நிகர் யாரும் இல்லை என்ற பேச்சு இருந்தது. அவருக்கு இணையாக பேசி நடிக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை. சிவாஜி நான் பேசும் வசனத்தைக் கூர்ந்து கவனிப்பார். தப்பு ஏதாவது இருந்தால் திருத்திச் சொல்லிக் கொடுப்பார். அமர தீபம் பெரிய வெற்றி அடைந்தது! நானும் சிவாஜியும் தொடர்ந்து சேர்ந்து நடிக்க நல்ல ஆரம்பமாக அமைந்தது.
சாவித்ரியுடனான சிவாஜியின் நட்பு திரையைத் தாண்டியும் வலுப்பெற்றது. நேரம் கிடைக்கும்போது சாவித்ரியின் வீட்டுக்குச் சென்று, விரும்பிய அசைவ உணவுகளை அவரைச் சமைக்கச் சொல்லி விருந்துண்டு வருவது சிவாஜியின் ருசி! ரசனை! மகிழ்ச்சி!.
அதே போல் ஜெமினி- சாவித்ரி இருவரும் கணேசனின் அன்னை இல்லத்துக்கு போய், தீபாவளி முதலான விசேஷ நாள்களில், அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு வருவதும் வழக்கம். சிவாஜி- சாவித்ரி இடையே நல்ல புரிதலும், சிறந்த நட்பும் தொடர்ந்தது.
Kalaingar Karunanidhi son M. K. Alagiri pointed out that, "During the shooting of the film Kuravanji, Sivaji chose to wear a gunny sack instead of the woollen clothes to connect with reality of the character of a tribesman. Such was his commitment.
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை : பகுதி 3 :விண்வெளித் தாக்குதலும் எதிர்கொள்ளலும்!!
சிவந்த மண் Vs From Russia With Love : ஹெலிகாப்டர் துரத்தல்
Quote:
பூமியில் இருக்கும்போது ஒற்றைக்கு ஒற்றை தாக்குதல்களை தாக்குப் பிடிக்கலாம்!! பதிலடி நேருக்கு நேர் கொடுக்கலாம்!!
நாம் பூமியில் ...ஆனால் தாக்குதல் ஆகாயத்திலிருந்து என்றால்.....புத்திசாலித்தனமான தப்பித்தலை நடிகர்திலகமும் ஷான் கானரியும்
செயல் விளக்கம் தருவது மெய்சிலிர்க்க வைக்கும் டூப் போடாத சாகசங்களே !
ஷான் கானரிக்கு நிகராக ஆக்ஷனிலும் அசத்துகிறார் நடிக மன்னர் !! தமிழுக்கு அந்த காலகட்டத்தில் இந்த ஹெலிகாப்டர் சேஸ் பரபரப்பும் புதுமையும் உள்ளடக்கியதே ! நடிகர்திலகத்தின் ஓட்ட ஆற்றலையும் ரிஸ்க் எடுக்கும் தைரியத்தையும் வெளிப்படுத்தியது சிவந்த மண்!
ஹெலிகாப்டர் மிகத்தாழ்வாக தலைக்கு தலைக்கு அருகில் வரும்போது லாவகமாக குழிக்குள் நடிகர்திலகம் குதிப்பது மயிர்கூச்செறியும் சீன்!!
பாம்பைக் கண்டால்தான் படை நடுங்குமா? ஹெலிகாப்டரிலிருந்து Bombஐ போட்டாலும் சிதறி ஓடிவிடுமே!!
https://www.youtube.com/watch?v=Gew4yzciSc4
The approach of Sean Connery is totally different as the definitive Bond/OO7 of all times!
https://www.youtube.com/watch?v=4oD3vvgb3vk
படம்: என் மகன்
பாடல் காட்சி: பொண்ணுக்கென்ன அழகு
http://i58.tinypic.com/dy4r9u.jpg