http://i64.tinypic.com/1zyzfko.jpg
Printable View
அன்பு நண்பர்களே உடம்புக்கும் மனதுக்கும் முடியவில்லை..வேகம் இருக்கிறது..மனதும் உடலும் ஒத்துழைக்கவில்லை..மன்னிக்கவும்..மீண்டும் வருவேன்...தலைவரின் பக்தன் முத்தையன்
http://i64.tinypic.com/2vamtrl.jpg
http://i67.tinypic.com/wtj8za.jpg
பல அற்புத கோணங்களில் , வடிவங்களில், வண்ணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஸ்டைலை, அழகை, மிடுக்கான தோற்றங்களை பதிவிட்டு
8000 பதிவுகள் கண்ட அன்பு நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள் . உடல் நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும்படி
அன்பு வேண்டுகோள்.
ஆர். லோகநாதன்.
http://i65.tinypic.com/5fgd3r.jpg
ஜெயா தொலைக்காட்சியில் நேற்று பிற்பகல் (29/10/2015)
1.30 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "பாசம் " ஒளிபரப்பாகியது.
வசந்த் தொலைக்காட்சியில் நேற்று (29/10/2015) பிற்பகல் 2 மணிக்கு புரட்சி
நடிகர் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " ஒளிபரப்பாகியது.
http://i66.tinypic.com/2vl8ft2.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான (23/10/2015) நடிக
மன்னன் எம்.ஜி.ஆர் அவர்களின் "பணம் படைத்தவன் " யாரும் எதிர்பார்க்காத
வகையில், சரியான விளம்பரம் இன்றியும், ஞாயிறு அன்று சென்னையில்
நடைபெற்ற தர்மம் தலை காக்கும் மாத இதழ் நடத்திய விழாவில் கணிசமான
பக்தர்கள் மதுரையில் இருந்து கலந்து கொண்ட நிலையிலும் , ரூ.87,500/-
ஒரு வாரத்தில் வசூலாகி உள்ளதாக மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தகவல் தெரிவித்துள்ளார்.
http://i64.tinypic.com/14cxnic.jpg
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதிதாக தம்மை இணைத்து பதிவுகள் இடும்
அன்பு நண்பர்கள் திரு. அமரா எம்.ஜி.ஆர். , திரு. குருநாதன், திரு. ஷாரியார்
அக்பர் ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்
http://i68.tinypic.com/abqst1.jpg
ஆர். லோகநாதன்.
தினகரன் -வெள்ளிமலர் -30/10/2015
http://i66.tinypic.com/sde0ds.jpg
http://i66.tinypic.com/2ztj1jd.jpg
http://i66.tinypic.com/osrgjd.jpg
http://i68.tinypic.com/29xhx52.jpg
தின இதழ் நாளிதழில் இடம் பெற்று வரும் புரட்சித் தலைவர் தொடர்பான என்றும் வாழ்கிறார் எம்ஜிஆர் எனும் கட்டுரை தொடர்ந்து இடம் பெற்று வருவது எம்மை போல் புரட்சித் தலைவரின் பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக புரட்சித் தலைவர் தொடர்பாக பல்வேறு இதழ்களில் பதிவு செய்யப் பட்ட எமது சில பதிவுகள் அதில் இடம் பெறுவதிலும் எமக்கு மகிழ்ச்சியே. அதேசமயம் அப்படி முழுமையாக பதிவுகள் பயன்படுத்தப் படும் போது சம்பந்தப் பட்டவர்களின் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இன்றி கட்டுரை பிரசூரமாகும் நிலையை தின இதழ் நாளிதழ் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்டோபர் 25- 26 தேதிகளில் தின இதழில் இடம்பெற்ற எமது இரு கட்டுரைகளும் அப்படியே முழுமையாக பதிவு செய்யப்பட்டதில் எமக்கு மகிழ்ச்சியே என்றாலும் எந்த ஒரு இடத்திலும் எமது தொடர்பே சற்றும் இல்லாதவாறு அந்த கட்டுரைகள் அப்படியே பிரசூரமாகியுள்ளது என்பது எந்த ஒரு கட்டுரையாளருக்கும் எழுத்தாளருக்கும் இருக்கும் ஞாயமான வருத்தம்தானே. மற்றவர்களின் படைப்புக்களை நாம் மீண்டும் பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும் அது தொடர்பான படைப்பாளர்களின் தொடர்பை குறைந்த பட்சம் எங்காவது ஒரு இடத்தில் மிகச்சிறிதாக பதிவு செய்வதில் என்ன நஷ்ட்டம் வந்துவிடப் போகிறது.
கவனிக்குமா தின இதழ்?
ஆர்.கோவிந்தராஜ்.
இதய தெய்வம் புரட்சித் தலைவரின் ஆர்வலரும், அபிமானியும், ரசிகரும், பக்தருமாக இருப்பவர் மலேசியாவைச் சேர்ந்த திரு ஆர்ஜே. தாமோதரன் அவர்கள். இவர் மலேசியாவில் தைபிங்க் நகரில் தனக்கு சொந்தமான மிகப் பரந்த நிலப்பரப்பில் அய்யனார் கடவுளுக்கு ஆலயம் ஒன்றினை கட்டி அதில் சுமார் 72 அடி உயரத்தில் அய்யனாருக்கு மிக பிரம்மாண்ட சிலையை வடிவமைத்து உலகில் எங்கும் காண இயலாத அளவிற்கு ஒருவித பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளார். தான் கண்ணில் காணாத தனது இஷ்ட தெய்வத்திற்கு ஆலயம் அமைத்த இவர் தனது கண் முன்னே தோன்றி லட்சக்கணக்கான மக்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்து அவர்தம் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய நமது இஷ்ட தெய்வமான புரட்சித் தலைவருக்கும் இதே பக்தி மணம் கமழும் நிலப் பரப்பில் ஆலயம் ஒன்றினை மிகச் சிறப்புற அமைத்து இன்று உலகளாவிய அளவில் மலேசியாவிற்கு வரும் மக்கள் இங்கு வந்து தமிழ் தாயின் மாசற்ற தவப் புதல்வரும் மனித புனிதருமான புரட்சித் தலைவரை வழிபட்டுச் செல்லும் சிறப்பை ஏற்படுத்தியவர். வீரத்தின் கடவுளான அய்யனாருக்கு அருகிலேயே வீரத்தின் விளைநிலமாக -மதுரை வீரனாக மக்கள் உள்ளங்களில் தெய்வமாக வீற்றிருக்கும் புரட்சித் தலைவருக்கும் இவர் ஆலயம் அமைத்துள்ளதுதான் எத்தனை பொருத்தம். இன்று தைபிங்க் நகரத்தில் அமைந்துள்ள வீரத்தின் விளைநிலதெய்வங்களான அய்யனார் மற்றும் புரட்சித் தலைவர் ஆலயத்தை மலேசிய அரசாங்கம் தனது சுற்றுலா வரை படத்தில் சேர்த்து நமது புரட்சித் தலைவருக்கு மாபெரும் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது எனில் அதற்கு புரட்சித் தலைவர் கொடுத்துள்ள விலை கொஞ்சமல்ல, இமயம் போன்றது. ஆம் தன்னலமற்ற விளம்பமில்லா தனது செயற்கரிய தலைசிறந்த மக்கள் நல செயல்பாடுகளின் காரணமாகவும் - தமிழகத்தில் எந்த ஒரு நடிகரும் அரசியல் தலைவர்களும் செய்யாத சிறப்புமிகு மனித நேய செயல்பாடுகளின் காரணமாகவும்தான் இயற்கை அவருக்கு இத்தகைய உயர்ந்த நிலையை அளித்துள்ளது. உலகின் ஒவ் ஒரு தமிழரும் பெருமை கொள்ளத் தக்க செய்தி இது. அப்படி புரட்சித் தலைவருக்கு சிறப்பு செய்துள்ள அவரது மலேசிய பக்தர் திரு. ஆர்.ஜே.தாமோதரன் அவர்கள் நேற்றைய தினம் நம்மிடம் புரட்சித் தலைவரின் பெருமை கொள்ளத் தக்க ஒரு நிகழ்வை பகிர்ந்துகொண்டார். அதாவது சிங்கப்பூர் காவல்துறையில் பணிபுரியும் இவரது புதல்வர் கேசவன் அவர்கள் மலேசியா வந்திருந்து {இவரும் தனது தந்தையாரைப் போலவே புரட்சித் தலைவரின் தவிர பக்தராவார் } மீண்டும் தந்தையார் திரு தாமோதரன் அவர்களை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பயணித்துள்ளார். வழியில் மலேசியா சிங்கப்பூர் எல்லையில் ஜெவூர்பாரு எனும் பகுதியில் கடற்கரையோரம் திறந்தவெளியில் ரம்மியமான சூழலில் அமைத்துள்ள sea food court எனும் பிரம்மாண்ட உணவு அரங்கிற்கு சென்றுள்ளனர். சுமார் 1000 நபர்கள் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணக் கூடிய அரங்கமாம் .அங்கு திறந்த வெளியில் அமைத்துள்ள பிரம்மாண்ட திரையில் உணவு உண்ண வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க அவர்கள் விரும்பும் பாடல்களை ஒளிபரப்புவார்களாம். அப்படி தங்களுக்கு வேண்டிய பாடல்களை வேண்டுவோர் உணவு உண்பதற்கு பெற்றுக் கொள்ளும் கூப்பனை அரங்கில் ஒரு குறிப்பிட்ட கவுண்டரில் காண்பித்து அவர்களது இஷ்டத்திற்குரிய பாடலை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படியாக ஒவ் ஒருவரின் பதிவின்படி வரிசையாக பாடல்கள் திரையில் காண்பிக்கப் படுமாம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது உலகின் அத்தனை மொழிப் பாடல்களும் அங்கு உள்ளதாம். திரு.தாமோதரன் அவர்கள் விடுமுறை தினமான கடந்த ஞாயிறு அன்று சென்றதால் உணவு அரங்கில் கூட்டம் நிறைந்துள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அரங்கில் இருந்தவர்களில் 90 சதவிகிதம் சீனர்கள், ஜப்பானியர்கள் மலாய்மொழி பேசுபவர்கள் குறைந்த அளவில் மட்டும் இந்தியர்களாம். அரங்கில் இருந்த பெரும்பான்மையோர் விருப்பப்படி சீனம்,மலேயா,மற்றும் இந்தி மொழி பாடல்கள் தொடந்து திரையில் காண்பிக்கப் படவே சலிப்புற்ற திரு.தாமோதரன் அவர்கள் தனது புதல்வர் கேசவனிடம் ஒரே போராக உள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு அவரது புதல்வர் உங்களுக்கு என்ன பாடல் வேண்டும் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு திரு.தாமோதரன் அவர்கள் எனக்கு தலைவரின் பாடல் வேண்டும் கிடைக்குமா? எனக் கூறியுள்ளார். அவ்வளவுதானே பாடல்களை சொல்லுங்கள் என கேட்க பதிலுக்கு தாமோதரன் அவர்கள் நினைத்ததை முடிப்பவன் படத்திலுள்ள ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடலையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்திலுள்ள பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலையும் கூறியுள்ளார். அப் பாடல்களை கேசவன் பாடல்களை ஒளிபரப்பும் இயக்குனரிடம் கூறியபோது உங்கள் பாடல்கள் வரிசையின்படி திரையில் காண்பிக்க இரண்டு சீனப் பாடல்கள், மலேய நடிகர் ரெம்லியின் இரு பாடல்கள் கழித்து ஆராதனா இந்தி பட பாடல் ஒன்றிற்குப் பின்னரே திரையில் காண்பிக்கப் படும் எனக் கூறியுள்ளார். சரியென ஒப்புக் கொண்டு தனது இருக்கைக்கு சென்று விட்டார் கேசவன். தொடர்ந்து பாடல்கள் திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. உணவுகளை சுவைத்தபடி அமைதியாக அரங்கினுள் அமர்ந்து அனைவரும் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தனராம். இரு சீன மலேய மொழி பாடல்களை தொடந்து ஆராதனா இந்தி பாடலை தொடர்ந்து புரட்சித் தலைவரின் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் காண்பிக்கப் பட்டதுதான் தாமதமாம்- சீனர்களும்,மலேயாகாரர்களும் எழுந்து நின்று ஆரவாரத்துடன் தங்களையும் மறந்து கைகளை கொட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனராம். தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம் காண்பிக்கப் பட்டதும் அதே ஆராவாரம், சொல்லப் போனால் சில சீனர்களும் மலாய்காரர்களும் விசில் அடித்து ஹாய் எம் ஜி- எம் ஜி என உரக்க கத்தினார்களாம். புரட்சித் தலைவரை அவர்கள் எம் ஜி –எம் ஜி என்றே விருப்பமாக அழைப்பார்களாம். திரு.தாமோதரன் அவர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாம், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் எண்ணற்ற சீனர்களும் ,மலேயாகாரர்களும் புரட்சித் தலைவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் ஆனால் இந்த அளவிற்கு தலைவரின் பாடல்களை சீனர்களும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் ஆராவாரத்துடன் ரசிப்பார்கள் என தாம் நினைக்கவேயில்லை,என் உடலெல்லாம் புல்லரித்துப் போனது, என் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, நான் மட்டுமில்லை புரட்சித் தலைவருக்கு ரசிகர்களாக இருக்கும் யாவரும் அவருக்கு ரசிகர்களாக இருப்பதற்கு பெருமை கொள்ள வேண்டும் என தனது மறக்க முடியாத அந்த நிகழ்வை ஒரு குழந்தைபோல பேசிக் கொண்டேயிருந்தார் திரு.தாமோதரன் அவர்கள். ஆம் உண்மை தான். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முன்னணி நடிகராக இருந்த ஒருவரை உடலால் அவர் இம் மண்ணை விட்டு மறைந்தும் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மதம்,இனம், மொழிக்கு அப்பாற்பட்ட மக்களும் ரசிக்கிறார்கள் அவரை கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால் அது இந்தியாவிற்கே பெருமை, ,தமிழகத்திற்கே பெருமை. அதற்கு இது போன்ற ஏராளமான நிகழ்வுகளே சான்று. இந்த சிறப்பு புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது. அவர்தான் மனித புனிதர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். ஆர்.கோவிந்தராஜ்.
தின இதழ் -30/10/2015
http://i64.tinypic.com/nmba0o.jpg
இன்றைய தின இதழில் -என்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர். தொடரில்
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு என்பதற்கு பதிலாக திரு. பி.எஸ். ரவி
என பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலாவது இது போன்ற பிழைகளை தின இதழ் நாளேடு தவிர்க்குமா ?
Our majestic thread of Makkalthilagam - mr. muthaiyan ammu crossed 8001 postings & mr. Lokanathan passing 9001 postings were both - so super... kindly postings several ways ...
எப்படி கவர்ந்தார்...? ஏன் இவ்வளவு பக்தி....? யாராலும் வரையறுத்து சொல்ல முடியாத ஒரு மந்திரமே...... அந்த மூன்றெழுத்து .... அவர் பாடியது போல அந்த மூன்றெழுத்தில் அவர் மூச்சு மட்டும் அல்ல.... இன்று வரை எங்கள் மூச்சும் அந்த மூன்றெழுத்தில் தான் சுவாசித்து கொண்டு இருக்கிறது.....
8000 பதிவுகளைக் கடந்த திரு முத்தையன், 9000 பதிவுகளைக் கடந்த திரு லோகநாதன் இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
என்னை வரவேற்ற ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி.
நடிகர் சங்க வளர்ச்சிக்கு எட்டாவது வள்ளல், கலியுக கர்ணன், பொன்மனச் செம்மல் ஆற்றிய பணிகள்
http://nadigarsangam.org/index.php/sifa/thodakkam
தொடக்கமும் வளர்ச்சியும்
1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே சுப்பிரமணியம், 1950 ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரை துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க அவர்தம் வாழ்வு சிறக்க இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்ம பூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிட தக்கது.
இந்த அமைப்பை பின் தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. இன்று வரை இந்த அமைப்பு இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.
திரு எம் ஜி ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.
இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. இப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று திரு எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ள பட்டன. திரை வானில் கொடிகட்டி பரந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.
சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000 மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000 அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெற பட்டது. மேலும் தேவையான ரூபாய் 40,000 த்தை திரு எம் ஜி ஆர் அவர்கள், தன்னுடைய 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும் ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.
1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.
காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர் தன்னால் இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.
http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal
1971 - 1985
1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு கொட்டகை (Shed) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971 ல் திரு. சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், திரு வி கே ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் " புரட்சி தலைவர் " முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.
1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால் வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.
பின்னர் திரு. எஸ் எஸ் ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
1952 - 1970
1952 நவம்பர் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரம்பம். 'South Indian Artistes' Association' என்ற பெயரில் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பிக்க யோசனை சொன்னவர் அப்போது தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர், இயக்குனர் திரு. கே சுப்பிரமணியம் அவர்கள். முதல் தலைவர் திரு. சுந்தரம் அவர்கள். கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் அட்வான்ஸ் தொகை கொடுத்து வைத்திருந்த தற்போது உள்ள நிலம் உள்பட பிரகாசம் சாலை வரை சுமார் 40 கிரவுண்ட் நிலம் வாங்க 1957ல் விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் நிதி பற்றாகுறை காரணமாக 20 கிரவுண்ட் வாங்கப்பட்டது. இந்த நிலத்தை வாங்க பல முன்னணி நடிகர்கள் நிதி வழங்கினார்கள். பெரும்பகுதி நிதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் வழங்கப்பட்டது. பதிவு செய்ய மொத்த பணமும் திரு. எம்.ஜி.ஆர். வழங்கியுள்ளார். திரு. எம்.ஜி.ஆர், திரு. நாகேந்திர ராவ், திரு. நாகையா, திரு. எஸ் எஸ் ராஜேந்திரன், திரு. கே ஆர் ராமசாமி, திரு. சிவாஜி கணேசன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் திரு. ராதாரவி அவர்களுக்கு முன்பு தலைமைப் பதவி வகித்துள்ளனர்.
தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்பட்ட பல முக்கிய இன்னல்களை போக்க மக்களுக்காக நட்சத்திர இரவு, நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய அரசுக்கு தமிழக அரசுக்கு நிதி வசூல் செய்து கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் தென்னிந்திய திரையுலகின் அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருந்தினர். அதைப்போல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அனைத்து நடிகர்களும் சங்கத்தின் உறுப்பினர்கள். முக்கிய இசை கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளனர்.
http://s18.postimg.org/urahl04c9/image.jpg
Courtesy : The Hindu (Tamil) - Diwali Malar 2015